ஓயாத அலைகள் இரண்டு படை நடவடிக்கையின் போது புலிகளால் மூன்றிற்கு மேற்பட்ட ஆட்டிலறிகள் கைப்பற்றப்பட்டன. கிளிநொச்சி மீட்கப்பட்ட பின்னர் புலிகள் அணிகள் மற்றுமொரு பாய்ச்சலுக்குத் தயாராகினார்கள்.இவ் வேளையில் புலிகள் வசம் பீரங்கிகளுக்கான எறிகணைகள் இருந்தாலும், பெருமளவான எறிகணைகள் புலிகளின் பகுதிக்கு கடல் வழியாக புலிகளின் அழைப்பின்றி வந்து சேர்ந்தது. இலங்கை அரசோ இவ் விடயத்தினை அறிந்து திண்டாடத் தொடங்கியது. நீங்கள் இங்கே படித்துக் கொண்டிருப்பது உங்கள் நாற்று வலையில் வெளியாகிக் கொண்டிருக்கும் "பீரங்கி கைப்பற்றி ஆமிக்குப் பீதியைக் கொடுத்த புலிகள்" தொடரின் ஐந்தாவது பாகத்தின் தொடர்ச்சியாகும். இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க கீழேயுள்ள DROP DOWN MENU இல் கிளிக் செய்யுங்க.
1996ம் ஆண்டு முல்லைத்தீவு இராணுவ முகாம் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப் பட்ட பின்னர் புலிகளின் கடற்புலிகளின் செயற்பாடுகள் வேகமெடுக்கத் தொடங்குகின்றது. புலிகளின் அரசியல் ஆலோசகராகவும், தத்துவாசிரியராகவும் விளங்கிய கலாநிதி அன்ரன் பாலசிங்கம் தொடக்கம், ஜேர்மனி வரை சிகிச்சைக்காகச் சென்ற கேணல் ராஜூ அண்ணர் வரை இந்த முல்லைத்தீவு கைப்பற்றப்பட்டதன் காரணமாகத் தான் கடற் வழிப் பயணம் மூலம் அனைத்துலகினை இலகுவில் வலம் வர முடிந்தது.புலிகள் அனைத்துலக கறுப்பு ஆயுத சந்தையில் மிகுந்த சிரமப்பட்டு வாங்கிய ஆயுதங்களை எல்லாம் வன்னிக்குள் கொண்டு வந்து சேர்ப்பதற்கு முல்லைத்தீவுக் கடல் தான் துறைமுகமாய் அப்போது விளங்கியது. ஆக ஈழப் போராட்ட வரலாற்றில் இந்த முல்லைத் தீவிற்கு இன்றைய இறுதிக் கட்டச் சம்பங்கள் தொடர்பிலும், ஆரம்ப கட்டச் சம்பவங்கள் தொடர்பிலும் தனித்துவமான வரலாறு உண்டு.
என் பாட்டன் பிறந்த இடம் தண்ணீருற்று முள்ளியவளை. இந்த இடத்தில் முல்லைத்தீவு பற்றிச் சொல்லுகையில் ரொம்ப பெருமையாக இருக்கிறது. புலிகளின் முதல் தர கேணல் நிலைத் தளபதியாக இருந்த வீமன் அவர்களின் பெற்றோரின் பூர்வீகமும் முல்லைத்தீவு தான்.முல்லைத் தீவு சிறப்புக்களையும், புதையுண்டு போன வரலாறுகளையும் இலகுவில் எழுத்தில் வடித்து விட முடியாது. புலிகளின் கடற்புலி அணிகள் சர்வதேசக் கடற் பரப்பில் முல்லை மீட்பின் பின்னர் உலா வரத் தொடங்கினார்கள். உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளின் உதவியினால் சேகரிக்கப்பட்ட தமீழ மீட்பு நிதி மூலம் புலிகள் பாரிய கடற் கலங்களைச் சொந்தமாகக் கொள்வனவு செய்தார்கள். சில கப்பல்களை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு அமர்த்தினார்கள்.
கடற்கலங்களைக் கொள்வனவு செய்தால் மட்டும் போதுமா? சர்வதேச கடற் பரப்பிலும், சரி ஏனைய நாடுகளுக்குள்ளும் நுழைய முன்பதாக கப்பல்கள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். புலிகள் கப்பல்களை எங்கே பதிவு செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கையில் தான் இப்போது இலங்கை இராணுவத்துடன் ஒட்டியிருக்கும் கேபி - குமரன் பத்மநாதன் அவர்கள் கம்போடியா நாட்டில் மூன்றாந் தர நாடுகளின் கப்பல்களை, மற்றும் சிறு குழுக்களின் கப்பல்களை, தனியார் கப்பல்களைப் பதிவு செய்வதற்கான சலுகைகளை கம்போடியா நாட்டு கடற் துறை அமைச்சு வழங்குவதாக வன்னிக்கும், அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கும் அறிவித்திருந்தார். இனி என்ன நடந்திருக்கும் என்று சொல்லவா வேண்டும்? புலிகள் அணியினர் கம்போடியா நாட்டு கடற் துறை அமைச்சுடன் ரகசியப் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்கள்.
தம் கப்பல்களைப் பதிவு செய்யத் தொடங்கினார்கள். ஆரம்பத்தில் புலிகள் வசம் மூன்று கப்பல்கள் தான் இருந்தன. ஈழத்தில் கப்பல் ஓட்டிய தமிழர்கள் எனும் பெருமைக்குச் சொந்தக்கரார்களான தலைவர் பிரபாகரனின் பிறந்த ஊரைச் சேர்ந்த வல்வெட்டித் துறை மக்களின் பெருமையினை மீண்டும் பிரபாகரன் தன் வரலாற்றினூடாகப் புதுப்பித்துக் காட்டினார். 2002ம் ஆண்டில் புலிகள் தம் வசம் 16 இற்கும் மேற்பட்ட கப்பல்கள் இருப்பதாக ஒரு தடவை நோர்வேயுடன் கிளிநொச்சியில் சந்திப்பு இடம் பெறுகையில் வெளிப்படையாகவே சொல்லியதாக ஞாபகம். இப்போது கடற்புலி அணியின் சர்வதேச கடல் அணியினர் உலகெங்கும் புலிகளின் வணிக கப்பல்களில் சென்று வரத் தொடங்கினார்கள்.
இந்த நேரத்தில் 1998ம் ஆண்டு இலங்கை ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா அம்மையார் தமது ஆயுதக் கொள்வனவு நிபுணர்களை ஆபிரிக்கா நாட்டிற்கு அனுப்பினார். இதன் பிரகாரம் ஆபிரிக்க நாடொன்றிலிருந்து ஆட்டிலறி ஷெல்களைக் கொள்வனவு செய்து புகையிரதம் ஊடாக ஏற்றி, தென் ஆபிரிக்காவின் கேப்டவுன் நகரிலுள்ள துறைமுகம் ஒன்றிற்கு கொண்டு வந்தார்கள்.அங்கே தரித்து நின்ற கம்போடிய நாட்டுக் கப்பலில் (கம்போடியாவில் பதிவு செய்யப்பட்ட கப்பலில்) ஆயுதங்களையும், ஆட்டிலறி ஷெல்களையும் ஏற்றி இலங்கை அரசு சீல் வைத்து பத்திரமாக இலங்கையில் கொண்டு செல்லுமாறு பணித்தது. கப்பலும் தென் ஆபிரிக்காவின் கேப்டவுன் துறைமுகத்தினை விட்டுப் புறப்பட்டது.
இலங்கையின் காலித் துறைமுகத்திற்கு கப்பல் வரும் என இலங்கை அரசு விழி மேல் வழி வைத்துக் காத்திருக்கையில் அந்தக் கப்பலோ இன்னுமோர் இடத்திற்கு வந்தது. குறிப்பிட்ட தினத்திற்குள் கப்பல் வரவில்லையே என கப்பல் கம்பனியின் தலைமையகத்தினை இலங்கை அரசு தொடர்பு கொள்ளும் போது, இன்னும் சில தினங்களுள் கப்பல் இலங்கைக்கு வந்து விடும் என பதில் வழங்கப்பட்டது. இந் நேரத்தில் தான் இலங்கை அரசிற்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் காத்திருந்தது. அது பற்றி அறிய ஆவலா? அடுத்த பாகம் வரை காத்திருங்கள்.

|
9 Comments:
என்ன சார்...
அண்டைக்கு விட்ட இடத்திலேயே இண்டைக்கும் கொண்டுவந்து விட்டிட்டு காத்திருக்க சொல்ரீங்களே..??
நியாயமா?அடுக்குமா?
என்ன நடந்திருக்குமென்று விளங்குது.
ஒருவாரம் தாமதிக்காமல் தொடர்ந்து அடுத்தது வரட்டும்.
மீள் வணக்கம்,நிரூபன்!எங்கள் கப்பலில் ஆயுதங்களை(எறிகணைகளை)ஏற்றி விட்டு வரும்,வரும் என்று காத்திருந்தால் எப்படி?ஹி!ஹி!ஹி!!!!
பிரமிப்போடு அடுத்த பகுதிக்காய் காத்திருக்கிறேன்...
( இது "அந்த" கமெண்ட்ஸ் இல்லைப்பா.... :) இதுக்கு மேலே என்ன சொல்லுறது என்று தெரியல்ல... என் நிலை தெரியும் என்று நினைக்கிறேன்... ஆனால் மிக ஆவலாய் தொடரை படிக்கிறேன்.)
முல்லைத்தீவின் வரலாற்றுப்பெருமையூடு ,குலப் பெருமையும் சேர்த்து !வரலாறு மீண்டும் திரும்பும் என்பது போல !கப்பல் ஓட்டிய தமிழன் என்பதை கம்போடியா வரை தொட்டுச் சென்று மிகுதிக்காக காத்திருக்க வைத்து விட்டீர்கள்.தொடருங்கள் தொடரினை பின் தொடர்கின்றேன்!
எத்தனை காயங்கள் இருந்தாலும் இறந்த காலம் எப்போதும் சில சுவாரசியங்களை தன்னகத்தே கொண்டே இருக்கும்.. தொடருங்கள் நிரூ நாங்களும் காத்து இருக்கிறோம்..
தொடருங்கள் சகோ ! படிக்க காத்திருக்கிறேன்.
நன்றி
@தனிமரம்
முல்லைத்தீவின் வரலாற்றுப்பெருமையூடு ,குலப் பெருமையும் சேர்த்து !வரலாறு மீண்டும் திரும்பும் என்பது போல !கப்பல் ஓட்டிய தமிழன் என்பதை கம்போடியா வரை தொட்டுச் சென்று மிகுதிக்காக காத்திருக்க வைத்து விட்டீர்கள்.தொடருங்கள் தொடரினை பின் தொடர்கின்றேன்!
//
அன்பிற்குரிய சகோ,
இங்கே கம்போடியா வரை கப்பலோட்டியவர்கள் என்று புலிகளை நான் சொல்லவில்லை, கம்போடியாவிலும், இந்தோனேசியாவிலும் தம் கப்பல்களைப் புலிகள் ரகசியமாகப் பதிந்து வைத்திருந்தார்கள் என்றும்,
புலிகள் உலகெங்கும் கப்பல் மூலம் வலம் வந்தார்கள் என்றும் சொல்லியிருக்கிறேன்.
அத்தோடு தென் ஆபிரிக்காவின் கேப்டவுன் துறைமுகத்திலிருந்து ஆயுதம் கடத்தியது தொடர்பான முடிவுடன் தான் இப் பாகத்தினை நிறுத்தியிருக்கிறேன்.
ப்ளீஸ்...பதிவினை முழுமையாகப் படித்து கமெண்ட் போடுங்கள்.
நீங்கள் கம்போடியா வரை கப்பலோட்டிய புலிகள் என்று நினைத்தால் ஏனையோர் புலிகளின் வரலாற்றினைத் தவறாக அல்லவா புரிந்து கொள்வார்கள்.
Post a Comment