பதிவுலகச் சொந்தங்கள் அனைவரிடத்தும் ஓர் அன்பு வேண்டுகோள்!
பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்குமுரிய வலையுலகச் சொந்தங்களே,
மனித வாழ்க்கை நீர்க் குமிழி போன்று நிலையில்லாதது. இன்றிருப்போர் நாளை இருப்பாரா என்கின்ற ஐயங்களுக்கிடையில், எமக்குக் கிடைக்கும் சிறிய ஓய்வு நேரத்தில் மன ஆறுதல் வேண்டியும், சின்னச் சின்னச் சந்தோசங்கள் வேண்டியும், பொழுது போக்கினை விரும்பியும் வலையுலகில் அனைவரும் இணையத் தமிழூடாக இதயங்களால் இணைந்திருக்கிறோம். இன்பங்களும், துன்பங்களும் இரண்டறத் தொடர்வது தான் மனித வாழ்க்கை என்றாலும், எம்மோடு பழகிய ஒருவர் பிரிகின்ற போது எம்மால் இலகுவில் எம் மன உணர்வுகளை ஆற்றுப்படுத்த முடியாதிருக்கும்.
எம்மோடு நெருங்கிப் பழகிய ஒரு சொந்தத்தின் நட்பினை விட, முகந் தெரியாது இணையத்தில் தன் இதயத்தினை இணைத்து, பின்னர் நட்பாகி, நெருங்கிய தோழனாகப் பழகும் ஒருவர் இவ் உலகினை விட்டுப் பிரிகின்ற போது எமக்கு கிடைக்கும் வலியும், வேதனையும் மருந்திட்டும் ஆற்ற முடியாத ஆழம் கொண்டது. இன்று தமிழ் வலையுலகச் சொந்தங்கள் சகோதரன் ராஜேஷின் பிரிவுத் துயரால் கலங்கி நிற்கிறார்கள். திசைக்கு ஒன்றாக உலகின் எட்டுத் திக்குகளிலும் துளிர் விட்டிருக்கும் தமிழர்களாகிய நாம் அவரின் இறுதிக் கிரியை நிகழ்வுகளிற்கு நேரில் செல்ல முடியாதவர்களாக இருப்பதை எண்ணி கண்ணீர் வடிக்கின்றோம். ஆனாலும் எம்மால் தற்போது செய்ய முடிந்தது ஒரேயொரு விடயமே! அது தான் எம் உணர்வுகளை எல்லாம் ஒருங்கு சேர்த்து சகோதரன் ராஜேஷிற்கு அஞ்சலி செலுத்துவதாகும்.
பதிவுலக துக்க நாள் 07.02.2012
வீடு வலைப் பதிவுச் சகோதரன் சுரேஸ்குமாரின் வேண்டுகோளுக்கு அமைவாக பதிவர்களாகிய எம்மால் தற்போது இயன்ற ஓர் கடமையினை ராஜேஷிற்காக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆற்றுவதற்காக எம்மைத் தயார்படுத்துவோம். எதிர்வரும் செவ்வாய் கிழமை 07.02.2012ம் ஆண்டு பதிவுலக துக்க தினமாக பதிவர்கள் அனைவரும் பதிவு எழுதுவதனை நிறுத்தி, ராஜேஷிற்காக அந் நாளை ஒதுக்கி எம் உணர்வுகளை பகிர்ந்து கொள்வோம். எம்மால் முடிந்த வரை அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்திப்பதோடு, அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும்,அவரது உறவினர்களுக்கும், எம் இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வோம்.
பதிவுலக துக்க தினத்தை அனுஷ்டிக்க அனைத்துப் பதிவர்களின் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம்!
மாய உலகம் வலைப் பதிவின் சொந்தக்காரன் சகோதரன் ராஜேஷ் அவர்கள், தமிழகத்தின் சேலத்தில் பிறந்த ஓர் துடிப்பான இளைஞன். பொறியியல் பட்டப்படிப்பினை முடித்த அவர், தன் மனதில் இருந்த சினிமா ஆசையால், சினிமாவிற்குள் நுழைந்தார். இயக்குனராக உருவாக வேண்டும் எனும் ஆசையில், உதவி இயக்குனராக தேநீர் விடுதி படத்தில் பங்களிப்புச் செய்து தன் கனவின் சிறு புள்ளியில் வெற்றியும் கண்டார். பின்னர் வலைப் பதிவு மீதுள்ள தீராக் காதலினால் பதிவுகளை எழுதுவதோடு மட்டும் நின்று விடாது இன்முகத்தோடு அனைத்துப் பதிவர்களோடும் பழகத் ஆரம்பித்தார். குறுகிய காலத்தில் தன் எழுத்தால், தன் நற் குணத்தால், கல கல எனும் நகைச்சுவைக் குறும்புப் பேச்சால் அதிகளவான பதிவர்கள் மனதில் இடம் பிடித்திருந்தார்.
பதிவுலகத் துக்க நாள் 07.02.2012
கடந்த 31.01.2012 அன்று அதிகாலை இவ் உலகையும், எம்மையும் சோகத்தில் ஆழ்த்தி விட்டுப் பிரிந்து சென்றார் ராஜேஷ். அன்னாரின் நினைவாக எதிர்வரும் 07.02.2012 அன்று இலங்கை இந்திய நேரப்படி அதிகாலை 12 மணியிலிருந்து நள்ளிரவு பன்னிரண்டு மணி வரை அனைத்துப் பதிவர்களும் பதிவுலகத் துக்க நாளாக அவர் மறைந்த நாளை அனுஷ்டித்து எம் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வோம். அன்றைய தினம் பதிவு எழுதுவதனைத் தவிர்த்து அந் நாள் முழுவதையும் பதிவர் மாயாவிற்காக அர்ப்பணிப்போம்! அத்தோடு வருடந் தோறும் 30ம் திகதி ஜனவரி மாதத்தினை மாயாவிற்காக அர்பணித்து பதிவுலகமும், இணையமும் உள்ள வரை, நாம் இவ் உலகில் வாழும் வரை எம் இதயங்களில் மாயாவின் நினைவுகளை சுமந்து பயணிப்போம்!
இந்த அறிவிப்பு தனிப்பட்ட அறிவிப்பு அல்ல. பதிவர் மாயாவின் நண்பர்கள், அனைவரும் இணைந்து மேற்கொள்ளும் அறிவிப்பாகும். இவ் அறிவிப்பிற்கு அனைத்துப் பதிவுலகச் சொந்தங்களும் தங்களின் பூரண ஒத்துழைப்பினை வழங்குவீர்கள் என நம்புகின்றோம்.
பதிவுலகத் துக்க நாள் 07.02.2012
|
50 Comments:
நல்ல முடிவு அன்பருக்கு நம்மால் முடிந்தது இது தான்.கண்டிப்பாக செய்வோம்
என் சொந்த ஊரை சேர்ந்த ஒரு பதிவர். ஆனால் எனக்கு அறிமுகம் இல்லாதவர் . என் அஞ்சலிகள்
நிச்சயமாக அண்ணா.ராஜேஷ் அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய நானும் பிரார்த்தித்துக் கொள்வதுடன் அவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
துக்க நாளாக அனுஷ்டித்து அஞ்சலி செலுத்துவோம்.
பதிவுலக துக்க தினத்திற்கு எனது ஆதரவு, ராஜேஷ் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய நாம் இறைவனை பிராத்திப்போம்.
அவரது ஆன்மா சாந்தியடைய
அன்றைய நாளில் பிரார்த்திப்போமாக
என்னுடைய ஆதரவும் .
அவர் ஆத்மா சாந்திக்கும், குடும்பத்தார்
மன அமைதிக்கும் பிராத்திக்கிறேன்.
பதிவுலக துக்கத்தில் பங்கேற்கிறேன்.
அகால மரணமென்கிறீர்களே? விபத்தா?
அப்படியே செய்வோம் சகோ
அவரின் ஆன்மா இறைவனின் காலடியில் இளைப்பாற ஒரு இடம் கிடைக்க அனைவரும் பிரார்த்திப்போம் சகோ
அனைவரும் உறுதி யாக செய்வோம்! செய்ய வேண்டும்
புலவர் சா இராமாநுசம்
கண்டிப்பாக என்னுடைய ஆதரவு இதில் உண்டு...
அன்பரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்..
வணக்கம் நிரூபன்!இந்த நாளில்(07.02.2012) தமிழ்கூறும் நல்லுலகின் அத்தனை பதிவர்களும் ஒன்றிணைந்து இறைவன் பாதம் பணிந்து ராஜேஷ் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்!
நல்லது நிரூபன்.... அப்படியே செய்வோம், இதை முடிந்தவரை அனைவருக்கும் அறிமுகம் செய்கிறேன், நீங்களும் செய்யுங்கோ..
இது எப்படி நடந்தது. முடிந்தால் விபரம் தெரிவிக்கவும் நிருபன். நினைக்கவே நெஞ்சம் கல்லாகிறது. நான் கேட்ட ஐயங்களுக்கெல்லாம் நான் அடுத்து பல நாட்கள் அவர் வலைப்பூ செல்லாமல் இருந்த போதும், என் வலைப்பூ வந்து பதிவு இட்டுச் சென்ற அந்த அன்பு உள்ளத்தை, அக்கரையை, மென்மையை, உதவும் குணத்தை, அந்த நாட்களை எப்படி ஆற்றிக்கொள்ள இயலும்? கண்ணீருடன் அவற்றையெல்லாம் மீண்டும் மீண்டும் படித்து நினைவு கூர்கிறேன். முகம் அறியாத போதும் அவரது அகம் நன்கறிந்துள்ளேன். அந்த அன்பு நெஞ்சத்தின் ஆன்மா சாந்தியடையை இறைவனை வேண்டுகிறேன்.
அந்த அன்பு ஆன்மாவுக்காக துக்கம் அனுட்டிப்பது நம் கடமை. நான் இக்கருத்தை முழு மனத்துடன் ஆதரிக்கிறேன் நிரூபன். மனம் நிறைந்த வருத்தத்துடன்... இன்னும் நீங்காத அதிர்ச்சியுடன்...
நிற்சயமாக நானும் இணைந்துகொள்கிறேன்.
அப்படியே ஆகட்டும், என் ஆதரவும்.தகவலுக்கு நன்றி அதிரா.
அவரின் ஆன்மா இறைவனின் காலடியில் இளைப்பாற ஒரு இடம் கிடைக்க அனைவரும் பிரார்த்திப்போம் சகோ..
நிச்சயமாக சகோ. நானும் இதை அனுஷ்டிக்கிறேன். செவ்வாய் அன்று பதிவிடாமல் பதிவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதைக் கட்டாயம் செய்யவேண்டும்.
உங்களின் கருத்துக்களை வழிமொழிகிறேன் நண்பா... நாளைக்கு வந்தேமாதரத்தில் இருந்து பதிவு வெளிவராது.... நண்பரை பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்...
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நானும் பிரார்த்திக்கிறேன்.
நண்பர் மாயா ராஜேஷிற்கு என்
மௌன அஞ்சலிகள்..
மாய உலகம் வலைப்பூவின் பதிவர் ராஜேஷ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக நாளை அனுஸ்டிக்கப்படும் "பதிவுலக துக்க நாள் 07.02.2012" ஐ முன்னிட்டு நாளை ஒருநாள் மட்டும் என்தளம் முழுமையாக முடக்கப்பட்டிருக்கும்
அஞ்சலிகள்..ராஜேஷின் உறவினர் ஃபோன் நெம்பர் இருந்தால் 9842713441 க்கும் யாராவது எஸ் எம் எஸ் பண்ணவும்
அவர் ஆத்மா சாந்திக்கும், குடும்பத்தார்
மன அமைதிக்கும் பிராத்திக்கிறேன்.
அவர் ஆத்மா சாந்திக்கும், குடும்பத்தார்
மன அமைதிக்கும் பிராத்திக்கிறேன்.
பல முறை மின்னஞ்சலில் உரையாடிய பல முறை ஊக்கப்படுத்திய நண்பர் தற்போது இல்லை என்று என்னும் போது துக்கமாகயிருக்கிறது.
எனது கண்ணீர் அஞ்சலிகள்
ஆழ்ந்த இரங்கல்கள். உங்கள் இந்த நற்செயலில் நானும் பங்கேற்கிறேன்
அவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
ராஜேஷ் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய நாம் இறைவனை பிராத்திப்போம்.
அவர் ஆத்மா சாந்திக்கும், குடும்பத்தார்
மன அமைதிக்கும் பிராத்திக்கிறேன்.
வேதா. இலங்காதிலகம்.
ராஜேஷ் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய நாம் இறைவனை பிராத்திப்போம்.
அவர் ஆத்மா சாந்திக்கும், குடும்பத்தார்
மன அமைதிக்கும் பிராத்திக்கிறேன்.
வேதா. இலங்காதிலகம்.
நானும் உங்களோடு மௌனமாய்..!!
(தகவலுக்கு நன்றி அதிரா)
அனைவரும் உறுதி யாக செய்வோம்! செய்ய வேண்டும்
மாயாவின் ஆத்மசாந்திக்கும், அவரின் குடும்பத்தினருக்கு
மன அமைதிக்குமாக உங்கள் அனைவருடனும் இணைந்து நானும் பிராத்திக்கிறேன்.
தகவல் பகிர்வுக்கு சகோதரி அதிராவுக்கு நன்றி.
உறுதியாக செய்வோம் ...... அவர் குடும்பத்தை கடவுள் ஆறுதல்படுத்துவாராக ....!
ராஜேஷ் வலைச்சர ஆசிரியராக இடுகையிட்ட இறுதிப்பதிவில்,” சீனா அய்யா எளிதில் மறக்கமாட்டார்” என்று கருத்துரையிட்டேன்.சிரத்தையும் பதிவர்கள் மீது அன்பும் கொண்ட ராஜேஷ் இப்போது இல்லை.ஒரு நாளை ஒதுக்கி துக்க தினமாக அனுசரிப்போம்.அவருடைய ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.
என்னுடைய ஆதரவும் .
நானும் உங்களுடன் இணைந்து எம்மை விட்டுப் பிரிந்திட்ட மாயாவின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கிறேன்.அவரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினரின் மனஅமைதிக்கும் பிரார்த்திக்கிறேன்.
மாயா என்னும் ஒரு உறவு மறைந்த துயரை ஆற்றுவதற்கு ஆகவும் அவர் ஆத்மா சாந்தி அடைவதற்காகவும் அன்றைய நாள் எமது அனைவரின் பிரார்த்தனையும் ஒன்றாக இணையட்டும்.
எனது மகள் கூறிய வார்த்தை : இவர் என்றும் உங்கள் ப்ளாக் இல் அழியாத உறுப்பினர் அம்மா
பின்னூட்டங்கள் வாயிலாக உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்ட அத்தனை சொந்தங்களுக்கும் நன்றிகள்.
மாயாவின் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல்களையும், இரங்கல்களையும் இந் நேரத்தில் காணிக்கையாக்குவோம்.
மாயா ஏன் இறந்தார் எனும் விபரம் இன்னமும் தெரியவில்லை.
அவரது சகோதரன் M.R அவர்களிடம் கேட்டிருக்கிறேன். இன்னும் சில தினங்களில் பதில் கிடைத்து விடும் என நம்புகிறேன்.
எந்தன் ஆழ்ந்த அனுதாபங்களும்
அவரின் குடுபம்பதினருக்காக
எனது ப்ராத்தனைகளும்
அவரின் ஆத்ம சாந்தி அடைய நானும் வேண்டுகிறேன்
அவரது ஆன்மா சாந்தியடைய
பிரார்த்திப்போமாக
அப்படியே செய்வோம் சகோ அவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
அவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்பரின் ஆன்மா சாந்தி அடையவும் , அவரின் பிரிவை தாங்காமல் துயரத்தில் இருக்கும் உறவுகளுக்கு மன வலிமையை வழங்கிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ..
எங்கள் அஞ்சலிகள். இந்த விஷயம் இன்றுதான் தெரிந்தது. வந்தேமாதரம் பக்கத்தில் பார்த்துத் தெரிந்து கொண்டேன். அவரைப் பிரிந்து வாழும் குடும்பத்தினருக்கு எங்கள் அனுதாபங்கள்.
இப்படி எல்லோரும் அஞ்சலி செலுத்துவதைப் பார்க்க, மாயா நேரிலே வரமாட்டாரோ என்று மனம் துடிக்கிறது...
உங்கள் ஆத்மா அமைதி நிலைபெற, நாம் பிரார்த்திக்கிறோம் மாயா.
நண்பர் மாய உலகம் ராஜேஸ்க்கு என் அஞ்சலி...You are in our prayers..
நல்ல தீர்மானம்
அப்படியே ஆகட்டும், என் ஆதரவும்.
athira தகவல் சொன்னதற்க்கு மிக்க நன்றி.
Post a Comment