எம்முடைய பதிவுகள் பலரையும் சென்று சேர்வதற்கான இணைப்பு ஊடகமாக திரட்டிகள் விளங்குகின்றன.திரட்டிகளில் அதிகளவில் அடையாளம் காணப்படுபவை ஆண் பதிவர்களின் பதிவுகள் என்றால் மிகையல்ல. தமிழ்மணம் டாப் 20 போட்டி காரணமாக வெறி கொண்டு எழுதும் பல பதிவர்களின் எழுத்துக்களுக்கு மத்தியில் காத்திரமான பெண்களின் எழுத்துக்கள் காணாமற் போய் விடுகின்றன. பதிவர்களில் என்னைப் போன்ற ஆண் பதிவர்கள் ஒரு சூடான தலைப்பை வைத்து நான்கு ஜோக்குகளை எழுதினாலே போதும். அவை திரட்டிகளில் முன்னணிக்கு வந்து பலரையும் சென்றடைந்து விடும். பெண் பதிவர்களாலும் அவ்வாறு எழுத முடியும். ஆனால் காலங் காலமாக நம்மில் பல பதிவர்கள் கட்டிக் காத்து வரும் ஆணாதிக்க கலாச்சாரம் இதற்கு ஒத்துழைக்காது உள்மை வருத்தத்திற்குரியது.
ஒரு ஆண் தனக்கு வரும் வருகையாளரை அதிகரிக்க என்ன தலைப்பு வேண்டுமானாலும், வைத்து தனது பதிவுகளை எழுதலாம். வெறும் உப்புச் சப்பற்ற பதிவுகளைக் கூட உருப்படாத தலைப்புக்களை வைத்து எழுதினால், ஆண்களின் பதிவுகளுக்கு அங்கீகாரம் கிடைக்கின்றது.அப்புறம் என்ன, திரட்டிகள் வழங்கும் தர வரிசையின் அடிப்படையில் நாம் அனைவரும் ஒரு இலக்கத்தினைப் பெற்று நாம் தாம் தமிழின் டாப் 20 பட்டியலுக்குள் உள்ள பதிவர்கள் என்று மார் தட்டிக் கொள்ளலாம். ஆனால் பெண் பதிவர்களால் அப்படி அல்ல.அவர்கள் தமது வீட்டு வேலை மற்றும் அலுவலக வேலைகளுக்கு நடுவே கிடைக்கும் ஓய்வு வேளையில் தான் பதிவுகளை எழுதுகிறார்கள். இப் பதிவுகள் திரட்டிகளில் இணைக்கப்பட்டாலும் பதிவுலக அரசியலின் அடிப்படையில் காணாமற் போய் விடுகின்றன.
பதிவுலகில் ஒரு பெண் பதிவர் தன் வலையில் ஓட்டுப் பட்டையினை இணைத்திருந்து, பல பதிவர்களின் பதிவுகளுக்கும் கருத்துரைகளை வழங்கி, ஓட்டுப் போட்டால் உடனடியாக அவரது தளத்திற்கு ஆதரவாளர்கள் பெருகி விடுவார்கள். புதிதாக ஒரு பெண் பதிவர் பதிவெழுத வரும் போது பல பதிவர்கள் யாருடைய பதிவில் ஓட்டுப் பட்டை இருக்கின்றது என்பதனை அவதானித்து பாலோயராக இணைந்து ஓட்டுக்களைப் போட்டு தம் பதிவரசியலை அவர்களுக்கும் கற்பிக்க ஆரம்பிக்கின்றார்கள். யார் யாருடைய பதிவுகளில் ஓட்டுப் பட்டை இல்லையோ, அந்தப் பதிவுகளை நாடிச் செல்லுவதை பதிவர்கள் தவிர்த்து வருகின்றார்கள்.இதனை அண்மையில் வந்த பெண் பதிவர்களின் பதிவுகளைப் பார்த்த போது உணர்ந்திருக்கிறேன்.
ஆண்களில் பலர் ஹிட் வெறியில் ஒரு நாளைக்கு நான்கு பதிவுகளைச் சூடான தலைப்புடன் எழுதினாலும் பல பதிவுகளில் விடயப் பரப்புக்கள் இருக்காது. சிறந்த உள்ளடக்கம் இருக்காது. ஆனால் ஆண்கள் இவ்வாறு வெறி கொண்டு பதிவுலகமே கதி என்று இருந்து எழுதும் பதிவினை விட, ஓர் பெண் எழுதுகின்ற ஒரே பதிவு சில சமயங்களில் மிகவும் காத்திரமானதாகவும், மிகவும் சிறந்ததாகவும் இருக்கும். ஆண்களில் பலர் ஒரு நாளைக்கு மூன்று பதிவுகளை எழுதினாலும் அவற்றினை விடச் சிறந்த தரமான பதிவாக ஓர் சகோதரி எழுதும் பதிவு அமைந்திருக்கும். ஆனால் அப் பதிவு பலரைச் சென்றடையாதிருக்கும். இது தான் இன்றைய தமிழ்ப் பதிவுலகின் யதார்த்தம்.
அவள் விகடன், மங்கையர் மலர், பெண், எனப் பல மகளிர் சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகைகள் தனித்துவமாகப் பெண்களுக்கு என்று உண்டு. ஆனால் இன்றளவில் திரட்டிகளின் ஊடாக பெண்களின் பதிவுகளை அடையாளங் கண்டு கொள்வதற்கு வழிகள் எதுவுமே அறிமுகப்படுத்தவில்லை. திரட்டிகளில், சினிமா, அரசியல், கவிதை, படைப்புக்கள் எனப் பல பிரிவுகள் இருந்தாலும் அந்தப் பிரிவுகளில் பலவற்றை பதிவுலகின் பெரும்பான்மை இனமாக உள்ள ஆண்களாகிய நாம் கைப்பற்றிக் கொள்கின்றோம். இதனால் பல பெண் பதிவர்களின் பதிவுகள் திரட்டிகளில் திரட்டப்பட்ட மாத்திரத்தே காணாமற் போய் விடுகின்றன. இந்தக் குறைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில், திரட்டிகள் தமது பிரிவு வகைகளின் கீழ் மகளிர் அல்லது பெண்கள் என்றோர் பிரிவினைக் கொண்டு வருமா?
Rss Feed இன் அடிப்படையில் திரட்டிகளில் பதிவுகள் திரட்டப்படும் போது, பெண் பதிவர்கள் தமது பதிவுகளின் லேபிளின் கீழ் மகளிர் அல்லது பெண்கள் என்றோர் லேபிளைச் சேர்ப்பதன் மூலம் தானியங்கி அடிப்படையில் பெண் பதிவர்களின் பதிவுகள் அனைத்தும் சிறப்பாக மேற்குறிப்பிட்ட ஓர் லேபிளின் கீழ் திரட்டிகளில் திரட்டப்படும். இதன் மூலம் திரட்டிகளில் அரசியல், ஈழம், சினிமா, பொது எனப் பிரிவுகள் இருப்பது போன்று மகளிர் என்றோர் பிரிவும் உருவாக்கப்படின்,பெண் பதிவர்களின் பதிவுகளை இலகுவில் தமிழ்ப் பதிவுலகம் அடையாளங் கண்டு கொள்வதற்கேற்ற சிறந்த வழி கிடைக்கும் அல்லவா? இது என்னுடைய தனிப்பட்ட வேண்டுகோள் அல்ல. கடந்த சனி, ஞாயிற்றுக் கிழமை இடம் பெற்ற விவாத மேடைப் பதிவின் போது, பல சகோதரிகளாலும் முன் வைக்கப்பட்ட வேண்டுகோளாகும்.
இந்த வேண்டுகோளைத் திரட்டிகள் பரிசீலனை செய்து, காத்திரமான தமிழ்ப் பதிவுலக வளர்ச்சியில் மகளிரின் படைப்புக்களுக்கும் மகத்தான அங்கீகாரம் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை!
இப் பதிவினை எழுதுவதற்கு முன்பதாக, பெண் பதிவர்களின் படைப்புக்கள் தமிழ்ப் பதிவுலகில் எந் நிலையில் இருக்கின்றன? அவற்றுக்கான அங்கீகாரம் எவ்வாறு கிடைக்கின்றன என்பது தொடர்பில் ஓர் விவாத மேடைப் பதிவினை எழுதியிருந்தேன். அது தொடர்பாக அறிய விரும்புவோர், கீழே உள்ள பதிவின் இணைப்பில் கிளிக் செய்யவும்.
இப் பதிவில் யாரையுமே தாக்கி எழுதலைங்கோ! ஹிட்டுக்காக அலையும் பதிவர் என்று என்னை நானே சொல்லியிருக்கேன்! ஸோ...வேறு யாரும் தம்மையும் இந்தப் பட்டியலில் சேர்த்திருப்பதாக தனிப் பதிவு எழுதி மன்னிப்பெல்லாம் கேட்க சொல்ல வேணாம்! நானே இவ் இடத்தில், அப்படி உங்கள் மனம் கோணும் வண்ணம் நான் ஏதாவது சொல்லியிருந்தா மன்னிச்சிடுங்க என்று சொல்லிடுறேன்!வேண்ணா காலில் கூட விழுந்துக்கிறேன்! ஹி...ஹி.. தனித் தனியாக ஒவ்வோர் ப்ளாக்கிற்கும் வந்து மன்னிப்பு கேட்க டைம் இல்லைங்கோ
|
16 Comments:
//தமிழ்மணம் டாப் 20 போட்டி காரணமாக வெறி கொண்டு எழுதும் பல பதிவர்களின் எழுத்துக்களுக்கு மத்தியில் //
இப்பிடி ஒரு போட்டி நடக்குதா? அவ்வ்வ்!
@ஜீ...
//தமிழ்மணம் டாப் 20 போட்டி காரணமாக வெறி கொண்டு எழுதும் பல பதிவர்களின் எழுத்துக்களுக்கு மத்தியில் //
இப்பிடி ஒரு போட்டி நடக்குதா? அவ்வ்வ்!//
நண்பா, ஜீ,
உங்கள் பார்வையில் தமிழ்ப் பதிவுலகம் எப்படி இருக்கிறது? சொல்லுங்கள் பார்க்கலாம்.
நாம எப்பவாவது பதிவு போடுறதால மப்பும் மந்தாரமுமா இருக்குது! :-)
@ஜீ...
நாம எப்பவாவது பதிவு போடுறதால மப்பும் மந்தாரமுமா இருக்குது! :-)
//
சும்மா, ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு வாங்க பாஸ்.
இப்போ பதிவுலகம் 'டல்'லா இருக்குன்னு தோணுது...ஒருவேளை நான் அப்பிடியிருப்பதால் அப்படித் தோணுதோ என்னவோ!
@ஜீ...
இப்போ பதிவுலகம் 'டல்'லா இருக்குன்னு தோணுது...ஒருவேளை நான் அப்பிடியிருப்பதால் அப்படித் தோணுதோ என்னவோ!
//
உண்மை தான் பாஸ்,
இப்போது பதிவுலகம் முன்பு போல இல்லை என்பது யதார்த்தம்.
நிருபன் தாங்கள் கூறிய அத்தனை கருத்துகளும் சரி. தேவையற்ற அர்த்தமற்ற ஆக்கத்திற்கு ஏன் எல்லோரும் இப்படி ஆலவட்டம் பிடிக்கிறார்கள் என்று எண்ணியது என்னுகிறது உண்டு. எனக்கும் இதன் போக்குப் பிடிக்கவில்லை என்பதை மட்டும் கூறிக் கொள்கிறேன். நன்றி.
வேதா. இலங்காதிலகம்.
நிருபன் தாங்கள் கூறிய அத்தனை கருத்துகளும் சரி. தேவையற்ற அர்த்தமற்ற ஆக்கத்திற்கு ஏன் எல்லோரும் இப்படி ஆலவட்டம் பிடிக்கிறார்கள் என்று எண்ணியது என்னுகிறது உண்டு. எனக்கும் இதன் போக்குப் பிடிக்கவில்லை என்பதை மட்டும் கூறிக் கொள்கிறேன். நன்றி.
வேதா. இலங்காதிலகம்.
திரட்டிகள் நிச்சயம் மாற்றம் செய்யனும் இந்த ஓட்டுவெறி நல்ல படைப்புகள் கவனிக்கப்படாமல் போவது வேதனைதான் நிரூ.
மாற்றம் வருகிறதா பார்ப்போம்...
இப் பதிவில் யாரையுமே தாக்கி எழுதலைங்கோ! ஹிட்டுக்காக அலையும் பதிவர் என்று என்னை நானே சொல்லியிருக்கேன்! ஸோ...வேறு யாரும் தம்மையும் இந்தப் பட்டியலில் சேர்த்திருப்பதாக தனிப் பதிவு எழுதி மன்னிப்பெல்லாம் கேட்க சொல்ல வேணாம்! நானே இவ் இடத்தில், அப்படி உங்கள் மனம் கோணும் வண்ணம் நான் ஏதாவது சொல்லியிருந்தா மன்னிச்சிடுங்க என்று சொல்லிடுறேன்!வேண்ணா காலில் கூட விழுந்துக்கிறேன்! ஹி...ஹி.. தனித் தனியாக ஒவ்வோர் ப்ளாக்கிற்கும் வந்து மன்னிப்பு கேட்க டைம் இல்லைங்கோ//
எனக்கு மிகவும் பிடித்த வரிகள்...-:)
பதிவுலகம்...அதையும் தாண்டி புனிதமானது....-:)
@kovaikkavi
நிருபன் தாங்கள் கூறிய அத்தனை கருத்துகளும் சரி. தேவையற்ற அர்த்தமற்ற ஆக்கத்திற்கு ஏன் எல்லோரும் இப்படி ஆலவட்டம் பிடிக்கிறார்கள் என்று எண்ணியது என்னுகிறது உண்டு. எனக்கும் இதன் போக்குப் பிடிக்கவில்லை என்பதை மட்டும் கூறிக் கொள்கிறேன். நன்றி.
வேதா. இலங்காதிலகம்.
//
தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
வெகு விரைவில் நிலமை மாறும் என நினைக்கிறேன்.
பெண்களுக்காகச் சத்தம்போட்டுக் கதைக்க ஒரு குரல்.
சந்தோஷமாயிருக்கு நிரூ !
நண்பரே
தாங்கள் இப்பதிவில் எழுதியிருக்கும் கருத்தை வரவேற்கிறோம்.
ஆனால்,
பெண்ணடிமை, ஆணாதிக்கம் போன்ற பாகுபாடு பிரிவினைகளை விட்டுவிட்டு ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என்ற உண்மையுடன் சிந்தித்தால் பால் பாகுபாடு கருதாமல் இருவருக்கும் ஒரே வகை திரட்டி ஒரே வகை செயல்பாடுகள் என்பது தான் சரியாக இருக்கும்.
இருந்தாலும், தங்களின் இக்கோரிக்கையை "தமிழ் நண்பர்கள்" சார்பில் நாங்கள் கண்டிப்பாக ஏற்கிறோம்.
ஆனால் தற்போதைய இணையதளத்தை புதிய முறையில் வடிவமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் தாங்கள் கூறிய வசதியை தற்போதைய தளத்தில் இணைக்காமல் வெகு சீக்கிரமே வெளியிட இருக்கும் புதிய தளத்தில் இவ்வசதிகளை நாங்கள் கண்டிப்பாக உள்ளிணைக்க முனைகிறோம்.
சிறப்பாக பதிவுகளை எழுதிவரும் நிரூபன் அவர்களுக்கு பாராட்டுகள்.
மிக நன்றிகள்
தமிழ் நண்பர்கள்
http://tamilnanbargal.com/
எனக்கு என்ன சொல்லுரதேன்னே தெரியல ....ennavo paesuringannu மட்டும் புரியுது ஆனா என்னப் பேசுறிங்க எண்டு சத்தியமா எனக்குப் புரியல ...நீங்க சுபேரா பேசி இருக்கீங்க ...பெண் பதிவர்களின் உரிமை பற்றி ன்னு நினைக்கிறேன் ..
(எனக்குப் pathivulagam பற்றி theriyaathu ...பொதுவா பெண்கள் உரிமை ella idathulayum niraiyave irukku pasangalai vidannrathu en karuthu ...
Post a Comment