அடுத்தவன் மனைவி மீது அலை பாயும் ஆண்களின் கண்கள்!
உன் அருகே
வாழ முடியாத நினைவுகளோடு
தெருவோரத்தில் தத்தித் தாவும்
உன் பாதச் சுவடுகளில்
முட்டி மோதிட முடியாது- உனை(ப்)
பின் தொடர்ந்து சென்று அழுகின்றன
என் பாதங்கள்- ஆனால் நீயோ;
அலைபேசியில் பேசியவாறு
மோட்டார் பைக்கில்
அடுத்தவன் பின்னிருந்து
போகும் போதாவது
ஒரு செல்லப் புன்னகையை
உதிர்த்து விட்டு(ச்) செல்லலாமே!
நீ அடுத்தவன் மனைவியாயிருந்தாலும்
யா(ஆ)ருக்கும் தெரியாமல்
ரசித்திடும் ஆண்களின்
உள்ளத்து உணர்வும் இது தானோ?
மெல்லிதாய் கிறங்கடிக்கும்
மோகத்தை உண்டு பண்ணும்- இன்ப(த்)
தொல்லையை அதிகரித்து
அல்லி போல் உனை(க்)
காணாது அடிக்கடி வாடச் செய்யும்- கை
அருகே நீ இல்லையே என்றாலும்
அணைத்திட(க்) கைகளுக்கு
வேலையை கூட்டிடும்;
இது காதலா - இல்லையே
பருவத் தேடலே என
பைங்கிளி நீ சொல்லினாலும்
மனம் அமைதி கொள்ளுமா?
உனை விட்டு எந்தன்
உணர்வும் செல்லுமா?
காதல் வலை விரித்த கன்னி செய்யும் கபட நாடகம்!
எம் முதல் சந்திப்பு
மௌனங்களுக்குள் சிதையுண்டு
வார்த்தைகளின்றிப் புதையுண்டு
போய் விட்டதென
நான் விம்மினேன் - நீயோ
எனைக் கடந்து சென்று
அலைபேசியில் ஹலோ
என் செல்லம் என பேசிய போது
தான் விழித்து(க்) கொண்டேன்!
இது காதல் அல்ல
கன்னி செய்யும்
கபட நாடகம் என்று!
கவிதையினை அலங்கரிக்க இன்னோர் கவிதை ஏன்?
உதிர்ந்து விழும் வார்த்தைகளை
ஒன்று திரட்டி
கவிதையாக்கி எழுதிட
ஆவல் கொண்டேன் - அவை
சந்தமின்றி உடைந்து சென்ற
காரணத்தால்
நொந்து போனேன் - நாளை
நமக்கான முதல் சந்திப்பில்
காதல் ஓலை கொடுத்திட
விரும்பியது மனம்!
உனை விட நல்ல கவிதை
இந்தப் பூமியில்
பிறக்காதா என ஏங்குகிறது
எந்தன் உள்ளம்!
நேற்றைய பதிவுகளைப் படிக்காது தவற விட்டோருக்காக:
|
15 Comments:
haaaa...., haaaa,,, thanks for fufill my request. All are super.
ஒவ்வொன்றும் அதன் பாணியில் அழகு...
கடைசி ஒன்று சுகப்பிரசவம்...
அழகிய கோர்வை நிரூபன்...
அசத்தல் குறை ஒன்றும் இல்லை
டைட்டில் வைப்பதிலும், சப் டைட்டில் போடுவதிலும் நிரூபன் மன்னன் தான்
Thambi niru.....
Nice.....
:)
பகல் வணக்கம், நிரூபன்!கவிதைகள் அருமை.அடுத்தவன் பொண்டாட்டி ஆனதுக்கு அப்புறமும்??????????ஹி!ஹி!ஹி!
வணக்கம் சகோ.,
நலமா?
கவிதைகள் அத்தனையும்
நல்லா இருக்குது......
அருமை மச்சி....
அந்த முதலாவது கவிதை சூப்பர் அவ்வ்வ்வ்வ்வ்வ்
கவிதைகள் அத்தனையும்
நல்லா இருக்கு...முதலாவது கவிதை அசத்தல் சகோதரம்...
A B C D ....?
அருமையான kavithai
அன்புடன் :
ராஜா
அடுத்தவர் மொபைல் நம்பரில் நீங்கள் SMS அனுப்பலாம்
அழகிய கவிதை மாலை.
முக்கியமான விஷயத்தை கவிதையாக தந்திருக்கிறீர்கள்.ஹே..ஹே..
நிரூ ரொம்ப கவிதையை (பெண்களை) அறிஞ்சு எழுதுறீங்க. பலே!
Post a Comment