இராணுவம் இப்போது முன்பை விட தீவிர வெறியோடு புலிகளின் வவுனியா நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் எனக் கங்கணம் கட்டத் தொடங்கியது. விமலன் வவுனியா வைரவப் புளியங்குளம் வீதியூடாக வீதிச் சோதனை நடவடிக்கையின் நிமித்தம் (ரோந்து) செல்லும் இராணுவத்தினர் மீது கிளைமோர் தாக்குதல் நடாத்துவதற்குத் திட்டமிட்டார்.வவுனியா வைரவப் புளியங்குள குளக் கட்டிற்கும் கீழ்ப் பகுதியில் நெல் வயல் அமைந்திருக்கிறது. நெல் வயலின் பின்னே அம்மன் கோவில் ஒன்று உள்ளது. விமலன் தன் திட்டத்தினைச் செயற்படுத்தும் நோக்கோடு அம்மன் கோவிலடிக்கு வந்தார். நீங்கள் இங்கே படித்துக் கொண்டிருப்பது நிரூபனின் நாற்று தளத்தில் வெளியாகும், ஈழப் போரியல் வரலாற்றில் இது வரை வெளி வராத மர்மங்கள் தொகுப்பின் ஒன்பதாவது பாகத்தின் தொடர்ச்சியாகும். இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள Drop Down Menu இல் கிளிக் செய்யவும்.
கிளைமோர்த் தாக்குதலுக்கு ஏற்றவாறு குளக்கட்டின் மறு கரையில் கிளைமோர்க் குண்டினைப் பொருத்தி விட்டு வயல் வெளிக்குப் பின் பக்கமாக, பண்டாரிக் குளம் பகுதியில் உள்ள அம்மன் கோவிலுக்கு அருகாக காத்திருந்து, இராணுவம் குளக்கட்டின் மேற் பக்கத்திற்கு வரும் போது ரிமோட் கான்ரோல் (Remote Control) மூலம் வெடிக்க வைக்கலாம் எனக் காத்திருந்தார் விமலன். விமலனுக்கு அப்போது இராணுவத்தினர் பின் பக்கத்தால் வருவது தெரிந்திருக்கவில்லை. விமலன் குளக்கட்டின் மறு கரையினைக் கண்காணித்துக் கொண்டிருக்கையில் இராணுவத்தினர் பண்டாரிக்குளம் விபுலானந்தா மகாவித்தியாலப் பக்கமிருந்து வந்து விமலனை அண்மித்த (நெருங்கிய) போது தான் ஆமி தனக்குப் பின்னே நிற்கும் விடயம் விமலனுக்குப் புரிந்தது.
இப்போது ரிமோட் கான்ரோலை ஒளிக்க முடியாத நிலமை. தான் நிற்கும் இடத்திலிருந்து இராணுவத்தினரைச் சுடுவதனை விட கழுத்தில் கட்டியிருந்த சயனைட் குப்பியினைக் கடித்து உயிர் விடுவதே மேலேனக் கருதி தன் உடலை அசைத்த விமலனின் வலது காலை இராணுவ வீரன் ஒருவனின் துப்பாக்கித் தோட்டா பதம் பார்த்தது. இப்போது ஓடக் கூட முடியாத நிலையில் விமலன் பண்டாரிக்குளம் அம்மன் கோவில்ப் பகுதியில் சரிந்து விழுந்தார். விமலனின் காயப்பட்ட உடலைத் தம் வசப்படுத்திய இராணுவத்தினர் வாகனத்தில் ஏற்றி அவரது உடலை அனுராதபுரம் இராணுவ வைத்தியசாலைக்கு அனுப்பினார்கள். விமலனுக்குச் சிகிச்சையளித்து அவரது காலில் உள்ள காயத்தினை மாற்றிய பின்னர் வவுனியா ஜோசேப் இராணுவ முகாமிற்கு விமலனை அழைத்துச் சென்றனர் இராணுவத்தினர்.
அங்கே வைத்து சித்திரவதை - துன்புறுத்தலுக்குள்ளாக்கி அவரிடமிருந்து வவுனியாத் தாக்குதல்கள் பற்றி அறிய முனைந்தார்கள் இராணுவத்தினர். விமலனுக்குச் சித்திரவதை செய்து உண்மைகளை அறிவதில் முனைப்புடன் செயற்பட்டார் இராணுவப் புலனாய்வுத் துறையினைச் சேர்ந்த தமிழ் அதிகாரி சத்திய வரதன் அவர்கள். (சத்திய வரதன் பற்றி இத் தொடரின் மூன்றாம், நான்காம் பாகங்களில் குறிப்பிட்டுள்ளேன்) இராணுவத்திடமிருந்து தண்டனைகளையும், துன்புறுத்தல்களையும் விமலன் எதிர் கொண்டாலும், தன் இன மானத்தினை விற்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தார் விமலன். இறுதியில் விமலனை இராணுவத்தினர் தம்மால் இயன்ற மட்டும் அடித்துத் துன்புறுத்திப் புலிகள் அணியினரின் வவுனியாப் பகுதி நடவடிக்கைகள் பற்றி அறிய முயன்றார்கள்.
விமலனின் மன உறுதி காரணமாக தகவல்கள் எதனையும் பெற முடியாத இராணுவத்தினர் தம் குரோதத்தினை வெளிப்படுத்தும் நோக்கில் பலமாகத் தாக்கி விமலனின் உடலில் பலத்த காயங்களை ஏற்படுத்தினார்கள். இப்போது வவுனியாப் பகுதியில் நெருப்பும், டக்ளசும், வேந்தனும் மாத்திரமே எஞ்சியிருந்தனர்.ஆரம்பத்தில் தலமைப் பீடம் வவுனியாவிற்கு அனுப்பியவர்களில் 10 பேரை மீளவும் வன்னிக்கு அழைத்தது. மெது மெதுவாக வவுனியா நகர் மீளவும் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தது.வவுனியாவில் புலிகளின் தாக்குதல்களை வழி நடத்திய விமலன் இராணுவத்தினரிடம் மாட்டிக் கொண்ட காரணத்தினால் புலிகள் அணியினரின் செயற்பாடுகளை வழி நடத்துவதற்கு தளபதிகள் ஏதுமற்றி நெருப்பின் தலமைத்துவத்தின் கீழ் புலிகள் வவுனியாவில் செயற்படத் தொடங்கினார்கள்.
வன்னிக் கள முனையில் ஓர் சமரினை ஆரம்பிக்கும் நோக்குடன் இராணுவத்தினரால் ஆயுத தளபாடங்களை வவுனியாவிலிருந்து ஓமந்தைப் பகுதி நோக்கி நகர்த்தும் நடவடிக்கைகளுக்கு புலிகளால் ஏற்படுத்தப்பட்ட உள்ளிருந்து ஊடுருவித் தாக்கும் தாக்குதல்கள்; மறைந்திருந்து தாக்கும் செயற்பாடுகள் அனைத்துமே 2007ம் ஆண்டின் ஜூன் மாதத்தில் சிறிது சிறிதாகக் குறைந்திருந்தன. கூமாங்குளத்தில் காலில் காயப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வன்னிக்கு அனுப்பப்பட்ட அமலன் இப்போது சிகிச்சை முடிந்து புதிய சில திட்டங்களோடு வவுனியாவிற்கு வந்தார். அந் நேரம் தலமைப் பீடம் நெருப்பினை வன்னிக்கு அழைத்தது. இராணுவம் வவுனியாவிலிருந்தா, மன்னாரிலிருந்தா வன்னிக்குள் தன்னுடைய படை நடவடிக்கையினை ஆரம்பிப்பது என குழம்பிக் கொண்டிருந்தது.

இனி இராணுவத்தினரின் அடுத்த கட்ட நடவடிக்கை எவ்வாறு அமைந்தது என்று அறிய ஆவலா? அடுத்த பாகம் வரை காத்திருங்கள்.
அனைவரிடமும், ஓர் ஆலோசனையை எதிர்பார்த்து!
அன்பிற்கினிய உறவுகளே! "ஈழப் போரியல் வரலாற்றில் இது வரை வெளிவராத மர்மங்கள்" எனும் தொடரை நூலுருவில் தமிழகத்தில் நண்பர்களின் உதவியோடு வெளியிட்டு, அந் நூலின் மூலம் கிடைக்கும் பணத்தினை என் கைகளுக்குப் பெற்றுக் கொள்ளாது நேரடியாகவே தமிழகத்தில் உள்ள பவானிகள் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள கல்வியில் திறமையான குழந்தைகளுக்கு உதவித் தொகையாக வழங்கலாம் என நண்பர்களோடு கலந்தாலோசித்து முடிவு செய்துள்ளேன். ஆனால் இத் தொடரினைத் தமிழகத்தில் நூல் வடிவில் வெளியிடுவதால் சட்டச் சிக்கல்களை எதிர் கொள்ள நேரிடுமா? சட்ட ஆலோசனையினைப் பெற்றா இத் தொடரினை வெளியிட வேண்டும். உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

|
11 Comments:
அனைவரிடமும், ஓர் ஆலோசனையை எதிர்பார்த்து!
அன்பிற்கினிய உறவுகளே! "ஈழப் போரியல் வரலாற்றில் இது வரை வெளிவராத மர்மங்கள்" எனும் தொடரை நூலுருவில் தமிழகத்தில் நண்பர்களின் உதவியோடு வெளியிட்டு, அந் நூலின் மூலம் கிடைக்கும் பணத்தினை என் கைகளுக்குப் பெற்றுக் கொள்ளாது நேரடியாகவே தமிழகத்தில் உள்ள பவானிகள் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள கல்வியில் திறமையான குழந்தைகளுக்கு உதவித் தொகையாக வழங்கலாம் என முடிவு செய்துள்ளேன். ஆனால் இத் தொடரினைத் தமிழகத்தில் நூல் வடிவில் வெளியிடுவதால் சட்டச் சிக்கல்களை எதிர் கொள்ள நேரிடுமா? சட்ட ஆலோசனையினைப் பெற்றா இத் தொடரினை வெளியிட வேண்டும். உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
நூல் வெளியிடுவதை வரவேற்கிறேன்.பயன்படுத்த எண்ணும் முடிவையும் கூட! புத்தகமாக அச்சிடும் முன்பு கொடுத்துவேண்டுமானால் ஆலோசனை பெறலாம்.
வணக்கம்,நிரூபன்!நூலாக வெளியிடும்(அச்சேற்றும்)யோசனை நல்லது தான்.தமிழக உறவுகளிடமிருந்து உங்களுக்கு ஆலோசனை கிட்டுமென நினைக்கிறேன்!பார்க்கலாம்.
@shanmugavel

//
நல்ல ஐடியா தான் அண்ணா,
நான் உங்களைத் தொடர்பு கொள்கிறேன்.
நன்றி அண்ணே.
@Yoga.S.FR
வணக்கம்,நிரூபன்!நூலாக வெளியிடும்(அச்சேற்றும்)யோசனை நல்லது தான்.தமிழக உறவுகளிடமிருந்து உங்களுக்கு ஆலோசனை கிட்டுமென நினைக்கிறேன்!பார்க்கலாம்.
//
நன்றி ஐயா.
நல்ல முடிவு பாஸ்....சூப்பர்.
இந்திய நண்பர்கள் உதவலாமே நிருபனுக்கு???? இந்தியா பற்றி நமக்கு அதிகம் தெரியாது :)
நிருபனின் முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.
தொடர் ரெம்ப பரபரப்பா போகுது நிருபன். உங்களுக்கு எவ்ளோ விடயங்கள் தெரிந்து இருக்கு....!!! உண்மையில் ஆச்சரியமாய் இருக்கு...... கிரேட் நிருபன்.
@துஷ்யந்தன்

நன்றி துஸி.

இன்னும் பல விடயங்கள் இருக்கு பாஸ், ஆனால் எழுதினால் ஏதும் ஆகிடுமில்லே.
நிரூபன்
உங்கள் முயற்ச்சிக்கு எனது பாராட்டுகள். இதை நீங்கள் நிச்சயம் புத்தகமாக வெளியிடலாம். எனக்கு தெரிந்தவரை சிலநாட்களுக்கு முன்பு உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் தமிழகத்தில் புலிகளை ஆதரித்து பேசுவது, புத்தகங்கள் வெளியிடுவது தவறில்லை என்று தீர்ப்பு வழங்கப் பட்டதாய் படித்தேன்.
எழப் போரில் இந்தியாவின் பங்கை மறைமுகமாகவோ அல்லது தவிர்த்தாலோ எந்த வித பிரச்சனையும் இருக்க வாப்பில்லை என்று நினைக்கிறேன்
எதற்கும் எனது வழக்கறிஞர் நண்பர் ஒருவரை கலந்துரையாடிவிட்டு தெளிவாக சொல்ல இயலும்
தொடர்புக்கு நீங்கள் tninas.mca@gmail.com முகவரியை எடுத்துக் கொள்ளுங்கள்
இந்த தொடரை நூலாக்கும் முடிவை முழுமனதோடு ஆவலுடன் ஆதரிக்கிறேன் நண்பரே.
Post a Comment