Sunday, February 19, 2012

வெட்கப்பட்டாள் - அச்சப்பட்டேன் - கட்டிக்கிட்டாள் - கட்டுப்பட்டேன்!

ஏய்! ஏய் என்ன பண்ணுறீங்க என்று சாரங்கனைப் பார்த்துக் கேட்டாள் சாம்பவி. சாரங்கன் செய்யும் செயலைப் பார்த்து வெட்கப்பட்டாள்! மெல்லச் சிரித்தாள்! கொஞ்சமாய் முகத்தைச் சுளித்தாள்! 
சீ….சீ நான் ஒண்ணும் பண்ணலையே ! என் அழகு தேவதைய சிலையா செதுக்க நினைத்தேன்.அதன் வெளிப்பாடு தான் இது அப்படீன்னு பதிலுரைத்தான் சாரங்கன்.
ஓஹோ! முன்னாடி நீங்க கவித சொல்லி என்னை மடக்கினீங்கள்! அப்ப, இப்போ ஓவியம் வரைகிறவரைக்கும் வந்திட்டீங்களே!என்றவாறு செல்லமாய் சிணுங்கினாள்!
ஓரமாய் நின்று ஓவியத்தை உற்றுப் பார்த்தவளை அருகே சென்று அணைத்தான் சாரங்கன்! சாம்பவி சிணுங்கினாள்!செல்லமாய்க் கோபப்பட்டாள்! மெல்லிதாய் கட்டை விரலால் கோலமிட்டாள்!
என்னங்க இப்பவே உங்கலீலையை ஆரம்பீச்சிட்டீங்களா?
என்னடி நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை! அதற்குள்ள நீ ………….. என்றவாறு பெருமூச்சு விட்டான் அவன்!
ம் …………… சரி சரி அதெல்லாம் அப்புறமா பார்த்துக்கலாம். ஏங்க இப்ப ஒன்று சொல்லுங்க கேட்பம் என்று மெதுவாய் காது மடலைக் கொடுத்தாள். 

"என்னது கவிதையா? நான் சொல்லுவேனா? எனக்கு அதெல்லாம் சுத்தமாகத் தெரியாதே?" அப்படீன்னு மொழியுரைத்தான் சாரங்கன்.
என்னடி கள்ளி! எனக்கேவா? நான் ஏதோ காதல் மயக்கத்தில் வார்த்தைகளைக் கொட்டியிருப்பேன். அதைப் போய் நீ கவிதை என்கிறாய். உனக்கு கொஞ்சம் விசர் புடிச்சிட்டுதே? அப்படீன்னு கேட்டான் சாரங்கன்.
ஆமாங்க! எனக்கு உங்க மேல(லை)  தான் விசர் பிடிச்சிட்டுதுங்க எனக் கோபமாய் மொழிந்தாள் சாம்பவி!.

சரி சரி கோபடாதேங்க; என்றவாறு அவளின் இடையை லேசாகக் கிள்ளியபடி; "ஒனக்குத் தெரியுமா தமிழ்ல எத்தனை காலமிருக்கெண்டு" எனக் கேட்டான் சாரங்கன்
என்னங்க நீங்க!நல்லா தெரியுமேங்க.மூன்று காலம் இருக்குங்க. இறந்தகாலம், எதிர்காலம், நிகழ்காலம். இதப் போயி நீங்க பாலர் வகுப்பு புள்ளையிடம் கேட்டிருந்தா கூட சொல்லுமே!நீங்க பள்ளியறையிலா கேட்கிறது? எனக் கடிந்தாள் சாம்பவி!

அடி லூசு தமிழ் இலக்கியத்தில சங்ககாலம், சங்கமருவியகாலம், பல்லவர்காலம்,சோழர்காலம் என்றெல்லாம் இருப்பது உனக்கு ஞாபகமிருக்கா?
ஆமாங்க; அதுக்கு இப்ப என்னங்க? இது போல தான் இந்த கலியுக காலத்திலையும் எங்கட நாட்டில காதலுக்கு முந்தின காலம் (கா.மு), காதலுக்குப் பிந்தினகாலம் (கா.பி) கம்பியூட்டர் காலம், (க.கா) என்றெல்லாம் இருப்பது ஒனக்கு தெரியாதோ? எனக் கேட்டான் சாரங்கன்.

அடி மக்கு! என்கிட்ட கவித கேட்டாயில்லே! நான் அந்த காலத்தின் அடிப்படையில இந்தக் கால காதலை வைத்து கவிதை சொல்லட்டுமா?
ஆமாங்க! சொல்லுங்க கேட்கலாம்! என்றவாறு நெளிந்தாள். அவன் சட்டை பட்டனில் கோலமிட்டாள்!
தேடலும் தெறிப்பும் உள்ளவரை
தேனாக இனிக்குமாம் காதல்- பின்னர்
ஊடலும் கூடலும் முடிந்த உடன்
உப்பாக கசக்குமாம் அது நவீன காதல்!

ம் … ம்’ சுத்தம்! ஆளுக்கு அனுபவம் போல என்றவாறு அவனின் கன்னத்தில் அவள் கிள்ளினாள்.

கலப்பு முடிந்தபின் இன்றைய காதல்களோ
கானல் நீர் போலாகுமாம்- பின்
உலக்கை எடுத்து மனைவி 
அடுத்தவன் பொண்டாட்டியை ஜொள் விட்டோமே 
என்பது உறைக்குமாம் - உணர்வு பிறக்குமாம்!
"ஆகா அருமையாயிருக்கே" எனச் சொல்லியவாறு சாரங்கனின் இதழோடு தன் செவ் இதழைப் பதித்தாள் சாம்பவி! "என்னது ஸ்ரோபரி லிப்ஸ்டிக்கா போட்டிருக்காய்? இப்படி இனிக்கிறதே!" எனச் சொல்லி அவளின் வாய் இதழை தன் வாய் கொண்டு மூட எத்தனித்தான் சாரங்கன்!
"பொறு பொறு இதைக் கேளும் பார்ப்பம்!" என ஆசை கொண்டு விழி மூடி, அவனிடம் ஆவல் கொண்டவளின் மனதை உலுப்பினான் சாரங்கன்!

"கான் போன் மணியது ஒலித்திட அவள்
காதல் மொழியது புரிந்திடும்- மாசம்
போன் பில் அது உயர்ந்திட வீட்டில்
பொல்லால் அடி விழும்- மனம்
ஏன் இன்று call வரவில்லை என
ஏதிலியாய் அலைந்து தவிக்கும்- அழகு
மான் மொழியாள் மடி சாய காளை
மனமோ தினம் தினம் துடிக்கும்- ஆனால்
வீண் காசு இதுவென்று அந்த
விட்டில்களுக்குப் புரிந்திடாது!
தினம் பல தேன்
வார்த்தைகளை வீசியே அந்த தேனீக்கள்
வாழ்க்கையும் தொடர்ந்திடும்
மனம் போன் நம்பரில் அடுத்த
பிகரை தேடி ஓடிடும் - கன்னி உளம் வாடிடும்!”

ம்………. ம்
இதுவும் நல்லாய் இருக்கேங்க…சரி…… சரி! கவித சொல்லி அசத்தினது போதுமுங்க. நான் கேட்ட புதுச் சாறி எப்போ வாங்கி தர போறீங்க? என்று கேட்டவளைப் பார்த்து; எல்லாம் என்ரை தலை விதி என்றவாறு மனதினுள் நொந்தான்.

"என்னது விதியோ? அதெப்படி நான் மனதினுள் நினைத்தது உமக்கு எப்படி தெரியும்?" எனக் கேட்டான் சாரங்கன்! 
"என்னில் ஓடுவதும் உங்கள் கலப்பு ரத்தம் அல்லவா?" என சிலேடை மொழியுரைத்தாள் சாம்பவி! அப்புறமா உங்களுக்கு தெரிந்த விதிகளைச் சொல்லுங்க பார்ப்போம் எனக் கேட்டாள்.

ம்…… என்கிட்டேவா? ஐயா சயன்சில புலியென்று தெரியுமில்லே! எங்கிட்டயே வம்பா? பிளமிங்கின் விதி, கெப்லரின் விதி, அயன்ஸ்டின் விதி இப்பிடி நிறையச் சொல்லலாம் எனச் சொல்லி முடித்தான் சாரங்கன்.

ம்….. சரி போதுமுங்க! உங்க talent ஐப் பத்திச் சொன்னது போதுமுங்க. உங்களால முடிந்தா விதி பற்றி ஒரு கவிதை சொல்லுங்க பார்ப்போம்? எனக் கேட்டாள்! அவன் கவிதையை அவிழ்த்து விட்டான்!
"நான் காதலிலே ஒரு நாடிழந்த அகதி
நரம்பெல்லாம் இல்லை வெட்கமெனும் சகதி
என்னருகே நீயிருந்தால் ஏழுலகும் பேசுமிது தனி விதி
என்னை விட்டு நீயும் சென்று விட்டால் எனக்கேது மதி?"
சீ... சீ... இது பொருத்தமாவே இல்லைங்க. வேற ஏதாச்சும் சொல்லுங்க" எனக் கேட்டாள் சாம்பவி!!

எனக்குள் நீ
இது எழுதப்படாத விதி
என்னுள் என்றும் நீ- இது
நான் உன்மேல் எழுதிய விதி!
இப்படி ஓர் விதிக் கவிதை சொல்லியவாறு; அவள் உடல் மீது கை தொட்டு
இடைவரை படர்ந்தான் சாரங்கன். சாம்பவி வளைந்து கொடுத்தாள்! அவன் வளைத்துக் கொடுத்தான்! உள்ளம் இரண்டும் உடலால் ஒன்றாகின! உடல் மேடு பள்ளம் தேடி மனங்கள் அலை பாய்ந்தன - இன்ப வெள்ளம் எனும் கடலில் நீந்தலாகின!
உப்பமைந் தற்றால் புலவி அது சிறிது
மிக்கற்றால் நீள விடல்: திருக்குறள் - குறள் 1302

விளக்கவுரை: உணவில் உப்புச் சேர்ந்திருப்பதைப் போன்றது கலவி இன்பத்திற்கு அவசியமான ஊடல். அந்த ஊடலை அளவுக்கதிகமாக நீடித்தால் உப்பின் அளவினைக் கூட்டிய உணவின் சுவைக்கு ஒப்பானதாக அமைந்து விடும் வாழ்க்கை. 


பதிவில் உள்ள படங்கள் கூகிள் தேடல் மூலம் பெறப்பட்டவை!

26 Comments:

K said...
Best Blogger Tips

அடி மக்கு! என்கிட்ட கவித கேட்டாயில்லே! நான் அந்த காலத்தின் அடிப்படையில இந்தக் கால காதலை வைத்து கவிதை சொல்லட்டுமா?
ஆமாங்க! சொல்லுங்க கேட்கலாம்! என்றவாறு நெளிந்தாள். அவன் சட்டை பட்டனில் கோலமிட்டாள்!//////

மச்சி, படிக்கப் போறன் எண்டு லீவு எடுத்து, உதுதான் நடக்குது போல கிடக்கு! ஹி ஹி ஹி !!

K said...
Best Blogger Tips

"ஆகா அருமையாயிருக்கே" எனச் சொல்லியவாறு சாரங்கனின் இதழோடு தன் செவ் இதழைப் பதித்தாள் சாம்பவி! "என்னது ஸ்ரோபரி லிப்ஸ்டிக்கா போட்டிருக்காய்? இப்படி இனிக்கிறதே!" எனச் சொல்லி அவளின் வாய் இதழை தன் வாய் கொண்டு மூட எத்தனித்தான் சாரங்கன்!///////

இது நிச்சயமாக + சத்தியமாக நிரூபனின் அனுபவம் தான் என்பதை அனைவருக்கும் அறியத்தருகிறேன்! ஹி ஹி ஹி!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

மச்சி, படிக்கப் போறன் எண்டு லீவு எடுத்து, உதுதான் நடக்குது போல கிடக்கு! ஹி ஹி ஹி !!
//

மச்சி, நல்லா இருக்கிறியா?
ஹே...ஹே....இதெல்லாம் சின்னப் பசங்க வாழ்க்கையில சகஜமில்லே!

K said...
Best Blogger Tips

"கான் போன் மணியது ஒலித்திட அவள்
காதல் மொழியது புரிந்திடும்- மாசம்
போன் பில் அது உயர்ந்திட வீட்டில்
பொல்லால் அடி விழும்- /////

எந்தப் பொல்லால மச்சி?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

இது நிச்சயமாக + சத்தியமாக நிரூபனின் அனுபவம் தான் என்பதை அனைவருக்கும் அறியத்தருகிறேன்! ஹி ஹி ஹி!
//

யோவ்...நான் விளக்கு புடிக்கிற பணி யாருக்கும் குடுக்கலையே!

K said...
Best Blogger Tips

"என்னில் ஓடுவதும் உங்கள் கலப்பு ரத்தம் அல்லவா?" என சிலேடை மொழியுரைத்தாள் சாம்பவி! //////

அதுக்கிடையில இவ்வளவு முன்னேற்றமா மச்சி?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி
"கான் போன் மணியது ஒலித்திட அவள்
காதல் மொழியது புரிந்திடும்- மாசம்
போன் பில் அது உயர்ந்திட வீட்டில்
பொல்லால் அடி விழும்- /////

எந்தப் பொல்லால மச்சி?//

கேக்கிற கேள்வியைப் பாரு!

பொல்லு என்றால் பிரம்பு என்று அர்த்தம் மச்சி!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

அதுக்கிடையில இவ்வளவு முன்னேற்றமா மச்சி?
//

சே...கறுமம்! கறுமம்!

பேசுற பேச்சைப் பாரு!

K said...
Best Blogger Tips

விளக்கவுரை: உணவில் உப்புச் சேர்ந்திருப்பதைப் போன்றது கலவி இன்பத்திற்கு அவசியமான ஊடல். அந்த ஊடலை அளவுக்கதிகமாக நீடித்தால் உப்பின் அளவினைக் கூட்டிய உணவின் சுவைக்கு ஒப்பானதாக அமைந்து விடும் வாழ்க்கை.///////

மச்சி, இந்த ஊடலைப் பற்றி விடிய விடிய சொல்லலாம்! “ சீ போங்கோ!” என்று சினுங்குவாளவை! ஆஹா... அதெல்லோ இன்பம்! அவ்வ்வ்வ்

K said...
Best Blogger Tips

இப் பதிவினை நான் எழுதுவதற்கு எனக்கு இன்ஷ்பிரேசனாக அமைந்த என்னோட அல்லக்கை ஐடியாமணியின் பதிவினைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்:://////

மச்சி, என்னோட பதிவில் இன்ஸ்பிரேஷனாகி, நீயும் பதிவு மட்டும் தானே போட்டிருக்கிறாய்? நான் நினைச்சன்.......... சரி வாணாம் விடு!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

மச்சி, இந்த ஊடலைப் பற்றி விடிய விடிய சொல்லலாம்! “ சீ போங்கோ!” என்று சினுங்குவாளவை! ஆஹா... அதெல்லோ இன்பம்! அவ்வ்வ்வ்
//

உன்னைத் திருத்தவே ஏலாது! அதென்ன பன்மையில சொல்றாய்! அப்போ ஒன்னா, இரண்டா!
அவ்வ்வ்வ்

மகேந்திரன் said...
Best Blogger Tips

உணர்வுகளுடன் உள்ளங்கள் கூடினால்
உவகையே மிஞ்சும்..
வெறும் உணர்ச்சிக்காக மட்டுமே கூடினால்
வெறுமையே மிஞ்சும்...

Yoga.S. said...
Best Blogger Tips

சரி..........!

Yoga.S. said...
Best Blogger Tips

///பதிவில் உள்ள படங்கள் கூகிள் தேடல் மூலம் பெறப்பட்டவை!///சரி..........!

சுதா SJ said...
Best Blogger Tips

யோவ்ஸ் யாராவது எங்க தலைக்கு நிருக்கு பொண்ணு பார்த்து கட்டி வையுங்கோவன்... :(

இனி இந்த மணியை நம்பி பயன் இல்லை.... நிருக்கு பொண்ணு பார்க்க நானே களத்தில் இறங்கிட வேண்டியதுதான்.... ஆனா என்ன எனக்கு தெரிந்தது எல்லாம் ஆபிரிக்கா பிரஞ்சு குட்டிகள்தானே.... நிருக்கு இவங்க ஓக்கேவா????

சுதா SJ said...
Best Blogger Tips

"நான் காதலிலே ஒரு நாடிழந்த அகதி
நரம்பெல்லாம் இல்லை வெட்கமெனும் சகதி
என்னருகே நீயிருந்தால் ஏழுலகும் பேசுமிது தனி விதி
என்னை விட்டு நீயும் சென்று விட்டால் எனக்கேது மதி?<<<<

இதை படிக்க வேண்டியது எங்கள் விதியோ......!!!! அவ்வவ்
(ஜோக்ப்பா கோவிச்சுகாதீங்க...lol)

சுதா SJ said...
Best Blogger Tips

இலக்கியம் கொட்டி கிடக்கு.... நல்லாத்தான் இருக்கு நிரு :)

பி.அமல்ராஜ் said...
Best Blogger Tips

//ம் … ம்’ சுத்தம்! ஆளுக்கு அனுபவம் போல என்றவாறு அவனின் கன்னத்தில் அவள் கிள்ளினாள்.//

இது ஏதோ இந்த ஆளுட அனுபவம் போல கிடக்குதே.. அவ்வ்வ்வ்

Yoga.S. said...
Best Blogger Tips

துஷ்யந்தன் said...

யோவ்ஸ் யாராவது எங்க தலைக்கு நிருக்கு பொண்ணு பார்த்து கட்டி வையுங்கோவன்./////.);););););););););););););?

ஹேமா said...
Best Blogger Tips

உந்தப் பெடியைக் காதலிச்சா காலம்,விதியெல்லாம் சொல்லவேணும்போல !

எங்க அதிராவைக் காணேல்ல.அவதான் சரியா பதில் சொல்லுவா !

Mahan.Thamesh said...
Best Blogger Tips

மச்சி அப்படியே பூரிச்சு போகுது படிக்கும் போது . ஓவரா ஐஸ் வைக்கிறேனோ . மச்சி செமைய தான் லவ் செய்திருக்கே பதிவில சொன்னனப்பா

விச்சு said...
Best Blogger Tips

கவிதை ரொம்ப புடிச்சிருக்கு.செம நக்கலும் நையாண்டியுமாய்.
"மனம் போன் நம்பரில் அடுத்த
பிகரை தேடி ஓடிடும் - கன்னி உளம் வாடிடும்!”

கவி அழகன் said...
Best Blogger Tips

Arumaiyana ilakkiyam. Ippadiyana padaippu onru munthi Thinamurasu paperla varathu

Marc said...
Best Blogger Tips

அருமைப் பதிவு வாழ்த்துகள்

நிரூபன் said...
Best Blogger Tips

@கவி அழகன்

Arumaiyana ilakkiyam. Ippadiyana padaippu onru munthi Thinamurasu paperla varathu
//

இலக்கிய நயம் என்ற பெயரில இப்படி ஓர் படைப்பு தினமுரசில் முன்னர் வந்தது பாஸ்..
முழடில்யன் எனும் பெயரில் ஒருவர் எழுதினார். அவரது படைப்பிற்கு நான் அடிமை!
எனக்கு அந்த இலக்கிய நயப் பகுதி ரொம்ப ரொம்ப பிடிக்கும் பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

கருத்துரை வழங்கிய, பதிவினைப் படித்த அனைவருக்கும் நன்றிகள்!

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails