"உன்னைக் கொஞ்ச நாளா நோட் பண்ணிக் கொண்டிருக்கிறேன். இன்டைக்கு உனக்கு ஒரு பெரிய தண்டனை கொடுக்கப் போகின்றேன். இந்தத் தண்டனை உன் எழுத்துப் பணிக்கும், இலக்கிய ஆர்வத்திற்கும் நிச்சயமாகத் தீனியாக அமையும்" எனச் சொன்னார் நகுலன் மாஸ்டர். பேச்சோடு பேச்சாக தன் மோட்டார் சைக்கிளின் முன் பக்க கூடையிலிருந்து ஒரு புத்தகத்தினை எடுத்துக் கொடுத்தார். அது நெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டுகள் எனப் பெயரிடப்பட்ட பச்சை நிற அட்டைப் படத்துடன் கூடிய ஓர் புத்தகம். "அடடா! என்ன ஆச்சரியம்!" என என் மனதுள் நினைத்தவாறு; "மாஸ்டர் நீங்கள் எனக்கேன் இவ்வளவு நாளும் அந்தப் புத்தகம் பற்றிச் சொல்லவில்லை என்று கேட்டேன்? புத்தகத்தின் முக்கிய வேலையினை நீ தான் செய்யப் போகின்றாய். அதான் உனக்கு கொஞ்சம் சஸ்பென்ஸாக இருக்கட்டுமே என்று தான் சொல்லாது விட்டேன் என்று சொன்னார்.
இக் கதையில் வரும் நகுலன் மாஸ்டர் இவர் தான். |
அடடா. இப்படி ஓர் வாய்ப்பினை நான் பெற்றுக் கொள்ள என்ன தவம் செய்திருக்கனும் என்று எண்ணிக் கொண்டு "அண்ணை அப்ப நீங்கள் தந்த வேலைத் திட்டங்களைச் செய்யப் போவது யார் எனக் கேட்டேன்?" "வேலைகளையும் ஒரு பக்கத்தால கவனிக்கனும், அதே போல இந்தப் புத்தகத்தையும் திருத்த வேண்டும்"எனக் கூறினார் நகுலன் மாஸ்டர். காமெராவைத் தொலைத்த விடயம் பொறுப்பாளருக்குத் தெரிந்தால் சங்காபிஷேகம் நிகழும் என்பதனை உணர்ந்து கொண்டவனாக, யாழ்ப்பாணத்திலிருந்த அக்கா வீட்டிற்குச் சென்று ஒரு ஒளிப்படக் கருவியினை வாங்குவதற்கான பணத்தினை அடம் பிடித்துப் பெற்றுக் கொண்டேன்.
ஒரு வாரத்தினுள் என்னால் இயன்றவரை தவற விட்ட தகவல்களை, தரவுகளைச் சேகரித்து, படம் பிடிக்க வேண்டியவற்றைப் படமாக எடுத்துப் பத்திரப்படுத்திக் கொண்டேன். எனக்குத் தரப்பட்ட பணியினை சிறப்பாகச் செய்திருப்பேனா என்ற ஐயத்துடன் என் வேலைத் திட்டம் தொடர்பான அறிக்கையினை நகுலன் மாஸ்டரிடமும், இனியவன் அண்ணையிடமும் ஒப்படைத்தேன். ஆனாலும் அவர்களுக்குத் திருப்தி இல்லை. இனிமேல் உனக்கு இப்படியான வேலைகள் சரிப்பட்டு வராது என்று ஏசினார்கள். சிரித்துக் கொண்டேன். காரணம் மனதினுள் அவள் அல்லவா நிழலாடிக் கொண்டிருக்கிறாள். இப்போது யாழில் அரசியற் பணிக்காக நின்ற போராளிகளை தலமை வன்னிக்கு அழைக்கத் தொடங்கியது.
ஒரு சில போராளிகளையும், புலனாய்வுப் பணியாளர்களையும் யாழினுள் நிற்குமாறும் பணித்ததோடு சில ஊடுருவித் தாக்கும் தாக்குதல்களுக்கான திட்டங்களை நாம் ஏற்கனவே கொடுத்திருந்த வரை படத்தின் அடிப்படையில் வழங்கியிருந்தார்கள். இப்போது தனியாகப் பயணஞ் செய்யும் பாக்கியம் பெற்றவனாக நான். ஆனாலும் ஒரே ஒரு குறை. கை வசம் ஏலவே வைத்திருந்த CD 125 மோட்டார் சைக்கிளை இனியவன் அண்ணை தன்னுடன் வன்னிக்கு எடுத்துச் சென்று விட்டார். இப்போது ஒரு பஷன் ப்ளஸ் மோட்டார் சைக்கிளை சுமை தூக்கியாக அமர்த்திக் கொண்டேன். இம் முறையாவது ஆவரங்கால் பகுதிக்குச் செல்ல வேண்டும். என் மனக் கண்களில் மௌனராகம் இசைக்கும் அந்த மங்கையினைத் தேடிப் பிடிக்க வேண்டும். அவள் பெயர் கேட்க வேண்டும் எனும் ஆவல் மேலிட என் பயணத்தினைத் தொடங்கினேன்.
அப்போது பொங்கியெழும் மக்கள் படையினர் எனும் அமைப்பு இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்து ஆமிக்கு எதிராக தாக்குதல் நடாத்திக் கொண்டிருந்தது. ஆவரங்கால் பஸ் நிலையத்திற்கு அண்மையாகத் தான் அவள் வீடு இருக்கும் எனும் ஆவலில் என் பயணத்தினைத் தொடங்கினேன். இப்போது அவ் இடத்திற்குப் போவது ரிஸ்க் என்று என் மனம் சொல்லியது. ஆனாலும் அந்த மங்கை மீதான மனத் தேடல் என்னை வேகப்படுத்தியது. பஸ் தரிப்பிடத்திற்கு அருகே உள்ள கல்லில் ஆமி நிற்பான் என்பதையும் என் உள் மனம் சொல்லத் தொடங்கியது. ஆனாலும் பாழாய்ப் போன என் மனம் கேட்குமா? "என்ன ஆனாலும் சரி, இன்றைக்கு அவளை அந்த ஒழுங்கையில் தேடிப் பார்க்க வேண்டும் எனும் உந்துதலில் உந்துருளியை (மோட்டார் சைக்கிளை) முறிக்கினேன்."
ஆமிக்காரன் என்னை ஒரு மாதிரிப் பார்த்தவாறு நின்றான். இன்னைக்கு வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்கி விட்டேன் என்று எண்ணியவாறு இடுப்பில் தடவிப் பார்த்தேன். பிஸ்டல் என்னோடு தான் இருக்கிறது என்பதனை உறுதிப்படுத்திக் கொண்டேன். ஆனாலும் பிஸ்டலுக்கான கோள்சரைக் கொண்டு வரவில்லை. கைவசம் கிரைனைட் குண்டையும் எடுத்து வரவில்லை என்பதும் இப்போது தான் நினைவிற்கு வந்தது. ஆமி என்னைச் சுடும் போது நானும் பதிலுக்குச் சுடத் தொடங்கினால் விபரீதமாகிடும். காரணம் கல்லிற்ற்கு மேலே இரண்டு ஆமி நிற்கிறாங்கள். அடுத்த நூறு மீற்றர் தூரத்தில் ஒரு காவலரண் இருக்கிறது. அங்கே குறைந்தது ஐந்து ஆமி இருப்பாங்கள். நான் ஒருத்தன் கோள்சர் இல்லாமல் சத்தமாக சூடு கேட்கும் வண்ணம் சுட்டால் ஆமிக்காரர் எல்லோரும் உடனடியாக ஓடி வந்து சுற்றி வளைத்துத் தாக்கி விடுவார்கள் என்பதனை உணர்ந்து கொண்டேன்.
இப்போது மோட்டார் சைக்கிளை ஆமிக்காரன் மறிப்பதற்குத் தயாராகின்றான் என்பதனைப் புரிந்து கொண்டேன். மெதுவாக மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்று கொண்டிருந்தேன்.ஆமிக்காரன் என்னை மறிக்கவில்லை. ஆனாலும் நான் மோட்டார் சைக்கிளைத் திருப்பியதும் தான் தாமதம். என்னைக் குறிப்பெடுத்துக் கொண்டவன் போன்று சுடுவதற்குத் தயாராகினான்.மோட்டார் சைக்கிளையும் போட்டு விட்டு,வீதிக்கு அருகே இருந்த வீட்டு வேலிக்குள்ளால் பாய்ந்து ஓடத் தொடங்கினேன். விரட்டி விரட்டிச் சுடத் தொடங்கினான். மாவீரர்கள் அருளால் சிறு காயம் கூட ஏற்படவில்லை. ஆவரங்கால் பகுதி வாசிகசாலையினையும் தாண்டிச் சென்று ஓடினேன். இறுதியில் ஒரு புதர் மறைவில் பதுங்கினேன். என்னைத் தேடி இராணுவ வீரர்கள் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருப்பதனைப் பதுங்கிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
நான் இருந்த புதர் காணிப் பக்கம் ஆமி வரவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன்! பெரு மூச்சு விட்டுக் கொண்டேன். எல்லாம் அவளால் தான். அந்த மோகினியால் தான். பார்வையில் என்னைக் கொன்ற அந்தப் பைத்தியக்காரியால் தான் இந்த வேலை. "சே! அவளை அப்படி அணுகியிருக்கக் கூடாது!". தன் பெயரைக் கூடச் சொல்லாது என்னை விலத்திச் சென்ற பேதையவள் எனப் புலம்பத் தொடங்கினேன். ஆமி நடமாட்டம் குறைந்த பின்னர் மெதுவாக என் இருப்பிடம் நோக்கிப் புறப்படத் தயாராகினேன்.
சில நாட்களில் என்னிடம் தரப்பட்ட பணிகளை நான் சரியாகச் செய்யவில்லை என்பதால் மேலிடம் என்னை வன்னிக்கு அழைத்திருந்தது. இப்போது குபேரன் அண்ணையின் காலால் எனக்கு உதை என்று நினைத்துக் கொண்டு படகேறினேன். நினைத்தது போல யாவும் நடந்தது. கவலையுடன் தண்டனையினைப் பெற்றுக் கொண்டிருந்த எனக்கு இப்போது ஓர் புதிய பணி காத்திருந்தது. என்னை வவுனியாவிற்கு அனுப்ப வேண்டும் எனப் பேசத் தொடங்கினார்கள். நான் எல்லாம் அவளால் தான் என மனதிற்குள் நொந்து கொண்டேன். அவளால் தான் நான் அடி சறுக்கினேன் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்குமா என்ன?
"சில கள முனை ரகசியங்களைப் போல போராளிகளின் காதலும், விருப்பு வெறுப்புக்களும் மனதினுள் புதைந்து போய் விடுகின்றது!
பிற் சேர்க்கை: இக் கதையில் வரும் நகுலன் அவர்கள்; சாள்ஸ் அன்ரனி படைப் பிரிவின் தளபதியும், மட்டு அம்பாறை மாவட்டச் சிறப்புத் தளபதியாக 2008 - 2009ம் ஆண்டில் இருந்தவருமான கேணல் நகுலன் அவர்கள்.
முகில் என்று அழைக்கப்படும் இக் கதையின் பிரதான கதாபாத்திரமான முகிலரசன் அவர்கள் ஈழத்தின் வவுனிக்குளத்திற்கு அண்மையில் உள்ள ஓர் பிரதேசத்தினைச் சேர்ந்தவர். இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் முன்னாள் போராளி! அவரிடமிருந்து பெறப்பட்ட சில அனுபவப் பகிர்வுகளைத் தான் இக் கதையில் சேர்த்திருக்கிறேன்.
இக் கதையில் வரும் முகில் எனப்படும் முகிலரசன் நான் அல்ல. ஆனால் இக் கதையினை நகர்த்த வேண்டிய நோக்கில் இங்கே முகிலரசன் கதையினை எழுதுவது போன்ற பாவனையில் இச் சிறுகதையினை எழுதியுள்ளேன்.இக் கதையும் ஓர் நிஜத்தின் பிரதிபலிப்பாகும்! இக் கதையில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் யாவும் கற்பனையல்ல!

***************************************************************************************************************************
ஈழத்து மொழி, கலை, கலாச்சாரம், பண்பாட்டு விழுமியங்களின் இன்றைய நிலையினைக் கருத்திற் கொண்டு; எம் அடுத்த சந்ததியிடமும், உலகெங்கும் பரந்து வாழும் எம் தமிழ் உறவுகளிடமும் இவ் விடயங்களை அழிவுறாது கொண்டு செல்லும் நோக்கிலும் ஆவணப்படுத்தும் நோக்கிலும் ஈழ வயல் எனும் வலைப் பதிவினைப் பதிவர்கள் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள்.ஈழவயலில் வெளியாகும் பதிவுகளை நூலுருப்படுத்தும் முயற்சியிலும் பதிவர்கள் ஈடுபடுகின்றார்கள். இந்த ஈழ வயல் வலைப் பதிவினை நீங்களும் தரிசித்து உங்கள் ஆதரவினையும் இவ் வலைப் பதிவிற்கு வழங்கலாம் அல்லவா?
******************************************************************************************************************************
|
18 Comments:
வணக்கம் முகிலரசன்! ஸாரி நிரூபன்! இரு மச்சி பதிவைப் படிச்சிட்டு வாறன்!
வித்தியாசமான கோணத்தில் வித்தியாசமான கதை! வாழ்த்துக்கள்!
வணக்கம்,நிரூபன்!உதை நிட்சயம்.
கதையை வித்தியாசமாக நகர்த்தி செல்கிறீங்க..
என்னது முகிலரசனும் நிருபனும் ஒன்றா?????? அய்யய்யோ.... பத்த வைச்சுட்டாரே மணி சார்... அவ்வ
வித்தியாசமான கதைக்கரு பாஸ்....... உண்மைச்சம்பவம் என்கிறீர்கள்... அனுபவித்தவர் போல் எழுதுவதை பார்க்கும் போது உங்கள் சம்பவம் போல் இருக்கே..... ஹீ ஹீ
சகோ, சம்பவத்தை கதையாக படிப்பதில் சுவாரஸ்யமாக உள்ளது. தொடரவும்...
கதை வித்தியாசமான களத்தில் அருமையா இருக்கு நண்பரே.
நிரூபன் தான் மேக மன்னனா?
//நான் ஒருத்தன் கோள்சர் இல்லாமல் சத்தமாக சூடு கேட்கும் வண்ணம் சுட்டால் ஆமிக்காரர் எல்லோரும் உடனடியாக ஓடி வந்து சுற்றி வளைத்துத் தாக்கி விடுவார்கள் என்பதனை உணர்ந்து கொண்டேன்//
இந்த இடத்தில் ஹோல்சர் என்பதை சைலன்சர் என்பதாக யாரும் நினைத்துவிட சான்ஸ் இருக்கு பாஸ்!
மாப்ள ஈழவயல் உங்க பிளாக்கா.....
@ஜீ...
இந்த இடத்தில் ஹோல்சர் என்பதை சைலன்சர் என்பதாக யாரும் நினைத்துவிட சான்ஸ் இருக்கு பாஸ்!//
ஆமா பாஸ்...நான் அந்த வரிகளில் கொஞ்சம் கூடிய விளக்கம் கொடுக்கின்றேன்.
என்ன தான் ஹோல்சரும், ஏனைய Backup உபகரணங்களும் இல்லாமல், நிறைய ஆமி நிற்கும் இடத்தில் தனியே பிஸ்டலை வைத்து ஒன்றும் செய்ய முடியாதல்லவா.
சசிகுமார் said...
மாப்ள ஈழவயல் உங்க பிளாக்கா.....//
ஆமா மச்சி!
அண்ணே அருமை....
//விரட்டி விரட்டிச் சுடத் தொடங்கினான். மாவீரர்கள் அருளால் சிறு காயம் கூட ஏற்படவில்லை. ஆவரங்கால் பகுதி வாசிகசாலையினையும் தாண்டிச் சென்று ஓடினேன். இறுதியில் ஒரு புதர் மறைவில் பதுங்கினேன். //
அண்ணே இப்படி பல செய்திகள் கேட்டிருக்குறேன்.....
கதை புலிகளின் இராணுவத்திறமையை அலசுகின்றது,நிறைய விசயங்களை எங்களுக்கு அறிய வைத்தமைக்கு நிரூபனுக்கு நன்றிகள்.
நிரூபன் ஒரு படைப்பினை எப்படி சுவாரஸ்ஸமாக கொண்டு செல்ல வேண்டும் என்பது உங்களது படைப்பினை பார்த்தால் உணர்ந்து கொள்ள முடிகிறது, உங்களை முகிலரசனாகவே காணும்படி செய்து விட்டீர்கள்.
//"சில கள முனை ரகசியங்களைப் போல போராளிகளின் காதலும், விருப்பு வெறுப்புக்களும் மனதினுள் புதைந்து போய் விடுகின்றது!//
இயல்பாக சரியான வார்த்தைகளுடன் சொல்லப்பட்டுள்ளது.
நல்ல முயற்சி தொடருங்கள் வாழ்த்துக்கள்!
* இது ஒரு அழகிய நிலா காலம்* please go to visit www.sinthikkavum.net
Post a Comment