இதயத்தில் ஊறிய நட்பு - எம்மை விட்டு இலகுவில் பிரிந்ததேனோ?
இன்றும் எம் மனத் திரைகளில்
உன் ஞாபகங்கள் தாலாட்டுகிறது தோழா
முகம் தெரியாது இணையத்தில் நட்பாகி
எம் எல்லோர் முன்னும் சிரித்த முகத்துடன்
பல பதிவுகள் வாயிலாக கதை பேசி
இன்று இடியாய் ஓர் சேதியை
இதயத்தில் இறக்கி விட்டுச் சென்றாயோ மாயா?
நம்பமுடியவில்லையடா நண்பா,
உன் கல கலப்பு மறு மொழிகளும்
குசும்பு நிறைந்த போட்டோ கமெண்டுகளும்
வள வள என்ற பேச்சுக்களும்
எம் உள்ளத்தை
நீ அருகே இருக்கிறாய் என கூறி
தேற்றுகிறது நண்பா - ஆனால்
விதியிடம் தோற்றுப் போன உன்னை
காண முடியலையே என்று
நாமெல்லோரும் விக்கித்து தவிக்கின்றோமடா?
மாயா மீண்டும் வந்து
ஓர் போட்டோ கமெண்ட் தாராயோ - கொடும்
தீயை போன்றதோர் சேதி கேட்டு
துடிக்கும் எம்மை ஆற்றிட வாராயோ??
உன் அறிமுகமும், அன்பாய் பேசும் பண்பும்
தோல்விகள் பல கண்டும்,
வாழ்வில் உனக்கான
வளமான நாள் வருமென்ற
எதிர்பார்ப்பும் எமக்கு
வாழ்க்கையெனும் பாடத்தில்
ஆயிரம் சேதி சொல்லி நிற்கிறதடா!
உன்னோடு சில தடவைகள்
அலைபேசியில் பேசினாலும்
அந்த கணீர் குரல் இன்றும்
என் காதுகளில் ஒலிக்கிறது,
ரிங்கிங் டோனாக
"என் ப்ரெண்டைப் போல
யாரு மச்சான்" என நட்பிற்கு
முதன்மை கொடுத்த உந்தன்
அலைபேசி ஒலி இன்றும் காதுகளில்
ரீங்காரம் இடுகின்றது - ஆனால்
அழைப்பொலி கேட்டு எம்மோடு
அன்பாய் பேசிட நீ தான்
அருகினில் இல்லையே எனும் ஏக்கத்தில்
விழிகளில் நீர் அருவியாய் சொரிகிறது!
இதயத்தில் ஊறிய
இணையத்து நட்பு
எமை விட்டு இலகுவில் பிரிந்ததும் ஏனோ?
உதயத்தை நாடி நீயும்
பயணித்த வேளையில்
காலனும் உன்னுயிர் எடுத்ததன் காரணம் யாதோ?
நகைச்சுவை இளவலே
உன்னை மீண்டும்
காணோமா எனும்
ஏக்கத்தில் கழிகிறதடா
இங்குள்ளோர் வாழ்வு!
பின்னூட்டங்களில் நீ புதுமைகளை புகுத்தினாய்
வலைப் பதிவர் மனங்களுள்
உன் குதூகல மறு மொழிகளால்
இலகுவில் நுழைந்தாய்
போட்டோ கமெண்ட் போட்டாய் - நான் வீதியால்
நடந்து போகையிலும் உன் குறும்பு
வார்த்தைகளை நினைத்து சிரிக்கச் செய்தாய்
முகம் தெரியாது உன்னோடு பழகையிலோ
இன் முகத்தோடு உன் முகம் காட்டி
நெருங்கிய தோழனாய் கதை பல பேசினாய்
அன்போடு சாட்டிங்கில் அழைத்து
ஆலோசனைகள் பல வேண்டுவாய் - பின்னர்
நீ செய்யும் தொழில்நுட்ப வேலைகள் யாவும்
நேர்த்தியா என பரிசோதிக்க சொல்லுவாய் - இன்று
உன்னை காணவில்லையே என ஏங்கும்
எம்மை பரிதவிக்க விட்டு சென்றதும் ஏன் மாயா?
உன் கமெண்டுகள் மூலம்
தமிழ் சினிமா நடிகர்களின்
முகங்களை நினைவுபடுத்தினாய் - இன்று
உனைக் காணலையே எனத் துடிக்கும்
பல சகோதரிகளை
முகம் புதைத்து
அழ வைத்துச் சென்று விட்டாயே!
மென்மைக்கும் நீ நாயகன்,
அமைதியான குணத்திற்கும் நீ தோழன்
பூமியில் உள்ள மனிதரின் குணங்களை
அனுபவத்தால் எடை போட்ட அனுபவஸ்தன்
ஆற்றாத் துயரில் அழுந்தி துடிக்கும்
பதிவர்களுக்கு ஓர் வார்த்தையேனும்
சொல்லாது சென்று விட்டாயே - ஏன் தோழா?
துடிக்கின்றோம் மாயா,
துடிப்பான இளைஞன் உன்னை
தூக்கிச் செல்ல காலனுக்கும்
எப்படித் தான் மனசு வந்ததோ?
அதிரா அக்கா ப்ளாக்கில்
நீ அடித்த லூட்டிகளும்
பின்னூட்டம் ஊடாக
நீ போட்ட பூனை படங்களும்
அடி மனதில் இன்றும் நினைவுகளாக!
தோல்விகளைக் கண்டும் துவளாது
ராஜ நடை போட்ட
ராஜேஷ் உன்னிடம்
காலன் தோற்றுப் போயிருந்தால்
இந் நேரம் மகிழ்ச்சி கடலில்
நாம் மூழ்கித் திளைத்திருப்போம்!
ஆனால் எம்மையெல்லாம்
மௌனச் சிறைக்குள் அமிழ்த்தி விட்டு
சென்று விட்டாயே தோழா?
உந்தன் ஆத்மா சாந்தியடைய
அனைவரும் பிரார்த்திப்போம்!
பதிவுலகத்தில் குறுகிய காலத்தினுள் அறிமுகமாகி அதிகளவான பதிவர்கள் மனதில் இடம் பிடித்தவர் மாய உலகம் வலைப் பதிவின் சொந்தக்காரன் சகோதரன் ராஜேஷ். பொறியியல் பட்டப் படிப்பினைப் பூர்த்தி செய்த பின்னர் சினிமாவின் மீதுள்ள ஈடுபாட்டின் காரணத்தினால் இயக்குனராக வேண்டும் எனும் ஆவலில் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்திருந்தார். ஆனாலும் தன் விடா முயற்சியின் பயனாக இயக்குனராக வேண்டும் எனும் போராட்டத்தில் உதவி இயக்குனராக வெற்றி பெற்று "தேநீர் விடுதி" திரைப்படத்தில் தன் பங்களிப்பினையும் நல்கியிருந்தார்.
கடந்த 31.01.2012 செவ்வாய்க் கிழமை அதிகாலை தமிழகத்தின் சேலத்தில் ராஜேஷ் அவர்கள் இறைவனடி சேர்ந்திருக்கிறார்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அனைத்துப் பதிவர்களும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவதோடு, இறைவனையும் பிரார்த்திப்போம். அன்னாரின் பிரிவால் துயருரும், குடும்பத்தினர், நண்பர்கள், மற்றும் உறவினர்களுக்கு எம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வோம்.
பிற் சேர்க்கை: அன்பு உறவுகளே! இது ஓட்டுக்காகவோ, ஹிட்டிற்காகவோ எழுதப்பட்ட பதிவு அல்ல. உங்களால் இயன்றவரை இந்தச் சேதியினை அனைத்து உறவுகளுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். ராஜேஷின் போன் நம்பர் என்னிடம் இருக்கிறது. அது சுவிச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்று சொல்கிறது. ஆகவே நண்பர்கள் யாராச்சும் அவரது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முடிந்தால் தொடர்பு கொண்டு பேசி, இறுதிக் கிரியை நிகழ்வுகளில் கலந்து கொள்ள முயற்சி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
|
60 Comments:
மாயாவுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகளையும், அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்!
ஆழ்ந்த அனுதாபங்கள்...
கண்ணீர் அஞ்சலிகள். அவரது குடும்பத்தாரிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
எனது அஞ்சலியும் அவரது குடும்பத்திற்கு அனுதாபங்களும்.
என் கனத்த இதயத்தோடு கண்ணீர் அஞ்சலிகள்..
ஏனய்யா இந்த இடியேறு பதிவுலகின் மீது திடிரென விழுந்தது?
அன்னாரின் குடும்பத்துக்கு கூகிள்சிறியின் இரங்கல்களும் வார்த்தையில்லா மௌனம் கலந்த ஆறுதல்களும்.
ஆண்டவன் தன்மடியில் ராயேஷை தாலாட்டி சிராட்டி தூங்கவைக்க வேண்டுமென எல்லோரும் இணைந்து எல்லாம்வல்ல அந்த இறைவனிடம் இறைஞ்சுவோம்
அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்,
அனைத்து நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் எதாவது ஒரு நாளை தேர்ந்தெடுத்து அன்று அனைத்து பதிவர்களும் பதிவிடாமல் துக்கம் அனுசரிப்போம்....கலந்து ஆலோசிக்கவும்.
தற்போதுதான் அறிகிறேன்...
ஒரு நெருங்கிய சகோதரர் மறைந்துவிட்ட அதிர்வுகள் என் மனதுக்குள்...
இதயத்தை வலிக்க வைக்கும் வரிகளுடன் பகிர்ந்துக்கொண்ட தங்களோடு
என் வருத்தங்களையும் பதிவு செய்கிறேன் நிருபன்....
அவரை பிரிந்துவாடும் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்...
லைக் என்று ஓட்டுபோட மனம்வரவில்லை நிருபன்....
மிகுந்த வேதனையோடு விடைபெறுகிறேன்...
தங்களின் பகிர்வு மனதை மீண்டும் கனக்க செய்கிறது.ஆழ்ந்த அனுதாபங்களும் அஞ்சலிகளும்.
வணக்கம்!
ஒரு துடிப்பான பதிவர் மாயா என்ற ராஜேஷ் தனது இளம் வயதிலேயே அகால மரணம் அடைந்தமை மிகுந்த வருத்தம் அளிக்கிறது.. எனது ஆழ்ந்த இரங்கலை தங்கள் மூலம் மாய உலகம் ராஜேஷ் குடும்பத்தாருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
Very sad to hear this. May his soul rest in peace.
ராஜேஷ் என்கின்ற பதிவரை எனக்கு தெரியாது என்றாலும் 'யாரோவாக இருந்தாலும் கூட விலையேறப் பெற்றது உயிரினம் அதில் எது இயற்க்கை எய்தினாலும் மனம் வருந்துவது இயல்பு இவர் மனிதராயிற்றே இவருக்காக இன்னொரு மனிதன் வேதனையடைவதற்க்கு அவரை அறிந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறேன், உங்கள் அனைவரின் பின்னூட்டங்களை வாசித்ததில் என் மனம் கனக்கிறது.
@நிரூபன் //மாயா எனக்குச் சொன்ன அட்வைஸ், வாழ்க்கையில் யாரையும் நம்பாதீர்கள், 90 வீதமான மக்களும் நல்லவர்கள்போல நடித்துக்கொண்டிருக்கிறார்கள், நான் சினிமாவுக்குள் போனபின்பே இதைத் தெரிந்துகொண்டேன் என// அவரது அனுபவம் அவருக்கு இந்த பாடத்தை கொடுத்திருக்கிறது, இது 100 % உண்மை.
ஆழ்ந்த அனுதாபங்கள்.
எனது சகோதரனுக்காக அஞ்சலி செலுத்திய அனைவருக்கும் எனது நன்றி நட்புக்களே , நண்பா தாங்கள் அவனோடு போனில் பேசியது தெரியும் நண்பா ,நான் பக்கத்தில் தான் இருந்தேன் ,தற்பொழுதுள்ள என்னுடைய மன நிலையில் வேறு எதுவும் சொல்ல இயலவில்லை ,எனது அம்மாவும் மனம் ஒடிந்து காணப்படுகிறார்கள் ,அவர்களையும் தேற்ற வேண்டும் ,பிறகு எனது மனம் தெளிவான பிறகு வருகிறேன் நண்பா .
அன்பரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்,அன்னாரின் ஆன்மா சாந்தியடையட்டும்
வணக்கம் நிரூபன்!சேதி கேட்டதும் என்னாயிற்று என்று பதறினோம்.அகாலமரணம் தெய்வத்துக்கே அடுக்காது.நல்லவர்களை நீண்ட நாட்கள் பூவுலகில் வைத்திருக்க இறைவனுக்கே இயலவில்லைப் போலும்!உங்கள் தளம் மூலம் என் கண்ணீர் அஞ்சலிகள் குடும்பத்தார் அனைவருக்கும்.
நம்ப முடியவில்லை ..எனது அஞ்சலிகள் ;(
எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
ராஜேஸ் ஆத்மா சாந்தி அடையட்டும் அவர் பிரிவால் வாடும் உறவுகளுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
ராஜேஸுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்..
வீடு சுரேஸ்குமாரின் ஆலோசனையை பதிவுலகம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.. ;-(
நான் பதிவுலகிற்கு வந்த புதிதில் ராஜேஷ் அவர்களின் பதிவுகளைப் படித்ததுண்டு. செய்தி அறிந்து மிகவும் துக்கம் கொள்கிறேன். அவருக்கு என் இதயாஞ்சலி!...அன்னாரின் குடும்பத்துக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். சகோ. அன்புஉலகம் M.R. க்கு அமைதி, சமாதானம் தர இறைவனை வேண்டுகிறேன்.
எனது சகோதரனுக்காக அஞ்சலி செலுத்திய அனைவருக்கும் எனது நன்றி நட்புக்களே , நண்பா தாங்கள் அவனோடு போனில் பேசியது தெரியும் நண்பா ,நான் பக்கத்தில் தான் இருந்தேன் ,தற்பொழுதுள்ள என்னுடைய மன நிலையில் வேறு எதுவும் சொல்ல இயலவில்லை ,எனது அம்மாவும் மனம் ஒடிந்து காணப்படுகிறார்கள் ,அவர்களையும் தேற்ற வேண்டும் ,பிறகு எனது மனம் தெளிவான பிறகு வருகிறேன் நண்பா .;//////////
நண்பா, நாம் அனைவருமே உங்களுடன் இருக்கிறோம்! வருந்தாதீர்கள்! உங்கள் அம்மாவுக்கு அதிக ஆறுதல் சொல்லி அவரைத் தேற்றுங்கள்! இப்போதைய சூழ்நிலையில் அவருக்கு அதிக ஆறுதல் தேவை!
பதிவுலக தோழர்கள் அனைவருமே உங்கள் அம்மாவுக்கு ஆறுதல் சொன்னதாகச் சொல்லுங்கள்! மனசு மிகவும் கனத்து துக்கமாக இருக்கு நண்பா! ராஜேஷின் ஆத்மா சாந்தியடைய வேண்டும்! ஆண்டவனிடத்தே வேண்டுகிறேன்!
ஆழ்ந்த அனுதாபங்கள்...
நண்பன் மாய உலகம் ராஜேஷ் இன் அகாலமரணத்தை ஏற்க மனம் மறுக்கிறது. நண்பா நீ மறைந்தாலும் உன் எழுத்துக்கள் வலையுலகு உள்ளவரை நிலைத்திருக்கும்.
அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.
அவரது பிரிவால் வாடும் அவரது உறவுகளுக்கும், நட்புகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
நிரூ நீங்கள் குறிப்பிட்டது சரிதான். துயர்பகிர்தலுக்கும் Like இடவும் ஓட்டுக்கள் போடவும் மனம் இடம்தரவில்லை.
அவரது உறவுகளுக்கு எனதுஆழ்ந்த அனுதாபங்கள்..
சிறிது நாட்களுக்குள்ளேயே அனைவரது மனங்களிலும் இடம்பிடித்தவர். இந்த திடீர் பிரிவை மனம் ஏற்க மறுக்கிறது..
சுரேஸ்குமாரின் ஆலோசனையை ஏற்றுக்கொள்வோம்..
சுரேஸ்குமாரின் ஆலோசனையை ஏற்றுக்கொள்வோம்..
என்ன நிகழ்ந்தது... அவருக்கு?
ராஜேஷ் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்...
என்ன நிகழ்ந்தது... அவருக்கு?
ராஜேஷ் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்...
திரு ராஜேஷ்க்கு என் இறுதி வணக்கமும்..... குடும்பத்தினருக்கு...என் ஆழ்ந்த இரங்கலும்.
ஆழ்ந்த அனுதாபங்கள்...
அஸ்ஸலாமு அலைக்கும்,
அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்..
ராஜேஷ் இழப்பு மிகவும் துக்கமான செய்தி....
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்....
நிரூபன்... நீங்கள் அஞ்சலி செய்யவில்லையோ என எண்ணினேன், மாயா எனக்கும் மெயிலில் சொன்னவர் நிரூபனோடு கதைத்திருக்கிறேன் என...
சுரேஸ்குமார் சொன்னதுபோல ஏதாவது நாம் மாயாவுக்காக செய்யவேண்டும் என மனம் கிடந்து தவிக்கிறது நிரூபன்... நம்மில் ஒருவர் தெரிந்தவரோ தெரியாதவரோ எம்மைப்போல ஒரு வலைப்பூ வைத்திருந்தவர்.. திடீரென மறைந்தது, எமக்கெல்லாம் இழப்புத்தானே..
ஏதாவது செய்யவேண்டும்... கவலையாக இருக்கு, பிரார்த்திக்கிறேன் எனச் சொல்லிவிட்டு, நம் வேலையைத் தொடர எனக்கு மனம் வருகுதில்லை.
நேற்றைய தினம் இந்த செய்தியை அன்பு உலகம் தளத்தில் படித்து மிகுந்த வேதனையடைந்தேன் சகோ . மிக குறுகிய காலத்தில் அனைத்து பதிவர் மனங்களையும் கொள்ளை கொண்ட ஒருவர் . இவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதுடன் . இவரின் இழப்பால் துயருறும் அன்னாரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன் .
கலங்கிவிட்டேன்."மாய உலகம் தேடவிட்ட மூன்றுக்கள்" என்ற தொடர்கூட எழுதினேன்.இனி இந்தப் பதிவைப் பார்க்கும் நேரமெல்லாம் அவர் நினைவோடு இருக்கப்போகிறது.
இதுதான் மனித வாழ்க்கை.என் கண்ணீர் அஞ்சலிகளும் மாய உலகத்திற்கு !
திரை உலகத்தினர் மீது ஒரு மரியாதையான பார்வையை
நம் கண் முன் கொண்டு வந்த நண்பர்...
குறுகிய நாட்களில் வலைச்சர ஆசிரியராக பணியாற்றிய
நல்ல நண்பர்...
வலைப்போ பற்றிய சந்தேகங்கள் கேட்ட போதெல்லாம்
தெளிவாக அதை தீர்த்துவைத்த அருமை நண்பர்...
மனம் பேதலிக்கிறது..
செய்திகள் எல்லாம் கனவு என
நிலைப்படுமோ என மனம் தவிக்கிறது...
நல்லதொரு நண்பர், மாய உலகம் ராஜேஷ்,,
அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்..
அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்...
மிகவும் வருத்தமாக உள்ளது :( என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய பிரிவைத் தாங்கும் மனபலத்தை அவரின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் இறைவன் தந்தருள்வானாக!
அன்பிற்குரிய சொந்தங்களே,
உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்ட
அத்தனை உறவுகளுக்கும் நன்றிகள்.
மாயாவின் ஆத்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திப்போம்.
வீடு சுரேஷின் வேண்டுகோளுக்கு அமைவாக பதிவுலக துக்க நாளை அனுஷ்டிப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்வோம்.
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும் மீண்டும் ஆறுதலையும், எம் இரங்கல்களையும் சொல்லி வைப்போம்.
என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்... !
பதிவர் திரு எம் ராஜேஷ் அவர்களின் மறைவுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
என் ஆழ்ந்த அனுதாபங்கள் தோழரின் குடும்பத்திற்கு !!!
இது எப்படி நடந்தது. முடிந்தால் விபரம் தெரிவிக்கவும் நிருபன். நினைக்கவே நெஞ்சம் கல்லாகிறது. நான் கேட்ட ஐயங்களுக்கெல்லாம் நான் அடுத்து பல நாட்கள் அவர் வலைப்பூ செல்லாமல் இருந்த போதும், என் வலைப்பூ வந்து பதிவு இட்டுச் சென்ற அந்த அன்பு உள்ளத்தை, அக்கரையை, மென்மையை, உதவும் குணத்தை, அந்த நாட்களை எப்படி ஆற்றிக்கொள்ள இயலும்? கண்ணீருடன் அவற்றையெல்லாம் மீண்டும் மீண்டும் படித்து நினைவு கூர்கிறேன். முகம் அறியாத போதும் அவரது அகம் நன்கறிந்துள்ளேன். அந்த அன்பு நெஞ்சத்தின் ஆன்மா சாந்தியடையை இறைவனை வேண்டுகிறேன்.
அந்த அன்பு ஆன்மாவுக்காக துக்கம் அனுட்டிப்பது நம் கடமை. நான் இக்கருத்தை முழு மனத்துடன் ஆதரிக்கிறேன் நிரூபன். மனம் நிறைந்த வருத்தத்துடன்... இன்னும் நீங்காத அதிர்ச்சியுடன்...
கண்ணீர் அஞ்சலிகள்.
அவருக்கு அஞ்சலிகள்.. அவர் டிசம்பர் 31 அன்று பதிவுலகை விட்டு விலகுவதாக அறிவித்திருக்கிறார்.. இப்போ இந்த உலகத்தை விட்டே விலகி விட்டார்.. ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட மரணமா?
எனது அஞ்சலியும் அவரது குடும்பத்திற்கு அனுதாபங்களும்.
எனது அஞ்சலியும் அவரது குடும்பத்திற்கு அனுதாபங்களும்.
வீடு சுரேஷ் சொல்வது சரி.. துக்கம் அனுஷ்டிப்போம் நாளை
கண்ணீர் அஞ்சலிகள்..
கண்ணீர் அஞ்சலிகள்..
கண்ணீர் அஞ்சலிகள்..
அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்...
அவருடைய ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.என் மனமார்ந்த அஞ்சலிகள்!!!
ஆழ்ந்த அனுதாபங்கள்..
எனக்கு அவரை ஓரளவிற்கு தெரியும். என் எழுத்துக்களை அவர் ஊக்கப்படுத்தினார். அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். மற்ற நண்பர்கள் என்னை மன்னிக்கவும்.... இதை அறியாமல் ஒரு பதிவிட்டுவிட்டேன். அதை இப்பொழுதே நீக்குகிறேன்.
அதிர்ச்சியாக இருக்கிறது.
நண்பர் ராஜேஷ் உலகை நன்கறிந்திருந்திருக்கிறார். அதனால் தான் அவரது வலைப்பூவின் தலைப்பை “மாய உலகம்” எனச் சூட்டியிருக்கிறார்.
அவரது ஆன்மா அமைதி கொள்ளட்டும்.
Post a Comment