Thursday, December 22, 2011

Catch 44 - ஹாலிவூட் - ஆக்‌ஷன் - திரிலிங் திரை விமர்சனம்!

அழகுப் பெண்களின் அதிரடி ஆக்சன் - துப்பாக்கி முனை துணிகர கொள்ளை! 
மக்களின் பொழுது போக்கு அம்சங்களோடு இரண்டறக் கலந்த விடயமாகச் சினிமா இன்று மாறி விட்டது. கதையம்சம் உள்ள படங்களினை விட வணிக நோக்கில் மசாலாத் தன்மையுடன் கூடியதாகத் தயாரிக்கப்படும் படங்களுக்குத் தான் உலகளவில் இன்று சிறந்த சந்தை வாய்ப்பும் கிடைக்கின்றது. ஆங்கிலத் திரைப் படங்கள் - உலகத் திரைப் படங்களின் நிலையினை இந்த சந்தை வாய்ப்பின் அடிப்படையில் நோக்கும் போது ஒவ்வோர் படத்திலும் புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்துவதிலும், வித்தியாசமான கதைக் களங்கள் கொண்ட படங்களை உலக ரசிகர்களுக்குக் கொடுப்பதிலும் உலக சினிமாவிற்கு நிகர் உலக சினிமா தான்.
ஆக்‌ஷன் திரிலிங் படங்களின் இயல்புகளிற்கு அமைவாக நாம் அதிகளவான படங்களில் ஆண்களைத் தான் துடிப்பான தைரியம் மிக்க கதாநாயகான காட்சிப்படுத்தியிருப்பதனைப் பார்த்து மகிழ்ந்திருப்போம்.இந்தப் படம் கொஞ்சம் வித்தியாசமானது.வழமையான (ஆக்‌ஷன்)அதிரடிப் படங்களிலிருந்தும் சற்று விலகி மூன்று அழகுச் சிலைகள் Bruce Wills (இப் படத்தின் பிரதான வில்லன்) இற்காக ஒப்பந்த அடிப்படையில் நிகழ்த்தும் துப்பாக்கி முனைக் கொள்ளைச் சம்பவங்கள் பற்றிப் பேசுகின்றது இவ் வருடம் வெளியாகிருக்கும் Catch 44 எனப்படும் ஹாலிவூட் படம். இன்னோர் வகையில் சொன்னால் மூன்று இளம் பெண்கள் ஒன்றாகச் சேர்ந்து தமது வருமானத்திற்காகவும், சந்தோசத்திற்காகவும் கொள்ளையிலும், துப்பாக்கி முனைத் துணிகரத் திருட்டுச் சம்பவங்களிலும் ஈடுபடும் விடயங்களை உள்ளடக்கிய ஒரு நடுத்தர பட்ஜெட் படம் தான் இந்த Catch 44. 

துப்பாக்கி பற்றியோ, போலீஸ் பற்றியோ அச்சம் கொள்ளாது துணிகரக் கொள்ளைச் சம்பவங்களிலும், கடத்தல்களில் ஈடுபடுவதற்காகத் தம்மைத் தயார்படுத்தும் பெண்கள், காட்டு வழியினூடாக செல்லும் போது போலீஸ் என நினைத்து போலிப் போலீஸிடம் மாட்டிக் கொள்கிறார்கள். இந்த வேளையில் வரும் காட்சிகளும், போலி போலீஸாக காட்டுப் பாதையில் கொள்ளையில் ஈடுபடும் வில்லனான Forest Whitaker இன் நடிப்பும் மிக மிக காமெடியாக இருக்கும்.  இப் படத்தின் நாயகிகளான Malin Akerman, Deborah Ann woll, Nikki Reed ஆகியோரின் உடல் அழகினை வர்ணிப்பதும், இரட்டை அர்த்தம் கலந்து காட்டுப் பாதையில் அவர்களின் காரினை வழி மறித்து பேசி கட்டிப் பிடித்து நடனமாட வருமாறு அழைப்பதும் மிக மிக நகைச்சுவைக்குரிய விடயங்களாகும். 

ப்ளாஷ்பேக் அடிப்படையில் நகரும் கதை. ஒவ்வோர் கொலை, ஒவ்வோர் அதிரடித் திருப்பங்கள் இடம் பெற்ற பின்னரும், அச் சம்பவத்திற்கான காரணம் என்ன என அறியும் நோக்கில் படத்தின் கதையினை நகர்த்தியிருப்பது படத்தில் விறு விறுப்பிற்கு பஞ்சம் இல்லை எனும் நிலையினைக் கொடுத்திருக்கிறது. படத்தின் இறுதி நேரக் காட்சிகளை விறு விறுப்பாக அமைத்திருக்கிறார்கள்.கொள்ளையில் ஈடுபடும் நோக்கில் தாக்குதல் நடவடிக்கையினை மூன்று பெண்களும் மேற் கொள்ளும் வேளையில் இருவர் மட்டும் இறந்து விட ஒருவர் மாத்திரம் தப்புகின்றார். அவர் தான் நாயகி Malin Akerman அவர்கள். இறுதியில் தமது கொள்ளைக் குழுத் தலைவனுக்கு கீழே வேலை செய்யும் நபருடனும், போலிப் போலீஸுடனும் துப்பாக்கி முனையில் டீலிங் பேசிக் கொண்டிருக்கும் காட்சிகள் விறுப்பு நிறைந்தவையாக இருக்கிறது. 
கொலைகளும், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் என நகரும் இப் படத்தில் யார் தப்பினார்கள்? யார் மொத்தப் பணத்தையும் தம் வசப்படுத்தி கொள்ளையில் ஜெயித்தார்கள் எனும் விடயங்களை நீங்கள் திரைப் படத்தைப் பார்ப்பதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். இப் படத்தினை Aaron Harvey அவர்கள் இயக்கியிருக்கிறார். சண்டைக் காட்சிகளின் பின்னணியில் பணம் மீதான மனிதனது ஆசையினை விளக்கும் வகையில் அருமையான பாடல்களை மென்மையான இசையுடன் சேர்த்து இணைத்திருக்கிறார்கள். ஒளிப் பதிவு, படத்தின் கதை நகர்வு ஆகியவை அருமையாக இருக்கிறது. 

துப்பாக்கி முனையில் நீயாயா நானா முதலில் சுடுவது என பேரம் பேசிக் கொண்டிருக்கும் போது போலிப் பொலிஸ்; நாயகி மீது தான் காதல் கொண்டிருப்பதாக கூறி அவள் அழகினை வர்ணிப்பதும், நாயகியோ தன் உயிர் போனாலும் உன்னைப் போல் ஒரு வயதான ஒருவனைத் திருமணம் புரிய மாட்டேன் எனக் கூறுவதும் ரணகளத்திலும் ஒரு கிளு கிளுப்பினை ஏற்படுத்தும் காட்சியாக மலர்ந்திருக்கிறது.கொலை செய்வது கூடச் சந்தோசத்திற்காக எனச் சொல்லிக் கொலை முயற்சிகளில் ஈடுபடும் அழகுச் சிலைகளின் அதிரடிக் காட்சிகளை உள்ளடக்கிய இப் படத்தினை நேரம் இருக்கையில் நீங்களும் பார்த்து மகிழலாம் அல்லவா?



Catch 44: அழகுச் சிலைகளின் அதிரடி ஆக்‌ஷன் திருவிழா!

அன்பிற்கினிய உறவுகளே! உங்கள் அனைவருக்கும் உளம் கனிந்த இனிய நத்தார் மற்றும் புது வருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்! பிறக்கப் போகும் இந்தப் புதிய ஆண்டில் எமைச் சூழ்ந்த தொல்லைகள் யாவும் விலகி வல்லமையுடன் தமிழன் வாழ்வு சிறக்க வாழ்த்துவோம் வாரீர்! 

21 Comments:

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

மொத ஆடியன்ஸ்

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

>>போலிப் போலீஸ் நாயகி மீது தான் காதல் கொண்டிருப்பதாக கூறி அவள் அழகினை வர்ணிப்பதும், நாயகியோ தன் உயிர் போனாலும் உன்னைப் போல் ஒரு வயதான ஒருவனைத் திருமணம் புரிய மாட்டேன் எனக் கூறுவதும் ரணகளத்திலும் ஒரு கிளு கிளுப்பினை ஏற்படுத்தும் காட்சியாக மலர்ந்திருக்கிறது

hi hi ஹி ஹி ஹி , நிரூபன்க்கு கிளுகிளுப்பு சேர்க்காம எழுதவே வராதே

Unknown said...
Best Blogger Tips

ஹிஹி இப்படியான ரணகளத்தில் கிளுகிளுப்பு இங்கிலீஸ் படங்களில் தான் வரும் பாஸ்!!!
ஹிஹி சி பி கிளு கிளுப்பை பற்றி பேசுகிறாரா?அடிங்.....

ஆகுலன் said...
Best Blogger Tips

என்னது மூன்று பெண்களா...

Mathuran said...
Best Blogger Tips

இப்படி மூன்று கதாநாயகிகளின் படங்கள் சில பார்த்திருக்கிறேன். பெயர் ஞாபகம் இல்லை.. செம செம கிளுகிளுப்பு..

Mathuran said...
Best Blogger Tips

விமர்சனம் நல்லா இருக்கு பாஸ்.. ஆனா படம் பார்க்க நேரம் இல்லையே..

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

மாப்ளே, அருமையா இருக்கு... விமர்சனம்... ட்ரைலர் மட்டுமே பார்க்க டைம் இருந்துச்சு......


வாசிக்க:
முல்லைப்பெரியாருக்கு ஆதரவாக மதுரையில் கடைகள் முழுஅடைப்பு, ஆட்டோக்கள் ஓடவில்லை.

Unknown said...
Best Blogger Tips

சிபி ஆன்மிக கட்டுரை எழுதிருக்கிறாராமா......அதுக்காக ஒரேயடியா...இப்படியா...கிளுகிளுப்பை கத்துக்கிறதே..உங்ககிட்டதானே..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Unknown said...
Best Blogger Tips

பிரியா இருக்கும் போது பார்க்கிறோம் பகிர்வுக்கு நன்றி நிரூபன்...விமர்சனமே கிளுகிளுப்பா இருக்கு...!


இன்று என் வலையில் படிக்க

அரசியலில் சேர்ந்த பிரபல பதிவர் பதிவுலகமே அதிர்ச்சி..!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
Best Blogger Tips

பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.

K.s.s.Rajh said...
Best Blogger Tips

விமர்சனம் அருமை படத்தை பார்த்திட்டால் போச்சு

கார்த்தி said...
Best Blogger Tips

உங்களுக்கும் இனிய நத்தார் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இப்ப துரை தமிழ் படத்தவிட்டு ஆங்கில படம்தான் பாக்குது போல?

K.s.s.Rajh said...
Best Blogger Tips

விமர்சனம் அருமை படம் பார்த்திட்டால் போச்சு

Unknown said...
Best Blogger Tips

மாப்ள வகைப்படுத்தியது அருமை..படம் பாக்க லின்க் கொடுத்து இருக்கீங்க நன்றி!

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

ஆஹா அருமையா லிங்க் கொடுத்துட்டீங்க நேரம் கிட்டும் போது பார்க்கிறேன்.

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

நல்ல விமரிசனம்.
ஈழவயல் அறிமுகத்துக்கு நன்றி!

ad said...
Best Blogger Tips

படம் பார்க்கவில்லை.விவரணம் நன்றாக இருக்கு.படம் பார்த்தால் அதுக்கப்புறமாஅ வந்து மீண்டும் சந்திக்கிறேன்.

M.R said...
Best Blogger Tips

படம் பற்றிய தங்கள் கருத்து அருமை
படம் பார்க்கிறேன்

த.ம 9

மற்றவையும்

சுதா SJ said...
Best Blogger Tips

பாஸ் தொடர் பதிவுகள் போட்டவடியே இப்படி படமும் பார்க்க எப்படி உங்களுக்கு நேரம் கிடைக்குது.... பொறாமையா இருக்குப்பா

சுதா SJ said...
Best Blogger Tips

விமர்சனம் சூப்பர்..... லிங்கை எடுத்து வைக்கிறேன்.... முடியும் போது பார்க்கிறேனே..... ஹா ஹா

Thava said...
Best Blogger Tips

நல்ல விமர்சனம்..கூடிய விரவில் பார்க்க வேண்டும்..

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails