(வயது வந்தோருக்கான விழிப்புணர்வு கதை)
குமரன் வாத்தியிடம் டீயூசன் முடித்து வீட்டிற்கு வந்து தன் தாயார் கோமதி ரெடி பண்ணி வைத்திருந்த சூடான தேநீரைப் பருகியவாறு கம்பியூட்டரை ஆன் செய்யத் தொடங்கினாள் ஜிலக்ஷா. "புள்ள ஜிலக்ஷா உனக்கு எக்ஸாம் கிட்டுதில்லே!கம்பியூட்டரில உட்காந்திருந்து டைம்மை வேஸ்ட் பண்ணுறதை நிறுத்திட்டு ஒழுங்கா படிச்சு முன்னுக்கு வாற வழியைப் பார்க்கலாமில்லே" எனத் தன் தாயார் அதட்டலுடன் ஏசிய ஏச்சினைக் கூடச் செவிமடுக்காதவளாக கணினி முன் உட்கார்ந்து பேஸ்புக்கினை ஓப்பின் செய்தாள் ஜிலக்ஷா. "இன்னைக்கு யாராச்சும் புதுசா ப்ரெண்ட் ரீக்குவெஸ்ட் கொடுத்திருக்காங்களா?" எனத் தேடியவளின் கண்ணுக்கு வர்ஷன் எனும் பெயருடன் ஒருவர் வெயிட்டிங்கில் கட்டழகு நிறைந்த தோற்றத்துடன் கூடிய போடோக்களை உள்ளடக்கிய புரோபைலுடன் காட்சியளிப்பது தென்பட்டது.
"ஆஹா; பார்க்கவே சூப்பரா இருக்கிறானே! இவனை மட்டும் வளைச்சுப் போட்டால்......." எனத் தனக்குள் தானே யோசித்தவள் "ஆளோட ப்ரண்ட் ரீக்குவெஸ்ட்டை அப்ரூவ் பண்ணிட்டு ஆன்லைனில வர்ஷன் இருந்தால் சாட் பண்ணிப் பார்க்கலாம்" என நகரத் தொடங்கினாள். வர்ஷனை அப்ரூப் பண்ணியவளுக்கு அவன் இருக்குமிடம் யூ எஸ் (USA) என்றும், அவனும் இள வயதுப் பையன் என்பதால், மாரேஜ் ஆகாது ஓப்பின் ரிலேஷன்ஷிப்பிறாக அலைகின்றான் என்பதும் நொடிப் பொழுதில் அவனது புரோபைலைச் செக் பண்ணிக் கொள்கையில் புரிந்தது. "ஆளோட சாட் செஞ்சு பார்ப்போம்" என ஆரம்பித்தவளுக்கு காத்திருந்தது ஆச்சரியம்.வர்ஷன் ஆன்லைனில் இருந்தான். ஹாய் என்று அனுப்பியவளுக்கு அழகிய இரு கரங்கள் சேர்த்து வணக்கம் எனும் பதில் மேசேஜ் கிடைத்தது.
மெது மெதுவாக சாட்டிங்கில் ஆரம்பித்து அவனது முழு விபரங்களையும் தெரிந்து கொள்ளத் தொடங்கினாள் ஜிலக்ஷா. வர்ஷன் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழன் என்பதும்,வெகு விரைவில் இலங்கைக்கு வரப் போகின்றான் எனும் விடயங்களும் ஜிலக்ஷாவின் மனதினுள் அளவற்ற மகிழ்ச்சியினை உண்டு பண்ணியது. "நீங்க என்ன பண்ணுறீங்க?" என்று வர்ஷன் கேட்ட கேள்விக்கு ஒளிவு மறைவின்றித் தான் இப்போது ஹை ஸ்கூல் படிக்கிறேன் என்பதனையும்;தன்னுடைய நிஜமான போட்டோக்களையும் அனுப்பி வைத்தாள் ஜிலக்ஷா. "உங்களுக்கு என்னைக் கலியாணம் பண்ணிக்கிற ஆசை ஏதாச்சும் இருக்கா?" எனக் கேட்டாள். அதற்கு வர்ஷனோ நோ நோ! சும்மா ஒரு டைம் பாஸிற்காகத் தான் உங்க கூடப் பழகிறேன். அமெரிக்காவில எங்க அம்மா அப்பா யாராச்சும் வெள்ளைத் தோலைத் தான் எனக்கு கலியாணம் பண்ணி வைப்பதா சொல்லியிருக்காங்க. ஸோ...நீங்க கவலைப் பட வேணாம்" என்று சொன்னான்.
"நமக்கென்ன ஆச்சு? நாமளும் வர்ஷன் கூட டைம் பாஸிற்குப் பழகுவோம்" எனத் தன் மனசைத் தேற்றிக் கொண்டாள் ஜிலக்ஷா. நாட்கள் செல்லச் செல்ல பாடசாலையில் படிக்கையிலும்,வீதியால் சைக்கிளில் செல்கையிலும் வர்ஷனுடனான சாட்டிங் நினைவுகளே வந்து போகத் தொடங்கின. இறுதியாண்டு (பைனல்) எக்ஸாமிற்குத் தன்னைத் தயார்படுத்துவதை விடுத்து முற்று முழுதாக சாட்டிங்கிலே மூழ்கத் தொடங்கினாள் ஜிலக்ஷா. நட்பாக கல்வி தொடர்பாகவும், அமெரிக்காவைப் பற்றிய மனதைக் கவரும் விடயங்கள் தொடர்பாகவும் போய்க் கொண்டிருந்த பேஸ்புக் சாட்டிங் கொஞ்சம் கொஞ்சம் திசை மாறத் தொடங்கியது. இதற்கான மூல காரணம் வர்ஷன் தன் பேஸ்புக்கில் அப்டேற் பண்ணிய ஒரு கவர்ச்சி நடிகையின் போட்டோ தான்.
வர்ஷன் கொஞ்சம் தூக்கலாகவும், கவர்ச்சியாகவும் ஆடை அணிந்திருந்த நடிகையின் போட்டோவினை தன் பேஸ்புக்கில் அப்டேற் பண்ணிய போட்டோ தொடர்பில் ஆண்களின் மன நிலை என்ன என்று அறிந்து கொள்ளும் ஆவலில் ஜிலக்ஷா தொடங்கிய பேச்சு மெது மெதுவாக செக்ஸ் பற்றித் திரும்பத் தொடங்கியது.வர்ஷனும் ஆண்மைக்கேயுரிய கபட நோக்கோடு பேஸ்புக்கினூடாக ஆபாசத் தளங்களின் இணைப்புக்கள், தாம்பத்திய உறவு தொடர்பான விடயங்களை விளக்கமாக ஜிலக்ஷாவிற்குச் சொல்லிக் கொண்டிருந்தான். "சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி" என்பது போல பருவ வயதில் ஆணின் அரவணைப்பினை நாடிக் கொண்டிருந்தது ஜிலக்ஷாவின் உள்ளம். வர்ஷன் தான் இலங்கைக்கு வரும் நாளை ஜிலக்ஷாவிடம் கூறினான்.
எண்ணங்கள், ஏக்கங்கள் என அனைத்துமே வர்ஷனைப் பற்றியதாகிட உடலில் இன்பத் தீ கொளுந்து விட்டெரியக் காத்திருந்தாள் ஜிலக்ஷா. வர்ஷன் வந்ததும் தாம் ஏலவே பேஸ்புக்கில் பேசியவாறு ப்ராக்டிக்கலா உடலுறவு பற்றி அறிந்திடும் ஆவல் மேலிடக் காத்திருந்தாள். ஈழத்தின் யாழ்ப்பாணத்தில் உள்ள ஹோட்டல் ரூமில் இருவரும் சந்திதுக் கொண்டார்கள். பருவ வயது ஏக்கங்கள், தாபங்கள் என அனைத்தும் காமமாகி ஜிலக்ஷாவின் உடலை வாட்டிட, வர்ஷனிடம் "என்னை எடுத்துக் கொள்ளடா கள்வா" எனச் செல்லம் பொழிந்தாள். பால் நழுவிப் பழத்தில் விழுந்தது போன்று "வலிய வந்த வாய்ப்பினை மறுக்கலாமா?"என எண்ணியவாறு "உன்னை எடுத்துக் கொள்வது ஒன்னும் ப்ராப்ளம் இல்லை. ஆனால் கை வசம் காண்டம் பாக்கெட் இல்லையே" எனக் கூறினான் வர்ஷன்.
"காண்டம் இல்லைன்னா என்ன. காண்டம் போடலைன்னாத் தான் உடலும் உடலும் உரசும் போது அதிக உச்சம் கிடைக்கும் என்று நீங்க பேஸ்புக் மூலமா தந்த லிங்கில படிச்சிருக்கேன்"என வர்ஷனுக்குச் சிற்றின்பப் பாடம் கற்பித்தாள் ஜிலக்ஷா. வர்ஷனும் அமெரிக்காவில் தன் கல்லூரித் தோழிகள், விபச்சாரிகள் எனப் பலரோடு ஏற்பட்டிருந்த பாலியல் தொடர்பை மறைத்து ஜிலக்ஷாவினை எடுத்துக் கொள்ளத் தயாரானான். ஆமா ஜிலக்ஷா குட்டி, ஒரேயொரு டவுட்டு; "நாம ஆணுறை அணியலைன்னா, உனக்கு ஏதாச்சும் ஏடா கூடமா ஆகி நீ கர்ப்பமாகிட மாட்டாயெல்லே" என வினவினான் வர்ஷன். "போடா மக்கு! படவா, இது கூடத் தெரியாமலா நீ அமெரிக்காவில இருக்கிறாய்? நீ சுத்த வேஸ்ட்டு ராஸ்கல். பால் பொங்கி வருகுதென்றால் நாம் சமைக்கும் போது அடுப்பை அணைப்பம் இல்லையா? அதே மாதிரித் தான் இங்கேயும் பண்ணிக்கிட்டா ஒரு ப்ராப்ளமும் ஆகாது" எனக் கூறினாள் ஜிலக்ஷா.
ஆசைகள், பருவ வயதின் பாலியல் தூண்டல்கள் யாவும் ஹோட்டல் ரூமில் ஒருவர் உடலை இன்னொருவர் வெற்றி கொள்ளப் போராடும் சிற்றின்பப் போராக நடந்தேறியது.அன்றைய பொழுதை பர்சனல் கிளாஸிற்குப் போவதாக வீட்டில் பொய் கூறி வந்த ஜிலக்ஷா சிற்றின்பம் அனுபவித்த பின்னர் கிளாஸ் முடியும் நேரத்திற்கு வீட்டிற்குச் சென்றாள். வர்ஷன் யாழில் தங்கி நின்ற மூன்று நாட்களிலும் ஜிலக்ஷா தன் இன்ப வெறி தீரும் வரை எடுத்துக் கொள்ளடா என வர்ஷனிடம் தன்னை அர்ப்பணித்து மகிழ்ந்தாள். மூன்று நாட்களின் பின்னர் வர்ஷன் ஜிலக்ஷாவிடமிருந்து விடை பெற்று அமெரிக்காவிற்குச் சென்றான். அமெரிக்கா சென்ற வர்ஷன் மறுபடியும் தன்னைப் பேஸ்புக்கில் தொடர்பு கொள்ளுவான் எனக் காத்திருந்த ஜிலக்ஷாவிற்கு மிகுந்த ஏமாற்றம் தான் கிடைத்தது. வர்ஷனின் பேஸ்புக் அக்கவுண்ட் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாக பேஸ்புக் இணைப்புக் காரணம் சொல்லியது.
தனிமை, தவிப்பு, இருப்புக் கொள்ள முடியாத உடற் சூடு இவை யாவும் அவள் உடலை வாட்ட பேஸ்புக்கில் இன்னோர் நண்பனைக் கண்டு பிடித்தாள். அவன் கூடவும் இதே வேலையினை ஆணுறை பற்றிய சிந்தனை ஏதுமின்றி அனுபவித்து மகிழ்ந்தாள்.ஜிலக்ஷாவின் நடத்தையில் மாற்றத்தினை அவதானித்த பெற்றோர் அவளுக்கு வரன் தேடத் தொடங்கினார்கள். நாட்கள் நகர்ந்தன.இரு வீட்டாரின் சம்மத்தோடும் திருமணம் நிகழ்வதற்கான காலமும் நிச்சயிக்கப்பட்டது. அப்போது தான் ஜிலக்ஷா திடீரென உடல் நலக் குறைவால் அவதிப்பட்டாள்.யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு ஜிலக்ஷாவை அவளது வருங்கால கணவன் நிகால் அழைத்துச் சென்றான். எல்லாவிதமான மருத்துவப் பரிசோதனைகளையும் நடாத்தி முடித்த பின்னரும் அவள் உடலில் ஏற்பட்டிருக்கும் தீராத நோயினைக் கண்டறிய முடியவில்லை. ஜிலக்ஷாவிற்கு நடாத்த வேண்டிய ஒரேயொரு சிகிச்சை மாத்திரம் மீதமிருந்தது.
மருத்துவர் இறுதியில் பாலியல் நோய்கள் தொடர்பான டெஸ்ட்டிங் நடாத்துவதற்கு முடிவு செய்தார். இறுதியில் ஜிலக்ஷாவிற்கு HIV POSITIVE என்பது கன்போர்மாகியது. இப்போது ஜிலக்ஷாவிற்கு ஒரே குழப்பம். "யாரால் தனக்கு எயிட்ஸ் காவி பரவியிருக்கும்? வர்ஷனாலா? இல்லை பேஸ்புக்கில் கண்டு பிடித்த மற்றைய நண்பனாலா?யாரால் தனக்கு எயிஸ்ட் பரவியிருக்கும்?" என்பதனை அறியாதவளாக குழம்பித் தவித்தாள். தனக்கு ஏலவே நேரில் அறிமுகம் இல்லாத பிற நபரோடு உறவு கொள்ளும் போது ஆணுறை அணியவில்லையே என்பதனை எண்ணி வருந்தினாள். விடயம் வருங்காலக் கணவன் நிகாலுக்குத் தெரிய வந்தது. ஆத்திரத்துடன் ஏசத் தொடங்கினான். "அடியே வேசை! உனக்கு வேற வேலை இல்லையா? எங்க போய் படுத்தியோ தெரியாது? நல்ல வேளை உன்னை நான் கட்டவில்லை. தப்பிசேண்டா சாமி" எனப் பொங்கி வெடித்தான்.
ஓடிப் போனான். தன் பெற்றோரிடமும், ஜிலக்ஷாவின் பெற்றோரிடமும் "ஐயோ அவளுக்கு எயிட்ஸாம்" என அந் நோய்க்கான காரணிகளைப் பற்றி விசாரிக்காது, ஜிலக்ஷாவின் வாழ்க்கைக்கு என்ன வழி என்றும் யோசிக்காது அவளைத் தூற்றத் தொடங்கினான். ஜிலக்ஷாவைப் பார்க்க அவள் பெற்றோர் வரவில்லை. "வைத்தியசாலையில் தொடர்ந்தும் நடைப் பிணமாக இருந்தால் தன்னை தனியே வைத்துப் பூட்டி விடுவார்களோ" எனச் யோசித்தாள். ஒரே குழப்பம். வாழ்வா சாவா என மனதில் அலை பாயும் எண்ணங்களுக்கிடையில் சிக்கித் தவித்தாள். உடனடியாக அவள் மனதில் நினைவிற்கு வந்தது ஈழத்தின் யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் உள்ள தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையாரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட மகளிர் இல்லம். மருத்துவரிடம் தன் நிலமையினையும், தான் செய்யப் போகும் மிகப் பெரிய பணியினையும் எடுத்துக் கூறினாள்.
"உன்னை வெளியே போக விட்டால் சமூகத்தில் உள்ளோருக்கும் எயிட்ஸ் நோயினை நீ பரப்பிடுவாய் என டாக்டர் பர்மிஷன் கொடுக்க மறுத்தார். மிகுந்த சிரமத்தின் மத்தியில் மருத்துவரிடமிருந்து அனுமதி வாங்கி மகளிர் காப்பகத்தில் போய்ச் செர்ந்தாள். தான் வாழும் காலம் வரை எயிட்ஸ் நோய்க்கு விழிப்புணர்வு செய்து, எயிட்ஸ் நோய் தொடர்பில் சமூகத்தில் உள்ள மூட நம்பிக்கையினைத் இல்லாதொழிக்க வேண்டும் எனத் திட சங்கற்பம் பூண்டாள். ஒவ்வோர் நாளும் ஒவ்வோர் ஊராகவும், பாடசாலை வாயிலாகவும் பிரச்சார நடவடிக்கையில் தன் போன்ற சக தோழியரையும், தோழர்களையும் அழைத்துக் கொண்டு ஈடுபடத் தொடங்கினாள். தான் வாழா விட்டாலும் பிறர் வாழ வேண்டும் என தன்னலம் கருதாது எயிட்ஸ் நோய் பற்றிப் பிரச்சாரம் மேற்கொண்டாள் ஜிலக்ஷா. இப்போது வர்ஷன் புதிதாக மாதுளன் எனும் பெயரில் ஓர் பேஸ்புக் அக்கவுண்டை உருவாக்கத் தொடங்கினான்.
முக்கிய குறிப்பு: நமக்கு நன்கு அறிமுகம் இல்லாதோர், கணவன் அல்லது வருங்கால வாழ்க்கைத் துணை என நிச்சயம் செய்யப்படாத நபர்களுடன் உடல் உறவில் ஈடுபடும் போது கண்டிப்பாக ஆணுறை அணிய வேண்டும் என்பதனை மறக்க வேண்டாம்.
இன்றைய தினம் டிசம்பர் 01 - உலக எயிட்ஸ் தினமாகும்.
|
33 Comments:
ஐயோ
ஐயகோ! இளம் வயதினர் போகும் போக்கினை நினைத்தால் மனம் வெம்புகிறது!
ஒரு விழிப்புனர்வு பதிவு பாஸ்..
ஒரு விழிப்புணர்வு பதிவு...ஆனால் இன்று ஓரளவு அனைவரும் ஆனுறை பயன்படுத்த தெரிந்து கொண்டார்கள்...எய்ட்ஸ் விட கொடுமையான நோய் ஹெப்படைடிஸ் B & C அதைப்பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் பரவவில்லை...
fb இப்போது மீன் பிடிக்கும் கடலாக ஆகிக் கொண்டு இருக்கிறது. இங்கே மாட்டும் மீன்களுக்கு மட்டும் அல்ல தூண்டிலுக்கும் திண்டாட்டம் தான்
@KANA VARO
ஐயோ
//
ஏன் பாஸ், இயமனின் மனைவியைக் கூப்பிடுறீங்க;-))))
@DrPKandaswamyPhD
ஐயகோ! இளம் வயதினர் போகும் போக்கினை நினைத்தால் மனம் வெம்புகிறது!
//
உண்மை தான் ஐயா, காலம் கலி காலம் ஆகி விட்டதல்லவா;-))))
@K.s.s.Rajh
ஒரு விழிப்புனர்வு பதிவு பாஸ்..
//
நன்றி பாஸ்.
@veedu
ஒரு விழிப்புணர்வு பதிவு...ஆனால் இன்று ஓரளவு அனைவரும் ஆனுறை பயன்படுத்த தெரிந்து கொண்டார்கள்...எய்ட்ஸ் விட கொடுமையான நோய் ஹெப்படைடிஸ் B & C அதைப்பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் பரவவில்லை...
//
நன்றி பாஸ்,
உண்மையில் அநேகம் பேர் ஆணுறை பயன்படுத்த தெரிந்திருக்கிறார்கள் தான், ஆனால் சிலர் நான் மேலே சொன்ன காரணங்களால் ஆணுறை உபயோகிக்க மறுக்கிறார்கள் அல்லவா.
ஹெப்பட்டைட்டிஸ் C பற்றிக் கொஞ்சம் சொல்லியிருக்கலாம். தவற விட்டு விட்டேன். நன்றி பாஸ்.
@veedu
ஒரு விழிப்புணர்வு பதிவு...ஆனால் இன்று ஓரளவு அனைவரும் ஆனுறை பயன்படுத்த தெரிந்து கொண்டார்கள்...எய்ட்ஸ் விட கொடுமையான நோய் ஹெப்படைடிஸ் B & C அதைப்பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் பரவவில்லை...//
உண்மை தான் அக்கா, இளையோரின் தேடலுக்கும், ஆவலுக்கும் பேஸ்புக் இன்று இலக்காகி விட்டது.
அவசியமான பதிவு....
மக்களுக்கு உரைத்தால் சரி ...
நல்லதொரு விழிப்புணர்வு கதை ....
ஆனால் இந்த மாதிரி தடம் மாறி போறவங்களுக்கு கடவுள் குடுக்கும் தண்டனை தான் எய்ட்ஸ் ஓ என நினைக்கத் தோன்றுகிறது.....
உங்கள் கதையில், தடுப்பு வழிகளை கையாண்ட பின் எந்த மாதிரி தப்புகள் வேண்டுமானாலும் செய்யலாமா?
தவறு முழுவதும் பெண்ணின் மேல் தான்.... இன்றைய கால கட்டத்தில் ஆண்களை விட பெண்களே இம் மாதிரியான விசயங்களில் சீக்ரம் உணர்ச்சிவசப் பட்டு தவறான பாதைக்கு சென்று விடுகிறார்கள்........
காலத்திற்கு ஏற்ற பதிவு...
அடங்காமை காரிருள் உய்த்துவிடும் வள்ளுவர் சொன்னது நிஜம் என்று சொல்லி நிற்கிறது உங்கள் கதை அருமை நிரூபன்
நல்ல கதை.
மனதைக் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் மறவாமல் ‘உறை’ போடுங்கள் என்று வற்புறுத்துகிறீர்கள்.
தவறில்லை.
என் உண்மையான சந்தேகம்......
எயிட்ஸ் உள்ளவருடன் உடலுறவு கொண்ட சில நாட்களிலேயே நோயின் ‘அறிகுறி’ தெரியுமா?
குறைந்தபட்சம் எவ்வளவு நாட்கள் ஆகும்?
சில ஆண்டுகளேனும் உடம்பில் ஊறிக் கிடந்து அப்புறம்தான் வெளிப்படும் என்கிறார்களே?
விளக்கம் தர முடியுமா?
மாப்ளே, விழிப்புணர்வு அனைவர்க்கும் தேவை. பதிவிட்ட தங்களுக்கும் நன்றி...
எனது வலைப்பூ இன்று முதல் புதிய டொமைனுக்கு மாறுகிறது:
வலையுலக நண்பர்களே, எனது வலைப்பூ பற்றி ஓர் அறிவிப்பு
தமிழ்மணம் வழியாக உங்கள் வலைப்பக்கத்துக்கு வந்தேன்........
நல்ல கதை தோழர்...
இன்று இந்த கதை பொருத்தமானது தான்.. நுகர்வு கலாச்சாரத்தில் பழகி போகிற பெண்களை என்ன சொல்ல பட்டால் தான் புரிகிறது.. இது போல் தவறாக நடக்கும் ஆண்களும் கண்டிக்கதக்கவர்கள்...
வணக்கம்,நிரூபன்!அருமையான எயிட்ஸ் விழிப்புணர்வுப் பதிவு.எந்த ஒரு கட்டுப்பாட்டுக்கும் உட்படாது எளிய முறையில்,வார்த்தையில் கொட்டியிருக்கிறீர்கள்!என்னவோ,தீண்டத் தகாத வார்த்தை என்று ஒதுங்கிய காலத்தை உங்கள் எழுத்து மூலம் தூக்கி வீசியிருக்கிறீர்கள்!எமது சமூகத்துக்கு இப்போது வேண்டிய அறிவூட்டல் இதுவே.நன்றி!வயது வந்தோருக்கானது என்ற அறிவிப்புக் கூட வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன்.
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு. நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."
குறிப்பாக வெளிநாடுகளில் இருப்போருக்கும் இது ஒரு விழிப்புணர்வு கதை வாழ்த்துக்கள் நிரூபன்...!!!
---எயிட்ஸ் தின வாழ்த்துக்கள்னு சொல்லமுடியாம போச்சே ஹி ஹி---
வணக்கம் பாஸ்,
பலரும் சொள்ளதயங்கும் ,வாங்கத்தயங்கும் ஒரு பொருளாக ஆணுறை இருக்கும் நிலை மாறனும்.
புலனடக்கமும் சுய ஒழுக்கமும் தேவை.முடியவில்லையா?
முடிந்தவரை பாதுக்காப்போடு எல்லை மீறனும்.
நல்லதொரு விழிப்புணர்வு பகிர்வு பாஸ்
இளம் தலைமுறைக்கான விழிப்புணர்வு பதிவு..
FB யுகத்தில் விழிப்புணர்வு உண்டாக்கும் நல்ல பதிவு.
// வருங்கால வாழ்க்கைத் துணை என நிச்சயம் செய்யப்படாத நபர்களுடன் உடல் உறவில் ஈடுபடும்போது கண்டிப்பாக ஆணுறை அணிய வேண்டும் // இதே வர்ஷன் ஒரு பெண்ணை திருமணம் செய்வதற்காக நாட்டுக்கு வந்திருந்தால் அப்பெண்ணின் நிலை ?
பெண்வீட்டார் "மாப்பிள்ளை ஒருக்கால் எய்ட்ஸ் டெஸ்ட் எடுத்துவிட்டு வாங்கோ" எனக் கேட்க முடியுமா ?இதற்கு என்ன தீர்வு ???
நல்ல விழிப்புணர்வுப் பதிவு.
@பரமசிவம்
எயிட்ஸ் உள்ளவருடன் உடலுறவு கொண்ட சில நாட்களிலேயே நோயின் ‘அறிகுறி’ தெரியுமா?
குறைந்தபட்சம் எவ்வளவு நாட்கள் ஆகும்?
சில ஆண்டுகளேனும் உடம்பில் ஊறிக் கிடந்து அப்புறம்தான் வெளிப்படும் என்கிறார்களே?
விளக்கம் தர முடியுமா?
//
சில நாட்களில் அறிகுறிகள் தெரியாது. எயிட்ஸ் தொற்றுக்கு ஆளாகிய நபரின் உடல் நிலை மற்றும் நோயெதிர்ப்பு சக்தி ஆகியவற்றின் அடிப்படையில் தான் எவ்வளவு நாட்களில் எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளாகும் என்பதனை கணிப்பிட முடியும்,
சிலருக்கு மூன்று மாதங்களிலும் நிகழலாம்.
சிலருக்கு மூன்று வருடங்களின் பின்னரும் வெளித் தெரியலாம்.
Nicely penned bro...It is not just for adults anymore...
Sorry for the mobile comment...Reverie...
வணக்கம் நிரு..
எப்படி இருக்கீங்க????
நல்ல விழிப்புணர்வு பதிவு பாஸ்...
படிக்கும் போதே மனசு பதை பதைக்குது...
எங்கே செல்லும் இந்த பாதை....????????????????????
ஆணுறை அணிவது கட்டாயம்.... இப்போது கூட ஆணுறை வாங்க வெக்கபடுகிறார்கள்... ஹா ஹா...... வெக்கத்தை பார்த்து உயிரை இலக்காதீங்கப்பா.... அப்புறம் இப்போ பிரான்சில் காண்டம் ஆள் இல்லா இடங்களில் மெசினில் காசு போட்டு எடுக்கும் படி இருக்கு.... அப்புறம் என்னை சந்தேகமாய் பாக்காதீங்க இதெல்லாம் என் பிரஞ்சு பிரெண்ட்ஸ் சொன்ன தகவல்கள்...(இந்த தகவல்...காட்டான்... மணிக்கு ... ஹா ஹா)
விழிப்புணர்வை கதை மூலம் சொல்லியிருக்கிறீர்கள் சகோ! ஃபேஸ்புக் மூலம் நிஜமாகவே எங்காவது நடந்திருக்கவும் வாய்ப்புண்டு,
சரியான நேரத்தில சரியான கதை நிரூ
எயிட்சை மாத்திரம் மையப்படுத்தாது போலி கணக்குகள் மூலம் ஏமாற்றப்படும் பெண்களுக்கான ஒர் எச்சரிக்கையாகவும் கதையை நகர்த்தியுள்ளீர்கள்.
அருமை
வர்ஸன் போல ஏராளமான கணக்குகள் பேஸ்புக்கில் உலாவருகின்றன.பெண்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்
விழிப்புணர்வு ஊட்டும் நல்ல பதிவு.
பொருத்தமான தருணத்தில்.
Post a Comment