Tuesday, December 13, 2011

முல்லைப் பெரியாறும் முள்ளந் தண்டற்ற தமிழக அரசியல் வா(வியா)திகளும்!

உலகில் யுத்தங்கள் உரிமைக்காகவும், வறுமையினை நிறைவேற்றிடவும், அடிமைத் தளையினை அறுத்தெறிந்திடவும் இடம் பெறுகின்றன. ஆனால் எம் தாய்த் தேசத்தில் இடம் பெறும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான சண்டைகளும்;சச்சரவுகளும் கொஞ்சம் வித்தியாசமானவை. தமிழர்களிடமிருந்து விவசாய உற்பத்தியினையும், மின்சாரத்தினையும் பெற்றுக் கொண்டு, முல்லைப் பெரியாற்றிற்கு அண்மையாக - தமிழக - கேரள எல்லைக் கிராமங்களில் வசிக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றான நீரினைத் திறந்து விடத் தார்மீக அடிப்படையில் இரக்கமற்ற கேரள அரசு இன்று செய்யும் வித்தியாசமான போர் தான் DAM 999 திரைப்படத்தினை ஆதாரமாக வைத்து மீண்டும் கிளப்பி விடப்பட்டுள்ள அணைக்கட்டு உடையும் எனும் அபத்தமான குற்றச்சாட்டாகும்.
தமிழர்களின் தலையில் மிளகாய் அரைக்கலாம் என்பது எல்லோருக்கும் இலகுவில் புரிந்திருக்கையில் மலையாள - ஆங்கிலத் திரையுலக இயக்குனர் சோஹான் ரோய் அவர்களுக்கும் புரியாமலிருக்குமா என்ன? இளைய தளபதி விஜய் - அஜித் மற்றும் இதர தமிழக முன்னணி நடிகர்களின் கட்டவுட்டிற்கு தமிழகமும், இலங்கை வாழ் தமிழர்களும் பாலாபிஷேகம் செய்து தம் கொள்கைகளை பரமபதம் ஆட விட்டிருக்கையில் ஒரு கேரள இயக்குனர் மலையாள மக்களின் பேருதவியுடன் உலகத் தரத்திற்கு ஒரு திரைப்படத்தினை எடுத்து அதனூடாக முல்லைப் பெரியாறு அணைக்கட்டு உடைந்தால் எவ்வாற விளைவுகள் ஏற்படும் எனும் பரப்புரையினையும் சில மாத காலமாக ஓய்ந்து போயிருந்த அணைக்கட்டை அடிப்படையாக வைத்து ஏற்படும் எல்லைப் போரினையும் மறைமுகமாக மீண்டும் புத்துயிர் பெற வைத்துள்ளார்.

தமிழக மக்களும், உலகம் முழுதும் பரந்து வாழும் தமிழர்களும் என்ன செய்கின்றோம்? எம் தமிழ்ச் சினிமா என்ன செய்கின்றது? "டாடி மம்மி வீட்டில் இல்லை தடை போட யாருமில்லை" என்று ஐந்து வயதுச் சிறுவரும் சிறுமியரும் கட்டிப் பிடித்து ஆட வைப்பதனைத் தவிர இன்று ஓர் மலையாள இயக்குனர் திரைப்படத்தினூடாகப் புகுத்தியிருக்கும் பரப்புரையிற்குச் சமனாக கேரள முல்லைப் பெரியாறு விடயத்தில் எம் தமிழ்ச் சினிமா ஏதாச்சும் செய்திருக்கிறதா? சுய நலத் தமிழர்கள் சினிமாவிலும் உள்ளார்கள் என்பது ஏலவே ஈழ விடயத்தில் உலகறிந்து கொண்ட உண்மை. ஆனாலும் தற்போது இன்னோர் சந்தர்ப்பத்தில் இது வெள்ளிடை மலையாக உள்ளது! வாழ்க தமிழ் சினிமா! வளர்க தமிழர்களின் சினிமாப் பற்று!

முள்ளந்தண்டற்ற தமிழ் மற்றும் தமிழக அரசியல் வாதிகளின் நிலை!

உறவுகளே உங்களிடமிருந்து பல நன்மைகளை அண்டை மாநிலமான கேரளாவில் வாழும் மலையாள இனத்தவர்கள் பெற்று இன்று உங்கள் உரிமைகளை அடக்கி ஒடுக்கிட மத்திய அரசு, கியூபிராஞ், மற்றும் போலீஸ் படையின் உதவியோடு களமிறங்கியிருப்பது வேதனையளிக்கின்றது. இன்றைய சூழலில் நாம் ஈழத் தமிழர்கள் எனும் சொல்லுக்கு சரியானவர்கள் அல்ல.நாம் அனைவரும் ஈனத் தமிழர்கள் உறவுகளே!காலத்தின் பிடிமானத்தில் இன்றைக்கு 26 வருடங்களிற்கும் மேலாக ஈழ மக்களின் உரிமை தொடர்பில் தமிழக மக்களும், தமிழக உணர்வாளர்களும் ஆற்றி வரும் மகத்தான பங்களிப்புக்களை நாம் இன்றும் மறந்து விடவில்லை. ஆனால் நாம் துடிக்கையில் தீயாக வெடித்து உணர்வுகளை வெளிப்படுத்திய தியாகச் செம்மல்களுக்கு கூட நன்றிக் காணிக்கை செலுத்த முடியாதவர்களாக நாமிருக்கின்றோம்! மன்னியுங்கள் இந்த பாவிகளை!

எல்லாம் அவன் (தலைவன்) காலத்தில் நடந்திருந்தால் நாம் ஏதாவது செய்திருப்போம் உறவுகளே! இன்று திசைக்கு ஒன்றாக தமிழர்கள் திரிந்து வாழும் சூழலில் எமக்கான தலமையோ எம்மைப் பிரதி நிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களோ இல்லாது நடுத் தெருவில் நிற்கின்றோம்! எம்மால்; "நாமும் கூட இருக்கின்றோம்" எனும் ஒரு வாக்கியத்தை மாத்திரம் உதிர்க்க முடிகின்றது சொந்தங்களே! எம்மை மன்னியுங்கள்! தமிழகத்திற்கு ஆதரவாக ஈழத்தில் நாம் ஒரு இம்மி அளவும் அசைந்தாலும் சுடப்படுவோம்! இல்லாது விடின் கடத்திக் காணாமற் போகடிக்கப்படுவோம்! இல்லையேல் சித்திரவதைகளை எதிர் நோக்குவோம் எனும் நிலமை காரணமாக கை கட்டி வாய் பொத்தியுள்ளோம்! மன்னியுங்கள் இந்த அடிமைத் தமிழர்களை அன்பு நெஞ்சங்களே!

எம்மைப் பிரதிநித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகள் என நாம் நம்பியிருந்த அனைவருமே இரண்டரை வருட இரகசியப் பேச்சுவார்த்தையினை சிங்கள அரசோடு நிகழ்த்தி விலை போயுள்ளார்கள். எங்களிடம் இப்போது கோவணம் மட்டும் தான் எஞ்சியிருக்கிறது. அதனையும் கூட இவர்களே அவிழ்த்துக் கொடுக்க துணை நிற்கையில் நாம் எப்படி முல்லைப் பெரியாறு விடயத்தில் எம் தார்மீக உரிமைக் குரலினை ஒலிக்கச் செய்ய முடியும்?  எங்களின் ஊடகங்கள் எப்போதுமே வியாபார நோக்கில் இயங்குகின்றன என்பதற்கு இதுவும் ஓர் நல்ல சான்று உறவுகளே! தமிழகத்தில் ஈழ உணர்வாளர்கள் பலர் அனல் பறக்கப் பேசுகையில் அவற்றினைப் புகைப் படங்களோடு முகப்பு பக்கத்தில் போட்டு பிரபல செய்திகளாக அலங்கரித்த பல தமிழ் ஊடகங்கள் முல்லைப் பெரியாறு விடயத்தில் என்ன நிகழ்கின்றது என்பது தொடர்பில் ஏதும் அறியாமல் முக்கி முனகி விஜய் மற்று, இதர நடிகர்களின் புதுப் படம் பற்றிய அறிவிப்பினை வெளியிடுகின்றன சொந்தங்களே! மன்னியுங்கள் எம்மை!

தமிழக உறவுகளே! ஓர் ஆங்கிலேய அன்பு நெஞ்சமான ஜான் பென்னி குக் அவர்களிற்கு இருந்த வெறியும், தான் எடுத்த காரியத்தினைச் சாதிக்க வேண்டும் எனும் தீவிரக் கொள்கையும் மக்களிடம் வாக்குப் பெற்ற எம் தமிழக அரசியல்வாதிகளிடம் இருக்கிறதா? வெட்கக் கேடாக இருக்கின்றது. ஆம் 1886ம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணையினைக் கட்ட வேண்டும் எனும் பணியில் இறங்கிய ஜான் பென்னி குக் அவர்கள் தனக்குக் கிடைத்த அரசாங்கத் திறைசேரி நிதி முடிவடைந்த பின்னர் தன் சொந்த நாட்டிற்குத் திரும்பி அங்கிருந்து தனது சொத்துக்களை விற்று இந்த அணையினைக் கட்டி முடித்தார்.பாவம் எம் தமிழக அரசியல்வா(வியா)திகள் என்ன செய்கின்றார்கள்? அறிக்கையினை மட்டும் விட்டு விட்டு மல்லாகாகப் படுத்து  எச்சில் துப்பி தமது மூஞ்சியிலும் விழச் செய்து எம் மூஞ்சிகளிலும் விழ வைக்கிறார்கள்! சே! கேவலமாக இருக்கிறது!
Dam 999 பட இயக்குனர் சோஹான் ரோய்!
சொல்லுக்கு முன்பதாகச் செயலுக்கு முக்கியத்துவம் கொடுத்த பெரியோர்கள் வாழ்ந்த தமிழகத்தில் வெறும் வார்த்தை ஜாலத்தில் அறிக்கைகளை சென்னையில் இருந்து தமிழக அரசியல்வாதிகள் விட்டுக் கொண்டிருக்கையில் கேரள தமிழக எல்லையில் போலீஸாரின் கண் முன்னே எம் சொந்தங்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு துகிலுரியப்படுகிறார்கள்.  கலைஞர் கூடத் தன் மகளைப் பிரிந்திருந்த காலத்தில் சிவாஜி மற்றும் எம்ஜிஆர் படங்களைப் பார்த்திருப்பாரோ என்னவோ? தன் வசம் அதிகாரம் இல்லை எனும் உண்மையினைக் கூட உணாரதவராக வெறும் அறிக்கையினை விட்டு அணைக்கட்டு விவாகாரத்தில் பெரும் போர் வெடிக்கும் என பிரச்சாரப் போர் புரிகின்றார். இதுவா இப்போது எமக்கு முக்கியம்? தமிழர்களை ஏமாளிகளாக ஆக்கி அணைக்கட்டு பலவீனமாக உறுதியற்று இருக்கிறது. அதனை உடைத்துக் கட்ட வேண்டும் எனச் சொல்லி முழங்கும் மலையாள அரசின் மமதையினை அடக்க வேண்டும்! 

அதற்குரிய வழிகளை நாம் உடனடியாக அணுக வேண்டும். நாடு தழுவிய ரீதியில் முல்லைப் பெரியாறின் தற்போதைய நிலை தொடர்பிலான பிரச்சாரங்களை முன்னெடுத்து மத்திய அரசின் கவனத்தினை மேலும் வலுப்படுத்தி முல்லைப் பெரியாறுப் பிரச்சினையைச் சுமூகமாக முடித்திட தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும்.ஒரு திரைப்படத்தின் ஊடாக கேரள அரசினையே ஆட்டம் காணச் செய்து அரசின் கவனத்தினை அணைக்கட்டுப் பக்கம் திசை திருப்ப முடியும் என்றால், எம் தமிழர்கள் என்ன இளிச்சவாயர்களா? நாம் இளிச்சவாயர்கள் இல்லை என்பதனை எம் வசம் இருக்கும் ஊடகங்கள், சமூக வலைத் தளங்கள் ஊடாகப் பிரச்சாரப் போரினை முன்னெடுத்து எம் தமிழ் மக்களின் ஒட்டு மொத்த எழுச்சியினை முல்லைப் பெரியாறு விடயத்திலும் காண்பிக்க வேண்டும்!

முதல்வர் ஜெயலலிதாவின் கரங்களை வலுப்படுத்தி முல்லைப் பெரியாறு விடயத்திலாவது தமிழக அரசியல் தலமைகள் ஓரணியில் செயற்படுமாறு வாக்களித்த மக்களாகிய நாம் அனைவரும் எம் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும். இதற்கும் அப்பால் தமிழர்கள் தலையில் யார் வேண்டுமானாலும், எதனையும் இலகுவில் திணித்து விட்டு அகன்று விடலாம் என நினைக்கும் கேரள அரசியல் தலமைகளுக்கும், மக்களுக்கும் சரியான பாடம் புகட்டும் செயலில் தமிழக அரசியல் தலமைகள் இறங்க வேண்டும்! வெறுமனே அறிக்கைகளை விட்டு காகிதப் போர் வீரர்களாக இருப்பதை விடுத்து மத்திய அரசின் கவனத்தினை இம் முயற்சியில் திசை திருப்பி தமிழர்களுக்கான சரியான பங்கு நீரினை இனிமேலாவது பிரச்சினைகள் - குழப்பங்கள் ஏதும் இன்றிப் பெறுகின்ற வழி முறைகளைத் தமிழக அரசு கேரள அரசுடன் பேச்சு நடத்தி மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும்!
எம் தமிழக அரசு இனிமேலாவது விழிக்குமா? மத்திய அரசின் மனக் கதவு அப்பாவித் தமிழர்களின் விடயத்தில் திறக்குமா? எழுத்துருவாக்கம்: செல்வராஜா நிரூபன்!
பிற் சேர்க்கை: இப் பதிவிற்கான மூலக் கருத்துக்களைத் தந்துதவி, இப் பதிவினை எழுதிடத் துணை புரிந்தவர் காட்டான் வலைப் பதிவின் சொந்தக்காரர் மதிப்பிற்குரிய காட்டான் அண்ணர் அவர்கள்.
இப் பதிவின் உருவாக்கத்தில் பங்களிப்பு நல்கியோர்கள் காட்டான் அண்ணர் மற்றும் நாஞ்சில் மனோ வலைப் பக்கத்தின் உரிமையாளர் நாஞ்சில் மனோ அண்ணன். இவ் இருவருக்கும் என் சார்பிலும், உங்கள் சார்பிலும் நன்றிகளைச் சமர்ப்பிக்கின்றேன்.
இப் பதிவில் உள்ள படங்கள் மற்றும் சில தகவல்கள் ஆனந்த விகடன் இணைய இதழிலிருந்து காட்டான் அண்ணரின் உதவியுடன் பெற்றுக் கொள்ளப்பட்டது.

முல்லைப் பெரியாறு விடயம் தொடர்பாக பதிவர்களின் கண்டனப் பதிவுகளைப் படிக்க:

19 Comments:

முத்தரசு said...
Best Blogger Tips

வணக்கம்


என்ன சொல்றதுனே தெரியலை - கண்ணில் நீர் கோர்த்தது - என்ன செய்யர்துன்னும் தெரியல - நமக்கு வைத்த தலைகளும் சரியில்லை

சம்பத்குமார் said...
Best Blogger Tips

//தமிழக உறவுகளே! ஓர் ஆங்கிலேய அன்பு நெஞ்சமான ஜான் பென்னி குக் அவர்களிற்கு இருந்த வெறியும், தான் எடுத்த காரியத்தினைச் சாதிக்க வேண்டும் எனும் தீவிரக் கொள்கையும் மக்களிடம் வாக்குப் பெற்ற எம் தமிழக அரசியல்வாதிகளிடம் இருக்கிறதா?//

உண்மை சகோ..நானும் கம்பத்தினை சேர்ந்தவன் தான்.எங்க ஊருக்கு M.P என்று பெயரளவில் மட்டுமே உள்ளார்.பிரச்சினை நடந்து இவ்வளவு நாட்கள் ஆகிறது இதுவரை தொகுதிப்பக்கம் கூட வரவில்லை.இவர்களுக்கு எல்லாம் வாக்களித்ததை நினைக்கையில்...என்ன சொல்வது..

இவர்கள் எல்லாம் ஊழல் செய்வதர்கென்றால் வரிந்துகட்டிக் கொண்டு கட்சிபேதமில்லாமல் ஒன்று சேர்வர்.ஆனால் ஒன்பது மாவட்ட மக்களின் வாழ்வாதரமே கேள்விக்குறியாய் இருக்கையில் இவர்களை நம்பி புரயோஜனம் இல்லை என்றென்னிதான் எம் மக்களே தலைவர் என்று யாரும் இல்லாமல் போராடுகிறார்கள்..

சம்பத்குமார் said...
Best Blogger Tips

வணக்கம் பதிவுலக நண்பர்களே..

இணையத்தில் இதற்கான ஆதரவினை தவறாமல் தெரிவிக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்

அப்படியாவது வேண்டுமென்றே தூங்கிக்கொண்டிருப்பவர்களை தட்டி எழுப்புவோம்.

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

நல்ல முயற்சி

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

தமிழக உறவுகளே! ஓர் ஆங்கிலேய அன்பு நெஞ்சமான ஜான் பென்னி குக் அவர்களிற்கு இருந்த வெறியும், தான் எடுத்த காரியத்தினைச் சாதிக்க வேண்டும் எனும் தீவிரக் கொள்கையும் மக்களிடம் வாக்குப் பெற்ற எம் தமிழக அரசியல்வாதிகளிடம் இருக்கிறதா?//

இல்லையே.. இருந்திருந்தா.. தமிழன் ஏன் கண்ட எடத்துல அடிவாங்குறான்?

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

மனம் கவர்ந்த வேதனையின் பதிவு இது...!

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

Breaking news..."Mullaperiyar Dam: Supreme Court dismisses Kerala's plea to lower water level to 120 feet"


Read more at: http://www.ndtv.com/?cp

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

தலைவன் தலைவன்னு சொல்லி சில தலைவர்களை தமிழின தலைவன்னு சொல்லுறாங்க கொய்யால எல்லாருமே விக்கி சொன்ன மாதிரி காகித தலைவன்தான்...!தொகுதி மக்கள் இறங்கி போராடுகிறார்களேன்னு ஒரு எம்பி கூட வராதது ஆச்சர்யத்தின் உச்சம்...!

Unknown said...
Best Blogger Tips

நிரூ.. இந்த விஷயம் அரசுகளின் கை மீறி போய்விட்டது என்பது நிதர்சனம்.. என்ன செய்ய ஈழ மக்கள் போலே முல்லை பெரியாறும் தமிழனின் எல்லை தாண்டி தானே கிடக்கிறது.. நீதிமன்றம் என்ன தீர்ப்பு சொள்ளப்போகிறதோ தெரியவில்லை!!?.. நதி நீர் ஆணையம் ஒன்றே தீர்வாக அமையும்.

இதை இன்னொரு கோணத்திலும் அணுகலாம், கேரளாவில் நடைபெறப்போகும் இடைத்தேர்தல் முடியும் பட்சத்தில் இது அணைந்து போகவும் ஒரு வாய்ப்பு இருக்கிறது.. பார்க்கலாம்

Unknown said...
Best Blogger Tips

தோழர் இந்தப் பிரச்சனை திசை திருப்பப் பட்டு விட்டது. மக்கள்தான் இதில் அழியப் போகிறார்கள்..

http://www.sakthistudycentre.com/2011/12/2.html

காட்டான் said...
Best Blogger Tips

வணக்கம் நிருபன்!
ம் மனம் கனக்கவைத்த பதிவு.. இப்போதான் மனோ சொன்னார் மனுவை நீதி மன்றம் தள்ளுபடி செய்துவிட்டது என்று... இந்த விடயத்தில் அரசியல்வாதிகள அதிகம் நம்பக்கூடாது..!!(

ஆகுலன் said...
Best Blogger Tips

தமிழக உறவுகளே எங்களால் ஒன்டுமே செய்ய முடியவில்லை ..மனம் வருந்துகிறேன்.....ஆறு கோடி தமிழர்களால் முயாதது எதாவது உண்டா..ஒன்று சேருங்கள் உரிமைக்காக போராடுங்கள்...

Unknown said...
Best Blogger Tips

நாலா திசையிலும் தமிழன் வஞ்சிக்கப்பட்டுகொண்டிருக்கும் நிலையில் சாம, பேத, தான, தண்ட, என்ற வழியில் நாங்கள் இளைஞர்கள் தமிழகத்தில் உறுதியாக இருக்கிறோம்.அணை உடைக்கப்பட்டால் உடையப்போவது கண்டிப்பாக இந்திய வரைபடம்தான்.

திண்டுக்கல் தனபாலன் said...
Best Blogger Tips

அருமை. தங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
பகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"

santhilal said...
Best Blogger Tips

iru maanilangalai motha vittu vedikkai paarkkum maththiya arasu namakku thevaiyaa?home minister thamizhina thurogi pa.chidambaram,manmohan eruvaraiyum eraiyaanmai ethiraana vazhakkil kaithu seiyya supreme courttil vazhakku thodara vendum.Dr.SANTHILAL.

மகேந்திரன் said...
Best Blogger Tips

வணக்கம் நண்பர் நிரூபன்,
நலமா?

அருமையான விடையங்களை நன்குற கோர்த்து
விளக்கிய பதிவு அருமை.
தண்ணீருக்காய் தமிழன் காலங்காலமாய்
போராடுதல் தலையில் விடிந்த விஷயம்.
இன்று முல்லை பெரியாறு
நாளை என்னவோ...

ஆயினும் உச்சநீதி மன்றம் கேரளா மனுவை தள்ளுபடி
செய்திருப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி.

தமிழர்கள் ஒன்று படவேண்டும்.
தனிக்குழு அமைப்பதை விட
ஒட்டுமொத்தமாக சேர வேண்டும்.....

எழுந்து வா தமிழா..
வருங்காலம் காப்போம்.

Unknown said...
Best Blogger Tips

மலையாளியையும் பிறகு கர்நாடகக்காரனையும் ஆந்திரக்காரனையும் தலையில் தூக்கிவைத்து பாலபிசேகம் செய்யும் சினிமா ரசிகனாக தமிழன் இருக்கும் போது எப்படி படம் எடுப்பானுக?

ESWARAN.A said...
Best Blogger Tips

தங்கள் பதிவிற்கு நன்றி...எனது பேஸ் புக் பக்கத்தில் இரண்டு வீடியோக்கள் முல்லைப்பெரியாறு சம்பந்தமாக இருக்கிறது..அதையும் பாருங்கள்.

Unknown said...
Best Blogger Tips

In the Supreme Court, Harish Salve has openly stated that Kerala Govt. would not implement any judgement given by any court. But the judges had not questioned him on his statement.We can not expect any pro-active action by the mute P.M. Manmohan. Unless Tamilians are ready fight unitedly we will be committing the gravest of sins by depriving our future generations of water resources. Whatever may be her faults, I think only Jayalaitha could lead this fight.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails