பள்ளிக்கூடம் 7.45 மணிக்கு ஆரம்பிக்குது என்றால் நான் காலை 7.20 மணிக்கே பள்ளியில் ஆஜார் ஆகிடுவேன். எதுக்கென்று கேட்கிறீங்களா? நம்ம வகுப்புத் தோழிங்க, தோழர்கள் கூட விளையாடி மகிழனும் என்ற ஆசையால் தான். இப்படியாக ஒரு நாள் ஓடி விளையாடும் போது, என்னோட காற்சட்டையின் பட்டன் அறுந்திட்டுதுங்க. காற்சட்டையிலிருந்து கையை எடுத்தா கழுசான் கீழே நழுவிடும். அப்புறமா என்ன நடந்திருக்கும் என்பதனை கீழே உள்ள பந்தியில் சொல்லியிருக்கேனுங்க. நீங்கள் இங்கே படித்துக் கொண்டிருப்பது என்னைக் கெடுத்த பெண்கள் தொடரின் நான்காவது பாகமாகும். இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க இங்கே உள்ள Drop Down Menu இல் கிளிக் செய்யுங்கள்.
பாகம் 04:
கழுசாணைப் புடிச்சுக் கொண்டு அங்கும் மிங்கும் வேர்க்க விறு விறுக்க ஓடி எல்லோரிடமும் உதவி கேட்டேன். நம்ம பசங்க எல்லோரிடமும் ஊசி இருக்கா,சட்டைப் பின் இருக்கா அப்படீன்னு கேட்டுப் பார்த்தேன். இல்லைன்னு சொல்லி கையை விரிச்சிட்டாங்க. அப்புறமா, முகத்தில் கொஞ்சம் வெட்கம் வர, ஒரு கையில் கழுசாணைப் புடிச்சுக் கொண்டு போய் சைந்தவி கிட்ட உதவி கேட்டேன். அவளும் சிரிச்சுக் கொண்டு அக்கம் பக்கம் பசங்க நிற்கிறாங்க என்பதனைப் புரிந்து கொண்டு எங்க ஸ்கூல் பாத்ரூமுக்கு அருகாக வரச் சொன்னாள்.தன்னோட ஸ்கூல் சட்டை டையில குத்தப்பட்டிருந்த ஊசியை அவிழ்த்து நான் குத்துறேன். நான் குத்துறேன் அப்படீன்னு சொல்ல கேட்டுக்காதவளாக அவளே குத்தி விட்டாளுங்க.
ஒரு மாதிரி நாலாம் கிளாசும், படிச்சு, ஐஞ்சாம் கிளாஸ் படிச்சு முடிக்கிற காலமும் வந்திட்டுதுங்க. எல்லோரும் இப்போது பிரிகிற சூழல். ஐந்தாம் கிளாஸ் புலமைப் பரிசில் பரீட்சை ரிசல்ட் வர முன்னாடியே நாம எல்லோரும் ஆறாம் கிளாஸில இருந்து ஹை ஸ்கூல் வரைக்கும் டவுனுக்குப் போயி படிக்கிறதுன்னு முடிவு பண்ணிக்கிட்டோம். யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி, வேம்படி மகளிர் கல்லூரி, யாழ். மத்திய கல்லூரி, சென் ஜோன்ஸ் கல்லூரி ஆகிய பிரபல பாடசாலைகளில் ஆளாளுக்குச் சேர்ந்து படிக்கிறதென்று பேசிக்கிட்டோம். அப்போது சைந்தவி மட்டும், தான் எங்கே படிக்கப் போறாங்க என்பதைச் சொல்லவில்லைங்க.
சைந்தவி, பஸ் ஏறி டவுனுக்கு வருவாங்க! அவங்களைப் பார்த்து ரசிக்கலாம் அப்படீன்னு நெனைச்சேனுங்க. அவங்க எந்தப் பள்ளிக்கூடத்திற்கு வருவாங்க என்று சொல்ல மாட்டாங்களா என்பதனை அறியும் ஆவலில் ஏக்கத்துடன் காத்திருந்தேன். ஐஞ்சாம் கிளாஸின் கடைசி நாள். எல்லோரும் பிரியும் நேரம். உங்களை இனி எங்கே சந்திப்பது அப்படீன்னு பேசிக்கிட்டு வீட்டிற்கு போக ரெடியாகும் போது, என் மேல இன்னொரு புயல் அடிச்சுதுங்க. ஆர்த்திகா ஓடி வந்து;"நிரூ என்னோட ஆன்டி ஏழாங் கிளாஸ் வரைக்கும் டியூசன் கொடுக்கிறாங்க. உனக்கு இஷ்டம் இருந்தா நம்ம கூட வந்து நீயும் படிக்கலாம். சைந்தவி மட்டும் முடிவை சொல்லிக்கலை. நானும், அபிநயாவும் அங்கே போயிப் படிக்கப் போறோம். காசு ரொம்ப கம்மி. இந்த மார்கழி விடுமுறைக்குள் டீயூசன் ஆரம்பிக்குது. நீ விரும்பினா வா. உன்னை அங்கே மீட் பண்றேன்" அப்படீன்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க.
ஆர்த்திகாவின் வேண்டுகோளை என் அம்மாவிடமும், அப்பாவிடவும் சொன்னேன்.ஒரேயொரு நாள் டியூசனுக்குப் போனேனுங்க.அங்கே ஆர்த்திகாவின் ஆண்டி ஆர்த்திகாவை அழைத்து முதல் நாள் வகுப்பினை ஆரம்பிக்க முன்னாடி தேவாரம் பாடி ஆரம்பிக்கிறது நல்லது அப்படீன்னு சொன்னாங்க. அதுக்கு ஆர்த்தியும் தேவாரம் பாட தான் ரெடி என்பது போல எல்லா மாணவர்களுக்கும் முன்னாடி வந்தாங்க. அப்போ, உனக்கு துணைக்கு யாரையாச்சும் தேவாரம் பாட கூப்பிடு என்று டீச்சர் சொன்னதும் தான் தாமதம். அடியேனை ஆர்த்தி அழைக்க, நான் வெட்கப்பட்டு மேடைக்கு போயி தேவாரம் பாடத் ஆரம்பிக்க, பசங்க என்னைப் பார்த்து சிரிக்க, வெட்கத்தில தேவாரத்தின் வரிகள் வாயினுள் புதைந்து போக ஒரு மாதிரியாப் போச்சுதுங்க.
அன்றைய கிளாஸ் முடிஞ்சு நான் வீட்டிற்கு திரும்பி வர, விசுவலிங்கம் சாத்திரியார் வீட்டிற்கு வந்து போயிருப்பதாகவும், "நிரூ உனக்கு இனிமே காலங் கூடாதாம். கெட்ட காலம் ஆறாங் கிளாஸ் முடியும் வரைக்கும் நடக்குமாம்" அப்படீன்னு சொல்லி டியூசனுக்குப் போகாம மறிச்சிட்டாங்க. "ரெண்டு வீடு தள்ளி உன்னோட சித்திங்க இருக்காங்க. நீ அங்கிட்டுப் போயி டீயூசன் படிச்சுக்கலாம் என்று சொல்லி, ஆர்த்திகாவை கூட பார்க்க முடியாம பண்ணிட்டாங்க" என் பெற்றோர்கள். ஆறாங் கிளாஸ் படிக்கும் காலமும் வந்திச்சு. தை மாதம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் என்னைக் கொண்டு போய் சேர்த்து விட்டாங்க. பஸ்ஸினுள் போக வேண்டும் என்பதால், இனிமே என்னோட ஐஞ்சாங் கிளாஸ் பொண்ணுங்களை மீட் பண்ண முடியாதென்ற கவலையுடன், பள்ளிக்குப் போக ஆரம்பித்தேன்.
பள்ளி செல்லும் மாணவர்களை ஏற்றி, இறக்கும் சேவையில் ஆண்களுக்குத் தனியான பேருந்தும், பெண்களுக்குத் தனியான பேருந்தும் இருப்பதால், என்னால் ஆறாங் கிளாஸ் ஆரம்பத்தில் ஆர்த்திகாவை, அபிநயாவை பார்க்க முடியலை. கண்டிப்பாக இவங்க ரெண்டு பேரில் ஒருத்தியை சந்தித்தால் தான் சைந்தவியைப் பத்தி அறிய முடியும் என்ற ஆவலில் காத்திருந்தேன். ஒரு நாள் பெண்களை ஏற்றி இறக்கும் பஸ் பஞ்சராகிட்டுதுங்க. அப்புறம் என்ன நடந்தது தெரியுமா? அதை அடுத்த பாகத்தில் எழுதுறேனுங்க.
*******************************************************************************************************************************
கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் என்று சொல்லுவார்கள். அப்படீன்னா கலைக் கம்பனின் வலைப் பூ எப்படி இருக்கும்? வாருங்கள் ஒரு தடவை கலைக் கம்பனின் வலை பூவிற்கும் சென்று வருவோம். கவிதைகளை வித்தியாசமான வடிவில் பதிவுகளாக தன் தளத்தில் பகிர்ந்து வருகிறார் "கலைக்கம்பன்" அவர்கள்.
கலைக்கம்பனின் வலைப் பூவிற்குச் செல்ல:
http://kalaikkampan.blogspot.com
http://kalaikkampan.blogspot.com.in/
*******************************************************************************************************************************
*******************************************************************************************************************************
கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் என்று சொல்லுவார்கள். அப்படீன்னா கலைக் கம்பனின் வலைப் பூ எப்படி இருக்கும்? வாருங்கள் ஒரு தடவை கலைக் கம்பனின் வலை பூவிற்கும் சென்று வருவோம். கவிதைகளை வித்தியாசமான வடிவில் பதிவுகளாக தன் தளத்தில் பகிர்ந்து வருகிறார் "கலைக்கம்பன்" அவர்கள்.
கலைக்கம்பனின் வலைப் பூவிற்குச் செல்ல:
http://kalaikkampan.blogspot.com
http://kalaikkampan.blogspot.com.in/
*******************************************************************************************************************************
|
21 Comments:
பஸ் மட்டுமா பஞ்சசராச்சு?பையனும் பஞ்சராயிட்டானோ?சித்தி விநாயகப் புள்ளையாரே நிரூவக் காப்பாத்து!
நிரூபன் said...
நான் பள்ளிக்கூடம் போக ஆரம்பிக்கப் போறேன்.
இனிமே அசுர வேகப் பதிவுகள் எல்லாம் வராது.///என் பிள்ளைகள் உட்பட எல்லோருக்கும் சொல்வது தான் உங்களுக்கும்:"கல்வியே கருந்தனம்"என் பிள்ளைகளுக்கு, "பிச்சை புகினும் கற்கை நன்றே" என்று தான் சொல்லியிருக்கிறேன். நாம் எதற்கு வந்தோமோ அந்தக் காரியத்தை முடித்துவிட்டு,ஓய்வு நேரங்களில் பதிவுலகைக் கவனிக்கலாம்!அது எங்கும் போய்விடாது.ஆனால் கல்வி????
நான் குத்துறேன்.நான் குத்துறேன் அப்படீன்னு சொல்ல கேட்டுக்காதவளாக அவளே குத்தி விட்டாளுங்க.////காச்சட்டையில தானே???
//நான் குத்துறேன்.நான் குத்துறேன் அப்படீன்னு சொல்ல கேட்டுக்காதவளாக அவளே குத்தி விட்டாளுங்க//
நாங்க தான் நேத்தே சொன்னம்ல...
எழிலருவி said...
//நான் குத்துறேன்.நான் குத்துறேன் அப்படீன்னு சொல்ல கேட்டுக்காதவளாக அவளே குத்தி விட்டாளுங்க//
நாங்க தான் நேத்தே சொன்னம்ல...///வாங்க,வணக்கம் நேத்து என்ன சொன்னீங்க,சைந்தவி ஊசி குத்துவாங்கன்னா??????Ha!Ha!Haa!!!!!
//சைந்தவி ஊசி குத்தி விட்டாங்களா பாஸ்?
கழுசானுக்கு//
இத தாங்க நேற்று சொன்னன்...
உண்மைதான் எழிலருவி!நான் தான் கவனிக்கவில்லை!மோப்பம் புடிச்சுட்டிங்களே?
என்னைப்போல் நீங்களும் ஓர் ப்ளாக் திறந்து வெறுமே வைத்திருக்கிறீர்களே?
Yoga.S.FR said...
பஸ் மட்டுமா பஞ்சசராச்சு?பையனும் பஞ்சராயிட்டானோ?சித்தி விநாயகப் புள்ளையாரே நிரூவக் காப்பாத்து///
ஹா..ஹா..ஹா... மஞ்சவனப்பதி முருகா.. நீதான் நிரூபனைக் காப்பாத்து... கல்யாணவயசிலயும் ஊசிகுத்திவிட்ட நினைப்பிலேயே இருந்தால் என்ன ஆவுறது?:).
//நிரூபன் said...
நான் பள்ளிக்கூடம் போக ஆரம்பிக்கப் போறேன்//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இதையே சொல்லிக்கொண்டிருப்பீங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. mudiyalla saami நான் காசிக்குப் போகப்போறேன்ன்ன்ன்ன்:))(இதை எத்தனை நாளைக்குச் சொல்லுவீங்க எனக் க்ய்க்கப்பூடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் காசிக்குப் போகும்வரை சொல்லுவேன் OKAY?:)).
தலைப்பிலேயே எத்தனையாம் பாகம் எனப் போட்டிருக்கலாம், நான் பழசாக்கும் என நினைத்தேன், இருப்பினும் எட்டிப் பார்க்கலாமே என வந்தேன்.
//Yoga.S.FR said...
என்னைப்போல் நீங்களும் ஓர் ப்ளாக் திறந்து வெறுமே வைத்திருக்கிறீர்களே//
இதிலென்ன சந்தேகம்:)) நீங்க வழிகாட்டி:))
//அடியேனை ஆர்த்தி அழைக்க, நான் வெட்கப்பட்டு மேடைக்கு போயி தேவாரம் பாடத் ஆரம்பிக்க//
அட.. அந்த வயதிலேயே ரொம்ப ஷைபோல:)))))))) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
Yoga.S.FR said...
என்னைப்போல் நீங்களும் ஓர் ப்ளாக் திறந்து வெறுமே வைத்திருக்கிறீர்களே?//
அது comment போடுறதுக்கு மட்டும் தான். நமக்கு எழுத வராது. வாசிப்பு மட்டும் தான். அப்பப்போ comment.
அடுத்தத நான் சொல்றேன்.
வேகமாகப்போன ஆண்மாணவர் பேரூந்திலிருந்து நிரூபன் என்ற மாணவன் அந்நியன் போல எகிறிக்குதித்தான்.பஞ்சராகி நின்ற மாணவிகள் பேரூந்திலிருந்து இறங்கி நின்ற மாணவியர்களின் மத்தியில் நின்ற சயிந்தவி நிரூபனைக்கண்டாள்.
அண்ணலும் நோக்கினான்;அவளும் நோக்கினாள்.
"வாத்தியாரும் நோக்கினார்."
athira said...
இதிலென்ன சந்தேகம்:)) நீங்க வழிகாட்டி:))///வாருங்கோ அதிரா!எங்க காணேல்ல எண்டு யோசிச்சு ப்ளாக் பக்கம் போய் தேடிப்பாத்தன்!பூனை இஞ்சை நிக்குது,ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!
அந்த வயசுல அந்த எகிறு எகிறினவரு பல்கலை வயதில எந்த எகிறு எகிறியிருப்பார்????
மக்களே...
நீங்கதான் நியாயம் சொல்லணும்.
சுவடுகள் said...
அண்ணலும் நோக்கினான்;அவளும் நோக்கினாள்.
"வாத்தியாரும் நோக்கினார்."////அவரோட "அப்பா"வும் நோக்கினார்!புளியமிலாறு காத்துக் கிடந்தது,ஹி!ஹி!ஹி!!!!!!
சுவடுகள் said...
அந்த வயசுல அந்த எகிறு எகிறினவரு பல்கலை வயதில எந்த எகிறு எகிறியிருப்பார்????
மக்களே...
நீங்கதான் நியாயம் சொல்லணும்.////ஒண்ணும் சரியில்லைங்க!"கட்டு" ஒண்ணு போட்டா சரியாயிடும்!
அந்தச் சைந்தவி மட்டுமா பின் குத்தினால் இல்ல ஒரு டவுட்டு பாஸ் நாமளுந்தான் படிச்ச., ...ம் ம் .
அடுத்த பாகம் நல்லிரவா பாஸ்.
நிரூ...எப்ப மணியத்தாரின்ர அல்லக்கையா மாறினார்.உண்மையாவே வேற யாரோவா இருக்குமோ எண்டுதான் வந்தேன்.இது எங்கட நிரூவெல்லோ !
Post a Comment