முறிகண்டிப் பிள்ளையார் கோயில் முன்றலில் தேங்காய் உடைத்து விட்டு திரும்புகையில் தேகம் கடந்து செல்லும் பூவின் நறு மணம் கலந்த காற்றைச் சுவாசித்து திரும்பிப் பார்த்தேன். அது அவள் தான், அவளே தான்!
புலன் ஐந்திலும் அந்தக் கணத்திலே உறைந்து விட்டதாய் ஒரு நினைப்பு!
பூமியில் அவள் எனைத் தன் மடி மீது வைத்து தாலாட்டா மாட்டாளா என்று கேட்கிறது என் மன உணர்வு!
மேகங்கள் கீழிறங்கி என் மார்பில் பூமாரி பொழிவது போன்ற மகிழ்ச்சியில் அவளைப் பார்த்தேன். அவள் பின்னேயிருந்து/ பின்னிருந்து ஒரு சிறு குழந்தை வந்து அவளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டது (அழைத்தது) மட்டும் காதில் கேட்டது. "பிரியம்வதனா அக்கா! என்ன செய்யுறீங்க! நேரமாகுது, வீட்ட போக வேணுமில்லே!"
அந்தக் கணமே புரிந்து கொண்டேன், அவள் பிரியம்வதனா தான். பெயருக்கு ஏற்றாற் போல என் மீது எப்போது பிரியம் கொள்ளுவாள் எனக் காத்திருந்தேன். காத்திருப்பும் கனிவாகும் நாளும் வந்தது. வேப்பமரத்தடித் திட்டில் குந்தியிருந்து வேற்றுக் கதைகள் பேசி, காற்றில் கலந்து வந்த அந்த நறு மணத்தின் சொந்தகாரி மீது, என் சிந்தையினைக் கொன்று விட்ட நெஞ்சக்காரி மீது என் நினைப்பெல்லாம் படிய, நீண்ட யோசனையில் ஆழ்ந்திருந்தேன்.என் நடத்தையில் சிறிது வித்தியாசம் தெரிவதை உணர்ந்தவனாய் அருகே இருந்த நண்பன் காந்தன் கேட்டான்;
"ஏன் மச்சான் - கொஞ்ச நாளாய் ஒரு மார்க்கமா இருக்கிறாய்?"
"இல்லை மச்சான், போன கிழைமை கோயிலுக்குப் போயிருந்தேன். தேங்காய் உடைக்கும் போது இப்போ கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஊருக்கு அகதியாக வந்துள்ள பிரியம்வதனாவைப் பார்த்தேன். என் நினைப்பெல்லாம் அவள் மீது நிறைந்து விட்டதே மச்சான்" காதல் செய்து பிரியம்வதனாவை எனை விட்டுப் பிரியாதவளாய் ஆக்க வேண்டும் என என் மனதில் ஆவல் உள்ளதே என்றேன்!
மாநாடு முடிகையில் மனதெல்லாம் நிறைந்திருந்த காதல் எனும் புனிதத்தை ஆடையாக்கி அணிந்துள்ள காம நோய் தீர நண்பன் உதவி செய்தான். களவாக வாங்கி வைத்திருந்த கந்தப்பர் தவறணையின் (கள்ளுக் கொட்டில் / சாராய பார்)மூன்று நாள் புளித்த பழைய கள்ளும்;தோட்டம் கொத்தும் சின்னையாவின் பொக்கற்றிலிருந்து திருடப்பட்ட குறைச் சுருட்டும் அவனது மனதை நியூட்டனின் சிந்தனைகளுக்கு நிகராக மாற்றிப் போட்டு விட்டது. காந்தன் விஞ்ஞானியானான். காதல் மெய் ஞானி ஆகி விளக்கம் சொல்லத் தொடங்கினான். அவன் சொல்வதை செவிமடுப்பவனாய் நானும் அவன் அருகே மாணவனானேன்.
காந்தனவன் என் நண்பன்! எனக்கு காதலெனும் போதையூற்றிய திருநகரூர் வம்பன்! நாம்பனைத் தேடி ஓடும் பசு மாடாய் நானிருக்கையில் நல்வாக்கு தந்த இளவல்!நெஞ்செல்லாம் அவள் நினைப்பு; வற்றாத நிலாவரை நிரூற்றாய் பெருக்கெடுக்க, காதலெனும் உண்ணா நோன்பில் நானிருப்பதாய் உணவோ என்னை அடிக்கடி புறக்கணிக்கும் வேளையிலும் நண்பன் எப்போதும் உடன் இருப்பான் என்பதற்கு எடுகோளாய், ஐடியா தந்தான்.
"நீ ஒரு கடிதம் கொடுத்துப் பாரேன்?" அவள் எங்கே படிக்கிறாள் என்பதை உணர்ந்து பாடசாலை விட்டு வரும் வேளையில் கடிதம் கொடுத்தால் சில நேரம் ஆள் மடியலாம்/ மடங்கலாம் மச்சான்" என ஆலோசனை தந்து "சும்மா கிடந்த இரணைமடுக் குளத்தின் கதவுகளை வலியப் போய் முட்டி உடைத்து வான் பாய விட்டு குடி மனைகளை நாசம் செய்வது போல" எனக்குள் ஓர் வில்லங்கத்தை அவன் வர வைத்தான்.
நாட் குறித்தேன். அவளை அடைய வேண்டும் எனும் ஆவல் மேலெழுந்து வர கடிதத்தில் பார்த்தவுடன் அவள் பார்வை என்னைப் பிரகாசமுள்ள மனிதனாக்க வேண்டும் என ஆவல் கொண்டேன். நண்பர்களின் உதவியோடு கை கூடும் காதல்கள் தான் காத்திரமானவை எனும் தத்துவத்தின் உண்மை தெளிந்தேன். காந்தனின் கூற்றினைச் செவியிலிருத்திக் கடிதம் வரைந்தேன். எல்லாக் கடிதங்களிலும் அன்புள்ள என்று தொடக்கம் (ஆரம்பம்) எழுதி எம் தமிழக் காதல்கள் விரசம் குறைந்து விட்டன என்பதால், என் காதலில் ஒரு சேஞ்ச் வைக்க நினைத்தேன். அதன் விளைவு கடிதம் இப்படி வந்து பிறந்தது!
"உயிராகி எந்தன் உடலோடு கலந்து; என் உணர்வாகப் புகுந்து மனதிற்குள் நிறைந்து, உயிர் மூச்சாசி இப்போது என்னோடு இணைந்திருக்கும் என் உயிர்த் தேவதையே! என்றென்றும் என் ப்ரியமுள்ள பிரியம்வதனா!
என் உணர்வுகள் யாவும் நீ திருடி நீண்ட நாளாகி விட்டதால், நலம் பற்றி எழுத இங்கே வேலையில்லை. மனதினுள் நீ வந்து புகுந்து என் மார்ப்போடு உறங்கத் தொடங்கிய பின்னர்; பிள்ளையாரின் சந்நிதிக்குச் சென்று கொழுக்கட்டை, அவல், சுண்டல் வாங்க வரிசையில் நிற்கிறேனோ தெரியாது. நீ வருவாய் எனும் நினைப்பில் நீண்ட நாளாய் பக்தி முத்திப் போய்; சித்தம் பித்துப் பிடித்து, சிக்கெடுக்க முடியாதிருக்கும் உந்தன் துவட்டாத கூந்தல் போலாகி விட்டேன்.
நீ இறுதியாக என்னை உந்தன் பார்வைகளால் பறித்தெடுத்த நாட் தொடக்கம் விழிகளில் அமில நீர் சுரக்கத் தொடங்கிப் பல மாதங்களாகி விட்ட நிலையில் நான் உனக்காக எழுதும் அன்பு மடல்இது! என் ஆசைகளை உணர்வுகளைத் தாங்கி வரும் என் இதயக் கீதமிது! இது தான் என் இறுதி மடலாக இருக்கலாம் என நினைக்கிறேன்.நீ என்னை வெறுத்தால் இயக்கத்திற்குப் போய் நாட்டிற்காய் என் வாழ்வை அர்ப்பணிக்கலாம் என முடிவெடுத்துள்ளேன்.
அன்று நீ என்னைப் பார்வைகளால் தழுவிச் சென்ற நிலையும், உனக்கே தனித்துவமாய், உன்னை அந்தக் கோயிலில் வேறுபடுத்திக் காட்டிய வாசமும் என்னைக் கொன்று விட்டது. என் உணர்வுகளைத் தின்று விட்டது. உப்பளக் காற்றுக் கூட வாசமுள்ள தென்றலாய் என் மேனியினை வருடுவது போன்ற உணர்வு! இது உன்னால் தான் பெண்ணே! உன் பதிலுக்காக விழி மேல் வழி வைத்து காத்திருப்பேன்! இல்லையேல் சென்ரியில் (Military bunkers) விழியில் துவக்கெடுத்து பார்த்திருப்பேன்! வந்த பகை எதிர்த்து வாசலிலே வெற்றி வாகை சூடப் புறப்படுவேன் - இல்லையேல் உந்தன் இடை தன்னில் என் இதழைப் பதித்து ஆடையாக்கி உன்னை போர்த்திடுவேன்!
என கடிதம் எழுதி முடித்து, அவளின் பாடசாலை தேடியறிந்து அவள் வரும் வேளைக்காய் காத்திருந்தேன். கூடை பூட்டிய லுமாலா சைக்கிளில் அவள் வந்தாள். கோடை வெய்யிலினால் நீரேதும் அருந்தாது அவள் நினைப்பில் இருந்த என் குரலையும் ஒரு செருமல் செருமி, கம்பீரக் குரலாக்கி "எக்ஸ்கியூஸ்மீ!" என்று குரல் கொடுத்தேன். சுற்றும் முற்றும் பார்த்தவள்
கடிதத்தை வேண்டப் பயந்து, பெண்மைக்கேயுரிய நாணத்துடன் தரை பார்த்திருந்தாள்.
இது தான் தருணம் என்று அவளின் சைக்கிள் கூடைக்குள் என் கடிதத்தை வைத்து விட்டுப் போனேன். தொடர்ச்சியாக இரு நாட்கள் அவளின் முடிவிற்காய் மீண்டும் மீண்டும் அவளின் பள்ளிக் கூட வாசலில் வெயிற் பண்ணிக் கொண்டிருந்தேன். மூன்றாவது நாள் அவள் வரும் நேரம் பார்த்து பாடசாலை வாசலுக்குப் போனேன்.
"ஹலோ பிரியம்வதனா! உங்களின் முடிவென்ன என்று சொல்ல முடியுமா?" எனக் கேட்டேன், அவள் என் பின்னே பார்த்து சிரிப்பினை நிறுத்த முடியாதவளாக கல கலவெனச் சிரித்தாள். அவள் சிரிப்பின் அர்த்தம் புரியாதவனாய்த் திரும்பிப் பார்த்தேன்.
பஷன் பிளஸ் (Passion Plus) மோட்டார் சைக்கிளில் விடுதலைப் புலிப் போராளி ஒருவன் துவக்குடன் (துப்பாக்கியுடன்) வந்திறங்கினான்!
"அறிகிலார் எல்லோரும் என்றே என் காமம்
குறுகின் மறுகும் மருண்டு!"
திருக்குறள்- அதிகாரம் 114, குறள் 1139
பொருள் விளக்கம்: என் மனதுள் புதைந்து விட்ட காரணத்தினால், முடிவின்றி; என் காதல் நிறைந்துள்ள காமமானது என்னைப் போல உன் பின்னே தெருவில் அலைகிறது பெண்ணே!
பிற் சேர்க்கை: இப் பதிவு ஒரு சிறிய கவிதை கலந்த உரை நடைப் பதிவு.
இப் பதிவிற்கு முதல் பிரசுரமான ஈழத்தில் இதுவரை வெளிவராத மர்மங்களை உள்ளடக்கிய பதிவினைப் படிக்காது தவற விட்டோருக்காக:
ஈழத்தில் அவசரப்பட்டுத் தவறிழைத்த புலிகளும் அதிரடி நடவடிக்கை தொடங்கிய இராணுவமும்!
இப் பதிவிற்கு முதல் பிரசுரமான ஈழத்தில் இதுவரை வெளிவராத மர்மங்களை உள்ளடக்கிய பதிவினைப் படிக்காது தவற விட்டோருக்காக:
ஈழத்தில் அவசரப்பட்டுத் தவறிழைத்த புலிகளும் அதிரடி நடவடிக்கை தொடங்கிய இராணுவமும்!
|
34 Comments:
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மீ த 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஉ
ஆஆஆ.... எங்கிட்டயேவா.. விடமாட்டமில்ல... மீ தான் செகண்ட்டும்... இது வேற செகண்ட்டு:))) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
ஹையோ இது மரதன் ஓட்டம் இல்ல சொல்லிடுங்க நிரூபன்... யோ.... இல்ல இல்ல நான் ஒண்டுமே சொல்லல்ல.. முருகண்டிப் பிள்ளையார்மேல சத்தியம்:))) நான் ரொம்ப நல்ல பொண்ணு... ஆறு வயசிலிருந்தே...:)))
ஹை.... 4 வதும் நானேதான் லக்கி நம்பரு:)))
சரி சரி ஆரும் டிசுரேப்புப் பண்ணாதீங்க நல்ல கதைபோல தெரியுது ஆரம்பமே, நான் பிறகு வந்துதான் படிப்பேன்..... 5ம் இடமும் எனக்குத்தான்ன்ன்ன்ன்.... இனி ஆராவது வந்து வடைத்தட்டுக் காலியாகிட்டுதெல்லோ எடுத்து வைக்கச் சொல்லுங்க நிரூபன்... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)))
///கூடை பூட்டிய லுமாலா சைக்கிளில்//
ஹையோ...ஹையோ... இதேதான்... இதேதான் நாவல்குழியில வச்சுக் காணாமல் போன என் சைக்கிள்ள்ள்ள்ள்ள் இதுதேதான்ன்ன்ன்ன்:)))).
பதிவு கலக்குது மாப்ள...
நல்ல கதை நிரூ சிம்பிள்லா சொன்னா சூப்பர்..
மீள் பதிவா ?
"சும்மா கிடந்த இரணைமடுக் குளத்தின் கதவுகளை வலியப் போய் முட்டி உடைத்து வான் பாய விட்டு குடி மனைகளை நாசம் செய்வது போல"
எதுக்கு எதைச் சொல்லிக்கிடக்கெண்டு பாருங்கோ மக்களே.இந்தக் காதல் உருப்படுமோ மோனை நிரூ.இண்டைக்கு 11.11.11.
உலகத்தில எவ்வளவோ நடக்குது !
முடிவு முதலில் புரியவில்லை...நல்ல வித்தியாச நடை...தொடர்ந்து கலக்குங்கள் சகோதரம்...
sako intha post erkkanave padichamathiri irukku un thalaththil?....
படிச்ச நியாபகம் இருந்தாலும் அருமையா இருக்கு வாழ்த்துக்கள்...!!!
வணக்கம் சகோ!
ஏற்கனவே படித்ததை எப்படி நினைவு வைத்திருக்கிறார்கள்? இருந்தாலும் அருமை.
வணக்கம் நிரூபன்..
ஊரில இருக்கிற பொட்டைகளுக்கெல்லாம் கடிதம் கொடுத்து சரிவரலைன்னு அகதியா வந்தவளிடமும் சேட்டையா?? நல்ல வேலை செய்தால் அவள்.. ஹிஹி
அதான் முன்பே படித்தமாதிரி இருக்கிறதே எனப்பார்த்தேன்!
இருப்பினும் ரசித்தேன்!
மீள் பதிவா?
சகோ, யார்கிட்டயோ மாட்டிக்கிட்ட போல, கொஞ்ச நாளா காதல் பதிவுகள் வலம் வருதே...
நம்ம தளத்தில்:
மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! சிஎன்சி (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 11
மாப்ளே, நீ கோயில் குளம் சுத்தறது காதல் பண்ணவா? சாமி கும்பிடவா?
"உயிராகி எந்தன் உடலோடு கலந்து; என் உணர்வாகப் புகுந்து மனதிற்குள் நிறைந்து, உயிர் மூச்சாசி இப்போது என்னோடு இணைந்திருக்கும் என் உயிர்த் தேவதையே! என்றென்றும் என் ப்ரியமுள்ள பிரியம்வதனா!
நிரூபன் என்கின்ற கவிஞன்
இத்தனை நாளாய் எங்கே இருந்தாய்?
உன் தமிழ் உன்னை செதுக்கியதா?
இல்லை... இல்லை...
நீ தமிழை செதுக்கியவன்
சும்மா பாரட்டவேண்டும் என எழுதவில்லை நிரூபன் மிகவும் ரசித்தேன்
எழுத்து நடை கலக்கல் பாஸ்....கலக்குங்க.
முறிகண்டிப் பிள்ளையார் கோயில் முன்றலில் தேங்காய் உடைத்து விட்டு திரும்புகையில்//
புள்ளையார் சுழி போட்டு தொடங்கிருக்கீங்க... ஹா ஹா.
தோட்டம் கொத்தும் சின்னையாவின் பொக்கற்றிலிருந்து திருடப்பட்ட குறைச் சுருட்டும் அவனது மனதை நியூட்டனின் சிந்தனைகளுக்கு நிகராக மாற்றிப் போட்டு விட்டது. காந்தன் விஞ்ஞானியானான். காதல் மெய் ஞானி ஆகி விளக்கம் சொல்லத் தொடங்கினான்//
புகையை காத்துல பறக்கவிட்டுக்கிட்டே.. ஸ்டைலாக..அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சா.. விஞ்ஞானியாயிருவாங்க நம்ம நண்பர்கள்..ஹா ஹா
பிள்ளையாரின் சந்நிதிக்குச் சென்று கொழுக்கட்டை, அவல், சுண்டல் வாங்க வரிசையில் நிற்கிறேனோ தெரியாது.//
ஹா ஹா இது வேறையா..
//தேகம் கடந்து செல்லும் பூவின் நறு மணம் கலந்த காற்றைச் சுவாசித்து திரும்பிப் பார்த்தேன்.//
ஆஹா..அருமையான வரிகள்..கலக்கிட்டீங்க நிரூ.
கதையின் முடிவு ஆப்பு தானா?
அண்ணே அக்கா நல்ல முடிவு தான் எடுத்துஇருக்குறா........எல்லாமே உண்மை கதை மாதிரியே இருக்குது...
அழகான எழுத்து நாடை....
தொடர்ந்தும் உணர்வுகளை தூண்டுங்கள்.......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வாழ்த்துக்கள் சகோ உங்கள் காதல்க் கதைகள் சித்தரிக்கும் விதம்
மிக சிறப்பாக உள்ளது .அது சரி இப்பவும் ஓடிக்கொண்டேதான்
இருக்குறீங்களா?...உடம்பு குறைக்க .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .
தொடர்ந்தும் அசத்துங்க .
//பஷன் பிளஸ் (Passion Plus) மோட்டார் சைக்கிளில் விடுதலைப் புலிப் போராளி ஒருவன் துவக்குடன் (துப்பாக்கியுடன்) வந்திறங்கினான்!//
கடைசி வரியில் வாசகனின் கற்பனை சக்தியை தூண்டும் விதத்தில் முடித்தது மிக அருமையாக இருந்தது.
முறிகண்டி எண்டதும், கச்சான் தான் ஞாபகம் வருது நிரூ! இப்ப ஏ9 திறந்திருக்கிறதால பஸ் பயணிகள் தங்கள் டாங்கை இறக்கி வைப்பதும் இங்கு தான்... (ஹீ ஹீ உச்சாவை சொன்னன்;)
Love story mm nadakkadum nadakkad
ரசிச்சு ருசிச்சு வாசித்தேக் நிரூபன்....
அற்புதமா இருக்கு....வாழ்த்துக்கள்.....தொடர....
வணக்கம் பாஸ்.
ஆஹா.. என்ன அருமையான சொல்லாடல். சொற்கள் தேவையான இடங்களிலெல்லாம் செமையாக வந்து விழுகுது பாஸ்.. அழகான உவமானங்கள், கதைக்குரிய வசன நடை. காதலையும் ஈழப்போராட்டத்தையும் அன்றைய இளைஞர்களின் காதலுக்கு ஈடுவைக்கப்படும் போராட்டத்தையும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள் நிரூ. சலிக்காமல் ஆங்காங்கே தெறிக்கும் பொருள் பிறழ்வா நகைச்சுவைகளும் பிரமாதம். ஒட்டுமொத்தத்தில் நான் அதிகம் ரசித்த நிரூபனின் இன்னுமொரு பதிவு. வாழ்த்துக்கள். எழுத்துக்கள் தொடரட்டும்.
Post a Comment