தாரமும் குருவும் தலை விதிப்படி எனும் எம் ஆன்றோரின் வாக்கிற்கமைவாக எம்மை விட மேலான சக்தி ஒன்றின் மூலம் தான் எம் ஒவ்வொருவரினதும் இல் வாழ்க்கைத் துணையின் தெரிவும் இடம் பெறுகின்றது. இரு மனம் சேர்ந்து ஒரு மனதாக தீர்மானம் மேற்கொண்டு இடம் பெறும் நல் வைபோகம் திருமணம் என்று நாம் கூறினாலும் இரு மனங்களும் இணைந்த ஏகமனதான தெரிவு இடம் பெற ஏதோ ஒரு காரணி ஏதுவாக அமைந்து கொள்கின்றது. எம்மை நம்பி வீட்டிற்கு இல்லாளாக காலடி எடுத்து வைக்கும் துணைவியரை நமது அன்பினால் அரவணைத்து அனுசரித்துச் செல்ல வேண்டிய தேவை ஆண்கள் அனைவருக்கும் உள்ள மிக முக்கியமான செயலாகும். இனி நாம் இப் பதிவினூடாக "திருமணமான ஆண்களுக்கும், திருமணம் ஆகப் போகும் ஆண்களுக்கும்"மிகவும் பயன்மிக்க சில விடயங்களை ஆராய்ந்து பார்ப்போமா?
பெரியவர்களின் ஆசிர்வாதத்துடனோ அல்லது திருட்டுத் தனமாகவோ திருமணம் இடம் பெற்றாலும் பெண்ணைப் பூப் போல மென்மையாக கண் கலங்காது பார்க்க வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். பெண்ணை மனதளவிலும், உடலளவிலும் திருப்திப்படுத்துவது தாம்பத்தியம் மட்டும் தான் எனப் பலரது மனங்களில் கருத்துக்கள் இருக்கும் இக் காலத்தில் எம் அன்பான பேச்சின் மூலமாகவும், எம் ஒவ்வோர் செயல்கள் மூலமாகவும், மனைவியின் மன உணர்வினைப் புரிந்து கொண்டு நாம் நடந்து கொள்ளும் முறைகள் மூலமாகவும் மனைவியை மகிழ்ச்சிப்படுத்தலாம் என மணமான பெரியவர்கள் பலர் சொல்கின்றார்கள். நாம எம் பொண்டாட்டியை அன்பாகத் தானே கூப்பிடுறோம்! இவன் என்ன புதுசா சொல்லுறான் என்று? உங்களில் பலருக்கு ஒரு டவுட் தோன்றலாம்.
நம்ம நாடுகளில் பொண்டாட்டியை அன்பாக கூப்பிடுவதற்குப் பல முறைகள் இருந்தும் நாம் எல்லோரும் கண்டு கொள்ளாதிருப்பதும்; வெறுமனே ஒரே மாதிரியான ரிதத்தில் (ப்ளோவில்) பெண்ணின் மனம் சலிப்படையும் வண்ணம் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான சொல்லினால் அவளை அழைப்பதும் பெண்ணுக்கு எரிச்சலூட்டும் விடயங்களாக இருக்கும். கூப்பிடுவதிலுமா? பெண்களுக்குப் பிரச்சினை என்று நீங்கள் நினைக்கலாம். அடப் போங்க! பெண்கள்; நாம் ஒவ்வோர் தடவையும் அழைக்கும் போதும் தம் உணர்வுகளை வெளிக் காட்டுவதில்லையே! எப்படி இவர்களை அழைப்பதனை வைத்து நாம் அவர்களின் மன உணர்வினை அறிந்து கொள்ளலாம் என்று ஆண்களில் பலருக்கு ஐயங்கள் இருக்கும். எம் நாடுகளில் பொதுவாகப் பெண்டாட்டியை கூப்பிடுவதற்கு "என்னங்க" என்ற ஓர் வார்த்தையினைத் தான் பயன்படுத்துவோம்.
தமிழர்கள் செறிந்து வாழும் நாடுகளில் "என்னங்க" எனும் வார்த்தையினைக் கேட்டுப் பலரது மனைவிமார்களின் காதுகள் புளித்துப் போயிருக்கும். இந்த என்னங்க எனும் வார்த்தைக்கு நிகராக ஈழத்தில் மிகவும் பிரபலம் பெற்றிருக்கும் வார்த்தை தான் "இஞ்சாருங்கோ!"இஞ்சாருங்கோ! இஞ்சாருங்கோ என்று செல்லம் பொழிந்து மனைவி கணவனை கூட்டத்தின் மத்தியில் மெதுவாக இடுப்பில் சுரண்டி/ கிள்ளி அழைக்கும் போது அவன் கொஞ்சம் வெறுப்போடு கூடிய பார்வையினை வீசி,
"என்ன வேணும் உமக்கு?" எனக் கேட்டால் சந்தோசத்தின் உச்சத்தில் கணவனை அழைத்த மனைவியின் மனநிலையோ காற்றுப் போன பலூனின் நிலைக்கு ஒப்பானதாக மாறி விடும். இவ்வாறு அன்பாக மனைவி அழைக்கும் போது, ஒரு பொது இடம் என்றாலும் "என்னடா செல்லம்? / "சொல்லடா செல்லம்!" என்று அழைத்தால் அவள் உள்ளத்தில் பல பட்டாம் பூச்சிகள் பறப்பதனை பார்வை மூலம் கண்டு கொள்ளலாம் என்று கலியாணம் ஆன கணவன்மார் சொல்லுகின்றார்கள்.
நம் நாடுகளில் பொதுவாக "இஞ்சாருங்கோ", "மாமா", "அத்தான்", "செல்லம்", "படவா", "ராஸ்கல்", "குட்டி", "ஹனி (Honey)" "ஓய், / ஏய்"; "அப்பா", "மச்சான்", "மச்சினன்", எனப் பல சொற்களைப் பெண்கள் கையாண்டு தம் ஆசை நாயகன் மீதுள்ள அன்பினைப் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்திக் கொள்வார்கள். "ஏலேய் மாமா! என்ன பண்ணிக்கிட்டிருக்கிறாய்?" என்றும்,
"என்னோட ஆசை அத்தானில்லே! உன்னை நினைச்சாலே உள்ளம் குளிருதடா!" எனவும்,
"என்னோட செல்லமெல்லே! என் மாம்பழமெல்லே! என் ஹனியெல்லே! என் செல்லக் குட்டியெல்லே!"எனவும் தம் அன்பினைப் பெண்கள் வெளிப்படுத்துவார்கள். ஆரம்ப காலத்திலிருந்து இன்று வரை ஈழத்திலும், இந்தியாவிலும் கணவன் மனைவியருக்கிடையிலான நெருக்கத்தினை வெளிப்படுத்தும் வகையில் நடை முறையில் இருக்கும் பொதுவான சொல் தான்; "என்னங்க!" மற்றும் "இஞ்சாருங்கோ!"
ஆனால் இன்று வாழும் இளைய தலை முறையினர் மத்தியில் பிரபல்யமான வார்த்தைகள் தான் செல்லம், ஹனி, அத்தான், மாம்பழம், கண்ணே! கனியே! மச்சானே எனும் வார்த்தைகளாகும். ஆண்களிடம் உள்ள ஒரு இழிவான குணம் என்ன தெரியுமா? பொது இடங்களில் வைத்து மனைவியைப் பேசினால் தாம் ஏதோ வீரப் புருஷர்கள் என ஊரில் உள்ளோர் நம்புவார்கள் என நினைத்து தம் வீர தீரத்தைப் பொது இடங்களில் காட்ட முனைவது. பல பேர் குழுமி நின்று பார்க்கும் ஒரு கோவில் திருவிழாவில் "ஏலேய் மாமா! எனக்கு அந்த வைரக் கல்லுப் பதிச்ச தோடு வாங்கித் தாறியா?" என்று கேட்டால்! ஆண் மகனோ தன் சேர்ட் காலரைக் கொஞ்சம் இழுத்து விட்டு, "எடியேய் பஞ்ச வர்ணம்! உனக்குச் சொன்னாப் புரியாது! கொஞ்சம் பொத்திட்டு இருக்கிறியா? நீ திருவிழாப் பார்க்க வந்தனியா? இல்லே பாக்கட் மணிக்கு வேட்டு வைக்க வந்தனியா?" என்று திட்டுவார்கள்!
எம் தமிழர்களில் எத்தனை ஆண்கள் தம் வெட்கத்தையும், கௌரவத்தையும் விட்டுப் பொது இடங்களில் மனைவியினை அன்பான வார்த்தைகளால் அழைத்திருப்பார்கள்? ஆராய்ச்சி நடத்தினாலும் குறைந்தளவானோர் என்பது தானே முடிவாக கிடைக்கும். பெண்களின் உள்ளம் குளிரும் வண்ணம் உங்களை அவர்கள் என்னங்க என்று அழைக்கும் போது, சொல்லடா செல்லம்! என்னடா குட்டி? என்னடா என் மாம்பழம் என்று எத்தனை ஆண்கள் பொது இடங்களில் அழைத்திருப்பார்கள்? பொண்டாட்டியை எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத இடத்தில் திண்டாட வைக்கும் வகையில் எத்தனை ஆண்கள் மனசை விட்டு தம் உணர்வுகளைக் கொட்டியிருப்பார்கள்?இது நாள் வரைக்கும் உங்கள் துணையினை இப்படியெல்லாம் அழைக்கவில்லையா? கவலையை விடுங்கள்! இதோ பல வழிகளைச் சொல்லித் தருகின்றேன்! இன்றே ஆரம்பியுங்கள்!
கண்ணே! கரும்பே! கனியே! தேனே! மானே என்று நீங்கள் விரும்பும் வகையில் அழைக்கலாம். இல்லையே என்னடா செல்லம் நீ என்னைக் கூப்பிட்டியா என்றும் அழைக்கலாம். இல்லையே உங்களை மாமா என்று பொது இடத்தில் துணைவி கூப்பிடும் போது டார்லிங் என்றோ இல்லை செல்லம் என்றோ நீங்கள் பதிலுக்கு அழைத்து மகிழலாம் அல்லவா? அத்தான் என்று உங்களை அன்பாக அழைக்கும் துணைவியை நீங்கள் மச்சாள் என்று பதிலுக்கு அழைத்துப் பாருங்கள்!அவள் முகம் ஆயிரம் வாற்ஸ் பிரகாசமுடைய மின் விளக்கு வெளிச்சத்திற்கு ஒப்பானதாக மாறிவிடுவதனைக் காணுவீர்கள். "கட்டிலறையிலும், வீட்டினுள்ளும் தான் நாம இப்படிக் கூப்பிடுவோம். பொது இடங்களில் பெண்ணைப் பெயர் சொல்லி அழைப்பது தானே ஆண்மைக்கு அழகு" என நினைப்போர் இன்று முதல் உங்களைக் கொஞ்சம் சேஞ் பண்ணிக்கலாம் அல்லவா?
என் செல்லமே! என் மாம்பழமே! என் மரகதமே! என் ஆசைக் கிளியே! கிளிக் குஞ்சே! ஹனியே! என கொஞ்சம் வித்தியாசமாக உங்கள் மன விருப்பத்திற்கு அமைவாக அழைத்து உங்கள் இல்லாளின் மனம் மகிழும் வண்ணம் நீங்கள் நடந்து கொள்ளலாம் அல்லவா? கமலஹாசன் நடித்த தெனாலி படப் பாடலில் மிகவும் அழகாக பெண்டாட்டியை "இஞ்சாருங்கோ! இஞ்சாருங்கோ! என அழைத்து ஓர் பாடல் பாடியிருப்பார்கள். ஆர்வமுள்ளோர் யூடியூப்பில் தேடிப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.பெண்கள் தம் வெட்கத்தை விட்டு ஆண்களைச் செல்லம் பொழிந்து கூப்பிடுவதில் அக்கறை செலுத்துகிறார்களாம். ஆண்கள் தான் பெண்களின் மனதினைப் புரிந்து கொண்டு அவர்கள் விரும்புவது போன்று கூப்பிடுவது இல்லை என எம் தமிழ்ப் பெண்கள் பலர் குறைபட்டுக் கொள்கின்றார்கள். பெண்டாட்டியை மட்டும் அல்ல காதலியோடும் நீங்கள் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்திச் செல்லம் பொழிந்து மகிழலாம்.
சொல் விளக்கம்: கூப்பிடுதல்: அழைத்தல்.
பிற் சேர்க்கை: இந்த வார்த்தையெல்லாம் உனக்கு எப்படியடா தெரியும் என்று தானே கேட்கிறீங்க. அடப் போங்கப்பா. ரோட்டில போகும் போது கணவன் மனைவி பேசுவதனை தமிழனோட காது கேட்காமலா விட்டிருக்கும்? தமிழன் எங்கு போனாலும் விபரம் அறிவதிலும் ஒட்டுக் கேட்பதிலும் கில்லாடி தானே! ஹி....ஹி....
உங்கள் நாற்று வலையில் அடுத்து வரவிருக்கும் சர்ச்சைக்குரிய பதிவு:
*கணவனுக்கு தெரியாமல் பேஸ்புக்கில் கள்ளக் காதல் செய்யும் மனைவிமார்! (ஆதாரங்களோடும், சாட்டிங் ரெக்கோடிங் ஒலி வடிவில் இணைக்கப்பட்ட ஒரு அதிர்ச்சியூட்டும் பதிவாக விழிப்புணர்வுகளோடு கூடிய கருத்துக்களைத் தாங்கி!)
நக்கல் சேர்க்கை: இவ் வலையில் வரும் பதிவுகளைக் காப்பி பேஸ்ட் செய்து (Copy Paste) செய்து உங்கள் தளங்களில் வெளியிட வேண்டாமென்று சைட் பாரில் அறிவித்தல் விடுத்து பதிவுகளில் எழுதிய பின்னரும் இதனை அப்படியே அடுத்த நிமிடமே நகல் எடுத்துப் போடுகிறார்கள் பாருங்க சில மானங் கெட்ட ஜென்மங்கள்!அதுகளுக்கெலலம் சூடு சுறணையே கிடையாதுங்க! இவ்ளோ திட்டி எழுதினாலும் இந்தப் பதிவில் என்ன எழுதியிருக்கேன் என்று படித்துப் பார்க்காது தமது தளத்தில் தாம் எழுதும் சொந்தப் பதிவு போன்று காப்பி பேஸ்ட் பண்ணுவாங்க பாருங்க! இதனை விடக் கொடுமை எங்காவது இருக்கா?
|
71 Comments:
பதிவு முழுவதும் அப்படியே உண்மையான கருத்துகள்... திருமணம் ஆகாதவர் இப்படிப்பட்ட பதிவெழுத சாத்தியக்கூறுகளே இல்லை... குறைந்தபட்சம் யாரையாவது காதலித்துக்கொண்டாவது இருக்க வேண்டும்...
முத்து படத்தில் கொக்கு சைவ கொக்குன்னு ஒரு பாட்டு... கணவன்மார்கள் தினமும் காலையில் எழுந்ததும் அந்த பாட்டை ஒருமுறை கேட்டுட்டு அதுபடி நடந்த நித்தம் நித்தம் கொண்டாட்டம் தான்...
@Philosophy Prabhakaran
பதிவு முழுவதும் அப்படியே உண்மையான கருத்துகள்... திருமணம் ஆகாதவர் இப்படிப்பட்ட பதிவெழுத சாத்தியக்கூறுகளே இல்லை... குறைந்தபட்சம் யாரையாவது காதலித்துக்கொண்டாவது இருக்க வேண்டும்...
//
ஏன் பாஸ் இந்த வத்தி வைக்கிற வேலை?
திருமணம் ஆகாமல் காதலிக்கிறவங்க
காதலித்துக் கொண்டு எழுத முடியாதா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@Philosophy Prabhakaran
முத்து படத்தில் கொக்கு சைவ கொக்குன்னு ஒரு பாட்டு... கணவன்மார்கள் தினமும் காலையில் எழுந்ததும் அந்த பாட்டை ஒருமுறை கேட்டுட்டு அதுபடி நடந்த நித்தம் நித்தம் கொண்டாட்டம் தான்...//
ஆமா இல்லே...
ஆனால் அந்தப் பாட்டில் வேறு அர்த்தம் அல்லவா பொதிந்திருக்கு! நாளுக்கு மூனு முறை..
ஹே...ஹே...
ஹ ஹா.. சகோ நல்ல அறிவுரை. உடனே யாரையாவது கண்ணே, மணியே, செல்லமே எண்டு கூப்டனும் போல இருக்கு சகோ.. ஒழுங்கு பண்றியலோ...
வணக்கம் நிரூபன்..
யோ என்னையா பொது இடத்தில மனிசிய "மாம்பழமே"ன்னு கூப்பிடச்சொல்கிறாய்..!! யோசிச்சுதான் எழுதினாயா..??
காய்த்த மரம்தான் கல்லடிபடும்... கொப்பி பேஸ் செய்பவர்களை என்ன செய்யலாம்..??!!!
// ஏன் பாஸ் இந்த வத்தி வைக்கிற வேலை?
திருமணம் ஆகாமல் காதலிக்கிறவங்க
காதலித்துக் கொண்டு எழுத முடியாதா? //
அதையே தான் நானும் சொன்னேன்... நீங்க யாரையோ காதலிக்கிறீங்க...
// ஆனால் அந்தப் பாட்டில் வேறு அர்த்தம் அல்லவா பொதிந்திருக்கு! நாளுக்கு மூனு முறை.. //
அதுவும் சரிதான்... நாளைக்கு மூணு முறைன்னா வெளங்கிடும்...
ஆஹா நல்ல அறிவுரையைச் சொல்லிவிட்டார் எங்கள் பாஸ் தங்கம் என்றும் கூப்பிடலாம் பாஸ் ஏய் தங்கமே என்று இரு குறும்புப்பாடல் அன்நாட்களில் கேட்டேன் !
இஞ்சாருங்கோ என்றாலும் மச்சாள் என்றாலும் கூப்பிடும் போது மனைவிமாருக்கு சந்தோஸம் அதிகம்தான் .இல்லாலை நலமோடு நடத்துவது நல்லான் கடமை என்பார்கள் பெரியவர்கள் காத்திரமான விடயத்தைச் சொல்லும்பதிவு நண்பா!
காப்பி திருடுவோர் தவிர்க்கமுடியாது ஊடக வளர்ச்சியின் நிகழ்வாகிப்போச்சு உணர்ந்து கொண்டு அவர்கள் திருந்தா விட்டால் நாம் எத்தனை விதிமுறை போட்டாலும் அவர்கள் மீறுவார்கள் சகோ!
என் செல்லத்தின் படத்தை இந்தப்பதிவுக்கு போட்டதுக்கு கடும் கண்டணங்கள்......
பாஸ் கல்யாணம் ஆகாத(நீங்களும் இதுக்குள் வருவீங்க)எங்களை போல சின்னப்பசங்க யாரை செல்லம் என்று கூப்பிடுவது?ஹி.ஹி.ஹி.ஹி.ஹி
@K.s.s.Rajh
என் செல்லத்தின் படத்தை இந்தப்பதிவுக்கு போட்டதுக்கு கடும் கண்டணங்கள்......
//
போங்கப்பா நீங்களும் தீக்குளிக்கப் போறதாச் சொல்லலை!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஈழத்தில் கணவனை அப்பா என்றும் அழைக்கு ஓரு வழக்கம் எல்லா இடங்களிலும் உள்ளது
@
நிரூபன் said...
@K.s.s.Rajh
என் செல்லத்தின் படத்தை இந்தப்பதிவுக்கு போட்டதுக்கு கடும் கண்டணங்கள்......
//
போங்கப்பா நீங்களும் தீக்குளிக்கப் போறதாச் சொல்லலை!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்////
அடங் கொக்கா மக்கா.....இதுக்கெல்லாம் டீ குடிப்பாங்களா சரன்யா இல்லாட்டி சானியா அதுவும் இல்லாட்டி சப்னா இப்படி அடுத்த அடுத்த பிகரை பாத்திட்டு போய்கிட்டே இருக்கவேண்டியதுதான்...ஹி.ஹி.ஹி.ஹி
@Ashwin-WIN
ஹ ஹா.. சகோ நல்ல அறிவுரை. உடனே யாரையாவது கண்ணே, மணியே, செல்லமே எண்டு கூப்டனும் போல இருக்கு சகோ.. ஒழுங்கு பண்றியலோ...
//
அடப் பாவி! அதெல்லாம் ஒழுங்கு பண்ணி வாறதில்ல! தானாக வர்றது!
நான் என்ன புரோக்கர் வேலையா பார்க்கிறேன்?
@காட்டான்
வணக்கம் நிரூபன்..
யோ என்னையா பொது இடத்தில மனிசிய "மாம்பழமே"ன்னு கூப்பிடச்சொல்கிறாய்..!! யோசிச்சுதான் எழுதினாயா..??//
அண்ணே வடிவா யோசித்து தான் எழுதியிருக்கேன்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@காட்டான்
காய்த்த மரம்தான் கல்லடிபடும்... கொப்பி பேஸ் செய்பவர்களை என்ன செய்யலாம்..??!!!
//
மாமோய் நானும் காய்த்த மரமா?
இளம் பொடியன் மாம்ஸ்!
என்றும் 16
@Philosophy Prabhakaran
அதையே தான் நானும் சொன்னேன்... நீங்க யாரையோ காதலிக்கிறீங்க...
//
ஹே....ஹே....
@கணவனுக்கு தெரியாமல் பேஸ்புக்கில் கள்ளக் காதல் செய்யும் மனைவிமார்! (ஆதாரங்களோடும், சாட்டிங் ரெக்கோடிங் ஒலி வடிவில் இணைக்கப்பட்ட ஒரு அதிர்ச்சியூட்டும் பதிவாக விழிப்புணர்வுகளோடு கூடிய கருத்துக்களைத் தாங்கி!)
/////
இண்டப்போல் ரேஞ்சுக்கு இறங்கீட்டிங்க போல
சரன்யாவின் பார்வை என்னமோ செய்யுது நான் கெளம்புறன் இல்லாட்டி செல்லம் பேசும்....ஹி.ஹி.ஹி.
@தனிமரம்
ஆஹா நல்ல அறிவுரையைச் சொல்லிவிட்டார் எங்கள் பாஸ் தங்கம் என்றும் கூப்பிடலாம் பாஸ் ஏய் தங்கமே என்று இரு குறும்புப்பாடல் அன்நாட்களில் கேட்டேன் !
//
ஆமா மயா படத்தில ஐய்யாரெட்டு நாத்துக்கட்டு என்ற பாடலிலும் தங்கமே! தங்கமே!
என் செல்லமே செல்லமே! என்று ஒரு வரி வருகிறது!
அதே போல
ரஜினிகாந் இன் ஒரு படத்தில்
தங்க மாங்கனி என் தர்ம தேவதை அப்படீன்னு ஒரு பாடலும்,
தங்கமணி அப்படீன்னு பொதுவாகவும் மனைவியை அழைத்து மகிழ்வார்கள்!
@தனிமரம்
இஞ்சாருங்கோ என்றாலும் மச்சாள் என்றாலும் கூப்பிடும் போது மனைவிமாருக்கு சந்தோஸம் அதிகம்தான் .இல்லாலை நலமோடு நடத்துவது நல்லான் கடமை என்பார்கள் பெரியவர்கள் காத்திரமான விடயத்தைச் சொல்லும்பதிவு நண்பா!
//
நன்றி பாஸ்!
@FOOD
பதிவு முழுவதும் அப்படியே உண்மையான கருத்துகள்... திருமணம் ஆகாதவர் இப்படிப்பட்ட பதிவெழுத சாத்தியக்கூறுகளே இல்லை... குறைந்தபட்சம் யாரையாவது காதலித்துக்கொண்டாவது இருக்க வேண்டும்...//
யாருக்கு, நிரூவிற்கு இன்னும் திருமணமாகவில்லையா? அவ்வ்வ்வ். எதோ நம்மால ஆனது, போட்டுக்குடுத்துருவோம்!
//
ஆப்பிசர் இது வேறையா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@FOOD
அழகிய விளக்கங்களுடன் அருமையான பகிர்வு. புரிந்து கொண்டால், அனைவருக்கும் இன்பமே.
//
அப்போ ஆப்பிசர் இன்னைக்கே ஆரம்பிச்சிடுவார் போல இருக்கே!
@K.s.s.Rajh
என் செல்லத்தின் படத்தை இந்தப்பதிவுக்கு போட்டதுக்கு கடும் கண்டணங்கள்......
//
என்னது செல்லமா?
அப்போ ஹன்சிகா மற்றும் இதர ஆளுங்க நிலமை என்னாவது?
நீங்க வேற! கண்டனத்தோட நிறுத்திட்டீங்க! நான் பயந்துட்டேன்! நீங்க தீக்குளிச்சிடுவீங்களோ என்று!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@K.s.s.Rajh
பாஸ் கல்யாணம் ஆகாத(நீங்களும் இதுக்குள் வருவீங்க)எங்களை போல சின்னப்பசங்க யாரை செல்லம் என்று கூப்பிடுவது?ஹி.ஹி.ஹி.ஹி.ஹி
//
அடடா, கல்யாணம் ஆகாதவங்களுக்கும் காதலி உள்ளவங்களுக்க்ம் இந்தப் பதிவு மிகவும் பொருந்துமே என்று எழுதியிருக்கேனே!
@K.s.s.Rajh
ஈழத்தில் கணவனை அப்பா என்றும் அழைக்கு ஓரு வழக்கம் எல்லா இடங்களிலும் உள்ளது
//
ஆம் சகோ, அதனையும் பதிவில் சொல்லியிருக்கேன்.
@K.s.s.Rajh
அடங் கொக்கா மக்கா.....இதுக்கெல்லாம் டீ குடிப்பாங்களா சரன்யா இல்லாட்டி சானியா அதுவும் இல்லாட்டி சப்னா இப்படி அடுத்த அடுத்த பிகரை பாத்திட்டு போய்கிட்டே இருக்கவேண்டியதுதான்...ஹி.ஹி.ஹி.ஹி
//
கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
@K.s.s.Rajh
இண்டப்போல் ரேஞ்சுக்கு இறங்கீட்டிங்க போல
//
ஒராள் இறங்க வைச்சிட்டாங்க.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@K.s.s.Rajh
சரன்யாவின் பார்வை என்னமோ செய்யுது நான் கெளம்புறன் இல்லாட்டி செல்லம் பேசும்....ஹி.ஹி.ஹி./
ஹே...ஹே...
அட பார்வை மட்டும் தானே!
@நிரூபன்
////
ஆமா மயா படத்தில ஐய்யாரெட்டு நாத்துக்கட்டு என்ற பாடலிலும் தங்கமே! தங்கமே!
என் செல்லமே செல்லமே! என்று ஒரு வரி வருகிறது////
யோவ் பாஸ் இந்தப்பாட்டு அந்தப்படத்தில் பொண்டாட்டியை பார்த்து பாடின பாட்டு இல்லை
அது ஓரு ஜட்டம் ஷாங்....
@K.s.s.Rajh
ஆமா மயா படத்தில ஐய்யாரெட்டு நாத்துக்கட்டு என்ற பாடலிலும் தங்கமே! தங்கமே!
என் செல்லமே செல்லமே! என்று ஒரு வரி வருகிறது////
யோவ் பாஸ் இந்தப்பாட்டு அந்தப்படத்தில் பொண்டாட்டியை பார்த்து பாடின பாட்டு இல்லை
அது ஓரு ஜட்டம் ஷாங்....
//
ஐயிட்டாம் சாங் என்றால் என்ன?
நமக்கு அர்த்தம் தானே வேண்டும்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
என்னங்க நிரூபன், இந்தப் பதிவ 1964 லிலேயே போட்டிருந்தா எனக்கெல்லாம் எவ்வளவு உபயோகமா இருந்திருக்கும்?
ஆனாலும் நீங்க ரொம்பத்தான் லேட்டு!
வணக்கம் நண்பா
நேற்று நம்ம பதிவுல வந்து இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்று வருத்தப் பாத்தீங்க ,ஆனா இங்க பொண்டாட்டி மேலே எப்பிடி பாசம் காண்பிக்கிறது என்று பதிவு ,வருங்கால திட்டமோ ?
ஹி ஹி ஹி
"என்னங்க" பொண்டாட்டியை கூப்பிடவா
இங்கெல்லாம் புருசனை கூப்பிட இப்பிடி சொல்வாங்க
ம்ம்ம்ம் ......மனசுல இவ்வளவு ஆசை இருக்கும்பொழுதே ஒரு கல்யாணம் பண்ணிக்கோங்க நண்பரே .
இப்போ கல்யாண பண்ணக்கூடிய சரியான வயசுதான் உங்களுக்கு .
அழைக்காம இருக்காதீங்க .
பெண் பார்க்க ஆரம்பித்து விட்டீர்களா ?
கல்யாணம் கட்டாத பொடியள் தான் இப்படி அபத்தமாக எழுதலாம். கல்யாணம் கட்டின பேர்வழிகள் "வாழ்க்கையே அலைபோலே, நாமெல்லாம் அதன் மேலே.." என்று பியர்ப் போத்தலுடன் பாடலாம். :-)
ஆமா மேலே போட்டுள்ள படங்கள் எல்லாம் .........
ஹி ஹி ஹி
சரி போனப் போகுது
ராதே உனக்குக் கோபம் ஆகாதடி....
அடடா, நிரூபன் திருமணத்துக்கு ரெடி ஆகிட்டாரு.. வாழ்த்துக்கள் சார். சீக்கிரமே நல்ல செய்த்திக்காக வெயிட் பண்றோம்.
இந்தப் பதிவு சின்னப் பொடியன் எழுதின மாதிரித் தெரியலியே..ரொம்ப அனுபவம் உள்ள ஆள் எழுதுன மாதிரி இருக்கே..
//சொல் விளக்கம்: கூப்பிடுதல்: அழைத்தல்.//
யோ, அநியாயம் பண்ணாதீரும்..இது தெரியாதா எங்களுக்கு?
இஞ்சாருங்கோ-வை தெனாலியில் பார்த்துள்ளேன்...நல்ல இனிமையான வார்த்தை.
அருமையான விளக்கம் - உண்மை முழுக்க முழுக்க உண்மை.
சரியா சொன்னீங்க. இன்றைய சூழ்நிலைக்கு பொருத்தமானதும் கூட ..
கடைசியா ஒண்ணு சொல்லவா
மச்சி உனக்கு சரியா திட்டக்கூட தெரியல..
வணக்கம் , நிரூபன் சிரிக்கவும் உளவியல்ரீதியாக சிந்திக்கவும் தூண்டும் பதிவு. இதுவரையில் நான் படித்த உங்கள் பதிவுகளில் one of the best.............. வாழ்த்துக்கள்.
மாப்ள இதுல நான் தப்பிச்சேன்..ஹிஹி..பொதுவா இப்படி பொது இடத்தில் கூப்பிடுவதை நம்மாளுங்க விரும்பறது இல்ல என்னத்த பண்றது!...பகிர்வுக்கு நன்றி!
ரசித்து எழுதியிருப்பதை பார்த்தால் திருமணமாகாதவர்போல தெரியேல்லை. பல பெண்டாட்டிக்காரன்போலத்தான் தெரியுது. இனி மணி வந்துதான் மிகுதி விபரமெல்லாம் கண்டுபிடிக்கவேணும்.
நிரூபன்,
தயார்தானே ....
நல்ல அறிவுரைகள்....
ஆனால் இன்னமும் இருவரும் இணையானவர்கள் என்கிற போக்கு பல ஆண்களிடம் இல்லாமல் போவதுதான் பிரச்சனை... காதலிக்கும் போது இருக்கிற 'இணை' என்பது திருமணத்திற்குப் பிறகு ஆனா உயர்ந்தவராகவும் பெண் தாழ்ந்த்தவராகவும் கருதப் படுவது ஏன் என்பதையும் அறிந்தால் - நலமே.
நாம எம் பொண்டாட்டியை அன்பாகத் தானே கூப்பிடுறோம்! இவன் என்ன புதுசா சொல்லுறான் என்று? உங்களில் பலருக்கு ஒரு டவுட் தோன்றலாம்.//
ஹா ஹா... உங்க ஸ்டைல் வர்ற ஆரம்பிச்ச்சுடுச்சு.. கலக்குங்க
எம் நாடுகளில் பொதுவாகப் பெண்டாட்டியை கூப்பிடுவதற்கு "என்னங்க" என்ற ஓர் வார்த்தையினைத் தான் பயன்படுத்துவோம்.//
என்னது பொண்டாட்டி தானே.. என்னங்கன்னு கூப்பிடுவாங்க.. இது வித்தியாசமாருக்கே...
"இஞ்சாருங்கோ!"இஞ்சாருங்கோ! இஞ்சாருங்கோ என்று செல்லம் பொழிந்து மனைவி கணவனை கூட்டத்தின் மத்தியில் மெதுவாக இடுப்பில் சுரண்டி/ கிள்ளி அழைக்கும் போது அவன் கொஞ்சம் வெறுப்போடு கூடிய பார்வையினை வீசி, //
அட இத தான் நம்ம கமல் தெனாலியில் இஞ்சாருங்கோன்னு பாடுறாரா... சூப்பர் பாஸ்
அவள் உள்ளத்தில் பல பட்டாம் பூச்சிகள் பறப்பதனை பார்வை மூலம் கண்டு கொள்ளலாம் என்று கலியாணம் ஆன கணவன்மார் சொல்லுகின்றார்கள்.//
ஹா ஹா அப்படியே ஜகா வாங்கிட்டீங்களே!
"இஞ்சாருங்கோ", "மாமா", "அத்தான்", "செல்லம்", "படவா", "ராஸ்கல்", "குட்டி", "ஹனி (Honey)" "ஓய், / ஏய்"; "அப்பா", "மச்சான்", "மச்சினன்", எனப் பல சொற்களைப் பெண்கள் கையாண்டு தம் ஆசை நாயகன் மீதுள்ள அன்பினைப் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்திக் கொள்வார்கள்.//
ஆசை நாயகனுக்கு வேறு ஒரு அர்த்தம் இருக்கு நண்பா...
கண்ணே! கரும்பே! கனியே! தேனே! மானே என்று நீங்கள் விரும்பும் வகையில் அழைக்கலாம். //
கண்ணே! மணியே! முத்தே! அருகே வா ஆஆஆஆஆஆஆஆ... ஆஹா மைன்ட்ல பாட்டை ஏற்றி உசுப்பேத்துறீங்களே பாஸ்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ;-))))
இந்த வார்த்தையெல்லாம் உனக்கு எப்படியடா தெரியும் என்று தானே கேட்கிறீங்க. //
நம்பிட்டோம் பாஸ்.... ஹா ஹா ஹா
நல்ல ஒரு ஜாலியான பதிவை போட்டு கலக்கிட்டீங்க... தொடர்ந்து கலக்குங்க பாஸ்... வாழ்த்துக்கள்.
ரோட்டில போகும் போது கணவன் மனைவி பேசுவதனை தமிழனோட காது கேட்காமலா விட்டிருக்கும்? தமிழன் எங்கு போனாலும் விபரம் அறிவதிலும் ஒட்டுக் கேட்பதிலும் கில்லாடி தானே! ஹி....ஹி...//
வெரி வெரி டேஞ்சர் ஃபெல்லோ நிரூபன் ஹி ஹி...!!!
மாப்ளே..நாளு வருசம் கழிச்சு இதே பதிவை திரும்ப படிச்சு அழல...என் பெயரை மாத்திக்கற சீக்கிரம் திருமணம் அமைய வாழ்த்துக்கள்
டைட்டிலே கலக்கல்.. ஆனா ஒரு டவுட், இந்த ராணூவ ரகசியம் எல்லாம் எப்படி சட்டப்படி மேரேஜ் ஆகாத நிரூபனுக்கு தெரிஞ்சுது?
என்ன ஒரு பதிவு.அப்பிடியே சந்தோஷமா இருக்கு.எங்களை உணர்ந்து எழுதினீங்களே.ஆனா கடைசியா எழுதியிருக்கிறதைத்தான் நான் நம்பமாட்டன் !
இனியாவது இதை வாசிக்கிற ஆண்கள் எல்லாரும் திருந்தவேணும்.மற்றவர்களுக்காக இல்லாமல் உண்மையான உங்கட அன்பைத் தெரிவிச்சுக்கொள்ளுங்கோ.உங்கட மனுசியோட வார்த்தையால செல்லம் கொஞ்சினால் ஆர் என்ன கேக்கிறது !
நல்லா ஒட்டு கேட்டிருக்கீங்க..
.
உங்க ப்ரோப்ய்ல் ல எப்பவோ பார்த்த நினைவு...ஒட்டு கேட்டல்...-:)
சீக்கிரம் டும் டும் டும் டும் தான் போல...வீட்டுல போட்டு கொடுத்திர வேண்டியது தான்...
கடந்த தலைமுறையில் இருந்த அன்னோன்யம் இப்போதும் எப்போதுமே தம்பதிகளுக்கிடையே இருக்கவில்லை என்பதே என் கருத்து
"அன்பே" "ஆருயிரே" னெல்லாம் கூப்பிட வேண்டாம் மனைவி என்பவள் உடல் சுகமில்லை என்று சொல்லும் போது "எங்கே நம் சாப்பாட்டுக்கு வெட்டு விழுமோ" என்று பயந்து ஆறுதலாக ரெண்டொரு வார்த்தை கூட சொல்லாமல் இருக்கிறீர்களே கணவன் மார்களே அதை மட்டும் மாற்றுங்கள் போதும்
எல்லோரும் புரிந்துகொண்டால் நல்லதுதான்!
வைரமுத்துவின் கவிதை இதோ...
வைரமுத்துவின் கவிதை இதோ...
1900-2011 HITS ::::>>> பிராண நாயகியே > தேவி > அன்பே > ஆருயிரே > கண்ணே > கட்டிக்கரும்பே >கண்மணியே > தேனே > மானே > பட்டே > வைரமே> > செல்லம்> அடி கள்ளி > கன்னுகுட்டி> என் புஜ்ஜி குட்டி > honey >darling > baby >.honeybunch >sugarbunch >sweetie >cutie ( 2012 இற்கு பிறகும்-உலகம் அழியாமல் இருந்தால்- செல்லப் பெயர்கள் புதுசாத் தேவைப்படும் !!
அதை நிருபன் & CO கண்டு பிடிப்பார்கள்......
@K.s.s.Rajh
நான் நினைக்கிறேன் அப்பா இல்லை...
” ப்பா” என்று
சரியான்னு தெரியலை..
” என்ன+ ப்பா = என்னப்பா "
Post a Comment