வன்னிக் கள முனையில் ஓர் சமரினை ஆரம்பிக்கும் நோக்குடன் இராணுவத்தினரால் ஆயுத தளபாடங்களை வவுனியாவிலிருந்து ஓமந்தைப் பகுதி நோக்கி நகர்த்தும் நடவடிக்கைகளுக்கு புலிகளால் ஏற்படுத்தப்பட்ட உள்ளிருந்து ஊடுருவித் தாக்கும் தாக்குதல்கள்; மறைந்திருந்து தாக்கும் செயற்பாடுகள் அனைத்துமே 2007ம் ஆண்டின் ஜூன் மாதத்தில் சிறிது சிறிதாகக் குறைந்திருந்தன. கூமாங்குளத்தில் காலில் காயப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வன்னிக்கு அனுப்பப்பட்ட அமலன் இப்போது சிகிச்சை முடிந்து புதிய சில திட்டங்களோடு வவுனியாவிற்கு வந்தார். அந் நேரம் தலமைப் பீடம் நெருப்பினை வன்னிக்கு அழைத்தது.இராணுவம் வவுனியாவிலிருந்தா, மன்னாரிலிருந்தா வன்னிக்குள் தன்னுடைய படை நடவடிக்கையினை ஆரம்பிப்பது என குழம்பிக் கொண்டிருந்தது
நீங்கள் இங்கே படித்துக் கொண்டிருப்பது நாற்று வலைப் பதிவில் வெளி வந்து கொண்டிருக்கும் "ஈழப் போரியலில் இது வரை வெளி வராத மர்மங்களின்" பத்தாவது பாகத்தின் தொடர்ச்சியாகும். இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க இங்கே உள்ள Drop Down Menu இல் கிளிக் செய்யுங்கள். முகமாலைப் பகுதியில் மூச்சுத் திணறிக் கொண்டிருந்த சிங்களப் படைகளின் நிலமையினை எண்ணிய பக்ஸ சகோதரர்களுக்கும், இராணுவத் தளபதி பொன்சேகாவிற்கும் தாக்குதலை விரைவுபடுத்தக் கோரி உலக நாடுகள் சில உந்து சக்தி கொடுத்துக் கொண்டிருந்தன. அடிக்கடி கொழும்பிற்கும் டில்லிக்கும் பறக்கும் இந்தியப் படைத் தளபதிகள்; கிபிர் விமானத்திலிருந்து துல்லியமான குண்டுகளை வீசுவதற்குப் பயிற்சி கொடுத்து இலங்கை விமானப் படைக்கு ஆலோசனை வழங்கும் பாகிஸ்தானிய விமானப் படை ஆலோசகர்கள்,மற்றும் சில வெளிநாட்டுப் போரியல் நிபுணர்களின் ஆலோசனைகளைக் கேட்டு மகிந்தர் தன் படையணிகளின் நடவடிக்கையினை விரிவுபடுத்தி இம் முறை எப்படியாவது புலிகளை பூண்டோடு அழிப்பது எனும் செயலில் உறுதியாக இருந்தார்.
ஓமந்தைக்கு அருகே உள்ள பாலமோட்டையில் உடைப்பெடுத்த (ஊடறுத்த) இராணுவம் புலிகள் பகுதிக்குள் ஓர் அடி கூட நுழையக் கூட முடியாதவாறு முக்கிக் கொண்டிருந்தது. அடடா முகமாலையினாலும் வன்னிக்குள் உள் நுழைய முடியவில்லை. இப்போது வவுனியா ஊடாகவும் உள் நுழைய முடியலையே எனத் திண்டாடிக் கொண்டிருந்த படைத்தரப்பினருக்குப் புது ரத்தம் பாய்ச்சினார் இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகா. மன்னாரில் முசலி மற்றும் மடுப் பகுதியினூடாக ஓர் களமுனையினைத் திறக்கும் ஆலோசனையினை இராணுவத் தளபதி பொன்சேகா வழங்கினார். 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மன்னாரிலிருந்து "வன்னி விக்கிரம" படை நடவடிக்கையின் மற்றுமோர்த் தாக்குதல் தளத்தினை ஆரம்பித்த இராணுவம் புலிகளின் பலமான எதிர்த் தாக்குதலின் மத்தியிலும் முசலி பிரதேச செயளர் பிரிவு, மடுப் பகுதி ஆகியவற்றினைக் கைப்பற்றினார்கள்.
23 வருடங்களாக தமிழர் சேனை வசமிருந்த மன்னார் - உயிலங்குளம் வீதியினை இராணுவத்தினர் தம் வசப்படுத்தினார்கள். வன்னியினுள் பலமாகத் தம் கால்களை ஊன்ற முடியாது திணறிக் கொண்டு ஆமை வேகத்தில் மன்னார் ஊடாக முன்னேறிக் கொண்டிருந்த இராணுவத்தினருக்கு தமது முன்னேற்ற நடவடிக்கைகள் மந்த கதியில் இடம் பெறுவதற்கான காரணம் இப்போது தெளிவாகியது. புலிகளின் ஒவ்வோர் நடவடிக்கையின் பின்னும் பலமான மக்கள் ஆதரவு வன்னியில் இருப்பது இராணுவத்தினருக்குத் தெளிவாகப் புரிந்தது. இப்போது செய்ய வேண்டிய விடயம் என்ன? மகிந்தவின் படைத் தலமையகம் உடனடியாகச் செயலில் இறங்கியது. புலிகள் ஒவ்வோர் பகுதிகளையும் போரில் இழந்து மன்னார் கள முனையில் பின் வாங்கினாலும் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் மக்கள் தொகை குறைவாகவே இருந்தது.
"ஓ! புலிகளின் தாக்குதல்களின் பின்னணியில் பலமான மக்கள் ஆதரவு இருக்கிறதே என்பது இராணுவத் தரப்பிற்கு அப்போது தெளிவாகப் புரிந்தது. "மக்கள் ஆதரவு கொண்ட எந்தவோர் விடுதலை அமைப்பும் போரில் தோற்றதாகச் சரித்திரம் இல்லை" என்பது புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் உதிர்த்த சிந்தனைத் துளிகளினுள் ஒன்றாக விளங்குகின்றது. இராணுவத் தலமைக்குப் புலிகளின் பின்னே அல்லது புலிகளின் ஒவ்வோர் தாக்குதலின் பின்னரும் மக்கள் ஆதரவு இருப்பது என்பது நன்றாகப் புலப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில் தமீழத் தேசியத் தொலைக் காட்சி (NTT) ஊடக இல்லத்துடன் இணைந்து மன்னார் கள முனைத் தாக்குதல்களை உள்ளடக்கி களத்தில் எனும் ஓர் வீடியோத் தொகுப்பினை வெளியிட்டு இணையத் தளங்களுக்கும், புலம் பெயர் மக்களுக்கும் அனுப்பியிருந்தது.
மன்னார் கள முனையில் இராணுவத்தினரை எதிர்த்து நின்று சமர் செய்யும் போராளிகளுக்கு உணவுப் பொருட்களை வழங்குவது முதல், கள முனைப் பணிகள் செய்வது வரையான செயற்பாடுகளில் பெருமளவான மக்கள் ஆர்வத்துடனும்; இராணுவத்தினரைத் தம் மண்ணை விட்டு விரட்ட வேண்டும் எனும் ஓர்மத்துடன் செயலாற்றிக் கொண்டிருக்கும் ஒளிப் பதிவுக் காட்சிகளையும் படமாக்கி அந்த ஒளிவட்டில்(VIEDO CD) இணைத்திருந்தார்கள் புலிகளின் ஊடகத் துறையினர். (உங்களுக்கு நன்கு பரிச்சயமான ஒருவரின் குரலும் அந்த வீடியோத் தொகுப்பில் உள்ளது. இணையத்தில் எங்கேயாச்சும் களத்தில் எனும் வீடியோத் தொகுப்பு கிடைத்தால் கேட்டுப் பாருங்கள்).இதனை விட மக்களோடு மக்களாக ஊடுருவி இருந்த இராணுவத்தினரின் ஆழ ஊடுருவித் தாக்கும் அணியினரும், உளவாளிகளும் வன்னி மக்களின் ஒருங்கிணைந்த ஆதரவு பற்றி இராணுவத்தினருக்கு தகவல் வழங்கிக் கொண்டிருந்தார்கள்.
இப்போது இராணுவம் செயலில் இறங்கியது.இராணுவத்தினரின் அச் செயலினை நிறுத்துமாறு புலிகள் தார்மீக அடிப்படையில் நோர்வே ஊடாக அறிவித்தல் ஒன்றினை இலங்கை அரசிடம் கையளித்திருந்தார்கள். ஆனாலும் இலங்கை அரசு தனது கொள்கையில் விடாப் பிடியாக நின்றது. இறுதியில் இராணுவத்தினருக்கு அவர்கள் வழியிலே பதில் சொல்லுவதாகப் புலிகள் முடிவு செய்து இந்தச் செயலினைச் செய்வது யார் எனத் தீர்மானித்து அச் செயலினை நடை முறைப்படுத்தும் நோக்கில் போராளிகளைப் புலிகள் தெரிவு செய்வதற்கு முன்பதாக தன்னிச்சையாக டக்ளஸ் இப் பொறுப்பினைக் கையிலெடுத்துக் கொண்டு பெருமளவான ஆயுதங்களுடன் நகரத் தொடங்கினான். இனி, வன்னிக் கள முனைக்குள் இலகுவாக நுழைய இராணுவம் கையாண்ட தந்திரோபாயம் என்ன? அதற்குப் பதிலாகப் புலிகள் கையாண்ட சம்பவங்கள் எவை? அறிய ஆவலா? அடுத்த பாகம் வரை காத்திருங்கள்!
இப் பதிவிற்கு முன்னர் வெளியான பதிவுகள் இரண்டினைப் படிக்க:
*வாக்குமூலம்-இளகிய மனமுடையோர் + குழந்தைகள் பார்க்க கூடாத படம்!
*4ம் ஈழப் போரை திசை திருப்ப புலிகள் கையாண்ட (இ)ரகசியங்கள்!
இப் பதிவிற்கான படங்களும் வழமை போல கூகுள் தேடல் மூலம் பெறப்பட்டவையே!.
|
17 Comments:
hi, machchim how are you?
@Powder Star - Dr. ஐடியாமணி
hi, machchim how are you?
//
I'm good machchi,
How are you going?
வணக்கம் நிரூ வழமை போல் இந்த பதிவும் அசத்தல் தொடருங்கள்.. பணி சுமை அதிகம் இருப்பதால் பதிவுகளுக்கு வர இயலவில்லை..
நிரூ....தொடர்ந்து பதிவுகளை வாசித்து வருகிறேன் !
@ஜ.ரா.ரமேஷ் பாபு
வணக்கம் நிரூ வழமை போல் இந்த பதிவும் அசத்தல் தொடருங்கள்.. பணி சுமை அதிகம் இருப்பதால் பதிவுகளுக்கு வர இயலவில்லை..
//
நன்றி நண்பா.
பரவாயில்ல, இப்போது டிசம்பர் மாதம் என்பதால் எல்லோருக்கும் நேரத்தை எட்டிப் பிடிப்பதென்பது கஷ்டமாகவே இருக்கிறது.
@ஹேமா
நிரூ....தொடர்ந்து பதிவுகளை வாசித்து வருகிறேன் !
//
நன்றி அக்கா.
அருமை
@"என் ராஜபாட்டை"- ராஜா
அருமை
//
வணக்கம் நண்பா,
மக்கள் உயிரிழந்து இடம் பெயர்வதும், போராளிகள் காயப்பட்டு சிறையில் இருப்பதும் அருமையாகவா உங்கள் பார்வையில் இருக்கிறது.
என்ன அண்ணே காமெடி பண்றீங்களா?
இந்தப் பதிவிலையாச்சும் நான் என்ன சொல்லியிருக்கேன் என்று படித்துப் பார்த்து கமெண்ட் போடலாமே?
@"என் ராஜபாட்டை"- ராஜா
அருமை/////
முடில்ல...... உஸ்... சப்பா....
நானும் தொடர்கிறேன் நிரு.... ஆச்சரியமாகவும் பிரமிப்பாகவும் தொடர்ந்து படித்து நிறைய விடயங்களை தெரிந்துகொள்கிறேன்.... உண்மையில் இவை பற்றி எனக்கு அதிகம் தெரியாது.... உங்கள் பதிவின் மூலம் நிறைய தெரிந்துகொள்கிறேன்.... தொடருங்கள் பாஸ்.....
வணக்கம் நிரூபன் ஐயா !
தொடர் தொடர்ந்து வாசிக்கின்றேன் பின்னூட்டம் இடும் நேரத்தை பிரிதொரு தேடலில் கழிப்பதால் அடிக்கடி வரமுடியவில்லை. இன்னும் சிலவாரங்களின் பின் தொடர்ந்து பின்னூட்டத்துடன் வருவேன்!
அரியபல தகவல் தாங்கி வருகின்ற பதிவு நிச்சயம் நூல் உருவாக தமிழக உறவுகள் உங்களுக்கு வழிகாட்டனும்.என பிரார்த்திக்கின்றேன்.
@தனிமரம்
நிச்சயம் நூல் உருவாக்கி விடலாம்.உலகம் அறிய வேண்டிய தகவல்கள் இவை.
பல புதிய தகவல்களை அறிந்து கொண்டேன்.
வணக்கம் நிருபன்...
நானும் தொடரை தொடர்கிறேன். நூலுருவில் தொடரை கொண்டு வரும்போது இன்னும் அதிக சிரத்தை எடுக்க வேண்டும் அத்தோடு பொருளாதார ரீதியாக வெற்றி பெறுமா என்பதையும் சிந்திக்க வேண்டும்...!!
வணக்கம்,நிரூபன்!ஏலவே தெரிந்தவை தான்,எனினும் உங்கள் எழுத்தில் மேலும் மெருகேறி புல்லரிக்க வைக்கிறது,நன்றி!
மன பாரத்துடன்... நேரிலே பார்ப்பது போன்ற விவரணை,தொடருங்கள் நிரூபன்.
Post a Comment