சத்தியமா இது ஓர் ஆபாசப் பதிவு இல்லைன்னு சொன்னாலும் நம்பவா போறீங்க? நம்புங்கைய்யா! இது ஓர் ஆபாசப் பதிவில்லை! இப் பதிவானது அனைத்து வயதினரும் படிக்கும் வண்ணம் இந்த வாரம் முதல் மாற்றியமைக்கப்படுகின்றது. பல வாசக உள்ளங்களின் வேண்டுகோளுக்கு அமைவாக வழமையாக வாரந்தோறும் 18++ பதிவாக இடம் பெற்ற இப் பதிவு, இந்த வாரம் முதல், புது மெருகுடன் உங்களை நாடி வருகின்றது. எல்லோரும் ரெடியா? வாருங்கள் பதிவிற்குள் நுழைவோம்.
அரசியலையும் தாண்டிய நட்பிற்கு இலக்கணமாய் சசிகலா மேடம்!
பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கில் பல அரசியல் அவதானிகளும் ஜெயாவிற்கு எதிராக சசிகலா மேடம் சாட்சியம் கூறுவார் என எதிர்பார்த்திருந்த வேளையில்,நட்பிற்கு இலக்கணமாய் தன் நல் எண்ணத்தினை வெளிப்படுத்தியிருக்கிறாரு சசிகலா மேடம்!20 ஆண்டுகளுக்கும் மேலாக உடன் பிறவாச் சகோதரியாக ஜெயா அம்மையாருடன் உடனிருந்து, பிரிந்த சசிகலா மேடம், தன் குரோதங்களை எல்லாம் மறந்து, எல்லாவற்றுக்கும் தானே பொறுப்பு என கூறியிருப்பது; அரசியலில் ஓர் திருப்பு முனைக்கு அடித்தளம் இடும் என்பதில் ஐயமில்லை! கலைஞர் ஐயா, நீங்க இந்த நட்பின் செய்தினை உணர்ந்தாச்சும், வாக்களித்த மக்களுக்கு ஆட்சியில் அமரும் போது, நன்றிக் கடன் உள்ளவராக இருக்கனும் எனும் தத்துவத்தினை உணர்ந்துக்கனும்.
அதள பாதாளத்திற்கு அழைத்துச் செல்கிறார் சனாதிபதி மகிந்த!
இலங்கை மக்களின் எதிர்காலத்தை தன்னுடைய மகிந்த சிந்தனை மூலம் மாத்திக் காட்டுவேன் எனக் களமிறங்கியிருந்தாரு இலங்கை சனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்கள். ஆனால் அவர் ஆட்சிப் பீடமேறிச் சில மாதங்களில் இலங்கையின் நிதி நிலமை, பண வீக்கம் மெது மெதுவாகச் சரிய ஆரம்பித்தது. உலக வங்கி முதல், உலகில் உள்ள தனியார் நிதி நிறுவனங்கள் வரை கையேந்தா குறையாக, கடன் மேல கடன் வாங்கி புலிகளை ஒழிக்கும் பணியில் புகுந்து வெளையாட ஆரம்பிச்சாரு மகிந்த அங்கிள்.
இப்போ புலிகளை ஒழித்தாகிட்டுதாம். ஆனால் புலிகளை ஒழிக்க வாங்கிய பணத்தினை கட்ட முடியாத நிலமையில் நாடு திண்டாடிக் கொண்டிருக்கும் போது,உலக நாடுகள் தமிழர்களின் உரிமைப் போரினை உணர்ந்து, பொருளாதார ரீதியில் வரி விலக்குகளை இலங்கைக்கு வழங்காது, இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்கள் சிலவற்றினைப் புறக்கணித்து இலங்கைக்கு அடி மேல் அடி கொடுக்க ஆரம்பித்திருக்கிறது.
இப்போ நாட்டில் விலை வாசி அதிகமாகுவதால், இலங்கை ரூபாவின் பெறுமதி உலக சந்தையில் வீழ்ச்சியடைய ஆரம்பிச்சிருக்கிறது. மக்கள் பணத்தோட வாழும் மந்திரிகளுக்கு என்ன நடந்தாலும் அது கொண்டாட்டம் தான்; ஆனால் பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ள மக்களுக்கு இப் பிரச்சினை ஓர் திண்டாட்டம் அல்லவா?
ஊழல் வழக்கினால் தன் பதவியைத் துறந்த ஜெர்மன் அமைச்சர்
ஜெர்மனில் அதிபராக இருந்த கிறிஸ்டியன் வுல்ப் அவர்கள் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கியதாக; அவர் அதிபராக 2008ம் ஆண்டு பதவியேற்ற பின்னர் ஓர் சர்ச்சை கிளம்பியிருந்தது. பின்னாடி ஊழல் வழக்கு விசாரிக்கப்பட்டு, அதிபரும் குற்றவாளி அப்படீன்னு நிரூபிக்கப்பட்டிருக்காரு. ஆனால் மானஸ்தன் என்பதற்கு அடையாளமாக, தன்னோட பதவியினை துறந்து, குற்றத்தினை ஒப்புக் கொண்டிருக்காரு அதிபர் கிறிஸ்டியன் வுல்ப். நம்ம நாட்டுக்காரங்க இந்த மாதிரி மனம் படைத்தவங்களிடமிருந்து கத்துக்க வேண்டியது நெறைய இருக்கு. தகப்பன், மகள், மருமகன் என ஓர் குடும்பமே குஜாலா ஊழல் பண்ணிட்டு, மறுபடியும் பதவி ஆசையால எலக்சனில நின்னு ஜெயிச்சு காட்டுவேன் அப்படீன்னு சொல்லிட்டு இருக்கும் இந்த உலகத்தில, இப்படி நல்ல மனம் படைச்சவங்க வாழுவது அரிதிலும், அரிது தானேங்க.
சோ(ஜோ)க்கு செம சொக்கு! (கொஞ்சம் ஓல்ட்டு + கொஞ்சம் ரீமேக்கு)
ஒரு பையனும், ஓர் தாத்தாவும் பேசிக்கிறாங்க.தாத்தா, முட்டாளுக்கும், அறிவாளிக்கும் என்னா வேறுபாடி அப்படீன்னு கேட்டான் பையன்.
தாத்தா சொன்னாரு, அறிவாளி எதையுமே உறுதியா சொல்ல மாட்டான் + உறுதியா நம்ப மாட்டான்.ஆனா முட்டாளு எதையுமே இலகுவில் நம்பிடுவானு.
பையன் கேட்டான்: தாத்தா நீங்க இதை உறுதியா சொல்றீங்களா? இல்லே சந்தேகத்துடன் சொல்றீங்களா?
தாத்தா சொன்னாரு, இதை நான் உறுதியா சொல்றேன்னு!!
ப்ளாஸ்டிக் சர்ஜரிக்கு தயாராகும் நயனாம்பிகை
பிரபுதேவா மேல் மோகம் கொண்ட நயனாம்பிகை புயல், இப்போது மெது மெதுவாக கரையை அடைய ஆரம்பிச்சிருக்கிறது. இதனால் தன்னைச் சுற்றியிருக்கும் பிரபுதேவாவின் நினைவுகளை மெது மெதுவாக அழிக்க முயற்சி செய்திட்டு வர்றாராம் நயனாம்பிகை. தன்னோட கையில குத்தியிருந்த பிரபுதேவா பேரை ப்ளாஸ்டிக் சர்ஜரி மூலம் அழிக்க டாக்டர்கள் உதவியை நாடியிருக்காராம் அம்மணி! பச்சை குத்தினதை சிம்பிளா அழிச்சிடலாம் அம்மணி! ஆனால் பிரபுதேவா - - - - - அழிக்கவா முடியும்?
பதிவர் முரண்:
காதலி எல்லோரும் உனக்கு கடிதம் எழுதுவார்கள் - ஆனால்
ஐடியா மணி நானோ காவிய பதிவெழுதினேன் - என்னையும்
ஆதரி என கேட்டேன் - அடிப் பாவி நீயோ
தூரப் போய் விடு என சொன்னாயே தகுமா? - தூரத்தே
உன் மூணாவது கணவன் வருகிறான் எனச் சொன்னாயே சரியா?
பதிவர் ஜோதிடம்:
பேஸ்புக்கில் அண்மைக் காலமாக ஓர் வைரஸ் பரவி வருதுங்க. அது என்னா வைரஸ் என்றால், ஓர் ஆபாச வீடியோ லிங். ஆர்வக் கோளாறில நீங்க யாராச்சும் அந்த வீடீயோவை கிளிக் செஞ்சீங்க என்றா, உங்க பேரில அந்த வீடியோ குறைஞ்சது ஒரு பத்துப் பேருக்கு போகுமுங்க. நம்ம வாத்யார் பதிவர் ஒருத்தரின் பேஸ்புக் Wall இல் இந்த வீடியோ லிங் இருந்திச்சுதுங்க. ஆனா அந்தப் பதிவரோட நண்பர் என்னா செஞ்சாருன்னா. அந்த வீடியோவை லைக் செஞ்சு, "Nice Machchi” அப்படீன்னு கமெண்டும் போட்டிருக்காரு. கொய்யாலே! அப்புறம் என்னா நடந்திருக்கும் என்று நான் சொல்லியா உங்களுக்கு தெரியனுமுங்க. இந்த தொல்லையில் இருந்து தம்மை விடுவிக்க, ரெண்டு பதிவர்களும் யாக பூசை செய்யப் போறதா பேசிக்கிறாங்க.
பதிவர் பலி பாடல்:
பதிவுலகே கதி என்று கிடந்தேன் - நாள் தோறும்
பதிவுகளை கொடுத்திட முனைந்தேன்
பாடப் புஸ்த்தகத்தை கையிலெடுக்கும் காலம் வந்தது
பதிவுகளை தர நேரம் இல்லையே எனும் நிலையும் வந்ததே!!
பதிவர் குசும்பும், குழப்பமும்:
ஊசி இணைப்பு:
இந்த வாரம் ஊசி இணைப்பாக "நீ தானே என் பொன் வசந்தம்” படத்தின் ட்ரெயிலர் உங்களை நாடி வருகின்றது. இந்த ட்ரெயிலரில் மீண்டும் இசை ஞானியின் வித்துவத் திறமை மனதைக் கொள்கை கொள்ளும் வண்ணம் ட்ரெயிலரின் பின் புலத்தில் மென்மையாக ஒலிக்கிறது. இந்தப் படம் நீண்ட நாளைக்குப் பின்னர் இளையராஜா சாரின் ரசிகர்களை இசையால் குளிர்விக்கப் போகிறது என்பதில் ஐயமில்லை.
நன்றி,
வணக்கம்!!
இப் பதிவிற்கான படங்கள் கூகிள் தேடல் மூலம் பெறப்பட்டவை!
|
14 Comments:
இந்த வாரமும் பதிவு கலக்கல் மச்சி.
//பச்சை குத்தினதை சிம்பிளா அழிச்சிடலாம் அம்மணி! ஆனால் பிரபுதேவா - - - - - அழிக்கவா முடியும்?//
இங்கும் வசனத்தில் வரும் அதே சொல்லைப் போட்டால் சரியா வருமா??? டவுட்டு
இதுக்குத் தான் சொல்றது ... “இது ஆபாசப் பதிவல்ல” அப்படின்னு ரொம்ப நல்லவன் மாதிரி பதிவு போட்டா யாரு வருவா? நம்மள மாதிரி கொஞ்சம் நல்ல புள்ளங்க மட்டும் வந்து வாசிப்பம்.
இந்த வாரம் ஏன் வாய்ஸ் பதிவு மிஸ்ஸிங்?
என்னாது இத்தலைப்பிலேயும் அரசியலோ? அவ்வ்வ்வ்வ்வ்
//தாத்தா சொன்னாரு, இதை நான் உறுதியா சொல்றேன்னு!!/
நிரூபன், நீங்க இந்தப் பதிவை உறுதியாத்தான் எழுதியிருக்கிறீங்களோ? இல்ல ஏதோ நயந்தாரா பற்றிக் கதை அடிபடுது அதுதான் கேட்டேன்:)).. எங்கிட்டயேவா? விடமாட்டமில்ல.
//காதலி எல்லோரும் உனக்கு கடிதம் எழுதுவார்கள் - ஆனால்
ஐடியா மணி நானோ காவிய பதிவெழுதினேன் //
என்னாது “ஆள்” காவியமாகிட்டாரோ? அதுதான் காணேல்லையாக்கும் இங்கின:)
உவவைப்போல ஒரு ஆயிரம் பாலம்மாக்கள் உருவாகினா... பேஸ் ஃபுக்கை மூடிவிட்டு ஓடிவிடுவினம் எல்லோரும்... இதிலிருந்து என்னா தெரியுதெண்டால்.. நம்மளால ஆக்கவும் முடியும்.. அழிக்கவும் முடியும்...:)))
உஸ்ஸ்ஸ்ஸ் இப்பூடி வியர்க்குதே... நான் போறன் நிருபன்.. இக்கதையை எல்லோருக்கும் சொல்லிவிடுங்க... யோகா அண்ணனுக்கும் சொல்ல மறந்திட வாணாம்:)).
வணக்கம் மாணவர் நிரூபன்!அருமையாக இருந்தது."கல்வியே கருந்தனம்".படிப்பில் கவனம் செலுத்துங்கள்.வம்பிழுப்பதே வாடிக்கையாகி விட்டது!///athira said...
நம்மளால ஆக்கவும் முடியும்.. அழிக்கவும் முடியும்...:)))
உஸ்ஸ்ஸ்ஸ்........இக்கதையை எல்லோருக்கும் சொல்லிவிடுங்க... யோகா அண்ணனுக்கும் சொல்ல மறந்திட வாணாம்:)).////ரொம்ப நன்றிங்க,அதிரா!மைண்டில ஏத்தியாச்சு.
வணக்கம், மச்சி 18+ ஆக இருந்த இந்தத் தொகுப்பை, நார்மலாக மாத்தியதற்கு முதலில் கண்சனங்கள்! ( திருந்தவிடவே மாட்டம்! கொர்ர்ர்ர்ர்ர்ர்ர் )
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. எனக்கு இங்கின ”ஒண்ணுமே தெரியேல்லை” நிரூபன்....:)))..
சரி அதுபோகட்டும்..:))
//ரொம்ப நன்றிங்க,அதிரா!மைண்டில ஏத்தியாச்சு.
///
யோகா அண்ணன் ஏதும் அ”ளி”க்கும் வேலை இருந்தால் சொல்லிடுங்க:)).. நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:)).
நன்றாகவுள்ளது :-)
அம்மாச்சின்ர படம் அழகோ அழகு.ஆனால் பொய்.எங்கட வீடுகளில 40 தாண்டிய ஊர்லயிருந்து வந்த சாதாரண பெண்டுகள் மௌஸ் அரக்கவே பயப்பிடுகினம் !
@ஹாலிவுட்ரசிகன்இந்த வாரம் ஏன் வாய்ஸ் பதிவு மிஸ்ஸிங்?
//
நண்பா, இந்த வாரம் கொஞ்சம் பிசியாகிட்டேன். அதான் குரல் பதிவினை இணைக்க முடியலை!
athira said...
யோகா அண்ணன் ஏதும் அ”ளி”க்கும் வேலை இருந்தால் சொல்லிடுங்க:)).. நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:)).///இனி வரும் நவம்பரில் தான் எனது பிறந்த நாள் வரும்!அப்போது ஏதும் "அளி"யுங்கள்,ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!!
இனிய இரவு வணக்கம் நண்பரே,
தாமத பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும்..எந்த பதிவையும் பெருசா படிச்சு கருத்து போடுற அளவுக்கு மூடு இல்ல அதான்..இன்னிக்கு பிறப்பதிவுகளில் குறைவாகதான் பின்னூட்டம் இட்டேன்,
மீண்டும் மீண்டும் பல ஆச்சரியங்கள்..தங்களால் மட்டும் எப்படி இவ்வளவு அழகாக நிறைய பதிவுகளை போட முடிகிறது...இந்த வார பதிவு சூப்பர்..நன்றி.
Post a Comment