பாகம் 03:
ஷிரோமியும், நானும் நண்பர்களாக இருந்த காலத்தில் அவங்க குடும்பத்தோட யார்கிட்டேயும் சொல்லாம, எங்க ஊரை விட்டு எங்கேயோ போயிட்டாங்க. அப்புறம் நான் அவங்களைக் காணவே இல்லைங்க. இறுதியாக யாரோ ஒரு நண்பன் சொன்னான். அவங்க இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பக்கமா இருக்கிற கண்டிக்குப் போயிட்டாங்க அப்படீன்னு. என் பதின்ம வயது வரை நான் மீண்டும் காண மாட்டேனா என ஏங்கிய பொண்ணு இந்த ஷிரோமி தான். ஷிரோமியின் பிரிவினால் ரொம்பவுமே வாடிப் போயிட்டேனுங்க. அந்தச் சின்னவயசில் சேலை கட்டும் பொண்ணுக்கொரு வாசம் உண்டு என்ற பாடலைப் படிக்கும் போது மனதினுள் ஓர் இனம் புரியாத குறு குறுப்பினை எனக்கு கொடுத்தவங்க இந்தச் ஷிரோமி.
இப் பதிவானது என்னை கெடுத்த பொண்ணுங்கள் தொடரின் மூன்றாம் பாகமாகும். முதல் இரு பாகங்களையும் படிக்க இங்கே உள்ள Drop Down Menu இல் கிளிக் செய்யவும். ஷிரோமியை மறக்க முடியாது நான் இருந்தது, ஷிரோமி கூட நான் படித்தது எல்லாமே ஒரு Convent பாடசாலையில். இங்கே ஐஞ்சாம் கிளாஸ் வரைக்கும் ஆம்பிளைப் பையங்கள் படிக்கலாம். ஆனால் அதாற்கு மேல நாம எல்லோரும் நமக்கென்றோர் தனியான பாடசாலையினை அல்லது மிக்ஸிங் பாடசாலையினை நாடிச் செல்லனும் என்பது தான் நம்ம ஸ்கூல் ஹெட்மாஸ்டர் - சிஸ்டரோட வேண்டுகோளாக இருந்திச்சு.பள்ளிக் கூட விதி முறையும் அது தானுங்க. ஸோ..இப்படிப் படிச்சிட்டிருக்கும் போது நம்ம B கிளாஸில இருந்து நான் படிச்ச A கிளாஸிற்கு மூன்று பொண்ணுங்க நல்ல மார்க் எடுத்து Promote பண்ணப்பட்டு வந்தாங்க.
அடியேனுக்கு அப்போது நாலாம் கிளாஸ் படிக்கிற வயசு. நாம எல்லோரும் ஐந்தாம் கிளாஸில புலமைப் பரிசில் பரீட்சை எனச் சிறப்பிக்கப்படுகிற (Scholarship எக்ஸாமிற்கு நம்மளைத் தயார் பண்ணிக்கனும் என்பதால; நாம நாலாம் கிளாஸிற்கு வந்தப்போவே ஒரு ஸ்பெஷல் எக்ஸாம் வைச்சு நம்மளை குறூப்பாக பிரிச்சாங்க. அதில நல்ல மார்க் எடுத்தவங்க பட்டியலில் ஆண்கள் பக்கம் இருந்து அடியேனும், பெண்கள் பக்கம் இருந்து B கிளாஸில இருந்து நம்ம கிளாஸிற்குள் வந்த ஆர்த்திகா, அபிநயா, சைந்தவி ஆகியோரும் செலெக்ட் ஆனாங்க.இலங்கையில் ஆரம்ப பாடசாலைகளில் உள்ள மேசைகள் எப்போதுமே இருவர் அமர்ந்திருந்து படிப்பதற்கு ஏற்ற மாதிரி நீளமாக இருக்கும்.
இதனால ரெண்டு மேசையை ஒன்னாக்கி நால்வர் கொண்ட குழுவாக ஒவ்வோர் குழுக்களையும் பிரிச்சாங்க. முதலாவது குரூப்பாக நம்ம குழு இருப்பதனால் ஆர்த்திகா, அபிநயா, சைந்தவி இவங்க மூனூ பேர் கூடையும் நாலாவது ஆளாக உட்காரும் பாக்கியம் எனக்கு கிடைச்சது. அப்படி ஓர் வாய்ப்பு அதுவும் நாலாம் ஆண்டில் கிடைச்சா சொல்லவா வேண்டும்? பாடசாலையில் இடைவேளையின் போது கன்டீனுக்கு போவது,ஓடி விளையாடுவது என எல்லாச் செயற்பாடுகளின் போதும், நாம நால்வரும் தான் ஒன்னாகத் திரிஞ்சோம். இதில ஆர்த்திகாவுக்கும் எனக்கும் கணக்குப் பாடத்திலும், ஆங்கிலப் பாடத்திலும் யாரு ஹையஸ்ட் மார்க்கு வாங்குறதுன்னு பெரிய போட்டியே நடக்குமுங்க.
நம்ம பசங்க எல்லோரும் என்ன செஞ்சாங்க என்றால், ஆர்த்திகா, அபிநயா கூட என்னோட பேரை ஜோடி சேர்த்து நக்கல் பண்ண தொடங்கிட்டாங்க. எனக்கோ இவங்க யாரு மேலையும் ரொம்ப பாசம் வரலை. ஆனால் வீட்டில இருந்து அம்மா சமைத்து கொடுக்கிற புட்டும், முட்டைப் பொரியலும் உள்ளிட்ட இத்தியாதிப் பொருட்களை நான் சைந்தவியுடன் மாத்திரம் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினேன். அப்படீன்னா நமக்கு சைந்தவி மேல ஒரு இது இருக்குன்னு தானேங்க அர்த்தம். ஆனால் பாட வேளையின் போது நடு வீட்டிற்குள் நந்தி மாதிரி சைந்தவியை எனக்கு எதிர்த்தாப்பில உட்கார வைச்சிட்டு, என்னையை மத்த ரெண்டு பொண்ணுங்களுக்கும் நடுவே உட்காருவது போல இருக்கப் பண்ணிட்டாங்க.
அப்புறம் என்னங்க? நம்ம பசங்களுக்கு ரொம்பவே பொறாமை! "நிரூவிற்கு ரெண்டு பக்கமும் பொண்ணுங்க இருக்காங்க" என்று செமையா கிண்டல் பண்ணத் தொடங்கிட்டாங்க. எங்கள் குடும்பம் அப்பா கடுமையாக உழைக்கத் தொடங்கும் வரை, நடுத்தர வர்க்கப் பொருளாதாரத்தின் கீழ் தான் வாழ்ந்து கொண்டிருந்தது. பள்ளிக்கூடம் 7.45 மணிக்கு ஆரம்பிக்குது என்றால் நான் காலை 7.20 மணிக்கே பள்ளியில் ஆஜார் ஆகிடுவேன். எதுக்கென்று கேட்கிறீங்களா? நம்ம தோழிங்க, தோழர்கள் கூட விளையாடி மகிழத் தான். இப்படியாக ஒரு நாள் ஓடி விளையாடும் போது, என்னோட காற்சட்டையின் பட்டன் அறுந்திட்டுதுங்க. காற்சட்டையிலிருந்து கையை எடுத்தா கழுசான் கீழே நழுவிடும்.
இப்படியான சூழ் நிலையில் என்ன நடந்திருக்கும் என அறிய ஆவலா? அடுத்த பாகத்திற்காக காத்திருங்கள்.
****************************************************************************************************************************
இப் பதிவினூடாக சாதாரணமானவளின் வலைப் பூவிற்கும் ஒருவாட்டி சென்று வருவோமா?சமூகத்தின் மீதான பார்வையினை "சாதாரணமானவள்" என்ற வலைப் பூவினூடாக எழுதி வருகின்றார் பதிவர் சாதாரணமானவள் அவர்கள். இவ் வலைப் பூவில் வாசகர்களாகிய உங்களுக்கு விருந்தளிக்கப் பல சுவாரஸ்யமான விடயங்கள் காத்திருக்கின்றன. ஓய்வாக இருக்கும் போது, நீங்களும் இந்த வலைப் பூவிற்கு சென்று வரலாம் அல்லவா?
****************************************************************************************************************************
|
31 Comments:
சின்ன வயது ஞாபகங்களை அழகாக மீட்டிப்பாக்கின்றீர்கள் பாஸ் எங்கள் ஞாபகங்களும் மீள் ஞாபகப்படுத்திவிட்டீர்கள்,எனக்கும் இதை படிக்க இப்படியான நினைவுகளை தொடராக எழுதனும் என்று தோனுது பார்ப்போம் சந்தர்ப்பம் கிடைத்தால் நீங்கள் முடித்ததும் எழுதுகின்றேன்.
காற்சட்டை கழண்டுவிட்டது கையைவிட்டால் கீழே விழுந்துவிடும் ஹி.ஹி.ஹி.ஹி... பார்ப்போம் என்ன செய்தீர்கள் என்று அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்.
என்னைப் பிறந்ததில் இருந்து A/L வரைக்கும் பாய்ஸ் ஸ்கூல்ல போட்டே கெடுத்துட்டாங்க. அவ்வ்வ்வ்
கொடுத்து வச்சவர் நீங்க.
ஏன் காமெண்ட் அப்ரூவல் போட்டிருக்கீங்க?
அச்சோ... அச்சச்சோ....
வெக்கம் வெக்கமா வருதே,.......
(அடுத்து என்ன நடந்திருக்கும்? - தலைவா... யூ ஆர் கிரேட்...)
அடடா 3ம் பாகமோ? அவ்வ்வ்வ்வ்வ்:)).. நில்லுங்க பந்தி பந்தியாப் படிக்கிறேன்:))
//ஷிரோமியும், நானும் நண்பர்களாக இருந்த காலத்தில் அவங்க குடும்பத்தோட யார்கிட்டேயும் சொல்லாம, எங்க ஊரை விட்டு எங்கேயோ போயிட்டாங்க//
அதெதுக்கு நிரூபனோட சேர்ற பெண்கள் எல்லோருமே காணாமல் போயிடுறாங்க? ஹையோ சின்ன வயசில சொன்னேன் அவ்வ்வ்:)).. மிகுதிக்கு பின்பு வாறேன்..
சைந்தவி ஊசி குத்தி விட்டாங்களா பாஸ்?
கழுசானுக்கு
என்னியதம் தொட்ட தேவதைகள்ன்னு வச்சிருக்கலாமோ...
தொடருங்கள் சகோதரம்...
அறியாத வயதின் அட்டகாசங்களை...
மாலை வணக்கம் நிரூபன்!நல்லாயிருந்திச்சு!நல்லாயிருந்திருக்கும்.பேர் எல்லாம் நல்லாயிருக்கு!குட்டிகளும்(சிறுமிகள்) நல்லாவே இருந்திருக்கும்ஹும்!!!!(நீங்கள் கொடுத்த பொறுப்பை சரிவர நிறைவேற்றி யுள்ளேன் என நினைக்கிறேன்.)
எங்கின விட்டேன் சாமீஈஈஈ.... சரி முதல்ல இருந்தே வருவம்:))..
//மூனூ பேர் கூடையும் நாலாவது ஆளாக உட்காரும் பாக்கியம் எனக்கு கிடைச்சது. அப்படி ஓர் வாய்ப்பு அதுவும் நாலாம் ஆண்டில் கிடைச்சா சொல்லவா வேண்டும்?//
அவ்வ்வ்வ்வ்வ்... பிஞ்சிலேயே முத்தலு:))
//ஆனால் வீட்டில இருந்து அம்மா சமைத்து கொடுக்கிற புட்டும், முட்டைப் பொரியலும் உள்ளிட்ட இத்தியாதிப் பொருட்களை நான் சைந்தவியுடன் மாத்திரம் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினேன். அப்படீன்னா நமக்கு சைந்தவி மேல ஒரு இது இருக்குன்னு தானேங்க அர்த்தம். //
சத்தியமா உதுக்கு அர்த்தும் உது இல்லை:))).. சும்மா கண்டபடி கற்பனையை வளர்க்கப்பூடா:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
//நம்ம பசங்களுக்கு ரொம்பவே பொறாமை! "நிரூவிற்கு ரெண்டு பக்கமும் பொண்ணுங்க இருக்காங்க" என்று செமையா கிண்டல் பண்ணத் தொடங்கிட்டாங்க.//
என்னாது 10 வயசிலயேயா? முடியல்ல சாமீஈஈஈஈஈஈஈ என்னை விடுங்க நான் காசிக்குப் போறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)))
ஹா..ஹா...ஹா... அடுத்த பதிவைப் போடுங்க.. முடிவைப் பார்த்திடலாம், அவசரப்பட்டு நான் ஒண்ணும் இப்போ சொல்ல மாட்டேன்:)))
@K.s.s.Rajh
சின்ன வயது ஞாபகங்களை அழகாக மீட்டிப்பாக்கின்றீர்கள் பாஸ் எங்கள் ஞாபகங்களும் மீள் ஞாபகப்படுத்திவிட்டீர்கள்,எனக்கும் இதை படிக்க இப்படியான நினைவுகளை தொடராக எழுதனும் என்று தோனுது பார்ப்போம் சந்தர்ப்பம் கிடைத்தால் நீங்கள் முடித்ததும் எழுதுகின்றேன்.
காற்சட்டை கழண்டுவிட்டது கையைவிட்டால் கீழே விழுந்துவிடும் ஹி.ஹி.ஹி.ஹி... பார்ப்போம் என்ன செய்தீர்கள் என்று அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்.//
கண்டிப்பாக எழுதுங்க. சின்ன வயசுக் குறும்புகள் நினைக்க நினைக்க சுகம் கொடுப்பவை தானே./
@ஹாலிவுட்ரசிகன்
என்னைப் பிறந்ததில் இருந்து A/L வரைக்கும் பாய்ஸ் ஸ்கூல்ல போட்டே கெடுத்துட்டாங்க. அவ்வ்வ்வ்
கொடுத்து வச்சவர் நீங்க.//
கொடுத்து வைச்சது ஒன்னுமே இல்ல பாஸ்.
சில இடங்களில் ரணகளமும் ஆகியிருக்கேன்.
@ஹாலிவுட்ரசிகன்
ஏன் காமெண்ட் அப்ரூவல் போட்டிருக்கீங்க?
//
ஓ..அதுவா, ஆளில்லா கடையில அனானிகள் நடனம் ஆட முயற்சிக்கிறாங்க.
@சுவடுகள்
அச்சோ... அச்சச்சோ....
வெக்கம் வெக்கமா வருதே,.......
(அடுத்து என்ன நடந்திருக்கும்? - தலைவா... யூ ஆர் கிரேட்...)
//
ரொம்ப ஓவராப் புகழாதீங்க.
நெசமாவே எனக்கு வெட்கம் வருது.
@athira
அடடா 3ம் பாகமோ? அவ்வ்வ்வ்வ்வ்:)).. நில்லுங்க பந்தி பந்தியாப் படிக்கிறேன்:))
//
அடடா..
ஒரு ஆய்வுக் கட்டுரைக்கு கிடைக்காத மறுவாதை,
இந்த மாதிரி அனுபவங்களுக்கு கிடைக்குதா.
அப்படீன்னா தொடர்ந்தும் எழுதிடுறேன்
@athira
அதெதுக்கு நிரூபனோட சேர்ற பெண்கள் எல்லோருமே காணாமல் போயிடுறாங்க? ஹையோ சின்ன வயசில சொன்னேன் அவ்வ்வ்:)).. மிகுதிக்கு பின்பு வாறேன்..
//
அது தான் எனக்கும் தெரியலையே.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@எழிலருவி
சைந்தவி ஊசி குத்தி விட்டாங்களா பாஸ்?
கழுசானுக்கு//
வெயிட் பண்ணுங்க பாஸ்.
அடுத்த பாகத்தில சொல்றேன்.
@ரெவெரி
என்னியதம் தொட்ட தேவதைகள்ன்னு வச்சிருக்கலாமோ...
தொடருங்கள் சகோதரம்...
அறியாத வயதின் அட்டகாசங்களை...
//
அப்படி ஒரு பேர் வைச்சிருக்கலாம் தான்.
ஆனால் கொஞ்சம் சுவாரஸ்யம் இல்லாம இருக்குமில்லே
@Yoga.S.FR
மாலை வணக்கம் நிரூபன்!நல்லாயிருந்திச்சு!நல்லாயிருந்திருக்கும்.பேர் எல்லாம் நல்லாயிருக்கு!குட்டிகளும்(சிறுமிகள்) நல்லாவே இருந்திருக்கும்ஹும்!!!!(நீங்கள் கொடுத்த பொறுப்பை சரிவர நிறைவேற்றி யுள்ளேன் என நினைக்கிறேன்.)
//
ரொம்ப நன்றி ஐயா
தொடர்ந்தும் தங்களால் இயன்றால் பதில் எழுதுங்கள்.
நான் பள்ளிக்கூடம் போக ஆரம்பிக்கப் போறேன்.
இனிமே அசுர வேகப் பதிவுகள் எல்லாம் வராது.
@athira
மூனூ பேர் கூடையும் நாலாவது ஆளாக உட்காரும் பாக்கியம் எனக்கு கிடைச்சது. அப்படி ஓர் வாய்ப்பு அதுவும் நாலாம் ஆண்டில் கிடைச்சா சொல்லவா வேண்டும்?//
அவ்வ்வ்வ்வ்வ்... பிஞ்சிலேயே முத்தலு:))
//
நீங்க வேற,
நம்ம ஸ்கூலில பசங்கள் எல்லோரும் போட்டி போடுவாங்க.
யார் இந்தப் பொண்ணு கூட உட்காருவது என்று.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@athira
சத்தியமா உதுக்கு அர்த்தும் உது இல்லை:))).. சும்மா கண்டபடி கற்பனையை வளர்க்கப்பூடா:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))//
எனக்கு அந்த வயசில அப்படி ஓர் அர்த்தம் தான் கிடைச்சுது.
@athira
என்னாது 10 வயசிலயேயா? முடியல்ல சாமீஈஈஈஈஈஈஈ என்னை விடுங்க நான் காசிக்குப் போறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)))//
அக்கா நம்ம கூட படிச்ச பொடியங்கள் அப்படி.
நேசரியிலையே பக்கத்தில இருக்கிற பொட்டையின் பேரைச் சொல்லி பட்டம் தெளிப்பாங்க.
அப்புறம் ஐஞ்சாம் கிளாஸ் என்றால் சொல்லவா வேணும்?
@athira
ஹா..ஹா...ஹா... அடுத்த பதிவைப் போடுங்க.. முடிவைப் பார்த்திடலாம், அவசரப்பட்டு நான் ஒண்ணும் இப்போ சொல்ல மாட்டேன்:)))
//
நன்றி அக்கா,
அடுத்த பதிவில் சந்திப்போம்.
ஷிரோமியும், நானும் நண்பர்களாக இருந்த காலத்தில் அவங்க குடும்பத்தோட யார்கிட்டேயும் சொல்லாம, எங்க ஊரை விட்டு எங்கேயோ போயிட்டாங்க. ://////
அவ்ளோ இம்சை குடுத்தியா?
ஷிரோமியும், நானும் நண்பர்களாக இருந்த காலத்தில் அவங்க குடும்பத்தோட யார்கிட்டேயும் சொல்லாம, எங்க ஊரை விட்டு எங்கேயோ போயிட்டாங்க. ://////
அவ்ளோ இம்சை குடுத்தியா?
அந்தச் சின்னவயசில் சேலை கட்டும் பொண்ணுக்கொரு வாசம் உண்டு என்ற பாடலைப் படிக்கும் போது மனதினுள் ஓர் இனம் புரியாத குறு குறுப்பினை எனக்கு கொடுத்தவங்க இந்தச் ஷிரோமி.//////
யோ, அந்த வயசுல சிரோமி சேலை கட்டுவாங்களா? நான் நினைக்கிறேன் நீ டீச்சரப் பார்த்து பாடியிருக்கே!
நிரூபன் said...
நான் பள்ளிக்கூடம் போக ஆரம்பிக்கப் போறேன்.
இனிமே அசுர வேகப் பதிவுகள் எல்லாம் வராது.///என் பிள்ளைகள் உட்பட எல்லோருக்கும் சொல்வது தான் உங்களுக்கும்!"கல்வியே கருந்தனம்"என் பிள்ளைகளுக்கு "பிச்சை புகினும் கற்கை நன்றே" என்று தான் சொல்லியிருக்கிறேன். நாம் எதற்கு வந்தோமோ அந்தக் காரியத்தை முடித்துவிட்டு,ஓய்வு நேரங்களில் பதிவுலகைக் கவனிக்கலாம்!அது எங்கும் போய்விடாது.ஆனால் கல்வி????
இளமை கால எண்ணங்கள்
என்றும் இனிமை!
என் வலையின் புதிய முகவரி;-
http://www.pulavarkural.info/2012/02/blog-post.html#comment-form
புலவர் சா இராமாநுசம்
Post a Comment