Wednesday, November 23, 2011

ஈழத்தில் சோதனைகளின் மத்தியில் சாதனை படைத்த புலிக் குரல்!

ஒரு போராட்டத்தின் வெற்றிக்கும், அப் போராட்டமானது மக்கள் மனங்களை வெல்வதற்கும் ஊடகங்களின் பணி அவசியமான ஒன்றாக காணப்படுகின்றது. பிரச்சாரங்களை முன்னெடுப்பதற்கும், போராட்ட கள நிலமைகளை மக்கள் முன் கொண்டு செல்வதற்கும் ஊடகங்களின் பணி இன்றியமையாத ஒன்றாக விளங்குகின்றது. இதனை நன்கு உணர்ந்த புலிகள் தமது கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைச் சேவைகளை ஆரம்பித்தார்கள்.ஈழத்தில் பல்வேறு இடர்களையும், இடப் பெயர்வுகளையும் சந்தித்தாலும் மக்களுக்காக ஓயாது ஓங்கி ஒலித்த வானொலி எனும் பெருமையினைத் தன்னகத்தே கொண்டு விளங்குவது தான் புலிகளின் குரல் வானொலியாகும்.
சீரான மின்சார வசதியின்மை, ஒலிபரப்பினை நடாத்துவதற்கேற்ற ஒலிபரப்புச் சாதனங்கள் போதியளவு இன்மை; இராணுவ விமானங்களின் குண்டு வீச்சு எந் நேரமும் ஒலிபரப்பு நிலையம், ஒலிபரப்புக் கோபுரம் (அன்டெனா) மீது இடம் பெறலாம் எனும் அச்ச நிலை ஆகியவற்றுக்கு மத்தியில் ஒரு தனித்துவமான வானொலி சேவையினை ஈழ மக்களுக்கும், போராளிகளுக்கும் வழங்கிய பெருமை புலிகளின் குரலையே சாரும். இலங்கையில் நடு நிலமையான ஊடகங்கள் மீதான குறி வைத்துத் தாக்கும் நிகழ்வுகள் இடம் பெறத் தொடங்கிய பின்னர் மக்களுக்கான சேவையினை நடு நிலையோடு வழங்குகின்ற ஊடகமாக புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதியில் பல இடர்களுக்கு மத்தியில் தன் பணியினைச் செய்து கொண்டிருந்தது புலிகளின் குரல்.

வன்னிப் பகுதியிலும், ஈழத்தின் ஏனைய பகுதிகளிலும் வாழ்ந்த போராளிகளும்,பொது மக்களுக்கும் இந்த வானொலியில் கடமையாற்றினார்கள். வர்த்தக விளம்பரங்களுக்காக தமிழீழ வானொலி எனும் ஒலிபரப்பினையும், முற்று முழுதான போராட்ட ஊடகமாகப் புலிகளின் குரலையும் திரு.வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனைக்கமைவாகப் புலிகள் வளர்த்தெடுத்தார்கள். ஆரம்ப நாட்களில் வன்னிப் பகுதியிலும், யாழிலுல் உயரத் தெரியும் நீண்ட அன்ரெனாக்கள் அனைத்தையும் ஸ்ரீலங்கா இராணுவம் ஒலிபரப்புக் கோபுரம், புலிகளின் முகாம்கள் என விமானம் மூலம் கண்காணித்துக் குண்டு போட்ட போதெல்லாம் பல டம்மி அன்டெனாக்களை அமைத்துப் இராணுவத்தினருக்குத் தண்ணி காட்ட வேண்டிய நிலையினைப் புலிகளின் குரல் ஊடக நிறுவனத்தினர் கையிலெடுத்தார்கள். 

புலிகளின் குரல் தன் பணிக் காலத்தில் பல்வேறுபட்ட இடர்களைச் சந்தித்திருக்கிறது. அந்த வரிசையில்; 1998ம் ஆண்டு ஜெயசிக்குறு சமர் இடம் பெற்ற போது; வன்னிப் பகுதியில் புலிகளின் குரல் ஒலிபரப்பு நிலையம் அடர்ந்த காட்டுப் பகுதியினுள் இருந்தது. அப்போது இன்றைய நவீன தொழில் நுட்ப வசதிகளைப் போன்று சீடி (இறுவட்டு) ப்ளேயரிலோ அல்லது கணினி மூலமாகவோ பாடல்களை ஒலிபரப்புகின்ற வசதி வாய்ப்புக்கள் இல்லை. கசட் பீஸ் (ஒலி நாடா) எனப்படும் ரேப் ரெக்காடர் மூலமாகத் தான் பாடல்களை ஒலிபரப்பும் வசதி இருந்தது. வானொலி நிலையத்தில் தமக்கு வேண்டிய ஒரு பாடலை ஒலிபரப்ப வேண்டுமாயின் ரேப் இனை வானொலிப் பெட்டியினுள் போட்டு Forward பண்ணித் தமக்கு வேண்டிய பாடலை அப்போது கண்டு பிடிப்பார்கள்.

இல்லையேல் பேனையினை ரெப் ரெக்காடர் நாடாவின் ஓட்டையினுள் சொருகி சுற்றத் தொடங்குவார்கள். நமக்கான பாடல் இந்தளவுடன் வரும் என்று கணித்துக் குத்து மதிப்பாக ரேடியோவினுள் போட்டு ஒலிபரப்பிப் பார்த்துத் தான் ஒலிபரப்பில் சேர்த்துக் கொள்ள முடியும். இவ்வாறு தமிழீழ வானொலியில் மாலை நேர நிகழ்ச்சி செய்து கொண்டிருந்த கிருஸ்ணபிள்ளை திருமாறன் அவர்களும் கசட்டினை சுற்றித் தனக்கு வேண்டிய பாடலைத் தெரிவு செய்து விட்டு, நேரத்தைப் பார்த்த பின் ஒலிபரப்பினைத் தொடரும் நோக்கில் மைக் பக்கம் திரும்பிப் பார்த்திருக்கிறார். அடர்ந்த காட்டில் இருந்த ஒலிபரப்பு நிலையத்தினுள் ஒரு பாம்பு ஒன்று வந்து மைக்கின் முன்னே ஏறி படமெடுத்து ஆடிக் கொண்டிருக்கின்றது. நேரம் மாலை 4.30 நிமிடங்கள்.
இப்போது மாலைச் செய்தி அறிக்கை வாசிப்பதற்கான நேரம். மைக்கில் பாம்பு இருக்கிறதே என எண்ணி மைக்கினை ஆப் (OFF) செய்து ஒலிபரப்பினை நிறுத்தவும் முடியாது. அதே வேளை மைக் ஆன் செய்யப்பட்டு செய்தி வாசிக்கத் தொடங்கிய பின்னர்; பாம்பு பாம்பு என்று கத்திக் கூச்சலிட்டு உதவியாளரையும் அழைக்க முடியாது. ஆனாலும் பத்து நிமிடங்கள் மனதில் தைரியத்தை வர வைத்துச் செய்தி வாசித்து முடித்த பெருமை அறிவிப்பாளர் திருமாறன் அவர்களையே சாரும்.புலிகளின் குரல் நிறுவனம் அர்ப்பணிப்புடன் கூடிய மனத் தைரியத்தை அங்கே பணி புரிந்த அனைவருக்கும் வழங்கியிருக்கின்றது என்றால் மிகையாகது. ஏன் புலிகள் அமைப்பிலும் மனத் தைரியம் மிக்கவர்கள் பலர் வாழ்ந்திருக்கிறார்கள். இது காலத்தின் கொடையாகும். 

இதே போன்று இன்னோர் மெய் சிலிர்க்க வைக்கும் சம்பவமும் இடம் பெற்றது. யாழ்ப்பாணத்தில் 1995ம் ஆண்டிற்கு முன்பதாகப் புலிகளின் குரல் ஒலிபரப்புக் கலையகம் அமைந்திருந்த பகுதிக்குள் ஊடுருவிய இராணுவத்தினர் ஒலிபரப்புக் கலையகத்திலிருந்து (ஸ்டூடியோ) ஒலிபரப்பு அன்டெனாவினை நோக்கிச் செல்லும் கேபிளினை இடை நடுவில் அறுத்து விட்டுத் தமது புலனாய்வு வேலைக்குச் சேதாரம்ஏதும் நிகழாதவாறு இரவோடு இரவாக ஓசைப் படாது சென்று விட்டார்கள். மறு நாள் காலை 6.30 மணிக்குப் புலிகளின் குரலின் காலை ஒலிபரப்பினை ஆரம்பிப்பதற்கு முன்பதாக ஒலிபரப்புக் கோபுரப் பக்கம் சென்ற போராளி லெப்டினன்ட் அமலன் அவர்கள் வயர் வெட்டுப்பட்டிருப்பதனை உடனியாக பணிப்பாளர் ஜவான் அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்.

அந்தக் கேபிளுக்கு மாற்றீடாக இன்னோர் கேபிளைப் பெற்று ஒலிபரப்பினை ஆரம்பிப்பத்தால் வழமையான நேரத்திற்கு ஒலிபரப்பினை ஆரம்பிக்க முடியாது. கேபிளை உடனடியாகப் பெற்றுக் கொள்ளுவதற்கு அருகே வணிக நிலையங்கள் ஏதும் இருக்கவில்லை.லெப்.அமலன் அவர்கள் புலிகளின் குரல் பொறுப்பாளரின் நிலையினை உணர்ந்தவராய், மக்களுக்கு இன்று எப்படியாவது தமது வானொலிச் சேவை இடம் பெற்றே தீர வேண்டும் எனும் தீராத ஆசை கொண்டவராக அர்ப்பணிப்புடன் செயற்படத் தொடங்கினார். அறுந்திருந்த கேபிளை தனது கையால் பிடித்து ஒலிபரப்பு நிறைவடையும் நேரமான காலை எட்டு மணி வரை ஒலிபரப்பினை நாடாத்துவதற்கு உதவி செய்ய வேண்டும் என முடிவெடுத்தார்.

ஒலிபரப்புக் கலையகத்திலிருந்து ஒலிபரப்புக் கோபுரத்தினை நோக்கிச் செல்லும் கேபிளில் சிறிய அசைவு இடம் பெற்றாலும் வானொலி ஒலிபரப்பில் தடங்கல்கள் ஏற்படும். அந்தக் கேபிளின் ஊடாக உயர் அழுத்த மின்சாரம் பாய்வதனை அப்போது யாரும் உணர்ந்திருக்கவில்லை. ஒலிபரப்பு நிலையத்தினூடாக வானொலிக் கோபுரத்தினை நோக்கி அனுப்பப்படும் கேபிளை இறுகப் பற்றிப் பிடித்திருந்த அமலன் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் உயர் அழுத்த மின்சாரம் உடலில் பாய்ந்த காரணத்தினால் விறைப்படைகின்றார். ஆனாலும் ஒலிபரப்பிற்கு இடையூறு வரக் கூடாது எனும் காரணத்திற்காக ஒலிபரப்புக் கோபுரத்தினை நோக்கிச் செல்லும் வெட்டப்பட்ட கேபிளினைப் பிடித்திருக்கும் தன் கையினை ஒலிபரப்பு நிறைவடையும் வரை அவர் எடுக்கவேயில்லை.
ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் போது வீரச்சாவடைந்த ஈழத்தின் புகழ் பூத்த பாடகர் போராளி சிட்டு, மற்றும் 2007ம் ஆண்டு கார்த்திகை மாதம் 27ம் திகதியன்று இலங்கை விமானப் படையின் விமானக் குண்டு வீச்சில் உயிரிழந்த இசைவிழி செம்பியன், சுரேஸ் லிம்பியோ, தர்மலிங்கம், ஆகியோரும்; 2009ம் ஆண்டு மே மாதம் இராணுவ ஷெல் தாக்குதலில் உயிரிழந்த புலிகளின் குரல் செய்திப் பிரிவின் பொறுப்பாளர் தவபாலன் ஆகியோரும் ஈழப் போராட்ட காலத்தில் தம் இன்னுயிரை அர்ப்பணித்த திறமை மிக்க புலிகளின் குரல் வானொலியின் பணியாளர்களாவார். இவ்வாறு பல அர்ப்பணிப்புக்கள் நிறைந்த மக்களின், போராளிகளின் பெரும் பணியால் இன்று இணையத்திலும் ஏறி மக்கள் இதயங்களை மகிழ்வடையச் செய்து கொண்டிருக்கிறது புலிகளின் குரல். இடர்களின் மத்தியிலும் வானொலி மன்றங்களைப் பிரதேசங்கள் தோறும் அமைத்து மக்கள் வாழ்வோடு கலந்திருந்த பெருமை புலிகளின் குரலையே சாரும்.

பிற் சேர்க்கை: இப் பதிவிற்கான சில தகவல்களைத் தந்ததோடு, என் ஞாபகங்களைக் கிளறி விட்டு; என்னை இப் பதிவினை எழுதத் தூண்டிய பதிவர் "பவுடர் ஸ்டார் ஐடியா மணி" அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றிகளை என் சார்பிலும், உங்கள் சார்பிலும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

32 Comments:

test said...
Best Blogger Tips

ME the first?

test said...
Best Blogger Tips

என்ன ஒரு அதிசயம்! நிருபன் பதிவுக்கு முதன்முறையாக! :-)

ஆகுலன் said...
Best Blogger Tips

இவர்களது தியாகம் அளப்பரியது......

மறக்க முடியாதா பல செய்திகளை கேட்ட பல நாட்க்கள்......

நிரூபன் said...
Best Blogger Tips

@ஜீ...

ME the first?
//

வணக்கம் பொஸ்,
நீங்க தான் முதலாவது ஆள்.
சந்தேகமே இல்லை.
ஆனால் ஆப்பிசில் எப்படி இந்தப் பதிவைப் படிப்பீங்க?

கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

நிரூபன் said...
Best Blogger Tips

@ஜீ...

என்ன ஒரு அதிசயம்! நிருபன் பதிவுக்கு முதன்முறையாக! :-)
//

பொஸ், கூல் டவுன்.
பிரீயா ஒரு மைலோ பக்கட் அனுப்பி வைக்கிறேன்.

இது விபரீதமான பதிவு என்று தென் பகுதியில பேசிக்கிறாங்க
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

test said...
Best Blogger Tips

நீங்கள் பாம்பு பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள்!
சில சமயங்களில் காட்டுக்குள் பதுங்கியிருக்கும்போது துப்பாக்கியில் பாம்பு சுற்றி விட, (பக்கத்தில் ராணுவம்) எதுவும் செய்ய முடியாமல், சத்தமிடாமல் மடிந்திருக்கிறார்களாம் சிலர் என்று படித்திருக்கிறேன்! (ஏதொ ஒரு படத்திலும் காட்டியிருந்ததாக ஞாபகம்)
முன்பெலாம் இறந்தவர்கள் பட்டியலில் சிலரின் படத்தின் கீழ் பாம்பு கடித்து என்றிருக்கும்!

Yoga.S. said...
Best Blogger Tips

காலை வணக்கம், நிரூபன்!அருமையாக காலமறிந்து பதிவு செய்திருக்கிறீர்கள். நினைவுகள் மீட்டப்படுவது காலத்தின் தேவை! நன்றி!!!!!

K said...
Best Blogger Tips

வணக்கம் நிரூ! முதலில் பதிவுக்கு நன்றி! பதிவில் ஒரு சில திருத்தங்கள் செய்ய வேண்டும்!

01. லெப்.அமலனின் வீரச்செயல் நடந்தது வன்னியில் அல்ல! யாழ்ப்பாணத்தில்!

02. நாட்டுப்பற்றாளர் இசைவிழி செம்பியன் அக்கா உள்ளிட்ட 11 பேர் கொல்லப்பட்டது, 2007 மார்கழி 27 அல்ல! நவம்பர் 27 ( கார்த்திகை 27 )

இவற்றை மாற்றிவிடவும்!

K said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
சென்னை பித்தன் said...
Best Blogger Tips

லெப்.அமலன் பற்றிய தகவல் வியக்க வைக்கிறது .

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

திருமாறன் பற்றிய செய்தியும்தான்!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஜீ...

நீங்கள் பாம்பு பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள்!
சில சமயங்களில் காட்டுக்குள் பதுங்கியிருக்கும்போது துப்பாக்கியில் பாம்பு சுற்றி விட, (பக்கத்தில் ராணுவம்) எதுவும் செய்ய முடியாமல், சத்தமிடாமல் மடிந்திருக்கிறார்களாம் சிலர் என்று படித்திருக்கிறேன்! (ஏதொ ஒரு படத்திலும் காட்டியிருந்ததாக ஞாபகம்)
முன்பெலாம் இறந்தவர்கள் பட்டியலில் சிலரின் படத்தின் கீழ் பாம்பு கடித்து என்றிருக்கும்!
//

உண்மை தான் சகோ,
அவ்வாறா சம்பவங்களும் இடம் பெற்றிருக்கின்றன.

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FR

காலை வணக்கம், நிரூபன்!அருமையாக காலமறிந்து பதிவு செய்திருக்கிறீர்கள். நினைவுகள் மீட்டப்படுவது காலத்தின் தேவை! நன்றி!!!!!
//

நன்ற் ஐயா!

இப் பதிவிற்கும் முன்னரும் புலிகளின் குரல் வானொலி தொடங்கிய 21 வருட நிறைவு நாளன்று ஓர் பதிவினைப் போட்டிருந்தேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி
வணக்கம் நிரூ! முதலில் பதிவுக்கு நன்றி! பதிவில் ஒரு சில திருத்தங்கள் செய்ய வேண்டும்!

01. லெப்.அமலனின் வீரச்செயல் நடந்தது வன்னியில் அல்ல! யாழ்ப்பாணத்தில்!

02. நாட்டுப்பற்றாளர் இசைவிழி செம்பியன் அக்கா உள்ளிட்ட 11 பேர் கொல்லப்பட்டது, 2007 மார்கழி 27 அல்ல! நவம்பர் 27 ( கார்த்திகை 27 )

இவற்றை மாற்றிவிடவும்!//

மாற்றி விட்டேன் நண்பா,

எனக்கும் நினைவிருந்தது மாவீரர் நாளன்று தான் விமானக் குண்டு வீச்சு இடம் பெற்றது என்று.
ஆனால் எழுதும் போது ஆர்வக் கோளாறில் மறந்து விட்டேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

மச்சி, புலிகளின் குரலின் வரலாற்றில் இன்னும் சில மயிர்கூச்செறியும் சம்பவங்களும் உள்ளன!

1998 காலப்பகுதியில், ஒரு காட்டுக்குள் ஒலிபரப்பு நடந்துகொண்டிருந்தது! அப்போதும் திருமாறன் அண்ணாதான் செய்தி வாசித்துக்கொண்டிருந்தார்! திடீரென்று வானில் யுத்தவிமானங்கள்! வானொலி நிலையம் அருகே, குண்டுகளை வீசுகிறார்கள்! குண்டு வெடிக்கும் ஓசை, வானொலியில் நேரடி ஒலிபரப்பாக வெளியே வந்துவிடுகிறது! மக்கள் அனைவரும் பயந்து விட்டனர்!
//

நினைவூட்டியதற்கு நன்றி,

இந்தச் சம்பவம் எனக்கு ஞாபகத்தில் இருந்தது.

ஆனாலும் எழுத மறந்து விட்டேன்.

மன்னிக்கவும்.

K said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
K said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
அம்பலத்தார் said...
Best Blogger Tips

வணக்கம் நிரூ, எமது போராட்டத்தின் அறியப்படாத பக்கங்களை சுவைபட ஆவணப்படுதுவதற்கு வாழ்த்துக்கள்.

ஆகுலன் said...
Best Blogger Tips

Powder Star - Dr. ஐடியாமணி said...

2007 நவம்பர் 27 அன்று, புலிகளின் குரலில் மாவீரர்நாள் சிறப்பு ஒலிபரப்பு! எவ்வித இடையூறும் இன்றி ஒலிபரப்பு நடந்துகொண்டிருந்தது! மாலை 4.30 க்கு இரண்டு மிக் விமானங்கள்! கிளிநொச்சி 155 ம் கட்டைப் பகுதியில் இருந்த புலிகளின்குரல் அலுவலகத்தை குண்டுவீசி நொறுக்கிவிடுகிறார்கள்! பல கோடி பெறுமதியான சொத்துக்கள் அடித்து துவம்சம் செய்யப்பட்டு விட்டன!

பிரபல மூத்த அறிவிப்பாளர் இசைவிழி செம்பியன் கொல்லப்பட்டு, இரத்தவெள்ளத்தில் கிடக்கிறார்! அவரது தோழிகளான சக அறிவிப்பாளர்கள் கதறி அழுகின்றனர்! அங்கு வந்த பொறுப்பாளர் ஜவான் அண்ணா, கொற்றவை எனும் சிரேஷ்ட அறிவிப்பாளரைப் பார்த்து, “ இப்போது அழவேண்டாம் கொற்றவை! அடுத்த செய்தியறிக்கையினை நீங்கள் தான் வாசிக்க வேண்டும்!” என்கிறார்!

கொற்றவை அழுவதை நிறுத்திவிட்டார்! அருகிலே உற்றதோழி உடல் சிதறி பலியாகிக்கிடக்கிறார்! ஆனால் கொற்றவை கடமைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்! செய்திப் பிரதியினை வேகமாகப் படித்து சரிபார்க்கிறார்!

இறந்த தோழியின் உடலைதொட்டு அழுததால், கொற்றவையின் ஆடைமுழுவதும் இரத்தக்கறைகள்! சதைத்துண்டுகள்! அப்படியே அந்த ரகசியக் கலையகம் செல்கிறார்! நிதானமாக செய்தியினை வாசிக்கிறார்!

செய்திமுடிந்து மைக் ஓஃப் பண்ணியதுதான் தாமதம், தன் தோழியை எண்ணி கதறி அழ ஆரம்பித்தார்!

வானொலி அறிவிப்பாளருக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கக்கூடாது என்று பலமுறை சொல்லித்தரப்பட்டது! அன்று அது நிரூபிக்கப்பட்டது!////

இவர்கள் பெயர்கள் நிலைத்து நிக்கவேண்டும்,,,,,தகவலுக்கு நன்றி ...இந்த சம்பவம் பற்றி புலிகளின் குரல் செய்தி கேட்டதாக ஞாபகம்...

நிரூபன் said...
Best Blogger Tips

@சென்னை பித்தன்

லெப்.அமலன் பற்றிய தகவல் வியக்க வைக்கிறது .
//

நன்றி ஐயா,

இதனை விட வியக்க வைக்கும் செய்திகளை ஐடியாமணி அவர்கள் சொல்லியிருக்கார். ஓய்வாக உள்ள போது வந்து படிச்சுப் பாருங்க.

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

பல டம்மி அன்டெனாக்களை அமைத்துப் இராணுவத்தினருக்குத் தண்ணி காட்ட வேண்டிய நிலையினைப் புலிகளின் குரல் ஊடக நிறுவனத்தினர் கையிலெடுத்தார்கள்.//

செமத்தனமான ஐடியாவை கையாண்டு இருக்கிறார்களே....!!!!

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

அர்ப்பணிப்பு, வீரம் தமிழனுக்கே உரியது...!!!

காட்டான் said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்!
பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள் பத்து நிமிடம் செய்தியையே வாசித்த மாறனின் மனத்திடம் பாராட்டுக்குறியது...

புலிகளின் குரல் சேவை அளப்பெரியது...
தக்க தருனத்தில் வந்திருக்கும் பதிவு.. நன்றி 

சசிகுமார் said...
Best Blogger Tips

என்னப்பா ஆளாளுக்கு இவ்ளோ பெரிய கமென்ட் போடுறீங்க... இதுக்கு இடையில நாங்க போடுற கமென்ட் தெரிய மாட்டேங்குது... ஹீ ஹீ...

Unknown said...
Best Blogger Tips

அபரிமிதமான அர்ப்பணிப்பு நிரூ படிக்கும் போது சிலிர்ப்பு உண்டானதை தவிர்க்க இயலவில்லை..

Unknown said...
Best Blogger Tips

நிரூ.. எனக்கு சில சந்தேகங்கள் உண்டு. உங்களுக்கு விருப்பம் இல்லை எனில் இதை டெலிட் செய்து விடவும். எந்த விஷயத்திற்கும் நிறைய கோணங்கள் உண்டு.

கேள்வி என்னவெனில்

விடுதலை புலிகளால் சிங்கள மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்புகள் இருந்ததா? அப்படி இருந்தது எனில் இலங்கை ராணுவத்திற்கும் புலிகளுக்கும் என்ன வித்தியாசம்? கொஞ்சம் ஒரு பதிவு போட்டீங்கனா தெரிஞ்சுக்கிவோம்..

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில், அந்த அறிவிப்பாளரின் மனோநிலை எப்படி இருந்திருக்கும்? அவர் அச்சப்படவே இல்லை! பதட்டம் இன்றி நிதானமாகவே செய்தியினை வாசித்தார்!

இந்த ஒலிபரப்பை வவுனியாவில் உள்ள ஒரு ஊடகவியலாளர் கேட்டுக்கொண்டிருந்து ஒலிப்பதிவு செய்துவிடுகிறார்! பின்னர், அன்றிரவு பி பி சி தமிழோசையில், இதனை ஒலிபரப்பினார்கள்!

அருகில் குண்டு வெடிக்கும் போது நீங்கள் பயப்படவில்லையா? என திருமாறன் அண்ணாவிடம் கேட்டபோது அவர் சொன்னார்,

“ அந்த நேரத்தில் சாகத் துணிந்துவிட்டேன்! அதனால் பயப்படவில்லை!”/// ஹாட்ஸ் ஆப்..

எங்களுக்கு தெரியாத ஈழ வரலாறு .. பதிவுகளில்.. நன்றி சகோ...

காட்டான் said...
Best Blogger Tips

தம்பி மணிக்கும் எனது நன்றிகள் உங்கள் மூலம் இன்னும் கூடுதலான தகவல் தெரிஞ்சுகொண்டேன்..!!

K said...
Best Blogger Tips

விடுதலை புலிகளால் சிங்கள மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்புகள் இருந்ததா? அப்படி இருந்தது எனில் இலங்கை ராணுவத்திற்கும் புலிகளுக்கும் என்ன வித்தியாசம்? கொஞ்சம் ஒரு பதிவு போட்டீங்கனா தெரிஞ்சுக்கிவோம்..///////

ரமேஷ்! உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன்!

விடுதலைப்புலிகளின் சில நடவடிக்கையில், சிறிய எண்ணிக்கையில் சிங்கள மக்கள் கொல்லப்பட்டது உண்மை! இதில் மறைக்கவோ, பூசி மெழுகவோ எதுவுமே இல்லை!

அதற்காக இலங்கை இராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையில் வித்தியாசமில்லாத அளவுக்கு புலிகள் ஒன்றும் பாரதூரமாகச் செய்யவில்லை!

இலங்கை இராணுவத்தின் கையால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கையையும், விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட சிங்கள மக்களின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தால், மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருக்கும்!

மேலும் இலங்கை அரச படைகளால் கொல்லப்பட்ட தமிழர்கள் பற்றிய விபரங்கள் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்!

மேலும் சந்தேகங்கள் இருப்பின் கேட்கவும்!

K said...
Best Blogger Tips

@காட்டான்

தம்பி மணிக்கும் எனது நன்றிகள் உங்கள் மூலம் இன்னும் கூடுதலான தகவல் தெரிஞ்சுகொண்டேன்..!!//////

நன்றி அண்ணர்!

Unknown said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி நன்றி மணி அண்ணே!!

கோகுல் said...
Best Blogger Tips

புலிகளின் குரல் வீரமும் தியாகமும் வியக்க வைக்கிறது!

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails