இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக,தமிழர்களின் உரிமைகளைத் தீர்மானிப்பதற்கு தக்கதோர் சக்தி ஈழத்தில் இல்லை என்கின்ற துணிவில் இந்தியா, மற்றும் சீனாவின் செல்லப் பிள்ளையாக அவர்கள் மடியில் படுத்துறங்கியவாறு, உலக நாடுகளையும், உலகில் வாழும் மனிதாபிமானம் மிக்க அமைப்புக்களையும் ஏமாற்றி வந்தது இலங்கை அரசு. பிரபாகரனுக்குப் பின்னரான சகாப்தம் எப்போது வருமென இலவு காத்த கிளியாக காத்திருந்த சிங்கள இனவாதிகள்; மே 17ம் திகதி 2009ம் ஆண்டின் பின்னர் ஈழத்தில் இடம் பெற்ற அசாதாரண மாற்றங்களைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.
பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு இன்று தான் பதில் வந்ததோ! பாவி உன் கண்களும் செய்த பாவத்தை நினைத்து அழுகின்றதோ? |
தமிழ் மக்களுக்கான தீர்வினை வழங்க வேண்டுமெனில் புலிகளோடு பேச வேண்டும். புலிகள் தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் எனச் சொல்லுகிறார்கள். தமிழ் மக்களும் அவ்வாறே பேசிக்கிறார்கள்.ஆனால் உலக அரங்கில் புலிகளை நாம் பயங்கரவாதிகள் என்றல்லவா சொல்லி மகிழ்ச்சி பொங்க வாழ்கின்றோம் எனப் புளகாங்கிதம் அடைந்து கொண்டிருந்த சிங்கள அரசு, புலிகள் இருக்கும் வரை தமிழ் மக்களுக்கான தீர்வினைக் கொடுக்க முடியாது எனக் கூறி பல உப்புச் சப்பற்ற காரணங்களை உலக நாடுகளுக்கு தெரிவித்து வந்தது. உலக நாடுகளும் சிங்களர்களின் ஒவ்வோர் அசைவுகளையும் உற்றுப் பார்த்து’பொறுமையாக ஈழப் பிரச்சினையினை அவதானித்து வந்திருந்தார்கள்.
இன்றளவில் நிலமை என்ன? இனிமேல் ஈழத்தில் புலிகள் இருப்பதால் தமிழ் மக்களுக்கான தீர்வினைக் கொடுக்க முடியாது என்று வல்லரசுகளின் காதில் பூச்சுத்த முடியாது.ஈழத்தில் முள்ளிவாய்க்காலுடன் புலிகளைத் துடைத்தழித்து விட்டோம் என பூரிப்படைந்து இலங்கை அரசு மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியிருந்தது. இதனால் உலக நாடுகளும் இலங்கையின் அடுத்த கட்ட நடவடிக்கையில் கொஞ்சம் அக்கறை கொள்ள ஆரம்பித்தது. சகட்டு மேனிக்கு தமிழர்களை மிரட்டி, ஏமாற்றி; அவர்கள் தலையில் தாம் விரும்பியதை திணிக்கலாம் என மூன்றாண்டுகளாக தமிழ் மக்களை அரசியல் ரீதியில் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கபட நாடகம் ஆட ஆரம்பித்தது இலங்கை அரசு!
இலங்கை அரசின் போர்க்குற்ற விசாரணைகள், அப்பாவி மக்களின் உரிமைகளை மறுத்து, இலங்கை அரசு மக்களின் பேச்சு சுதந்திரத்தை ஆயுத முனையில் அடக்கி வைத்திருப்பது போன்ற செயற்பாடுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் விவாதங்கள் வரும் போது, உலக நாடுகள் கொஞ்சம் அடக்கி வாசிக்கும் வண்ணம் இந்தியாவும், சீனாவும், இலங்கைக்கான தம் ஆதரவினை பல வழிகளிலும் வெளிப்படுத்தி வந்திருந்தன. ஆனால் "எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்”எனும் நிலமையில் மகிந்தரின் ஈனச் செயல்களை தக்க நேரத்தில் உலக நாடுகள் உணர்ந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறது.
தமிழ் மக்களுக்கான தீர்வினை இலங்கை அரசு துரிதப்படுத்தாது, ஏமாற்றி வருவதனை உணர்ந்த உலக நாடுகள் இலங்கையின் நிலமை தொடர்பாக இம் மாதம் இடம் சுவிற்சர்லாந்து ஜெனீவா நகரில் இடம் பெறப் போகும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கான கூட்டத் தொடரில் கடுமையான தீர்மானத்தினை நிறைவேற்றக் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவும் இலங்கை விவகாரத்தில் தன் கடும் அதிருப்தியினை இம் மாநாட்டில் வெளியிடவுள்ளதாக அறிவித்திருக்கிறது. உலக வல்லரசு களத்தில் இறங்கினால், ஆசியாக் கண்ட உள்ளூர் வல்லரசுகள் அடங்கி தானே ஆகனும்!
அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான தூதுவர் ரொபேட் ஓ ப்ளேக் அவர்களும் போர்க்குற்ற மாம மன்னன் கோத்தபாய ராஜபக்ஸவுடன் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. இவை ஒரு புறம் இருக்க, ஈழப் போர் தொடர்பான தமிழகத்தின் நிலைப்பாடுகள் தொடர்பில் பல தகவல்களை திரட்டும் நோக்கிலும், தமிழக மக்களின் உணர்வுகளை அறியும் நோக்கிலும் இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகம் மக்களிடையே ஆய்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. இது இலங்கை அரசிற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியினையும் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. இலங்கை தன் பலத்த கண்டனத்தினை இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்திடம் தெரிவித்திருக்கிறது.
ஐநா. மனித உரிமைகள் மாநாட்டில் தன் பக்கம் பல நாடுகளின் ஆதரவினை திரட்டிட காலில் விழுந்து கெஞ்சா குறையாக இலங்கை அரசு பல நாடுகளிடம் அழைப்பினை விடுத்து ஏற்பாடு செய்த மாநாட்டினையும் உலக நாடுகள் புறக்கணித்துள்ளன. இப்போது சீனாவையும், இந்தியாவையும் நம்பியிருந்தும், இயலாத நிலமை வந்து விட்டதே என்பதனை சிங்கள தேசம் உணர ஆரம்பித்திருக்கிறது.புலம் பெயர் மக்களின் தொடர் நடைப் பயணங்கள், போராட்டங்கள், ஒருமித்த குரல்கள் யாவும் என்றோ ஓர் நாள் குற்றவாளிகளை உலக அரங்கில் இனங் காட்டும் எனும் நம்பிக்கையினை ஈழ மக்கள் மனதில் உருவாக்கியிருந்தது.
நீண்ட காலம் தாம் தமிழ் மக்களை ஏமாற்றி வாழலாம் என நினைத்த சிங்கள அரசியல்வாதிகளுக்கு இப்போது ஏழரை அமெரிக்காவின் கையிலிருந்து ஆரம்பமாகியிருக்கிறது! பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவானாம் எனும் நிலமையாக இலங்கை அரசின் நிலமை இன்று உலக அரங்கில் வந்திருக்கிறது! வாழ்க மகிந்தர் ஜனநாயகம் - சாரி பிணநாயகம்! வளர்க சிங்களத்தின் ஏமாற்று அரசியல் என்ற நிலமைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நாள் வெகு விரைவில் உருவாக வேண்டும் எனும் தொனியில் இலங்கை ஆட்சி மாற்றம் ஒன்று அவசியம் என்பதனை அமெரிக்க இராஜங்க செயலர் அறிவித்திருக்கிறார். பல ஆயிரம் மக்களின் கண்ணீரும், அப்பாவி உயிர்களின் உணர்வுகளும் அக்கிரமக்காரர்களை சும்மா விடாது எனும் ஆன்றோர் வாக்கு எம் கண் முன்னே நிஜமாகப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை!
எண்ணம் - எழுத்துருவாக்கம்: செ.நிரூபன்.
நன்றி - வணக்கம்!!
|
33 Comments:
நிரு சொன்ன மாதிரி மகிந்தரின் திருகுதாளங்கள் வெளியுலகுக்கு வெலிவந்து கொண்டிருக்கின்றனதான்.மேற்குலகம் கழுத்தை இறுக்கலாம் தான்.
மார்ச் மாசம் பெரும் பிரச்சினையை இல.அரசு எதிர்நோக்கும் என்று நாம் கருதுவது சில வேளை பொய்யாகியும் போகலாம்,ஏனெனில் இப்போது அமெரிக்காவின் கவலை எல்லாம் சீனாவின் தலையீடு ,ரஸ்யா ஆதரவு.. ஆனாலும் எம் புலம் பெயர் மக்களின் ஆர்ப்பாட்டங்கள் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தலாம்.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் ....
வணக்கம் நிரூபன்!அழகாக இலங்கை அரசின் கபட நாடகத்தையும்,மேற்குலகின் நகர்வையும் அலசியிருக்கிறீர்கள்.ஆரம்பமாகப் போகும் ஐ.நா மனித உரிமை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக ஒரு"தீர்மானம்"வர இருப்பது என்னவோ உண்மைதான்!அதனை நேரடியாகவே(பகிரங்கமாகவே) அமெ.ராஜாங்கச் செயலர் அறிவித்திருக்கிறார்!ஜன நாயகம்?!நிலை நாட்டப்பட வேண்டும்,மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பன போன்ற நெருக்குதல்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது!பொல்லைக்கொடுத்து அடி வாங்கிய கதையாக நல்லிணக்க?ஆணைக்குழுவின் அறிக்கையை மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பித்து,ஆக்கபூர்வமான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என அமேரிக்கா அழுத்தம் கொடுக்கிறது!அதாவது,(1)வடகிழக்கில் படைவிலக்கம். (2)ஆயுதக்குழுக்களிடமிருந்து ஆயுதங்களைக் களைதல்.(3)உள்ளுர் மட்டத்திலான அதிகாரப் பகிர்வு. (4)படையினரிடமிருந்து காவல்துறையினருக்கு அதிகாரங்களை மாற்றம் செய்தல்.இவற்றைச் செய்தால் மட்டுமே இலங்கையில் சமாதானம் உருவாகும் என்று அமேரிக்கா கூறுகிறது.மகிந்தரை முடி துறந்து வீட்டுக்குப் போகுமாறும்,தங்கள் அடியொற்றி நடக்கும் ரணில்,சரத் பொன்சேகா போன்றோருக்கு வழிவிட வேண்டும் என்பதே அவர்கள் கோரிக்கையின் சாரம்!சட்டியில் இருந்து அடுப்புக்குள் வீழ்ந்து விடுவோமோ என்று பயமாக இருக்கிறது நிரூபன்!
வண்க்கம் சகோ நிரூபன்
இந்த வல்லரசுகளின் போட்டி அரசியலில் தமிழ் மக்களின் அரசியல் வாழ்வுரிமை அல்லாடுகிறது.அந்த அரசுகள் சிங்கள் அரசுக்கு போரில் உதவி செய்தன.செய்த உதவிக்கு பலன் வேண்டும்.யாருக்கு அதிக பலன் என்பதில் போட்டி இதற்கு தமிழர்களின் நிலை ஒரு பகடைக்காய்.இருப்பினும் ஏதேனும் நல்லது நடக்கலாம் இச்சூழலில் தமிழர்களின் ஒன்றுபட்ட முன்னெடுப்பு மிகத் தேவை.
என்ன நடக்கும் என்பதை பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.
நன்றி
நல்ல செய்தி சொல்லி உள்ளீர்கள்...நண்பரே
இது போன்ற செய்திகள் தொடர்ந்து வரட்டும்.
அவர்களது உள்நோக்கம் என்னவென்பது கடவுளுக்கே வெளிச்சம் சகோதரம்...
நல்லதே நடக்கும்...
நல்லதே நடக்கவேணும்.ஆனாலும் அவன்களுக்கு வெள்ளி உச்சத்திலயாம்.எப்பிடியோ உருட்டிப் பிரட்டி வெள்ளை வேட்டியோட வெளில வந்திடுவான்கள் !
Good news
என்று வரும் அந்த இனிய திருநாள்!...?
புலவர் சா இராமாநுசம்
http://www.etakkumatakku.com/2012/02/blog-post_22.html
கபி.பந்தல்குமார்-ன் கில்மா வெறியாட்டம் !!!
சகோ.நிரூ! தற்போதைய சூழலில் அமெரிக்காவின் கவனம் சிரியாவில் அசாத்தை அப்புறப்படுத்துவதிலும்,ஈரானின் ஹெர்முஸ் ஜலசந்தியில் கச்சா எண்ணை ஏற்றுமதிக்கு தடை வந்து விடக்கூடாதே என்பதிலும்,ஈரானின் நியுக்ளியர் வளர்ச்சி திட்ட முடக்கம் என்பவற்றில் மட்டுமே உள்ளது.
இதன் பின்புலத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் வலுவான இஸ்ரேல் லாபி இருக்கிறது.சிரியாவின் அசாத்தை பதவி விலக்கம் செய்ய நினைத்த திட்டம் ஐ.நாவில் அசாத் ஆதரவாக சீனா,ரஷ்யாவின் விட்டோ அதிகாரத்தில் நிறைவேறாமல் போயிருக்கிறது.இஸ்ரேலின் பாதுகாப்புக்கு இடைஞ்சலான ஈரான் ஆதரவான அசாத்தை நீக்குவதும் எண்ணை பொருளாதாரம் தடையின்றி இருப்பது மட்டுமே இப்போதைய அமெரிக்காவின் மேசையில் உள்ள நிகழ்ச்சி நிரல்.இதற்கிடையில் அமெரிக்காவிற்கு திடீர் ஞானதோயம் பிறந்து பாகிஸ்தானிலிருந்து பலுசிஸ்தானுக்கு சுயநிர்ணய உரிமை தேவை என்ற புதிய ஆயுதத்தை எடுத்துள்ளது.அமெரிக்க நலனின் வட்டத்துக்குள் தமிழர்களின் சுயநிர்ணயம் உள்ளதா என்றால் மதில் மேல் பூனை மாதிரியான நிலையே.மேலும் அரசியல் முன்னெடுப்புக்கள் பொது பார்வையில் ஒனறாகவும்,இரு நாடுகளின் ரகசிய கடித,தூதரக தொடர்புகள் வேறு மாதிரியும் உள்ளன.எனவே மனித உரிமைக் குழுக்களை திருப்தி படுத்துவது மாதிரியும் கூட வியன்னா சூழல் அமைந்து விடக்கூடும்.
இரண்டு வழிகளில் தமிழர்களின் எதிர்கால சுயநிர்ணயத்தை தீர்மானிக்கும் வழிகள் உள்ளன.ஒன்று அமெரிக்க அரசியல் மையத்தை தீர்மானிக்கும் தமிழர் நலன் சார்ந்த லாபி.இரண்டாவது ராஜபக்சேக்களின் நலன் சார்ந்தவர்கள் தவிர்த்த ஏனைய மக்களின் உரத்த குரல்.இவை இரண்டையும் தவிர்த்து ராஜபக்சேக்களின் பலவீனங்களின் மூலமாகவே தீர்வை அடைந்து விட முடியுமென்பது பகல்கனவாகவே அமையும்.
தற்போதைய நிலையில் உருத்திரகுமாரன் தலமையிலான நாடு கடந்த தமீழீழ அரசு குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருப்பதாகவோ அல்லது இயங்க சறுக்கல்கள் கொண்டதாகவோ மட்டுமே தெரிகிறது.ஒரு வேளை சட்ட சிக்கல்கள்,முன்னோக்கி நகர முடியாததற்கான தடங்கல்கள் போன்றவைகளை எதிர்கொள்வதை தமிழர்கள் அமைப்புக்கள் சார்ந்து விவாதிப்பது அவசியம்.
கல்வி,பொருளாதாரம் என்ற இரண்டிலும் முன்னேறுவது என்றாவது ஒருநாள் தேசக் கனவை நிறைவேற்றும்.நன்றி..
பலநாள் திருடன் ஒருநாள் அகப்பட்டே தீருவான் ...
சகோ,
நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த தளத்தில் நான் படிக்கும் ஒரு பதிவு,
என் சிற்றறிவிற்கு எட்டியவரை இலங்கைக்கோ, சிங்கள அரசுக்கோ, ராஜபக்ஷவுக்கோ எந்த ஒரு பின்னடைவும் ஏற்ப்பட போவதில்லை.
இவர் பதவி பறிபோகும் என்று கூட என்ன முடியவில்லை...புலிகளை வீழ்தியாதால் சிங்களர்கள் மீண்டும் இவருக்கு வாய்ப்பளிப்பார்கள் என்றே எண்ணுகிறேன்.
தெய்வம் நின்றுதான் கொல்லும்... பொறுப்போம் தோழரே
மிகவும் சந்தோசமாய் உள்ளது நண்பரே இந்த செய்தியை கூறியமைக்கு மிக்க நன்றி பல ஆயிரம் மக்களின் கண்ணீர் துளிக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்....இதற்கு வெகு நாள் இல்லை
சகோ.நிரூ!வழக்கமாக சீக்கிரமா மறுமொழி சொல்வீங்களே!என்னாச்சு?
தற்போதைய செய்தியாக சல்வேந்திரா சில்வா இலங்கையின் ஐ.நா பிரதிநிதியாக வெளியேற்றம் எனபது மட்டுமே தற்போதைக்கான இலங்கை சார்ந்த உலக அரசியல் மாற்றம்.
@ராஜ நடராஜன்
சகோ.நிரூ!வழக்கமாக சீக்கிரமா மறுமொழி சொல்வீங்களே!என்னாச்சு?
தற்போதைய செய்தியாக சல்வேந்திரா சில்வா இலங்கையின் ஐ.நா பிரதிநிதியாக வெளியேற்றம் எனபது மட்டுமே தற்போதைக்கான இலங்கை சார்ந்த உலக அரசியல் மாற்றம்.
//
மன்னிக்கவும் அண்ணர்,
கடந்த வார பதிவிலும் அறிவித்திருந்தேன்.
காலேஜ் ஆரம்பமாவதால் பதில் போட முடியாதென்று.
மீண்டும் ஓய்வாக இருக்கும் போது பதில் போடுகிறேன்.
@மன்மதகுஞ்சு
நிரு சொன்ன மாதிரி மகிந்தரின் திருகுதாளங்கள் வெளியுலகுக்கு வெலிவந்து கொண்டிருக்கின்றனதான்.மேற்குலகம் கழுத்தை இறுக்கலாம் தான்.
மார்ச் மாசம் பெரும் பிரச்சினையை இல.அரசு எதிர்நோக்கும் என்று நாம் கருதுவது சில வேளை பொய்யாகியும் போகலாம்,ஏனெனில் இப்போது அமெரிக்காவின் கவலை எல்லாம் சீனாவின் தலையீடு ,ரஸ்யா ஆதரவு.. ஆனாலும் எம் புலம் பெயர் மக்களின் ஆர்ப்பாட்டங்கள் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தலாம்.
//
பொறுத்திருந்து பார்ப்போம் நண்பா, மேற்குலகம் பற்றி நாம் கொண்டிருந்த எதிர்பார்ப்புக்கள் யாவும் பொய்த்துப் போய்விடும் போல உள்ளது. புலம்பெயர் மக்களின் போராட்டத்திற்கான வெற்றி தான் தமிழர்களது போராட்டத்தின் அடுத்த கட்டத்தினைத் தீர்மானிக்கும் என்பதில் ஐயமில்லை.
நன்றி நண்பா.
@மகேந்திரன்
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் ....
//
உண்மை தான்,. பொறுத்திருந்து பார்ப்போம்.
@Yoga.S.FR
வணக்கம் நிரூபன்!அழகாக இலங்கை அரசின் கபட நாடகத்தையும்,மேற்குலகின் நகர்வையும் அலசியிருக்கிறீர்கள்.ஆரம்பமாகப் போகும் ஐ.நா மனித உரிமை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக ஒரு"தீர்மானம்"வர இருப்பது என்னவோ உண்மைதான்!அதனை நேரடியாகவே(பகிரங்கமாகவே) அமெ.ராஜாங்கச் செயலர் அறிவித்திருக்கிறார்!ஜன நாயகம்?!நிலை நாட்டப்பட வேண்டும்,மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பன போன்ற நெருக்குதல்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது!பொல்லைக்கொடுத்து அடி வாங்கிய கதையாக நல்லிணக்க?ஆணைக்குழுவின் அறிக்கையை மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பித்து,ஆக்கபூர்வமான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என அமேரிக்கா அழுத்தம் கொடுக்கிறது!அதாவது,(1)வடகிழக்கில் படைவிலக்கம். //
வணக்கம் ஐயா,
உலக நாடுகளை ஏமாற்றி, தமது போர்க் குற்றங்களை தாமே விசாரித்து ஓர் அறிக்கை சமர்பிக்கலாம் எனும் நோக்கில் உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு இப்போது முதல் அடி விழுந்திருக்கிறது;. அடுத்த கட்ட நகர்வுகளும், எதிர்வினைகளும், தமிழர்களின் உரிமை தொடர்பில் அமைய வேண்டும் என்பதே எல்லோரதும் ஆவல். பொறுத்திருந்து பார்ப்போம்.
@Yoga.S.FR
வடகிழக்கில் படைவிலக்கம். (2)ஆயுதக்குழுக்களிடமிருந்து ஆயுதங்களைக் களைதல்.(3)உள்ளுர் மட்டத்திலான அதிகாரப் பகிர்வு. (4)படையினரிடமிருந்து காவல்துறையினருக்கு அதிகாரங்களை மாற்றம் செய்தல்.இவற்றைச் செய்தால் மட்டுமே இலங்கையில் சமாதானம் உருவாகும் என்று அமேரிக்கா கூறுகிறது.மகிந்தரை முடி துறந்து வீட்டுக்குப் போகுமாறும்,தங்கள் அடியொற்றி நடக்கும் ரணில்,சரத் பொன்சேகா போன்றோருக்கு வழிவிட வேண்டும் என்பதே அவர்கள் கோரிக்கையின் சாரம்!சட்டியில் இருந்து அடுப்புக்குள் வீழ்ந்து விடுவோமோ என்று பயமாக இருக்கிறது நிரூபன்! //
குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அமெரிக்கா அறிக்கை விட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய விடயம் தான்.
ஆனாலும் ராமன் ஆண்டாலும், இராவணன்ன் ஆண்டாலும் நமக்கு கிடைக்கும் தீர்வில் நம்பிக்கை கொள்ள்ள முடியாது அல்லவா?
@சார்வாகன்
வண்க்கம் சகோ நிரூபன்
இந்த வல்லரசுகளின் போட்டி அரசியலில் தமிழ் மக்களின் அரசியல் வாழ்வுரிமை அல்லாடுகிறது.அந்த அரசுகள் சிங்கள் அரசுக்கு போரில் உதவி செய்தன.செய்த உதவிக்கு பலன் வேண்டும்.யாருக்கு அதிக பலன் என்பதில் போட்டி இதற்கு தமிழர்களின் நிலை ஒரு பகடைக்காய்.இருப்பினும் ஏதேனும் நல்லது நடக்கலாம் இச்சூழலில் தமிழர்களின் ஒன்றுபட்ட முன்னெடுப்பு மிகத் தேவை.
என்ன நடக்கும் என்பதை பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.
நன்றி //
உண்மையான யதார்த்த அரசியல் மாற்றங்களைச் சொல்லியிருக்கிறீங்க.
தமிழர்களை வைத்து கபடி ஆடியோர் இப்போது முரண்படுவதால், தமிழர் பக்கம் நன்மை நிகழ்ந்தால் சந்தோசமே.
@உலக சினிமா ரசிகன்
நல்ல செய்தி சொல்லி உள்ளீர்கள்...நண்பரே
இது போன்ற செய்திகள் தொடர்ந்து வரட்டும்.
//
பொறுத்திருந்து பார்ப்போம்.
நன்றி
@ரெவெரி
அவர்களது உள்நோக்கம் என்னவென்பது கடவுளுக்கே வெளிச்சம் சகோதரம்...
நல்லதே நடக்கும்... //
உண்மை தான். குள்ள நரிகளின் குணத்தினை இலகுவில் எடை போட முடியாதல்லவா?
@ஹேமா
நல்லதே நடக்கவேணும்.ஆனாலும் அவன்களுக்கு வெள்ளி உச்சத்திலயாம்.எப்பிடியோ உருட்டிப் பிரட்டி வெள்ளை வேட்டியோட வெளில வந்திடுவான்கள் !
//
பார்ப்போம்! வெள்ளி உச்சத்தில என்றாலும், என்றைக்கோ ஓர் நாள் சனி உச்சியில் வந்து தானே ஆகனும்.
@கவி அழகன்
Good news
//
நன்றி நண்பா.
@புலவர் சா இராமாநுசம்
என்று வரும் அந்த இனிய திருநாள்!...?
புலவர் சா இராமாநுசம் //
எல்லோரும் அந்த இனிய திருநாளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
@முட்டாப்பையன்
http://www.etakkumatakku.com/2012/02/blog-post_22.html
கபி.பந்தல்குமார்-ன் கில்மா வெறியாட்டம் !!!
//
நண்பரே, பதிவிற்கு தொடர்பில்லாது லிங் போட வேணாம்.
ஆல்ரெடி இப்படி கருத்துக்கள் வந்து தான் பல சர்ச்சைகள் கிளம்பி இருக்கின்றன.
@ராஜ நடராஜன்
சகோ.நிரூ! தற்போதைய சூழலில் அமெரிக்காவின் கவனம் சிரியாவில் அசாத்தை அப்புறப்படுத்துவதிலும்,ஈரானின் ஹெர்முஸ் ஜலசந்தியில் கச்சா எண்ணை ஏற்றுமதிக்கு தடை வந்து விடக்கூடாதே என்பதிலும்,ஈரானின் நியுக்ளியர் வளர்ச்சி திட்ட முடக்கம் என்பவற்றில் மட்டுமே உள்ளது.
இதன் பின்புலத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் வலுவான இஸ்ரேல் லாபி இருக்கிறது.சிரியாவின் அசாத்தை பதவி விலக்கம் செய்ய நினைத்த திட்டம் ஐ.நாவில் அசாத் ஆதரவாக சீனா,ரஷ்யாவின் விட்டோ அதிகாரத்தில் நிறைவேறாமல் போயிருக்கிறது.இஸ்ரேலின் பாதுகாப்புக்கு இடைஞ்சலான ஈரான் ஆதரவான அசாத்தை நீக்குவதும் எண்ணை பொருளாதாரம் தடையின்றி இருப்பது மட்டுமே இப்போதைய அமெரிக்காவின் மேசையில் உள்ள நிகழ்ச்சி நிரல்.இதற்கிடையில் அமெரிக்காவிற்கு திடீர் ஞானதோயம் பிறந்து பாகிஸ்தானிலிருந்து பலுசிஸ்தானுக்கு சுயநிர்ணய உரிமை தேவை என்ற புதிய ஆயுதத்தை எடுத்துள்ளது.அமெரிக்க நலனின் வட்டத்துக்குள் தமிழர்களின் சுயநிர்ணயம் உள்ளதா என்றால் மதில் மேல் பூனை மாதிரியான நிலையே.மேலும் அரசியல் முன்னெடுப்புக்கள் பொது பார்வையில் ஒனறாகவும்,இரு நாடுகளின் ரகசிய கடித,தூதரக தொடர்புகள் வேறு மாதிரியும் உள்ளன.எனவே மனித உரிமைக் குழுக்களை திருப்தி படுத்துவது மாதிரியும் கூட வியன்னா சூழல் அமைந்து விடக்கூடும்.
/
வணக்கம் அண்ணர்,
பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஈழப் பிரச்சினையில் அமெரிககவிற்கு சிறு துளி நன்மையும் இல்லை. ஆகவே அந் நிலையில் தனக்கு எங்கே இலாபம், நன்மை உள்ளதோ அங்கே கால் பதிக்கும் அமெரிக்கா,
ஓர் திட்டம் வைத்திருக்காது, ஈழப் பிரச்சினை தொடர்பில் இப்படி ஓர் அழுத்தத்தினை ஸ்ரீலங்கா அரசிற்கு கொடுத்திருக்காது அல்லவா?
பொறுத்திருந்து பார்ப்போம்,.
@ராஜ நடராஜன்
இரண்டு வழிகளில் தமிழர்களின் எதிர்கால சுயநிர்ணயத்தை தீர்மானிக்கும் வழிகள் உள்ளன.ஒன்று அமெரிக்க அரசியல் மையத்தை தீர்மானிக்கும் தமிழர் நலன் சார்ந்த லாபி.இரண்டாவது ராஜபக்சேக்களின் நலன் சார்ந்தவர்கள் தவிர்த்த ஏனைய மக்களின் உரத்த குரல்.இவை இரண்டையும் தவிர்த்து ராஜபக்சேக்களின் பலவீனங்களின் மூலமாகவே தீர்வை அடைந்து விட முடியுமென்பது பகல்கனவாகவே அமையும்...//
உண்மையான கருத்துக்களைப் பகிர்ந்திருக்கிறீங்க.
அரசியல் ரீதியில் இது தான் இன்றைய ஈழ தமிழர் நிலமை!
ஆனால் ராஜபக்ஸேவின் பலவீனத்தை அடிப்படையாக வைத்து ஈழத்தில் ஆட்சி மாற்றம் இடம் பெற்றால் தமிழர் தரப்பிற்கு சாதக நிலமை எழுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் அல்லவா?
@ராஜ நடராஜன்
தற்போதைய நிலையில் உருத்திரகுமாரன் தலமையிலான நாடு கடந்த தமீழீழ அரசு குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருப்பதாகவோ அல்லது இயங்க சறுக்கல்கள் கொண்டதாகவோ மட்டுமே தெரிகிறது.ஒரு வேளை சட்ட சிக்கல்கள்,முன்னோக்கி நகர முடியாததற்கான தடங்கல்கள் போன்றவைகளை எதிர்கொள்வதை தமிழர்கள் அமைப்புக்கள் சார்ந்து விவாதிப்பது அவசியம்.
கல்வி,பொருளாதாரம் என்ற இரண்டிலும் முன்னேறுவது என்றாவது ஒருநாள் தேசக் கனவை நிறைவேற்றும்.நன்றி.. //
நாடு கடந்த அரசினை நம்பி பயனில்லை என்பது எப்போதோ தெரிந்த விடயமாகி விட்டது. நாடு கடந்த அரசு மௌனம் காக்கிறது.
மறு புறத்தில் பதவிப் போட்டிகளால் பிளவுபடுகின்றது.
நீங்கள் சொல்வது போல, ஈழத் தமிழர்களின் கல்வி, பொருளாதாரம் ஆகியவை தான் தமிழர் வாழ்வை உயர்த்தும் என்பதில் ஐயமில்லை.
@koodal bala
பலநாள் திருடன் ஒருநாள் அகப்பட்டே தீருவான் ...
//
உண்மை தான் நண்பா.
@R.Puratchimani
சகோ,
நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த தளத்தில் நான் படிக்கும் ஒரு பதிவு,
என் சிற்றறிவிற்கு எட்டியவரை இலங்கைக்கோ, சிங்கள அரசுக்கோ, ராஜபக்ஷவுக்கோ எந்த ஒரு பின்னடைவும் ஏற்ப்பட போவதில்லை.
இவர் பதவி பறிபோகும் என்று கூட என்ன முடியவில்லை...புலிகளை வீழ்தியாதால் சிங்களர்கள் மீண்டும் இவருக்கு வாய்ப்பளிப்பார்கள் என்றே எண்ணுகிறேன்.
தெய்வம் நின்றுதான் கொல்லும்... பொறுப்போம் தோழரே
//
என்றோ ஓர் நாள் தர்மம் வென்றால் சந்தோசம் தானே தோழர்.
@R.CHINNAMALAI
மிகவும் சந்தோசமாய் உள்ளது நண்பரே இந்த செய்தியை கூறியமைக்கு மிக்க நன்றி பல ஆயிரம் மக்களின் கண்ணீர் துளிக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்....இதற்கு வெகு நாள் இல்லை
//
இன்னும் சில தினங்கள் பொறுப்போம் நண்பா,
Post a Comment