அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்:
மௌனம் என்பது மனதிற்கு பாரமாக அமைந்து கொள்ளும் ஓர் விடயமாகும். எம்மால் தீர்வு காண முடியாத விடயங்களை, வெளியே பகிர முடியாத உணர்வுகளை மனதிற்குள் பூட்டி வைத்து அடை காத்து, மன அழுத்தத்திற்கு ஆளாகி எம் மன நிம்மதியினைத் தொலைக்கின்ற செயற்பாடுகளைத் தான் நாம் அன்றாடம் செய்து வருகின்றோம். மனதிற்குள் பூட்டி வைத்துத் தீர்வு காண முடியாத சில விடயங்களை நாம் வெளியே பகிர்ந்து கொண்டால் எம் மனப் பாரம் குறைந்து விடும். மனமும் அமைதியடைந்து எம் மூளையும் வேகமாக இயங்கத் தொடங்கி விடும். எமது எதிர்பார்ப்புக்களை எண்ணங்களை நிறைவேற்ற இயலாத சமயத்தில் ஏற்படுகின்ற மன விரக்தியினையும்,கவலைகளையும் எந்த மருந்திட்டும் குணப்படுத்த முடியாது.
பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் உணர்வு காதல் என்று பலர் வரைவிலக்கணம் வகுத்திருந்தாலும், சில சமயம் காதல் நோய் தொற்றிக் கொள்ள நீண்ட காலம் எடுக்கும் எனக் கூறினாலும் எம் முன்னே மனதைப் பறிக்கின்ற அழகு கொண்ட தேவதை போன்ற பெண் ஒருத்தி வந்து போகின்ற போது, எம் மன உணர்வுகள் ஒரு கணம் அசைவிற்குள்ளாகி விடும். ஒரு பெண்ணின் அபிநயங்கள், அசைவுகள், குழந்தைத்தனமான பேச்சு மொழி, புன்னகைகள், முக பாவனைகள் எனப் பல விடயங்கள் கண்டவுடன் ஒருத்தி மேல் ஒரு ஈர்ப்பு வரக் காரணமாகி விடுகின்றது. ஒரு காப்பி ஷாப்பிற்கு காப்பி அருந்தச் சென்று விட்டு, அங்கே எதேச்சையாக ஒரு அழகிய பெண்ணைக் கண்டு எம் மனதைப் பறி கொடுத்து அவள் பின்னே அலைய நேர்ந்து காதல் பற்றிய அவளது முடிவிற்காக தவமிருப்பது போன்ற ஒரு நிலை உங்களுக்கு ஏற்பட்டால் எப்படி இருக்கும்?
காத்திருத்தல் வரம் என்றும், காக்க வைப்பது சுகம் என்றும் காதலர்கள் அர்த்தம் கொண்டாடினாலும், நீண்ட நாட்களாக ஒரு பெண் பின்னே அலைந்து அவளோடு நட்புப் பாராட்டி பின்னர் தனியே சந்தித்துக் கொள்ளும் போது ஆண் தன் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தி விடப் பெண் தன்னுடைய புறச் சூழலைக் கருத்திற் கொண்டு மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாது காதலையும் - காதலனையும் காக்க வைக்கும் நோக்கில் ஏழு நாட்கள் தவணை சொல்லினால் (டைம்) எப்படி இருக்கும்? மனதில் நாம் எமக்குப் பிடித்த விடயங்களை நிறைவேற்ற வேண்டும் என நினைத்தாலே போதும். மிக மிகச் சுறு சுறுப்பாக இயங்கத் தொடங்கி விடுவோம். இதுவே எமது பிரியத்திற்கு உரிய ஒருவரைக் கண்டு தரிசிக்க வேண்டும் எனும் ஆவலுடன் அவரது பிரியம் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் அவர் முடிவிற்காக காத்திருக்கையில் ஏற்படும் மன உணர்வுகள் இருக்கிறதே. அது அனுபவித்துப் பார்த்தோருக்குத் தான் இலகுவில் புரியும்.
அவ்வளவு தூரம் மனதைக் கொல்லும் திடு திப்பான திகில் படம் போன்ற வலி நிறைந்த விடயம் அந்த காத்திருப்பு. நாயகியைக் கண்டவுன் நாயகன் மனதில் காதல் தீ பற்றிக் கொள்ள தன் காதலைச் சொல்லி, நாயகியோடு பேசிட வேண்டும் எனும் ஆவலில் அலைகின்ற இளைஞன் தான் சூர்யா. கண்டிப்பு நிறைந்த குடும்ப வாழ்க்கையில் தன் புறச் சூழலினைக் கருத்திற் கொண்டு காதல் எனும் வலையில் அகப்படாது நழுவிச் செல்லும் பெண்ணாக ஸ்ருதி. தொடர்ச்சியான பின் தொடர்தலுக்குப் பின்னர் சூர்யாவும்,ஸ்ருதியும் நண்பர்களாகி விட; சூர்யா தன் அடி மனதில் புதைந்துள்ள காதலை மெதுவாக வெளிப்படுத்துகிறார். ஆனால் நாயகியோ தனக்குள்ளே புதைந்திருக்கும் ஒரு நோயின் காரணத்தினால், அந்த நோயைப் பற்றி ஏதும் கூறாது காதலைப் பற்றி யோசித்து முடிவு சொல்வதாக ஏழு நாட்கள் தவணை கொடுக்கிறார். ஏழு நாட்கள் தவணையில் காதலன் நரக உலக அவஸ்தையில் வாடி இறுதியில் காதலியின் முடிவினை அறிந்து கொள்வதற்காகச் செல்கின்றார்.
இவர்கள் காதல் சேர்ந்ததா? காதலியின் காதலுக்கு ஏழு நாட்கள் தவணை சொல்லிய புறக் காரணி எது? ஆகிய விடயங்களுக்கான விடையினை நீங்கள் இக் குறும்படத்தினைத் திரையில் பார்க்கும் போது பெற்றுக் கொள்வீர்கள். மென்மையான காதல் கதையில் மனதைப் பிழியும் பின்னணி இசை சேர்த்து, எதிர்பாராத கிளைமேக்ஸ் திருப்பம் வைத்து என் சுவாசமே எனும் படத்தினை இயக்கியிருக்கிறார் ரமணன் புருஷோத்தமா. Phoenix Pictures நிறுவனத்தின் வெளியிட்டீல் வந்திருக்கும் இக் குறும் படத்தினை சரண் டீப் அவர்கள் தயாரிப்பு மேற் பார்வை செய்திருக்கிறார். P.அனுராதா அவர்கள் தயாரித்திருக்கிறார். சூர்யா வாஸ், ஸ்ருதி ஆகிய இளம் நட்சத்திரங்கள் தம் மென்மையான காதல் சுவை கலந்த நடிப்பின் மூலம் இத் திரைப் படத்தினை மனதில் நிலைக்கச் செய்திருக்கிறார்கள். இவர்களோடு தேனு எனும் நாயகி ஸ்ருதியின் தோழியாக வந்து போகின்றார். திவ்யா பிரசாத்தின் மனதை உருக்கும் காதல் உணர்வு நிறைந்த வசனங்கள், தீபனின் விசுவல் எபெக்ட்ஸ் (VFX) நிறைந்த இசை பட நகர்விற்கு பிரம்மாதமாக அமைந்திருக்கிறது.
ரமணன் புருஷோத்தமா, மற்றுன் ஜஸ்டினின் ஒளிப் பதிவுகளும், காட்சியமைப்புக்களும் இக் குறும் படத்தின் ஒளிப் பதிவினை சினிமாத் தரத்திற்கு நிகராக காட்டுமளவிற்கு பங்களிப்புச் செய்திருக்கிறது. படத்தில் குறிப்பிடத்தக்க விசேடமான அம்சம், பலர் மனங்களிலும் நிலைத்திருக்கும் மலேசியாவின் மண்ணின் மைந்தன் திலீப் வர்மனின் மிக மிகப் புகழ் பெற்ற பாடலான "உயிரைத் தொலைத்தேன் அது உன்னில் தானோ...இது தான் காணும் கனவோ? நிஜமோ...." எனும் பாடல் இங்கே சூர்யா வாஸ், மற்றும் ஸ்ருதியின் அழகிய நடனத்தின் மூலம் அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது. மிகைப் படுத்தப்பட்ட சினிமாத்தனமான காட்சிகளினைத் தவிர்த்து, இயல்பான காதல் காட்சிகளை இங்கே கையாண்டிருக்கிறார் இயக்குனர் ரமணன் புருஷோத்தமன் அவர்கள். இக் குறும் படத்திற்கு ஏனைய குறும்படப் பாணியிலிருந்தும் விலகி கொஞ்சம் வித்தியாசமான சிறப்பான ஸ்டில்களை அமைத்திருக்கிறார் S.P.அருண் அவர்கள்.
காப்பி ஷாப்பில் நாயகியைக் கண்டு நாயகன் நூலு விடத் தொடங்கும் காட்சிகளில் மொபைல் போனை ஜீன்ஸ் பாக்கெட்டினுள் வைத்து விட்டு நாயகியின் போனை வாங்கியே மிஸ்ட் கோல் கொடுத்து நம்பரைப் பெற்றுக் கொள்வது; மோட்டார் சைக்கிளில் நாயகியைப் பின் தொடர்ந்து காதலைச் சொல்லும் நோக்கில் நாயகன் அலையும் போது, நாயகி நேராக வண்டியை ஓட்டிச் சென்று விட்டு ரைட் (வலது) பக்கம் சிக்னல் போட்டு விட்டு வண்டியைத் திருப்புவதாக பாசாங்கு செய்து வண்டியைத் திருப்பாது நேராகச் செல்வது, நாயகன் வண்டியை நாயகி திருப்புகிறாளே என எண்ணி விட்டு, மீண்டும் வண்டியை நேராகச் செலுத்த முயலும் போது ட்ராபிக்கில் மாட்டி ஏச்சு வாங்கி முளிக்கும் காட்சிகள் அனைத்த்ம் சூப்பராக அமைத்திருக்கிறார்கள். ஒப்பனையற்ற இயல்பான நடிப்பு ஒவ்வோர் இடங்களிலும் மிளிர்கிறது.
"உங்க பேரில இருக்கிற மாதிரியே உங்க வாய்ஸும் சுதியோட இருக்கு"
"You have done it, You can live without me. I miss you my love" ஆகிய வசனங்கள் மனதில் நிற்குமளவிற்கு வசன அமைப்பில் திவ்யா பிரசாத் கலக்கியிருக்கிறார். ஒரேயொரு குறை, சப் டைட்டிலை வெங்கடேஷ் அவர்கள் (ஆங்கில உப தலைப்பு) சிறிய எழுத்தில் காட்டியிருப்பது. ஆங்கில உப தலைப்புக்களை கொஞ்சம் பெரிய எழுத்துருவில் (Big font size) காண்பித்திருக்கலாம். மற்றும் படி ரமணன் புருஷோத்தமா தலமையிலான இ குறும்படக் குழுவினரின் முயற்சிக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் சொல்லிக் கொள்ளலாம். காரணம் மிக மிகச் சிறப்பாக சினிமாத் தரத்திற்கு நிகராக ஒளி, ஒலி, காட்சியமைப்புக்களில் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். இக் காலத்தில் குறும்படங்களைக் கூடத் துல்லியமான ஒளிப் பதிவுடன் எடுக்கிறார்கள் என்பதற்கும், படத்தின் திருப்பு முனை, கிளைமேக்ஸ் ஆகிய அம்சங்களின் சிறப்பிற்கும் எடுத்துக் காட்டாக இப் படத்தினைக் குறிப்பிடலாம்.
என் சுவாசமே: மௌனத்துள் புதைந்து போன வலி நிறைந்த காதலின் காட்சியமைப்பு.
இந்தப் படத்தினை நீங்கள் அனைவரும் நேரம் கிடைக்கும் போது பார்த்து இக் குறும்படக் கலைஞர்களுக்கும் உங்கள் ஆதரவினை வழங்கலாம் அல்லவா.
|
25 Comments:
இன்று காலைதான் படம் பார்த்தேன், பின்னணி இசை அருமையாக இருந்தது.
//அது அனுபவித்துப் பார்த்தோருக்குத் தான் இலகுவில் புரியும். ///
அப்ப பாஸ் நல்லா அனுபச்சிருக்கிறார் போல
அடடா வடை போச்சே.....
விமர்சனம் அருமையா இருக்கு மக்கா, படம் அப்புறமா பார்க்குறேன்.
@M.Shanmugan
இன்று காலைதான் படம் பார்த்தேன், பின்னணி இசை அருமையாக இருந்தது.
//அது அனுபவித்துப் பார்த்தோருக்குத் தான் இலகுவில் புரியும். ///
அப்ப பாஸ் நல்லா அனுபச்சிருக்கிறார் போல
//
அடப் போங்க பாஸ், யாராச்சும் காதல் பண்ணாமல் இருப்பீங்களா?
@MANO நாஞ்சில் மனோ
அடடா வடை போச்சே.....
விமர்சனம் அருமையா இருக்கு மக்கா, படம் அப்புறமா பார்க்குறேன்.
//
நன்றி அண்ணே.
வடை போனால் என்ன, பொங்கல் இருக்கு! எடுத்துங்க்குங்க;-)))
மாப்ளே, விமர்சனம் படிச்சுட்டேன். படத்தை பார்க்க தூண்டும் வகையில் விமர்சனம் போட்டிருகிங்க. கண்டிப்பா பாக்கிறேன்,\\
நம்ம தளத்தில்:
அரசே, ஒரு பாக்கெட் அல்வா வேணாம்? ஒரு சொட்டு நெய்யாவது கிடைக்குமா?
அழகான, அருமையான விமர்சனம்... நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"
வணக்கம் நிரூபன்!
ஓரே வியாதிய வைச்சு இன்னும் எவ்வளவு நாள்தான் படம் எடுக்கப்போகிறார்களோ..?
விமர்சனம் அருமை படம் நேற்றுத்தான் பார்த்தேன்.. வாழ்த்துக்கள்.
விமர்சனம் நல்லா இருக்கு மச்சி...
வணக்கம்,நிரூபன்!விமர்சனம் நன்று.படம் பார்க்கவில்லை!கதை எப்போதோ பார்த்த சினிமாப் படத்தை நினைக்க வைத்தது.K.பாலசந்தர்,ரஜனியையும்,கமலையும் சிங்கப்பூர் வரை கூட்டிச் சென்று ஒரு படம் பண்ணினாரே?அது பேர் கூட....மறந்து போச்சு!
@தமிழ்வாசி பிரகாஷ்
மாப்ளே, விமர்சனம் படிச்சுட்டேன். படத்தை பார்க்க தூண்டும் வகையில் விமர்சனம் போட்டிருகிங்க. கண்டிப்பா பாக்கிறேன்,\\
//
நன்றி பாஸ்..
@திண்டுக்கல் தனபாலன்
அழகான, அருமையான விமர்சனம்... நன்றி நண்பரே!
//
நன்றி நண்பா.
@காட்டான்
வணக்கம் நிரூபன்!
ஓரே வியாதிய வைச்சு இன்னும் எவ்வளவு நாள்தான் படம் எடுக்கப்போகிறார்களோ..?
விமர்சனம் அருமை படம் நேற்றுத்தான் பார்த்தேன்.. வாழ்த்துக்கள்.
//
கொஞ்சம் வித்தியாசமாக செய்திருக்கிறார்கள் தானே அண்ணா.
@சசிகுமார்
விமர்சனம் நல்லா இருக்கு மச்சி...
//
நன்றி மச்சி.
@Yoga.S.FR
வணக்கம்,நிரூபன்!விமர்சனம் நன்று.படம் பார்க்கவில்லை!கதை எப்போதோ பார்த்த சினிமாப் படத்தை நினைக்க வைத்தது.K.பாலசந்தர்,ரஜனியையும்,கமலையும் சிங்கப்பூர் வரை கூட்டிச் சென்று ஒரு படம் பண்ணினாரே?அது பேர் கூட....மறந்து போச்சு!
//
ஐயா, எனக்கும் அந்தப் படம் ஞாபகம் வரவில்லையே...
விமர்சனம் அருமையாக இருந்தது தோழரே..படத்தை பார்க்கும் ஆவல் தந்தது..
நிரூபன் said... Best Blogger Tips [Reply To This Comment]
@Yoga.S.FR
வணக்கம்,நிரூபன்!விமர்சனம் நன்று.படம் பார்க்கவில்லை!கதை எப்போதோ பார்த்த சினிமாப் படத்தை நினைக்க வைத்தது.K.பாலசந்தர்,ரஜனியையும்,கமலையும் சிங்கப்பூர் வரை கூட்டிச் சென்று ஒரு படம் பண்ணினாரே?அது பேர் கூட....மறந்து போச்சு!
//
ஐயா, எனக்கும் அந்தப் படம் ஞாபகம் வரவில்லையே...///// "நினைத்தாலே இனிக்கும்" என்பது தான் அந்தப் படம்!
அண்ணே படம் நேற்று பார்த்தேன்...உங்க விமர்சனம் அருமை...மிகவும் அழகாக சொல்லி இருக்குறீங்க..
அழகான விமர்சனம்...
படம் பார்த்தேன்...ரசித்தேன் சகோதரம்...
பார்க்கிறேன் பார்க்கிறேன் !
சினிமா உங்கள் விமர்சனத்தால் பெருமை பெற்றது போல விமர்சனம் செய்த விதம் அவ்வளவு அருமை.
பகிர்வுக்கு நன்றி நிரூபன்... நேரம் கிடைக்கும்போது பார்க்கிறேன்...
வணக்கம்...
இலங்கையில் இருந்து இயங்கும் எமது வணக்கம் செய்தித் தளத்தில் இன்றைய வலைப்பதிவு பக்கத்தில் தங்களின் இந்தப் பதிவு அலங்கரிக்கிறது என்பதை மிகவும் மனமகிழ்வுடன் அறியத் தருகின்றோம்.
www.vanakkamnet.com
உங்களுக்கு திருமணம்முடிக்க பதிவுலகமே திரண்டு வந்திட்டு இருக்கு
காதல் கதை விமர்சனமா? மாட்டிக்காதிங்க பட்டவன் செல்றன்..
விமர்சனம் பார்த்துட்டு மெயில் அனுப்புகின்றேன்.....
Post a Comment