இணையத்தில் ஐயாரத்திற்கும் மேற்பட்ட தமிழ்ச் சொந்தங்கள் வலைப் பதிவுகளை எழுதுபவர்களாக வலம் வருகின்றார்கள். இன்றைய நாளில் இவர்கள் அனைவரும் தம் மன உணர்வுகளைப் பத்திரிகையூடாகப் பகிர்ந்து கொள்ள நினைத்தால் எல்லோருக்கும் சம நேரத்தில் சந்தர்ப்பம் கிடைக்காது. அதே வேளை பத்திரிகையூடாக எல்லோரினதும் ஆக்கங்களையும் பகிருவதற்கு பத்திரிகைகளும் இடங் கொடுக்காது. "எம்முடைய எழுத்துக்கள் பத்திரிகையின் தரத்திற்கு நிகராக வருமா?" எனும் ஐய உணர்வே அதிகளவான பதிவர்கள் மனங்களிலும் இருக்கின்றது.இணையம் நமக்கு அருளிய இணையற்ற வரப்பிரசாதம் தான் இந்த வலைப் பதிவுகள். கணினித் திரைக்குப் பின்னிருந்து பதிவெழுதும் சொந்தங்களைக் கண்டு தரிசிக்க வேண்டும் எனும் ஆவல் ஒவ்வொரு பதிவர்களின் எழுத்துக்களைப் படிக்கையிலும் இயல்பாகவே எம்மிடம் தொற்றிக் கொள்கின்றது.
வலைப் பதிவர்கள் நாம் தனி மனித நிறுவனங்களாக எம்முடைய உணர்வுகளை இணையத்தில் பகிர்ந்து கொள்ளும் இன்றைய கால கட்டத்தில் எமக்கென்று நிறுவனங்களோ,எம்முடைய பணிகளுக்குப் பேராதரவு நீட்டவல்ல அமைப்புக்களோ இல்லை என்றே கூறலாம்.தனி நபர் எழுத்தாளர்களின் ஒப்பற்ற பங்களிப்புக்கள் மூலம் தான் இந்த வலைப் பதிவர் சந்திப்பிற்கான அடித்தளங்கள் உருவாக்கப்படுகின்றது. ஒரு நிறுவனம் சார்ந்து ஓர் விழாவினை ஏற்பாடு செய்வதற்கும், தனி நபர் சார்ந்து ஓர் வலைப் பதிவர் சந்திப்பினை ஏற்பாடு செய்வதற்கும் மிகப் பெரிய வேறுபாடுகள் உண்டு. வலைப் பதிவர் சந்திப்பினைப் பதிவர்கள் இணைந்து செய்கின்ற போது இணையம் ஊடாக அச் சந்திப்புத் தொடர்பான தகவல்களை வெளியிடலாம். தனிப்பட்ட ரீதியில் அனைத்துப் பதிவர்களையும் ஒன்றிணைப்பது என்பது இயலாத காரியம்.
ஓர் ஊரில் அல்லது ஒரு பிரதேசத்தில் சந்திப்பு இடம் பெறப் போகின்றது என்றால் அச் சந்திப்பு தொடர்பான அறிவிப்புக்களை விழா நாளிற்குப் பல தினங்கள் முன்பதாகவே பதிவர்கள் தம் வலைப் பூக்கள், தனி மடல்கள், குழும அழைப்பிதழ்கள் ஊடாக அனுப்பி வைத்து; தம் சந்திப்பிற்கான பதிவர்களின் வருகையினை ஒழுங்கு செய்யும் பாரிய சிரமம் நிறைந்த செயற்பாட்டினைத் தான் பதிவர்கள் அனைவரும் இன்று செய்து வருகின்றார்கள். இணையத்தில் எழுதும் எழுத்தாளர்கள் ஓர் பிரதேசம் சார்ந்த அல்லது சந்திப்பு இடம் பெறும் பகுதி சார்ந்து ஒன்று கூடுகின்ற சமயத்தில் எல்லா எழுத்தாளர்களையும் நிகழ்விற்கு அழைக்க முடியாது. இதற்கான பிரதான காரணம் பலரது தொடர்பு விபரங்கள், மின்னஞ்சல் முகவரி என்பவற்றை விழா ஏற்பாட்டுக் குழுவினர் பெற்றுக் கொள்ள முடியாதிருக்கும். அல்லது பதிவர்கள் தம்மைத் தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்களை வெளிப்படுத்தாதிருப்பதாகும்.
உண்மையில் பதிவர்களாகிய நாம் கிறுக்குப் பிடித்த - கர்வம் நிறைந்த எழுத்தாளர்கள் போல ஏனையோருடன் பழக முற்படுவதனைத் தூக்கி எறிய வேண்டும். எழுத்தாளனுக்கோ அல்லது படைப்பாளிக்கோ கர்வம் அவனது எழுத்துக்கள் தொடர்பில் இருக்கலாம்.ஆனால் ஓர் விழாவினை நிகழ்த்துகின்றவர்களின் அடிப்படைச் செயற்பாடுகள், விழாவினை ஏற்பாடு செய்வோர் எதிர் நோக்கும் சிரமங்களை உணர்ந்து கொள்ளாதோராக எம்மில் சிலர் கர்வம் கொண்டு இறுமாப்போடு தமக்கு தனிப்பட்ட ரீதியில் அறிவித்தல் விடவில்லையே என மனம் புலம்புவது ஏற்றுக் கொள்ள முடியாத செயல். இன்றைய கால கட்டத்தில் நாம் ஓர் பதிவர் சந்திப்பினை யாரேனும் நடாத்துகின்றார்கள் என்றால் முதலில் மனம் திறந்து பாராட்ட வேண்டும்.
எங்களை நாங்களே கம்பனாகவும், ஷெல்லியாகவும் கற்பனை செய்து எமக்குத் தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கலையே என ஆதங்கப்படுவது உண்மையிலே இப்படியான தனி நபர் குழுக்களால் ஒழுங்கமைக்கப்படும் சந்திப்புக்களுக்கு முற்றிலும் முரணனா விடயமாகும். தமக்கு தனிப்பட்ட ரீதியில் அழைப்பு விடுக்காத காரணத்தினால் இச் சந்திப்பானது பதிவர் சந்திப்பே அல்ல எனப் பொங்கி வெடிப்பது என்பது நாளைய தினம் பல பதிவர்களும் இதே போன்றதோர் காரணத்தினைப் பதிவர் சந்திப்பு தமக்கு அருகே நிகழ்கிறது என்று அறிந்தும் கூட; பதிவர் சந்திப்பிற்குக் கலந்து கொள்ள முடியாத போது சொல்லுவதற்குரிய தவறான முன் உதாரணமாக ஆகி விட வாய்ப்பாக இருக்கிறது. உண்மையில் வலைப் பதிவுகளில் அறிவிக்காது தனிப்பட்ட ரீதியில் ரகசிய சந்திப்புக்களை வைப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத செயல்.
இணையத்தில் எழுதும் தமிழ் எழுத்தாளர்கள் சரியான விமர்சனங்களைப் பெற்றுக் கொள்ளாது ம்...அருமை, சூப்பர், கலக்கிட்டீங்க எனும் புகழூட்டும் பின்னூட்டங்களை மாத்திரம் நம்பி தம்மைத் தாமே மிகப் பெரிய எழுத்தாளர்கள் எனும் நிலையில் இன்றைய தமிழ் கூறும் நல்லுலகில் கருதிக் கர்வங் கொள்வதானது இனி வருங் காலங்களில் எம் வாசலுக்கு வந்து தாம்பூலத் தட்டத்தில் வைத்து அழைப்பிதழ் தரவில்லையே எனும் நிலையினையும் உருவாக்கும் என்பதில் ஐயமில்லை! இனி வருங் காலங்களில் பதிவர் சந்திப்பிற்குத் தாம்பூலத் தட்டம் வைத்து அழைப்புக் கொடுத்தால் தான் வருவோம் என யாராவது சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை!
இன்றைய தினம் வெளியான மற்றுமோர் பதிவு உங்கள் பார்வைக்காக:
|
28 Comments:
உள்குத்து உலக நாதா வணக்கம் ஹி ஹி
நான் கற்ற பாடங்களீல் ஒன்று , மனதில் பட்டதை எல்லாம் பேசி விடக்கூடாது, கசக்கும் உண்மைகளை வெளீயே சொல்லக்கூடாது, எல்லோரையும் போல் நல்ல நடிகனாக இருக்கனும்
@சி.பி.செந்தில்குமார்
உள்குத்து உலக நாதா வணக்கம் ஹி ஹி
//
வணக்கம் அண்ணே,
இப் பதிவில் , உள்குத்து ஏதும் இதில் இல்லை!
அப்படிக் குத்தனும் என்றால் நேரடியாகவே குத்திடுவேன்.
இங்கே ஓர் எழுத்தாளன் தனிப்பட்ட ரீதியில் தன்னை எவ்வாறு பாவனை செய்யனும்? ஓர் சந்திப்பு தொடர்பில் எவ்வாறு Behave பண்ணனும் என்று தான் சொல்லியிருக்கேன்.
@சி.பி.செந்தில்குமார்
நான் கற்ற பாடங்களீல் ஒன்று , மனதில் பட்டதை எல்லாம் பேசி விடக்கூடாது, கசக்கும் உண்மைகளை வெளீயே சொல்லக்கூடாது, எல்லோரையும் போல் நல்ல நடிகனாக இருக்கனும்
//
அண்ணே இப்படியான கருத்தினை வன்மையாக கண்டிக்கிறேன். காரணம் நாம் கற்ற பாடங்கள் எம்மைத் திருத்திக் கொள்ள வழிகாட்டியாக, ஓர் அனுபவமாக இருக்கும் பட்சத்தில் சொல்லுவதில் தவறில்லை! சந்திப்புத் தொடர்பான உங்கள் விமர்சனங்கள் தொடர்பில் எனக்கு எந்த மாற்றுக் கருத்துக்களும் இல்லை. ஆனால் சந்திப்பிற்கு தனிப்பட்ட ரீதியில் அழைப்பு விடுக்கலையே என்று சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
////உண்மையில் வலைப் பதிவுகளில் அறிவிக்காது தனிப்பட்ட ரீதியில் ரகசிய சந்திப்புக்களை வைப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத செயல்.////
ஹ...ஹ... தங்களுக்குத் தெரியுமோ தெரியல.. யாழ்ப்பாணத்தில் இப்படிப் பல தடவை நடந்திருக்கிறது... இனி பதிவர் சந்திப்புக்கு கேட்க வேண்டாம் என சத்தியம் கட்டியோர் எல்லாம் ஒழித்துச் சென்று சந்தித்த கதையுமிருக்கிறது...
நமக்கும் இதுக்கும் ஒருவித சம்பந்தமும் இல்லை ..பதிவர் சந்திப்பு வைபதேன்றால் நானேதான் எனக்கு நடத்த வேண்டும்...
இன்ட்லி வேலை செய்யலன்னு நினைக்கிறேன் பிறகு வந்து ஓட்டு போடுறேன் மச்சி....
எனக்கென்னமோ இதுக்கு நேரிடையா சிபி செய்தது தப்புன்னே நீர் சொல்லி இருக்கலாம்யா ஹிஹி!
@சி.பி.செந்தில்குமார்
உள்குத்து உலக நாதா வணக்கம் ஹி ஹி//
உள்குத்து...உள்குத்து....அப்படிங்கிறாங்களே! அப்படின்னா..இன்னா....மெய்யாலுமே...எனிக்கு தெர்லிங்கோ....?!
@நிரூபன்
அண்ணே இப்படியான கருத்தினை வன்மையாக கண்டிக்கிறேன். காரணம் நாம் கற்ற பாடங்கள் எம்மைத் திருத்திக் கொள்ள வழிகாட்டியாக, ஓர் அனுபவமாக இருக்கும் பட்சத்தில் சொல்லுவதில் தவறில்லை! சந்திப்புத் தொடர்பான உங்கள் விமர்சனங்கள் தொடர்பில் எனக்கு எந்த மாற்றுக் கருத்துக்களும் இல்லை. ஆனால் சந்திப்பிற்கு தனிப்பட்ட ரீதியில் அழைப்பு விடுக்கலையே என்று சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?//
முடிந்த பிரச்னையாகவே...போகட்டும் நிரூபன்!பேசினா பலதைப் பேசலாம்.நாங்க எல்லாம் உறுப்பினர்கள் எல்லாரும் காசு போட்டு நடத்தப்படுகிற விழா!என்று தலைவரே சொல்லிவிட்டார்!
காசும் போடலை! உழைக்கவும் இல்லை!உங்களுக்கு கேள்வி கேட்க என்ன ரைட்ஸ் இருக்கு...இது ஒன்றும் திருமணம் அல்ல. பதிவர் சந்திப்பு பதிவர்களுக்கு உண்டானது நாம்தான் விருப்பம் இருந்தால் இணையனும்.விருப்பம் இல்லையென்றால் போகக்கூடாது.அப்புறம் டீச்சர் இவன் என்னை கடிச்சு வெச்சிட்டான்...அடிச்சி..வச்சிட்டான்னு.....எல்லாம் மறந்து மனம் அமைதியாக இருக்க வேண்டும்....என்றே நான் விரும்புகிறேன் அப்படித்தான் அனைவரும் விரும்புகிறோம்....அதனால்தான் நேற்று தமிழ்வாசி பதிவில் சிறப்பு விருந்தினரின் உறையை வெளியிட்டதின் காரணம். இந்த பதிவை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
@veedu
முடிந்த பிரச்னையாகவே...போகட்டும் நிரூபன்!பேசினா பலதைப் பேசலாம்.நாங்க எல்லாம் உறுப்பினர்கள் எல்லாரும் காசு போட்டு நடத்தப்படுகிற விழா!என்று தலைவரே சொல்லிவிட்டார்!
காசும் போடலை! உழைக்கவும் இல்லை!உங்களுக்கு கேள்வி கேட்க என்ன ரைட்ஸ் இருக்கு...இது ஒன்றும் திருமணம் அல்ல. பதிவர் சந்திப்பு பதிவர்களுக்கு உண்டானது நாம்தான் விருப்பம் இருந்தால் இணையனும்.விருப்பம் இல்லையென்றால் போகக்கூடாது.அப்புறம் டீச்சர் இவன் என்னை கடிச்சு வெச்சிட்டான்...அடிச்சி..வச்சிட்டான்னு.....எல்லாம் மறந்து மனம் அமைதியாக இருக்க வேண்டும்....என்றே நான் விரும்புகிறேன் அப்படித்தான் அனைவரும் விரும்புகிறோம்....அதனால்தான் நேற்று தமிழ்வாசி பதிவில் சிறப்பு விருந்தினரின் உறையை வெளியிட்டதின் காரணம். இந்த பதிவை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
//
ஹே...ஹே..
அண்ணே, காசும் போடலை, உறுப்பினரும் இல்லை! அப்படீன்னா உறுப்பினர்கள் மாத்திரம் பங்கு பெறும் விழாவாக வைத்திருக்கலாமே?
ஏன் பொது வெளியில் எல்லோரையும் அழைக்கனும்?
நான் இங்கே சொன்னது, தனிப்பட்ட ரீதியில் அழைப்பு விடுக்கலையே என்று நண்பர்கள் புலம்புவதானது நாளைய வருங்காலச் சந்ததிக்கும் தவறான முன்னூதாரணமாக ஆகி விடும் எனும் நோக்கில் தான்.
for follow up
உண்மை தான் நிரூ..
எழுத்தில தான் கர்வம் இருக்கணும் இங்கே பெரிய எழுத்தாளர்ன்னு சொல்லிக்கிட்டு இருக்குறவங்க கூட அப்படி நினைக்கிறது இல்லையே, நாம எல்லாம் எந்த மூலைக்கு??
மாப்ளே, உங்க ஊர்ல எப்போ சந்திப்பு நடக்குதுன்னு சொல்லு..... முடிஞ்சா வரேன்.....
பொதுவா அழைப்பு அனுப்பினாலே போதும்.... ஹி..ஹி..
உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...
வலைப்பக்கம், முகநூல், டிவிட்டர் குழும மெயில் ஐடி என அனைத்திலும் அழைப்பு விட்டோம் அதனால் தான் வரலாறு காணத கூட்டம் வந்தது...
உங்கள் கருத்துடன் ஓத்துப்போகிறேன்...
APRIL MEETING -GAAGA WAITING!!
இந்த பதிவின் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன் நிரூபன்.ஆனால் இந்த சங்கமம் பிரச்சனையை வைத்து இனி யாரும் எழுதக்கூடாது என்கின்ற கருத்தின் பேரில்தான் இந்த பதிவை வன்மையாக கண்டிக்கிறேன் என்று கூறுகிறேன் நன்றி.
ஏ யப்பா எப்பப்பா இந்த கூத்து முடிவுக்கு வரும் விட்டுதல்லுங்கய்யா...!!! இனி நல்லதே நடக்கும்.
ஹா.ஹா.ஹா.ஹா புரிஞ்சுடுச்சி புரிஞ்சுடுச்சி யாருக்கு உள்குத்து என்று அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//சங்கவி said...
//உங்கள் கருத்துடன் ஓத்துப்போகிறேன்...//
மன்னிக்க சங்கவி. அவசரத்தில் டைப் செய்துவிட்டீர்கள்.
கசப்புகள் மறைந்து, குறைகள் களையப்பட்ட பதிவர் சந்திப்புகள் வரும் ஆண்டில் நடக்கும் என நம்புவோம். ஆண்டிறுதியில் சிபி தலையில் 'நங்'கென கொட்டி விட்டீரைய்யா. வழக்கம்போல் 'விட்ரா விட்ரா சூனா பானா' என்றே சிபியண்ணன் எடுத்து கொள்வார் என நம்புவோமாக!!
வணக்கம் நிரூபன்!மறுபடியுமா?(ஒன்றும் புரியவில்லை)
இது வரை ஒரு பதிவர் சந்திப்புக்கும் போக முடியாமல் இயற்க்கை சதி செய்து விட்டது.
2012லாவது இறைவன் எனக்கு அந்த பாக்கியத்தை கொடுக்கட்டும்.
நிரூபன் பதிவின் மூலம் ஒன்றை உணர்ந்தேன்.
இனி பதிவர்கள் சங்கமம் எங்கு நடந்தாலும் எனது பதிவில் தெரியப்படுத்துவேன்.
யோ என்னய்யா உனக்கு உள்குத்து போட நம்மாள்தான் கிடைத்தாரா..?
//இனி வருங் காலங்களில் பதிவர் சந்திப்பிற்குத் தாம்பூலத் தட்டம் வைத்து அழைப்புக் கொடுத்தால் தான் வருவோம் என யாராவது சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை!//
அப்படி ஒரு வழக்கம் இருப்பதை மறந்தே போயிட்டேன். கூடவே வழிச்செலவுக்குன்னு பணமும் கொடுப்பாங்களே. அதை ஏன் சொல்லாம உட்டுட்டீங்க?
அடுத்த பதிவர் சந்திப்புக்கு வெத்திலை பாக்கும் வழிச்செலவும் கொடுத்தாத்தான் வருவேன். எல்லோரும் நோட் பண்ணிக்குங்க.
//ம்...அருமை, சூப்பர், கலக்கிட்டீங்க எனும் புகழூட்டும் பின்னூட்டங்களை மாத்திரம் நம்பி தம்மைத் தாமே மிகப் பெரிய எழுத்தாளர்கள் எனும் நிலையில் இன்றைய தமிழ் கூறும் நல்லுலகில் கருதிக் கர்வங் கொள்வதானது இனி வருங் காலங்களில் எம் வாசலுக்கு வந்து தாம்பூலத் தட்டத்தில் வைத்து அழைப்பிதழ் தரவில்லையே எனும் நிலையினையும் உருவாக்கும் என்பதில் ஐயமில்லை!//
உண்மை.பலரும் கற்று உணரவேண்டிய பாடம்.
தமிழ்வாசி பிரகாஷ் said...
மாப்ளே, உங்க ஊர்ல எப்போ சந்திப்பு நடக்குதுன்னு சொல்லு..... முடிஞ்சா வரேன்.....
பொதுவா அழைப்பு அனுப்பினாலே போதும்.... ஹி..ஹி..
டிக்கெட்டு வேணும்ல
மதுரை பதிவருக்கு விகடன் பாராட்டுக்கள்
மதுரை பதிவருக்கு விகடன் பாராட்டுக்கள்
Post a Comment