சொல்லுக்கு முன்னே செயல் இருக்க வேண்டும் என்பது வாழ்வில் தடம் பதித்த பெரியோர்களின் அனுபவ வெளிப்பாடாகும். ஆனால் எம் தமிழர்களில் அதிகளவானோர் வெறும் காகிதப் போர் வீரர்களாகவும், வாய் சொல்லில் வீர முழக்கமிடும் அறிக்கை மன்னர்களாகவும் இருப்பது வேதனையளிக்கிறது. தமிழர்களின் தலையில் மிளகாய் அரைக்கும் நோக்கில் மலையாளத் திரைப்பட இயக்குனர் சோஹன்ரோய் அவர்கள் அடங்கிக் கிடந்த அணைக்கட்டு விவகாரத்தினை தன் படத்தினூடாக மீண்டும் புத்தியிர் பெறச் செய்திருக்கும் இவ் வேளையில் எம் தமிழ் தலை முறையில் சிலரோ வாய் சொல்லில் வீர முழக்கமிடுகின்றார்கள்.
”பூனைக்கு விளையாட்டு! ஆனால் சுண்டெலிக்குச் சீவன் போகும்” என்பது போல ஒரு பக்கம் எம் உறவுகள் தமிழக கேரள எல்லையில் துடித்துக் கொண்டிருக்கையில், இந்தப் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைத்து உறுதியான தீர்மானங்களின் ஊடாக இனிமேலும் எதிர் காலத்தில் அணைக்கட்டு விவகாரம் பூதாகரமாகக் கிளம்பாமலிருப்பதற்கான செயற்பாடுகளை மேற் கொள்ள வேண்டிய நேரத்தில் காகிதத்தில் அறிக்கை விட்டு தம்மைத் தாமே வீரர்கள் எனச் சொல்லி மகிழ்கிறது எம் தமிழ்ச் சமூகம். இதுவா தமிழனின் வீரம்? அண்மைக் காலமாக வரும் இணையத் தளச் செய்திகளைப் படிக்கையில் மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.
அப்பாவி விவசாய மக்களை நாமெல்லாம் உசுப்பேத்தி உரிமையினைப் பெறுவதற்காக கேரள எல்லையில் போராடுங்கள் என்று சொல்லி விட்டு வேடிக்கை பார்க்கின்றோம். தினந் தோறும் இப் பிரச்சினையில் இறக்கப் போவது எம் உறவுகள் தானே. இந்தப் பிரச்சினைக்காக அற வழியில் தீர்வு கண்டிடும் நோக்கில் டில்லியில் உள்ள தலமைப் பாராளுமன்றம் அலது சட்ட மன்றத்திற்கு முன்பாகப் போராட்டம் நிகழ்த்தி மந்திரிகளின் மனதிற்கு எம் உரிமைப் பிரச்சினையை எட்டச் செய்வதற்கு வழிகள் இருக்கும் போது நாமோ அறிக்கை விட்டு, தமிழர் வீரம் காகிதத்தின் மூலம் நிலைக்கப் போகின்றது என குரல் கொடுக்கின்றோம்! இது தகுமா உறவுகளே!
கேரள எல்லையில் தமிழர்கள் உயிரிழந்தால் கனடாவில் உள்ள மூன்று இலட்சம் தமிழர்களும் படையெடுப்பார்களாம்.நேற்றைய தினம் கனடாவிலிருந்து வெளியான அறிக்கை. இது ரொம்ப காமெடியாக இல்லையா. அட சொந்த நாட்டில் பிரச்சினை நடக்கும் போதே ஈழப் பக்கம் போவதற்கு அஞ்சிய நாமெல்லோரும், இன்று தமிழகத்தில் பிரச்சினை என்றதும் விமானத்தில் ரிக்கட் பதிவு செய்து புறப் படப் போகிறோமாம். என்ன காமெடி இது. இப்படிப் பல அறிக்கைகள். மலையாளிகள் தலை சிதறும். தமிழர்கள் நினைத்தால் கேரளத்தினையே பூண்டோடு அழிவார்கள். இந்தியா இரண்டாக உடையும்...இப்படிச் சொல்லிச் சொல்லியே காலத்தை கழிப்பதா தமிழனின் வீரத்திற்கு அழகு?
இன்னும் சிலர் ஒரு படி மேலே போய், கேரள மக்களை விரட்டுவோம், கொல்லுவோம் என்று அறிக்கை விட்டு தம் வீரத்தினை பத்திரிகையில் நிலை நாட்ட முனைகிறார்கள். இதற்கு கலைஞர் கருணாநிதி கூட விதி விலக்கில்லை. இன்றைய சூழ் நிலையில் இதுவா முக்கியம்? மலையாள மக்கள் தரப்பு பிரநிதிகள் ஊடாக பேச்சுவார்த்தை முறையில் எல்லையில் உள்ள மக்களின் தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான வழிகளை எட்ட வேண்டும்.அதே போன்று மலையாள மக்கள் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள வன் முறைகளை எதிர் கொள்வதற்கான சூழலினை நாம் உருவாக்க வேண்டும். எம் மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்குரிய வழிகளை நாம் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தின் ஊடாக எம் உறவுகளிடம் கொண்டு செல்ல வேண்டும்.
தருமத்தின் பக்கம் எப்போதும் தாழ்ந்து போகாது என்பதற்கு எடுத்துக் காட்டாக அண்மையில் உச்ச நீதிமன்றம் கேரளத்தின் உச்சியில் அடி கொடுத்திருக்கிறது. இது போல பழமை வாய்ந்த அணைக்கட்டின் ஊடாகப் பயனைப் பெற்றுக் கொள்வதற்கான சமனான உரிமை தமிழர்களுக்கும் உண்டென்பதை நாம் கேரளத்திற்குப் புரிய வைத்து சட்ட ரீதியில் இவ் உரிமையினைப் பெறுவதற்கான வழிகளை நாட வேண்டும். ஒவ்வோர் பிரதேசங்களிலும் உள்ள அரசியல் வாதிகளுக்கும் அழுத்தம் கொடுத்து தமிழக மக்களின் உணர்வு சார்ந்த விடயங்களை மத்திய அரசு புரிந்து கொண்டு நடப்பதற்கு ஏதுவாக எம் செயற்பாடுகளை நாம் வலுப்படுத்த வேண்டும்!
முல்லை பெரியாறு விவகாரத்தால் இருப்பிடங்களை விட்டு குடி பெயர்ந்த மக்கள்! |
நாம் தான் காகிதத்தில் போர் செய்கின்றோம் என்றால், எம் இன்னோர் தலை முறையினையும் காகிதத்தில் போர் செய்யும் போர் வாள்களாகவா மாற்ற நினைக்கிறோம்! எம் வருங் காலச் சந்ததியினையாவது வளமான சந்ததியாக மாற்றிட நாம் வலுவான நடவடிக்கைகளை எடுக்கலாம் அல்லவா? தமிழர்கள் தம் உணர்வுகளை வெளிப்படுத்துவது தவறல்ல. எம் தலை முறையும் இதே போன்று காகிதப் போரில் சிக்கி எம் உரிமைகளைச் சோரம் போகச் செய்யுமளவிற்கு வளரா வண்ணம் எம் உணர்வுகளை நாம் வெளிப்படுத்தலாம் அல்லவா! எம்மைப் போல் ஆதரவு அற்றவர்களாக தமிழக உறவுகளையும் காகிதப் போர் புரிந்து நாம் மாற்றப் போகிறோமா உறவுகளே!
அன்பிற்கினிய உறவுகளே! உங்கள் அனைவருக்கும் உளம் கனிந்த இனிய நத்தார் மற்றும் புதுவருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்! பிறக்கப் போகும் இந்தப் புதிய ஆண்டில் எமைச் சூழ்ந்த தொல்லைகள் யாவும் விலகி வல்லமையுடன் தமிழன் வாழ்வு சிறக்க வாழ்த்துவோம் வாரீர்!
பிற் சேர்க்கை: இக் கட்டுரையில் உள்ள கருத்துக்களை மீள் பரிசீலனை செய்த வீடு சுரேஸ்குமார் அண்ணருக்கும், நாஞ்சில் மனோ அண்ணருக்கும் என் உளமார்ந்த நன்றிகளை உங்களுடன் இணைந்து நானும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இப் பதிவிற்கான படங்கள் கூகிள் தேடல் மூலம் பெறப்பட்டவை.
|
19 Comments:
வணக்கம் அண்ணா.
எனது பதிவைப்பற்றி அறிமுகம் செய்ததற்கு முதலில் நன்றி.
நிரூ.. காலாதிகாலமாக எங்கள் வீரம் காகிதத்தில் மாத்திரம்தானே இருக்கிறது..
தமிழர்களை வழிநடத்துபவர்கள்கூட ஒழுங்காக அமைவதில்லை ( ஒருவர் விதிவிலக்கு)
மத்திய அரசு ஈழத்திலும் சரி,கூடங்குளத்திலும் சரி,இப்போது அணை விவகாராத்திலும் சரி,.. தமிழர்விரோதப்போக்கிலேயே செயற்பட்டுக்கொண்டிருப்பதாக தெரிகிறது.
அது என்னதான் செயற்பட்டாலும் சட்டரீதியான நீதிமன்ற தீர்ப்பு கொஞ்சம் ஆறுதல்.
இருந்தாலும்,கைதட்டல்களுக்காகவும் பிரபல்யத்துக்காகவும் உசுப்பேத்திக்கொண்டிருப்பவர்கள்தான் இங்கு அதிகமாக இருக்கிறார்கள்.
கூட்டம் வைப்பது,தொண்டைகிழிய கத்துவது.அதோடு சரி.
மிகுதியை போகப்போகத்தான் பார்க்கவேண்டும்.
ஈழப்போர்க்காலத்திலும் சிலர் அறிக்கையிலேயே ப்ரிகேடியர் ஆகும் முயற்சிகளில் ஈடுபட்டதை அனைவரும் கண்டோமல்லவா.
சிலர் உயிரையும் தியாகம் செய்ததையும் மறக்கமுடியாது.
பகிர்வுக்கு நன்றி...மாற்றம் வரும் மாப்ள!
விடியலை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறோம்... அடுத்த வருடமாவது நன்றாக அமையாதா என்று...
///ஆனால் எம் தமிழர்களில் அதிகளவானோர் வெறும் காகிதப் போர் வீரர்களாகவும், வாய் சொல்லில் வீர முழக்கமிடும் அறிக்கை மன்னர்களாகவும் இருப்பது வேதனையளிக்கிறது./// இன்று நேற்றா ? அப்போ கடதாசி வீரர்கள்... இப்போ இலத்திரனியல் வீரர்கள்!
////இப்படிச் சொல்லிச் சொல்லியே காலத்தை கழிப்பதா தமிழனின் வீரத்திற்கு அழகு? //வீரம் இருந்து என்ன பிரயோசனம்? ஒற்றுமை இல்லையே!
வணக்கம் நிருபன்!
என்ன இருதாலும் தமிழ் நாட்டில் கேரள எல்லையில் அரசியல்வாதிகளின் துணையில்லாமல் மக்கள் போராடியதால்தான் கேரளக்காரர்கள் இறங்கி வந்தார்கள்..!!
இன்று உம்மன் சாண்டி ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதி மலையாளிகளை பாதுகாக்க சொல்கிறார்களே ஏன் இப்பதான் அவர்களுக்கும் தமிழன் குட்ட குட்ட குனியமாட்டான் திருப்பியும் தாக்குவான் என்று தெரியுது... இதை நீங்க வன்முறையை துண்டும் பின்னுட்டம் என்று எடுத்தாலும் பரவாயில்லை...!!
இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்தால் சிரிப்பு தான் வருகிறது தலைவரே!!
வணக்கம், நிரூபன்!உண்மைதான்.அறிவுபூர்வமாக யோசிப்பதை விடுத்து,இப்படி மக்கள் உணர்ச்சியைத் தூண்டி குளிர் காய்வதை எல்லோரும் நிறுத்த வேண்டும்.கேரள நீதிமன்றே,கேரள அரசை குட்டுக் கொடுத்து அடக்கி வைத்ததைப் பார்த்தாவது.........................................!
நீதி கிடைக்கும் நம்புவோம் மக்களே....!!!
பழைய கதைகளை பேசி பேசி ஸாரி எழுதி எழுதி பேப்பர் வெயிற்றை தூக்கி அதன் மீதே வைத்துவிட்டோம் என்பதே உண்மை, ஆக்கப்பூர்வமாக செயல்படவேண்டும் என்பதை என்றைக்கு தமிழன் உணரப்போறானோ...!!!!!
ஒத்திக்கு எடுத்த சொத்தை ..
குடியிருப்பவன் தானே தீர்மானிக்க வேண்டும்
எப்படி பாதுகாக்க வேண்டுமென.
வீட்டின் சொந்தக்காரன் ஒத்தி முடிந்தவுடன் தான் உள்ளேயே வரணும்.
இங்கு நடப்பது எல்லாம் தலைகீழ்.
நல்லதொரு நீதிக்காக காத்திருக்கும் தமிழர்களில் நானும் ஒருவன்.
தேனீ மாவட்ட மக்களையும், தேவாரம் ஊர் மக்களையும்
பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.
இந்த விஷயத்தில் முதல்வர் தன் நிலை விட்டு கீழே இறங்கக் கூடாது.
பார்ப்போம் என்ன தான் நடக்குமென்று.
நண்பா ஒண்ணு சொல்லட்டுமா
தன்னிச்சையாகவே மக்கள் பொங்கி விட்டார்கள். அரசியல்வியாதிகளின் பருப்பு வேகாது.
இது வரைக்கும் எல்லா அரசியல் கட்சிகளும் ஒண்ணா தான் இருக்கு - தீர்ப்புக்கா வெயிட்இங்.
தீர்ப்பு எதுவாகினும் பிரச்சினை தான் அதுக்கு காரணம் மத்திய அரசு மட்டுமே பொறுப்பு
சிறப்பான அலசல் சகோ! தமிழ்நாட்டில் இருந்துகொண்டு நானே இவ்வளவு தெளிவாக ஒரு பதிவை தர இயலாது.
தமிழ் நாட்டில் வட மாவட்டத்தில் உள்ள பாலாறு ஆணை கட்ட ஆந்திர அரசு முயன்று வருகிறது அதை தடுக்க யாரும் இல்லை http://www.hindu.com/2008/07/03/stories/2008070353060500.htmபாலாற்றின் நிலையை சொல்லும் விளக்கப்படம்
நீங்கள் சொல்வதுதான் யதார்த்த ரீதியான சரியான பாதை!
Post a Comment