தொலைபேசி என்பது இன்று எல்லோர் வாழ்வோடும் இணைந்து விட்ட ஒரு இன்றியமையாத தொடர்பாடல் சாதனமாகும். விலை வாசி உயர்வான ஊரில் வாழ்ந்தாலும் அலை பேசி இன்றி வாழ மாட்டோம் எனும் நிலைக்கமைவாக நம் மக்களில் பலரும் கையில் ஓர் தொலைபேசியுடன் செல்லுகின்றார்கள். சிலரோ கொஞ்சம் வித்தியாசமாக இரண்டு அல்லது மூன்று அலை பேசிகளை வைத்துப் பொது இடங்களில் தாம் ஏதோ ஹீரோ எனும் நினைப்பு வரப் பெற்றவர்களாக ஸ்டைல் காட்டுவார்கள். பட்டணத்தில் உள்ளோர் தொடக்கம், பாமர மக்கள் வரை இன்று அனைவரும் அலைபேசிப் பாவனையாளர்களாக மாறி விட்டார்கள். அலைபேசி பாவிப்போரில் ஒரு சிலருக்கு அலைபேசியினூடாக அழைப்புக்கள் வரா விட்டாலும் பிறருக்கு ஸ்டைல் காட்டுவதற்காகவும் அலைபேசியினை பாவிக்கின்றார்கள்.
இந்த அலைபேசி வருகை எம் நாடுகளில் இடம் பெறுவதற்கு முன்பதாக எம்மிடையே நெருக்கமான ஒன்றாக இருந்த தொலை பேசிச் சேவை தான் பப்ளிக் பூத் தொடர்பாடல் சேவை. (Public Booth Telephone) நம்மில் பெரும்பாலானோர் பப்பிளிக் பூத்தில் கண்டிப்பாக உரையாடியிருப்போம். தெருவோரத்திலும், பொது இடங்களுக்கு அண்மையாகவும் இந்த பொதுத் தொலைபேசிச் சேவை மையம் காணப்படும். 50 பைசா முதற் கொண்டு ஒரு ரூபா, இரண்டு ரூபா நாணயக் குற்றிகளையும் பொதுத் தொடர்பிற்காக நாம் பயன்படுத்துவோம். கால மாற்றத்தில் எம்முடனான நெருக்கத்தினை இந்தப் பப்ளிக் பூத் சேவை இழந்து விட்டாலும்; கைத் தொலைபேசி இல்லாத காலத்தில் எம்மிடையே மிகவும் நெருக்கமாக இருந்த இந்தச் சேவையின் மூலம் கிடைத்த பயன்களை இலகுவில் மறக்க முடியாது.
உள்ளூரிலிருந்து வெளியூருக்குப் போகின்ற போதும்,எம் அவசரத் தேவைகளுக்காகவும் நாம் எமக்கு வேண்டியவர்களைத் தொடர்பு கொள்வதற்கு பயன்படுத்துவது பப்ளிக் பூத்தினைத் தான். இந்தச் சேவை இலங்கை - இந்திய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆரம்ப காலங்களில் பப்ளிக் பூத்திலிருந்து அழைப்பு மேற் கொண்டால் அவ் அழைப்பினைப் பெற்றுக் கொள்ளும் நபருக்கு எங்கிருந்து அழைப்பு வருகின்றது எனும் விபரம் தெரியாதிருக்கும். இந்தச் சேவைக்கான Number Display முறை என்பது பப்ளிக் பூத்திலிருந்து தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டால் அவ் அழைப்பினை Receive பண்ணும் நபருக்கு கிடைக்காது.
பொதுவாக கைத் தொலைபேசியிலிருந்து அல்லது தொலைத் தொடர்பு நிலையங்களிலிருந்து அழைப்பினை மேற்கொள்ளும் போது நாம் எங்கிருந்து அழைப்பினை மேற் கொள்கின்றோம் எனும் விபரங்கள் கிடைக்கும் என்பதால் நம்மவர்களுள் ரிஸ்க் எடுத்து ரஸ்க் சாப்பிட நினைக்கும் குறும்பர்கள் நாடுவதும் இந்த பப்ளிக் பூத்தினைத் தான். "யாராவது சொந்தச் செலவில் சூனியம் வைக்க விரும்புவார்களா?"தெருவிற்கு வந்தால் ஒவ்வோர் சந்திக்கும் ஒவ்வோர் பப்ளிக் பூத்திருக்கும். அப்படி இருக்கையில் தன் பெயரில் ரியிஸ்டர் பண்ணப்பட்ட டெலிபோனிலிருந்து யாராச்சும் வம்பினை விலை கொடுத்து வாங்கும் விடயங்களினை மேற் கொள்வார்களா? ஹி...ஹி...
எம்மில் அநேகம் பேர் நிச்சயமாக எம் வாழ்வில் என்றோ ஒரு நாள் இந்த டெலிபோன் பூத்தினூடாக ரகளைகளையும், குறும்புகளையும் செய்திருப்போம். எமக்கு விரோதமானவர்களுக்கோ அல்லது எமக்கு நெருங்கிய நட்புக்களுக்கோ கலாய்க்கும் நோக்குடன் பொதுத் தொலைபேசியினைப் பயன்படுத்தியிருப்போம்.பத்திரிகைகளில் வரும் விளம்பரங்களினை குறித்து வைத்து அந்த விளம்பரத்தினைப் பிரசுரித்த நபருக்குத் தொலை பேசி அழைப்பினை மேற்கொண்டு கேள்வி கேட்டு தொல்லை செய்வது முதல், மண மகன் தேவை - மணமகள் தேவை விளம்பரங்களுக்கும் தொடர்பு கொண்டு டீலிங் பேசுவது வரை நாம் செய்யாத லீலைகள் ஏதும் உண்டா?
யாழ்ப்பாணத்தில் நாம் உயர்தரம் படித்த காலப் பகுதியில் தான் இந்த பப்ளிக் பூத் சேவையினை அறிமுகப்படுத்தியிருந்தார்கள.கமியூனிக்கேசன் நிலையத்திலிருந்து வம்பிழுத்தால், அழைப்பினைப் பெற்றுக் கொள்ளும் நபர் காவல் துறையின் உதவியினை நாடினால்; போலீஸ் வந்து ஒரே அமுக்கா அமுக்கி விடுவார்கள் எனும் நினைப்பினால் என் தலமையில் ஒரு சிறிய குழுவும் வம்பிழுக்கும் நோக்கில் இந்த பப்ளிக் பூத்தினை நாடியது. நாம எல்லோரும் செய்த நல்ல செயல் என்ன தெரியுமா? யாழில் வெளியாகும் உதயன் பத்திரிகையில் வரும் சின்னஞ் சிறு விளம்பரங்கள் பகுதியில் தொலைபேசி இலக்கங்களுடன் பிரசுரிக்கப்பட்டிருந்த விளம்பரதாரர் ஒருவரைத் தொடர்பு கொண்டோம்.
"நல்ல நிலையில் உள்ள கோழிக் குஞ்சுகள் விற்பனைக்குண்டு" என பெண் ஒருவர் விளம்பரம் செய்திருந்தார். இந்த விளம்பரத்தின் கீழே அவரது வீட்டுத் தொலைபேசி எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது.ஸோ நாம என்ன பண்ணினோம், ஐந்து ரூபா குற்றியினை பப்ளிக் பூத்தில் போட்டு அவங்க நம்பருக்கு கோல் பண்ணினோம். மச்சான் ரிங் பண்ணுதடா டெலிபோன் என்று சொல்லியதும் தான் தாமதம், யார் கதைக்கிறது? நானா நீயா என்று அங்கு நின்ற மூன்று நண்பர்களுக்குள் சண்டை வேறு! பின்னர் தொலைபேசியில் உரையாடும் பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது.
நான் : ஹலோ! சரோஜா அக்காவா பேசுறீங்க?
ஆமா சரோஜா அக்கா தான்!
சரோஜா: சொல்லுங்க! யார் பேசுறீங்க!
அடப் பாவமே! யார் பேசுறீங்க என்று கேட்கையில் நம்ம பெயரைச் சொன்னால் விபரீதமே என்றுணர்ந்து நான் தானுங்க செல்வகுமார் பேசுறேனுங்க என என் பெயரை மறைத்துப் பேசத் தொடங்கினேன். இன்னைக்குப் பத்திரிகையில் கோழிக் குஞ்சு விற்பனைக்குண்டு அப்படீன்னு உங்க விளம்பரத்தைப் படித்தேன். அது தொடர்பாக பேசலாமுன்னு தான் போன் பண்ணினேங்க!
சரோஜா: சொல்லுங்க செல்வகுமார்,
செல்வகுமார்: அந்த கோழிக் குஞ்சுங்க எல்லாம் நல்ல நிலையில் இருக்குதா?
சரோஜா: ஆமாங்க! எல்லாமே நல்ல நிலையில் தான் இருக்கு.
செல்வகுமார்: எவ்ளோ பெருசா இருக்கும்? கைக்கு அடக்கமா இருக்குமாங்க? சின்ன கோழிக் குஞ்சுகள் தானே?
சரோஜா: இப்போ ரெண்டு நாளைக்கு முன்னாடி தானுங்க பொரிச்ச குஞ்சுங்க. இன்னும் வளரைலங்க.
செல்வகுமார்:அப்போ என்ன சாப்பாடுங்க போடுவீங்க?கைத் தீன் போடுவீங்களா?
சரோஜா: கைத் தீன் என்றால்- நீங்க என்ன கேட்கிறீங்கன்னு புரியலையே?
செல்வகுமார்: அதாங்க மாஸ் - கோழித் தீவனம் என்று சொல்லுவாங்களே! அது போடுவீங்களா?
சரோஜா: ஆமா சார்! இது வைட் லைற்கோன் கோழியுங்க! மாஸ் போட்டுத் தான் வளர்க்கனுமுங்க.
செல்வகுமார்: அப்படீன்னா ஒரு நாளைக்கு எத்தனை வாட்டி கைத் தீன் போடுவீங்க?
சரோஜா: மூனு தடவை போடுவேனுங்க!
செல்வகுமார்: அட மூனு தடவையா? சொல்லவேயில்லைங்க!
சரோஜா: தம்பி! உங்களுக்கு கோழிக் குஞ்சு வேணுமா? இல்லே வேணாமா!
கட்! கட்! கட்!.........!
இவ்ளோ விடயமும் கேட்ட பின்னர் நாம என்ன கோழிக் குஞ்சா வாங்கப் போயிருப்போம்.டெலிபோனைக் கட் பண்ணிட்டு அடுத்த பப்ளிக் பூத்தினையல்லவா நாடியிருப்போம் ஹே...ஹே! நம்மளுக்கு எதிரிங்க யாராச்சும் இருந்தாலே போதும் - நம்மில் சிலர் பப்ளிக் பூத்தில் நாணயக் குற்றிகளைப் போட்டு மிஸ்ட் கோல் மேல மிஸ்ட் கோல் பண்ணி நைட் எல்லாம் தூங்க விடாம டெலிபோன் மூலமாகவே கொலை செய்திடுவாங்க. இன்னும் சிலர் பொண்ணுங்க நம்பர் தானா இது என்று டெஸ்ட் பண்ணிப் பார்ப்பதற்கும் இந்த பப்ளிக் பூத்தினைத் தான் நாடுவாங்க. மிஸ்ட் கோல் பண்றவங்களை விட, தவறான விடயங்களைப் பேசி அழைப்பினை எடுப்போருக்கு அலுப்பு கொடுக்கும் வகையில் தான் நம்மில் பலர் இந்த பப்ளிக் பூத்தினை நாடுகின்றோம்.
இன்று தொழில்நுட்ப விருத்தியின் விளைவால் ஆளுக்கொரு அலைபேசியுடன் நாம் அனைவரும் நடமாடுவதால், தெருவோரங்களில் கவனிப்பாரற்று அலறுகின்றன பப்ளிக் பூத்கள். இப்போதெல்லாம் பொது இடங்களில் பொண்ணுங்களுக்கு பிலிம் காட்டும் நோக்கில் (பந்தா காட்டுதல்) நம்ம பசங்களில் அநேகமானோர் தமது போனுக்கு தாமே அலராம் செட் பண்ணி வைத்து, அலாரம் அடிக்கும் டைம்மில் தமக்கு யாரோ போன் பண்றாங்கள் என பாசாங்கு பண்ணிப் பேசத் தொடங்கி விட்டார்கள். பொண்ணுங்களும், பசங்களும் கண்ணை மூடிக் கொண்டு பத்து நம்பரை டயல் செய்து பார்க்கிறாங்க. அதிஷ்டவசமாக ஏதோ ஒரு இலக்கத்தினூடாக மேற் கொள்ளப்பட்ட அழைப்பில் பொண்ணுங்க பேசினாலோ அல்லது பையன் பேசினாலோ அழைப்பினை மேற்கொண்ட நபருக்கு ஜாலி என்றெண்ணி கடலை போட ஆரம்பிக்கிறாங்க!
*********************************************************************************************************************************
இப் பதிவினூடாக பதிவர் "ரகு" அவர்களின் "குறும்புகள்" வலைப் பதிவிற்குச் செல்வோமா?பதிவர் ரகு அவர்கள் தன்னுடைய வலைப் பதிவில் இனிமையான தமிழ் மொழி நடையினூடாக பல சுவாரஸ்யமான விடயங்களை எழுதி வருகின்றார்.அத்தோடு சமூக மேம்பாட்டிற்குத் தேவையான விடயங்களைத் தன் ஒவ்வோர் பதிவிலும் சிறு துளியாகச் சொல்லியும் வருகின்றார்.
"ரகு" அவர்களின் வலைப் பூவிற்குச் செல்ல:
***********************************************************************************************************************************
|
47 Comments:
ஐயோ ஐயோ நான் தான் முன்னுக்கு
அப்படி இருக்கையில் தன் பெயரில் ரியிஸ்டர் பண்ணப்பட்ட டெலிபோனிலிருந்து யாராச்சும் வம்பினை விலை கொடுத்து வாங்கும் விடயங்களினை மேற்
கொள்வார்களா? //
ரொம்ப விவரம் தான்!
@கவி அழகன்
ஐயோ ஐயோ நான் தான் முன்னுக்கு
//
ஆமா பாஸ், நீங்க தான் முதலாவது!
இனிய காலை வணக்கம்! சூடா ஒரு காப்பி சாப்பிடுறீங்களா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@rufina rajkumar
அப்படி இருக்கையில் தன் பெயரில் ரியிஸ்டர் பண்ணப்பட்ட டெலிபோனிலிருந்து யாராச்சும் வம்பினை விலை கொடுத்து வாங்கும் விடயங்களினை மேற்
கொள்வார்களா? //
ரொம்ப விவரம் தான்!//
வணக்கம் அக்கா,
பின்னே சும்மா போயி மாட்டிக்கிட்டா அப்புறம் ஈவிட்டீசிங் கேஸ் போட்டு உள்ளே தள்ளிட மாட்டாங்க.
காலிங்... காலிங்..... நிரூபனா? என்னையா இம்புட்டு கோழிய பேரம் பேசிட்டு வாங்காம போறீரு... ரொம்ப பிஸி! அப்பாலிக்கா பேசறேன்...
ஏன்ணே கோழி என்றால் என்ன அர்த்தம் என்று எங்களுக்கு தெரியாதா என்ன?ஹி.ஹி.ஹி.ஹி...
////செல்வகுமார்: அப்படீன்னா ஒரு நாளைக்கு எத்தனை வாட்டி கைத் தீன் போடுவீங்க?
சரோஜா: மூனு தடவை போடுவேனுங்க!
செல்வகுமார்: அட மூனு தடவையா? சொல்லவேயில்லைங்க!
சரோஜா: தம்பி! உங்களுக்கு கோழிக் குஞ்சு வேணுமா? இல்லே வேணாமா!
கட்! கட்! கட்!.........!/////
ஒரு நாளைக்கு மூனுதடவை கைத்தீன் போட்டால் கோழி பெருத்துவிடுமே....
புரியல.....ஆனா இந்த கைதொலைபேசி வைத்து ரொம்பதான் கடுப்புஏதுறாநுகள்...
கைபெசியால் பல விபரிதங்கள் நடக்கின்றன ,,
நீரூபன் கோழி கதை சூப்பரு....
போன்ல கலாய்க்கறது ஒரு ஜாலி ம்ம் அதல்லாம் ஒரு காலம்
இப்போது எல்லாம் இந்த பப்பிளிக் பூத் குறைந்து வருவது பலரின் நித்திரையை காக்கின்றது/.ஹீ ஹீ
இந்த கோழிக் குஞ்சு, மாஸ் தீனி என கோழிப்பண்ணை வளப்பின் ஞாபகத்தை அசைபோடுகின்றது.
மிஸ்ட்டு கோல்விடும் பார்ட்டிகள் சிலரால் உண்மையான அழைப்பினை மேற்கொள்ளும் நபரின் தொலைபேசியைக் கூட பதில் கொடுக்காத சிலரும் இருக்கினம் பாஸ்.
பதிவு செம கலக்கல் ஹா ஹா ஹா
பழைய ஞாபகங்களை உங்களுக்கே உரிய பாணியில் பதிவிட்டது அழகு. புதிய அறிமுகம் ரகுவிற்கு வாழ்த்துக்கள்.
இந்தக்கோழி மிஸ்சானது போகட்டும். அப்புறம் எந்தக்கொழியை பிடிச்சியள். அதையும் சொல்லுங்கோ
கொஞ்சம் நெடி தூக்கல் நிரூ.. ஹி ஹி ஹி
என்ன திட்டு வாங்குனீங்கனு சொல்லவேயில்ல?????
கடைசி போட்டோவ பாத்துட்டு ஏதோ புதுவிதமா ஹெல்மெட் போட்ருக்காங்க போலனு நெனச்சேன். அவ்வ்வ்.
//யாழ்ப்பாணத்தில் ////நாம் உயர்தரம் படித்த காலப் பகுதியில்///// தான் இந்த பப்ளிக் பூத் சேவையினை அறிமுகப்படுத்தியிருந்தார்கள////
correct time இலதான் கடவுள் கண் திறந்திருக்கிறார்.... நிரூபனுக்காக கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
@athira
//யாழ்ப்பாணத்தில் ////நாம் உயர்தரம் படித்த காலப் பகுதியில்///// தான் இந்த பப்ளிக் பூத் சேவையினை அறிமுகப்படுத்தியிருந்தார்கள////
correct time இலதான் கடவுள் கண் திறந்திருக்கிறார்.... நிரூபனுக்காக கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
//
ஹே...ஹே....
அப்போ அது எந்த ஆண்டு என்று கண்டு பிடிக்க முடியுமா?
1997 இன் இறுதிக் காலங்களுக்கும் 1998 இன் நடுப் பகுதிக்கும் இடைப்பட்ட காலப் பகுதி!
கனடாவில லோகல் கோல் எல்லாம் ஃபிரீ. பப்ளிக் பூத்தில 20 செண்ட்ஸ் என நினைக்கிறேன், போட்டால் எவ்வளவு மணி நேரமும் அலட்ட முடியும்போல.
அதனால அங்கு சில எங்கட லூசுகளுக்கு இதுதான் வேலையாம். நானும் ஒரு தடவை மாட்டுப்பட்டேன்... எங்கோ நம்பர் தேடி எடுத்து, பேப்பரில்தான்... ஃபோன் பண்ணி, அதென்ன என்றால், ஆர் பேசுகிறார்கள் என நம்பர் லான்லைனில தெரியும், ஆனா ஃபூத்திலிருந்து எடுத்தாலும், சில வெளியூரிலிருந்து கார்ட் பாவித்து எடுத்தாலும், நம்பர் வராது, அதனால எடுக்காமல் விடவும் முடியாது.
ஃபோன் வந்துது என்னுடன் கதைக்க வெளிக்கிட்டார், எனக்கு ஆரெனப் புரியவில்லை, அப்போ நான் நினைத்தேன், கணவரின் சகோதரிக்காக்கும் என(ஏனெனில் அது அவர்களின் வீடு), அப்போ எதையும் யோசிக்காமல் அவவின் பெயரைச் சொல்லிக்கூப்பிட்டு இது உங்களுக்காக்கும் என கொடுத்தேன், அந்தப் பெயர் ஃபோனில் கேட்டு விட்டது, பின் அவவின் பெயர் சொல்லி ஃபோன் எடுக்க தொடங்கிட்டார். ஆனால் அன்றோடு மட்டும் நிறுத்திக்கொண்டார், அடுத்த நாள் தொல்லை தரவில்லை.
ஆனால் ஆராயினும் இந்த விளையாட்டை நிறுத்துங்கள் பிளீஸ். இது விளையாட்டல்ல ஒரு கூடாத செயல் என்றுதான் சொல்லுவேன்.
சின்ன வயதில் செய்வது தெரியாமல் செய்வது, ஆனால் வயதானதுகளும் வெளிநாடுகளில் இப்படி பொழுதைப்போக்குகிறார்களாம்... இது எவ்வளவு கூடாத செயல்.
ஓ அப்போ நிரூபன் 98 Batch????? ஹா..ஹா..ஹா.. கண்டு பிடித்துவிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)))
@athira
ஓ அப்போ நிரூபன் 98 Batch????? ஹா..ஹா..ஹா.. கண்டு பிடித்துவிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)))
//
வயசை எப்பவுமே கூட்டிச் சொல்லி என்னையை கிழவனாகிறதிலே நோக்கமா இருக்கிறீங்களே?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நான் அப்போதான் உயர் தரம் படிக்க வந்தேன் என்று சொல்ல வாறேன்.
அப்படீன்னா எந்த பச்?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இல்ல நான் சொல்ல மாட்டேன் நிரூபன், கண்டு பிடிச்சிட்டேன்.... வெளில உங்களுக்கு இப்போ 25 என்றுதான் சொல்லுவேன், ஆனா பொம்பிளை பகுதியிடம் உண்மையைத்தானே நிரூபன் சொல்லோணும், இப்போ எப்பூடி நான் நிரூபனுக்குச் சம்பந்தம் பேசுவேன்...
பேசாமல், புரோக்கர் மாமாவின் சுயம்வரத்தில கலந்துகொள்ளுங்கோ:)) அங்கின வயசு முக்கியமில்லைப்போல, ஆனா வீரம் இருக்கோணுமாக்கும்?:)))))))))))
@athira
இல்ல நான் சொல்ல மாட்டேன் நிரூபன், கண்டு பிடிச்சிட்டேன்.... வெளில உங்களுக்கு இப்போ 25 என்றுதான் சொல்லுவேன், ஆனா பொம்பிளை பகுதியிடம் உண்மையைத்தானே நிரூபன் சொல்லோணும், இப்போ எப்பூடி நான் நிரூபனுக்குச் சம்பந்தம் பேசுவேன்...
பேசாமல், புரோக்கர் மாமாவின் சுயம்வரத்தில கலந்துகொள்ளுங்கோ:)) அங்கின வயசு முக்கியமில்லைப்போல, ஆனா வீரம் இருக்கோணுமாக்கும்?:)))))))))))/
ஆனாலும் நாம முப்பதை தாண்டவில்லை தானே
அவ்வ்வ்வ்வ்வ்வ்
ஆமா வீரம் இருக்கோனுமாக்கும்.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
என்னமோ போங்க! நான் சின்னப் பையன் என்பதால் இன்னும் விளங்கவேயில்லை!
]
பாருப்பா இம்புட்டு கலாசல் இருக்கா ஹிஹி!
யோவ், ஆபாசப் பதிவு எழுதுனதே தப்பு..இதுல லின்க் கொடுத்து விளக்கம் வேற சொல்றீங்களா?
நிரூபன் said...
ஆனாலும் நாம முப்பதை தாண்டவில்லை தானே
அவ்வ்வ்வ்வ்வ்வ்
ஆமா வீரம் இருக்கோனுமாக்கும்.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
என்னமோ போங்க! நான் சின்னப் பையன் என்பதால் இன்னும் விளங்கவேயில்லை!
//////////////////
இதுவும் கடந்து போகும்:)))))))))))))))) ஹையோ ஹையோ.......:))))
அலைபேசி இல்லா மனிதன் அரை மனிதன். இதுதான் இன்றைய உலக நியதி.
எங்க ஊர்ல, தெருக்கூட்டறவங்க கூட அலைபேசி வைத்திருக்காங்க.
கோழி கதை கலக்கல்...
அறிமுகம் ரகுவிற்கு வாழ்த்துக்கள்...
வித்தியாச கலக்கல் பதிவு ...
Photo நம்ம கோகுல்ன்னு நினைக்கிறேன்..அவர் தான் தண்ணி மற்றும் தண்ணீ சார்ந்த இடத்துலேயே இருப்பார்...
நிருபன்,
மாலை வணக்கம்.
கலாட்டா கண்மனியாத்தான் இருந்த்திருக்கீங்க ...
நிரூபன் கலாட்டா கண்மனியாத்தான் இருந்த்திருக்கீங்க
எமக்கு விரோதமானவர்களுக்கோ அல்லது எமக்கு நெருங்கிய நட்புக்களுக்கோ கலாய்க்கும் நோக்குடன் பொதுத் தொலைபேசியினைப் பயன்படுத்தியிருப்போம்// ரொம்ப அனுபவமா மச்சி...
செல்வகுமார்: அட மூனு தடவையா? சொல்லவேயில்லைங்க!// என்ன ஒரு வில்லத்தனம் டபுள் மீனிங் வேற ..
ஏனோ தம்பி நிரூபனை ரொம்ப சீரியசான ஆள்ன்னு நினைத்து விட்டேன். இப்படியெல்லாம் லொள்ளு பண்ணியிருக்கிறார் என்று நினைக்கவே இல்லை. பகிர்வுக்கு நன்றி தம்பி...
ஆஹா பாஸ்... ஏகப்பட்ட தில்லாலங்கடி வேலைய பண்ணிட்டு.... கொக்ககோலா பாட்ட வேற போட்டு புரிய வைக்கிறீங்க... ஹா ஹா...
சகோ...ரகு" அவர்களின் வலைப் பூ
http://kurumbugal.blogspot.com/
இன்று நாற்று வலைத்தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சகோவுக்கு வாழ்த்துக்கள்.
வணக்கம் சகோ! பழைய விஷயம் எல்லாம் கிளறி விட்டீர்கள்.நானும் ஒருகாலத்தில் டெலிபோன் பூத் வைத்திருந்தேன்.சுவாரஸ்யமான பதிவு.
பப்ளிக் பூத்தில் இதுபோல் சௌகரியங்கள் இருக்கத்தான் செய்தன!
அறிமுகத்திற்கு மிக்க நன்றி நிரூபன்
சரோஜா அக்கா பாவம்.சரியான ஆளிட்ட ஆப்பிட்டிருக்கவேணும் நிரூ.நல்லா வாங்கிக் கட்டியிருப்பீங்கள் !
மாஸ்-கோழி-அப்புறம் தளபதி பாட்டு, புரிஞ்சிரிச்சு.. இதுதான் அதா?
....ன் வாங்கின இஞ்சினீரிங் டிகிரி வேஸ்ட்
கலர் ஃபுல் போஸ்ட்
சாரி ஃபார் லேட் எண்ட்ரி.. 4 நாட்களாக பிஸி
Post a Comment