இலங்கையில் அப்போது ஜனாதிபதியாகவிருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்காவின் கணவர் விஜய குமாரதுங்கா அவர்கள் நடித்த சிங்களப் படத்தின் பெயரிலிருந்து பெறப்பட்டது தான் ஜெயசிக்குறு எனும் படை நடவடிக்கைக்கான பெயராகும். ஜெயசிக்குறு என்பதன் தமிழ் அர்த்தம் வெற்றி உறுதி என்பதாகும்.ஜெயசிக்குறு எனும் பெயர் கொண்டு வன்னியைக் கைப்பற்றும் நோக்கில் வந்த படையினரைப் புலிகள் எதிர்த்து நின்று போர் செய்யும் போது, செய் அல்லது செத்து மடி எனும் பெயரிலான மற்றுமோர் நடவடிக்கையினையும் அப்போது இராணுவம் மன்னார்ப் பகுதியினூடாக ஆரம்பித்திருந்தது. அப்போது செய் அல்லது செத்து மடி எனும் பெயர் தாங்கி வந்த படையினருக்கும், உலக நாடுகளுக்கும் புலிகள் ஓர் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்கள்.
"முல்லைத் தீவுப் படை முகாம் புலிகளால் கைப்பற்றப்பட்டு இரண்டு வருடங்கள் நிறைவடைவதற்கு முன்பதாகவே புலிகள் இவ்வளவு தூரம் வளர்ந்து விட்டார்களா?" என இராணுவத்த் தரப்பு அச்சத்தில் உறைந்தது. ஜெயசிக்குறுப் படை நடவடிக்கையூடாக A9 நெடுஞ்சாலையினைக் கைப்பற்றும் நோக்கில் படை நடவடிக்கையினை முன்னெடுத்த படையினருக்குப் பக்க பலமாக மன்னார் களமுனையூடாக பாப்பாமோட்டை, பாலம் பிட்டி, பள்ளமடு, பெரியமடு ஆகிய பகுதிகளினைக் கைப்பற்றும் நோக்கில் மற்றுமோர் அணியினர் மன்னாரிலிருந்து செய் அல்லது செத்து மடி எனும் பெயரிலான படை நடவடிக்கையுடன் களமிறங்கினார்கள். இராணுவம் தமக்கு இப்படி ஓர் அதிர்ச்சி கிடைக்கும் என கனவிலும் நினைத்திருக்காது.
புலிகள் போர் முனையில் புதியதோர் ஆயுதத்தினைப் பயன்படுத்துகிறார்கள் என இராணுவம் நம்பத் தொடங்கியது. செய் அல்லது செத்து மடி எனும் பெயரில் படையெடுப்பினை மேற் கொண்டு வந்த இராணுவத்தினரை விரட்டும் நோக்கில் புலிகள் அணிகள் ஒரு புறம் வீராவேசத்துடன் போரிட, மறு புறம் புலிகளின் மோட்டார் அணியினர் மழை போல இராணுவத்தினர் மீதும் இராணுவ நிலைகள் மீதும் குண்டுகளைப் பொழிந்து கொண்டிருந்தார்கள்.இராணுவத்தினர் எதிர்பார்க்காத சமயத்தில் புலிகளிடமிருந்து இவ்வாறு மூர்க்கமான மோட்டார் தாக்குதல்கள் நிகழ்ந்தது கொழும்புப் படைத் தலைமையகத்திற்கு ஆச்சரியத்தினை ஏற்படுத்தியது.
நீங்கள் இங்கே படித்துக் கொண்டிருப்பது உங்கள் நாற்று வலையில் வெளி வந்து கொண்டிருக்கும் "பீரங்கி கைப்பற்றி ஆமிக்கு பீதியைக் கொடுத்த புலிகள்!" தொடரின் மூன்றாவது பாகத்தின் தொடர்ச்சியாகும். இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க இவ் DROP DOWN MENU இல் கிளிக் செய்யுங்கள்.
புலிகளின் அணிகள் இடை விடாது ஒரே நேரத்தில் இராணுவ நிலைகள் மீது 36 குண்டுகள் வீழ்ந்து வெடிக்கும் வண்ணம் மோட்டார் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். இராணுவத் தலமைக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டது. தம் வசம் இருந்த ஆட்டிலறி எறிகணைகள் எல்லாம் ஒரே தரத்தில் ஒரு குண்டினைக் உந்தித் தள்ளிக் கொண்டிருக்க புலிகள் தம்மை விட வலுக் கொண்டோராக ஒரே தரத்தில் 36 குண்டுகளைப் பொழிகிறார்களே இது எப்படிச் சாத்தியமாகும் என இராணுவம் ஆராய்ந்தது. இறுதியில் புலிகள் வசம் ஒரே தரத்தில் 12 குண்டுகளை உந்தித் தள்ளக் கூடிய மூன்று பல் குழல் உந்து கணைச் செலுத்திகள் (Multi Barrel Rocket Launcher) இருப்பதாக ஓர் செய்தியினையும் இராணுவத் தரப்பு அப்போது வெளியிட்டிருந்தது.
இதன் பின்னர் அவசர அவசரமாக ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் தன்னுடைய படைத் துறை தலைமை அதிகாரிகளையும், ஆயுதக் கொள்வனவுடன் தொடர்புடையோரையும் கொழும்புக்கு அழைத்து புலிகள் வசம் பல்குழல் உந்துகணைச் செலுத்திகள் உள்ளன எனும் பாணியில் கலந்துரையாடலை நிகழ்த்தித் தம் படை வலுச் சமநிலையினை வலுப்படுத்துவதற்கும் பல் குழல் உந்து கணைகள் வாங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். ஈழப் போரியல் வரலாற்றில் புலிகள் ஜெயசிக்குறு எதிர் சமரின் போதோ அல்லது 1997-1999 வரையான காலப் பகுதியிலோ பல் குழல் எறிகணை - உந்து கணைச் செலுத்திகளைப் பயன்படுத்தவில்லை. இதனைக் கூட பிரித்தறிய முடியாத இராணுவம் புலிகள் தொடர்சியாகத் தமது நிலைகள் மீது குண்டு மழை பொழிவதைக் கருத்திற் கொண்டு புலிகள் வசம் ஆட்டிலறி எறிகணைகள் இருக்கின்றது எனும் கருத்தினை வெளியிட்டிருந்தது.
அப்படியாயின் புலிகள் பாவித்ததாக இராணுவம் சொல்லும் அந்த புதிய ஆயுதம் என்ன? இது தொடர்பாக அறிய ஆவலா? அடுத்த பாகம் வரை காத்திருங்கள்!
அன்பிற்கினிய உறவுகளே! உங்கள் அனைவருக்கும் உளம் கனிந்த இனிய நத்தார் மற்றும் புது வருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்! பிறக்கப் போகும் இந்தப் புதிய ஆண்டில் எமைச் சூழ்ந்த தொல்லைகள் யாவும் விலகி வல்லமையுடன் தமிழன் வாழ்வு சிறக்க வாழ்த்துவோம் வாரீர்!
இது பற்றி அறிய ஆவலா? இங்கே கிளிக் செய்யுங்கள்.
இப் பதிவிற்கான படங்கள் கூகிள் தேடல் மூலம் பெறப்பட்டவை.
இப் பதிவிற்கான படங்கள் கூகிள் தேடல் மூலம் பெறப்பட்டவை.
|
10 Comments:
ஈழத்தமிழனுக்கான முதல் குரல்
// 1997-1999 வரையான காலப் பகுதியிலோ பல் குழல் எறிகணை - உந்து கணைச் செலுத்திகளைப் பயன்படுத்தவில்லை//
அதுக்குப் பிறகு இருந்ததா பாஸ்? இருந்ததாச் சொல்லித்தான் 2000 ல அரசாங்கம் பாவித்தது!
நல்ல ஆய்வு
நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் இந்த தந்திரமான தாக்குதல்தொடர்பாக.
வணக்கம்
காத்திருக்கிறேன் அடுத்த பதிவுக்கு
சிங்களனுக்கு நல்லா அடியும் கொடுத்து இருக்கிறார்கள் பேஷ்...!!!
ம்ம்
புதிய ஆயுதம் பற்றி தெரிந்துகொள்ள ஆவலாயிருக்கிறேன் சகோ!தொடருங்கள்.
ம்ம்....
வணக்கம் பாஸ்!
தொடரை தொடருங்கள் தொடர்கின்றேன்!
Post a Comment