ஒரு கட்சிக்குள் இரு வேறு அம்மணிகள் பவர் - இதனால்
தினந் தோறும் தொண்டர்கள் எமக்கோ திண்டாட்டம்
பெருமைக்குரிய ஜெயா பக்கம் போவதா - இல்லை
போயஸ் தோட்டத்தின் ராணி சசிகலா பக்கம் நிற்பதா?
ஒருமித்து நாமெல்லாம் ஆதரவு கரம் கொடுத்தால்- இன்னும்
ஒரு சில மாதங்களில் கட்சியின் தலமையும் சசி கையில்!
வருத்ததோடு இருந்தார் ஜெயா! பெங்களூர் விசாரணையால் - தினம்
வாட்டத் தோடு மனம் நொந்தார் அம்மா!
குருவிக் கூட்டை கலைப்பது போன்றே தன் கூட இருந்த - கட்சி
குல விளக்கை கலைத்தார்!
இனிமேல் கட்சிக்குள் பிரிவில்லை என நினைத்தார்!
இனிமேல் கட்சிக்குள் பிரிவில்லை என நினைத்தார்!
வீடியோ கேசட் விநியோகத்தில் தொடங்கிய நட்பு- விரைவினில்
ஆடியே போகாது! யாராலும் ஜெயா - சசியை பிரித்திட இயலாது எனும்
மூடிய மன நிறைவினில் இருக்கையில் அதிமுக கட்சியை
தேடியே வந்தது பெங்களூர் ஊழல் செய்தி - இதனால் தினமும்
வாடியே போனது அம்மா ஜெயாவின் மன அமைதி!
கூடியே இருந்து பதவியை கைப்பற்றினாலும் அம்மா
குமுறியே துடிப்பாரா - இல்லையே! சசிகலா வடிவில்
சரித்திர விடயங்கள் துலங்கினால் என் பதவியினை
சரித்துமே சசிகலா ஆட்சியை அமுக்கிடுவார் என நினைத்தாரோ!
சத்தம் ஏதுமின்றி போயஸ் தோட்டத்தை விட்டு வெளியேற்றினார்!
நித்தமும் சசி அருகே இல்லையே என்பதால் நிம்மதிப் பெரு மூச்சு விடுவாரா?
சசிகலாவின் மனக் குமுறல்!
ஆசை கொண்டேன்! என்னை அருகே அழைத்து
அன்பாய் கதை பேசி
ஆட்சி பீடமேற்றிய அருமை தோழியை
குழி பறிக்க நானும் ஆவல் கொண்டேன்!
பாசம் வைத்து பழகி நடித்து மெதுவாய்
பதவியை கைப்பற்றி விடுவேன் என்பதை உணர்ந்தார் ஜெயா!
வேசம் கலைத்து என்னை வெளியே துரத்தி
நாசம் நினைத்த எந்தன் நாவை கொன்றார் ஜெயா!
எதிர் கட்சிகளின் எண்ணக் கோலங்கள்!
ஏதோ சதியிருக்கு! எமக்கு ஏதும் புரியவில்லை!
மாதர் இருவரும் மனதுள் திட்டம் போட்டு
தீதாய் எம் பிரிவை பிறர் நினைத்திருக்க
திசை திருப்பி ஆட்சியில் அதிரடி நிகழ்த்திடுவார்களோ - இல்லை
எம் திமுக மீதும் பிரிவினையை தூண்டி விடுவார்களோ!
ஒன்னுமே புரியலை காரணம் இது அம்மாவின் அரசியல்!
மெல்லிதாய் சொல்லிடத் தோணுது அரசியல்ல
இதெல்லாம் சகஜம் எனும் அசத்தல் வாக்கியம்!!
இன்றைய தினம் வெளியான மற்றுமோர் பதிவினைப் படிக்க:
அன்பிற்கினிய உறவுகளே! உங்கள் அனைவருக்கும் உளம் கனிந்த இனிய நத்தார் மற்றும் புதுவருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்! பிறக்கப் போகும் இந்தப் புதிய ஆண்டில் எமைச் சூழ்ந்த தொல்லைகள் யாவும் விலகி வல்லமையுடன் தமிழன் வாழ்வு சிறக்க வாழ்த்துவோம் வாரீர்!
இப் பதிவிற்கான படங்கள் யாவும் கூகிள் தேடல் மூலம் பெறப்பட்டவை.
|
17 Comments:
நிரூ
இது புதிது இல்லை, ஏற்கனவே 1997 இல நடந்த நாடகம். பின்னர் 11 மாதங்கள் கழித்து அம்மாவே போயி கார்டன்க்கு கூட்டிக்கிட்டு வந்து வச்சுகிட்டாரு ..
இப்போ பின்னணி என்னன்னு தெரியலை.. கொஞ்சம் பொறுத்தால் தெரியும் சேதி
அது சரி நடராஜனையும் கட்சியை விட்டு நீக்கிருக்காங்க, ஆனா அவரு கட்சியில இல்லைன்னு தான் தகவல்
என்ன நடக்குதோ புரியலை
வணக்கம், நிரூபன்!அம்மா வெளியேற்ற முன்பதாகவே,சசி வெளியேறி விட்டதாக ஒரு தகவல் சொல்கிறது.தலித் மக்கள் படுகொலையில் தோழிக்குப் பங்கிருப்பதாக புலனாய்வுச் செய்திகள் தெரிவித்ததால்,இந்த அதிரடி!மேலும் பெங்களூரு...................................!கொஞ்ச நாளைக்கு "அவல்"பத்திரிகைகளுக்கு,அவ்வளவுதான்!
ஹஹஹ...ஒரு நாடகம் நடக்கிறது...
இதெல்லாம் அம்மா பாலிடிக்ஸ்...
என்னமோ நடக்குது...பார்க்கலாம்
1234
நிரு... இதான் அம்மா என்கிறது... ஹா ஹா....
இதை பலர் வழக்குக்குகாக ஜெயா-சசி போடும் நாடகம் என்பது நம்ப முடியாதது.
ஏனெனில் இந்த பிரிவு நாடகத்தால் தீர்ப்புக்கு எந்த லாபமும் இல்லை. சொல்ல போனால் பாதகமே..
இந்த இக்கட்டான நிலையில் ஜெயா துணிந்து சசியை நீக்கியது அவரின் துணிச்சலை மறுபடியும் நிருபித்து இருக்கிறது.
இனி கோர்ட்டில் ஜெயாக்கு எதிராய் சசி என்ன சொல்லப்போறாரோ?? ஜெயாவின் அரசில் வாழ்க்கைக்கு இது ஒரு மைல் கல். ஜெயா மேல் இருந்த மிக பெரிய சாடல் ஒன்று துடைத்து எறியப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் நம்ம துக்ளக் சோ இருப்பார் என்பது என் கணிப்பு.. எது எப்படியோ.. அம்மா ஆட்டம் ஆரம்பம்.. ஹா ஹா.
வாழ்த்துக்கள் அம்மா.
ஜ.ரா.ரமேஷ் பாபு said...
நிரூ
இது புதிது இல்லை, ஏற்கனவே 1997 இல நடந்த நாடகம். பின்னர் 11 மாதங்கள் கழித்து அம்மாவே போயி கார்டன்க்கு கூட்டிக்கிட்டு வந்து வச்சுகிட்டாரு ..
//////
எனக்கு இதப்பத்தி தெரியாதே.என்ன சொல்ல.
நடக்கிறது நடக்கட்டும்.
உடனடியாக கவிதையே எழுதிவிட்டீர்களே...!
<<பெருமைக்குரிய ஜெயா பக்கம் போவதா<<
நிரு வாயை திறவுங்கோ... இதை சொன்ன அதற்குள் ஒரு கிலோ சக்கரை போடணும்... ஹீ ஹீ. அவ்ளோ சந்தோஷமப்பா... :)
எலேய்.. வலை உலகின் முடி சூடா மன்னன் நிரு எங்கள் அம்மா கட்சி.. பார்த்துக்கோ பார்த்துக்கோ... அன்பு அண்ணனை அம்மா கட்சிக்கு அம்மாவின் தீவிர தொண்டன் தம்பி அன்போடு வரவேற்கிறேன்..
வணக்கம் நிரூ!
இன்றைய அரசியல் நிலையை கவிதையாக படைத்திருக்கிறீர்கள்.
ஐயோ இந்த அம்மா கட்சிக்காரன் தொல்லை இனி தாங்க முடியாதப்பா..
பார்போம் பார்ப்போம் எத்தனை நாளைக்கு என்று...........
காதல் கதைகள் - எனக்கு 55 உனக்கு 25
அரசியல்,,,வேணாம் வம்பு..
ஈழப் போரின் இறுதி யுத்தம் பற்றிய தன் அனுபவங்களைச் சகோதரன் எஸ்.பி.ஜே.தரன் அவர்கள் எழுதி வருகின்றார். அவரது அனுபவங்களைப் படிக்க ஆர்வமுள்ள சொந்தங்கள் இந்த இணைப்பில் கிளிக் செய்து சென்று படிக்கலாம்.//
வாழ்த்துக்கள் ...
அரசியல்ல
இதெல்லாம் சகஜம் எனும் அசத்தல் வாக்கியம்!!
என்றும் அர்த்தமுள்ள வாக்கியம்.
அம்மாவோட ஒரு முடிவை வைச்சு நாம ஒரு முடிவுக்கு வந்துட முடியாது,பாப்போம்.
உங்களுடைய தனி பாணியில் சூடான அரசியல் மாப்ள
அரசியல்ல என்ன நடக்குதுன்னு ஒன்னும் புரியல.
Post a Comment