உவர் நீர் கலந்த குளிர் காற்று
சில்லென்று வீசி என் மேனி தடவ
அவளை அணைத்திருந்த
என் வலது கையை(க்)
கொஞ்சம் மேலால் எடுத்து
அவள் செவ்வாய் திருப்பி
செல்லமே என்று சொன்னேன்!
என்னை ஏற இறங்கப் பார்த்தாள்;
குளோசப்பில் வைத்து
1000 வாட்ஸ் பவர் லைட் பூட்டி
வெளிச்சம் பாய்ச்சாது;
என் முகத்தை உற்றுப் பார்த்த
அவள் முகத்தின் பிரகாசத்தினால்
நானும் கொஞ்சம்
பிரகாசம் பெற்றுத் தோற்றமளித்தேன்!
மெதுவாய் சிரித்தாள்
காதுமடல் கடிக்கலாம் என
முன்னேறிய என்னை
தன் கை விரல் கொண்டு
கட்டுப்படுத்தினாள் - அடியே
தாட்சா! இது தகுமா என்றேன்?
போடா கள்வா!
உனக்கு எப்போதும் குறும்பு என
என் மோவாய் திருப்பி
மோகத்தை கூட்டினாள்;
மெதுவாய் அவளிடம்
உன்னைக் கட்டிக்கிட்டா
எத்தனை குழந்தை பெத்துக்க
ஒத்துக்குவாய் என்றேன்?
படவா ராஸ்கல், யார் சொன்னாள்?
உன்னை கட்டிக்கப் போறேன் என்று - என
குழைந்து பேசினாள் - வழமையாக
குழைந்து பேசினாள் - வழமையாக
என் செல்லம் செய்யும்
செல்லச் சினுங்கல்களுள்
இதுவும் ஒன்றென்பதால்
சீரியஸ் ஆகாமல்
சிரிப்பால் அவள் உதட்டை அளந்தேன்!
உண்மையிலே உனக்கு
என்னை கட்டிக்க
ஆசை இல்லையா என்றேன்?
"உன் முகத்தை எப்போதாச்சும்
கண்ணாடியில் பார்த்தாயா
கருங் குரங்கே"? என திட்டினாள்!
அடடா இவள் செல்லம் பொழிகிறாள்
என மனதுள் நினைத்து
கருங் குரங்கெனில்
கருமையான கவிஞன்
அல்லவா என்றெண்ணி
பெரும் பொருள் கண்டு பிடித்த
சந்தோசத்தில் காதல்
போதையில் கலந்திருந்தேன்!
"நெசமாத் தான் சொல்லுறியா தாட்சா
வசமான ஆள் உனக்கு நான் இல்லையாடி ஆத்தா?"
என இதமான சந்தமொன்றை குழைந்து
என இதமான சந்தமொன்றை குழைந்து
இனிதாக அவளிடத்தே கேட்டேன்- என்னை
லவ்சு பண்ணும் போது
லவ்சு பண்ணும் போது
உமக்கு தெரியாதா என்றாள்!
"நீ சுத்த வேஸ்ட் என்றாள் -
போடி சிறுக்கி!
இன்னமும் நீ முழுகாமல் ஆகலையே
அதற்குள் எப்படி
கண்ணால் என்னை(க்)
கணித்தா சொல்லுகிறாய்
நான் சுத்த வேஸ்ட் என
கலவிக் கேள்வி கேட்டேன்!
படாரென இருகைகள் அணைத்திருந்த
பிடியை விலத்தினாள்!
சாடாரென தன் பின்பக்க
பாவாடை தன்னில் ஒட்டியிருந்த
மணலைத் தட்டினாள்!
இந்த காலத்தில் பசங்களே
பின்னால் அலைந்து
கன்னம் சிவக்க காதல் செய்து
உள்ளம் கவர் கள்வன் போல
உண்மை மறைத்து
உள்ளே நுழைந்து
உடலின் இச்சை தீர்த்து
பள்ளம் இவள் உள்ளம்
எனச் சொல்லி
பகடியாய் எம் போன்ற
கன்னியரை கழட்டி விடுகையிலோ
நீயும் என்னை
மணம் முடிக்கனும்
எனச் சொல்கிறாயே
என் முன்னே நிற்க - உனக்கு
என்ன தகுதி இருக்கடா என்றாள்?
இருக்கடா என அவள் கொஞ்சம்
இறுக்கமாய் கேட்டதால் மனதால்
இளகி நான் நொந்து போனேன்!
நிறத்தில் ஏதும் குறையா
என கேட்டேன்?
இல்லை நீ கறுப்பாக
இருந்தால் தானே
நான் கவலை கொள்வேன் என
கவிதை கலந்து சொன்னாள்!
எனக்கு பிரான்ஸில்
ஏராளம் வசதிகளோடு
எளிமையான மாப்பிளை
மாமன் காட்டான் பார்த்திருப்பதாக
அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தாள்!
அடியேன் நானோ
ஓ வென்று கதறி
அழாத குறையாக
தவித்த படி நின்றேன்!
உன்னை நீயே
கண்ணாடியில் போய் பார்!
கன்னம் இரண்டும் வீங்கியிருக்கு!
உன் கால்கள் இரண்டும்
யானை போல் திரண்டிருக்கு!
உடம்பு கூட உருளையாய் இருக்கு!
இங்கே இருக்கும் வரைக்கும்
டைம்பாஸிற்காய் உன்னை
வைத்து டாவடித்தேன்,
இப்போ எனக்கு வெளிநாடு செல்ல
இறக்கை முளைத்ததால்
போடா வெண்ணெய் என
விலகிச் செல்கிறேன் - என
காதல் தோல்விப் போதை தந்தாள்
என் பொறுமையைச் சோதித்து
கண்களில் கோபத் தீ மூட்டி
பேதை அவளோ விலகிச் சென்றாள்!
கவலை கொண்டேன்
வீட்டிற்கு வந்தேன்
கண்ணாடி எடுத்தேன்
கையில் வைத்துப் பார்த்தேன்,
ம்...இதுவும் சரிவராது என
நிலைக் கண்ணாடி முன் நின்றேன்
அசிங்கமாய் இருந்திச்சு!
என்னைப் பார்க்க எனக்கே
அசிங்கமாய் இருந்திச்சு!
காலையில் அம்மா அவித்து
ஆசையாய்
கனக்க இல்லை
கனக்க இல்லை
இது கொஞ்சம் என சொல்லித் தரும்
ஒரு நீத்துப் பெட்டி பிட்டு!
மதியத்திற்கு முன்பதாய்
இரண்டு துண்டு பாண் - பின்
லஞ்ச் டைம் வந்ததும்
லபக்கென்று அள்ளி அடைய
ஒரு சட்டி சோறுடன்
ஓசியில் அன்னதானத்தில்
கிடைத்தது போன்ற கறிகளும்!
மாலையில் மூன்று முட்டை பொரியலோடு
வேலையைக் கூட்டும் இனிப்பு பிஸ்கட்!
இரவானதும் உடம்மை முறுக்கேற்றும்
ஒரு சட்டி குரக்கன் பிட்டு!
இவ்வளவும் சாப்பிட்டால்
இடி அமீன் போல் ஆகாது
இளைத்து நான் போயிருப்பேனா?
மொத்து மொத்தென்று
மொத்தி அடைந்ததால்
மொத்தமாய் வந்து விட்டேன் என
மௌனமாய் அழுதேன்!
ஓடிப்போனேன் - ஒட்டகப்புலத்து
டாக்டரை அழைத்து
ஒல்லியாக ஐடியா கேட்டேன்!
காரி என் முகத்தில் உமிழாத
குறையாக கண்டிசன் பல சொன்னார் - டாக்டர்!
அவர் சிறந்த ஐடியா மாஸ்டர்!
அவர் சிறந்த ஐடியா மாஸ்டர்!
காலையில் இலையோடு சேர்ந்த கஞ்சி
மதியம் கொஞ்சூண்டு சோறும்
சத்தான புரோட்டின் கலந்த உணவும்;
இரவினில் லைட்டாக சாப்பிட்டு
இரண்டு ரவுண்டு ஓடவும் வேண்டும் என்றார்!
இத்தோடு நிறுத்தாதேம் நிரூபன் - இலகுவில்
நீர் ஒல்லியாய் ஆகனும் என்றால்
வீட்டு முத்தத்தை சுற்றி
மூன்றரை கிலோ மீட்டர்
தினமும் உடல் இளைக்க ஓடனும் என
இறுக்க கண்டிசன் கொடுத்தார்!
தாட்சா தந்த தவிப்பு
எனை வாட்ட - எனை பெத்த
ஆத்தா தந்த உணவின் பாரம்
உடலில் எடையை கூட்ட
மெலியும் வெறியில் ஓடத் தொடங்கினேன்!
முதுகில் வலி பிடிக்க முனகி அழுதேன்!
பொண்ணுங்களை கண்டால் சைட்
அடிக்க கண்களை சிமிட்டிடும்
ஆசையில் நிமிர்ந்து பார்த்தால்
ஆசையில் நிமிர்ந்து பார்த்தால்
கன்றாவியான என் "பாடி" பார்த்து
கேடியாய் சிரிக்கிறாளுங்க!
என்றோ ஒரு நாள்
ஒல்லியாய் வருவேன் - என
நன்றாய் நம்பி நானும்
ஒல்லியாய் வருவேன் - என
நன்றாய் நம்பி நானும்
ஓடி வருகிறேன் தினமும்!
ஐயோ என்னைப் பார்க்க
எனக்கே அசிங்கமாய் இருக்கென
அழுது கவிதை வடிக்கிறேன்
நாள் முழுதும்!
நாள் முழுதும்!
பிற் சேர்க்கை: இக் கவிதையானது பேச்சுத் தமிழ் கலந்து எழுதப்பட்ட ஒரு வசன கவிதையாகும்.
************************************************************************************************************************
உங்களுக்கும் உடம்பு ஊதிப் பெருத்து விட்டது என்று கவலையா? ஸ்லிம் ஆக முடியலையே என்று வருத்தமா? இந்தக் கவலைகளைப் போக்கிட நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை வித்தியாசமான டேஸ்ட்டில் செய்து உண்பதற்கு ஏதுவாக உங்கள் அனைவரையும் இன்றைய தினம் சமையல் எக்ஸ்ப்ரஸ் வலைத் தளத்திற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன். எல்லோரும் தயாரா? அக்காச்சி "ஆமினா" அவர்கள் தன்னுடைய "சமையல் எக்ஸ்ப்ரஸ்" வலைப் பதிவில் பல புது வகையான சமையல் ரெசிப்பிகளைப் பகிர்ந்து வருகின்றார்.
ஆமினா அக்காவின் சமையல் எக்ஸ்ப்ரஸ் வலைப் பதிவிற்குச் செல்ல:
*************************************************************************************************************************
|
134 Comments:
Nanba..... :)
Niruban-nale anbu
surakkuthappa....
ஹி ஹி ஹி ஹி வணக்கம் குண்டா! என்ன கவிதை தூள் கிளப்பியிருக்கிறாய்? காட்டான் அண்ணை பார்த்த அந்த ஃபிரான்ஸ் மாப்பிள்ளை நான் தான்!
ஹி ஹி ஹி ஹி கிளியை வளர்த்து பூனையிடம் குடுக்கிறதுபோல என்று சொல்வார்கள்!
ஆனால், என்னைக் கட்டிக் கொடுப்பதன் மூலம் ஒரு கரடியிடம் அல்லவா கொடுக்கப் போகிறார்கள்!
அடடா வடை மிஸ்ஸிங்....
மச்சி, நீ குண்டப்பன் தான்! ஆனால் உன்னைக் கழட்டி விட்டுட்டு, இப்ப வெளிநாட்டு மாப்பிள்ளை என்னிடம் வரப் போறாள்! வரட்டும்! வரட்டும்!!
நான் அவளை எப்படி வைச்சிருப்பன்? என்பதை கீழே எழுதுகிறேன் பார்!
அழகான சொல்வளத்தில் கவிதை அருமை...!!!
அவள் வந்ததும் வராததுமாய், “ ஊரிலை யாரையாவது லவ் பண்ணினியா? குழந்தை கிழந்தை ஏதாவது வந்து அழிச்சியா? வவுனியா முகாமில் இருந்தியா? அப்படியானால் ஆமி கை வைக்கலியா? என்று விசாரணை வைத்து, கேள்வி கேட்டே கொல்லுவேன்!
நடத்துங்க ஹிஹி!
வீட்டை விட்டு வெளியால போக விட மாட்டேன்! எழுத்து எழுதாமலேயே கூட்டிக் கொண்டு போய் வைச்சிருப்பன்! 3 குழந்தைகள் குறுகிய காலத்துக்குள் பெறுவேன்!
அப்பத்தான் அவளுக்கு குழந்தைகளோடு பொழுது போகும்! வீட்டுக்குள் அடங்கிக் கிடப்பாள்!
வருஷத்தில் ஒரு முறை மட்டும் லா சப்பல் தேருக்கு கூட்டிக் கொண்டு போவன்! அங்கேயும் சுதந்திரமா விட மாட்டேன்! கண்காணிச்சுக்கொண்டே இருப்பேன்!
அவளை ஜீன்ஸ் போட விட மாட்டேன்! பஞ்சாபி அல்லது சாரிதான் உடுக்க வேண்டும்! நான் மட்டும் ஜீன்ஸ் போடுவேன்!
கடும் குளிர் காலத்திலும் சுடிதார்தான் அவள் போட வேண்டும்! ஜீன்ஸ் போட விட்டால், அவள் என்னை மதிக்க மாட்டாள்!
நல்லா மூக்கு முட்டக் குடிச்சுப் போட்டு, நாறல் வாயோடு அவளுக்கு கிட்ட போவன்! அவள் கொஞ்சம் அருவெருப்புக் காட்டி தள்ளிப் போனால், “ ஓமடி ஓமடி நீ ஊரில ஆடின ஆட்டம் எனக்குத் தெரியாது எண்டு நினைச்சியே? அங்க எல்லாத்தையும் பார்த்திட்டுத்தானே வந்தனி! அதுதான் என்னைய வேண்டாம் எண்டு சொல்லுறாய்! உங்களுக்கடி கொழுப்பு முத்திப் போச்சு!
நாயே, என்னையக் கலியாணம் கட்டாட்டி, உங்களுக்கெங்கடி வெளிநாடு தெரியப் போகுது? “ என்று வாய்க்கு வந்தபடி திட்டுவேன்!
இந்த நாட்டுச் சட்டங்களைத் தெரிந்துகொள்ளவோ, ஃபிரெஞ்சு பாஷை படிக்கவோ அனுமதிக்க மாட்டேன்! ஒரு வேளை அவளுக்கு என்னை விட பாஷை தெரிந்தால், பிறகு அவள் என்னைய மதிக்க மாட்டாள்! அதோட அவள் யாரோடையாவது டெலிஃபோன் கதைச்சாலும் எனக்கு விளங்காதுதானே!
அப்புறம் இந்த நாட்டுச் சட்டங்கள் தெரிந்தால், ஒரு வேளை நான் அவளைக் குடிச்சுப்போட்டு அடிக்கும் போது அவள் போலீசுக்கு ஃபோன் பண்ணிடுவாள்! அப்புறம் என்னைக் கொண்டுபோய் ஜெயிலுக்குள் போட்டுவிடுவார்கள்!
அதனால் அவளை ஒண்டுமே தெரியாத மொக்காகவே வைத்திருப்பேன்!
மச்சி, எனக்கும் அரைகுறை ஓட்டைப் ஃபிரெஞ்சுதான் தெரியும்! அதாவது போஜூர் என்பதை மூஜூ என்றும், போஜுவார் என்பதை மூசுவார், என்றும் நாதாரித்தனமாக சொல்லிக் கொடுப்பேன்!
இண்டெர்நெட் பார்க்க விடமாட்டேன்! ஒருவேளை இண்டெர்நெட்டுக்களைப் பார்த்து, என்னை விட ஒருத்தன அவளுக்குப் பிடிச்சுப் போச்செண்டா, பிறகு சிக்கல் தானே!
நான் 10 வருஷமா, ஃபிரான்ஸில் இருந்தும் எனக்கு லா சப்பலைத் தவிர வேற ஒரு இடமும் தெரியாது! ஈஃபில் டவரில் ஒரு முறைதன்னும் ஏறியது கிடையாது!
லூவ்ர் மியூசியமோ? அதுக்குப் போனதே கிடையாது! தியேட்டர் எங்க கிடக்கெண்டே தெரியாது!
அப்புறம் வருஷத்தில ஒரு முறை, லூட்ஸ் மாதா கோயிலுக்கு கூட்டிக்கொண்டு போவேன்! பெரும்பாலான தமிழர்களுக்குத் தெரிஞ்ச ஒரே ஒரு சுற்றுலாத்தலம் அது மட்டும் தான்!
அங்க போய், மனிசியோட , பிள்ளையளோட அன்பா, ஜாலியா இருப்பன் எண்டு நினைக்க வேண்டாம்!
“ எடி மூதேசி அங்க என்ன வெள்ளி பார்த்துக்கொண்டு நிக்கிறாய்? வா இஞ்சால” எண்டு ஆக்களுக்கு முன்னால, மதிப்பில்லாமல், காட்டுக் கத்துக் கத்துவேன்!
மச்சி, நிரூ, யாழ்ப்பாணத்திலேயே பெண்கள் எவ்வளவு சுதந்திரமாக இருக்கினம்! ஆனா, இஞ்ச வெளிநாட்டில்தான் கண்டறியாத கலாச்சாரம், கத்தரிக்காய் எண்டு, கதைப்போம்!
அதோட, ஊரில இல்லாத அளவுக்கு சாதிக்கதைகளும், விசர்க்கதைகளும் கதைப்போம்!
நிரூ, உன்னைய வேண்டாம் எண்டு சொல்லிவிட்டு, வெளிநாடு பார்க்கிற ஆசைல இஞ்ச வாரட்டும்! நானும் குண்டன் தான்! வண்டியும் தொந்தியும் இருக்கு!
ஆனால் அவள் அதை சகிச்சுத்தான் ஆகணும்! ஏனெண்டா நான் வெளிநாட்டு மாப்பிள்ளை!
மேலும் கடந்த 10 வருஷமா, உள்ள நாட்டுக் கறுப்பியள், அடைச்சியள் எண்டு ஒருத்தியையும் விட்டு வைக்காமல் மேய்ஞ்சுகொண்டு திரிஞ்சனான் தானே!
அதால மனிசிக்கும் கண்டபடி சுதந்திரம் கொடுக்கமாட்டேன்! பிறகு அவளும் கறுவலோட,போயிடுவாள் எண்டு வக்கிரமா நினைச்சுப் பார்ப்பன்!
மச்சி, இதுமாதிரி இன்னும் நிறைய இருக்கு! வெளிநாடுகளில், மேற்கு நாடுகளில் வாழ்வதற்கு ஒரு தகுதியும், தகைமையும் வேணும்!
அது எண்டும் இல்லாத பல ஜென்மங்கள் இஞ்ச இருந்து ஃபிரான்ஸை நாறடிக்குதுகள்!
அவர்களின் நிலையை விளக்கத்தான் இந்தப் பின்னூட்டங்கள்!
இதை, வெளிநாட்டு மாப்பிள்ளைதான் கிடைக்க வேணும் எண்ட தியானத்தில இடது கையில கௌரிக்காப்பும், வலது கையில் வரலட்சுமி காப்பும் கட்டிக்கொண்டு, “ ஊரில இருக்கிற பெடியள் எல்லாம் உதவாக்கரையள் எண்டும்! ஏதோ வெளிநாட்டு மாப்பிள்ளையள் மட்டும்தான் திறம் எண்டும் நினைச்சுக்கொண்டு, கனவுகாணும் எங்கள் ஊர்பெண்களும், தாய் தேப்பனும் இந்தப் பதிவைப் படிக்கட்டும்!
இனியாவது திருந்தித் தொலைக்கட்டும் !
மச்சி, ஒரு உண்மை சொல்லட்டுமா? வெளிநாடுகளில் இருக்கும் எல்லோரும் அப்படி இல்லைத்தான்!
அதேசமயம், இங்கு ஏனைய தமிழர்களோடு ஒட்டிவாழாமல், லா சப்பல், லா கூர்னேவ் போன்ற தமிழர்களின் இடங்களுக்குப் வருடக்கணக்கில் போகமாலும் தமிழர்கள் வாழ்கிறார்கள்!
அவர்கள் நன்கு படித்தவர்களாகவும், நாகரிகம் தெரிந்தவர்களாகவும் இருப்பார்கள்!
என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை! நானும் இங்கு பெரும்பாலும் ஃபிரெஞ்சு நண்பர்களுடனேயே பழகுகிறேன்!
நமது குழும நண்பர்கள் தவிர்த்து ஃபிரான்ஸில் வேறு நண்பர்கள் கிடையாது!
இது நல்லதோ கெட்டதோ தெரியவில்லை!
avvvvvvvvvvvvvvvv mee da firstu:)))
தலைப்பைப் பார்த்ததும் பதறியடிச்சு ஓடிவந்தேன்:))) என்னாச்சு நிரூபன், பூனை கீனை ஏதாவது கீறி அசிங்கப்படுத்திட்டுதோ?:)))
///ஹி ஹி ஹி ஹி வணக்கம் குண்டா!//
என்னாது நிரூபன் குண்டோ?:))) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) நான் ஒரு மெல்லிய தம்பியாகவெல்லோ கற்பனை பண்ணி வச்சிருக்கிறேன்:))))
//உங்களுக்கும் உடம்பு ஊதிப் பெருத்து விட்டது என்று கவலையா? ஸ்லிம் ஆக முடியலையே என்று வருத்தமா? இந்தக் கவலைகளைப் போக்கிட//
நிரூ உனக்கே இது ஓவரா இல்லையா?!! ஹி...ஹி...ஹி....
அறிமுகபடுத்தியதற்கு நன்றி தம்பி
//என்னாது நிரூபன் குண்டோ?:))) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) நான் ஒரு மெல்லிய தம்பியாகவெல்லோ கற்பனை பண்ணி வச்சிருக்கிறேன்:))))//
குண்டன்னு சொன்னாலே சண்டைக்கு போவாக! நிரூ ஹீரோ மாதிரி தான் இருப்பாக!
நிரூபன் ஐடியா மணியைப் பிடிச்சு வாங்க ஒருக்கால், எதுக்கோ?:)) தேம்ஸ்ல தள்ளிவிடப் போகிறேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).
நில்லுங்க இனித்தான் கவிதை படிக்கப்போறேன்:)).
//“ ஊரில இருக்கிற பெடியள் எல்லாம் உதவாக்கரையள் எண்டும்! ஏதோ வெளிநாட்டு மாப்பிள்ளையள் மட்டும்தான் திறம் எண்டும் நினைச்சுக்கொண்டு, கனவுகாணும் எங்கள் ஊர்பெண்களும், தாய் தேப்பனும் இந்தப் பதிவைப் படிக்கட்டும்!
இனியாவது திருந்தித் தொலைக்கட்டும் !//
வாழைபழத்தில் ஊசி ஏற்றுவது இது தான் :-)
ஆ.... வாழ்த்துக்கள் ஆமினா...
நான் நிரூபன் கறுப்பெனக் கற்பனை பண்ணி வச்சிருக்கிறேன்... அதோட குண்டும் என்றால் எப்பூடி இருப்பார்..... ஒரு கண்ணை மட்டும் மூடிக் கற்பனை பண்ணினேன் சகிக்கல்ல சாமீஈஈஈஈஈஈஈ ... மீ எஸ்ஸ்ஸ்ஸ்:))).
@athira
//
நில்லுங்க இனித்தான் கவிதை படிக்கப்போறேன்:)). //
அடக்கொடுமையே.....
சுத்தியே சுத்தினாலும் நிரூபனின் அடி உதை எல்லாம் வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்குத்தான் அவ்வ்வ்வ்வ்வ்வ்:))))... ஏன் நிரூபன் இந்தக் கொலை வெறி?...
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று...
அதை மாற்ற முடியாது நிரூபன்...
உங்களுக்காகப் பிறந்தவ, இப்போ அவவும் வெளிநாட்டு மாப்பிள்ளை வாணாம், உள்ளூர் உத்தியோக மாப்பிள்ளை, அதுவும் “புளொக்” வைத்திருக்கும் மாப்பிள்ளைதான் வேணும் என ஒற்றைக்காலில நிற்பா...:))).. கால நேரம் பொருந்தி வரும்போது, நிரூபனின் வாசல் கதவு மணி அடிக்கும்:)))... அது நாளை காலையாகக்கூட இருக்கலாம் எதுவும் சொல்றதுக்கில்லை.
ஊசிக்குறிப்பு:
எனக்குக் கரி நாக்காக்க்கும், சொல்றது பலிக்கும்...:))))
நான் இன்னும் கவிதை படிக்கல்ல, ஐடியாமணி அங்கிளின் (ஒரு ஃபுளோல வந்திட்டுது விட்டிடுங்க:)))பின்னூட்டத்தையும் ஆமினாவின் பின்னூட்டத்தையும் மட்டும் படிச்சிட்டு, நான் பின்னூட்டிக்கொண்டிருக்கிறேன்:))) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).
எனக்கு இந்தக்கவிதையை விட மச்சான் சார் ஜடியாமணியின் கமண்ட் ரொம்ப புடிச்சிருக்கு....
////இங்கே இருக்கும் வரைக்கும்
டைம்பாஸிற்காய் உன்னை
வைத்து டாவடித்தேன்,
இப்போ எனக்கு வெளிநாடு செல்ல
இறக்கை முளைத்ததால்
போடா வெண்ணெய் என
விலகிச் செல்கிறேன் /////
இப்படி பல பொண்ணுங்களை நானும் இங்கே பார்த்திருக்கின்றேன்
//என்னைப் பார்க்க எனக்கே
அசிங்கமாய் இருந்திச்சு!
காலையில் அம்மா அவித்து
ஆசையாய்
கனக்க இல்லை
இது கொஞ்சம் என சொல்லித் தரும்
ஒரு நீத்துப் பெட்டி பிட்டு! ///
ஹா..ஹா...ஹா.....:)))
//என்றோ ஒரு நாள்
ஒல்லியாய் வருவேன் - என
நன்றாய் நம்பி நானும்
ஓடி வருகிறேன் தினமும்!
ஐயோ என்னைப் பார்க்க
எனக்கே அசிங்கமாய் இருக்கென
அழுது கவிதை வடிக்கிறேன்
நாள் முழுதும்!//
எல்லாம் கால்கட்டுப் போடும்வரைதான்:))), பின்னர் ஆரும் உடம்பைப் பற்றிக் கவலைப்படுவதில்லை:))))
வணக்கம் நிரூபன்
அட பொடிபயலே இப்படி கணனிக்கு முன்னால சிப்ஸ் பாக்கற்றை கையில வைச்சுக்கொண்டு கவிதை எழுதினால் உனக்கு என்னன்னு பொட்டைய கொடுக்கிறதுன்னுதான் யோசிச்சன் மற்றவங்களுக்கு பிளாக அறிமுகபடுத்துவதை விட்டுட்டு முதல்ல அமினாவின் பிளாக்கில் உடம்பு மெலிய ஏதாவது உணவுகள் இருக்கான்னு தேடு..ஹி ஹி
அமினாவுக்கு வாழ்த்துக்கள்..
சரி இதுக்கு மேலயும் இங்கின நிண்டனெண்டால் ஓவராக் கதைச்சு:))).. வீண் வம்பை விலைக்கு வாங்கிடுவேன், எனக்குப் பிடிச்ச தலைப்பெனில்... அதிகம் வாய் கதைக்கும், இருப்பினும் அட்ட்ட்ட்டக்கி வாசிக்கிறேன்.. இத்தோடு மீ எஸ்ஸ்ஸ்ஸ்... டிங்....டிங்...டிங்/////
//எனக்குக் கரி நாக்காக்க்கும்,//
அச்சச்சோ... இப்படி வாய் பேசுற பொண்ணோட நாக்கையா தீயில் போட்டு கரியாக்கிட்டாங்க... அடக் கொடுமையே...!!!!
ஐயையோ, இந்த களேபரத்தில், சகோதரி ஆமினாவுக்கு வாழ்த்து சொல்ல மறந்துவிட்டேன்! ஸாரி!
சகோதரி, உங்கள் வலையுலக பயணம் சிறப்பாக அமைய வேண்டுமென வாழ்த்துகிறேன்!
உங்களுக்கு என்னுடைய பிந்திய, ஈத்-உல் அல்ஹா! வாழ்த்துக்கள்!
டேய் மணி உன்ன நம்பி அந்த பொட்டைய கூப்பிடப்பார்த்தேனே என்னை செருப்பால் அடிக்கோனும்,. ஹி ஹி ஹி மணி சொல்வதைப்போல்தான் வெளிநாடுகளில் பெண்களை வைத்திருக்கிறார்கள் அதிகமான ஆண்கள் அதற்காகதான் நான் வெளிநாட்டு மோகத்தை சாடி பின்னூட்டமிடுவது இதில வேற இஞ்ச பிறக்கிற பொடியங்களையும் பிற்போக்குதனமாகதான் அதிக பெற்றோர்கள் வளர்கிறார்கள் இது எங்கே போய் முடியுமோ...!!!??
டேய் மணி உன்ன நம்பி அந்த பொட்டைய கூப்பிடப்பார்த்தேனே என்னை செருப்பால் அடிக்கோனும்,./////
ஹி ஹி ஹி ஹி அண்ணர், எனக்கு பொம்பிளை பார்க்க உங்களால முடியாது! எனக்கு கலியாணத்துக்கு பிறகு என்னைய லவ் பண்ணுற பொண்ணுதான் வேணும்!
சரி சரி நேரம் போச்சு! Out of Paris போகிறேன்! பிறகு வாறன்!
ஆதிராவுக்கும், மச்சான் சாருக்கும் நன்றிகள்!
@காட்டான் அண்ணா
//அமினாவின் பிளாக்கில் உடம்பு மெலிய ஏதாவது உணவுகள் இருக்கான்னு தேடு..ஹி ஹி //
ஹி...ஹி...ஹி.. தேடுனாலும் கெடைக்காது :-)
எல்லாமே எல்லாரையும் என்னை மாதிரி ஆக்கும் முயற்சியில் உருவானவை ஹி..ஹி....ஹி....
நீங்க வேணுக்கும்னே என்னைய வம்பு பண்றீங்கண்ணா.... அமினா இல்ல... ஆமினா
எங்கே ச்சொல்லுங்க
ஆ........மி............னா
ஆமினா
ம்
ரைட்டு :-)
@Powder Star - Dr. ஐடியாமணி
:-)
மன்னிசுட்டேன் ;-)
நன்றி சகோ...
வளமான வாழ்க்கை அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
கவிதையில் ஒரு கதை .. சூப்பர்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))
ஆமினாவை.... “அ”மினா என்கிறார்கள்...:)))
அதிராவை..... “ஆ”திரா... என்கிறார்கள்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))))...
இந்த அ ந, ஆ...வன்னாக்கொயப்பமே இன்னும் தீரல்ல... அதுக்குள்ள என்னவோ எல்லாம் தெரிஞ்சாக்கள் மாதிரி கதைவேற:))))..
தேம்ஸ்ஸ்ஸ்ஸ் வெயார் ஆ யூஊஊஊஊஊஊஊஉ:)))))))
இன்றைய ஸ்பெஷல்
Hamster Video Converter – ஒரு பயனுள்ள மென்பொருள் உங்களுக்காக
வாழ்த்துக்கள் ஆமினாவுக்கு
இம்மாம் பெரிய கவிதையைப் படிக்க நாலு நாள் ஆவும் போல.
ரொமாண்டிக்கா போன கவிதை
தோல்வியில முடிஞ்சது...
வருத்தம்தான் ஏன்னா நான் உங்களை
ஒல்லியாக இருப்பீர்கள் என நினைத்தேன்
ஹலோ... மணி உமக்கு கல்யாணமே ஆகாதுய்யா...இப்படி பப்ளிக்ல சொன்னா எவனும் பொண்ணுதரமாட்டான்...
நான் 10 வருஷமா, ஃபிரான்ஸில் இருந்தும் எனக்கு லா சப்பலைத் தவிர வேற ஒரு இடமும் தெரியாது! ஈஃபில் டவரில் ஒரு முறைதன்னும் ஏறியது கிடையாது!
லூவ்ர் மியூசியமோ? அதுக்குப் போனதே கிடையாது! தியேட்டர் எங்க கிடக்கெண்டே தெரியாது!
அப்புறம் வருஷத்தில ஒரு முறை, லூட்ஸ் மாதா கோயிலுக்கு கூட்டிக்கொண்டு போவேன்! பெரும்பாலான தமிழர்களுக்குத் தெரிஞ்ச ஒரே ஒரு சுற்றுலாத்தலம் அது மட்டும் தான்!
அங்க போய், மனிசியோட , பிள்ளையளோட அன்பா, ஜாலியா இருப்பன் எண்டு நினைக்க வேண்டாம்!
“ எடி மூதேசி அங்க என்ன வெள்ளி பார்த்துக்கொண்டு நிக்கிறாய்? வா இஞ்சால” எண்டு ஆக்களுக்கு முன்னால, மதிப்பில்லாமல், காட்டுக் கத்துக் கத்துவேன்!
November 8, 2011 4:07 PM
ஹி ஹி ஹி மணி நீ சொல்லுறதபோல இஞ்ச அதிகமானவர்கள் இருக்கிறார்கள்தான் அத்தோட அவங்க பிள்ளைகளை ஒரு இடமும் கூட்டிக்கொண்டு போகாததில அந்த பிள்ளைகளும் பள்ளிக்கூடத்தில மன உழைச்சலுக்கு ஆளாகுறாங்க இஞ்ச ஒரு பள்ளிக்கூட லீவு முடிந்தவுடன் மீண்டும் பள்ளிக்கூடம் செல்லும்போது அங்கு வாத்திமார் எல்லோரின் முன்னிலையிலும் கேட்பது உங்கள் வைகேசன் அனுபவங்களை சொல்லுங்கோன்னுதானே.. பெற்றோர்கள் நகைக்கும் ஊருக்கும் அனுப்புறகாசில கொஞ்சத்த பிள்ளைகளை சுற்றுலாவுக்கு அழைத்து செல்வதற்கும் செலவு செய்யலாம்..
சகோதரி ஆமினா.. இப்ப சரியாம்மா.
அம்மா நான் காட்டானுங்க எனக்கு அவும் ஆவன்னாவும் ஒன்னுபோல இருக்குதம்மா....(அப்பாடா காட்டான்னு பேர என்ர ஆச்சி வைச்சதால ஆமினாவிட்ட இருந்து தப்பிச்சாச்சு...ஹிஹி)
காலையில் இலையோடு சேர்ந்த கஞ்சி
மதியம் கொஞ்சூண்டு சோறும்
சத்தான புரோட்டின் கலந்த உணவும்;
இரவினில் லைட்டாக சாப்பிட்டு
இரண்டு ரவுண்டு ஓடவும் வேண்டும் என்றார்!
இத்தோடு நிறுத்தாதேம் நிரூபன்..
அது சரி நிரூபன் இதையெல்லாம் சாப்பாட்டுக்கு முன்னமா? இல்ல சாப்பாட்டுக்கு பிறகா சாப்பிடோனும்.. ஏன்னா எனக்கும் வண்டி(தொப்பை)இருக்கே சரியா விசாரிச்சு சொல்லுங்கோ..!!!!!???
நான் 10 வருஷமா, ஃபிரான்ஸில் இருந்தும் எனக்கு லா சப்பலைத் தவிர வேற ஒரு இடமும் தெரியாது! ஈஃபில் டவரில் ஒரு முறைதன்னும் ஏறியது கிடையாது!
ஹி ஹி ஹி மணி இப்ப என்னை மாதிரி பழசுங்க சிலபேரு உததான் சொல்லிக்கொண்டு திரியுறாங்க நான் வந்து பத்து வருசம் இருவது வருசம்ன்னு அந்தகாலத்திலேயே நிக்கிறாங்க.. அவங்களும் கொஞ்சம் அப்லேட் செய்யனும் அடிக்கடி முந்தினமாதிரி இல்ல இப்ப நாடு..!!
வசன கவிதையில் ஒரு வாழ்க்கையைவே சொல்லிட்டீங்களே நிரூ..
சகோதரி ஆமினாவின் அறிமுகத்திற்கு நன்றி.
நிரூ...காட்டான் எப்போ கல்யாண புரோக்கர் ஆனார்?அவர் போன் நம்பரையும் பதிவில போட்டுவிடுங்கோ.உதவியாயிருக்கும் எல்லாருக்கும் !
கருங்குரங்கு,படவா,ராஸ்கல்,கள்ளன், மடையன்.....தாங்கமுடியுதா....!
நல்ல கவிதைப் பாடல்
த.ம 7 மற்றவையும்
//ஹி ஹி ஹி மணி நீ சொல்லுறதபோல இஞ்ச அதிகமானவர்கள் இருக்கிறார்கள்தான் அத்தோட அவங்க பிள்ளைகளை ஒரு இடமும் கூட்டிக்கொண்டு போகாததில அந்த பிள்ளைகளும் பள்ளிக்கூடத்தில மன உழைச்சலுக்கு ஆளாகுறாங்க இஞ்ச ஒரு பள்ளிக்கூட லீவு முடிந்தவுடன் மீண்டும் பள்ளிக்கூடம் செல்லும்போது அங்கு வாத்திமார் எல்லோரின் முன்னிலையிலும் கேட்பது உங்கள் வைகேசன் அனுபவங்களை சொல்லுங்கோன்னுதானே.. பெற்றோர்கள் நகைக்கும் ஊருக்கும் அனுப்புறகாசில கொஞ்சத்த பிள்ளைகளை சுற்றுலாவுக்கு அழைத்து செல்வதற்கும் செலவு செய்யலாம்..///
இந்தக் குழையை நானும் ஆமோதிக்கிறேன். எங்கட சனத்தில பலபேர், இருவரும் இரவும் பகலுமாக உழைத்து பொத்திப்பொத்தி மிச்சம் பிடிக்கினம், சிலர் ஒழுங்கான உடுப்புப் போடுவதில்லை, சிலருக்கு வீட்டுச் சாப்பாடு தவிர வெளிச்சாப்பாடு, இங்கத்தைய உணவேதும் தெரியாது, ஏனெண்டால் காசு சிலவழிஞ்சுபோகுமாம்.
என் நண்பி சொன்னார், தனக்குத் தெரிந்த ஒரு குடும்பம் அவுஸ்திரேலியாவில இருக்கினமாம். அவர்கள் விடுமுறையில் தங்கள் குழந்தைகளை பக்கத்து ஊருக்குக் கூட்டிப்போய் வந்துவிட்டுச் சொல்லிக் கொடுப்பார்களாம், வேறு ஒரு நாட்டின் பெயரை, ரீச்சர் கேட்டால் இப்பெயரைச் சொல்லுங்கோ என.
ஊருக்கும் கொடுக்கத்தான் வேணும் நகையும் வாங்கத்தான் வேணும், பாங்கிலயும் மிச்சம் பிடிக்கத்தான் வேணும், ஆனா தின்னாமல் குடிக்காமல் எந்த சந்தோசத்தையும் அனுபவிக்காமல் காசு சேர்த்து என்னத்தைக் காணப்போகினம்?
உண்ணாச் சொத்து மண்ணாப்போகும். இண்டைக்கு இருக்கிறம் நாளைக்கு ஒரு ஆக்ஷிடண்ட்டில பொசுக்கெனப் போயிட்டால் கண்ட மிச்சம் என்ன? எதுவும் நம் கையில் இல்லையே, இருக்கும்வரை கொஞ்சமாவது சந்தோசமாக எல்லோரையும்போல அனுபவிக்கலாமே. பாங்கில சேர்த்து என்ன காணப்போகிறோம்.
பிள்ளைகளுக்கும் எந்த வயதில் என்ன தேவையோ, அந்த வயதிலதான் அதுக்கு ஆசைப்படுவார்கள், அதை நிறைவேத்திட வேணும், 3,4 வயதில் பொம்மை கேட்பார்கள், பின் கேம்ஸ்.... பின்பு ஊர் பார்த்தல்... ஒவ்வொரு வயதிலும் ஆசை ஒவ்வொரு விதமாக இருக்கும். 20 வயதானால் பெற்றோர் வேண்டாம் நண்பர்களோடு போகிறோம் எனச் சொல்லத்தொடங்கிடுவார்களே... அப்போ அதுவரைக்கும் எம்மாலானதைச் செய்யலாமே.
4 வயதில் கொடுக்காத பொம்மையை, 20 வயதில் கொடுத்தாலும், பிள்ளை வாங்காதே.
//கன்றாவியான என் "பாடி" பார்த்து
கேடியாய் சிரிக்கிறாளுங்க!//
இத்துதான் கல்யாணத்துல பிரச்சினையா?
குரக்கன் பிட்டுன்னா என்ன?
அடுத்து என்னதான் சொன்னாலும் நிரூபன். வெளிநாட்டில பெண்களுக்கு சுகந்திரம் அதிகமே.
ஊர் மாப்பிள்ளையை விட வெளிநாட்டில, மனைவிக்கு அதிகம் சுகந்திரம் கொடுக்கும் கணவன்மாரைத்தான் நான் காண்கிறேன்.
அப்பன் வெட்டிய கிணறு என்பதற்காக உப்பு நீரையே குடித்துக்கொண்டிருக்கும் சில ஞானக்குருடர்கள், ஆயிரத்தில் ஒன்றாக எங்காவது இருக்கலாம்தான், இல்லையல்ல.
ஆனாலும் மஜோரிட்டி எனப் பார்க்கும்போது நல்ல மாப்பிள்ளைகளையே நான் பார்க்கிறேன்.
வீட்டு வேலையில் சரிசமனாகப் பங்கெடுக்கிறார்கள். வெளியே போய் வந்தால் மனைவிக்கு ரீ ஊத்திக் கொடுக்கிறார்கள், உடம்பு முடியவில்லையாயின் சமைக்கிறார்கள்.
மனைவியை ஊருக்கு அல்லது வேறு ஏதாவது அவசர அலுவலாகப் போக வந்தால், அனுப்பிவிட்டு, தாமே வீட்டையும் குழந்தைகளையும் சமையலையும் கவனிக்கிறார்கள். இப்படி இன்னும் நிறையவே சொல்லலாம்.
எம் இப்போதைய தலைமுறை நன்றாகத்தான் இருக்கிறார்கள். நான் பார்த்த பழகிய அறிந்த எத்தனையோ குடும்பக்களுக்குள் ஒரே ஒருவர் மட்டும், உதவாக்கரையாக இருக்கிறார், மனைவியை அடிக்கிறாராம், உடுப்பு வாங்கிக் கொடுப்பதில்லை, வீட்டுப்பொருட்கள் வாங்க தான் மட்டுமே மார்கட்டுக்குப் போவது... ஆனா கார் ஓடப் பழக்கியிருக்கிறார் மனைவிக்கு. நாம் நினைப்பதுண்டு அவர் ஒருவேளை கொஞ்சம் மனநிலை பாதிக்கப்பட்டவரோ என.
மனைவி சொல்கிறா, விட்டுவிட்டுப் போய்விடலாம், ஆனால் 3 குழந்தைகள் அவர்களுக்கு அப்பா வேண்டும் என்பதற்காக பொறுத்துப் போகிறேன் என. அவவுக்கும் எம் வயதுதான்.
இப்படிப்பட்ட திருந்தாத, திருத்த முடியாத ஜென்மங்களும் எங்கேயாவது இருக்கிறார்கள்தான், ஆனால் அதுக்காக ஒட்டுமொத்த வெளிநாட்டு மாப்பிள்ளையும் கெட்டதென முடிவெடுப்பது தவறு.
உஸ்ஸ்ஸ் அப்பா நிறைய எழுதிட்டேனாக்கும்.... பயம்மாக்கிடக்கு நான் ஓடப்போகிறேன்.. மீஈஈஈஈஈஈஈஈ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)).
சகோதரி ஆமினா அவர்களது சமையல் எக்ஸ்பிரஸ் வலைப்பூவிற்கு வாழ்த்துக்கள்...!
காட்டான் மாம்ஸ் என்னை தான் மாப்ளை என்று சொல்வார்... சோ எனக்குதான்... ஹி ஹி
வசன கவிதை கலக்கல் பாஸ்...
குண்டு கவிதை கலக்கல்...பொருத்தமாய் ஒல்லி(?) சமையல் அறிமுகம் பலே...
உங்கள் ஆரம்ப கால கவிதைகளில் இருந்து இப்போது நிறைய மாற்றம்...
வைரமுத்து இதே பாதையில் தான் நகர்ந்தார்...அவர் தான் உங்களுக்கு முன்மாதிரியா?
//shanmugavel said...
குரக்கன் பிட்டுன்னா என்ன//
இந்தியாவில் இதனை ராகிப் புட்டு என்பார்கள்.
// மாய உலகம் said...
காட்டான் மாம்ஸ் என்னை தான் மாப்ளை என்று சொல்வார்... சோ எனக்குதான்... ஹி ஹி///
என்னாது மாப்பிள்ளையிலும் போட்டியா?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))
@NAAI-NAKKS
Nanba..... :)
//
நன்றி அண்ணே.
@NAAI-NAKKS
Niruban-nale anbu
surakkuthappa....
//
நெசமா சொல்லுறீங்க.
ரொம்ப நன்றி அண்ணே.
@Powder Star - Dr. ஐடியாமணி
ஹி ஹி ஹி ஹி வணக்கம் குண்டா! என்ன கவிதை தூள் கிளப்பியிருக்கிறாய்? காட்டான் அண்ணை பார்த்த அந்த ஃபிரான்ஸ் மாப்பிள்ளை நான் தான்!
ஹி ஹி ஹி ஹி கிளியை வளர்த்து பூனையிடம் குடுக்கிறதுபோல என்று சொல்வார்கள்!
ஆனால், என்னைக் கட்டிக் கொடுப்பதன் மூலம் ஒரு கரடியிடம் அல்லவா கொடுக்கப் போகிறார்கள்!
//
கொய்யாலே...
கவிதையில சுதி ஏத்துறதுக்காக குண்டன் என்று எழுதினால் என்னையை குண்டன் ஆக்கிடுறதா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அப்ப்ப்ப் பொண்ணோட கதி குரங்கின் கையில் பூமாலை கொடுத்த மாதிரித் தான்..
@MANO நாஞ்சில் மனோ
அடடா வடை மிஸ்ஸிங்....
//
அண்ணே, விடுங்க, இன்னோர் நாளைக்கு கண்டிப்பா வடை கிடைக்கும்.
@Powder Star - Dr. ஐடியாமணி
மச்சி, நீ குண்டப்பன் தான்! ஆனால் உன்னைக் கழட்டி விட்டுட்டு, இப்ப வெளிநாட்டு மாப்பிள்ளை என்னிடம் வரப் போறாள்! வரட்டும்! வரட்டும்!!
நான் அவளை எப்படி வைச்சிருப்பன்? என்பதை கீழே எழுதுகிறேன் பார்!
//
அப்பாடா...ஏதோ என் தலை தப்பித்து விட்டதே என்று இப்பத் தான் நிம்மதி மச்சி.
@MANO நாஞ்சில் மனோ
அழகான சொல்வளத்தில் கவிதை அருமை...!!!
//
நன்றி மனோ அண்ணா.
@Powder Star - Dr. ஐடியாமணி
அவள் வந்ததும் வராததுமாய், “ ஊரிலை யாரையாவது லவ் பண்ணினியா? குழந்தை கிழந்தை ஏதாவது வந்து அழிச்சியா? வவுனியா முகாமில் இருந்தியா? அப்படியானால் ஆமி கை வைக்கலியா? என்று விசாரணை வைத்து, கேள்வி கேட்டே கொல்லுவேன்!
//
அப்போ உங்களை மாதிரி ஆளுங்க வெளிநாடு போனாலும் திருந்தப் போறதில்ல..
அவள் என்னோட இருந்தாலும் நல்லா வாழ்ந்திருப்பாளே!
சே...பாவமா இருக்கு மச்சி தாட்சாவை நினைச்சா.
@Powder Star - Dr. ஐடியாமணி
மச்சி, இதுமாதிரி இன்னும் நிறைய இருக்கு! வெளிநாடுகளில், மேற்கு நாடுகளில் வாழ்வதற்கு ஒரு தகுதியும், தகைமையும் வேணும்!
அது எண்டும் இல்லாத பல ஜென்மங்கள் இஞ்ச இருந்து ஃபிரான்ஸை நாறடிக்குதுகள்!
அவர்களின் நிலையை விளக்கத்தான் இந்தப் பின்னூட்டங்கள்!
இதை, வெளிநாட்டு மாப்பிள்ளைதான் கிடைக்க வேணும் எண்ட தியானத்தில இடது கையில கௌரிக்காப்பும், வலது கையில் வரலட்சுமி காப்பும் கட்டிக்கொண்டு, “ ஊரில இருக்கிற பெடியள் எல்லாம் உதவாக்கரையள் எண்டும்! ஏதோ வெளிநாட்டு மாப்பிள்ளையள் மட்டும்தான் திறம் எண்டும் நினைச்சுக்கொண்டு, கனவுகாணும் எங்கள் ஊர்பெண்களும், தாய் தேப்பனும் இந்தப் பதிவைப் படிக்கட்டும்!
இனியாவது திருந்தித் தொலைக்கட்டும் !
//
அட இங்கப் பார்றா...
செமையான கருத்துக் குத்தெல்லாம் மச்சான் வைச்சிருக்கார்..
@பிரெஞ்சுக்காரன்
மச்சி, ஒரு உண்மை சொல்லட்டுமா? வெளிநாடுகளில் இருக்கும் எல்லோரும் அப்படி இல்லைத்தான்!
அதேசமயம், இங்கு ஏனைய தமிழர்களோடு ஒட்டிவாழாமல், லா சப்பல், லா கூர்னேவ் போன்ற தமிழர்களின் இடங்களுக்குப் வருடக்கணக்கில் போகமாலும் தமிழர்கள் வாழ்கிறார்கள்!
அவர்கள் நன்கு படித்தவர்களாகவும், நாகரிகம் தெரிந்தவர்களாகவும் இருப்பார்கள்!
//
இவர்களைத் திருத்த ஏதாவது ஐடியா இருக்கா?
@athira
avvvvvvvvvvvvvvvv mee da firstu:)))
//
அக்கா நான் வேலையில் பிசியாக இருந்திட்டேன்.
பதிவைப் போட்டு விட்டு மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ச்ச்ச்
@athira
தலைப்பைப் பார்த்ததும் பதறியடிச்சு ஓடிவந்தேன்:))) என்னாச்சு நிரூபன், பூனை கீனை ஏதாவது கீறி அசிங்கப்படுத்திட்டுதோ?:)))
//
ஓம் அக்கா, பிராஞ்சில இருந்து ஒரு பெரிய கிழட்டுப் பூனை ப்ளாக்கில ஓடி வந்து உட்கார்ந்திட்டுது;-)))
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
@ஆமினா
//உங்களுக்கும் உடம்பு ஊதிப் பெருத்து விட்டது என்று கவலையா? ஸ்லிம் ஆக முடியலையே என்று வருத்தமா? இந்தக் கவலைகளைப் போக்கிட//
நிரூ உனக்கே இது ஓவரா இல்லையா?!! ஹி...ஹி...ஹி....
//
என்ன பண்ண,
வியாபாரத்திற்கு அழகு விளம்பரம் தானே!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@ஆமினா
அறிமுகபடுத்தியதற்கு நன்றி தம்பி
//
என்னது நன்றியா?
அது என்ன? இப்போ புதுசா வந்த சாப்பாட்டு ரெசிப்பியோட பெயரா;-)))
@ஆமினா
//என்னாது நிரூபன் குண்டோ?:))) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) நான் ஒரு மெல்லிய தம்பியாகவெல்லோ கற்பனை பண்ணி வச்சிருக்கிறேன்:))))//
குண்டன்னு சொன்னாலே சண்டைக்கு போவாக! நிரூ ஹீரோ மாதிரி தான் இருப்பாக!
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
என் கௌரவத்தைக் காப்பாற்றிய ஆமினா அக்காவிற்கு மிக்க நன்றி.
கவிதையில் ஒரு ரிதம் வரட்டும் என்று தான் கொஞ்சம் பிட்டுப் போட்டு எழுதியது.
@athira
நிரூபன் ஐடியா மணியைப் பிடிச்சு வாங்க ஒருக்கால், எதுக்கோ?:)) தேம்ஸ்ல தள்ளிவிடப் போகிறேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).
நில்லுங்க இனித்தான் கவிதை படிக்கப்போறேன்:)).
//
அவர் கையில வைச்சிருக்கிற குடையால அடிப்பேன் என்று மிரட்டுறார்.
நான் என்ன பண்ண?
@athira
ஆ.... வாழ்த்துக்கள் ஆமினா...
நான் நிரூபன் கறுப்பெனக் கற்பனை பண்ணி வச்சிருக்கிறேன்... அதோட குண்டும் என்றால் எப்பூடி இருப்பார்..... ஒரு கண்ணை மட்டும் மூடிக் கற்பனை பண்ணினேன் சகிக்கல்ல சாமீஈஈஈஈஈஈஈ ... மீ எஸ்ஸ்ஸ்ஸ்:))).
//
அடிங்.............
என்ன நினைச்சு வைச்சிருக்கிறீங்க.
நான் கவிதையில் ரிதம் கூட்டுவதற்காக கொஞ்சம் தாழ்த்தி எழுதினேன்..
அவ்வளவும் தான்
மீ என்றுமே 18
@athira
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று...
அதை மாற்ற முடியாது நிரூபன்...
உங்களுக்காகப் பிறந்தவ, இப்போ அவவும் வெளிநாட்டு மாப்பிள்ளை வாணாம், உள்ளூர் உத்தியோக மாப்பிள்ளை, அதுவும் “புளொக்” வைத்திருக்கும் மாப்பிள்ளைதான் வேணும் என ஒற்றைக்காலில நிற்பா...:))).. கால நேரம் பொருந்தி வரும்போது, நிரூபனின் வாசல் கதவு மணி அடிக்கும்:)))... அது நாளை காலையாகக்கூட இருக்கலாம் எதுவும் சொல்றதுக்கில்லை.
ஊசிக்குறிப்பு:
எனக்குக் கரி நாக்காக்க்கும், சொல்றது பலிக்கும்...:))))
//
அக்கா கடவுள் அமைத்து வைத்த மேடை பாடலை நினைவூட்டியிருக்காங்க. மிக்க நன்றி.
நாளைக்கே பலிச்சாலும் சந்தோசம் தான்.
@athira
நான் இன்னும் கவிதை படிக்கல்ல, ஐடியாமணி அங்கிளின் (ஒரு ஃபுளோல வந்திட்டுது விட்டிடுங்க:)))பின்னூட்டத்தையும் ஆமினாவின் பின்னூட்டத்தையும் மட்டும் படிச்சிட்டு, நான் பின்னூட்டிக்கொண்டிருக்கிறேன்:))) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).
//
அட இது வேற நடந்திச்சா..
அப்போ இப்போவாச்சும் கவிதை படிச்சிட்டீங்களா? இல்லே இப்பவும் பின்னூட்டங்களைப் படிச்சிட்டிருக்கிறீங்களா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@K.s.s.Rajh
எனக்கு இந்தக்கவிதையை விட மச்சான் சார் ஜடியாமணியின் கமண்ட் ரொம்ப புடிச்சிருக்கு....
//
அடடே...அப்போத் தானே உள்ளூரில நல்ல பொண்ணுங்க மாட்டு,
பாருங்களேன் தமிழனோட நல்ல குணத்தை!
@athira
எல்லாம் கால்கட்டுப் போடும்வரைதான்:))), பின்னர் ஆரும் உடம்பைப் பற்றிக் கவலைப்படுவதில்லை:))))
//
அதெல்லாம் இல்ல. எனக்கு எப்பவுமே ஸ்லிம் ஆக இருக்கனும் என்று தான் ஆசை..
அவ்வ்வ்வ்
@காட்டான்
அட பொடிபயலே இப்படி கணனிக்கு முன்னால சிப்ஸ் பாக்கற்றை கையில வைச்சுக்கொண்டு கவிதை எழுதினால் உனக்கு என்னன்னு பொட்டைய கொடுக்கிறதுன்னுதான் யோசிச்சன் மற்றவங்களுக்கு பிளாக அறிமுகபடுத்துவதை விட்டுட்டு முதல்ல அமினாவின் பிளாக்கில் உடம்பு மெலிய ஏதாவது உணவுகள் இருக்கான்னு தேடு..ஹி ஹி
அமினாவுக்கு வாழ்த்துக்கள்..
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அவவோட பெயரை நீங்கள் மாறிச் சொல்லிட்டீங்க.
ஆமினா அக்கா
ஏன் அண்ணே சிப்ஸ் சாப்பிட்டால் கலியாணம் கட்டக் கூடாதென்று விதி முறை இருக்கே?
பேசாம ஓக்கே என்று ஒரு வார்த்தை சொல்லுங்க. ஓடி வாரேன்.
@athira
சரி இதுக்கு மேலயும் இங்கின நிண்டனெண்டால் ஓவராக் கதைச்சு:))).. வீண் வம்பை விலைக்கு வாங்கிடுவேன், எனக்குப் பிடிச்ச தலைப்பெனில்... அதிகம் வாய் கதைக்கும், இருப்பினும் அட்ட்ட்ட்டக்கி வாசிக்கிறேன்.. இத்தோடு மீ எஸ்ஸ்ஸ்ஸ்... டிங்....டிங்...டிங்/////
//
என்ன அக்கா இப்படிச் சொல்லிட்டு எஸ் ஆகிட்டீங்க.
காட்டான் மாம்ஸ் வந்திட்டார் என்று பூசார் பயந்திட்டாரோ.
உங்கள் கருத்துக்களைச் சொல்லியிருக்கலாமே.
@ஆமினா
//எனக்குக் கரி நாக்காக்க்கும்,//
அச்சச்சோ... இப்படி வாய் பேசுற பொண்ணோட நாக்கையா தீயில் போட்டு கரியாக்கிட்டாங்க... அடக் கொடுமையே...!!!!
//
அடடா...இது வேற நடந்திருக்கா..
கரிநாக்கு என்று சொன்னால் நாவூறு அல்லது கண்ணூறு படுற நாக்கு என்று சொல்லுவாங்க ஆமினா அக்கா.
@Powder Star - Dr. ஐடியாமணி
ஐயையோ, இந்த களேபரத்தில், சகோதரி ஆமினாவுக்கு வாழ்த்து சொல்ல மறந்துவிட்டேன்! ஸாரி!
சகோதரி, உங்கள் வலையுலக பயணம் சிறப்பாக அமைய வேண்டுமென வாழ்த்துகிறேன்!
உங்களுக்கு என்னுடைய பிந்திய, ஈத்-உல் அல்ஹா! வாழ்த்துக்கள்!
//
உங்கள் வாழ்த்துக்கள் ஆமினா அக்காவிற்கு கிடைத்திருக்கும் நண்பா.
நன்றி.
@காட்டான்
டேய் மணி உன்ன நம்பி அந்த பொட்டைய கூப்பிடப்பார்த்தேனே என்னை செருப்பால் அடிக்கோனும்,. ஹி ஹி ஹி மணி சொல்வதைப்போல்தான் வெளிநாடுகளில் பெண்களை வைத்திருக்கிறார்கள் அதிகமான ஆண்கள் அதற்காகதான் நான் வெளிநாட்டு மோகத்தை சாடி பின்னூட்டமிடுவது இதில வேற இஞ்ச பிறக்கிற பொடியங்களையும் பிற்போக்குதனமாகதான் அதிக பெற்றோர்கள் வளர்கிறார்கள் இது எங்கே போய் முடியுமோ...!!!??
//
அண்ணே யாருக்கு முறையா உள் குத்து குத்துறீங்க.
எனக்கு இந்தக் கட்டம் புரிய மாட்டேங்குது.
நான் நித்திரை.
@Powder Star - Dr. ஐடியாமணி
டேய் மணி உன்ன நம்பி அந்த பொட்டைய கூப்பிடப்பார்த்தேனே என்னை செருப்பால் அடிக்கோனும்,./////
ஹி ஹி ஹி ஹி அண்ணர், எனக்கு பொம்பிளை பார்க்க உங்களால முடியாது! எனக்கு கலியாணத்துக்கு பிறகு என்னைய லவ் பண்ணுற பொண்ணுதான் வேணும்!
சரி சரி நேரம் போச்சு! Out of Paris போகிறேன்! பிறகு வாறன்!
//
அடடா....ஏன் அங்கே ஏதாச்சும் பிகருங்களை சைட் அடிக்கவா?
நல்லதே நடக்கட்டும்!
@ஆமினா
மன்னிசுட்டேன் ;-)
நன்றி சகோ...
வளமான வாழ்க்கை அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அப்போ ஐடியா மணி இப்போ பொண்ணு பார்க்கப் போறார் என்ற விடயம் தெரிந்து போச்சா..
@"என் ராஜபாட்டை"- ராஜா
கவிதையில் ஒரு கதை .. சூப்பர்
//
நன்றி பாஸ்.
@"என் ராஜபாட்டை"- ராஜா
கவிதையில் ஒரு கதை .. சூப்பர்
//
நன்றி பாஸ்.
@athira
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))
ஆமினாவை.... “அ”மினா என்கிறார்கள்...:)))
அதிராவை..... “ஆ”திரா... என்கிறார்கள்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))))...
இந்த அ ந, ஆ...வன்னாக்கொயப்பமே இன்னும் தீரல்ல... அதுக்குள்ள என்னவோ எல்லாம் தெரிஞ்சாக்கள் மாதிரி கதைவேற:))))..
தேம்ஸ்ஸ்ஸ்ஸ் வெயார் ஆ யூஊஊஊஊஊஊஊஉ:)))))))
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இது செம கடி! ரெண்டு நாளைக்கு காயம் மாறாது என்று நினைக்கிறேன்.
@DrPKandaswamyPhD
இம்மாம் பெரிய கவிதையைப் படிக்க நாலு நாள் ஆவும் போல.
//
இல்லையே ஐயா, 4.5 நிமிசமே போதும்!
@angelin
இம்மாம் பெரிய கவிதையைப் படிக்க நாலு நாள் ஆவும் போல.
//
உங்கள் வாழ்த்துக்கள் ஆமினா அக்காவிற்கு கிடைத்திருக்கும். நன்றி அக்கா.
@veedu
ரொமாண்டிக்கா போன கவிதை
தோல்வியில முடிஞ்சது...
வருத்தம்தான் ஏன்னா நான் உங்களை
ஒல்லியாக இருப்பீர்கள் என நினைத்தேன்
//
அதெல்லாம் கவிதைக்காக பாஸ்.
என் பேஸ்புக் பேஜ் கொடுத்திருக்கேனே.
கிழிக் செஞ்சு பாருங்க.
@veedu
ஹலோ... மணி உமக்கு கல்யாணமே ஆகாதுய்யா...இப்படி பப்ளிக்ல சொன்னா எவனும் பொண்ணுதரமாட்டான்...
//
பாவமய்யா அந்தாளு, இப்போத் தான் ஏதாவது பொண்ணு மாட்டும் என்று போறாரு..
@காட்டான்
அது சரி நிரூபன் இதையெல்லாம் சாப்பாட்டுக்கு முன்னமா? இல்ல சாப்பாட்டுக்கு பிறகா சாப்பிடோனும்.. ஏன்னா எனக்கும் வண்டி(தொப்பை)இருக்கே சரியா விசாரிச்சு சொல்லுங்கோ..!!!!!???//
அடிங்.........
இதெல்லாம் சாப்பாட்டுக்கு முன்னமோ அல்லது பிறகோ இல்ல...
இது தான் சப்பாடே!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@செங்கோவி
வசன கவிதையில் ஒரு வாழ்க்கையைவே சொல்லிட்டீங்களே நிரூ..
//
நன்றி பாஸ்.
@செங்கோவி
சகோதரி ஆமினாவின் அறிமுகத்திற்கு நன்றி.
//
உங்கள் வாழ்த்துக்கள் ஆமினா அக்காவிற்கு கிடைத்திருக்கும்.
நன்றி பாஸ்.
@ஹேமா
நிரூ...காட்டான் எப்போ கல்யாண புரோக்கர் ஆனார்?அவர் போன் நம்பரையும் பதிவில போட்டுவிடுங்கோ.உதவியாயிருக்கும் எல்லாருக்கும் !
கருங்குரங்கு,படவா,ராஸ்கல்,கள்ளன், மடையன்.....தாங்கமுடியுதா....!
//
என்ன பண்ண, இதையெல்லாம் தாங்கித் தானே ஆகனும்.
அடுத்த பதிவில புரோக்கர் காட்டான் பற்றிய விபரங்களை வெளியிடுகிறேன்.
@athira
அதிரா அக்காவின் கருத்துக்களுக்கு ஒரு சபாஷ்.
//
என் நண்பி சொன்னார், தனக்குத் தெரிந்த ஒரு குடும்பம் அவுஸ்திரேலியாவில இருக்கினமாம். அவர்கள் விடுமுறையில் தங்கள் குழந்தைகளை பக்கத்து ஊருக்குக் கூட்டிப்போய் வந்துவிட்டுச் சொல்லிக் கொடுப்பார்களாம், வேறு ஒரு நாட்டின் பெயரை, ரீச்சர் கேட்டால் இப்பெயரைச் சொல்லுங்கோ என.
//
அட இப்படியும் பிராடு பண்றாங்களா..
@shanmugavel
//கன்றாவியான என் "பாடி" பார்த்து
கேடியாய் சிரிக்கிறாளுங்க!//
இத்துதான் கல்யாணத்துல பிரச்சினையா?
//
இதெல்லாம் பிரச்சினை இல்லை அண்ணே,
பொண்ணு ஒன்னும் கிடைக்காதது தான் மொதல் பிரச்சினையே.
@athira
அதிரா அக்கா காத்திரமான கருத்துக்களையும், புலம் பெயர் வாழ்வின் யதார்த்தங்களையும் சொல்லியிருக்கிறீங்க
நான் அறிந்த வரையில் பிரான்ஸில் நீங்கள் சொல்வதற்கு எதிர்மறையான விடயங்கள் தான் நடப்பதாக நண்பர்கள் கூறியிருக்கிறார்கள்.
மிக்க நன்றி அக்கா.
@மாய உலகம்
சகோதரி ஆமினா அவர்களது சமையல் எக்ஸ்பிரஸ் வலைப்பூவிற்கு வாழ்த்துக்கள்...!
//
நன்றி மாயா.
@மாய உலகம்
காட்டான் மாம்ஸ் என்னை தான் மாப்ளை என்று சொல்வார்... சோ எனக்குதான்... ஹி ஹி
//
ஏலேய் நாஞ்சில் மனோ அண்ணே..
என்ன அப்படிப் பார்க்கிறது, ஒருவாட்டி அந்த அருவாளை எடுக்கிறது.
மாப்ளே, நாம குண்டோ, ஒல்லியோ பொண்ணு நல்லா இருந்தா ஓகே...
நம்ம தளத்தில்:
மதுரை வைகை ஆற்றில் வெள்ளம். படங்கள் பார்க்க!
@மாய உலகம்
வசன கவிதை கலக்கல் பாஸ்...
//
நன்றி பாஸ்.
@ரெவெரி
குண்டு கவிதை கலக்கல்...பொருத்தமாய் ஒல்லி(?) சமையல் அறிமுகம் பலே...
உங்கள் ஆரம்ப கால கவிதைகளில் இருந்து இப்போது நிறைய மாற்றம்...
வைரமுத்து இதே பாதையில் தான் நகர்ந்தார்...அவர் தான் உங்களுக்கு முன்மாதிரியா?
//
நன்றி அண்ணா.
ஆமாம் அண்ணா; எனக்கு வைரமுத்து, கவியரசர், நம்மவூர் காசி ஆனந்தன், புதுவை இரத்தினதுரை, மஹாகவி உருத்திரமூர்த்தி ஆகியோர் தான் முன் மாதிரி.
@விக்கியுலகம்
நன்றி அண்ணே.
// ஐயோ! என்னைப் பார்க்க எனக்கே அசிங்கமா இருக்கு! //
தலைப்பைப் பார்த்ததும், நான் அடிக்கடி புலம்புவது உங்க காதுலே எப்படி விழுந்திச்சுன்னு யோசிச்சேன்! ஹிஹி!
//இப்படிப்பட்ட திருந்தாத, திருத்த முடியாத ஜென்மங்களும் எங்கேயாவது இருக்கிறார்கள்தான், ஆனால் அதுக்காக ஒட்டுமொத்த வெளிநாட்டு மாப்பிள்ளையும் கெட்டதென முடிவெடுப்பது தவறு.//
பூஸ் சொல்வது சரியே .
ஸ்ஸ்ஸ் ஹப்பா எவ்ளோ பெரிய கமெண்ட போட்டிருக்கு !!வெல்டன் மியாவ் .
வணக்கம் நிரூபன்,இரவு வணக்கம்! நல்ல கவிதை.அந்தப் பெண் போனால் என்ன,ஊரில் வேறு பெண்ணா கிடையாது.பிரான்ஸ் வந்தால் பூசைக்காரர் பார்த்துக் கொள்(ல்) வாராம்!?பிரெஞ்சையும் கொல்கிறார்,வாழ்க,வளர்க.
நேரம் போக்கும் காதலைச் சாடி வந்திருக்கும் கவிதை அழகே!
அடேங்கப்பா எம்புட்டு கமெண்ட்ஸ்...
ரொமாண்டிக்கா ஆரம்பிச்சு காமெடியா முடிஞ்சது...
மொத்தத்துல காதல், நகைச்சுவை, சோகம் போன்ற உணர்வுகளை கலக்கி கவிதை ஆக்கியிருக்கீங்க...
அண்ணே இது கவிதையா சரித்திரமா?
சகோதரி ஆமினாவுக்கு வாழ்த்துக்கள்.. குட்டி சுவர்க்கம் போவதுண்டு, சமையல் எக்ஸ்பிரஸ் திறப்புவிழா அட்டென்ட் பண்ணின ஞாபகம், ஆனா ஸ்வீட் இன்னும் பார்சல் வரல, அதனால அந்த பக்கம் போகல..
பாஸ் கவிதை நீலமா சாரி நீளமா இருக்கு பாஸ்... ஹீ ஹீ ஜோக் பாஸ் கோவிச்சுக்காதீங்க.......................... :)
நான் ரெம்ப ரசிச்சேன் பாஸ்...... அப்படியே ஜடியா மணியின் நெத்தியடி நிஜ கமெண்ட்ஸ் சையும் ரெம்ப ரசிச்சேன்..
@athira
தலைப்பைப் பார்த்ததும் பதறியடிச்சு ஓடிவந்தேன்:))) என்னாச்சு நிரூபன், பூனை கீனை ஏதாவது கீறி அசிங்கப்படுத்திட்டுதோ?:)))
//
ஓம் அக்கா, பிராஞ்சில இருந்து ஒரு பெரிய கிழட்டுப் பூனை ப்ளாக்கில ஓடி வந்து உட்கார்ந்திட்டுது;-)))
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
November 8, 2011 8:37 PM
நிரூபன் said...
@ஆமினா
//உங்களுக்கும் உடம்பு ஊதிப் பெருத்து விட்டது என்று கவலையா? ஸ்லிம் ஆக முடியலையே என்று வருத்தமா? இந்தக் கவலைகளைப் போக்கிட//
நிரூ உனக்கே இது ஓவரா இல்லையா?!! ஹி...ஹி...ஹி....
//
என்ன பண்ண,
வியாபாரத்திற்கு அழகு விளம்பரம் தானே!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நிரு என்ன இருந்தாலும் என்ர தம்பி் மணிய நீ கிழட்டு பூனைன்னு சொல்லுறது எனக்கு சுத்தமா பிடிக்கல..!!! ஹி ஹி ஹி
@Dr. Butti Paul
ஸ்வீட் சாப்டா சுகர்பேஷன் ஆய்டுவீங்கன்னு சகோக்கள் மேல எனக்கு ஏகப்ப்பட்ட அக்கறை... அதான் ஸ்வீட் அனுப்பல .... தலைவாழை இலை விருந்தும், பிரியாணி விருந்தும் வச்சேனே... ஏன் விருந்துல கலந்துக்கல :-)
அட நான் ஆமினா அக்காவுக்கு வாழ்த்து சொல்ல மறந்துட்டேன் அவருக்கு வாழ்த்துக்கள்
சில யதார்த்தங்களை,ஒரு சுய எள்ளலோடு,அருமையான கவிதையாக வடித்துள்ளீர்கள்.
>>குறையாக கண்டிசன் பல சொன்னார் - டாக்டர்!
அவர் சிறந்த ஐடியா மாஸ்டர்!
hi hi hi ஹி ஹி ஹி எனக்கு புரிஞ்சிடுச்சு
வணக்கம் நண்பர் நிரூபன்,
கலக்கல் கவிதை ஒன்னு கொடுத்திருக்கீங்க.
நான் தான் கொஞ்சம் தாமதமா வந்துட்டேன் போல...
சகோதரி ஆமினாவின் வலைத்தள அறிமுகத்துக்கு
வாழ்த்துக்கள்..
வாழ்த்து சொன்ன அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல
மேல்ப்போட்டோல இருக்கிறது நீங்களா?
Post a Comment