Monday, December 26, 2011

பதிவுலகில் வேகமாகப் பரவி வரும் வைரஸ்- பதிவர்களே உஷார்!

எம் மன உணர்வுகளை, எமக்குப் பிடித்த விடயங்களை, எங்கள் உள்ளத்தினுள் நிழலாடும் சின்னச் சின்னச் சுவாரஸ்யங்களை இன்று இணையத்தினூடாகப் பகிர்ந்து கொள்ளக் கிடைத்திருக்கும் அதிரசம் தான் வலைப் பூக்கள். சின்ன வயசிலிருந்து நாமும் பத்திரிகையில் எழுத வேண்டும், எம் படைப்புக்களும் பத்திரிகைகளில் வர வேண்டும் எனும் ஆவல் மேலிட பல படைப்புக்களைப் பத்திரிகைகளுக்கு அனுப்பி விட்டு எப்போ எம் படைப்பு பிரசுரமாகும் என்று பார்த்த விழி பூர்த்திருக்கப் பட படப்புடன் காத்திருப்போம். ஆனால் இன்று அந்தக் கவலை இல்லை. இணையமும் கணினியும் இருந்தாலே போதும் நொடிப் பொழுதில் எம் படைப்புக்கள் அகில உலகம் எங்கும் கொண்டு செல்லப்பட்டு விடும். 
ஒவ்வோர் படைப்பாளியும் ஓர் படைப்பினைப் பிரசவிக்கையில் தானும் ஓர் குழந்தையினைப் பிரசவிக்கின்றான் எனும் உணர்வினைப் பெறுவதாக இலக்கிய அறிஞர்கள் கூறுகின்றார்கள்.நாம் ஒவ்வொருவரும் எம் ஆக்கங்களை இணையத்தில் எழுதுவதற்கான நோக்கம் என்ன? பிறர் எம் படைப்புக்களைப் படிக்க வேண்டும். எம் படைப்புக்களின் குறை நிறைகளைச் சுட்டிக் காட்டி எம்மை மெருகேற்ற வேண்டும்.எம் எழுத்துக்களைக் செம்மைப்படுத்திட உதவிட வேண்டும் எனும் நல் நோக்கத்திற்காகத் தானே. அப்படித் தான் ஒவ்வோர் படைப்பாளியும், ஒவ்வோர் பதிவர்களும் தம் படைப்புக்களைப் பதிவுகளாக வலையில் எழுதுகின்றார்கள் என நாம் நினைக்கையில் சில விதி விலக்கான மனிதர்களும் அன்றாடம் வலைப் பதிவுகளில் வந்து போகின்றார்கள் என்பதையும் நாம் அறியாமலிருப்போமா?

நாம் ஒவ்வொருவரும் படைப்புக்களை எழுதி விட்டு பிறரிடம் எம் படைப்புக்கள் சென்று சேர வேண்டும் என நினைக்கும் அதே நேரம், ஒரு சில காமெடி பீஸ் கூட்டங்கள் பிறர் படைப்புக்களைப் படிக்காது தம் படைப்புக்களைப் பிறர் படிக்க வேண்டும் எனும் நினைப்பில் வியாபார விளம்பரத் திட்டங்களை மிகவும் இலாவகமாக முன்னெடுக்கின்றார்கள். இவர்களின் முக்கிய குறிக்கோள் தம் ப்டைப்புக்கள் எல்லோரிடமும் சென்று சேர வேண்டும். ஆனால் பிறர் படைப்புக்களைப் படிக்காது நாம் கமெண்ட் போட்டு பிறரை மொய்க்கு மொய் அடிப்படையில் பின்னூட்டம் போட அழைக்க வேண்டும் என்பதாகத் தான் இருக்கும். 
இதிலும் சிலர் பிறர் வந்து தம் வலைக்கு கமெண்ட் போட்டாலே போதும். அது என்ன வகையான கமெண்டாக இருந்தாலும் ஆச்சரியம் இல்லை எனும் நினைப்பில் அலைகிறார்கள். காலையில் நம்ம அட்ராசக்க சிபி செந்தில்குமாரின் வலையிலிருந்து இந்த மாதிரியான மனிதர்களின் அட்டகாசம் ஆரம்பிக்கும். சிபி அண்ணர் போடும் டுவிட்ஸ்கள் வெளியாகி 60 செக்கன்ஸ் ஆக முன்பதாகவே "அண்ணே கலக்கிட்டீங்க! சூப்பரா இருக்கு அண்ணே! அத்தனையும் பிரமாதம்" என மூன்று கமெண்டுகளைப் போட்டு விட்டு அதன் கீழே இன்று என் வலையில் என்று தம் பதிவின் லிங்கினையும் கொடுத்து விட்டுப் போவார்கள். கொய்யாலே...என்ன சிபி அண்ணர் காலையில் எந்திருச்சு குளிக்கும் போது உலக மகா சாதனையா பண்ணிட்டிருக்காரு! சூப்பர் என்று போட்டு அந்த மனுசனையும் நோகடித்து அவர் பதிவுகளைப் படிப்போரையும் நோகடிக்கிறீங்க. 

சிபி அண்ணரின் ப்ளாக்கில் கைவிஷேடமாகத் தொடங்கும் கமெண்ட் மழை அன்று மாலை வரை சூப்பர், அருமை நண்பா, கலக்கிட்டீங்க எனும் பாணியில் தொடர்ந்து கொண்டிருக்கும். காலையில் அட்ராசக்க ப்ளாக்கில இருந்து ஆரம்பித்தால் அப்படியே இரவு பத்து மணிக்கு வெளியாகும் நம்ம கவுன்சிலர் அண்ணர் சண்முகலிங்கத்தின் பதிவில் போய் முடிச்சுக்குவார்கள் இந்த மாதிரியான கமெண்ட் பார்ட்டிகள். இந்த மாதிரியான கமெண்டுகளைப் போடுவதில் மூன்று ஆண் பதிவர்களும், மூன்று பெண் பதிவர்களும் பலே கில்லாடிகள். சில புதுப் பதிவர்களுக்கு இவர்களைப் பற்றி அறிந்து கொள்ளவே நீண்ட காலம் பிடிக்கும். இவர்களின் முக்கிய நோக்கம் தம் படைப்புக்களைச் சந்தைப்படுத்துவது தான். 

ஊர்ந்து செல்லும் கடல் உணவின் பெயர் கொண்ட பதிவர் ஒருவர் ரொம்ப காமெடியா கமெண்ட் அடிப்பார். நீங்க நீளமா பதிவு எழுதினாலும் சரி நீலமா எழுதினாலும் சரி "ம்...ம்.." அப்படீன்னு கமெண்ட் அடிச்சிட்டு போடுவாருங்க. பதிவு வெளியாகி 60 செக்கனிற்குள் வாழ்த்துக்கள்! பகிர்விற்கு நன்றின்னு போட்டிட்டு அடுத்த வலைக்குப் போய்க் கிட்டே இருப்பாரு. இவர்கள் எல்லாம் ஒரே கமெண்டை Notepad இல் அல்லது Word File இல் எழுதி Save பண்ணி வைச்சிருப்பாங்க என்று நினைக்கிறேன். இல்லேன்னா "கூடங்குளம் மக்கள் அவலப்படுகின்றார்கள் என்று கூடல் பாலா அண்ணர் எழுதிய பதிவில் போய் "அருமை நண்பா! தொடரட்டும்" என்று பின்னூட்டம் போடுவார்களா? அடுத்து நாம் பார்க்கவிருக்கும் நபர் உங்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்தவர். 

உண்மையிலே ரொம்ப நல்ல மனுசன். எல்லோருக்கும் விருது கொடுப்பதில் செம கில்லாடிங்க ஆளு.ஆனால் அவர் போடும் கமெண்டுகள் இருக்கே...பதிவிற்கு சம்பந்தமே இல்லாதவை. "ஈழத்தில் இறுதிப் போர் இடம் பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் வானத்திலிருந்து கீழே வெடிக்கையில் சிறு சிறு துண்டுகளாகச் சிதறி வெடிக்க வல்ல பொஸ்பரஸ் குண்டுகளையும், கொத்துக் குண்டுகளையும் இலங்கை இராணுவம் மக்கள் மீது இடை விடாது பொழிந்து கொண்டிருந்தது. மக்கள் பலர் உணவினைப் பெறுவதற்கு கூட பங்கரை விட்டு எழுந்திருக்க முடியாதவர்களாக அவலத்தினுள் அவலத்தினைச் சுமந்து கொண்டிருந்தார்கள்" அப்படீன்னு ஓர் பதிவில் எழுதி மக்களின் துன்பத்தினை விளக்கியிருந்தால் எப்படி கமெண்ட் போட்டு விட்டு போவார் தெரியுமா? கலக்கல் நண்பா! அருமை! 
அண்மையில் நாஞ்சில் மனோ அண்ணர் தன்னுடைய ஓர் பதிவில் கேரளத்தில் இருக்கும் தனது மச்சினருடன் போன் பேசிக் கொண்டிருக்கையில் கலவரம் இடம் பெறும் இடங்கள் பற்றியும், சேதங்கள் பற்றியும் சொல்லியதாகப் பதிவில் குறிப்பிட்டிருந்தார். அதற்கு இந்த மன்னர் போய் எப்படி கமெண்ட் போட்டார் தெரியுமா? ஹே...ஹே...சூப்பர் அண்ணே! தொடரட்டும்! அடக் கன்றாவி! தமிழக மக்கள் கேரள தமிழக எல்லையில் தொல்லைக்கு மேல் தொல்லைகளை அனுபவிப்பது சூப்பரா? இல்லே அந்த தொல்லைகள் மேலும் தொடரட்டுமா? இப்போது இந்த இருவரோடு இன்னும் ஒரு நபர் புதிதாக இணைந்திருக்கிறார். அவர் வேறு யாரும் அல்ல. திண்டுக்கல்லில் இருந்து கமெண்ட் போடும் அன்பர். ரொம்பவே சுவாரஸ்யமாகப் போடுவார்.

"முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக இடம் பெறும் கலவரத்தில் தன் உறவினர் ஒருவர் காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பதிவர் ஒருவர் எழுதியிருந்தார். அதற்கு இந்தப் புண்ணியவான் போய் போட்ட கமெண்ட் என்ன தெரியுமா? அருமை நண்பா! பகிர்விற்கு நன்றி! சூப்பர்! தொடரட்டும்! அடப் பாவமே! இந்தப் பதிவினை எழுதிய அன்பரின் மன நிலை எப்படியிருந்திருக்கும் என்று கூட யோசித்துப் பார்க்க மாட்டீங்களா? "ஈழ மக்களின் அவலங்களைப் பற்றி எழுதும் பதிவுகள், சில பதிவர்களின் துயரப் பதிவுகளில் இம் மூவரின் கமெண்டுகளும் ஒரே மாதிரியாக கிண்டல் செய்யும் நோக்கில் இருப்பதைப் பார்த்து தனி மடல் அனுப்பினேன். ராஜா பதிவருக்கும், திண்டுக்கல் அன்பருக்கும் குறைந்தது ஐந்திற்கும் மேற்பட்ட தனி மடல் அனுப்பி அன்பாக எடுத்துச் சொன்னேன். கேட்டார்களா? ரொம்பவே காமெடியாக பின்னூட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். 
இனி அவர்களின் வழியினை நாமளும் தொடருவோம் என்று கெளம்பினேன். அன்னைக்கு இளைய தளபதி விஜயின் புதிய பட ஸ்டில்களை வைத்து இம் மூவரில் ஒருவர் பதிவு போட்டிருந்தார். அதே தினம் மனோ அண்ணர் தன் மகளின் பிறந்த நாள் பற்றிய முன் அறிவித்தல் பதிவினையும் போட்டிருந்தார். விஜய் பட ஸ்டில்களைப் பதிவில் போட்ட அன்பர் மனோ அண்ணர் பதிவில் போய் கலக்கிட்டீங்க நண்பா! இன்று என் வலையில் அப்படீன்னு போட்டிருந்தார். இதே போல என் வலையிலும் சம்பந்தமே இல்லாம ஓர் பின்னூட்டம். உடனே அவர் வலைக்குப் போயி விஜய் படத்திற்கு தொடர்பே இல்லாமல் பின்னூட்டம் போட்டதும் தான் விழித்துக் கொண்டார். உடனே இனிமேல் அப்படித் தவறுகள் இடம் பெறாது என்று சொல்லி சமாளித்திட்டார். ஆனால் இந்த திண்டுக்கல் அன்பர் இருக்காரே. ரொம்ப புத்திசாலியான ஆளுங்க.

நமக்கெல்லாம் அருமை நண்பா! வாழ்த்துக்க நண்பா! பகிர்விற்கு நன்றி நண்பா அப்படீன்னு கமெண்ட் போட்டு விட்டு போய் விட, நானும் போய் அவரோட வலையில் அவர் எழுதியிருந்த பதிவிற்கு "வாழ்த்துக்கள் நண்பா! அருமை! கலக்கிட்டீங்க! அப்படீன்னு போட்டேன்! என் பின்னூட்டத்தை இன்னும் பிரசுரிக்கலை! இதே போல் கடுப்படைந்த நம்ம வீடு சுரேஷ்குமாரும் போயி பதிவிற்கு சம்பந்தமே இல்லாம கமெண்ட் போட்டாரு! ஆனால் அதனைக் கூடப் படிச்சுப் பார்க்கமா இந்தாளு வெளிட்டிருக்காருங்க. ஹே...ஹே.. அப்புறம் தனி மெயில் அனுப்பி விளக்கம் கேட்டால், இனிமேல் அவ்வாறு தவறுகள் இடம் பெறாமல் பார்த்துக்கிறேன் என்று சொல்லி ஒரு சமாளித்தல் வேறு. இனிப் பெண் பதிவர்கள் பற்றிப் பார்ப்போமா?

பெண் பதிவர்களுள் அம்மன் பெயர் கொண்ட இரு பெண் பதிவர்கள் பலே கில்லாடிகள். அவர்கள் போடும் கமெண்டுகள் எப்பவுமே சுவாரஸ்யமானவை. எப்படீன்னு கேட்கிறீங்களா? உங்க ப்ளாக்கில 25 பேர் கமெண்ட் போட்டிருந்தாங்க என்றால் அதில பத்தாவதாக யாரோட கமெண்ட் இருக்கோ அந்த கமெண்டையும் காப்பி பண்ணி உங்க ப்ளாக்கில போட்டு விட்டு போய் விடுவாங்க. இன்னோர் பதிவர் என்ன பண்ணுவார் என்றால் வணக்கம் சகோ! பகிர்விற்கு நன்றி! த. மணம் 9 அப்படீன்னு போட்டு விட்டு போய் விடுவார். அவர் வலைக்குப் போயி நானும் இதே மாதிரி கமெண்ட் போட்டேன். அடக் கறுமம்! நீங்க ஏன் என் பதிவினைப் படிக்காது கமெண்ட் போடுறீங்க என்று ஓர் கண்டன மெயில் அனுப்பினாரு பாருங்க! ஸ்பப்பா.......முடியல! 

இன்னோர் பெண் பதிவர் பதிவிற்கு சம்பந்தமே இல்லாமல் சர்ச்சையினை கிளப்பும் பின்னூட்டம் எழுதி விட்டு போய்க் கிட்டே இருப்பாரு. தலைப்பினைக் கொஞ்சம் பரபரப்பாக வைத்து நீங்கள் ஓர் பதிவினை எழுதியிருந்தால் "ரொம்பவே ஆபாசமான பதிவாக இருக்கே! கொஞ்சம் பதிவில் திருத்தம் செய்யலாமே" அப்படீன்னு போட்டு விட்டு போய் விடுவார். இவரோட கமெண்டை பார்த்து உங்க ப்ளாக்கிற்கு கமெண்ட் போடும் ஏனைய நபர்கள் எப்படி கமெண்ட் போடுவார்கள் தெரியுமா? ஹே...ஹே...என்னங்க சார் பதிவு ஒரே ஆபாசமா இருக்கு! என்னது அரசியல்வாதியை இப்படி திட்டி அசிங்கமா எழுதிட்டீங்களே! அப்படீன்னு போட்டு விட்டு போய்க் கிட்டே இருப்பாங்க. 

நாம எவ்ளோ நாளைக்குத் தான் சொல்லிக் கொண்டு இருக்கிறது. சொன்னாலும் திருந்திற ஜென்மங்களா இருக்காங்களா? இல்லையே! ஒரு சில பதிவர்கள் என்ன பண்ணுவாங்க என்றால் பின்னூட்டங்களை மாத்திரம் படித்து பதிவிற்கு கமெண்ட் போடுவாங்க. நீங்க எழுதும் பதிவில் முதலாவது பின்னூட்டத்தினை கொஞ்சம் சர்ச்சைக்குரியதாக பதிவிற்கு தொடர்பே இல்லாமல் இந்த மாதிரி ரகத்தைச் சேர்ந்த பதிவர்கள் வந்து போட்டாலே போதும். அப்புறம் உங்க பதிவின் திசையே மாறிடுமுங்க.  ஹே...ஹே. சிபி செந்தில்குமாரின் ஒரு நகைச்சுவைப் பதிவில் "என்னது நயன்தாரா பிரபு தேவாவை கழற்றி விட்டிடாங்களா?" என்று ஒருத்தர் போய் பின்னூட்டம் போட்டார் பாருங்க. அப்புறமா 10 பின்னூட்டங்கள் இன்று என் வலையில் என்ற லிங்குடன் சம்பந்தமே இல்லாம சிபி அண்ணரின் பதிவிற்கு அடிச்சிருக்காங்க. இந்த கொடுமைக்காரங்க. 

இன்னோர் பரிதாபமான விஷயம் என்னவென்றால் நம்ம விக்கி உலகம் ப்ளாக் ஓனர் விக்கி அண்ணன் படுற அவஸ்தை இருக்கே! சொல்லி மாளாதுங்க. கிச்சிளிக்காஸ் என்று அண்ணரும் ஐந்து வீடியோக்களை வலையில் போட்டு விட்டு போய் விடுவாரு. அவர் வீடியோக்களைப் பார்த்து கமெண்ட் போட குறைந்தது பத்து நிமிஷம் எடுக்கும். நம்ம பாசக்காரப் பசங்க என்ன பண்ணுவாங்கன்னா? "அண்ணே காணொளிகள் ஒவ்வொன்றும் கலக்கல்" அப்படீன்னு பதிவு வெளியாகி ஒரு நிமிடத்தினுள் கமெண்ட் போட்டு விட்டு போய் விடுவாங்க. ஹே....ஹே... நண்பர்களே! உங்கள் பதிவுகளை விளம்பரம் செய்வது தவறு அல்ல. நீங்கள் தாரளமாக விளம்பரம் செய்யலாம். உங்களால் முடிந்த வரை ஒரு சிலருக்காச்சும் பதிவினைப் படித்துக் கமெண்ட் எழுதினால் அவர்களும் உங்கள் பதிவினைப் படிப்பார்கள் அல்லவா? 

இந்தப் பதிவிற்கும் பாருங்க! பதிவினைப் படிக்காது மேலே குறிப்பிட்டுள்ள நபர்களுள் ஒருவர் வந்து அருமை! வாழ்த்துக்கள்! பகிர்விற்கு நன்றி! அப்படீன்னு கண்டிப்பா போடத் தான் போறாருங்க. ஹி..ஹி...  மொய்க்கு மொய் என்று இப் பதிவர்களைக் கண்டிக்காது, அவர்கள் செய்யும் இந்த தவறினைச் சுட்டிக்காட்டாது நாமும் இருக்கப் போகிறோமா? இல்லே இவர்களிற்கு நல்ல பாடம் புகட்டி ஆரோக்கியமான வலையுலகைக் கட்டியெழுப்ப போகின்றோமா? 
பிற் சேர்க்கை: வெகு விரைவில் எதிர்பாருங்கள். பதிவுலகில் சமூக சிந்தனையாளராகவும், சமூகத்திற்கு முன் மாதிரியான பதிவுகளையும் எழுதிக் கொண்டு தமிழ் நாட்டின் - - - - பகுதியில் உள்ள BSNL கிளையில் பணி புரியும் ஊழியர்களை கெட்ட வார்த்தைகளால் திட்டி மிருங்களைப் போல கேவலமாக நடாத்தும் ஓர் பெண் பதிவரைப் பற்றிய ஒலிப் பதிவும் ஆதாரங்களும், அதனுடன் தொடர்புடைய பதிவுகளும்! உங்கள் நாற்று வலையில்! 

வலைப் பதிவுகளூடாக உங்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட பதிவர்களின் மற்றுமோர் புது முயற்சி இது. உங்கள் மனங்களைக் கொள்ளை கொள்ள; உங்கள் உள்ளங்களுக்குள் புதிய சில மொழிச் சொல்லாடல்களை அறிமுகப்படுத்திட இந்தப் பதிவர்கள் கரங் கோர்த்துள்ளார்கள். இது பற்றி நீங்களும் அறிய வேண்டும் என ஆவலா? இங்கே கிளிக் செய்யுங்கள்.

இப் பதிவிற்கான படங்களை வழங்கிய வீடு வலைப் பதிவு சுரேஸ்குமார் அவர்களுக்கும், நிகழ்வுகள் வலைப் பதிவு கந்தசாமிக்கும் உளமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும். 

106 Comments:

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

ஹா ஹா நீண்ட இடைவெளிக்குப்பின் ஒரு காமெடி கலக்கல்

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

விக்கி தக்காளி நல்ல பையன், அவனைப்போய் மறை முகமாக தாக்கியது மனசுக்கு சந்தோஷமாக இருக்கிறது.. நேரடியாக தாக்கி இருந்தால் இன்னும் சந்தோசமாக இருந்திருக்கும் ஹி ஹி

Unknown said...
Best Blogger Tips

அருமை நண்பா...!சூப்பர் கட்டுரை...!துணிச்சலான முயற்சி..இன்று என் வலையில் ஆயா சுட்ட போண்டா...அவ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்

ஹா ஹா நீண்ட இடைவெளிக்குப்பின் ஒரு காமெடி கலக்கல்
//

ஆகா..அண்ணே நமக்கெல்லாம் இது காமெடி கலாட்டா. ஆனால் இப் பதிவில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு இது ஓர் கொலை வெறி பரோட்டா.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்

விக்கி தக்காளி நல்ல பையன், அவனைப்போய் மறை முகமாக தாக்கியது மனசுக்கு சந்தோஷமாக இருக்கிறது.. நேரடியாக தாக்கி இருந்தால் இன்னும் சந்தோசமாக இருந்திருக்கும் ஹி ஹி
//

ஹே...ஹே...

இது வேறையா...இது எங்கே பாஸ்..இருக்கு!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

என்னம்மா கோர்த்து விடுறாங்க பாருங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@veedu

அருமை நண்பா...!சூப்பர் கட்டுரை...!துணிச்சலான முயற்சி..இன்று என் வலையில் ஆயா சுட்ட போண்டா...அவ்வ்வ்வ்வ்வ்
//

பகிர்விற்கு நன்றி நண்பா.

உங்கள் பின்னூட்டங்கள் என்னை மேலும் வளப்படுத்துகிறது. உங்களிடமிருந்து இப்படி ஓர் பின்னூடமா?
எதிர்பார்க்கவே இல்லை சார்,

தொடர்ந்தும் உங்கள் வருகையினை எதிர்பார்க்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@veedu

அருமை நண்பா...!சூப்பர் கட்டுரை...!துணிச்சலான முயற்சி..இன்று என் வலையில் ஆயா சுட்ட போண்டா...அவ்வ்வ்வ்வ்வ்
//

பகிர்விற்கு நன்றி நண்பா.

உங்கள் பின்னூட்டங்கள் என்னை மேலும் வளப்படுத்துகிறது. உங்களிடமிருந்து இப்படி ஓர் பின்னூடமா?
எதிர்பார்க்கவே இல்லை சார்,

தொடர்ந்தும் உங்கள் வருகையினை எதிர்பார்க்கிறேன்.

Unknown said...
Best Blogger Tips

ஏன்யா மாப்ள...என்னமோ பிளான் பண்ணிட்டீர் போல..ஹிஹி....!

நிரூபன் said...
Best Blogger Tips

@விக்கியுலகம்

ஏன்யா மாப்ள...என்னமோ பிளான் பண்ணிட்டீர் போல..ஹிஹி....!
//

ஹே...ஹே..

அண்ணே இதில உங்களையும் ஒருத்தர் கோர்த்து விட்டிருக்காரு பாருங்க்;-)))

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Unknown said...
Best Blogger Tips

"சி.பி.செந்தில்குமார் said...
விக்கி தக்காளி நல்ல பையன், அவனைப்போய் மறை முகமாக தாக்கியது மனசுக்கு சந்தோஷமாக இருக்கிறது.. நேரடியாக தாக்கி இருந்தால் இன்னும் சந்தோசமாக இருந்திருக்கும் ஹி ஹி"

>>>>

விட்ரா விட்ரா நீ பாக்காததா...ஹிஹி!

Unknown said...
Best Blogger Tips

எல்லாரும் இப்படித்தானே கமெண்ட் போடுறாங்க...நான் முக்கிமுக்கி ஒவ்வறு எழுத்தா படிச்சு வகைப்படுத்தி குறையை சொல்லி நிறையை சொல்லி அவர்களை மேம்படுத்திட்டு வரனும்...நான் இளிச்சவாயனா?படிக்கிறதுக்கு தானே சிரமப்பட்டு டைப் செய்து போடுகின்றோம் அதுக்கு படிக்காம கமெண்ட் போடுறவங்களை விட online பார்ட்டி கமெண்ட் போடுவார் பாருங்க அவர் மேல்....நீங்க தவறா நினைக்க வேண்டாம் இதுவரை இதுக்கு மேல்....என் கமெண்ட் பதிவை படிச்சிட்டுத்தான் இருக்கும்....

K.s.s.Rajh said...
Best Blogger Tips

அருமை கலக்கீட்டிங்க

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

முத்தரசு said...
Best Blogger Tips

வணக்கம்

வைரஸ்க்கு, இவ்வளவு தெளிவான ஆலோசனை அன்பா வழங்கி உள்ளீர்கள் - பார்க்கலாம்

Mathuran said...
Best Blogger Tips

கலக்கீட்டிங்க அண்ணே
நமீதா பற்றிய குறிப்புகள் அருமை

இன்று என் வலையில்
ஓடிப்போய்விட்டாரா நமீதா?

Mathuran said...
Best Blogger Tips

ஹா ஹா.. நிரூ நல்லா கடுப்பேத்துறாங்கய்யா.. இப்பிடியான ஆக்களின்ர கமெண்ட்ஸ ஸ்பாம் பண்ணிவிடவேண்டும்....

Mathuran said...
Best Blogger Tips

ரெண்டு பெண் பதிவர்கள தெரியும்
.. அதுயாரு மூன்றாவது ஆள்

Mathuran said...
Best Blogger Tips

//பதிவுலகில் சமூக சிந்தனையாளராகவும், சமூகத்திற்கு முன் மாதிரியான பதிவுகளையும் எழுதிக் கொண்டு தமிழ் நாட்டின் - - - - பகுதியில் உள்ள BSNL கிளையில் பணி புரியும் ஊழியர்களை கெட்ட வார்த்தைகளால் திட்டி மிருங்களைப் போல கேவலமாக நடாத்தும் ஓர் பெண் பதிவரைப் பற்றிய ஒலிப் பதிவும் ஆதாரங்களும், //

ஆஹா... நீங்க பெரிய புலனாய்வாளர்தான் போங்க...

K.s.s.Rajh said...
Best Blogger Tips

சபாஸ் பாஸ் சிலரின் முகத்திரையை கிளித்திருகீங்க ஒரு பதிவுக்கு அருமை என்று கூட கமண்ட் போடலாம்
ஆனால்
”ம்”
இப்படி கமண்ட் போட்டால்
அவங்களை என்ன வென்று சொல்வது.

Mathuran said...
Best Blogger Tips

நிரூ.. ஒன்று தெரியுமா?

நான் கொமண்ட்ஸ் போடுவது குறைவு.. நேரம் இல்லாததால் எனக்கு கமெண்ட்ஸ் போடுபவர்களுக்கும் ஒன்று இரண்டு புதியவர்களுக்கும் கமெண்ட்ஸ் போடுவேன். இந்த டெம்ப்ளேட் கமெண்ட்ஸ் விளம்பர கமென்ட்ஸ் காரர்களுக்கும் போட விருப்பம் இல்லாவிட்டாலும் அவர்களை கடுப்பேற்றவேண்டும் என்பதற்காக அவர்கள் போடதிலும் பார்க்க மோசமாக போட்டுவிடுவேன். ”அ” வில் இருந்து ”ஃ” வரை ஏதாவது ஒரு எழுத்தை போட்டுவிடுவேன்.. ஹி ஹி

Unknown said...
Best Blogger Tips

ஆண் பதிவர்கள் பிடிபட்டுட்டாங்க..அந்த மூணில ரெண்டு பெண் பதிவர்கள் தான் பிடிபட மாட்டேங்கிறாங்க..
வைரச்னு சொன்னோன பயந்திட்டேன் என்ன ஏதோன்னு..இதுவா மேட்டரு?ஹிஹி கடிச்சு குதறியாச்சு..இந்த லிங்க்'எ கொண்டு போயி அவங்க கமென்ட்'ல போடுங்க..

நிரூபன் said...
Best Blogger Tips

@விக்கியுலகம்

ஏன்யா மாப்ள...என்னமோ பிளான் பண்ணிட்டீர் போல..ஹிஹி....!
//

அண்ணே, இதுக்கெல்லாமா ப்ளான் பண்ணுவாங்க. பல நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து சின்னப் ப்ளான் பண்ணியிருக்கோம். அவ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@veedu

எல்லாரும் இப்படித்தானே கமெண்ட் போடுறாங்க...நான் முக்கிமுக்கி ஒவ்வறு எழுத்தா படிச்சு வகைப்படுத்தி குறையை சொல்லி நிறையை சொல்லி அவர்களை மேம்படுத்திட்டு வரனும்...நான் இளிச்சவாயனா?படிக்கிறதுக்கு தானே சிரமப்பட்டு டைப் செய்து போடுகின்றோம் அதுக்கு படிக்காம கமெண்ட் போடுறவங்களை விட online பார்ட்டி கமெண்ட் போடுவார் பாருங்க அவர் மேல்....நீங்க தவறா நினைக்க வேண்டாம் இதுவரை இதுக்கு மேல்....என் கமெண்ட் பதிவை படிச்சிட்டுத்தான் இருக்கும்....
//

அவ்....ஒன்லைன் பார்ட்டியை இப்போ காணவே இல்லை நண்பா.

நிரூபன் said...
Best Blogger Tips

@K.s.s.Rajh

அருமை கலக்கீட்டிங்க
//

உங்கள் கருத்துக்கள் என்னை வளம்படுத்துகிறது. ரொம்ப நன்றி.

நிரூபன் said...
Best Blogger Tips

@மனசாட்சி

வைரஸ்க்கு, இவ்வளவு தெளிவான ஆலோசனை அன்பா வழங்கி உள்ளீர்கள் - பார்க்கலாம்
//

ஹே...ஹே..
வணக்கம் நண்பா,

ரொம்ப நன்றி.

நிரூபன் said...
Best Blogger Tips

@மதுரன்
கலக்கீட்டிங்க அண்ணே
நமீதா பற்றிய குறிப்புகள் அருமை

இன்று என் வலையில்
ஓடிப்போய்விட்டாரா நமீதா?//

யோ...நான் நயன்தாரா பற்றிப் பேசிக் கொண்டிருக்கேன், நீங்க நமீதா பற்றிச் சொல்லுறீங்க.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@மதுரன்

ஹா ஹா.. நிரூ நல்லா கடுப்பேத்துறாங்கய்யா.. இப்பிடியான ஆக்களின்ர கமெண்ட்ஸ ஸ்பாம் பண்ணிவிடவேண்டும்....
//

ஸ்பாம் பண்ணினாலும் கேட்கிறாங்களா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@மதுரன்
ரெண்டு பெண் பதிவர்கள தெரியும்
.. அதுயாரு மூன்றாவது ஆள்/

இது கூட தெரியாமலா பாஸ்..
அவர் தானுங்க சர்ச்சையை கிளப்பீட்டு போயிடுவாரே..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@K.s.s.Rajh
சபாஸ் பாஸ் சிலரின் முகத்திரையை கிளித்திருகீங்க ஒரு பதிவுக்கு அருமை என்று கூட கமண்ட் போடலாம்
ஆனால்
”ம்”
இப்படி கமண்ட் போட்டால்
அவங்களை என்ன வென்று சொல்வது.//

பதிலுக்கு நீங்களும் ம்....ம்ம் என்று போடுங்க பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@மதுரன்
நான் கொமண்ட்ஸ் போடுவது குறைவு.. நேரம் இல்லாததால் எனக்கு கமெண்ட்ஸ் போடுபவர்களுக்கும் ஒன்று இரண்டு புதியவர்களுக்கும் கமெண்ட்ஸ் போடுவேன். இந்த டெம்ப்ளேட் கமெண்ட்ஸ் விளம்பர கமென்ட்ஸ் காரர்களுக்கும் போட விருப்பம் இல்லாவிட்டாலும் அவர்களை கடுப்பேற்றவேண்டும் என்பதற்காக அவர்கள் போடதிலும் பார்க்க மோசமாக போட்டுவிடுவேன். ”அ” வில் இருந்து ”ஃ” வரை ஏதாவது ஒரு எழுத்தை போட்டுவிடுவேன்.. ஹி ஹி//

அவ்வ்வ்வ்....
இந்த ஐடியாவைத் தான் நான் இப்ப பாலோ பண்றேன்.
நன்றி மது.

நிரூபன் said...
Best Blogger Tips

@மதுரன்
நான் கொமண்ட்ஸ் போடுவது குறைவு.. நேரம் இல்லாததால் எனக்கு கமெண்ட்ஸ் போடுபவர்களுக்கும் ஒன்று இரண்டு புதியவர்களுக்கும் கமெண்ட்ஸ் போடுவேன். இந்த டெம்ப்ளேட் கமெண்ட்ஸ் விளம்பர கமென்ட்ஸ் காரர்களுக்கும் போட விருப்பம் இல்லாவிட்டாலும் அவர்களை கடுப்பேற்றவேண்டும் என்பதற்காக அவர்கள் போடதிலும் பார்க்க மோசமாக போட்டுவிடுவேன். ”அ” வில் இருந்து ”ஃ” வரை ஏதாவது ஒரு எழுத்தை போட்டுவிடுவேன்.. ஹி ஹி//

அவ்வ்வ்வ்....
இந்த ஐடியாவைத் தான் நான் இப்ப பாலோ பண்றேன்.
நன்றி மது.

நிரூபன் said...
Best Blogger Tips

@மைந்தன் சிவா

ஆண் பதிவர்கள் பிடிபட்டுட்டாங்க..அந்த மூணில ரெண்டு பெண் பதிவர்கள் தான் பிடிபட மாட்டேங்கிறாங்க..
வைரச்னு சொன்னோன பயந்திட்டேன் என்ன ஏதோன்னு..இதுவா மேட்டரு?ஹிஹி கடிச்சு குதறியாச்சு..இந்த லிங்க்'எ கொண்டு போயி அவங்க கமென்ட்'ல போடுங்க..
//

நன்றி பாஸ்..

போட்டு விட்டாப் போச்சு!
ஹே....ஹே...

நிரூபன் said...
Best Blogger Tips

@FOOD NELLAI

வைரஸ் பற்றி இவ்வளவு தெளிவா சொன்ன நீங்க அந்த வைரஸை அகற்றும் வழி சொல்லலியே! அவ்வ்வ்.
//

அதுவும் சொல்லியிருக்கேனே ஆப்பீசர்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்

வெளங்காதவன்™ said...
Best Blogger Tips

சத்தியமா ரசித்தேன் நிரு....
நானும் வெறும் ஸ்மைலி மட்டும் போட்டுட்டு வருவேன், வெகு தளங்களில்.... நேரமின்மையும், இருப்பை அறியப்படுத்தவும் அந்த ஸ்மைலியை உபயோகிப்பேன்....
பட்.... இந்த மாதிரி தலைகளைப் பற்றி சொல்ல ஒண்ணும் இல்ல...

:-)

Unknown said...
Best Blogger Tips

என்ன செய்ய நிரூ சூழ்நிலை நான் போடுற பதிவுக்கு நீங்க வரணும், வந்து சூப்பர்ன்னு ஒரு கமெண்ட் போடணும் அதுக்கு உங்களை இப்பிடி ஐஸ் வச்சா தானே ஆச்சு?, இல்லேன்னா என் பதிவு பக்கம் வரமாடீங்களே.. என் பதிவுக்கு வர்றதே முப்பதில் இருந்து நாப்பது பேரு அவங்களையும் கெடுத்து விட்டுடக்கூடாதே..

நான் போட்ட சில கமெண்டை தவறா புரிஞ்சுக்கிட்டு என் பதிவுக்கு வராம போன சிலர் எனக்கு தெரியும். அதுக்கு தான் இப்பிடி எல்லாம் கமெண்ட் போட வேண்டியிருக்கு...

பொ.முருகன் said...
Best Blogger Tips

"அருமை நண்பா! தொடரட்டும்" ..... ஹி...,ஹி....வைரஸ் என்னக்கும் தொத்திகிடுச்சி.அது போகட்டும் பதிவுலகில்,வேகமாக பரவும் வைரஸ் ன்னு தலைப்பபோட்டுட்டு,மூணு ஆண்டி வைரஸ்ஸயும் சேர்த்துட்டுங்களே[அந்த மூன்று பெண் பதிவர்களும் என்னை மன்னிப்பார்களாக ]

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...
Best Blogger Tips

மிக ஆதங்கபூர்வ குமுறல் .கடந்தகாலம் எப்போடியோ இனியாவது அவர்கள் திருந்தலாம் .அதற்கும் முன் இந்த பதிவை அவர்கள் படிக்க வேண்டும் என்பது என் தாழ்மையான விண்ணப்பம் .இதே ஆதங்கம் உள்ளவர்கள் பலருக்கும் பரிந்துரை செய்வதன் மூலம் இது சாத்தியப்படும்

புல்லாங்குழல் said...
Best Blogger Tips

நேராக பதிலளித்தால் நொந்து விடுவாரோ என தோணும். அதே நேரத்தில் சும்மா இருக்கவும் மனம் வராமல் 'இந்த கொடுமையை கேட்க நாதியில்லையா?'ன்னு உள்மனது வடிவேலு ஸ்டைலில் புலம்பும். இது பல வலைப்பதிவாளர்களின் மனோ நிலை.எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரு வாங்கு வாங்கி விட்டீர்கள். இந்த சுட்டியை பலான வலைப்பதிவருக்கு அனுப்ப உள்ளேன். நன்றி!

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

மச்சி.,
அருமை.,
சூப்பர்..
கலக்கல்..
தம
வடைய விட்டுடீங்களே..
அவ்வ்வ்வ்...

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

ஒரு காலத்தில் நாமும் இதுபோல இருந்தோமோ?
இப்படிக்கு மனசாட்சி..


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

மச்சி இப்ப அதுமாதிரி இல்லைதானே?

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

விடு மச்சி இதெல்லாம் கண்டுக்கவே கூடாது,,,,

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
Best Blogger Tips

ரைட்டு.

சம்பத்குமார் said...
Best Blogger Tips

வணக்கம் நண்பரே..

இது பதிவுலகின் புது வைரஸ் தான்

ஒவ்வொரு பதிவருக்கும் ஓர் பதிவு வெளியிடல் என்பது ஓர் பிரசவம் தான்.ஏன் இது அவர்களுக்கும் பொருந்தும்.விரைவில் மாறுவார்கள் என எதிர்பார்ப்போம்.

//வெகு விரைவில் எதிர்பாருங்கள். பதிவுலகில் சமூக சிந்தனையாளராகவும், சமூகத்திற்கு முன் மாதிரியான பதிவுகளையும் எழுதிக் கொண்டு தமிழ் நாட்டின் - - - - பகுதியில் உள்ள BSNL கிளையில் பணி புரியும் ஊழியர்களை கெட்ட வார்த்தைகளால் திட்டி மிருங்களைப் போல கேவலமாக நடத்தும் ஓர் பெண் பதிவரைப் பற்றிய ஒலிப் பதிவும் ஆதாரங்களும், அதனுடன் தொடர்புடைய பதிவுகளும்! உங்கள் நாற்று வலையில்! //

அடுத்த கட்ட வைரஸ் ஆ நண்பரே..

ஒன்னும் புரியலயே

Jaleela Kamal said...
Best Blogger Tips

நீங்க சொல்வது முற்றிலும் சரியே
பதிவுக்கும் கமெண்டுகும் சம்பந்தமே இருக்காது/

சில பேர் ஒன்லி அவஙக் லின்க கொடுத்துட்டெ போயிடுவாங்க

அனைத்து கமெண்டர்கள் முகங்களையும் வெளிச்சமா எழுதி போட்டீங்க,

இனி கண்டிப்பா யோசிப்ங்க.

பெருங்காயம் said...
Best Blogger Tips

இங்கு இதெல்லாம் சகஜம். முன்பு உலவு.காம் இதுபோலவே செய்தார்கள். இன்னும் சிலரும் செய்தார்கள். அவர்களின் பெயர்களை முழுவதுமாகவெளியிடுங்கள். பின்பாவது திருந்தட்டும். ஒரு பின்னு]ட்டத்தையே சொந்தமாக, சரியாக இடமுடியாதவர்கள் என்னத்த ஒழுங்காக செய்வார்கள்?
பாஸ் நான் பின்னு]ட்டம் இட்டது சரிதானே? இந்த வைரஸ் எனக்கு வந்திடப்போகுது...

Unknown said...
Best Blogger Tips

கமென்ட் போடருதுல இவ்வளவு பாலிடிக்ஸ் இருக்கா. இந்த பதிவரசியல் புரியாம இத்தனை நாள் இருந்துட்டமே..
நன்றி தலைவா.

துரைடேனியல் said...
Best Blogger Tips

அந்த மூன்று ஆன பதிவர்களில் இருவர் யாரென்று எனக்கு புரிகிறது. ஒருவர் யாரென்று புரியவில்லை. அந்த மனுஷன் உணமையிலேயே நல்ல மனுஷன் என்று நீங்கள் குறிப்பிடும் நபர் யாரென்று தெரியவில்லை. பெண் பதிவர்கள் மூவருமே யாரென்று எனக்கு புரியவில்லை. வைரஸ் என்றவுடன் தொழில்நுட்ப பதிவாக இருக்குமோ என்று நினைத்தேன். ஆனால் பதிவுலக வைரஸ்கள் என்பது முழுவதும் படித்தவுடனே தெரிகிறது.

இரண்டாவது புரட்சிக்காரனாக மாறிவிட்டீர்களா என்ன சகோ? (ஹி...ஹி)

அப்புறம் சகோ. உங்கள் நடை அழகாக இருக்கிறது.

புதிய பதிவரான என்னையும் கொஞ்சம் கவனியுங்கள் சகோ.

தமிழ்மணம் ஒட்டுப்பட்டையை காணோம் சகோ.

Anonymous said...
Best Blogger Tips

//சிபி அண்ணர் காலையில் எந்திருச்சு குளிக்கும் போது உலக மகா சாதனையா பண்ணிட்டிருக்காரு//

நிரூ.. நம்ம சிபி குளிக்கறதே உலக மகா சாதனைதான. :-)

Anonymous said...
Best Blogger Tips

டேட்டா என்ட்ரி வேலை கிடைக்குமென கூறி பின்னூட்டமிடும் மவராசனை மறந்துவிட்டீர்கள்.

Anonymous said...
Best Blogger Tips

நானொரு முறை ஸ்பெஷல் மீல்ஸில் 15 நிமிட காணொளி ஒன்றை போட்டேன். அதை பதிவிட்ட அடுத்த நிமிடமே சில மாதங்களுக்கு முன் வலையுலகை கலக்கிய பதிவர் போட்ட கமன்ட்: "காணொளி முழுதும் பார்த்தேன். அருமை".

இன்னொரு நண்பர் நான் ஒரு பதிவை இட்ட மறுகணம் "படித்து விட்டு வருகிறேன்" என்றார். அடுத்த நிமிடமே அதன்கீழ் மேலுமொரு பின்னூட்டம் "முழுதும் படித்தேன். மிக நன்றாக எழுதி உள்ளீர்கள். தொடரட்டும்". அப்பதிவை வேகமாக படித்தால் கூட 3 நிமிடமேனும் ஆகும். தலைவர் சில நொடிகளில் படித்து முடித்து விட்டார். எந்திரன் சிட்டியின் தம்பி போல!

துரைடேனியல் said...
Best Blogger Tips

தமிழ்மணம் வாக்குப் பட்டை வந்து விட்டது சகோ.

தமிழ்மணம் வாக்கு 13.

Anonymous said...
Best Blogger Tips

அதே சமயம் ஒரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டி உள்ளது. முழுப்பதிவையும் படித்துவிட்டு கமன்ட் போடு என்று சொன்னால் படிப்பவரில் சிலர் சிதறி ஓடிவிடலாம். கமன்ட்டில் தில்லாலங்கடி வேலை செய்வோரை கண்டுபிடிக்க இப்படியும் சில வழிகள் உண்டு என எடுத்துரைத்ததற்கு நன்றி.

ஒரு சில பதிவுகளை மட்டுமே முழுமையாக படிக்க முடிகிறது நம்மால். அது வரலாறோ, அனுபவமோ அல்லது நகைச்சுவையோ. முழுப்பதிவையும் படித்துவிட்டு ஓரிரு வார்த்தையில் கமன்ட் போடுபவர்களும் உண்டு. இரண்டே வரியை மட்டும் படித்துவிட்டு கமண்ட்டை பதிவு போல் போடுபவர்களும் உண்டு(நான் மேலுள்ள முழுப்பதிவையும் படித்த பின்பே நீண்ட கமன்ட் இடுகிறேன்) :-)

களை எடுக்கும் முயற்சியில் ஆழமாக இறங்கி உண்மையை மேலும் உரக்க சொல்லியதற்கு நன்றி நண்பா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

இது டோட்டல் வெளிக்குத்தாவுல்ல இருக்கு....?

நிரூபன் said...
Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி

இது டோட்டல் வெளிக்குத்தாவுல்ல இருக்கு....?
//

அண்ணே, இந்த வெளிக் குத்தைக் கூட புரிஞ்சுக்காம ஒருத்தர் வந்து மேலே ரைட்டு அப்படீன்னு சொல்லியிருக்காரு பாருங்க.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

இப்போ நிறைய புதுப்பதிவர்களும் இதை பண்றாங்க, நம்ம பதிவுக்கு வந்துட்டு என்ன எழுதி இருக்காங்கன்னு படிச்சுப்பார்க்காம, அப்புறம் அவங்க பதிவுகளுக்கு மட்டும் நாம வரனும்னு எப்படி எதிர்பார்க்கிறாங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

///நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ரைட்டு.///

லெஃப்ட்டு............

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

/////நிரூபன் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி

இது டோட்டல் வெளிக்குத்தாவுல்ல இருக்கு....?
//

அண்ணே, இந்த வெளிக் குத்தைக் கூட புரிஞ்சுக்காம ஒருத்தர் வந்து மேலே ரைட்டு அப்படீன்னு சொல்லியிருக்காரு பாருங்க.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//////

ஹஹ்ஹா.......... அதுக்கும் பதில் சொல்லியாச்சு இப்ப ஓகேவா.....

இராஜராஜேஸ்வரி said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
Yoga.S. said...
Best Blogger Tips

காலை வணக்கம், நிரூபன்!சூப்பர் காமெடிப்பா!இந்த மாதிரி ஒரு படைப்பு எதிர்பார்க்கவேயில்லை!உங்களுக்குள் இவ்வளவு திறமையா?கலக்கிட்டீங்க!அந்தப் பெண் பாத்திரம் அடடடா!அருமை,
சூப்பர்,
கலக்கல்!!!!!!!///இன்று என் வலையில்;....................................!?

சிராஜ் said...
Best Blogger Tips

இருங்க சகோ,
பதிவ படிச்சிட்டு வாரேன்...

சிராஜ் said...
Best Blogger Tips

ம்..முழுதும் படித்துவிட்டேன்... பதிவு அருமை..

Yaathoramani.blogspot.com said...
Best Blogger Tips

அருமையாக விரிவாக தெளிவாகப் பதிவு போட்டுள்ளீர்கள்
நான் இதுவரை படிக்காமல் பின்னூட்டம் போடுவதில்லை
படித்துப் பிடித்துப் போட்டிருந்தால் ஓட்டு போடாமலும் இருந்ததில்லை
கொஞ்சம் பிடிக்காத பதிவெனில் படித்து முடித்து
பின்னூட்டம் இடாமல் கழண்டு கொள்கிறேன்
அவ்வளவே.
என் மனதில் உள்ள கருதை வலியுறுத்துவது போல் இருந்தது பதிவு
பகிர்வுக்கு நன்றி
த.ம 15

காட்டான் said...
Best Blogger Tips

:-)..

காட்டான் said...
Best Blogger Tips

தம 0

Anonymous said...
Best Blogger Tips

நானும் புதியவள் தான்.. நான் சில நேரங்களில் ஒரு வரியில் கமெண்ட் போட்டாலும் முழுதும் படித்து விட்டுதான் கமெண்ட் போடுவேன்.. நான் என் ப்ளாக்கில் பெரியதாக ஒன்றும் எழுதவில்லை. எனவே தினமும் விளம்பரப் படுத்துவதும் கிடையாது. என்றைகாவது கிருக்கினால் அன்று மட்டும் லிங்க் கொடுபதுண்டு. அவ்வளவே..

படிக்காமல் கமெண்ட் போடுவதினால், அதை கஷ்டப்பட்டு எழுதிய படைபாளி அதை படிக்கும் பொது ஏற்படும் வழி எனக்கும் புரியும். திண்டுக்கல் காரர் எதையுமே படிபதிலலையோ என்ற சந்தேகம் எனக்கும் வந்தது. ஏன் எனில், என் குழந்தையின் பிறந்தநாள் என்று ஒரு பதிவு போட்டு இருந்தேன்.. பெரிதாக ஒன்றுமே எழுதவில்லை. போட்டோ மட்டுமே போட்டு பிறந்தநாள் வாழ்த்து மட்டுமே எழுதியிருந்தேன்.. இந்த இரண்டு வரி கூட படிக்காமல் அவர் எழுதிய கமெண்ட்

திண்டுக்கல் கூறியது...
அருமை.
பகிர்விற்கு நன்றி நண்பரே!

இந்த 3 வரி எழுதிய நேரம் வாழ்த்துக்கள் என்று ஒரு வரியில் எழுதி இருக்கலாமே!!!!!!!!!!

நீங்கள் சொல்வது போல் notepad ல் கமெண்ட் ஐ பதிவு பண்ணி வைத்து விட்டு எல்லாருடைய தளத்திற்கும் சென்று பேஸ்ட் செய்து விடுகிறார்கள்..

Anonymous said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
Angel said...
Best Blogger Tips

இன்னும் சிரிப்பு அடங்கல .மறுபடியும் வந்து விரிவா கமென்ட் எழுதறேன்
அக்கா விசிட்டிங் செல்கிறேன் .என்னை ரொம்ப நாளுக்கு அப்புறம் சிரிக்க வச்சிட்டீங்க

ப.கந்தசாமி said...
Best Blogger Tips

ஆகவே கமென்ட் போடறதுக்கு புது புது வழியெல்லாம் சொல்லிக்கொடுத்திட்டீங்க. இனி உங்க பிளாக்குல பூந்து விளையாடீடறமுங்க.

அதெப்படிங்க, நோட் பேட்ல எழுதி காப்பி பேஸ்ட் பண்ணீடறதா? கொஞ்சம் வெவரமா சொல்லிக்குடுங்க. நானு கொஞ்சம் புதுசுங்க.

shanmugavel said...
Best Blogger Tips

சரி சகோ! இந்த பதிவை படித்த பின்னால் அப்படிப்பட்ட கமென்ட் போடமாட்டாரகள் என்று நினைக்கிறீர்களா?

சிவானந்தம் said...
Best Blogger Tips

நல்ல பதிவு நிரூபன்.

மார்கெட்டிங் தேவைதான். இருந்தாலும் இது இன்றைய அரசியலை போல் தரம் தாழ்ந்து போகும் போது கோபம் வருகிறது. என்னுடைய ஒரு பதிவுக்கு தமிழ்மணத்தில் 2 ஓட்டு கிடைத்தது. ஆனால் வேறு ஒரு நண்பர் அதை பதிவாக்கி ஏகப்பட்ட ஓட்டு வாங்கி இருந்தார். சரி அவருக்கு மார்கெட்டிங் திறமை இருக்கிறது என்று சுட்டிக்காட்டிவிட்டு விட்டு விட்டேன். அவரும் என்னுடைய `உணர்வுகளை` புரிந்து கொண்டார்.

இப்போதும் இதை ஒரு நகைச்சுவை பதிவாகத்தான் பார்ப்பார்களே ஒழிய சீரியசாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இருந்தாலும் பலர் சொல்ல நினைத்ததை சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

Muruganandan M.K. said...
Best Blogger Tips

படிக்காமல் போடும் கொமன்ட்.!!!!!

இப்படி எத்தனையோ திகுடு தாளங்கள் இங்கு சகசம். நிறையவே பார்த்துவிட்டேன்.

முதுகு சொறிபவர்களுடைய முதுகுகளை மற்றவர்கள் சொறிந்து கொண்டிருப்பார்கள்.

இருந்தாலும் உறைக்கச் சொல்லி என்ன பயன் கிட்டப்போகிறது. துணிச்சலுக்கு பாராட்டுக்ள்.

கோகுல் said...
Best Blogger Tips

யம்மாடி யம்மா,
போட்டு தாக்கிட்டிங்க.
பல நாள் குமுறல்னு நினைக்கிறேன்.

இந்த பதிவுக்கு வந்து(படித்து விட்டும்) போகும் பதிவர்கள்
இது போன்ற கமெண்டுகள் போட யோசிப்பார்கள்(ளா?).

கேரளாக்காரன் said...
Best Blogger Tips

BSNL ஆடு இவ்ளோ நேரமா தலைய குடுக்காம இருக்குதே

கேரளாக்காரன் said...
Best Blogger Tips

சாட்டையடி செருப்படி வெளக்கமாத்தடி இன்னும் என்ன வேணும்னாலும் சொல்லலாம் கடந்த மாதமா தொடர்ந்து உங்க தளத்தை படித்து வருகிறேன் ஆனால் பின்னூட்டம் போடுவதில்லை காரணம் மொபைலில் படிப்பதினால்..... ஆனால் இன்னிக்கு கம்மன்ட் பண்ணியே ஆகணும்னு முடிவு பண்ணிட்டேன் அப்படியே ஒரு அம்மா சும்மா வரியா காப்பி பண்ணி ஹா ஹா ஹா அப்படின்னு கம்மன்ட் போடுமே அத விட்டுட்டிங்க

கேரளாக்காரன் said...
Best Blogger Tips

இந்த ஜல்லியடித்தாலும் ஜால்ரா தட்டுறதும் நம்ம சி பி அண்ணன் தளத்துல தலை விரித்து ஆடும்

கேரளாக்காரன் said...
Best Blogger Tips

இந்தப் பதிவிற்கும் பாருங்க! பதிவினைப் படிக்காது மேலே குறிப்பிட்டுள்ள நபர்களுள் ஒருவர் வந்து அருமை! வாழ்த்துக்கள்! பகிர்விற்கு நன்றி! அப்படீன்னு கண்டிப்பா போடத் தான் போறாருங்க. ஹி..ஹி

// இராஜராஜேஸ்வரி said...
ஆராய்ச்சிப் பகிர்வுகள் பயனுள்ளவை..

பாராட்டுக்கள்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்//

அம்மா நம்ம நிருபன் இந்த வலைய உங்களுக்குன்னு விரிக்கல பொதுவா தான் விரிச்சாறு நீங்களா வந்து தலைய குடுதிட்டிங்க

கேரளாக்காரன் said...
Best Blogger Tips

ஊர்ந்து செல்லும் ஜீவராசி said...

ரைட்டு

கேரளாக்காரன் said...
Best Blogger Tips

// Stumblednews said...
If you have an English blog, submit your post at Stumblednews.0fees.net to get more visitors to your blog.//

ஏற்கனவே ஆன்லைன் ஒர்க்குன்னு ஒருத்தன் தொல்ல தாங்க முடியல இதுல நீங்க வேறயா

கேரளாக்காரன் said...
Best Blogger Tips

// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
ஒரு காலத்தில் நாமும் இதுபோல இருந்தோமோ?
இப்படிக்கு மனசாட்சி..


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

மச்சி இப்ப அதுமாதிரி இல்லைதானே?//

கொஞ்சமாவது பெரிய பதிவுகளை போடவும்

அம்பலத்தார் said...
Best Blogger Tips

நிரூ நீங்க எழுதின எம்மை நாமே திருத்திக்கொள்ளவேண்டிய விடயங்கள் தொடர்பான விமர்சனப்பதிவுகளில் முதலிடம் இந்தப் பதிவிற்குத்தான். உண்மையிலேயே என்னால் தினத்திற்கு ஒருசில பதிவுகளிற்குத்தான் படித்து பின்னூட்டம் இடமுடிகிறது. ஒரு பதிவைப்படித்து பின்னூட்டம் இட குறைந்தது கால்மணி நேரமாவது செலவிடவெண்டியுள்ளது. இப்படி நிலைமை இருக்கும்போது இவர்களின் தொல்லை தாங்கமுடியவில்லை. இவர்கள் அட்டகாசமாக இணையத்தை ஆக்கிரமிப்பதால் எத்தனையோ நல்லபதிவுகள் ஓரங்கட்டப்பட்டு அதிகவாசகர்களை சென்றடையது போய்விடுகிறது. இந்தப்போக்கை ஏதோ ஒருவிதமாக மாற்றியே ஆகவேண்டும்

Angel said...
Best Blogger Tips

பொங்கு பொங்குன்னு பொங்கிப்புட்டீக.
நான் ஒரு வாழ்த்து அட்டை அதுவும் என் இங்கிலீஷ் ப்ளாக்ல படம் மட்டுமே போட்டிருக்கேன் .செய்முறை கூட தரல்ல . ஒரு பின்னூட்டம்
//தொடர்ந்து படிக்கும் ஆவலை கூட்டுகிறது //
நானே டைம் இல்லன்னு instructions தராம படத்தை மட்டும் போட்டா அவ்வ்வ்வ் .என்னத்த சொல்ல .அட்லீஸ்ட் கார்ட் நல்லா இருக்குன்னு சொல்லிருந்தா கூட பரவாயில்லை .

Anonymous said...
Best Blogger Tips

இந்த டெம்ளேட் கமெண்ட் காரரின் தொல்லை பெரும் தொல்லைபா.. இவன்களின் முதல் நோக்கம் என்னமோ விளம்பரம் தான். ஆனா இவர்கள் போடும் கமென்டால் வெறுப்பு தான் மிச்சம்..

ஒரு பதிவின் கருவை திசை திருப்புவதில் இவர்களின் பங்கு முக்கியமானது.

Mahan.Thamesh said...
Best Blogger Tips

கலக்கீட்டிங்க பாஸ் , சூப்பர இருக்கு தொடரட்டும் . இருங்க பாஸ் பதிவ படிச்சிட்டு போடுறேனே . அடப்பாவி ....

Mahan.Thamesh said...
Best Blogger Tips

தெரியப்படுத்தியமைக்கு நன்றி சகோ .

அம்பாளடியாள் said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
நிரூபன் said...
Best Blogger Tips

@அம்பாளடியாள்
ஆகா...அக்கா, உங்கள் பின்னூட்டங்களைப் பலர் வலைப் பதிவுகளில் படித்தாலே தெரியுமே..

ஏன் சில பதிவர்களை நீங்கள் உங்கள் வலைக்கு வரவைக்க அவர்களின் பழைய பதிவுகளுக்கெல்லாம் போய் கருத்துக்கள் இட்டு, சகோ பகிர்விற்கு நன்றி, உங்கள் வருகைக்காய் என் பதிவு இருக்கிறது என்று சொல்லுவீங்களே?
ஹே...ஹே..

என்னது இந்தப் பதிவும் உங்களுக்கில்லையா?
ஆகா...

அம்பாளடியாள் said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
அம்பாளடியாள் said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
அம்பாளடியாள் said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

ஹா ஹா ஹா ஹா சூறாவளி சுழட்டி அடிக்குதுலேய் மக்கா....!!!

அம்பாளடியாள் said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
joker said...
Best Blogger Tips

இதல கடுப்பகுறது எழுத்தாளர்கள் மட்டுமல்ல வாசகர்களும் தான்...

ப.கந்தசாமி said...
Best Blogger Tips

//இந்த மாதிரியான கமெண்டுகளைப் போடுவதில் மூன்று ஆண் பதிவர்களும், மூன்று பெண் பதிவர்களும் பலே கில்லாடிகள்.

சில புதுப் பதிவர்களுக்கு இவர்களைப் பற்றி அறிந்து கொள்ளவே நீண்ட காலம் பிடிக்கும். இவர்களின் முக்கிய நோக்கம் தம் படைப்புக்களைச் சந்தைப்படுத்துவது தான். //

எனக்குமே தெரியலீங்க, ரகசியமா எனக்கு மட்டும் சொல்லுங்க நாற்றுத்தம்பி.

ப.கந்தசாமி said...
Best Blogger Tips

//Muruganandan M.K. said...

முதுகு சொறிபவர்களுடைய முதுகுகளை மற்றவர்கள் சொறிந்து கொண்டிருப்பார்கள்.//

டாக்டரையா, நல்லா சொல்லியிருக்கீங்க. பாராட்டுகிறேன்.

அனுஷ்யா said...
Best Blogger Tips

நான் இந்த பதிவுலகத்திற்கு கொஞ்சம் புதியவனே..
பதிவுகளுக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஆரம்ப கால மனவருத்தம் கொஞ்சம் தளர்ந்ததே,இந்த வரவேற்பு இணைப்பு கொடுக்க துவங்கிய பின்னரே...
இதுவரை என்னுடைய தலத்தில் வந்திருக்கும் பின்னூட்டங்கள் (மிக மிக குறைவு எனினும் ) கூடுமானவரை நம்பகத்தன்மை வாய்ந்தவை என்றே உணர்கிறேன்..
உங்கள் அனுபவத்தில் நீங்கள் எழுதியுள்ளீர்கள்..எதிர்காலத்தில்,ஒருவேளை என் பதிவுலக வாழ்க்கை தொடருமானால் உங்கள் கூற்றின் உண்மைகளை நான் அறியலாம்..
நன்றி தோழரே...

அனுஷ்யா said...
Best Blogger Tips

நான் இந்த பதிவுலகத்திற்கு கொஞ்சம் புதியவனே..
பதிவுகளுக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஆரம்ப கால மனவருத்தம் கொஞ்சம் தளர்ந்ததே,இந்த வரவேற்பு இணைப்பு கொடுக்க துவங்கிய பின்னரே...
இதுவரை என்னுடைய தலத்தில் வந்திருக்கும் பின்னூட்டங்கள் (மிக மிக குறைவு எனினும் ) கூடுமானவரை நம்பகத்தன்மை வாய்ந்தவை என்றே உணர்கிறேன்..
உங்கள் அனுபவத்தில் நீங்கள் எழுதியுள்ளீர்கள்..எதிர்காலத்தில்,ஒருவேளை என் பதிவுலக வாழ்க்கை தொடருமானால் உங்கள் கூற்றின் உண்மைகளை நான் அறியலாம்..
நன்றி தோழரே...

ADMIN said...
Best Blogger Tips

பதிவைப் பற்றிய கருத்துகளை உள் மனதில் வாங்கிக்கொண்டால் மட்டுமே நல்ல ஆரோக்கியமான கருத்தை அளிக்க முடியும். அது விடுத்து மேம்போக்கா படிப்பதோ, படிக்காமல் கருத்து அளிப்பதோ, தவறாகவே முடியும் வாய்ப்புகள் அதிகம்.

பொதுவாக கருத்துரையாக, பகிர்வுக்கு நன்றி, பகிர்ந்தைக்கு பாராட்டுகள், வாழ்த்துகள், இதுபோன்றவை அவசர அவசரமாகவே இடப்படுபவை. அதிலும் கருத்துரையில் முதன்மைநிலையைப் பெற வேண்டும் என்பதற்காக, படித்து விட்டு வருகிறேன். வடை, சுடு சோறு, முதல் மழை, இப்படி தன்னுடைய வருகையை மட்டுமே சொல்லிக்கொள்ளும் கருத்துரைகளும் இருக்கின்றன.. இதை கருத்துரை என்பதிலேயே சேர்க்க முடியாது அல்லவா? இப்படிப்பட்ட கருத்துரைகள் ஒன்று தனது வருகையை சூசகமாக தெரிவிப்பதற்கும், மறைமுகமாக 'நான் உங்கள் வலைக்கு வந்திருக்கிறேன். நீங்களும் என்னுடைய வலைக்கு வருகை தர வேண்டும்' என்று அழைப்புவிடுவதாய் மட்டுமே இருக்கும். அவ்வாறான கருத்துரைகள் ஏற்க கூடியதாக இல்லைதான். நான் கூட சில வேளைகளில் இப்படிப்பட்ட கருத்துரைகளை இட்டுவிட்டுச் சென்றிருக்கிறேன்.. வலைப்பதிவுலக தொடக்கத்தில் புதியவர்கள் இப்படிப்பட்ட கருத்துரைகள் அளிப்பது என்பது ஒரு சாதாரண விடயம். ஆனால் முழுவதும் நன்றாக உணர்ந்த பிறகும் தொடர்வது சற்று வருந்த தக்கதுதான். நீங்கள் குறிப்பிட்டிருந்த பதிவர்களில் , திண்டுக்கல் தனபாலன் போன்றவர்களின் பதிவுகள் ஒவ்வொன்றும் அருமையாகவே உள்ளது. இந்த கருத்துரை விடயத்தில் மட்டும் அவர் சிறிது கவனம் மேற்கொண்டால் போதும்.

மற்றபடி பார்த்தால் ஒவ்வொருவரும் தமக்குரிய சிறப்பு இயல்புகளிலேயே எழுதுகிறார்கள் என்பது என் எண்ணம்.அவர்கள் எழுதும் பதிவுகளில் ஒன்றும் குறையில்லை என்றே நினைக்கிறேன்.

இப்படிப்பட்ட விடயங்களை, ஆரோக்கியமில்லாத போக்குகளை நான் கூட சிந்தித்தது உண்டு. அதை பதிவாக எழுத எனக்கு தகுயில்லை என நினைத்தே அதை விட்டுவிட்டேன்.. காரணம் முன்பெல்லாம் நானும் இப்படிப்பட்ட கருத்துரைகளை விட்டுச் சென்றவன்தான்.

என் சிந்தனையை அப்படியே செயல்படுத்தி பதிவினூடாக பகிர்ந்தமைக்கு எனது நன்றி.!!

பகிர்தலுக்கும், புரிதலுக்கும் நன்றி நண்பரே..!!!

ad said...
Best Blogger Tips

சாரி சாரி சாரி.....
ரூ..... லேற்.....
!!!

தலைப்பை வைத்து நான் முதலில் உண்மையாகவே ஏதோ அன்ரி வைரஸ் ரெக்னோலொஜி சமாச்சாரம் எண்டுதான் நினைச்சன்.பாக்காமலே விட்டிட்டன்.

இப்பதான புரியுது.
என்னுடைய தளத்திலும் இது நடந்திருக்கிறது.

ad said...
Best Blogger Tips

அப்புறம்,....
எல்லா IRQ வையும் புட்டுப்புட்டு வச்சுட்டீங்களே.இத வச்சே,புதுசா ஏதாச்சும் வைரஸ் எழுதிடப்போறாங்கையா.பி.. கெயார்ஃபுள்.!!!

MaduraiGovindaraj said...
Best Blogger Tips

///// ஒரு சில காமெடி பீஸ் கூட்டங்கள் பிறர் படைப்புக்களைப் படிக்காது தம் படைப்புக்களைப் பிறர் படிக்க வேண்டும் எனும் நினைப்பில் வியாபார விளம்பரத் திட்டங்களை மிகவும் இலாவகமாக முன்னெடுக்கின்றார்கள். இவர்களின் முக்கிய குறிக்கோள் தம் ப்டைப்புக்கள் எல்லோரிடமும் சென்று சேர வேண்டும். ஆனால் பிறர் படைப்புக்களைப் படிக்காது நாம் கமெண்ட் போட்டு பிறரை மொய்க்கு மொய் அடிப்படையில் பின்னூட்டம் போட அழைக்க வேண்டும் என்பதாகத் தான் இருக்கும். /////

நமக்கு விளம்பரமும் வியாபாரமும் நோக்கமில்லை வைகோவின் செய்திகளை ஊருக்கும் உலகத்திற்கும் தெரிவிப்பதே நோக்கம் அதனால் சில ஜோடிப்பு வேலைகள் அவ்வளவே நன்றி நிருபன் உண்மையை சொன்னதற்கு

MaduraiGovindaraj said...
Best Blogger Tips

/// வெகு விரைவில் எதிர்பாருங்கள். பதிவுலகில் சமூக சிந்தனையாளராகவும், சமூகத்திற்கு முன் மாதிரியான பதிவுகளையும் எழுதிக் கொண்டு தமிழ் நாட்டின் - - - - பகுதியில் உள்ள BSNL கிளையில் பணி புரியும் ஊழியர்களை கெட்ட வார்த்தைகளால் திட்டி மிருங்களைப் போல கேவலமாக நடாத்தும் ஓர் பெண் பதிவரைப் பற்றிய ஒலிப் பதிவும் ஆதாரங்களும், அதனுடன் தொடர்புடைய பதிவுகளும்! உங்கள் நாற்று வலையில்! // உண்மையை உலகுக்கு கொண்டுவாருங்கள் உடனே கருத்தை பார்த்து வெளியிட்டதற்கு நன்றி

MaduraiGovindaraj said...
Best Blogger Tips

எனக்கு பதில் எழுதல

நிரூபன் said...
Best Blogger Tips

@கோவிந்தராஜ்,மதுரை.

எனக்கு பதில் எழுதல
//
நண்பா கொஞ்சம் பிசியாக இருக்கேன்.
இன்று மாலை எழுதுகிறேன்.

நன்றி நண்பா உங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும்.

ராஜ் said...
Best Blogger Tips

பாஸ்,
உங்க பதிவ இதுக்கு முன்னாடி ரெண்டு வாட்டி படிச்சிருக்கேன்... ஏனோ உங்க "Frequency" , என்னோட frequency யோட ஒத்து போகல... அதனால அடிக்கடி இங்க வர மாட்டேன்......

ஆனா இது ஏதோ "Anti virus" பத்தின பதிவுன்னு நினைச்சு இங்க வந்தேன்.... பார்த்தா இது இந்த பதிவுலகதில் நடக்கும் வழக்கமான அட்வைஸ் பதிவு.....

அது ஏன் பாஸ் இங்க எல்லோரும் எல்லோருக்கும் வெறும் அட்வைஸ்ஸா பன்னுறேங்க.....

அப்படி பண்ணாதே, இப்படி பண்ணாத...கமெண்ட் போடாத.... எழுத்து பிழை பண்ணாத அப்படினு வெறும் அட்வைஸ்ஸா பன்னுறேங்க.....நீங்க எல்லாம் யாருங்க..????

அவங்க அவங்களுக்கு என்ன பிடிக்கிதோ அத பண்ணிட்டு போறாங்க.... உங்க ப்ளாக்ல பிடிக்காத/பதிவுக்கு சம்பந்தமே இல்லாமல் வரும் கமெண்ட்க்கு "SPAM" தட்டிட்டு போக வேண்டியது தானே பாஸ்....அதுக்கு அப்புறம் அந்த "User" கமெண்ட் உங்க பதிவுல வரவே வராது...உங்களுக்கு இது தெரியும்னு நினைகிறேன்...

அத விட்டுட்டு ஒரு பதிவ போட்டு...அதுக்கு 100 கமெண்ட் வேற...

நீங்க எந்த "Qualification"-ல அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பன்னுறேன்களோ, அதே "Qualification"-ல உங்களுக்கு என்னோட கருத்தை சொல்லுரேன்....

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ்

பாஸ்,
உங்க பதிவ இதுக்கு முன்னாடி ரெண்டு வாட்டி படிச்சிருக்கேன்... ஏனோ உங்க "Frequency" , என்னோட frequency யோட ஒத்து போகல... அதனால அடிக்கடி இங்க வர மாட்டேன்......

ஆனா இது ஏதோ "Anti virus" பத்தின பதிவுன்னு நினைச்சு இங்க வந்தேன்.... பார்த்தா இது இந்த பதிவுலகதில் நடக்கும் வழக்கமான அட்வைஸ் பதிவு.....

அது ஏன் பாஸ் இங்க எல்லோரும் எல்லோருக்கும் வெறும் அட்வைஸ்ஸா பன்னுறேங்க.....

அப்படி பண்ணாதே, இப்படி பண்ணாத...கமெண்ட் போடாத.... எழுத்து பிழை பண்ணாத அப்படினு வெறும் அட்வைஸ்ஸா பன்னுறேங்க.....நீங்க எல்லாம் யாருங்க..????
//

வணக்கம் நண்பா..

இங்கே எழுத்துப் பிழை பற்றி நான் எதுவும் குறிப்பிடவில்லை, என் பதிவிற்கு டெம்பிளேட் கமெண்ட் அடிப்போர், மற்றும் சில நண்பர்களின் பதிவுகளைப் புரியாது கமெண்ட் எழுவோரைப் பற்றித் தான் இங்கே குறிப்பிட்டிருக்கிறேன்.

உங்களின் நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்து விட்டார் என நீங்கள் எழுதியுள்ள பதிவில் வந்து அருமை நண்பா, சூப்பர் நண்பா என பின்னூட்டம் எழுதினால் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ்
அவங்க அவங்களுக்கு என்ன பிடிக்கிதோ அத பண்ணிட்டு போறாங்க.... உங்க ப்ளாக்ல பிடிக்காத/பதிவுக்கு சம்பந்தமே இல்லாமல் வரும் கமெண்ட்க்கு "SPAM" தட்டிட்டு போக வேண்டியது தானே பாஸ்....அதுக்கு அப்புறம் அந்த "User" கமெண்ட் உங்க பதிவுல வரவே வராது...உங்களுக்கு இது தெரியும்னு நினைகிறேன்...
//

நண்பா, இந்தப் பதிவில் நான் விளக்கமாகச் சொல்லியிருக்கிறேன்.

தனிமெயில் கூட பல தடவை பதிவுகளைத் திசை மாற்றுவோருடன் நாகரிகமாக உரையாடியிருக்கிறேன் நண்பா. அதற்குப் பிறகும் செவிமடுக்காது பதிவிற்கு தொடர்பில்லாது பதிவு வெளியாகி ஒரு நிமிடத்தினுள் பின்னூட்டம் எழுதுவோர் பற்றித் தான் இங்கே சொல்லியிருக்கிறேன்.

மீண்டும் ஒரு தடவை பதிவினை முழுமையாகப் படித்துப் பாருங்கள் நண்பா.

ராஜ் said...
Best Blogger Tips

/// உங்களின் நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்து விட்டார் என நீங்கள் எழுதியுள்ள பதிவில் வந்து அருமை நண்பா, சூப்பர் நண்பா என பின்னூட்டம் எழுதினால் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா? ///

அப்படி கமெண்ட் போடுற ஆளை நானா இருந்தா கண்டபடி திட்டி விடுவேன்.....நீங்க கொஞ்சம் டீசெண்டா பேசி இருக்கேங்க.....
கண்டிப்பா இந்த மாதிரி பண்ற ஆளுகளை SPAM பண்ணுறது தான் நல்ல ஆப்சன்...

நான் கூட இந்த "Data entry Job" கூட்டத்தை SPAM பண்ணி இருகிறேன்...

அப்புறம் பாஸ், நான் பதிவ படிச்சா தான் கமென்ட் போடுவேன்... :)

நான் கூட இந்த மாதிரி கமெண்ட் நிறைய பார்த்து இருகிறேன்..

"இன்று என் வலையில்"

"ஆஹா ஓஹோ...அருமை.."

சரி விடுங்க...எனக்கு இந்த மாதிரி ஆளுகளை மதிச்சு ஒரு பதிவ போட பிடிக்காது.... சும்மா SPAM பண்ணிடுவேன்... இது நான்..என்னோட கருத்து..

ஆனா நீங்க ரொம்ப டீசெண்டா அவங்க கிட்ட சொல்லி பார்த்து அவங்க கேக்காம ஒரு பதிவா போட்டு இருக்கேங்க.. இது நீங்க...உங்க கருத்து... I Like your attitude...

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails