மேனியெல்லாம் செந்தமிழ் வழிந்தோடும்
அழகு நிறை திரு நாட்டில் இன்று
தண்ணீரின் வடிவில் ஓர் அவலம் -உறவுகளே
எம்மால் தாங்கி கொள்ள முடியலையே!!
என் செய்வோம் நாம்?
ஏதும் செய்ய இயலாது
கை கட்டியல்லவா
ஈழத்தின் ஓரத்தில் இருந்து
கண்களில் ஈரத்தை சுமந்து
கேரள தமிழக எல்லையில் நடக்கும்
கொடுமைகளை கேட்டும் பார்த்தும்
வெறுங் கையராக நிற்கின்றோம்!
மன்னர்கள் கொலு வீற்றிருந்து
ம(அ)றத் தமிழ் வளர்த்த நல் நாட்டில்
தண்ணீரின் வடிவில் இன்று - கேரள(த்)
தருக்கர்களின் போராட்டம்
கண்ணீரில் வாடுகிறோம் உறவுகளே!
கையாலாகாதோராய் எங்களின்
கரங்களை கட்டியுள்ள அடிமை
விலங்கினை அறுத்திட முடியாது
ஏக்க பெரு மூச்சு விடுகிறோம் உறவுகளே!
கை தொடும் தூரத்தில் நீங்கள் - நாங்களோ
கைகளில் விலங்குடன் அல்லவா
கொடுங் கோலர் ஆட்சியில்
மேய்ப் பாரற்று தவித்துப் போயுள்ளோம்!
உங்களை நினைக்கையில் உள்ளம் குளிரும் - எம்
உச்சியெல்லாம் தமிழின் வடிவில் தேனோடும்!!
சந்தமாய் எம்மோடு இணைந்து பல
சங்கடம் வந்த வேளையிலும்
நெஞ்சினில் உரம் கொடுத்த எங்களின்
நேச நாடே! பாரத தேசத்தின் பாச மாநிலமே!
உனக்காக கண்ணீர் விடும் இந்த
ஈழத்து ஈனர்களை மன்னியம்மா!
ஒன்றா இரண்டா! நீவிர் எமக்காய் ஆற்றிய
அரும் பணிகளை பட்டியலிட்டாலே
அது கவிதைக்கும் அழகில்லை- உனை
எம்மிலிருந்து பிரித்துக் காட்டுவதாய் வரும்
தொனியொன்றிற்கான இடமாகி போய் விடுமே!
பெண்களின் வீரம்! கண்ணகி வடிவில் பொங்கிய தீரம்!
ஆத்தையின் வடிவீல் அரியை அடக்கிய
நாத் திறம் மிக்க நல்லதோர் தேசம்!
அப்பப்பா! ஒன்றா இரண்டா!
ஒப்பற்ற தியாங்களால்
எம்மோடு அருகே இருக்கிறோம்
எனச் சொல்லி
எம் அச்சம் களைந்து
அணைத்த கரங்களான உம்மை
இன்று அணுக முடியாது
அந்தரித்து நிற்கிறோம் தமிழகமே!!
எமக்கான தேசமும்,
எம்மை வழி நடத்திய பெரு மகனும்
இன்று எம்மோடு இருந்திருந்தால்;
முல்லை பெரியாறின் துயர் கேட்டு
பொறுத்திருப்போமா?
இல்லையே - உலக(த்)
தெருவெங்கும் வாழும் தமிழரெல்லாம்
அவன் நிழலின் கீழ் வந்து
உன்னை தாங்கியிருப்போம் அல்லவா?
கண்ணகியின் திரு நாட்டில்
தண்ணீரின் வடிவில் இன்று
தருக்கர்களின் இழி செயல்கள்!
கேட்டு கலங்கத் தான் முடிகிறது
தமிழ் தாயே - விழி காட்டும் திசையில்
கதை முடிக்கும் அண்ணன் இருந்திருந்தால்
வெறுங் கையராக நாமும் இருந்திருப்போமா?
ஒன்றித்த தமிழர் பலம் இதுவென
கேரளத்தின் எல்லையில்
எழுச்சியோடு வந்திருப்போமே!!
அந்தரித்து தவிக்கையில்
அரிசிக்கு வழியின்றி
இறுதிப் போரின் போது
அவலத்துள் வாடுகையில்
அரிசியினுள் காசு வைத்து
அனுப்பிய சொந்தங்களே!
முடியலை! உறவுகளே! முடியலை!
எம் மூச்செல்லாம் துடிப்பது
உங்கள் மூல வேரிலிருந்து தானே!
நிலை குலைந்து விடாது - எமை
சூழ்ந்திடும் வேதனைகள் யாவும்
விரைவினில் அறுந்திடும் எனும்
நம்பிக்கையோடு இருக்கின்றோம்!
நாளும் பொழுதும் கேரளத்தின் எல்லையில்
வாழும் வாழ்வை அழிக்க அரக்கர்கள் செய்யும்
கோரக் கொடூரங்களை கண்டு கலங்குகிறோம்!
மன்னியுங்கள் உறவுகளே!
மக்கள் எழுச்சிக்கான பயன்
வெகு விரைவில் கிடைக்கும் என
நம்பியுள்ளோம் எம் தேசமே!
கை தொடும் தூரத்தில் நீர் இருக்கையில்
கண்களில் நீரோடு கையாலாகதோராய் இருக்கின்றோம் - எம்
மெய்யினில் உமக்கான நீதி கிடைக்கும் எனும்
நம்பிக்கை நிறைந்தோராய் பாசப் பிணைப்பால்
தமிழகத்தின் உறவுகளோடு
இரண்டற கலந்தோராய் இரங்கி அழுகின்றோம்!
உறவுகளே! இந்த ஈன(ழ)த் தமிழர்களை மன்னியுங்கள்!
எம்மால் இப்போது எதுவுமே முடியாது!
இம்மியளவு அசைந்தாலும் - சிகப்பு சால்வை
மந்திகள் கூட்டம் எம்மை
மரணப்படுக்கையில் தள்ளிட வாசலில் நிற்கிறது!
வாய் பொத்தி அழுகின்றோம்! வாடிடும் தமிழக
உறவுகளின் துயர் கண்டு வேதனையில் துடிக்கின்றோம்!
மன்னியுங்கள் எம்மை! மக்களின் எழுச்சி
மங்கிடாது எனும் உணர்வோடு
உங்களின் பின்னே நாம் இருக்கின்றோம் என
சொல்லிட கூட முடியாது
இன்று வெட்கித்து தலை குனிந்துள்ளோம்!
நீதியின் கண்கள் நிலை குலைந்திடாது - தமிழ்
தேவதையின் தேசம் குளிர்ந்திட
விரைவினில் கேரளம் நல்ல பதில் கொடுக்கும்!
இல்லையேல் காலத்தின் பதிலில் கட்டுண்டு
தன் கொடுமைக்கான தண்டனையை பெற்று
கண்ணீரில் மூழ்கிச் சாகும்!
இது ஈழத் தமிழர்களின் சாபம் அல்ல!
இன்றைய யதார்த்தம்!
|
23 Comments:
அதென்ன MAP ல எருமை நாடுன்னு ஒன்னு இருக்கு உண்மையிலயே அப்படின்னு ஒன்னு இருந்துச்சா...
அடப்பாவி MAP-ல எல்லாமே திட்ற வார்தையாவே இருக்கு... மாப்ள என்ன இது வேற படமே கிடைக்கலயா உனக்கு...
வணக்கம்
ஏதோ புரியுது.. மீண்டும் ஒரு முறை வாசித்து விட்டு வாரேன்
//கண்ணகியின் திரு நாட்டில்
தண்ணீரின் வடிவில் இன்று
தருக்கர்களின் இழி செயல்கள்!
கேட்டு கலங்கத் தான் முடிகிறது
தமிழ் தாயே - விழி காட்டும் திசையில்
கதை முடிக்கும் அண்ணன் இருந்திருந்தால்
வெறுங் கையராக நாமும் இருந்திருப்போமா?//
ரயிட்டு..
வணக்கம், நிரூபன்!/////உங்களின் பின்னே நாம் இருக்கின்றோம் என
சொல்லிட கூட முடியாது
இன்று வெட்கித்து தலை குனிந்துள்ளோம்!
வணக்கம் நிருபன்!
எங்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் தாய் தமிழகத்திற்கு ஆதரவாகவேனும் குரல் கொடுக்கமுடியாதிருக்கும் இந்த நிலை எந்த சமூகத்துக்கு வரக்கூடாது..!!(
@சசிகுமார்
அதென்ன MAP ல எருமை நாடுன்னு ஒன்னு இருக்கு உண்மையிலயே அப்படின்னு ஒன்னு இருந்துச்சா...
//
மச்சி! நான் பதிவினைப் போட்டு விட்டு வெளியே போய் விட்டேன்! ரொம்ப நன்றி மச்சி!
மன்னிக்கனும் மச்சி! இப்போது மாத்தி விட்டேன்!
@சசிகுமார்
அடப்பாவி MAP-ல எல்லாமே திட்ற வார்தையாவே இருக்கு... மாப்ள என்ன இது வேற படமே கிடைக்கலயா உனக்கு...
//
நண்பா, கூகிளில் தேடி படத்தை எடுத்தேன்! நான் அவசரத்தில் படத்தினைக் கவனிக்கலை! தற்போது மாத்தி விட்டேன்! மன்னிக்கவும் நண்பா.
பெரும்பாலான ஈழத்தமிழர்களின் மனதை சொல்லி இருக்குறீர்கள்.....
என்ன செய்ய முடியும் ..
இயலாதவர்கள் ஆகிவிட்டோம்..
வணக்கம்,நிரூபன்!இந்தப் பதிவைக் கொஞ்சம் படியுங்கள்!//////"ஜோஸபின் கதைக்கிறேன்."
"தமிழ் ஈழ வலைப்பதிவுகள் : ஓர் ஆய்வு முடிவு"
நன்றி நிரூபன்,
எம் சகோதரனின் நிலை நினைத்து கண்ணீர் வருகிறது...தான் ஆடாவிட்டாலும் தன் சதையாடும் என்பது இதுதான்....
தமிழ்நாட்டில் இருக்கும் கேரளா நடிகைகள் [[அசின் உட்பட]] அனைவரும் 24 மணி நேரத்துக்குள் தமிழ்நாட்டை விட்டு ஓடவேண்டும்.
-----நாஞ்சில்மனோ அறிக்கை-----
எம் அண்ணன் இன்று இருந்திருந்தால்.... இருக்கின்றான் நிச்சயம் இவர்களுக்கு பதிலடி உண்டு. இந்த ஆட்டம் போட முடியாமல் போகும் என்றல்லவா கொலைவெறியர் ஒன்று சேர்ந்து எம் இனத்தை நாசப்படுத்தியது. பதிலடி கிடைக்கும். அன்று தாய்தமிழகமும் வணங்கா மண் ஈழமும் சிரிக்கும்.
MANO நாஞ்சில் மனோ said...
தமிழ்நாட்டில் இருக்கும் கேரளா நடிகைகள் [[அசின் உட்பட]] அனைவரும் 24 மணி நேரத்துக்குள் தமிழ்நாட்டை விட்டு ஓடவேண்டும்.
-----நாஞ்சில்மனோ அறிக்கை-----//
மனோவின் அறிக்கைக்கு வரோ கடும் கண்டனம். ha haa
உணர்ச்சி மயம்.
உணர்வுகள் மதிக்கத்தக்கது
-உணர்வுடன்
உணர்வுகள் கனல் பிழம்புகளாய்
ஊற்றெடுத்த பதிவு நண்பரே...
தமிழ்நாட்டில் இருக்கும் கேரளா நடிகைகள் [[அசின் உட்பட]] அனைவரும் 24 மணி நேரத்துக்குள் தமிழ்நாட்டை விட்டு ஓடவேண்டும்.
-----நாஞ்சில்மனோ அறிக்கை-----
அச்சச்சோ...
நிரு எங்களுக்காக எவ்ளோ செய்தார்கள் இப்போ அவர்கள் துடிக்கிறார்கள்... உதவ முடியாத நிலையில் நாங்கள்..... கவலையா இருக்கு :(
கை தொடும் தூரத்தில் நீங்கள் - நாங்களோ
கைகளில் விலங்குடன் அல்லவா
கொடுங் கோலர் ஆட்சியில்<<<<<<<<<<<<<<<<
இதற்கு மேல் எங்கள் நிலையை எப்படி சொல்லிவிட முடியும்.... :(
ஆகுலன் said...
பெரும்பாலான ஈழத்தமிழர்களின் மனதை சொல்லி இருக்குறீர்கள்.....
என்ன செய்ய முடியும் ..
இயலாதவர்கள் ஆகிவிட்டோம்..<<<<<<<<<<<<<<<<<<
ஆகுலன் எல்லா ஈழ தமிழனினதும் உணர்வும் இதான்..... அதை நிரு கச்சிதமாய் சொல்லிவிட்டார்...
உணர்ச்சி கவிதை மாப்ளே!
Post a Comment