நாளை எனக்கு கல்யாணமாம் - நான்
என்ன செய்வேன் சொல்லுங்களேன்!
காலை எழுந்தவுடன் கரும்பாய் ஓர் சேதி
மதுரனோ என் காதில் மெதுவாய் சொன்னான்
ஓலை எழுதி ஒருத்தியை பார்த்து
ஒன்னை எனக்கு புடிச்சிருக்கு என்றும் சொல்லவில்லை
வேளை வரும் வரை காதல் வெறி கொண்டு அலைந்து
வெட்டியாய் நானும் காத்திருக்கவில்லை
தானாய் வந்ததோர் வாய்ப்பு - தயக்கத்துடன்
என்னை நானே கண்ணாடியில் பார்த்தேன் -
வீணாய்ப் போன நிரூபன் உனக்கா கல்யாணம்?
விட்டத்தை முறைத்தேன் - வெட்கத்தில் சிரித்தேன்!
தேனாய் இனிக்கும் தேவ மங்கை வருவாளா - இல்லை
தேவ ரம்பயைர் போல ஓர் நங்கை கிடைப்பாளா
ஏனோ தெரியவில்லை - மனதில் ஆனந்த தொல்லை
என்னவள் என்னிடம் வந்தால் இரவென்பதே வாழ்வினில் இல்லை!
மீனா போன்ற கண்ணழகியா - இல்லை மினுக்கி குலுக்க்கி
மீண்டும் மீண்டும் ரசிக்கத் தூண்டும் காதல் பேரழகியா?
ஊணை மறந்தேன் - என் உறவை பார்க்க துடியாய் துடித்தேன்
உடனே அவள் வர வேண்டுமே என வாசலில் தவித்திருந்தேன்!
கனாவில் கழியும் வாலிப வாழ்க்கை இனிமேல்
கன்னியின் மடியில் என எண்ணிப் பார்த்தேன்!
நிலாவில் போய் வசிக்கா இடமில்லை; என்றாலும் அவள்
நினைப்புடன் அருகே வாழ்வதில் சுகம் என நானும் நினைத்தேன்!
பொண்ணை காணவில்லையே என பெரு மூச்சு விட்டேன்
பொறுமை காக்கச் சொன்னான் மதுரன் - எதிர்பார்ப்புடன் நின்றேன்
கண்ணில் அவள் பற்றிய நினைப்புடன் அலைந்தேன்
காத்திரு காதலி கிடைப்பாள் எனச் சொன்னான் - சரி என்றேன்!
அண்ணே நிரூ! நாளை எனக்கு கல்யாணம் என்றான்
அடடா, நானும் ரெடியாகனும் என்றேன் - போடா
வெண்ணெய்! மாப்பிளைத் தோழனுக்கு எதுக்கு அவசரம்?
வெட்டியாய் இரு! மாப்பிளை நானும் ரெடியாகனும் என்றான் மதுரன்!
போலீஸ் தொல்லையால் இன்பம் போச்சே!
கண்ணழகி - கட்டழகி ஹம்சிகாவை கண்ட இடம் திண்டிவனம்
கண்ணியமாய் என்னை பார்த்ததனால் அவளுக்கும் நல்ல குணம்
அன்பு மழை பொழிந்தேன் - ஆதரவாய் அணைத்தேன்
அழகி அவள் உடலை அடைய அடையார் வரை போனேன்
அக்கம் பக்கம் பார்த்தேன் - கட்டி முத்தம் வைத்தேன்
சொர்க்கம் எங்கே இருக்கும் என தேடுகின்ற நேரம் - ரூமை
சோதிக்கின்ற நோக்கத்துடன் வாசலிலே போலீஸ்
வெட்கத்துடன் பொட்டுத் துணி இன்றி நின்றிருந்தேன் நானும் - என்னை
வேகமாக ஜீப்பினிலே போட்டார் கான்ஸ்டபிள் ஆறுமுகனும்
கட்டிலிலே தொலைய வேண்டிய என் சக்தி- இப்போ சிறை
கம்பிக்குள்ளே தொலைகிறதே என நொந்தேன் - புத்தி தெளிந்தேன்!
*****************************************************************************************************************************
இப் பதிவினூடாக நாம் செல்லவிருக்கும் வலைப் பூ எது தெரியுமா? "அலையல்ல சுனாமி" வலைப் பூ தானுங்க. என்னங்க பேரைக் கேட்டதும் சும்மா அதிருதில்லே. பெயருக்கு ஏற்றாற் போலவே கவிதைகள், பொதுத் தகவல்கள், மற்றும் அறிவியல் விடயங்களை தன் அலையல்ல சுனாமி வலைப் பதிவில் பகிர்ந்து வருகிறார் பதிவர் "விச்சு" அவர்கள்.
ஓய்வாக இருக்கும் போது அலையல்ல சுனாமி வலைப் பூவிற்கு நீங்களும் ஒரு தடவை சென்று வரலாம் அல்லவா?
*****************************************************************************************************************************
|
32 Comments:
அவ்வ் அதுக்குள்ளயே பதிவா
ஓலை எழுதி ஒருத்தியை பார்த்து
ஒன்னை எனக்கு புடிச்சிருக்கு என்றும் சொல்லவில்லை
வேளை வரும் வரை காதல் வெறி கொண்டு அலைந்து
வெட்டியாய் நானும் காத்திருக்கவில்லை//
சத்தியமாய் சொல்லுங்க..... ஏன்னா நட்டாங்கண்டல் றோட்டுவழிய உங்கள சோடியா கண்டதா ஊருக்குள்ள பரவலா கதைக்கிறாங்க பாஸ்
தானாய் வந்ததோர் வாய்ப்பு - தயக்கத்துடன்
என்னை நானே கண்ணாடியில் பார்த்தேன் -
வீணாய்ப் போன நிரூபன் உனக்கா கல்யாணம்?//
நிரூ உங்களுக்கு உண்மையாவே மனச்சாட்சி இருக்கு ஹி ஹி
//தேனாய் இனிக்கும் தேவ மங்கை வருவாளா - இல்லை
தேவ ரம்பயைர் போல ஓர் நங்கை கிடைப்பாளா//
இல்லை மணியண்ணைதான் கிடைப்பார்
போடா
வெண்ணெய்! மாப்பிளைத் தோழனுக்கு எதுக்கு அவசரம்?
வெட்டியாய் இரு! மாப்பிளை நானும் ரெடியாகனும் என்றான் மதுரன்!//
அவ்வ்வ்... பந்து றிட்டேர்னா... அவ்வ்
விச்சுவுக்கு வாழ்த்துக்கள்
நாளைக்கு கல்யாணத்தை வைத்து கொண்டு அருமையாய் கவிதை வடிக்க உங்களால் மட்டும்தான் முடியும்.....
நாளை எனக்கு கல்யாணமாம் - நான்
என்ன செய்வேன் சொல்லுங்களேன்!///
அண்ணே எனக்கு தெரிந்தவரைக்கும் தாலி கட்டுவதுதானாம் முக்கியம்.....
இதுக்கு மருந்தில்ல!!!!
வணக்கம் நிரூபன்!வெள்ளிக்கிழமையும் அதுவுமா........................ஒண்டு செய்யலாம் ராசா!விடிய எழும்பி "விநாயகர் அகவல்"படியுங்கோ!ரெடி,ஸ்ராட்;சீதக் கபளச் செந்தாமரைப் பூம்(பூவும்),பாதச் சிலம்பும் பலவிசை பாட,பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்......................
வணக்கம் மதுரன்!நலமா?///மதுரன் said...
விச்சுவுக்கு வாழ்த்துக்கள்!////யாரது விச்சு?தூதரோ?ஹ!ஹ!ஹா!!!!!
வணக்கம் தம்பி ஆகுலன்!என்ன இந்த நேரத்தில?????///ஆகுலன் said...
நாளை எனக்கு கல்யாணமாம் - நான்
என்ன செய்வேன் சொல்லுங்களேன்!///
அண்ணே எனக்கு தெரிந்தவரைக்கும் தாலி கட்டுவதுதானாம் முக்கியம்.....///தம்பி நீங்கள் இன்னமும் "வளரணும்"!!!ஹி!ஹி!ஹி!!!!!!!
@Yoga.S.FR
நான் நலம் ஐயா? நீங்கள் நலமா?
பதிவர் விச்சுவை சொன்னேன் ஹா ஹா
நோட்டிஸ் கொடுக்கவே இல்ல....
மதுரன் said... Best Blogger Tips [Reply To This Comment]
@Yoga.S.FR
நான் நலம் ஐயா? நீங்கள் நலமா?
பதிவர் விச்சுவை சொன்னேன் ஹா ஹா
///நல்லாயிருக்கிறன் தம்பி,நன்றி!நீங்களும் "அகவல்"படியுங்கோ!ஹி!ஹி!ஹி!!!!!!
சசிகுமார் said...
நோட்டிஸ் கொடுக்கவே இல்ல....///வாங்க சசிகுமார் சார்!அது வந்து தப்பா நினைச்சுக்காதீங்க.பையன் யூனிவேர்சிட்டி போறாருல்ல,கிடைக்கிற கேப்புல தட்டிட்டு ஓடிர்றாரு,அம்புட்டுத்தேன்!
//நாளை எனக்கு கல்யாணமாம் - நான்
என்ன செய்வேன் சொல்லுங்களேன்!//
நிரூபன்... ஓடிப்போய்க் கட்டிலுக்குக் கீழ ஒளியுங்கோ.. இல்லையெணால் தாலிகட்ட வச்சிடுவினம்...:))
//நானும் ரெடியாகனும் என்றேன் - போடா
வெண்ணெய்! மாப்பிளைத் தோழனுக்கு எதுக்கு அவசரம்?
வெட்டியாய் இரு! மாப்பிளை நானும் ரெடியாகனும் என்றான் மதுரன்!//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இது எத்தனையாவது பல்ப்பு?:))... இதுக்குத்தான் பொறுமையாக இருங்க நான் பொம்பிளை பார்க்கிறேன் என்றேன், குறைமாதத்தில பிறந்ததுபோல அவசரப்பட்டா என்ன செய்வதாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
//
நிலாவில் போய் வசிக்கா ///
றீச்சர் ஓடிவாங்கோ ஸ்பெல்லிங் மிசுரேக்கூஊஊஊஉ:)))
//கனாவில் கழியும் வாலிப வாழ்க்கை இனிமேல்
கன்னியின் மடியில் என எண்ணிப் பார்த்தேன்!
நிலாவில் போய் வசிக்கா இடமில்லை; என்றாலும் அவள்
நினைப்புடன் அருகே வாழ்வதில் சுகம் என நானும் நினைத்தேன்!
///
Yoga.S.FR said...
இதுக்கு மருந்தில்ல!!!!
February 3, 2012 11:56 AM
Yoga.S.FR said...
வணக்கம் நிரூபன்!வெள்ளிக்கிழமையும் அதுவுமா........................ஒண்டு செய்யலாம் ராசா!விடிய எழும்பி "விநாயகர் அகவல்"படியுங்கோ!ரெடி,ஸ்ராட்;சீதக் கபளச் செந்தாமரைப் பூம்(பூவும்),பாதச் சிலம்பும் பலவிசை பாட,பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்.....................
ஹாஆஆஆஆஅ....ஹா..ஹா.. இதேதான் நிரூபன் வேற வழியில்லை... ரெடி ஸ்ரெடி ஸ்ராட்... சீதக் களபச்.... செந்தாஆஆஆ... மரைப்பூம்.... ராகத்தோட பாடுங்கோ OKAY?:)) மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))
//ஊனை மறந்தேன்//
ஊணை என்று வர வேண்டுமோ?
ஊன்-இறைச்சி
ஊண்-உணவு என நினைக்கிறேன். தவறாயிருந்தால் மன்னிக்கவும்.
நல்லாவே இருக்கு!
என்னது மாப்பிள்ளைக்கு எத்தனையாவது கலியாணம் ஏற்கனவே நேசமினா,வதனா என்று முடிச்சுப் போட்டதாக விதானயார் பொண்ணு பெட்டிசம் போட்டதே.
இவர் பாலும் பழமும் கைகளில் ஏந்தி இன்று இன்று வெள்ளிக்கிழமை பாடுவதைப் பார்த்தால் யாழ்தேவியில் .2.30 ரயிலிற்கு இப்பவே புக்பண்ணிவிட்டாரோ யோகா ஐயா. ஹீ ஹீ
தை பிறந்தாலே எல்லாரும் தவியாய்த் தவிக்கிறாங்க யோகா ஐயா நானும் ரெடி சீ மாப்பிள்ளைத் தோழனுக்கு அளவாக ஒரு பவுண் மோதிரம் கிடைக்கும் ஆபத்திற்கு அடைவு வைக்கலாம் .ஹீ ஹீ
என்ன கொடுமை சரவணன்?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@எழிலருவி
//ஊனை மறந்தேன்//
ஊணை என்று வர வேண்டுமோ?
ஊன்-இறைச்சி
ஊண்-உணவு என நினைக்கிறேன். தவறாயிருந்தால் மன்னிக்கவும்.
//
மிக்க நன்றி எழிலருவி!
உண் என்பது உணவு,
நான் தான் தவறு விட்டு விட்டேன்.
இப்பொழுதே திருத்திக்கிறேன்.
உங்க அல்லக்கை அங்கே அவரு தளத்தில் இதற்கு கவுண்டர் கொடுத்திருக்கார். அங்கே வாசித்து புரிஞ்சுக்கிறேன். நமக்கும் கவிதைக்கும் ரொம்பத் தூரம்.
அப்பு ராசா என்னை ஏமாத்திப்போட்டுப் போக நினைச்சால் உப்பிடித்தான் ஆகும்.சொல்லிப்போட்டன் !
நன்றி!நிரூபன்... வாழ்த்து சொன்ன மதுரனுக்கும் ,என்னை தூதராக ஆக்கிய Yoga.S.FR க்கும் நன்றி.
ஹேமா said...
அப்பு ராசா என்னை ஏமாத்திப்போட்டுப் போக நினைச்சால் உப்பிடித்தான் ஆகும்.சொல்லிப்போட்டன் !///ஏமாத்திப் போட்டுப் போக நினைச்சால்????????????????????
ஒரு நல்ல கவிதை மனதில் தோன்றியவுடன் வந்த கல்யாணமா? இல்லை ஒரு நல்ல கலியாணம் அமைந்தவுடன் தோன்றிய கவிதையா? வாழ்த்துக்கள். என்ன ஒன்று இந்த கவிதயைய் ஒருமுறை தான் நீங்கள் எழுத முடியும் என்பதில் வாசகர் எமக்குந்கொஞ்சம் வருத்தமே!!!!
மாப்ளே ரொம்ப ஆவலாத்தான் இருக்கார் போல... பாத்து டக்கு புக்கேண்டு எதையாச்சும் செட் பண்ணிக்கொடுங்கோ மது..
Post a Comment