எனக்குள் இப்போது உருவம் ஏதுமற்ற
எலும்புத் துண்டுகள் தான் என்னை இயக்குகிறது,
எனக்கான தேடலை வானத்திலுள்ளவனால் கூட
தர முடியாது - காரணம் வானத்திலுள்ளவனின்
தேவ தூதர்களாய் வாசலில்
வரிசை கட்டி பலர் புஸ்த்தகங்களோடு!
என் மீது குற்றம் இல்லை என்றார்கள்
என் பெற்றோர்,
ஆனாலும் கேட்டார்களா?
மேகத் திரளை ஒன்று திரட்டி
மேனித் திரளை மூடிக் கொண்டது
என் ஆடை, ஆனாலும்
எனக்கான பருவ வயதில்
என் மதம் மொழி கடந்து காதல்
பற்றிக் கொண்டது!
கட்டிக் கொள்ள உடல் துடிக்கையில்
மொழியும் மதமும் என்
உறவை வெட்டி வைக்க நினைத்தன,
இன்றோ என் காதலனை விட
எனக்குத் தான் தண்டனை!
காரணங் கேட்கையில்
புஸ்தகத்தை காட்டி
புரியாத மொழி பேசி
ஏதேதோ சொல்லி
எகத்தாளமிட்டு சிரிக்கின்றனர்
மதம் பிடித்த யானைகள்!
சண்டாளச் சக்களத்தி
நான் அவனை கையினுள் போட்டேனாம்,
இது சந்தர்ப்பம் சூழ் நிலை அறியாது
வந்த என் காதலுக்கான அவல கீதம்!
நான் ஒரு பெண் என்று கூட நினைக்காது
என்னை நடு வீதியில் நிறுத்தினார்கள்
போவோரும் வருவோரும் தம்
புஸ்த்தகத்தை காட்டி என்
மீதான கல் வீச்சுக்களை
அதிகப்படுத்தினார்கள் - இறுதியில்
மதம் பிடித்த காட்டு யானைகளின்
பிளிறல் ஒலியின் கீழ் நான் அமிழ்ந்து போனேன்!
இப்போது எனக்கு பின்னே பலர் வரிசை கட்டி!
என் அண்ணர், சிறிய பொருளைத் திருடியதற்காய்
பஞ்சாயத்தில் நிற்க வைக்கபப்ட்டான்,
ஆசன வாயின் பின் புறத்தில்
ஆறேழு தழும்புகள் கொடுத்து
அவன் நிலத்தில் அமர முடியாதவாறு
ஆக்ரோஷம் கொண்ட சவுக்கடிகள்
அவனுடலை பதம் பார்த்தது!
உலகம் விந்தைகள் பல புரிந்து
விவேகத்துடன் முன்னேறுகின்றது,
ஆனால் என் சார்ந்தோர் இப்போதும்,
புஸ்த்தகத்தை வைத்து
இன்றும் புதிய புதிய
கண்டு பிடிப்புக்கள் புஸ்த்தகத்தின் ஊடே
நிகழும் என ஏமாற்றுகின்றார்கள்!
நாங்கள் சாந்தியடையாத ஆத்மாக்கள்,
ஆனால் எங்கள் மீது
ஏறி மிதித்துத் தான்
உலகெங்கும் பிணங்கள் நடந்து
தம் குரோதங்களுக்கான
ஆதாயங்களை தேடிக் கொள்கின்றன!
சாந்தியடையாத ஆத்மாக்களின் அலறல் ஒலி
அசரீரி வடிவில் உலகெங்கும் கேட்கிறது
ஆனால் பிரம்மை பிடித்த மனிதர்கள்
ஆத்மாக்களின் சாந்தியின் மூலம்
தினமும் தம் அறியாமைக்கு
பரிகாரம் தேடிக் கொ(ல்)ள்கிறார்கள்!
***********************************************************************************************************************
வித்தியாசமான எழுத்து நடையும், படித்த உடன் மனதைக் கொள்ளை கொள்ளும் வர்ணனைகளும் எல்லா எழுத்தாளனுக்கும் கைவரப் பெறுவதில்லை. ”மூன்றாம் விதி எனும் வலைப் பதிவினைச் சகோதரன் டி.சாய்” அவர்கள் எழுதி வருகின்றார். அவர் பதிவுகளினைப் படிப்பதற்காக மூன்றாம் விதிப் பக்கம் போனாலே போதும்! அடடா! எப்படி இந்த மனுஷன் அழகிய சொல்லாடல்கள் நிறைந்த மென்மையான எழுத்துக்களைப் பிரசவிக்கின்றார் என்று நீங்களே ஒரு கணம் ஆச்சரியப்படுவீர்கள்.
************************************************************************************************************************
|
16 Comments:
மிக மிக நன்றி நண்பா - நாற்றில் எனது வலைப்பூவின் விதையையும் தூவியதில் அக மகிழ்கிறேன்.
வணக்கம் சகோ நிரூபன்,
நலமா?
///நாங்கள் சாந்தியடையாத ஆத்மாக்கள்,
ஆனால் எங்கள் மீது
ஏறி மிதித்துத் தான்
உலகெங்கும் பிணங்கள் நடந்து///
எத்தனை வலிமிக்க
வலிமையான வரிகள்...
குனியக் குனிய குட்டும் உலகமிது
உச்சந்தலை மண்ணில் மறையும் வரை குட்டுவார்கள்.
அருமையா எழுதியிருகீங்க நிரூபன்.
ஆழமான வரிகள்...
ஆனாலும் இறுதியில் நீங்கள் சொன்ன விடயம் பிடிக்கவில்லை..... என்ன என்று கேட்கின்றீர்கள் இன்னுமொரு வபை்பதிவரை பாராட்டி இருக்கின்றிர்களே. எல்லோருக்கும் சக பதிவர்களை பாராட்டும் மனநிலை இல்லை (நம்) பதிவர்களின் மனநிலை மயறவேண்டும். நான் என்ற அகங்காரத்தோடு இருக்கக்கூடாது.
என்னடா இவன் ஏதோ சொல்லி இருக்கின்றான் பதிவர்களை பாராட்ட கூடாதா என்று ஒன்னுமே புரியவில்லையே என்று தலையைப்பிய்க்க வேண்டாம்
என்ன நானும் இலங்கைப் பதிவர்தானே நானும் நீண்ட....................... காலமா பதிவெழுதுகிறேன். எனக்கும் ஏக போக உரிமை வேண்டும். பழம்பெரும் பதிவராக நான் இருக்கும்போது இன்னொரு பதிவரை எப்படி பாராட்டுவங்க...
இப்படி சில இலங்கைப் பதிவர்கள் யோசிப்பாங்க அதத்தான் நான் பின்னூட்டமாகப் பொட்டேன்.
வணக்கம் நிருபன்!
பதிவர்கள் அறிமுகத்தில் இன்று அறிமுகமாய் இருக்கும் தம்பி சாய் பிரசாத்க்கு வாழ்த்துக்கள்..!
இப்படியான புத்தகத்தை படிப்பதை விட பள்ளி புத்தகங்களை படிச்சிருந்தா பரவாயில்ல போல.. அவன் அவன் அந்த கட்டு புத்தகத்துக்கள்ளதான் தீர்வுன்னு மனித தன்மையை கொள்கிறார்கள்..!!
எங்கேயோ........
உள்க்குத்து வெளிக்குத்து எல்லாம் எதிரொலிக்குற மாரி இருக்கே..!!!??
ஹிஹி... தமாசு தமாசு.
ஆனா,
ஒவ்வொரு வரிகளிலும் ஆதங்கம் இழையோடும் தன்மை நல்லாதான் இருக்கு.
தமிழ்10 க்கு இணைக்க முடியவில்லையே.ஏன்?
இந்த முகவரி தடைசெய்யப்பட்டுள்ளது என்று வருகிறது அண்ணா.
கொஞ்சம் கவனியுங்கள்.
ஒரு ஆத்மாவின் அலறல் கேட்டுகொண்டேயிருக்கிறது வாசித்து முடித்த பிறகும்கூட !
போதை பாவிக்கமாட்டார்கள் ஆனால் மதம் என்ற போதை நன்றாகவே பருகுவார்கள்.. அந்தப்போதையிலும் பார்க்க இந்த போதை மிக கொடியது..
அதுமட்டும் இல்ல ,ஒரு ஆண் எத்தனை கல்யாணமும் செய்துக்கலாம் ஆனால் ஒரு பெண் தனக்கு கணவன் ஒத்துவராவிட்டாலும் விவாகரத்து செய்ய அனுமதி இல்லை.. இன்னமும் குட்டையிலே தேங்கி நிற்கிறார்கள்..
ஹே ஹே..
உப்புமடச் சந்தியில உங்களைப் பாடச்சொல்லிக் கூப்பிடிருக்கேன்.வந்து பாடிட்டு போங்க நிரூ !
////ஆனாலும்
எனக்கான பருவ வயதில்
என் மதம் மொழி கடந்து காதல்
பற்றிக் கொண்டது!
கட்டிக் கொள்ள உடல் துடிக்கையில்
மொழியும் மதமும் என்
உறவை வெட்டி வைக்க நினைத்தன,
////
வணக்கம் நண்பரே
சாந்தியும் சமாதானியும் உண்டாகுக(யாரோ சாந்தியை உண்டாக்கி இருக்காங்க போல) என்று சொல்லித்திரியும் இவனுங்க பெண்களுக்கு மட்டும் சம உரிமை கொடுக்காம முகத்தை கூட மூடிவைப்பானுங்களாம்.என்ன ஒரு அடிமைத்தனம்
ஆனா இவனுங்க மட்டும் ஊர் மேயுவானுங்க மதவெறி பிடிச்சு திரியும் இவர்களை இவனுங்க வணங்கும் கடவுள் கூட மன்னிக்க மாட்டார்
////இன்றோ என் காதலனை விட
எனக்குத் தான் தண்டனை!
காரணங் கேட்கையில்
புஸ்தகத்தை காட்டி
புரியாத மொழி பேசி
ஏதேதோ சொல்லி
எகத்தாளமிட்டு சிரிக்கின்றனர்
மதம் பிடித்த யானைகள்!////
ஈனப்பிறவிகள்,,எதுக்கெடுத்தாலும் புஸ்தகத்தில் சொல்லியிருக்கு என்கிறான்கள் அப்ப என்ன அர்த்தம் இவனுங்களுக்கு சுயபுத்தியே இல்லை
சிறப்பான கவிதை நண்பரே பாராட்டுக்கள்
Post a Comment