காதலை மாற்றும் காதலர்கள்
உன் மடி மீது தவழ வேண்டும் என்பதற்காய்
உன் மடி மீது தவழ வேண்டும் என்பதற்காய்
தினந் தோறும் தவிக்கிறேன் - உன்
உடையாக இருக்க வேண்டும் என என்ணி
எனையே நான் மறக்கிறேன் - நீயோ
முதற் காதலன் நான் என்றாய் - மூன்று
வருடங்களின் பின்னர் மூன்றாம் காதலன்
இவன் என அறிமுகம் செய்தாய்!!
எனை விட்டு ஓடிப் போனாள் பாவி
ஒளி வீசும் கண்களும்
ஒளி வீசும் கண்களும்
மிருதுவான வார்த்தைகளும்
ஒருங்கு சேர கொண்ட
பளிங்குச் சிலை அவள் என்றேன்
பக்கம் இருந்தவன் சொன்னான்;
பார்த்தடா மச்சான் இன்னும் சில
நாளில் இன்னொருத்தனுன்
ஓடிப் போய் விடுவாள்;
ஜாக்கிரதை என்றான்;
ஜாக்கிரதை என்றான்;
பின்னாளில் அதுவும் நடந்தது - அவள்
அந் நண்பனுடன் ஓடியே போய் விட்டாள்!!
காதல் நகரம் அழுகிறது!
எல்லா நகரமும் இந்த
காதலர் தினத்தன்று
ஒளிர்ந்து கொண்டிருக்கிறது - ஆனால்
அவள் இல்லாதவர்களின் காதல் நரகம்
அமைதியின்றி அழுது கொண்டிருக்கிறது!
நீ கத்து கொள்ள வேண்டியது நிறைய இருக்குதடி!
நிகழ்காலம் - இறந்த காலம் மறந்து
எதிர்காலம் நோக்கி நடை பயில நினைத்தேன்
எதிரே வந்தாள் உன் அம்மா - ஆன்டி என்றேன்
வாடா பாண்டி என்றாள் - வாஞ்சையாய் அணைத்தாள்
வயது முதிர்ந்த காதல் என தீஞ்சுவைப் பாடம் கற்பித்தாள்
அடியே கள்ளி - நீயும் தான் இருக்கிறியே;
பருவப் பெண்ணாகவா? - இல்லையே
உன் அம்மாவின் பருவத்திலிருந்து நீ
கத்துக் கொள்ள வேண்டியது
நிறையவே இருக்கிறது!
இன்றும் மறையாமல் உன் ஞாபகத் தடங்கள்!
சூரியன் மறையாமலே என் உலகம்
தினந் தோறும் இருண்டு விடுகிறது - காரணம்
நீ தந்த வடுக்களின் நினைவுகள்
என் நெஞ்சில் நீர்திவலைகளை தந்து செல்கிறது!
************************************************************************************************************************************
பதிவர் அறிமுகம் பகுதியூடாக நாம் ஒரு பூஸார் வீட்டிற்குச் செல்வோமா? பூனைகளுக்கென்று தனியான உலகினையும், கூடவே சுவாரஸ்யமான நகைச்சுவைப் பதிவுகளையும்,அனுபவப் பகிர்வுகளையும் தனது என் பக்கம் வலைப் பூவில் பகிர்ந்து வருகிறார் சகோதரி அதிரா அவர்கள். நீங்கள் ஓய்வாக இருக்கும் போது அதிராவின் வலைக்கும் சென்று வரலாம் அல்லவா?
************************************************************************************************************************************
|
47 Comments:
வணக்கம் சகோ நிரூபன்,
நலமா?
இன்றைய உடல் சார்ந்த காதலை
நல்லா சொல்லியிருகீங்க.
" மனமது ஒன்றுபட்டால்
மந்திரங்கள் தேவையில்லை
ஒன்றுபட்ட மனதுடனே
தொன்றுதொட்டு வாழ்ந்திட
நெஞ்சின் ஆணிவேரில் காதல் வளர்ப்பாய்""
அப்படி காதலின் புனிதமும் இல்வாழ்வின் இனிமையும்
அறிந்துகொள்ள துடிக்கும் காதல்கள் மிக மிக குறைவு..
இந்த உணர்வையும் தான் பல விஷயங்கள் நமக்கு
உள்ளன..
" எழுந்து வா
விரைந்து வா
இத்துப்போன இதயத்துடன்
இன்காதல் நான் கொண்டேன் என
தத்துவம் பேசாது..
உன் தரத்தை ஏற்றிக்கொள்ள
வழிவகை செய்வாய்"
கோவை இராமகிருஸ்ணா மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு AB+ இரத்தம் தேவைப்படுகிறது இரத்ததானம் தர விரும்பும் கோவை நண்பர்கள் தொடர்பு கொள்ளவும் Cell : 9865191061
எல்லா நகரமும் இந்த
காதலர் தினத்தன்று
ஒளிர்ந்து கொண்டிருக்கிறது - ஆனால்
அவள் இல்லாதவர்களின் காதல் நரகம்
அமைதியின்றி அழுது கொண்டிருக்கிறது!
அருமையான கவிதை சகோ வாழ்த்துகள்.
வணக்கம் நிரூபன்!காதலர்?!தினக் கவிதை அருமை!"சூடு கண்ட பூனை அடுப்பங்கரை சேராது".சரி போகட்டும்,(கவிக்கு)வாழ்த்துக்கள்!///. நீங்கள் ஓய்வாக இருக்கும் போது அதிராவின் வலைக்கும் சென்று வரலாம் அல்லவா?////அது கடிக்குமே?(காவலுக்குப் பூஸாரைப் போட்டாச்சு:)மெளசால டச் பண்ணினாக் கடிப்பார்.//////நான் மிகவும் அவதானமாக இருப்பேன்!(தொப்புளைச் சுத்தி பதினாலு ஊசி ஆர் போடுறது?)ஹி!ஹி!ஹி!!!!!!!!!!
//மூன்று
வருடங்களின் பின்னர் மூன்றாம் காதலன்
இவன் என அறிமுகம் செய்தாய்!!//
மூவரைக் காதலி!!
இருவரைத் தேர்ந்தெடு!!
ஒருவரை மணம்முடி!!!....
இது நாங்கள் படிக்கும்போது எழுதும் ஓட்டோகிராஃப் வசனம்.... அதை பொய்யாக்கிடக்கூடாதெல்லோ:)).
//சூரியன் மறையாமலே என் உலகம்
தினந் தோறும் இருண்டு விடுகிறது - காரணம்
நீ தந்த வடுக்களின் நினைவுகள்
என் நெஞ்சில் நீர்திவலைகளை தந்து செல்கிறது!//
ஒண்ணுமே இல்லாமலே சும்மா சும்மா எல்லாம் கற்பனை பண்ணிப் புலம்பப்பூடா சொல்லிட்டேன்:)).
//பதிவர் அறிமுகம் பகுதியூடாக நாம் ஒரு பூஸார் வீட்டிற்குச் செல்வோமா? பூனைகளுக்கென்று தனியான உலகினையும், கூடவே சுவாரஸ்யமான நகைச்சுவைப் பதிவுகளையும்,அனுபவப் பகிர்வுகளையும் தனது என் பக்கம் வலைப் பூவில் பகிர்ந்து வருகிறார் சகோதரி அதிரா அவர்கள். நீங்கள் ஓய்வாக இருக்கும் போது அதிராவின் வலைக்கும் சென்று வரலாம் அல்லவா?//
அச்சச்சோ.. இதை இப்பத்தானே பார்க்கிறேன்... இது 2ம் சுற்று அறிமுகமோ அவ்வ்வ்வ்வ்:))).
//நீங்கள் ஓய்வாக இருக்கும் போது அதிராவின் வலைக்கும் சென்று வரலாம் அல்லவா?//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்... இக்காலத்தில ஆருமே ஓய்வாக இருப்பதில்லையாம்.. எப்பவும் பிசிதானாம்... அப்போ எப்படி என்பக்கம் போவார்கள்.
உப்பூடிச் சொல்லப்பூடா... தினமும் அங்கு போய்வாங்கோ, நேரம் கிடைக்காவிட்டாலும் எட்டிப்பாருங்கோ:)... அங்கிருக்கும் பூஸோடு விளையாடுங்கோ.. ஆனா கழுத்தில தொங்கிற 5 பவுண் சங்கிலியில மட்டும் கை வச்சிடாதையுங்கோ எனச் சொல்லோணும் okay?:). பயமாக்கிடக்கே:)
//நிகழ்காலம் - இறந்த காலம் மறந்து
எதிர்காலம் நோக்கி நடை பயில நினைத்தேன்
எதிரே வந்தாள் உன் அம்மா - ஆன்டி என்றேன்
வாடா பாண்டி என்றாள் - வாஞ்சையாய் அணைத்தாள்//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆண்டிமாரையும் விட்டுவைப்பதில்லைப்போலும்:)).. எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்ஸ்:).
athira said...
//மூன்று
வருடங்களின் பின்னர் மூன்றாம் காதலன்
இவன் என அறிமுகம் செய்தாய்!!//
மூவரைக் காதலி!!
இருவரைத் தேர்ந்தெடு!!
ஒருவரை மணம்முடி!!!....
இது நாங்கள் படிக்கும்போது எழுதும் ஓட்டோகிராஃப் வசனம்.... அதை பொய்யாக்கிடக்கூடாதெல்லோ:))///You also????
Yoga.S.FR said
//அது கடிக்குமே?(காவலுக்குப் பூஸாரைப் போட்டாச்சு:)மெளசால டச் பண்ணினாக் கடிப்பார்.//////நான் மிகவும் அவதானமாக இருப்பேன்!(தொப்புளைச் சுத்தி பதினாலு ஊசி ஆர் போடுறது?)ஹி!ஹி!ஹி!!!!!!!!!!//
ஹா...ஹா..ஹா.. யோகா அண்ணன் பயப்புடாதிங்கோ.. கடிக்கும் என்றுதானே சொன்னேன்.. பல்லிருக்கெனச் சொல்லலியே அவ்வ்வ்வ்வ்வ்:)))... அது குட்டிப்பூஸ்... பால்பற்களே இன்னும் முளைக்கேல்லை.. அதைப்பார்த்தே இப்பூடிப் பயந்தால்.. பெரிய பூஸை...
வாணாம்.. வாணாம் நான் ஒன்றுமே சொல்ல மாட்டேன்:), நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:)).
@மகேந்திரன்
நன்றி அண்ணா,
நான் நலமாக இருக்கிறே.
புனிதத்தை அடையாமலே காமம் எனும் புதிரினைக் கண்டு அனுபவித்த பின்னர் கை கூடாது செல்லும் காதல்கள் தான் இவ் உலகில் அருமை.
அவற்றினை வைத்து நையாண்டி செய்து தான் இக் கவியினை எழுதினேன்.
@வீடு K.S.சுரேஸ்குமார்
கோவை இராமகிருஸ்ணா மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு AB+ இரத்தம் தேவைப்படுகிறது இரத்ததானம் தர விரும்பும் கோவை நண்பர்கள் தொடர்பு கொள்ளவும் Cell : 9865191061
//
தகவலுக்கு நன்றி நண்பா,
இந்தச் செய்தியினை முகநூலிலும் பகிர்ந்திருக்கிறேன்.
//Yoga.S.FR said...
athira said...
//)///You also???
////
அச்சச்சோ... தேடித்தேடி வந்து.. அடிவிழுதே.. அவ்வ்வ்வ்:))...
அது எழுதுவது மட்டும்தேன்:))))..
சே..சே.. இனி எழுதுவதைக் கொஞ்சம் யோசிச்சுத்தான் எழுதோணும்போல:))..
@Yoga.S.FR
வணக்கம் நிரூபன்!காதலர்?!தினக் கவிதை அருமை!"சூடு கண்ட பூனை அடுப்பங்கரை சேராது".சரி போகட்டும்,(கவிக்கு)வாழ்த்துக்கள்!///. நீங்கள் ஓய்வாக இருக்கும் போது அதிராவின் வலைக்கும் சென்று வரலாம் அல்லவா?////அது கடிக்குமே?(காவலுக்குப் பூஸாரைப் போட்டாச்சு:)மெளசால டச் பண்ணினாக் கடிப்பார்.//////நான் மிகவும் அவதானமாக இருப்பேன்!(தொப்புளைச் சுத்தி பதினாலு ஊசி ஆர் போடுறது?)ஹி!ஹி!ஹி!!!!!!!!!!
//
வணக்கம் ஐயா,
ரொம்ப லொள்ளுப் பண்ணுறீங்க.
பூனை கடிச்சால் 16 ஊசி போடுவது அறியவில்லை, ஆனால் நாய் கடிச்சால் தான் 16 ஊசி போடுவாங்க! அவ்வ்வ்வ்வ்வ்
@dhanasekaran .S
தங்கள் வாழ்த்துக்களுக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பா.
@athiraமூவரைக் காதலி!!
இருவரைத் தேர்ந்தெடு!!
ஒருவரை மணம்முடி!!!....
இது நாங்கள் படிக்கும்போது எழுதும் ஓட்டோகிராஃப் வசனம்.... அதை பொய்யாக்கிடக்கூடாதெல்லோ:)).
//
ஹே. ஹே...ஹே.
சூப்பர் வசனம் தான்! ஆனால் அதுக்கெல்லாம் பொண்ணு மாட்டனும் இல்லே!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அவ்வ்வ்வ்வ்வ் ஒளிச்சிருந்த நிரூபனும் வெளில வந்திட்டார்.. பூஸோ கொக்கோ? எங்கிட்டயேவா? விடமாட்டமில்ல:)))..
ஹையோ முருகா என்னைக் காப்பாத்து நான் வள்ளிக்கு 5 பவுணில சங்கிலி போடுறேன்..
@athira
ஒண்ணுமே இல்லாமலே சும்மா சும்மா எல்லாம் கற்பனை பண்ணிப் புலம்பப்பூடா சொல்லிட்டேன்:)).//
ஹி ஹி ஹி
அவ்வ்வ்வ்வ்வ்
கற்பனை எல்லாம் இல்லைங்கோ! நிஜம் தான் எழுதியிருக்கேன் என்று சொன்னால் நம்பவா போறீங்க.
//சூப்பர் வசனம் தான்! ஆனால் அதுக்கெல்லாம் பொண்ணு மாட்டனும் இல்லே!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. ஆசையைப் பாருங்கோவன்.. அது சொல்லப்பட்டது பொண்ணுங்களுக்குத்தான் ஆண்களுக்கல்ல:)) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))
@athira
அச்சச்சோ.. இதை இப்பத்தானே பார்க்கிறேன்... இது 2ம் சுற்று அறிமுகமோ அவ்வ்வ்வ்வ்:))).
//
அன்னைக்கு சொன்னீங்க. இன்னும் பல பேரிடம் நீங்களும் ப்ளாக் எழுதுறீங்க என்று சொல்லி விடச் சொல்லி!
அது தான் இந்த அறிமுகம்!
ஸ்ரோபரி சீஸ் கேக் கொடுக்காம கோப்பையை கழுவ வைச்சதை மறப்பேனா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@athira
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்... இக்காலத்தில ஆருமே ஓய்வாக இருப்பதில்லையாம்.. எப்பவும் பிசிதானாம்... அப்போ எப்படி என்பக்கம் போவார்கள்.
//
ஹே ஹே ஹே
பிசியா இருந்தா யாருமே ப்ளாக் பக்கம் வரமாட்டாங்க.
//பூனை கடிச்சால் 16 ஊசி போடுவது அறியவில்லை, ஆனால் நாய் கடிச்சால் தான் 16 ஊசி போடுவாங்க! அவ்வ்வ்வ்வ்வ்//
பூனை கடிச்சால் மருந்தே இல்லையாம் நேரே சொர்க்கம்தேன்ன்ன்ன்:)) அவ்வ்வ்வ்வ்வ்வ்:))) எனக்கெதுக்கு ஊர்வம்பு:).
@athira
உப்பூடிச் சொல்லப்பூடா... தினமும் அங்கு போய்வாங்கோ, நேரம் கிடைக்காவிட்டாலும் எட்டிப்பாருங்கோ:)... அங்கிருக்கும் பூஸோடு விளையாடுங்கோ.. ஆனா கழுத்தில தொங்கிற 5 பவுண் சங்கிலியில மட்டும் கை வச்சிடாதையுங்கோ எனச் சொல்லோணும் okay?:). பயமாக்கிடக்கே:)
//
சங்கிலி எடுத்தவனே எஸ்கேப் ஆகிட்டான்! நீங்க வேற.
//நிரூபன் said...
@athira
//
அன்னைக்கு சொன்னீங்க. இன்னும் பல பேரிடம் நீங்களும் ப்ளாக் எழுதுறீங்க என்று சொல்லி விடச் சொல்லி!
அது தான் இந்த அறிமுகம்!//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்... சொல்லிட்டேன் ஆமா...
@athira
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆண்டிமாரையும் விட்டுவைப்பதில்லைப்போலும்:)).. எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்ஸ்:).
//
அது சும்மா கற்பனையில் எழுதிய கவிதை!
நம்பிடாதீங்கோ! அந்தப் பாண்டி நான் இல்லை!
அம்மா, அப்பா ஆசையா வைச்ச என் பேரு நிரூபன்!
trust me.
@Yoga.S.FR
இது நாங்கள் படிக்கும்போது எழுதும் ஓட்டோகிராஃப் வசனம்.... அதை பொய்யாக்கிடக்கூடாதெல்லோ:))///You also????
//
அதென்ன சந்தேகத்துடன் கேட்கிறீங்க.
அவங்க அப்படி இல்லை! நம்மளைப் போன்ற பசங்களைப் அப்படிச் செய்யட்டாம் என அட்வைசு பண்றாங்கோ;-)))))
//சங்கிலி எடுத்தவனே எஸ்கேப் ஆகிட்டான்! நீங்க வேற.//
என்னாது? அப்போ என் சங்கிலியின் கதி? நான் ஃபெயிண்ட் பண்ணுறேன்(இது வேற பெயிண்ட்) எனக்கு ஆராவது சுட்டாறின தண்ணி தெளிச்சு என் மயக்கத்தை தெளிவியுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:))
@athira
அவ்வ்வ்வ்வ்வ் ஒளிச்சிருந்த நிரூபனும் வெளில வந்திட்டார்.. பூஸோ கொக்கோ? எங்கிட்டயேவா? விடமாட்டமில்ல:)))..
ஹையோ முருகா என்னைக் காப்பாத்து நான் வள்ளிக்கு 5 பவுணில சங்கிலி போடுறேன்..
/
அவ்வ்வ்வ்வ்
நான் ஒளிஞ்சிருக்கேல்ல,
என்னது வள்ளிக்கு ஐஞ்சு பவுணில சங்கிலியோ?
அப்போ தெய்வயானைக்கு யாரு சங்கிலி போடுறது?
//அதென்ன சந்தேகத்துடன் கேட்கிறீங்க.
அவங்க அப்படி இல்லை! நம்மளைப் போன்ற பசங்களைப் அப்படிச் செய்யட்டாம் என அட்வைசு பண்றாங்கோ;-)))))//
அது அது... நிரூபனுக்கு ஒரு பெட்டி சீஸ் கேக்(முட்டையில்லாமல் செய்தது).. பிரான்ஸ் பக்கம் பார்க்காமல் மற்றப்பக்கமா இருந்து சாப்பிடுங்கோ:))
@athira
//பூனை கடிச்சால் 16 ஊசி போடுவது அறியவில்லை, ஆனால் நாய் கடிச்சால் தான் 16 ஊசி போடுவாங்க! அவ்வ்வ்வ்வ்வ்//
பூனை கடிச்சால் மருந்தே இல்லையாம் நேரே சொர்க்கம்தேன்ன்ன்ன்:)) அவ்வ்வ்வ்வ்வ்வ்:))) எனக்கெதுக்கு ஊர்வம்பு:).//
அப்போ என் பக்கம் வாற ஆளுங்களை மேலே அனுப்புவது என்ற ப்ளானோட தான் கெளம்பியிருக்கிறீங்க.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நான் போட்டுப் பிறகு வாறன்:)).. நிரூபன் பத்திரமா இருந்து கொள்ளுங்கோ.. காதலர் தினமாம் வெளில போயிடாதையுங்கோ:).
நிரூபனுக்கு 18ஆவது சோடியுடன் காதலர் தின வாழ்த்துக்கள்
நிரூபனுக்கு 18ஆவது சோடியுடன் காதலர் தின வாழ்த்துக்கள்
நிரூபன் said... Best Blogger Tips [Reply To This Comment]
@Yoga.S.FR
இது நாங்கள் படிக்கும்போது எழுதும் ஓட்டோகிராஃப் வசனம்.... அதை பொய்யாக்கிடக்கூடாதெல்லோ:))///You also????
//
அதென்ன சந்தேகத்துடன் கேட்கிறீங்க.
அவங்க அப்படி இல்லை! நம்மளைப் போன்ற பசங்களைப் அப்படிச் செய்யட்டாம் என அட்வைசு பண்றாங்கோ;-)))))///அந்தக் கேள்வியின் பொருள் இரண்டு வகையில் வரும்!நீங்கள் இருவரும் தொப்பி அளவென்கிறீர்கள்!நான் என்ன செய்ய????
athira said...
பூனை கடிச்சால் மருந்தே இல்லையாம் நேரே சொர்க்கம்தேன்ன்ன்ன்:)///அச்சா!அச்சா!!!!இது,இதத்தான் நான் எதிர்பார்த்தேன்/பார்க்கிறேன்????
athira said...
நான் போட்டுப் பிறகு வாறன்:)).. நிரூபன் பத்திரமா இருந்து கொள்ளுங்கோ.. காதலர் தினமாம் வெளில போயிடாதையுங்கோ:).////அட,அட,அட,...என்ன ஒரு நல்ல மனசு???ஹி!ஹி!ஹி!!!!
KANA VARO said...
நிரூபனுக்கு 18ஆவது சோடியுடன் காதலர் தின வாழ்த்துக்கள்!///இத்தப் பார்றா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நிரூபன் said...
@athira
அவ்வ்வ்வ்வ்வ் ஒளிச்சிருந்த நிரூபனும் வெளில வந்திட்டார்.. பூஸோ கொக்கோ? எங்கிட்டயேவா? விடமாட்டமில்ல:)))..
ஹையோ முருகா என்னைக் காப்பாத்து நான் வள்ளிக்கு 5 பவுணில சங்கிலி போடுறேன்..
/
அவ்வ்வ்வ்வ்
நான் ஒளிஞ்சிருக்கேல்ல,
என்னது வள்ளிக்கு ஐஞ்சு பவுணில சங்கிலியோ?
அப்போ தெய்வயானைக்கு யாரு சங்கிலி போடுறது?////இப்ப என்ன,தெய்வ யானைக்கு சங்கிலி தான?நான் போடுறன்!!!!!!!!!!!!!!!!!!!!(வாங்கித் தாருங்கோ!)
kaathalaip patri moththamaaga negative kavithaiyaaga irukkirathe!
பூசாற்ற கழுத்தில கிடந்த அஞ்சு பவுண்?!சங்கிலியக் காணயில்லை எண்டு,ஊர் முழுக்க தேடுறது மட்டுமில்லாம,என்ர பேரும் அடிபடுகுது!இப்பதான் "அங்க"போய்ப் பாத்ததில தெரிஞ்சுது!துலைச்சுப்போடுவன்,துலைச்சு!!!
அருமை நிரூ.
nalla kavithaikal.. kathalar thinna puthumaiyaana kavithai... vaalththukkal
nalla kavithaikal.. kathalar thinna puthumaiyaana kavithai... vaalththukkal
நிரூ...18 ஆவது சோடியோட ....எப்பிடித்தான் இந்த அடியெல்லாம் தாங்குதோ உந்த உடம்பு !
காதல் வாழ்த்துகளப்பு !
KANA VARO said...
நிரூபனுக்கு 18ஆவது சோடியுடன் காதலர் தின வாழ்த்துக்கள்
//
இவருக்கு அமையுது,நமக்குத்தான்.....
வாழ்த்துகள் சொன்னேங்க
////அவள் இல்லாதவர்களின் காதல் நரகம்
அமைதியின்றி அழுது கொண்டிருக்கிறது!////
இன்று காதலர் தினமாம் ஆனால் அதை எத்தனை மானிடங்கள் சந்தோசமாய் எதிர் கொண்டதோ தெரியவில்லை
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
எனக்கே ஆப்பு வைத்துள்ள இலங்கை அரசின் புதிய சட்டம்
Post a Comment