மனித மனங்கள் விசித்திரமானவை. மனம் ஒரு குரங்கு என்பதற்கு அமைவாக எவர் மனமும் எப்போதும் மாறிக் கொள்ளலாம் என்பது நாம் அறியாத விடயமல்ல. ஆனாலும் சில மனித மனங்களை நாம் இலகுவில் எடை போடவோ அளவிடவோ முடியாது. தீவிரமான கொள்கைப் பிடிப்போ, அல்லது நிலையான அரசியற் கருத்தோ இல்லாத நிமிடத்திற்கு நிமிடம் மனம் மாறும் கலைஞர் கருணாநிதி அவர்களின் மனதை யாரால் தான் அளவிட முடியும்? கலைஞரின் அண்மைய மெஹா ஹிட் காமெடி தான் முல்லைப் பெரியாறு விடயத்தில் கேரளம் பணியா விட்டால் படையெடுப்பு நிகழ்த்துவேன் என்பதாகும்.
வயதானவர்கள் அதிகப் பிரசங்கித்தனம் செய்வார்கள் என்பதும், வயாசனவர்களினைத் தேடி காலன் வருகின்ற போது அவர்களுக்கு சுடலை (சுடு காட்டு அறிவு) ஞானம் கிடைத்து தம் வாழ் நாளில் ஒரு போதும் செய்திராத செயல்களைச் செய்வார்கள் அல்லது செய்ய முயற்சிப்பார்கள் என்பதும் தமிழர்களின் நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கைக்கு மிகச் சிறந்த உதாரணம் கலைஞர் ஐயா அவர்கள். தற்போது தமிழகத்தில் யாருடைய ஆட்சி இடம் பெறுகின்றது? முப் படைகளின் பொறுப்பும் யார் வசம் இருக்கின்றது? இந்த விடயங்களை அறியாதவராக கடந்த தேர்தலில் பெற்ற தோல்வியினைத் தொடர்ந்து திமுக கட்சியின் அரசியல் அந்தஸ்து பற்றிய நிலையினை உணராதவராக அண்மையில் சில கருத்துக்களை கலைஞர் ஐயா திருவாய் மலர்ந்திருக்கிறார்.
மகள் கனிமொழி திஹாரில் இருக்கையில் ஆறுதல் சொல்ல யாரும் அருகே இல்லையே எனும் ஆதங்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் மற்றும் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் படங்களைப் பார்த்திருப்பாரோ என்னவோ? பொங்கியெழாத குறையாக திமுக உண்ணாவிரதம் நடாத்துகிறது. இனிமேலும் தமிழர்களின் தலைகள் உருளின் கேரளர்களின் வரலாறு மாற்றப்படும் என உசுப்பேத்தல் காமெடிப் பேச்சு பேசியிருக்கிறார் கருணாநிதி அவர்கள். ஐயா கலைஞரே!! தமிழகத்தில் நில அபகரிப்புக்களை மேற் கொண்டது போல கேரள - தமிழக எல்லைப் பகுதியிலும் தங்கள் ஆட்சிக் காலத்தில் நில அபகரிப்பினை மேற் கொண்டிருந்தால் இன்று தமிழர்களுக்கு இந் நிலை வந்திருக்குமா ஐயா?
தமிழக - கேரள எல்லைக் கிராமங்களைத் தன்னும் ஆட்டையைப் போட்டிருந்தால் இன்று தமிழர்களுக்கு இந் நிலமை வந்திருக்குமா ஐயா? தாங்கள் ஆண்டு அனுபவித்தாலும், இன்னமும் பதவி ஆசை தீராதவராக அப்பாவி மக்களை உசுப்பேத்தும் அல்லது உருவேற்றும் அறிக்கைகளை ஓயாது விடுகின்றீர்கள். இன்றைய கால கட்டத்தில் அதிகாரம் என்பது யார் வசம் இருக்கின்றது என்றாவது சிந்திந்த்துப் பார்த்தீர்களா ஐயா? தாங்கள் இவ்வாறு பேசுவதால் சினங் கொண்டெழுந்து கேரள மக்களுடன் மோதப் போவது உங்களின் வம்சங்கள் அல்ல! அப்பாவி ஏழை மக்கள் ஐயா! உங்கள் மகள் மாத்திரம் திஹார் வெயிலில் துடித்திடக் கூடாது என்று ஜாமீன் வழக்கிற்கு பணச் செலவு செய்து பாதுகாப்பாக குடை பிடித்து தமிழகத்திற்கு அழைப்பீர்கள்!ஆனால் ஊர் மக்கள் மட்டும் உருக் கொண்டெழுந்து போரிடுவார்கள் என முரசொலி எழுப்புவீர்கள். இது எந்த வகையில் நியாயம் ஐயா?
சிவாஜி, எம்ஜிஆரின் புரட்சிப் படங்களைப் பார்ப்பதை விடுத்து தாங்கள் மானாட மயிலாட பார்த்திருந்தாலும் இப்படியான அறளை பேந்த பேச்சுப் பேசியிருக்க மாட்டீர்கள் ஐயா. அட, இப்போது "மானாட மயிலாட" இல்லையென்றால் "நமிதா ஆட நான் பார்க்க" என்றோர் புது நிகழ்ச்சியினைத் தங்கள் தொ(ல்)லைக் காட்சியில் உருவாக்குங்கள் ஐயா. உங்களுக்கும் பொழுது போகும். நீங்கள் இன்னமும் தமிழுக்கு தொண்டாற்றுகின்றீர்கள் எனத் தம்பட்டம் அடித்திடவும் வசதியாக இருக்கும். இன்றைக்கு உதித்த சுடலை ஞானம் தமிழகத்தில் மாறி மாறித் தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்த போது உதித்திருக்க கூடாதா? உங்கள் கைவசம் ஆட்சி அதிகாரங்கள் இருந்த போது நீங்கள் இப்படிச் சிந்தித்திருக்க கூடாதா ஐயா?
நீங்கள் ஆட்சியில் இருந்த போது தமிழக மக்களின் நிலமையினைப் புரிந்து கொண்டு டில்லிக்குத் தந்தி அடிப்பதை நிறுத்தி விட்டு கேரளப் பிரச்சினைக்கு ஓர் தீர்க்கமான முடிவினை எட்டுவதற்கு முயற்சித்திருக்கலாம் அல்லவா? மத்திய படையை நிறுத்தக் கோரி தந்தி வேறு அனுப்புகிறீர்கள். தந்தி அனுப்பிய சேதியை உண்ணாவிரத மேடை போட்டு பேசிக் காட்டுகிறீர்கள். நீங்கள் ஆடி அடங்கிய பின்னரும் திருந்தலையே என்பது வேதனையாக இருக்கிறது. ஈழ மக்கள் பிரச்சினைக்கும் தந்தி அனுப்பி விட்டு தம்பட்டம் அடித்தீர்கள். இப்போது மறுபடியும் கேரள மக்கள் பிரச்சினைக்கும் தந்தியும் தம்பட்டமுமா? ஐயா! முடியலை ஐயா! இந்தக் கொடுமையினைக் கேட்டுச் சகிக்க முடியலை! தமிழர்களை உசுப்பேத்தி அப்பாவி மக்கள் தம் உயிரை இழப்பதற்கு நீங்களும் ஓர் காரண கர்த்தாவாக இருப்பதை விடுத்து செயலுக்கு முன்னுரிமை கொடுங்கள் ஐயா!
***************************************************************************************************************************
ஈழத்து மொழி, கலை, கலாச்சாரம், பண்பாட்டு விழுமியங்களின் இன்றைய நிலையினைக் கருத்திற் கொண்டு; எம் அடுத்த சந்ததியிடமும், உலகெங்கும் பரந்து வாழும் எம் தமிழ் உறவுகளிடமும் இவ் விடயங்களை அழிவுறாது கொண்டு செல்லும் நோக்கிலும் ஆவணப்படுத்தும் நோக்கிலும் ஈழ வயல் எனும் வலைப் பதிவினைப் பதிவர்கள் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள்.ஈழவயலில் வெளியாகும் பதிவுகளை நூலுருப்படுத்தும் முயற்சியிலும் பதிவர்கள் ஈடுபடுகின்றார்கள். இந்த ஈழ வயல் வலைப் பதிவினை நீங்களும் தரிசித்து உங்கள் ஆதரவினையும் இவ் வலைப் பதிவிற்கு வழங்கலாம் அல்லவா?
******************************************************************************************************************************
|
26 Comments:
ஏதாவது சூடாகக் கிடைக்குமா?
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்திய சினிமாக்காரரிடம் சிக்கித் தவிக்கும் ஈழத் தமிழர் உணர்வுகள்
ஃஃஃஆறுதல் சொல்ல யாரும் அருகே இல்லையே எனும் ஆதங்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் மற்றும் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் படங்களைப் பார்த்திருப்பாரோ என்னவோ? ஃஃஃ
அவங்க என்ன சினிமாவுக்கும் அரசியலுக்கும் வித்தியாசம் தெரியாதவங்களா?
ஃஃஃகேரளப் பிரச்சினைக்கு ஓர் தீர்க்கமான முடிவினை எட்டுவதற்கு முயற்சித்திருக்கலாம் அல்லவா?ஃஃஃ
சே சே அப்புறம் ஆட்சி கவுந்தப்புறம் பிரச்சாரத்துக்கு அவலுக்குஎங்கே போறது...
மச்சி மன்னிச்சுக்கோ இன்று எனது பதிவில் ஈழவயலை இணைக்க மறந்திட்டன் காரணம் அது ஒரு செடுல் பதிவு நாளைய பதிவில் கட்டாயம் இணைக்கிறன்..
@♔ம.தி.சுதா♔
ஏதாவது சூடாகக் கிடைக்குமா?
//
வணக்கம் மச்சி,
சூடாக என்றால் அடுப்பில டீ இருக்கு! எடுத்து கொடுக்கவா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@♔ம.தி.சுதா♔
அவங்க என்ன சினிமாவுக்கும் அரசியலுக்கும் வித்தியாசம் தெரியாதவங்களா?
//
அது சரி மச்சி,
ஆனால் நம்ம கலைஞர் சினிமாவிற்கும் அரசியலுக்கும் இடையிலான வேறுபாடு தெரியாதல்லவா இருக்காரு!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@♔ம.தி.சுதா♔
ஃஃஃகேரளப் பிரச்சினைக்கு ஓர் தீர்க்கமான முடிவினை எட்டுவதற்கு முயற்சித்திருக்கலாம் அல்லவா?ஃஃஃ
சே சே அப்புறம் ஆட்சி கவுந்தப்புறம் பிரச்சாரத்துக்கு அவலுக்குஎங்கே போறது...
//
ஹே...ஹே....
செம காமெடியப்பா!
வணக்கம் நண்பர் நிரூபன்,
நலமா?
அன்று அண்ணா தலைமையிலான அரசில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது
அமராவதி அணையைக் கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி கொடுத்து, பின்னர் ஒவ்வொரு ஆண்டும்
கர்நாடக மாநிலத்திடம் தண்ணீருக்காக பிச்சை கேட்கும் நிலைமையை கொண்டுவந்தவரே
இவர் தான்....
சுயநலத்தின் மொத்த உருவம்...
வணக்கம், நிரூபன்!சட்டையில் படிந்த தூசி போல்,இன்னும் கொஞ்சம் காரமாக என்றால்,எருமை மாட்டில் மழை பெய்தது போலிருக்கும் நீங்கள் படும் ஆதங்கம் அவருக்கு.உடனடித் தலையீடு செய்து பிரச்சினையை சுமுகமாக முடித்து வையுங்கள்,இல்லையேல் ஒட்டுமொத்தமாக எல்லோரும் வீட்டுக்குப் போக வேண்டியிருக்கும்,என்று மத்திய அரசை மிரட்ட முடியாதா,அவரால்?செய்ய முன்வரமாட்டார்!அது முடியவும் முடியாது!ஏனெனில்,ஆத்தா துண்டு போட்டு வைத்திருக்கிறாவே????
ஈழ வயல் பற்றி ஏற்கனவே ஃபேஸ்புக்கில் கேள்விப்பட்டேன் தலைவரே.... உங்கள் முயற்சி வெற்றிகரமாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
நல்ல சாட்டையடி பதிவு நிரு... ஆனால் அந்தாளுக்கு இது எருமை மாட்டின் மீது விழுந்த மழைதான் :(
அய்யா அறிக்கை விட்டுதான் தான் இன்னும் இருப்பதை காட்ட வேண்டிய நிலையில் இருக்கார்... அதான் உந்த ஓயாத அறிக்கைகள்.
அப்புறம்..... பிரச்சனையை தீர்க்க இவரிடம் வழி இருந்தாலும் இவர் தீர்க்க மாட்டார்.... ஏனெனில் அப்போத்தானே அம்மையாரை திட்டி பழி அறிக்கை விட முடியும் :)
அரசியல் வாதிகளை பார்க்கும்போது ....... வெறுப்பாக இருக்குறது...ஒருவன் கூட சரி இல்லை..
கருணாநிதி கருணாநிதி கருணாநிதி....
ஈழவயல் செழிக்க வாழ்த்துக்கள் ...
நண்பரே...வேலைப்பளு காரணமாக பதிவுலகம் பக்கம் தலை வைக்கவில்லை.
சொட்டைக்கு சரியான சாட்டை.
எனது பதிவில் முல்லை பெரியார் பிரச்சனையில் கேரள மக்கள் மனநிலையை எடுத்துக்காட்டி உள்ளேன்.
நிரூபன் கருத்துக்காக என் கருத்துப்பெட்டி காத்திருக்கிறது.
யாரப்பா அது நிரூபன் போஸ்ட்க்கு மைனஸ் ஓட்டு போட்டது, அவர் ஆளை கண்டு பிடிச்சுட்டா ஆப்பு வைப்பாரு
ம.தி.சுதா♔ said...
ஏதாவது சூடாகக் கிடைக்குமா?
யோவ், இது ஹோட்டலா? போஸ்ட்டா?அடங்கோ
ஆகுலன் said...
அரசியல் வாதிகளை பார்க்கும்போது ....... வெறுப்பாக இருக்குறது...ஒருவன் கூட சரி இல்லை..
ரிப்பீட்டேய்
Saattayadi for sotta.... Varun prakash
ஈழவயலுக்கு வாழ்த்துக்கள் மச்சி....
தாத்தா ஒரு காமடி பீஸ் அவ்வளவுதான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை
உந்த கிழவனைபற்றி கதைச்சா வயித்தெரிச்சல் தான் வரும்
அன்று அண்ணா தலைமையிலான அரசில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது
அமராவதி அணையைக் கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி கொடுத்து, பின்னர் ஒவ்வொரு ஆண்டும்
கர்நாடக மாநிலத்திடம் தண்ணீருக்காக பிச்சை கேட்கும் நிலைமையை கொண்டுவந்தவரே
இவர் தான்....//
அட இதுவேற நடந்துருக்கா கொய்யால, இவனுக கட்டையில் போகும் வரை அடங்கமாட்டானுங்க..!
வணக்கம் நிருபன்...
அறல பேந்த மனிசர பற்றிய பதிவு..?
Why Karunanidhi did not take any action to implement the Supreme court judgement for 4 years? Why did he not take any action to implement the ntribunal order on Cauvery water? Pity, he still thinks that he could deceive all for ever!
Post a Comment