அவசர அவசரமாக சந்திரிக்கா அம்மையார் தன்னுடைய படைத் துறைத் தலைமை அதிகாரிகளையும்,ஆயுதக் கொள்வனவுடன் தொடர்புடைய அதிகாரிகளையும் கொழும்புக்கு அழைத்து புலிகள் வசம் பல்குழல் உந்துகணைச் செலுத்திகளும் உள்ளன எனும் விடயத்தினையும் சொல்லித் தமது படை வலுச் சமநிலைக்கும் பல் குழல் உந்து கணைகள் வாங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். ஈழப் போரியல் வரலாற்றில் புலிகள் ஜெயசிக்குறு எதிர் சமரின் போதோ அல்லது 1997-1999 வரையான காலப் பகுதியிலோ பல் குழல் எறிகணை - உந்து கணைச் செலுத்திகளைப் பயன்படுத்தவில்லை.
நீங்கள் இங்கே படித்துக் கொண்டிருப்பது "பீரங்கி கைப்பற்றி ஆமிக்கு பீதியைக் கொடுத்த புலிகள்!" தொடரின் நான்காவது பாகத்தின் தொடர்ச்சியாகும். இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க இவ் DROP DOWN MENU இல் கிளிக் செய்யுங்கள்.
இந்த விடயம் இராணுவத் தலமைக்கு இறுதிக் காலங்கள் வரை தெரிந்திருக்கவில்லை. இதற்கான பிரதான காரணம் இராணுவத் தரப்பினரை நம்ப வைக்கும் நோக்கில் செய் அல்லது செத்து மடி தாக்குதல் இடம் பெற்ற வேளையில் புலிகள் தமது ஐபிசி வானொலி ஊடாக பல் குழல் தாக்குதல் மேற் கொள்ளப்பட்டதாக ஓர் செய்தியினை வன்னியிலிருந்து வழங்கியிருந்தார்கள். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் அல்லவா. புலிகளின் மோட்டார் படைப் பிரிவினர் கேணல் மணிவண்ணன் தலமையில் ஒரே நேரத்தில் சிறிய ரக 30 இற்கும் மேற்பட்ட மோட்டார்களை தயார் நிலையில் வைத்து எறிகணைகளை இராணுவ நிலைகள் மீது வீசிக் கொண்டிருந்தார்கள்.
புலிகள் சில நேரத்தில் அறிமுகப்படுத்தும், அல்லது, தம் வசம் இருப்பதாக அறிவிக்கும் புதிய ஆயுதங்களை புலிகள் பயன்படுத்த முன்பதாகப் படைத் தரப்புத் தான் கள முனையில் பயன்படுத்த தொடங்கியிருக்கிறது. இதற்கான சிறந்த உதாரணம் இந்த பல் குழல் எறிகணைகளும், நச்சு வாயுக்களை வெளி விடும் குண்டுகளுமாகும். புலிகள் கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் 2008ம் ஆண்டு சிறியளவிலான நச்சுவாயு மற்றும் நச்சுக் குண்டுத் தாக்குதலை நிகழ்த்தியிருந்தார்கள். இதனை தகுந்த முறையில் இனங் கண்டு கொண்ட இராணுவத்தினர், கொல்லப்பட்ட படையினரின் உடலங்களைப் புகைப் படம் எடுத்து உலக நாடுகளுக்கு காண்பித்து விட்டு வன்னி மக்கள் மீதும், புலிகளின் நிலைகள் மீதும் பொஸ்பரஸ், நச்சு வாயுக் குண்டு வீச்சுத் தாக்குதலை மேற் கொள்ளத் தொடங்கியிருந்தனர்.
புலிகள் தம் வசம் இருந்த மோட்டார் படைப் பிரிவினூடாக ஒரே நேரத்தில் 36 அல்லது 30 இற்கும் மேற்பட்ட மோட்டார் எறிகணைகளைச் செலுத்துவதற்கு ஏற்றவாறு தமது படையணிகளைத் தயார் செய்திருந்தார்கள். களமுனையில் சம நேரத்தில் 30 இற்கும் மேற்பட்ட குண்டுகள் இராணுவ நிலைகள் மீது ஏவப்படும் போது இராணுவத்தினருக்கு எப்படி இருக்கும்? ஹே...ஹே.... அப்புறம் சொல்லவா வேண்டும்! பயங்கரப் பீதி ஏற்பட்டதோடு, புலிகளின் படை வலு தொடர்பிலும் இராணுவம் அச்சம் கொண்டிருந்தது. செய் அல்லது செத்து மடி செத்த பாம்பாகி ஓரமாக நிற்கையில் இராணுவத்தினர் வசமிருந்த கிளிநொச்சி மாநகரை மீட்க வேண்டிய தேவை புலிகளுக்கு எழுகின்றது.
புரட்டாதி மாதம் 27ம் திகதி, 1998ம் ஆண்டு ஓயாத அலைகள் இரண்டு எனப் பெயரிடப்பட்ட அதிரடிப் படை நடவடிக்கையூடாக புலிகள் கிளிநொச்சி மீட்புச் சமரினைத் தொடங்கினார்கள். இங்கே தான் புலிகளின் ஆட்டிலறி அணிகள் தமது வெள்ளோட்டத்தினை ஆரம்பித்திருந்தன. தியாக தீபம் லெப்டினன்ட் கேணல் திலீபன் அவர்களது நினைவு நாளின் இறுதி நாளன்று நள்ளிரவு கடந்த நேரம் புலிகளின் அணிகள் கிளிநொச்சி நகரினை மீட்கும் நோக்கில் தாக்குதலைத் தொடங்கின. போதியளவு அனுபவப் பயிற்சி இன்றி தம் ஆட்டிலறிப் படைப் பிரிவினைக் கிளிநொச்சி மீட்புச் சமரின் போது புலிகள் தரையிறக்கியிருந்தனர்.
இப்போது புலிகளின் பீரங்கிப் படைக்கு வேண்டிய துல்லியமான தரவுகளையும், புலிகளால் ஏவப்படும் ஷெல்கள் இராணுவ நிலைகள் மீது வீழ்ந்து வெடிக்கின்றனவா எனும் தரவுகளையும் உடனுக்குடன் வழங்க வேண்டிய தேவை புலிகளின் பீரங்கிப் படையினருக்கு ஏற்படுகின்றது. கிளிநொச்சியிற்கு முன்னே பரந்தன் - ஆனையிறவு கூட்டுப் படைத் தளங்கள் இருந்தாலும் ஷெல்களை ஏவும் போது அது இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தானே வீழ்ந்து வெடிக்கும்.புலிகள் தரவுகள் ஏதுமின்றி ஏவியிருக்கலாமே என யாராவது இவ் இடத்தில் நினைக்க கூடும். இங்கே தான் முக்கியமான பிரச்சினை. புலிகளின் வசம் நான் ஏலவே கூறியது போன்று அண்ணளவாக 1200 எறிகணைகள் மாத்திரம் தான் அந் நேரத்தில் இருந்தது.
சிறிதளவு வளத்தினைக் கொண்டு பெரும் பயனை நாம் பெற வேண்டும் எனும் தலைவர் அவர்களின் எண்ணக் கருவினை உணர்ந்தவராக சோதியா படையணியின் துணைத் தளபதியாக இருந்த லெப்டினன்ட் கேணல் செல்வி (சிவஞானம் ஜெனிற்றா) அவர்கள் இராணுவ நிலைகளுக்கு அண்மையாக ஊடுருவி புலிகளின் ஆட்டிலறி அணிகளுக்கு வேண்டிய தரவுகளையும், அச்சொட்டான எறிகணைத் தாக்குதல்களை எங்கெங்கே நிகழ்த்த வேண்டும் எனும் குறிப்புக்களையும் வழங்கிக் கொண்டிருந்தார். இந் நேரத்தில் இராணுவத்தினர் செல்வி நிற்கும் இடத்தினைச் சூழ்ந்து கொள்ள "தன்னைப் பற்றிக் கவலைப் படாது. தான் நிற்கும் இடத்திற்கு ஷெல்லைக் குத்துங்கோ" என்று சொல்லி விட்டு செல்வி அவர்களும் வீரச் சாவடைந்து கொள்கின்றார்.
இந்த ஓயாத அலைகள் இரண்டு படை நடவடிக்கையின் போது புலிகளால் மூன்றிற்கு மேற்பட்ட ஆட்டிலறிகள் கைப்பற்றப்பட்டன. கிளிநொச்சி மீட்கப்பட்ட பின்னர் புலிகள் அணிகள் மற்றுமொரு பாய்ச்சலுக்குத் தயாராகினார்கள். இவ் வேளையில் புலிகள் வசம் பீரங்கிகளுக்கான எறிகணைகள் இருந்தாலும், பெருமளவான எறிகணைகள் புலிகளின் பகுதிக்கு கடல் வழியாக புலிகளின் அழைப்பின்றி வந்து சேர்ந்தது. இலங்கை அரசோ இவ் விடயத்தினை அறிந்து திண்டாடத் தொடங்கியது. இது தொடர்பாக அறிய ஆவலா? அடுத்த பாகம் வரை காத்திருங்கள்!
அன்பிற்கினிய உறவுகளே! உங்கள் அனைவருக்கும் உளம் கனிந்த இனிய நத்தார் மற்றும் புது வருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்! பிறக்கப் போகும் இந்தப் புதிய ஆண்டில் எமைச் சூழ்ந்த தொல்லைகள் யாவும் விலகி வல்லமையுடன் தமிழன் வாழ்வு சிறக்க வாழ்த்துவோம் வாரீர்!
இது பற்றி அறிய ஆவலா? இங்கே கிளிக் செய்யுங்கள்.
இப் பதிவிற்கான படங்கள் கூகிள் தேடல் மூலம் பெறப்பட்டவை.
இப் பதிவிற்கான படங்கள் கூகிள் தேடல் மூலம் பெறப்பட்டவை.
|
23 Comments:
இரவு வணக்கம்,நிரூபன்.தொடரை தொடரும் விதம் அருமை.அறிந்தவை தான்,எனினும் உங்கள் எழுத்தில் படிக்கும்போது ஒரு புது மெருகு!
பாஸ் முன்பே சொன்னது போல் இவை எனக்கு அதிகம் தெரியாத தகவல்களே... படிக்கும் போது ஆர்வமாய் இருக்கு... ஆனாலும் அதிகம் தெரியாததால் கருத்து சொல்ல முடியவில்லை பாஸ்... தொடர் நல்லா இருக்கு பாஸ்
நிரு பாஸ்... இப்படி ஏமாத்தீட்டீங்களே ... அவ்வ....
மதுரன் சொன்னான் நிருபன் பிராப்பள பதிவர் பற்றி இன்று இரவு பதிவு போடுவார் மிஸ் பண்ணிடாதேடா என்று....
ஓடி வந்தேன் அதைக்காணோமே..... :(
////ஈழப் போரியல் வரலாற்றில் புலிகள் ஜெயசிக்குறு எதிர் சமரின் போதோ அல்லது 1997-1999 வரையான காலப் பகுதியிலோ பல் குழல் எறிகணை - உந்து கணைச் செலுத்திகளைப் பயன்படுத்தவில்லை. இதனைக் கூட பிரித்தறிய முடியாத இராணுவம் புலிகள் தொடர்சியாகத் தமது நிலைகள் மீது குண்டு மழை பொழிவதைக் கருத்திற் கொண்டு புலிகள் வசம் ஆட்டிலறி எறிகணைகள் இருக்கின்றது எனும் கருத்தினை வெளியிட்டிருந்தது.
அப்படியாயின் புலிகள் பாவித்ததாக இராணுவம் சொல்லும் அந்த புதிய ஆயுதம் என்ன? இது தொடர்பாக அறிய ஆவலா? அடுத்த பாகம் வரை காத்திருங்கள்!/// கடந்த பாகத்தின் முடிவு-----
அப்போ நீங்க பசீலன் 2000 பற்றி சொல்ல வரல்லையா? அது தானே தொன்னூறுகளில்/அதன் பின் புலிகளால் இராணுவத்துக்கு பீதியை கிளப்ப வைத்த கண்டுபிடிப்பு.
///இலங்கை அரசோ இவ் விடயத்தினை அறிந்து திண்டாடத் தொடங்கியது. இது தொடர்பாக அறிய ஆவலா? அடுத்த பாகம் வரை காத்திருங்கள்!//// ;) எதிர்பார்க்கிறேன்...
அறிந்துகொண்டேன்.
தகவலுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.
அந்த நாட்களினை மீட்டியிருக்கிறாய்.. வாழ்வின் பல அரிய தருனங்கள் நழுவிவிட்டன.
அடுத்த பாகத்திக்கு ஆவலோடு காத்திருக்கின்றோம் ஆயுதங்களின் பெயரை தமிழில் கூறி இருப்பது...
ஆச்சர்யமான விசயம்...நாங்க துப்பாக்கிய கூட ரிவால்வர் என்று எழுதுகிறோம்...விடுதலை புலிகளும் தமிழில் தான் அழைத்தார்கள் என நினைக்கிறேன்......
மாப்ள தொடர் பல விஷயங்களை சொல்லி செல்கிறது...தொடர்கிறேன்!
mm...
mm...
mm...
பகிர்வுக்கு நன்றி...
அருமையான பதிவு!
நிரூபனுகு நிகர் நிரூபன் தான்
ஐயமில்லை!
புலவர் சா இராமாநுசம்
அடுத்த பாகம் எப்போது வரும் என்ற ஆவலில் காத்திருக்கின்றேன்!
நல்ல பதிவு
வாழ்த்துக்கள்.
பதிவு விறு விறுன்னு போகுது மக்கா...!!!
@கந்தசாமி.
அப்படியாயின் புலிகள் பாவித்ததாக இராணுவம் சொல்லும் அந்த புதிய ஆயுதம் என்ன? இது தொடர்பாக அறிய ஆவலா? அடுத்த பாகம் வரை காத்திருங்கள்!/// கடந்த பாகத்தின் முடிவு-----
அப்போ நீங்க பசீலன் 2000 பற்றி சொல்ல வரல்லையா? அது தானே தொன்னூறுகளில்/அதன் பின் புலிகளால் இராணுவத்துக்கு பீதியை கிளப்ப வைத்த கண்டுபிடிப்பு.
//
அன்புள்ள கந்து பெரியப்பா,
நாங்கள் இப்போது ஜெயசிக்குறுச் சமர் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். இந்த தொடரின் முதற் பாகத்தில் பசிலன் 2000 பற்றியும், அது கோட்டைச் சமருக்குப் பின்னர் புலிகளால் ஏன் அதிகளவில் பயன்படுத்தப்படவில்லை என்பதற்குமான காரணத்தினையும் சொல்லியிருக்கிறேன்.
இங்கே புலிகள் பசீலனைப் பாவிக்கவில்லை! இந்த தொடரில் புலிகள் பல் குழல் உந்து கணைகளைப் பாவிக்கத் தொடங்கி விட்டார்கள் என இராணுவம் ஐயம் கொள்ளத் தொடங்கியது. இராணுவம் நம்பியுமிருந்தது. அவ்வளவு தூரம் தந்திரமாக புலிகள் பல் குழல் ஏவுகணைகள் போன்று மோட்டார் எறிகணைகளை தமது மோட்டார் படையணியின் உதவியுடன் வீசினார்கள் என விளக்கமாகச் சொல்லியிருக்கிறேன்! அந்தப் புதிய ஆயுதத்திற்கான விளக்கத்தினையும் இப் பாகத்தில் சொல்லியிருக்கிறேன் பெரியப்பா.
அருமையான பதிவு!
இலங்கை ராணுவத்துக்காக கொள்வனவு செய்திருந்த மோட்டர் எறிகணைகளை வேறு கம்பனியின் பெயரில் பதிவு செய்து வைத்திருந்த தமது கப்பலிலேயே ஏற்றிவிட்டு இலங்கை அரசாங்கத்தின் கண்ணீல் மண்ணைத்தூவி விட்டு பக்குவமாக அவ்வளவு எறிகணையையும் முல்லைத்தீவூடாக கொண்டு வந்து இறக்கித்தான் ஜெயிசிக்குறுவில் சமரில் திடீரென எறிகணை மழையாய் பொழிந்தார்கள்
அத்தனையும் வாசகர்கள் அறியாத புது தகவல்கள் சகோ!
எல்லாம் எனக்குத்தெரியாத தகவல்கள்.நன்ரு.
கொஞ்சம் தெரியும்.கொஞ்சம் தெரியாது.நல்லா அலசியிருக்கிறீங்க போல?
எழுதுங்கள்.-தொடர்ந்து..
Post a Comment