Wednesday, February 1, 2012

என்னோட பாய் பிரெண்டிற்கு அறுபது பவுண்ல தாலி கட்ட போறேன்!

ஆச்சரியமாக இருக்கா? தொடர்ந்து படியுங்கள்....
அனைவருக்கும் வணக்கமுங்க. தாய்த் தமிழகத்தின் திருச்சி மாநகரத்தின் மலைக்கோட்டை எனும் அழகிய நகரத்தில் உள்ள கல்யாண மண்டபத்த்தில் மாப்பிளைக் கோலத்தில் மணவறையில் நான் காத்திருக்கிறேன். என்னங்கடா இன்னமும் பொண்ணைக் காணவில்லையே எனும் ஏக்கம் ஒரு புறம், என் உளமும், மனமும் இன்பக் கடலில் மூழ்கப் போகிறதே எனும் ஆவல் மறுபுறம் என என் உணர்வுகள் அடிக்கடி எனக்கு ஆனந்த தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தன.மண்டபத்தின் முன்னே ஓர் அழகிய மேர்சிடஸ் கார் வந்திறங்கியது. மணப் பெண் நேமிசா என்னைத் தேடி வலது காலை எடுத்து வைத்து காரிலிருந்து இறங்கி வருவாங்க எனக் காத்திருந்த எனக்கோ அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! 
என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. மணப் பெண்ணிற்கு முன்பதாக மிலிட்டரி உடையில் கையில் ஓர் துப்பாக்கியுடன் விக்கி உலகம் வெங்கட குமார் வந்திறங்கினார். அவர் பின்னே மணப் பெண் இறங்கினா. ஆனால் பாருங்க தலையை மட்டும் ஓர் நெட்டினால் மூடியவாறு மணப் பெண் இறங்கியதால் நானும் கொஞ்சம் ஆடித் தான் போனேனுங்க. இப்போது கொஞ்சம் புரிந்து கொண்டேன். ஏதோ ஏடா கூடமான மேட்டரில கண்டிப்பாக மாட்டிக்கிட்டேன் என உணர்ந்து கொண்டேன். மணப் பெண்ணிற்கு பின்னே கையில் அருவாளுடன் நாஞ்சில் மனோ. அடப் பாவிங்களா! நீங்க எல்லோரும் என் திருமணத்திற்கு வாறீங்களா இல்லே கொல வெறியோடு என்னை வெட்டிச் சாய்க்க வாறீங்களா என நினைத்து ஏங்கிக் கொண்டிருந்த என்னுடைய ஏக்கத்திற்கு இலகுவில் விடையும் கிடைத்தது.

ஆம் மணப் பெண்ணின் நடை அழகில் சிறிது வித்தியாசம்! பொம்பிளை நடைக்குப் பதிலாக ஆம்பிளை நடை! ஆகா எனக்கு இந்தக் கலியாணம் வேணாம் எந்திருச்சு ஓடுவோம் என்றால் ஐயர் வேஷத்தில் இருந்து கலியாணத்தை நடத்துகின்ற சிபி செந்தில்குமார் தன் வேட்டிக்குப் பின் புறமிருந்து ஓர் அருவாளை எடுத்து ஓம குண்டத்திற்கு அருகே வைத்தார். "அடோய் நிரூ, உனக்கு சப்ரைஷ்ஷா இருக்கட்டுமே என்று மணப் பெண்ணை பையன் போல நடி(ட)க்க வைக்கிறாங்க. எதுக்கும் கொஞ்சம் பொறுமையாக இருடா" என என்னை நானே தேற்றிக் கொண்டேன். மணப் பெண்ணை வரவேற்று கையில் ஆரத்தி எடுத்தவாறு பந்தலின் ஓரத்தில் இருந்த தின் பண்டங்கள் மேல் தன் கடைக்கண் பார்வையை செலுத்திக் கொண்டிருந்தார் நாய் நக்ஸ். 

அண்ணே! நான் ஆம்பிளைக் கலியாணத்திற்கு வரலையே! என்னோட பேரன்ஸ் எல்லோருமே எனக்கு ஒரு பொண்ணை பார்த்து கலியாணம் பேசி, இன்னைக்கு உன் வாழ்க்கையிலே சந்தோசமான நாள் நடக்கும் அப்படீன்னு பேசித் தானே இங்கே அழைத்து வந்தாங்க. நீங்க என்னா பண்றீங்க. எனக்கு சங்கடமான நாளை அல்லவா கொடுக்கிறீங்க! இப்படிப் பேசிக்கிட்டிருக்கும் போது மணப் பெண் கோலத்தில் நின்றவர் தன் முகத் திரையினை விலக்கி; "அடோய் மச்சி நிரூ! ஐ லவ்யூ!" என்று சொன்னார் பாருங்க! பக்கத்தில இருக்கிற தேங்காயை எடுத்து ஒரே அடியா இவனோட மண்டையில அடிச்சு கொல்லனும் போலத் தோணிச்சுதுங்க. அப்போது நாஞ்சில் மனோவும், விக்கியும் சொன்னாங்க. 

"மவனே நீங்க ரெண்டு பேரும் ஒரு பால் ஆளுங்க என்று ஊரெல்லாம் பேசிக்கிறாங்க. அதால நிரூ நீ ஒரு பொண்ணை கலியாணம் கட்டிப் புட்டு கள்ளத் தொடர்பை இந்த நாசமாப் போன ஐடியாமணிக்கிட்ட வைச்சுக்கிட்டா அந்தப் பொண்ணோட வாழ்க்கை என்னாகும்? நாம எல்லோரும் பேசி ஒரு தீர்க்கமான முடிவிற்கு வந்திருக்கோம். இந்தக் கலியாணத்திற்கு நீ மட்டும் மறுப்புச் சொன்னாய் உன்னோடை தலையை சீவிடுவோம்" அப்படீன்னு அருவாளில் ஓர் விரலை தொட்டு தன் நாக்கில் வைத்துக் காட்டினார் மனோ. ஆகா! ப்ளாக்கில சும்மா மச்சி அப்படீன்னு சொல்றது, அவன் என் கூட சின்ன வயசில அறிமுகமானவன் என்பதால. ஆனா நீங்க எல்லோரும் நாம ரெண்டு பேரும் வாழ்க்கையிலையும் சேர்ந்து வாழனும் அப்படீன்னு நெனைச்சு ஓர் மார்க்கமான முடிவு எடுத்திட்டீங்களே! பாவிங்களா! நான் என்ன பண்ணுவேன் அப்படீன்னு அழ, எனக்கு முன்னாடி ஒருத்தர் வந்தார் பாருங்க!
"நான் யாருன்னு தெரியுதா! நான் தான் வீடு சுரேஷ்குமார்! மவனே நீ மட்டும் இவனை கலியாணம் பண்ணிக்க சம்மதிக்கலை. இன்று முதல் நீங்க ரெண்டு பேரும் ஓரினச்சேர்க்கைகாரங்க என்று கிராபிக்ஸ் போட்டோ டிசைன் பண்ணி உலகம் பூரா உலவ விட்டிருவேன். ஜாக்கிரதை!" அப்படீன்னு மிரட்டினாரு. மணவறைக் கோலத்தில் மனதில் குழப்பத்துடன் நான். மனதில் மகிழ்ச்சியுடன் ஐடியா மணி! நமக்கு கொஞ்ச தூரம் தள்ளி, கருணும், தமிழ்வாசி பிரகாஷும் பேசிக் கொண்டிருந்தாங்க.கருண் சார்,நீங்க நினைக்கிறதெல்லாம் இனிமே நடக்காதுங்க. நீங்க என்னமோ ப்ளான் பண்ணினீங்க. ஆனால் அதெல்லாம் நடக்க நான் விடமாட்டேன் அப்படீன்னு தமிழ்வாசி சொன்னவுடன், கருண் ஆச்சரியத்துடன் நான் ஒன்னுமே நினைக்கலையே! நீங்க என்ன பேசுறீங்க பிரகாஷ் என்றார்.

அடப் பாவி! என் கண்ணுக்கு முன்னாடி மணப் பந்தலில இருக்கிற சாக்கிலேட் கிப்டை நான் சுட்டது கூட தெரியாம; நீ ஆட்டயப் போடலாம்னு யோசிக்கிறியே ராஸ்கல்! பிச்சுப்புடுவேன் பிச்சு! நீ ரொம்ப லேட்டு மச்சி! அதான் படைக்குப் பிந்தினாலும், பந்திக்கு முந்துங்க அப்படீன்னு வாசலில ஒரு போர்ட்டு வைச்சிருக்காங்க இல்லே! கலியாண வீடு முடிய முன்னாடி எல்லாத்தையும் காலி பண்ணிடலாம் என்று நான் ஆல்ரெடி ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டேன்" அப்படீன்னு சொன்னாரு தமிழ்வாசி. இடையில் புகுந்த ஆப்பிசர், என்னது "நீங்களும் மச்சின்னு பேசிக்கிறீங்களா? விக்கி, மனோ ஓடிவாங்க. இங்கே அடுத்த ஜோடி ரெடி" அப்படீன்னு பேசத் தொடங்கிய ஆப்பிசரின் வாயினுள் அருகே இருந்த வடை ஒன்றைத் திணித்து அடக்கினார் பிரகாஷ்.

ஆகா...மண்டபத்தில கலப்படம் நிறைஞ்ச உணவுகள் அதிகமாக இருக்கு போல". கார வடை உறைக்குமில்லே. ஆனால் இந்த கார வடை பூந்தி லட்டுப் போல இனிக்கிறதே. அடப் பாவிங்களா! வடைக்குள் பூந்தி லட்டை கலப்படம் செஞ்சு ஒரு கலியாண வீட்டில கூட என்னை சந்தோசமா இருக்க வுடமா உணவு கலப்படத்தை டெஸ்ட்டு பண்ண வைச்சிட்டீங்களே" அப்படீன்னு வருத்தப்பட்டாரு ஆப்பிசர்! மண்டபத்திற்கு கொஞ்சம் ஓரமாக வந்தேமாதரம் சசி! கையில் கமெராவுடனும், மடியில் கம்பியூட்டருடனும் இருந்தார். சசிக்கு அருகே சென்ற பன்னிக்குட்டி என்னா சசி பண்றீங்க. என்னா மேட்டரு அப்படீன்னு கேட்கவும், இந்த நாசமாப் போன நரிங்க கலியாணத்தை உலகளவில் எல்லோரும் பார்க்கும் வண்ணம் நேரஞ்சல் செய்றேன் அப்படீன்னு சொன்னாரு. 

பன்னிக்குட்டியரும் வீடியோவை ஒருவாட்டி பார்க்கலாமா என்று யோசித்தவாறு, வீடியோவை தட்டிப் பார்த்தாரு! அடப் பாவி சசி! நீ மணவறையை வீடியோ புடிக்கிறதுக்கு பதிலாக மணப் பந்தலில் இருக்கிற சென்னி மலை அழகனை இல்லே வீடியோப் புடிக்கிறாய்.இதனை மணமகனுங்க ரெண்டு பேரும் பார்த்தா கோவிச்சுக்கப் போறாங்க. முகூர்த்த நேரம் நெருங்கிட்டுது. ஆப்பிசர், நாய் நக்ஸ், நாஞ்சில் மனோ எல்லோரும் வாங்க.தாலியை தூக்கிட்டு வருவோம் அப்படீன்னு ஐஞ்சு பேரு கிளம்பினாங்க. "யோ...எல்லா கலியாணத்திலையும் ஒருத்தர் தானே தாலியை தூக்கிட்டு வருவாங்க. நீங்க என்னங்கடா ஐஞ்சு பேரு போறீங்க?” அப்படீன்னு கத்திய ஐடியா மணியைப் பார்த்து பொறுமை மணி சார்! பொறுமை!

வளர்ந்து வரும் தாலி கலாச்சாரத்தின் அடிப்படையில் இப்போ வயசிற்கு ஒரு பவுண் தாலின்னு ஆகிடுச்சில்லே. அதால அறுபது வயது கிழவன் உனக்கு ஆறு பவுணிலையா தாலி கட்டுவாங்க? அப்படீன்னு பேசியவாறு ஆளை விடப் பெரிய தாலி கொண்டு வந்தாங்க ஐவரும். பன்னிக்குட்டி இது நல்லா இல்லே! என்னை விடப் பெரிய தாலியை கொண்டு வந்து ஐடியா மணி கழுத்தில கட்டச் சொல்லியிருக்கிறீங்க. இது அநியாயம்! அக்கிரமம்! என்னை அவமானப்படுத்தும் செயல்! அப்படீன்னு புலம்பிய என் கழுத்து மேல கத்தியை வைச்சு நான் உன் கூட இருக்கேன் அப்படீங்கிறதை மறுபடியும் நினைவுபடுத்தினாரு மனோ. 

"யோ....பாவிங்களா! 20+ வயது இளைஞனை அறுபது + ஆண்டிக்கு (பழநி ஆண்டி)கலியாணம் செஞ்சு வைக்க நினைக்கிறீங்களே! இது நியாயமா? எனக் கேட்டவாறு நான் கட்டமாட்டேன்! நான் ஐடியா மணி கழுத்தில தாலி கட்ட மாட்டேன் என அலறிய என் அருகே வந்து Are you all right? என விசாரித்தார் சிங்கப்பூர் விமானப் பணிப் பெண்.

சிங்கப்பூர் விமானம் இன்னும் சில நிமிடங்களில் சென்னை மீனம்பாக்கம் எயார்ப்போட்டினை நெருங்கும் என விமானத்தின் கேப்டன் அறிவித்துக் கொண்டார். என்னை நானே கிள்ளிப் பார்த்தேன்! அடக் கனவில எனக்கு கலியாணம் பண்ணி வைச்சிட்டாங்களே இந்தப் பாவிங்க எனச் சிரித்துக் கொண்டேன். பதிவர் சந்திப்பிற்கு விமானத்தில் வரும் வழியிலே இப்படிப் பல்பு கிடைக்குதுன்னா, பதிவர் சந்திப்பிற்கு போயிட்டா எம்புட்டு பல்பு கிடைக்கும் என யோசித்துக் கொண்டிருந்த என் தோளைத் தட்டி, We are in Chennai எனச் சொன்னார் சிங்கப்பூர் எயார்லைன்ஸ் பணிப் பெண்! 

பிற் சேர்க்கை: இப் பதிவில் ஒரு சிறுதுளி உள்குத்தும் இல்லை!
****************************************************************************************************************************
இப் பதிவினூடாக சாதாரணமானவளின் வலைப் பூவிற்கும் ஒருவாட்டி சென்று வருவோமா?சமூகத்தின் மீதான பார்வையினை "சாதாரணமானவள்" என்ற வலைப் பூவினூடாக எழுதி வருகின்றார் பதிவர் சாதாரணமானவள் அவர்கள். இவ் வலைப் பூவில் வாசகர்களாகிய உங்களுக்கு விருந்தளிக்கப் பல சுவாரஸ்யமான விடயங்கள் காத்திருக்கின்றன. ஓய்வாக இருக்கும் போது, நீங்களும் இந்த வலைப் பூவிற்கு சென்று வரலாம் அல்லவா?
****************************************************************************************************************************

18 Comments:

Unknown said...
Best Blogger Tips

கனவுல பஸ்ட் நைட் நடந்துதாய்யா..?
தம்பி நீ...இதுக்கு உள்குத்தே போட்டிருக்கலாம் ஹிஹி

நிரூபன் said...
Best Blogger Tips

@veedu

கனவுல பஸ்ட் நைட் நடந்துதாய்யா..?
தம்பி நீ...இதுக்கு உள்குத்தே போட்டிருக்கலாம் ஹிஹி
//

ஹி...ஹி..
வருக வருக அண்ணர்.
கனவுல கலியாணம் தானே நடந்திச்சு,
பஸ்ட் நைட் ஏதும் நடக்கலைன்னு சொல்லியிருக்கேனே..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

நண்பர்களே, மற்றும் வாசகர்களே,

அவசர வேலையாக வெளியே போகிறேன்.

யோகா ஐயாவிடம் ப்ளாக்கினை அடமானம் வைத்து விட்டு செல்கிறேன்.

ஐயா இன்று முதல் ப்ளாக்கின் பின்னூட்டங்களுக்கான பொறுப்பினை ஏற்றுக் கொள்வார் எனும் அன்பு அறிவித்தலையும் இத்தால் சகலருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி,
வணக்கம்.

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

பிற் சேர்க்கை: இப் பதிவில் ஒரு சிறுதுளி உள்குத்தும் இல்லை!////

இதுல உள்குத்து ஒன்னும் இல்லைன்னா, பல துளி வெளிக்குத்து இருக்கா?

Anonymous said...
Best Blogger Tips

உமக்கு சரியான ஆள் நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என வாதிட்ட பெருமகனார் தான். வரும் பதிவுகளில் உமது பதிவுகளை ஓட ஓட விரட்ட போகிறார் பாரும். (எனக்கு மட்டும் உள்குத்து வராதா என்ன)

சசிகுமார் said...
Best Blogger Tips

யாரு அழகா இருக்காங்களோ அவுங்கள தானே படம் பிடிப்பாங்க.... மந்திரம் சொல்லும் போது கூட அந்த கண்ணாடிய கழட்ட மாட்டேங்குறார் சிபி... ஹீ ஹீ

நிரூபன் said...
Best Blogger Tips

@தமிழ்வாசி பிரகாஷ்

இதுல உள்குத்து ஒன்னும் இல்லைன்னா, பல துளி வெளிக்குத்து இருக்கா?
//

அடப் பாவிங்களா.
இதில வெளிக்குத்தும் இல்லைன்னு சொல்லியா தெரியனும்!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆரூர் மூனா செந்தில்
உமக்கு சரியான ஆள் நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என வாதிட்ட பெருமகனார் தான். வரும் பதிவுகளில் உமது பதிவுகளை ஓட ஓட விரட்ட போகிறார் பாரும். (எனக்கு மட்டும் உள்குத்து வராதா என்ன)//

இப்போ நீர் எதுக்கு சம்பந்தமே இல்லாம இங்கே நின்னு புலம்புறீர்?

அதான் ஆல்ரெடி இன்னோர் வலைப் பதிவில் சும்மா சகட்டு மேனிக்கு எழுதுறீங்க அப்படீன்னு தெரிஞ்சு போச்சே!

இங்கே நான் என் நண்பர்களைப் பத்தி எழுதியிருக்கேன்.

இங்கே ஒரு உள்குத்தும் இல்லை! வெளிக்குத்தும் இல்லை! சும்மா போங்க!

நிரூபன் said...
Best Blogger Tips

@சசிகுமார்

யாரு அழகா இருக்காங்களோ அவுங்கள தானே படம் பிடிப்பாங்க.... மந்திரம் சொல்லும் போது கூட அந்த கண்ணாடிய கழட்ட மாட்டேங்குறார் சிபி... ஹீ ஹீ
//

அடடா..
இதுக்கு பின்னாடி இப்படி ஒரு மேட்டர் வேற இருக்கா.

Yoga.S. said...
Best Blogger Tips

ESCAPE!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

அந்தத் திருமணக் காட்சியை கற்பனை பண்னிப் பார்த்தாலே சிரிப்பு வருகிறது.சிபி ஐயர் சூப்பர்!

கேரளாக்காரன் said...
Best Blogger Tips

All allakkais hands up #pannikutty annan style

Yoga.S. said...
Best Blogger Tips

சென்னை பித்தன் said...

அந்தத் திருமணக் காட்சியை கற்பனை பண்னிப் பார்த்தாலே சிரிப்பு வருகிறது.சிபி ஐயர் சூப்பர்!///நன்றி ஐயா,வருகைக்கும் கருத்துக்கும்!சி.பி யின் பொங்கல் தினப் பதிவு பார்த்தீர்களோ?அப்ப கூட கண்ணாடி............ஹ!ஹ!ஹா!!!!

Yoga.S. said...
Best Blogger Tips

மௌனகுரு said...

All allakkais hands up #pannikutty annan style/////வாங்க மௌனகுரு சார்!அதே!!!!!!!

இந்திரா said...
Best Blogger Tips

பதிவர் சந்திப்புக்குப் போனீங்களா இல்லையா??

ad said...
Best Blogger Tips

இப்புடியெல்லாமா கனவு வருது? எதுக்கும் நாம ஜாக்கிரதையா இருக்கணும்யா.

Yoga.S. said...
Best Blogger Tips

இந்திரா said...

பதிவர் சந்திப்புக்குப் போனீங்களா இல்லையா??///வணக்கம் இந்திரா!போனேன்,கனவுல,அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்!!!!!!!!!!

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

கற்பனையில் நினைத்துப் பார்க்க சிரிப்பு சிரிப்பா வருது. நல்ல கற்பனை.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails