தப்பி வந்த ஓணாண்களை எட்டி உதைக்கும் வெளவால்கள்!
மேகத் திரை கூட்டங்களை விலக்கி - தம்
மேனி பார்த்து மகிழத் துடிக்கும்
முகில் கற்றைகளாய்
வன்னி மக்கள் வாழ்வு!
விரும்பிய போது
வீறாப்பு வசனங்கள் பேசி
உருவேற்றிடவும்,
வெறுத்திடும் வேளையில்
உவமை அணிகளை கையாண்டு
உச்சுக் கொட்டிடவும்
சபிக்கப்பட்ட ஓர் இனமாக
இந்த உலகினில் உள்ள
விடுதலை விரும்பிகள்
கொடு முடி வேந்தர்கள்
கொழும்புத் தமிழர்கள் பார்வையில்
இறுதிப் போரில் தப்பிய
ஈனப் பிறவிகளாய்- வன்னி மக்கள்!
முள்ளி வாய்க்காலில்இலைக் கஞ்சி குடித்து
தப்பி எலும்புந் தோலுமாக உள்ள
குழந்தையொன்று;
ஈனப் பிறவிகள் எனும்
இரவல் வார்த்தைக்கான
அர்த்தம் ஏதுமறியாத
சிந்த்தாந்திகளின் சிங்கார நடனத்தில்
சிக்கி - சின்னா பின்னப்பட்டு
சிதைவுற்று நலிகிறது
மேடைப் பேச்சுக்களிலும்
கம்பன் விழா கவியரங்கின்
பூடகமான கவிதை நிகழ்வுகளிலும்
தமிழர் வீரம் கொழும்பில்
தணலாய் எரிந்ததென
மார் தட்டுவோர் பலர் - வெளவால்களாய்
இரவில் புலிகள் அடிக்கையில்
இம்சை என பேசி விட்டு
பகலில் கவி எழுதி
பாவலரை அழைத்து வந்து
உலகில் தம்மால் தமிழ்
வாழ்கிறது என
உணர்ச்சி பொங்க பேசியோர் தான்
விடுதலையின் பங்காளர்கள்!!
வீராப்பு மிகு கவிதையும்
வீரியக் கவிதைகளும்
கொழும்பின் கவியரங்க மேடைகளால்
உலகினுக்கே உவகையாய் கிடைக்கிறது
என்றும் உணர்ச்சி பொங்கப் பேசுவோர் சிலர்!
வன்னிக் கவிதைகள் யாவும்
உருவேற்றும் களிம்பு முலாம்கள் என
ஒற்றை வார்த்தையால் ஏளனம் செய்து
இலக்கியம் படைத்து
ஈழத்தை இலக்கியமூடே
வாழ வைக்கும் முயற்சியில்
ஈடுப்பட்டோர் இன்னும் சிலர்!
எஞ்சிய வன்னி மக்கள் ஏன்
எதிரியை அழிக்கவில்லை - போரில்
துஞ்சியே அழியுமா தமிழர் சேனை என
கொழும்பு புறநானூறு பாடிய
கவிஞர்கள் பலர் இப்போது கோபத்தில்
காரணம் தமிழர்கள் போரில்
கோட்டை விட்டு விட்டார்களாம்!
அனல் பறக்கும் வார்த்தைகளை
அந்தாதிகளிலும் சிற்றிலக்கியங்களிலும்
தேடி எடுத்து - வன்னி மக்கள்
மனங்களின் மேல் வீசியெறிகின்றனர்
மானத் தமிழர்கள் சிலர்!
தமிழர் வீரம்
வன்னி மக்களால் தான் தோற்றதாம்!
தம்பட்டம் அடித்து
இரங்கற் பா பாடுகிறது
கொழும்பு கவியரங்கில் ஓர்
கொழுத்த கிழம்!
அழுந்திச் சாகையிலும்
அணைக்க யாருமற்று
வருந்தி துடிக்கையிலும்
கொழும்பில் கூத்தடித்து -போரில்
தமிழர் வீரம் உலகறியச் செய்வான்
பிரபாகரன் என
பெரு மூச்சு விட்ட கவிஞர்கள்
ஆமியின் முதுகிற்கு பின்னே
அடைக்கலமாயிருந்து
பூடக கவிதை பாடி விட்டு
இன்று விடுதலை பற்றிய
வீரியம் எதுவென
வன்னி மக்களிடம்
வினா எழுப்புகிறார்கள்!
உடம்பில் ஒரு கீறல் படாது
உணவிலும் உணர்விலும்
சிங்களம் கலந்து
வயிற்று பிழைப்பு செய்தோர்
இன்று வன்னி மக்கள் மீது
வசைமாரி பொழிகிறார்கள்!
ஒட்டி வந்த ஓணாண்களை
எட்டி உதைக்கின்றன வௌவால்கள்!
வீரம் நிறை மாந்தர் எவர் என
இன்று விவாதம் வேறு வைக்கிறார்கள்!
ஆமியின் பின்னே
அடையாள அட்டையுடன்
அடைக்கலமாயிருந்தோர்
வீரம் நிறைந்தவர்களாம்!
ஏனையோர் எல்லாம்
தேச துரோகிகளாம்!
நல்ல வேளை
வன்னி மக்களை
கொல்லுங்கள் என
மகிந்தரிடம் யாரும்
மனுக் கொடுக்கவில்லை!
வாழ்க தமில்!
வளர்க கொழு(ம்)(ப்)பின்
தமில் வீர(ழ)ம்!
பிற் சேர்க்கை: இது ஓர் வசன கவிதையாகும்!
முக்கிய குறிப்பு: இப் பதிவு ஒட்டு மொத்த கொழும்புத் தமிழர்களையும் சுட்டும் பதிவு அல்ல! உணர்ச்சி பொங்க இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்களைப் பிரித்துக் காட்டும் கொழுப்புத் தமிழர்களுக்கான பதிவு!
முக்கிய குறிப்பு: இப் பதிவு ஒட்டு மொத்த கொழும்புத் தமிழர்களையும் சுட்டும் பதிவு அல்ல! உணர்ச்சி பொங்க இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்களைப் பிரித்துக் காட்டும் கொழுப்புத் தமிழர்களுக்கான பதிவு!
|
21 Comments:
பொதுமைப்படுத்தல் என்ற பிழை தொடர்கிறது எல்லா இடங்களிலும்..
புலம்பெயர் தமிழர் - கொழும்புத் தமிழர்- வன்னித் தமிழர் - யாழ்ப்பாணத் தமிழர்- மட்டக்களப்புத் தமிழர்- திருகோணமலைத் தமிழர்- மலையகத் தமிழர்- தமிழகத் தமிழர் -
பிரிந்து இன்று பிழை பிடிப்பதில் எம்மை யாரும் மிஞ்ச முடியாது :(
உங்கள் நியாயமான கோபம் சரி.. ஆனால் ஒட்டு மொத்தமாக பொதுமைப்படுத்தல் எவ்வாறு சரியாகும் சகோ?
@LOSHAN
பொதுமைப்படுத்தல் என்ற பிழை தொடர்கிறது எல்லா இடங்களிலும்..
புலம்பெயர் தமிழர் - கொழும்புத் தமிழர்- வன்னித் தமிழர் - யாழ்ப்பாணத் தமிழர்- மட்டக்களப்புத் தமிழர்- திருகோணமலைத் தமிழர்- மலையகத் தமிழர்- தமிழகத் தமிழர் -
பிரிந்து இன்று பிழை பிடிப்பதில் எம்மை யாரும் மிஞ்ச முடியாது :(//
அன்பிற்குரிய லோசன் அண்ணா,
நேற்றைய தினம் இரு பதிவுகளில் வன்னி மக்களைப் பிரித்து எழுதியிருந்தார்கள்! அதற்கான எதிர்வினைக் கருத்துத் தான் இது!
எந்தப் பதிவுகள்? அந்தப் பதிவுகளுக்கு வீண் விளம்பரம் வேண்டாம்.. தனியாக மடலிடுங்கள் ப்ளீஸ்..
ஆனால் அதே கண்மூடித் தனமான தவறைக் கண்ணியமான நீங்களும் விடுவதா?
@LOSHAN
உங்கள் நியாயமான கோபம் சரி.. ஆனால் ஒட்டு மொத்தமாக பொதுமைப்படுத்தல் எவ்வாறு சரியாகும் சகோ?//
நான் பொதுமைப்படுத்தியோ அல்லது பிரிவினை எழுதும் வண்ணமோ என் கருத்துக்களை முன் வைக்கவில்லை அண்ணா.
ஒருசிலர் தனியே வன்னி மக்களின் உணர்வுக்ளைப் புறக்கணித்துப் பிரிவினை கூட்டி எழுதுவது பிடிக்காததன் வெளிப்பாடு தான் இப் பதிவு!
@LOSHAN
எந்தப் பதிவுகள்? அந்தப் பதிவுகளுக்கு வீண் விளம்பரம் வேண்டாம்.. தனியாக மடலிடுங்கள் ப்ளீஸ்..
ஆனால் அதே கண்மூடித் தனமான தவறைக் கண்ணியமான நீங்களும் விடுவதா//
இப்போது கொஞ்சம் வேலையாக இருக்கிறேன்! இன்று மாலை மெயில் அனுப்புகிறேன்!
மச்சி, ஏதோ ஒரு கடுப்பில பொங்கியிருக்கிறாய் எண்டு மட்டும் விளங்குது?
இது என்ன வகையான சீற்றம் மச்சி?
மச்சி, ஃப்ரீய கெடைக்கிற ப்ளாக்குல பொங்கினா அது “ அறச்சீற்றம்” என்று அர்த்தமாம்!
நீ 10 டாலர் செலவு பண்ணி டொமைன் வாங்கி, பொங்குகிறாய்!
ஸோ, இது என்ன வகையான சீற்றமாக இருக்கும்?
மச்சி, தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும் என்பது பழமொழி!
புலம்பெயர் மக்கள் என்று பொதுமைப்படுத்தும் போது நமக்கு தலையிடி, காய்ச்சல் : - )
வன்னிமக்கள் என்று பொதுமைப்படுத்தும் போது உங்களுக்கு தலையிடி, காய்ச்சல் : - )
இப்போது, கொழும்புத் தமிழர்களுக்கு....!!
ஆனாலும் மச்சி, நீ கொழும்புத் தமிழர்களைப் பொதுமைப்படுத்தியது தவறுதான்! டிஸ்கியிலே “ அல்ல” என்று சொல்லியிருப்பினும்!
வந்தேன் படித்தேன்....
உண்மையான கோபம்...
வணக்கம், நிரூ!உண்மை தான்.ஜுலை83-க்குப் பின் கொழு(ம்)ப் புத் தமிழர் மேல் தூசியே படாது காத்தோர்,வன்னித் தமிழரில்லையா?அதனால்...................!
தமிழர்களுக்குள் இத்தனை பிரிவினையா இதனால் தான் நம்மை ஆளாளுக்கு அடிக்கிரானோ....
அனல் அடிக்கிறது.
இன்னும் எவ்வளவு காலத்துக்கு தான் இப்பிடியே பிரிஞ்சு நின்று ஒருவர் முகத்தில் இன்னொருவன் சாணி அடிக்கப்போகிறோம்.. முன்னர் புலம்பெயர் தமிழர்கள் இப்போ கொழும்புத்தமிழர்கள்....அப்பிடியே இனி மட்டக்கிளப்பு திருகோணமலை என்று ஒரு ரவுண்டு வரும் போல? அதுமட்டுமில்லாமல் எப்பவுமே வன்னி மக்களை அனுதாபத்துக்குரியவர்களாகவே காட்டுவதை அந்த மக்களே விரும்பமாட்டார்கள்.
///வீரம் நிறை மாந்தர் எவர் என
இன்று விவாதம் வேறு வைக்கிறார்கள்!
ஆமியின் பின்னே
அடையாள அட்டையுடன்
அடைக்கலமாயிருந்தோர்
வீரம் நிறைந்தவர்களாம்!
ஏனையோர் எல்லாம்
தேச துரோகிகளாம்!// யார் அவ்வாறு சொன்னது??? ஆதாரம் இருக்குதா பாஸ்? அவ்வாறு ஒருவன் சொல்லியிருந்தாலும் அவன் சார் பகுதியில் வாழும் ஓட்டு மொத்த மக்களின் உணர்வுகளை கேலிக்குரியதாக்குவது மிகவும் கண்டனத்துக்குரியது.
@கந்தசாமி.
அப்பிடியே இனி மட்டக்கிளப்பு திருகோணமலை என்று ஒரு ரவுண்டு வரும் போல? அதுமட்டுமில்லாமல் எப்பவுமே வன்னி மக்களை அனுதாபத்துக்குரியவர்களாகவே காட்டுவதை அந்த மக்களே விரும்பமாட்டார்கள்./
நீங்கள் சொல்வது சரி பாஸ்....ஆனால் வன்னி மக்கள் மீது பலர் சேறு பூசுகிறார்களே! அவர்கள் பற்றி உங்கள் கருத்து என்ன? நேற்றும், நேற்று முன் தினமும் இணையத்தில் வந்த பிரிவினைப் பதிவுகளை நீங்கள் படிக்கலையா?
@கந்தசாமி.
தேச துரோகிகளாம்!// யார் அவ்வாறு சொன்னது??? ஆதாரம் இருக்குதா பாஸ்? அவ்வாறு ஒருவன் சொல்லியிருந்தாலும் அவன் சார் பகுதியில் வாழும் ஓட்டு மொத்த மக்களின் உணர்வுகளை கேலிக்குரியதாக்குவது மிகவும் கண்டனத்துக்குரியது.
/
இப்படியான பொருள் படத் தான் எழுதியுமிருக்கிறார்கள். ஒருவனுக்காக நான் இங்கே ஒட்டு மொத்த மக்கள் உணர்வையும் சீரழிக்கவில்லை! ஒரு சமூகத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கம்பன் கழகம், தமிழ்ச் சங்கம் ஆகியவற்றினூடாக கொழும்பில் போர் இடம் பெறும் போது இடம் பெற்ற கேலிக் கூத்துக்களையும், இன்றைய காலத்தில் அவர்கள் வன்னி மக்களை எள்ளி நகைக்கும் பாங்கினையும் தான் நான் இங்கே குத்தி சாரி சுட்டி எழுதியுள்ளேன்!
பாஸ்...நேற்று ஐடியா மணி பதிவில் ஒரு வகையாக கருத்து எழுதினீங்க. இன்று என் பதிவில் இன்னோர் விதமாக நான் கொழும்புத் தமிழர்களைத் தாக்குவதாக எழுதியிருக்கிறீங்க! இது என்ன விளையாட்டு?
அப்போ நேற்று ஐடியாமணி எந்தவூர் மக்களைத் தாக்கிப் பதிவு போட்டார்? அது பற்றிக் கொஞ்சம் வாய் திறந்திருக்கலாம் தானே?
நல்ல பதிவு நண்பரே..
////பாஸ்...நேற்று ஐடியா மணி பதிவில் ஒரு வகையாக கருத்து எழுதினீங்க. இன்று என் பதிவில் இன்னோர் விதமாக நான் கொழும்புத் தமிழர்களைத் தாக்குவதாக எழுதியிருக்கிறீங்க! இது என்ன விளையாட்டு?
அப்போ நேற்று ஐடியாமணி எந்தவூர் மக்களைத் தாக்கிப் பதிவு போட்டார்? அது பற்றிக் கொஞ்சம் வாய் திறந்திருக்கலாம் தானே?///உண்மையிலே மணியின் பதிவு படித்தனிங்களா? அவர் சொல்ல வந்த விடயமும் நீங்கள் இந்த பதிவில் குறிப்பிட்டிருக்கும் விடயமும் ஒன்றா???
மனதை சங்கடப் படுத்தும் வசன கவிதை.
முள்ளி வாய்க்காலில்
இலைக் கஞ்சி குடித்து
தப்பி எலும்புந் தோலுமாக உள்ள
குழந்தையொன்று;
ஈனப் பிறவிகள் எனும்
இரவல் வார்த்தைக்கான
அர்த்தம் ஏதுமறியாத
சிந்த்தாந்திகளின் சிங்கார நடனத்தில்
சிக்கி - சின்னா பின்னப்பட்டு
சிதைவுற்று நலிகிறது
///
வரிகளாலும்,புகைப்படத்தாலும் வலியை புரிந்து கொள்ள முடிகிறது.
Post a Comment