ஈழப் போரியல் வரலாற்றில் இதுவரை வெளிவராத மர்மங்களின் தொகுப்பு!
பாகம் 01:
2005ம் ஆண்டு மகிந்த ராஜபக்ஸ அவர்கள் ஜனாதிபதியாகப் பதவியேற்க வேண்டும் எனும் தீவிர குறிக்கோளோடு செயற்பட்ட புலிகள் அமைப்பினர் வடக்கு கிழக்கில் வாழ்ந்த தமிழ் மக்களின் வாக்குரிமையினைப் புறக்கணிக்கச் செய்து அச் செயற்பாட்டில் வெற்றி பெற்றுக் கொள்கின்றார்கள். 2002ம் ஆண்டில் இலங்கையில் ரணில் விக்கிரமசிங்க அரசிற்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையே கைச்சாத்தான சமாதான ஒப்பந்தத்தின் வாயிலாக; "தமிழர் தரப்பு ஏமாந்தது போதும்! இனிமேல் பலன் ஏதும் இல்லை!" எனும் நிலையினை உணர்ந்த புலிகளின் தலமைப்பீடம் சர்வதேச நாடுகள் முன்னே தான் நல்ல பிள்ளை எனும் பெயரினைத் தக்க வைக்கும் நோக்கில் அரசாங்கத்தின் ஊடாக சமாதான ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்து போரினை ஆரம்பிக்க வேண்டும் எனும் செயற்பாட்டில் தனது கவனத்தினைச் செலுத்தத் தொடங்குகின்றது.
2002-2005 இற்கு உட்பட்ட காலப் பகுதியில் புலிகள் அமைப்பினர் தமது போராளிகளை, படையணிகளை அரசியல் ரீதியான செயற்பாடுகளில் ஈடுபடுத்தியது மட்டுமல்லாது தம் படை பலத்தைப் பெருக்குவதிலும் முனைப்புடன் செயற்பட்டார்கள். இனி ஒரு போர் தொடங்கின் புலிகளிடம் உள்ள வளங்கள், அதி நவீன போர் உபகரணங்களின் மூலம் சிங்களப் படைகள் பாரிய அழிவினைச் சந்திக்கும் என்றும், புலிகளால் இலகுவில் தமிழீழத்தை வென்றெடுக்க முடியும் என்றும் ஆத்மார்த்த ரீதியில் வன்னியில் வாழ்ந்த மக்கள் நம்பியிருந்தார்கள். மகிந்த ராஜபக்ஸ அவர்கள் ஜனாதிபதியாகப் பதவியேற்பதற்கு ஒரு சில நாட்கள் முன்னதாக 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையில் பாராளுமன்றத் தேர்தல் முடிந்த கையோடு, வல்வெட்டித் துறையில் உள்ளா விளையாட்டரங்கில் ஸ்ரீலங்காப் படைத்துறைப் புலனாய்வாளார்களால் இரு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்தி பரவுகின்றது.
நிரூபனின் நாற்று வலை www.thamilnattu.com
இச் சம்பவத்தின் மூலம் ஆத்திரமுற்ற பொது மக்கள் இராணுவத்திற்கு எதிராக டயர் எரிப்பிலும், இராணுவ முகாம்களை நோக்கி கற்களை வீசித் தாக்குதல் நடாத்தவும் தொடங்குகின்றார்கள். இச் சம்பவத்தினைத் தொடர்ந்து யாழ் குடாநாட்டிலும்;ஏனைய வட கிழக்கில் உள்ள மாவட்டங்களிலும் பொங்கியெழும் மக்கள் படை, எல்லாளன் படை, சங்கிலியன் படை, மானங் காக்கும் மறவர் படை, சீறும் படை, சிறுத்தைப் படை, என மேற் குறித்த 6 படையணிகள் மக்கள் மத்தியிலிருந்து உதயமாகின்றன எனும் அறிவிப்பு இனந் தெரியாத தமிழ் இளைஞர்களால் வெளியிடப்படுகின்றது. இந்த அமைப்பானது சமாதான காலத்தில் இலங்கை இராணுவத்தோடு இணைந்திருந்த தமிழ் இளைஞர்களினால் உருவானது என்றும் இராணுவத்திடமிருந்த ஆயுதங்களை திருட்டுத் தனமாகத் திருடி, இராணுவத்திற்கு எதிராகத் தாக்குதல் நடாத்தும் நோக்கில் இவ் அமைப்புக்கள் செயற்படும் எனவும் ஊடகங்களிற்கு அறிவித்தல் அனுப்பப்பட்டதோடு, வீதிகளிலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுகின்றது.
www.thamilnattu.com
இவ் அமைப்புக்களில் பொங்கியெழும் மக்கள் படையணி மாத்திரம் இராணுவத்தினர் மீதான தீவிர தாக்குதல்களைத் தொடுக்கும் என்றும், ஏனைய அமைப்பினர் எட்டப்பர் வேலை செய்வோர், இராணுவத்துடன் சேர்ந்தியங்குவோர், மற்றும் தமிழினத் துரோகிகள் எனும் பெயரால் அழைக்கப்படுவோருக்கு முதலில் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு அவர்களையும் போட்டுத் தள்ளும் எனவும் குடாநாட்டிலும், ஏனைய வட கிழக்குப் பகுதிகளிலும் சில இடங்களில் துண்டுப் பிரசுரங்கள் (நோட்டீஸ்) ஒட்டப்பட்டிருந்தது.
யார் இந்த மக்கள் படையணி?
தமிழ் மக்களின் கலாச்சாரச் செயற்பாடுகளுக்கு விரோதமாகச் செயற்பட்ட இளைஞர்கள், யாழ் குடா நாட்டிலும், ஏனைய மாவட்டங்களிலும் ஹேங் மோதல் - கோஷ்டி மோதல்களில் ஈடுபட்டு சமூகத்தில் பல தீய செயல்களைச் செய்த இளைஞர்கள் எனப் பல இளைஞர்களை ஒன்று திரட்டி, சமூகத்திற்கு இந்த இளைஞர்கள் இனிமேல் தேவை இல்லை எனும் நிலையினை வெளியே சொல்லாது புலிகளால் உருவாக்கப்பட்ட அமைப்பினர் தான் இந்தப் மக்கள் படை எனும் அமைப்பாகும். ஆனால் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிற்கும், வெளி உலகிற்கும் இவ் அமைப்பினர் இராணுவத்தோடு சேர்ந்திருந்த துரோகிகள், இராணுவ அராஜகம் காரணமாக இராணுவத்திற்கு எதிராக திசை திரும்பித் தாக்குதல் நடாத்துகிறார்கள் என்றே அறிவிக்கப்பட்டது.
nirupan நாற்று ஈழம் அனுமதியின்றி கொப்பி செய்யப்பட்டிருக்க்கிறது.
புலிகள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை பறிக்க நினைத்தார்கள். தமிழர்கள் வாழும் பகுதியில் இனிமேல் இந்த இளைஞர்கள் தேவை இல்லை, இவர்களால் பயனேதுமில்லை எனும் நிலையில் தம்மால் மரண தண்டனை மற்றும் சிறைத் தண்டனை வழங்கும் நோக்கில் கைது செய்யப்பட்டிருந்த இளைஞர்களிற்கு ஆயுதப் பயிற்சி வழங்கினார்கள்."உங்களுக்குரிய தண்டனைகள் யாவுமே குறைக்கப்படுகின்றன. நீங்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள புலிகளின் கட்டளையினைக் கேட்டு, அவர்களோடு சேர்ந்து இயங்க வேண்டும். இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடாத்த வேண்டும். இராணுவ வாகனங்கள் மீது கிளைமோர் கண்ணி வெடித் தாக்குதல் நடாத்த வேண்டும்" உங்களுக்குரிய பணி சிறப்பாகச் செய்து முடிந்த பின்னர் நீங்கள் உங்கள் பெற்றோருடன் இணைந்து வாழலாம்"என புலிகளால் வழங்கப்பட்ட உறுதி மொழியினை நம்பி எழுதப்படாத ஒப்பந்தம் மூலம் நம்பிக்கையினை அடிப்படையாக வைத்து செயற்படத் தொடங்குகின்றார்கள் பொங்கியெழும் மக்கள் படையணியினர்.
நாற்று வலைப் பதிவின் ஒரிஜினல் பதிவு.
ஆனால் புலிகள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் பறிக்க நினைத்திருந்தது அப்பாவிப் பொங்கியெழும் மக்கள் படையணியினருக்கு தெரிந்திருவில்லை. காரணம் புலிகளின் கட்டளைப் பீடத்தின் அறிவுறுத்தலின் பிரகாரம், இராணுவ முகாம்கள், இராணுவ நிலைகள் மீது பட்டப் பகலில் மோட்டார் சைக்கிளில் முகத்தை மறைத்து தாக்குதல் நடாத்தும் இளைஞர்களை இனந்தெரியாதோர் சுட்டுக் கொல்லத் தொடங்கினார்கள்.ஒரு புறம் புலிகளும் அந்த இளைஞர்களை இனந் தெரியாத நபர்களாக சுட்டுக் கொல்லத் தொடங்க. இராணுவமும் தம் புலனாய்வுத் துறையினரின் உதவியோடு, பொங்கியெழும் மக்கள் படையணியினரைத் தேடித் தேடி வலை விரித்துப் போட்டுத் தாக்கத் தொடங்கியது.புலிகளுக்கு மிக்க மகிழ்ச்சி! காரணம் சமூகத்திற்கு பயனற்றவர்கள் மூலம் தாக்குதல் நடக்கிறது! அதே வேளை தாக்குதல் முடிந்த பின்னர் பொங்கியெழும் மக்கள் படையணியினர் கொல்லப்படுகின்றார்கள். ஆக ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.
நாற்று வலை பதிவு
மக்களோடு மக்களாக நின்ற பொங்கியெழும் மக்கள் படையணியினர் இராணுவத்தினரை வெறுப்பேத்தும் நோக்கில் சராமரியான தாக்குதல்களைத் தொடுக்கின்றார்கள். இராணுவ வாகனங்கள் மீது கிளைமோர் கண்ணி வெடித் தாக்குதல் மேற் கொள்ளல், வீதியால் நடந்து செல்லும் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்துதல், இராணுவ முகாம்கள் மீது கிரைனைட் (கைக் குண்டு) தாக்குதல் மேற்கொள்ளுதல் எனப் பல தாக்குதல்களை மேற் கொண்டு மகிந்தரை வலிந்திழுத்து ஒரு போரினைத் தொடங்க வேண்டும், மகிந்தர் யுத்த நிறுத்த ஒப்பந்ததை தூக்கி எறிந்து புலிகளோடு மோத வர வேண்டும் எனும் நிலையில் தீவிரமாகப் புலிகள் தம் காய்களை நகர்த்தினார்கள். இந்த வேளையில் தான் 2006ம் ஆண்டு இச் செயற்பாடுகள் அனைத்திற்கும் மகுடம் வைத்தாற் போல அப்போதைய இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் புலிகளால் மேற் கொள்ளப்படுகின்றது.
இந்தத் தாக்குதல் மூலம் மீண்டும் ஓர் யுத்தம் நிகழும் என எதிர்பார்க்கப் பட்ட போதும் அரச படைகள் A 9 நெடுஞ்சாலையினை ஒரு நாள் மாத்திரம் மூடித் தாக்குதலுக்கான தயார்படுத்தல்களை மேற்கொள்ளும் வேளையில், சர்வதேச போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து மீளவும் A 9 நெடுஞ்சாலை திறக்கப்படுகின்றது. பொன்சேகா மீதான தாக்குதலின் எதிரொலியாக ஈழத்தின் கிழக்கில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சம்பூர், மூதூர் ஆகிய புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதி மீது கிபிர் விமானத் தாக்குதல் மேற்கொள்ளப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து மாவிலாறு அணைக்கட்டு விவகாரம் ஆரம்பமாகின்றது. மாவிலாறில் உரசத் தொடங்கிய சிறு நெருப்பு, சம்பூர், மூதூர் ஆகிய பகுதிகளினுள் அத்து மீறி உள் நுழையத் தொடங்கிய இலங்கை இராணுவத்தினரின் நடவடிக்கையினைத் தொடர்ந்து பெரு நெருப்பாக மாறிக் கொள்கின்றது.
நாற்று வலைப் பதிவு
புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர், மூதூர் ஆகிய பகுதிகள் மீது தாக்குதல் நடத்தச் சென்ற இராணுவத்தினரைப் பலத்த சேதங்களோடு விரட்டி அடித்தார்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர்.ஆனால் இது இலங்கை அரசின் யுத்த நிறுத்த மீறல் என்ற அடை மொழியோடு முடிந்து போய் விட்டது. இலங்கை அரச படைகளும், புலிகளும் தம் நிலைகளைத் தயார்படுத்திக் கொண்டிருந்த வேளையில் மகிந்தர் போருக்குத் தயாராகி விட்டார் என்பதனை தம் உளவாளிகள் மூலம் அறிந்து கொண்ட புலிகள் அதற்கான சந்தர்ப்பத்தினை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். அரச படைகள் 04ம் திகதி ஆகஸ்ட் மாதம், 2006ம் ஆண்டு ஈழத்தின் வட பகுதியில் உள்ள முகமாலை முன்னரங்க எல்லைப் பகுதியினூடாக புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதி மீது தாக்குதல் நடாத்தும் நோக்கில் தம் ஆயுத தளபாடங்களை நகர்த்தத் தொடங்கினார்கள்.
காலை பத்து மணியளவில் இராணுவத்தினரின் நகர்வினை அறிந்த புலிகள் மதியம் ஒரு மணியளவில் முகமாலை இராணுவ நிலைகள் மீது ப்ளாஸ்ரிக் பீரங்கிச் ஷெல் அடித்து டெஸ்ட்டிங் செய்து பார்த்தார்கள். இராணுவம் பதில்த் தாக்குதல் நடத்தாதிருந்தது. இராணுவம் முன்னேறுவதற்கு முன்பதாக தாம் முன்னேறித் தாக்குதல் நடாத்த வேண்டும் எனும் நோக்கில் புலிகள் விரைந்து செயற்பட்டார்கள். 11.08.2006ம் ஆண்டு வெள்ளிக் கிழமை மாலை ஐந்து மணி 25 நிமிடம் அளவில் வட போர் முனையில் இருந்து முகமாலைப் பகுதியூடாகப் புலிகளின் அணிகள் தாக்குதலை ஆரம்பிக்கின்றன.இலங்கை இராணுவத்திற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. முகமாலையில் புலிகள் தாக்குதலை ஆரம்பித்த மறு கணமே, கச்சாய், கிளாலி, மற்றும் யாழ்ப்பாணத் குடாநாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள மண்டை தீவு, குறிகாட்டுவான், ஆகிய தீவுப் பகுதிகளிலும் விடுதலைப் புலிகள் தாக்குதலை ஆரம்பிக்கின்றார்கள்.
இதே வேளை திருகோணமலைத் துறை முகத்தினூடாக, யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவத்தினருக்கு கிடைக்கும் வழங்கல்களை தடுக்கும் நோக்கிலும், அதிரடி ஆட்டிலறிப் பீரங்கித் தாக்குதல்களைப் புலிகள் மேற்கொள்கின்றார்கள். தமிழ் மக்களைப் பொறுத்தவரை புலிகளின் வேகமான தாக்குதல் நடவடிக்கை காரணமாக இன்னும் ஒரு வார காலத்தினுள் யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் புலிகள் வசம் வீழ்ந்து விடும் என எண்ணிக் கொண்டிருந்தார்கள். அப்போது தான் இராணுவம் தன் பலத்தினை வட போர் முனையில் குறுக்கு வழியில் நிகழ்த்திக் காட்டத் தொடங்கியதோடு, புலிகளைத் திசை திருப்பத் தொடங்கினார்கள். யாழ் குடா நாட்டிலும் திருகோணமலை மாவட்டத்திலும் 24 மணி நேர ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியது இலங்கை அரசு.இராணுவம் புலிகள் அமைப்பினருக்குத் தண்ணி காட்டும் நோக்கோடு கிழக்கு மாகாணத்தில்......................................................................................
அடுத்த பாகத்தை இன்று (04.11.2011) மாலை எதிர்பாருங்கள்.
இப் பதிவிற்கான படங்கள் அனைத்தும் கூகுள் தேடல் மூலம் பெறப்பட்டவை!
இப் பதிவின் இரண்டாம் பாகத்தினைப் படிக்க:
இப் பதிவின் இரண்டாம் பாகத்தினைப் படிக்க:
|
33 Comments:
வணக்கம் மச்சி!
@Powder Star - Dr. ஐடியாமணி
வணக்கம் மச்சி!
//
வணக்கம் மச்சி,
ஒரு சில ரகசியங்களை உளறுவதால் நீயே என்னை மாமா என்று சொல்லப் போகிறாய்.
ஹி,,,,ஹி,,,,
அதற்கு முன்னரே நானே என்னை மாமா என்று சொல்லித் தேற்றிக்கிறேன்;-)))
04.08.2006ம் ஆண்டு வெள்ளிக் கிழமை மாலை ஐந்து மணி 25 நிமிடம் அளவில் வட போர் முனையில் இருந்து முகமாலைப் பகுதியூடாகப் புலிகளின் அணிகள் தாக்குதலை ஆரம்பிக்கின்றன.////////
மச்சி தேதியைச் சரி பார் 11.08.2006 தான் சரியான தேதி!
@Powder Star - Dr. ஐடியாமணி
மச்சி தேதியைச் சரி பார் 11.08.2006 தான் சரியான தேதி!
//
ஓம் மச்சி,
தேதியை மாற்றி விடுறேன்
மிக்க நன்றி.
மச்சி நான் உன்னோட சண்டை பிடிக்கேலை! கோபப்படவும் இல்லை! அன்பாகவே கேட்கிறேன்!
இயக்கத்தின் சில ரகசியங்களை வெளியே சொல்வதால் நமக்கு ஏதும் பயன் உண்டா?
@Powder Star - Dr. ஐடியாமணி
மச்சி நான் உன்னோட சண்டை பிடிக்கேலை! கோபப்படவும் இல்லை! அன்பாகவே கேட்கிறேன்!
இயக்கத்தின் சில ரகசியங்களை வெளியே சொல்வதால் நமக்கு ஏதும் பயன் உண்டா?
//
சில விடயங்களை எழுதும் போது சில ரகசியங்களைச் சொல்லுவது தவிர்க்க முடியாத விடயமாகின்றதே.
நான் என்ன செய்ய மச்சி?
வணக்கம் நிரூபன்
இப்போ நான் வேலையில் நிற்கிறேன் மணி வந்துட்டார் அவர் வாசித்து முடியட்டும் பின்னால வாறோமுங்கோ..!!?
@நிரூபன்
மச்சி நான் உன்னோட சண்டை பிடிக்கேலை! கோபப்படவும் இல்லை! அன்பாகவே கேட்கிறேன்!
இயக்கத்தின் சில ரகசியங்களை வெளியே சொல்வதால் நமக்கு ஏதும் பயன் உண்டா?
//
சில விடயங்களை எழுதும் போது சில ரகசியங்களைச் சொல்லுவது தவிர்க்க முடியாத விடயமாகின்றதே.
நான் என்ன செய்ய மச்சி? ::///////
சரி மச்சி! மனசு சரியில்லை! கவலையா இருக்கு!! நான் போயிட்டு வாறன்!
@காட்டான்
வணக்கம் நிரூபன்
இப்போ நான் வேலையில் நிற்கிறேன் மணி வந்துட்டார் அவர் வாசித்து முடியட்டும் பின்னால வாறோமுங்கோ..!!? ///////
அண்ணர்! நான் ஒண்டும் வாசிக்கேலை! வாசிச்சு வாசிச்சு என்னத்தைக் கண்டம்???????
@காட்டான்
வணக்கம் நிரூபன்
இப்போ நான் வேலையில் நிற்கிறேன் மணி வந்துட்டார் அவர் வாசித்து முடியட்டும் பின்னால வாறோமுங்கோ..!!?//
வணக்கம் அங்கிள்,
சாரி மாமா,
நலமா இருக்கிறீங்களா?
எல்லோரும் ஒரு மார்க்கமாத் தான் அலையுறீங்க போல இருக்கே...
ஒரு அடிமை சிக்கிட்டான் என்று கும்ம வேண்டியது தானே....
ஹே....ஹே...
நான் மீண்டும் வரும் போது இப்படி பதிவா வரணும்.. அவ்வ...
டேய்... துஷி உன்னை சிக்க வைக்க சதி நடக்குதடா.. எஸ்கேப் ஆகு.. ஹே.. ஹே...
நண்பர்களே!
இது மிக மிக முக்கியமான வரலாற்று பதிவு.
தயவு செய்து....நகைச்சுவையாக பின்னூட்டம் போடாதீர்கள்.
பதிவின் நோக்கமே பாழ்பட்டு விடும்.
நான் மிகவும் எதிர்பார்த்திருந்த வரலாறு ஆரம்பமாகி உள்ளது.
இதே சுவையோடு சூடோடும் முழுத்தொடரும் தொடர வாழ்த்துக்கள் நண்பரே!
நோ கமண்ட்ஸ்.......
சுவாரஸ்யமான பதிவு.ஆரம்பத்தில் நீங்கள் குறிப்பிட்ட சம்பவத்தோடு தொடங்கியிருந்தது என்ற விடயம் பற்றி முழுமையாக தெரியுமா?மேலும் ஒரு கல்லில் இரு மாங்காய் ஆரம்பத்தில் சரியாக இருந்தது.பின்னர் அதுவே மிகப்பெரும் தலையிடியாக மாறியது.
பத்திரிகைகளில் வெளி வராத புதிய தகவல்கள் ...படிக்க ஆர்வத்தை தூண்டுகின்றன ...
புதிய தகவல்கள் நிரூ தொடருங்க வாழ்த்துக்கள்
யாருக்கும் தெரியாத உண்மைகள்.
உங்க்ளிக்கு எப்படி தெரிந்தது. ஐடியாமணியும் எதோ புறுபுறுக்கிறார்.
மம்ம்ம்......
@M.Shanmugan
சுவாரஸ்யமான பதிவு.ஆரம்பத்தில் நீங்கள் குறிப்பிட்ட சம்பவத்தோடு தொடங்கியிருந்தது என்ற விடயம் பற்றி முழுமையாக தெரியுமா?மேலும் ஒரு கல்லில் இரு மாங்காய் ஆரம்பத்தில் சரியாக இருந்தது.பின்னர் அதுவே மிகப்பெரும் தலையிடியாக மாறியது.
//
ஹே...ஹே...
முழுமையாகத் தெரியாமல் எப்படி பாஸ் எழுத முடியும்?
@Taker007
யாருக்கும் தெரியாத உண்மைகள்.
உங்க்ளிக்கு எப்படி தெரிந்தது. ஐடியாமணியும் எதோ புறுபுறுக்கிறார்.
மம்ம்ம்.....//
அதையெல்லாம் எப்படிங்க பாஸ் பொது இடத்தில் சொல்ல முடியும்?
ஐடியாமணி ரகசியங்கள் வெளியே சொல்லப்படுவதாகப் புறு புறுக்கிறார்...
நான் என்ன பண்ண?
//11.08.2006ம் ஆண்டு வெள்ளிக் கிழமை மாலை ஐந்து மணி 25 நிமிடம் அளவில் வட போர் முனையில் இருந்து முகமாலைப் பகுதியூடாகப் புலிகளின் அணிகள் தாக்குதலை ஆரம்பிக்கின்றன//
அதே நாள் நான் A -9 வீதியூடாக பயணம் செய்த அனுபவம் இருக்கு. எழுத முயற்சிக்கிறேன் பாஸ்!
வணக்கம் பாஸ் நலமா?
நிச்சயம் தெரிந்து கொள்ளப்பட வேண்டிய விஷயங்கள்!
உங்கள் முயற்ச்சிக்கு வாழ்துக்கள்.
சீரியஸான பதிவு என்பதாலும், வரலாற்று உண்மை பதிவு என்பதாலும் உங்கள் எழுத்து நடையில் ஒரு மாற்றம் தெரிகிறது.. குட் ஷாட்
சட்ட சிக்கல் ஏதும் வராமல் தடுக்க பதிவின் கடைசியில் தெரிந்தவர்கள் சொன்னது என்ற லைனை சேர்க்கவும்.ஏன் எனில் நடப்பது ஜெ ஆட்சி என்பதால் விடுதலைப்புலிக்கு ஆதரவு என குற்றம் சுமத்த வாய்ப்பு இருக்கிறது
உங்களும் பதிவின் மூலம் நிறைய அறிந்து கொள்கிறோம் நம் இனத்தை பற்றி... தங்களின் எழுத்து நடை மேலும் மெருகேறி உள்ளது வாழ்த்துக்கள்...
போரைப்பற்றின உண்மைகள் நிறைய வெளியே வரவில்லை, ஆனால் உங்கள் பதிவில் வித்தியாசமாக சொல்கிறீர்கள், உண்மைகள் எல்லாம் வெளியே வரவேண்டும் என்பது என் கருத்து....!!!
மாலை நான்கு மணி எப்ப வரும் என்ற எண்ணம் தவிர வேறு எதுவும் இல்லை
அடடா, எவளவு உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன..
அடுத்த பதிவுக்கு காத்திருக்கின்றேன்!
என்னத்த சொல்ல அதுதான் நீங்களே சொல்லிடின்களே
நிரூ!
உடல், நலமாகி விட்டதா!
துப்பறியும் தொடர் கதை போல
தங்கள் பதிவு மனதை ஈர்க்கிறது
உலகு அறியாத எத்தனை செய்திகள்!
புலவர் சா இராமாநுசம்
வணக்கம் சகோ!
உலகம் அறியாத பல புதிய விஷயங்கள்.தொடருங்கள்.
தெரியாம இரண்டாவது பாகத்தை முதலில் படித்தது பாதியில் தான் புரிந்தது...
இந்த தொடர் நிறைய புதிய தகவல்களை புதிய கோணத்தில் தருகிறது...
அதில் பல நான் உண்மை என்று நம்பிய பலவற்றிலிருந்து முரண்படுகிறது...தொடருங்கள் சகோதரம்...
இயல்பான நடையில் விறுவிறுப்பாக ஒரு தொடர்..
யுத்தத்தை ஆரம்பித்த்து அரசப் படைகள் என்று நினைத்திருந்தேன்.நீங்கள் வேறு மாதிரிச் சொல்கிறீர்களே..
Post a Comment