Tuesday, February 14, 2012

என் சிந்தனையை சிதறடித்த சிட்டுக்கள் - சுகந் தரும் ரணங்கள்

இவளுக்கு பொறந்த நாள் இன்னைக்கு இல்லையே என நெனைச்சேன். ஆனால் இவள் ஏன் இன்னைக்கு சாக்கிலேட் கொடுக்கிறாள் என ஒன்னும் தெரியாத பாப்பாவாய் யோசித்தேன். அதற்கான விடை ஒரு சில மாதங்களில் கிடைத்தது. ஆர்த்திகா எட்டாம் கிளாஸ் முடிய முன்பதாக மீண்டும் பிறந்த நாளிற்கு சாக்கிலேட்டுடன் வந்தாள். மொதல் பொறந்த நாளுக்கு சாக்கிலேட் கொடுக்கும் போது கிளாஸ் எடுத்த அதே வாத்யார் தான் இப்போதும் கிளாஸ் எடுத்திட்டிருந்தாரு. அவர் கேட்டார்! "உனக்கு மட்டும் எப்படி ஒரு வருடத்தில் ரெண்டு பொறந்த நாள் வரும்?” அவள் தலை குனிந்து வெட்கப்பட்டு ஓர் பதில் சொன்னாள்! நீங்கள் இங்கே படித்துக் கொண்டிருப்பது என்னை கெடுத்த பெண்கள் தொடரின் ஐந்தாவது பாகத்தின் தொடர்ச்சியாகும். இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள Drop Down Menu இல் கிளிக் செய்யவும்.

ஆர்த்திகாவின் அந்தப் பதில் கேட்டு வகுப்பறையே சிரிப்பொலியால் அதிர்ந்தது. ஆம், அவள் பெரிய மனுசி ஆகிட்டாள் என்பதனை சிரிப்பால் உணர்த்தினாள்.அப்புறமா நான் அவளைப் பார்க்கும் போதெல்லாம் வெட்கப்பட்டாள். நான் பார்க்கிறேன் என்று தெரிந்ததும், டீயூசனில் மத்தப் பக்கம் திரும்ப ஆரம்பித்தாள். எங்க எட்டாங் கிளாஸில சில பசங்க சேர்ந்து பர்சனலா இங்கிலீஷ் கிளாஸிற்கும் போக ஆரம்பித்தோம். பெப்ரவரி மாசம் 14ம் திகதி. இன்னைக்கு 16 வருஷங்களுக்கு முன்பதாக அவள் அந்த இங்கிலீஷ் கிளாஸில் என்னை பின் தொடர்ந்தாள். ஆர்த்திகாவின் தோழி அபிநயா என்னை நில்லுங்க என்று கூப்பிட்டாள். தோழிகளும், தோழர்களும் உறுதுணையாக இருக்கும் காதல்கள் தான் வெற்றி பெறும் என்று சொல்லுவாங்க.

அது போல, அபிநயா என்னை அழைக்க, நான் திரும்பி ஆர்த்திகாவைப் பார்க்க, ஆர்த்திகாவின் முகம் வெட்கத்தில் சிவக்க, அவள் என்னை நோக்கி வந்தாள். கையில் ஒரு சின்ன ரோசாப் பூ. அதனோடு சேர்த்து ஓர் சிறிய பேப்பர். வாங்கவா வேணாமா என உள் மனம் முடிவெடுக்க முடியாம தடுமாறிக் கொண்டிருக்க, நானோ, வெட்கப்பட்டு அந்த இடத்தினை விட்டு ஓடிட்டேன். அவளுங்க ரெண்டு பேரும் "கொல்" என்று சிரித்தார்கள். அதன் பிறகு கொஞ்ச நாளைக்கு ஆர்த்திகாவின் முகம் பார்க்க முடியாதவனாய் திண்டாடினேன். ஒவ்வோர் பாட வேளையின் போதும், வாத்யார் கரும்பலகையில் எழுத ஆரம்பிக்க, ஆர்த்திகா என்னை திரும்பிப் பார்ப்பாங்க. நானும் அவங்களைப் பார்ப்பேன். கண்ணும், கண்ணும் ஒன்னாகும். மனதுள் ஓர் பூரிப்பு உண்டாகும்.

இந்தப் பார்வையினை எப்படி நாம் கண்டினியூ பண்ணினோம் என்றால், ஆர்த்திகா முன்னாடி (உள்ள கதிரையில) உக்கார்ந்தாங்க என்றால், நான் மூனு கதிரை தள்ளி, அவங்க பார்வை எனக்கு படும் வண்ணம் உட்காந்திடுவேன். நான் முன்னாடி இருந்தா, இதுக்கு ஏற்றாற் போல, ஆர்த்திகாவும், பின்னாடி என் பார்வை(புலன்) படுமாறு இருப்பாங்க. இப்படியான சூழலில் எட்டாங் கிளாஸில் பையன் ஒருத்தன் என்னோட வழியில குறுக்கிட ஆரம்பிச்சிட்டான். ஆர்த்திகா டியூசன் விட்டு போற டைம்மில அவங்களுக்கு பின்னாடி பாலோ செஞ்சு போறது, அவங்க என்னைப் பார்க்கும் சமயத்தில எங்களின் பார்வைகள் பரிமாறும் கதிர்வீச்சினை இடையூறு செய்து,தான் ஆர்த்திகாவைப் பார்ப்பது என ரொம்பவே எனக்கு இம்சை கொடுக்க ஆரம்பிச்சிட்டானுங்க.

நான் என்ன பண்ண முடியும்? அவனுக்கு கையாளுங்க ரெண்டு மூனு பசங்க இருந்தாங்க. ஒரு குண்டான பையனும் அவன் கூட இருந்தான். காலம் கை கூடி வரும் அப்படீன்னு காத்திருந்தேன். ஒன்பதாங் கிளாஸிற்கு வந்திட்டோம். அப்போது ஆர்த்திகாவின் பிறந்த நாளன்று ஆங்கில டியூசனில் ஆர்த்திகாவை எதேச்சையாக அவள் வழியில் குறுக்கிட்டு சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சது. அதே ரோசாப் பூ. அதே கடதாசி பேப்பர். அதனுடன் இணைந்து ஒரு சிறிய பிறந்த நாள் தின் பண்டப் பரிசு. வாங்கவா? வேணாமா என இம் முறை யோசிக்கவே இல்லை. காரணம், போனவாட்டி யோசித்து, மறுபடியும் அவளிடமிருந்து இப்படி ஓர் பச்சைக் கொடி என் காதலுக்கு கிடைக்காதா என ஏங்கிய ஏக்கம் இருக்கே! அப்பாடா சொல்லி மாளாது!
அவள் கையிலிருந்து லெட்டரும், தின் பண்டமும், என் கைக்கு தாவியது. கொஞ்சம் வெட்கப்பட்டு, லெட்டரை என் கையினுள் திணித்து விட்டு, ஓடி விட்டாள். நான் கொஞ்ச நேரம் என்னை மறந்தவனாய் அக் காலத்தில் பேமஸான "உயிரே...உயிரே இது தெய்வீக சம்பந்தமோ" பாடலை மீட்டியவாறு கற்பனையில் மூழ்க ஆரம்பித்தேன். அப்போது அருகே வந்த நண்பன் கனியன், என்னைச் சுய நினைவிற்கு கொண்டு வந்தான். அந் நேரம் தான் கையில் ஆர்த்திகா கொடுத்த லெட்டர் இருக்கிறதே என்றுணர்ந்து லெட்டரைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன்.

லெட்டரில் என்ன இருந்திருக்கும் என்று அறிய ஆவலா? அடுத்த பாகம் வரை காத்திருங்கள்.

6 Comments:

மதுரை சரவணன் said...
Best Blogger Tips

nalla irukku vaalththukkal

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்!நினைவுகள் பின்னோக்கி..................................!////லெட்டரில் என்ன இருந்திருக்கும் என்று அறிய ஆவலா? அடுத்த பாகம் வரை காத்திருங்கள்.////என்ன அடுத்த எலெக்சனில ஜனாதிபதி வேட்பாளரா போட்டியிடுங்கன்னா எழுதியிருக்கும்,ஹி!ஹி!ஹி!!!!!!!!!!!

தனிமரம் said...
Best Blogger Tips

இப்படி காத்திருங்க என்றே சொல்லியே கடிதத்தில் என்னத்தை எழுதியிருப்பாள் என்று ஜோசிக்கும் அளவுக்கு நேரம் இல்லையா சீக்கிரமா அடுத்த பதிவில் சொல்லப்பு படத்துக்குப் போகாம.அவ்வ்வ்வ்

ஹேமா said...
Best Blogger Tips

இயல்பா ஊர்ல நடக்கிறதைப்போலவே எழுதுறவிதம்தான் சிறப்பு நிரூ உங்களுக்கு.அன்பான காதல் வாழ்த்துகள் !

சுதா SJ said...
Best Blogger Tips

நிரு... அதற்குள் இத்தனை பாகமா??? நாம ரெம்ப நாளாத்தான் ப்ளாக் பக்கம் இல்லைப்போல் :( அவ்வ்வ்வ் .... இருங்க நிரு எல்லாத்தையும் படிச்சுட்டு அடுத்த பாகத்தில் சந்திக்கிறேன்... :)

விச்சு said...
Best Blogger Tips

ஆர்த்திகாவை இப்போ பார்த்திருக்கீங்களா? உங்கள் தொடர் நன்றாக உள்ளது.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails