வவுனியாவில் உள்ள கருணா குழுவினரின் முகாம்களைத் தாக்கியளிக்க வேண்டும் அல்லது கருணா குழு முகாம்கள் மீது தாக்குதல் தொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தவன் தான் டக்ளஸ்! இப்போது போராளி டக்ளசும், போராளி நெருப்பும் ஒன்றாகச் சேர்ந்து விட்டார்கள். தம் தாக்குதல்களுக்கான திட்டங்களை மேற்கொள்ளத் தொடங்கினார்கள். நெருப்பு வவுனியாவிற்குள் நுழைந்து மூன்று நாட்களாக முன்னரே ஏனைய போராளிகளின் உதவியோடு பட்டாணிச்சூர் பகுதிகுச் சென்று கருணா குழுவு முகாம் காவலரன் மீது கைக் குண்டுத் தாக்குதல் (கிரேனட்) நடாத்தி விட்டு பாதுகாப்பாகத் தளம் திரும்பினான். ஏற்கனவே சமாதான காலத்தில் ஆழ ஊடுருவித் தாக்கும் அணியினரின் நடவடிக்கைகளை விரிவுபடுத்தியிருந்த இராணுவம்,தற்போது புலிகளில் இருந்து மக்களைப் பிரிப்பதற்கான நடவடிக்கைகளை முழு மூச்சில் மேற் கொள்ளத் தொடங்கியது.
நீங்கள் இங்கே படித்துக் கொண்டிருப்பது உங்கள் பேரபிமானம் பெற்ற நாற்று வலைப் பதிவில் வலம் வந்து கொண்டிருக்கும் ஈழப் போரியல் வரலாற்றில் இதுவரை வெளிவராத மர்மங்களின் ஆறாவது பாகத்தின் தொடர்ச்சியாகும். இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள Drop Down Menu இல் கிளிக் செய்யுங்கள்.வன்னியில் 2006ம் ஆண்டின் ஆரம்ப காலங்களில் ஆழ ஊடுருவித் தாக்கும் அணியினரின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் 2007ம் ஆண்டின் ஆரம்ப காலங்களில் தான் இந்தத் தாக்குதல்கள் தீவிரமடையத் தொடங்குகின்றன. வவுனியாத் தாக்குதல்களின் எதிரொலியாக, வன்னியில் புலிகள் பகுதியினுள் உள்ள மக்கள் மீது இராணுவம் ஆழ ஊடுருவித் தாக்கும் அணியினர் ஊடாகத் தமது தாக்குதல்களை விரிவுபடுத்தத் தொடங்கியது.
நீங்கள் இங்கே படித்துக் கொண்டிருப்பது உங்கள் பேரபிமானம் பெற்ற நாற்று வலைப் பதிவில் வலம் வந்து கொண்டிருக்கும் ஈழப் போரியல் வரலாற்றில் இதுவரை வெளிவராத மர்மங்களின் ஆறாவது பாகத்தின் தொடர்ச்சியாகும். இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள Drop Down Menu இல் கிளிக் செய்யுங்கள்.வன்னியில் 2006ம் ஆண்டின் ஆரம்ப காலங்களில் ஆழ ஊடுருவித் தாக்கும் அணியினரின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் 2007ம் ஆண்டின் ஆரம்ப காலங்களில் தான் இந்தத் தாக்குதல்கள் தீவிரமடையத் தொடங்குகின்றன. வவுனியாத் தாக்குதல்களின் எதிரொலியாக, வன்னியில் புலிகள் பகுதியினுள் உள்ள மக்கள் மீது இராணுவம் ஆழ ஊடுருவித் தாக்கும் அணியினர் ஊடாகத் தமது தாக்குதல்களை விரிவுபடுத்தத் தொடங்கியது.
2007ம் ஆண்டின் ஆரம்ப காலப் பகுதியில் வன்னி மக்கள் பலரும் எல்லைப் படையாகவும், மக்கள் படையாகவும் பேரெழுச்சி கொண்டு சிறப்புப் பயிற்சி பெற்று நிற்பதாக இராணுவத்தினர் மத்தியில் நிலவிய அச்சத்தின் காரணத்தினால் புலிகளிடமிருந்து மக்களைப் பிரிக்க வேண்டிய தேவை அல்லது புலிகள் மீது மக்களுக்கு வெறுப்பினை உண்டாக்க வேண்டிய நிலமை இராணுவத்தினருக்கு ஏற்படுகின்றது. இந்த ஆழ ஊடுருவித் தாக்கும் அணியினரின் நடவடிக்கைகளை விரிவுபடுத்த வேண்டுமாயின் நன்கு தமிழ் தெரிந்த புலிகளுக்குச் சந்தேகம் ஏற்படுத்தாத தமிழர்கள் தான் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் ஊடுருவ வேண்டும். இதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினருக்கு தம் அருகே தமிழ் தெரிந்த கருணா குழுவினர் எனும் பெயரால் அழைக்கப்பட்டோர் இருப்பது தெரியாமலிருக்குமா? இல்லைத் தானே?
வன்னிக் கள முனையில் ஆழ ஊடுருவித் தாக்கும் அணியினரின் நடவடிக்கைகளை முடக்கி விட்டது இராணுவம். இதன் உச்ச பட்சக் கொடூரம் என்ன தெரியுமா? விமானத் தாக்குதலில் காயமடைந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மருத்துவமனை நோக்கி வரும் அம்புலன்ஸ் வண்டி மீதும் தாக்குதல் நடத்தி மக்கள் மனங்களில் புலிகளால் தானே தமக்கு இப்படித் தாக்குதல்கள் நிகழ்கின்றன எனும் அச்சத்தினைத் தோற்றுவிப்பதாகும்.ஆனாலும் புலிகளை வெறுத்தார்களா மக்கள்? வன்னியில் இராணுவக் கட்டுப்பாட்டிற்கு போக மறுத்துப் புலிகள் பின்னே நின்றோரில் 95 வீதமான மக்கள் போராட்டத்திற்கு நெருங்கிய பங்களிப்பினை வழங்கிய மாவீரர், போராளி குடும்பத்து மக்களாவார்.ஆதலால் தான் வன்னியினை விட்டு இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்ல விருப்பமின்றிப் பெருமளவான மக்கள் புலிகளோடு இருந்தார்கள்.
ஏனைய 5 வீதத்திற்கும் குறைவான மக்கள் புலிகள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்ல பாஸ் அனுமதி வழங்காத காரணத்தினால் புலிகளோடு விரும்பியும், விரும்பாமலும் ஒட்டியிருந்தார்கள். 15.01.2007 அன்று, விண் மிக்ஸர் நிறுவன உரிமையாளரின் மோட்டார் சைக்கிள் இனந் தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டதாக உக்குளாங்குளத்தில் கதை பரவுகின்றது. விண் மிக்ஸரின் மகன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளை வழி மறித்த இனந் தெரியாத ஆயுததாரிகள் அவர் மகனை மிரட்டி மோட்டார் சைக்கிளைத் திறப்புடன் பண்டாரிக்குளம் எஸ்மாஸ் கடையடிக்குச் சமீபமாக அபகரிக்கின்றார்கள். வவுனியா நகரப் பகுதியில் நிலவிய புலிகளின் தாக்குதல்களினைச் சமாளிக்க முடியாத இராணுவத்தினர் வீதியோரங்களிலும், நடை பாதையோரத்திலும்,பொது இடங்களிலும் வாகனங்களை நிறுத்தக் கூடாது என்றும், மாலை ஐந்து மணியோடு வர்த்தக நிலையங்கள் யாவும் பூட்டப்பட வேண்டும் எனவும் ஏற்கனவே அறிவித்தல் விடுத்திருந்தார்கள்.
விண் மிக்ஸர் நிறுவன உரிமையாளருக்கு ஒரே குழப்பம். ஏனெனில் ஏலவே கருணா குழுவின் பெயரால் அவரிடம் ஐம்பது லட்சம் ரூபா கோரிய போது, மறுப்பேதுமின்றிக் கொடுத்திருந்தார். அப்படியானால் யார் அவரது மோட்டார் சைக்கிளைக் கடத்தியிருப்பார்கள்? பலத்த குழப்பத்தின் மத்தியில் அவர் இருந்த காரணத்தினால் பொலிஸில் புகார் கொடுப்பதனை மறந்து விட்டார் போலும். 17.01.2007 புதன் கிழமை. வவுனியா நகரம் இரவினில் நிலவிய அச்சம் நீங்கி, மெது மெதுவாக விழித்துக் கொள்கின்றது. காலை 8.12 நிமிடமளவில் வவுனியா மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டிப் பெப் மோட்டார் சைக்கிளிலில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த கிளைமோர் குண்டு பாரிய சத்தத்தோடு வெடிக்கின்றது.
கிளைமோர் குண்டு! |
மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகட்டினை (நம்பர் ப்ளேட்) தேடி எடுத்த இராணுவத்தினர் அது விண் மிக்ஸர் உரிமையாளரின் மோட்டார் சைக்கிள் என்பதனைக் கண்டறிந்து விண் மிக்ஸர் வீட்டிற்குச் செல்கின்றார்கள் விண் மிக்ஸரின் மகனிடம் மோட்டார் சைக்கிளை அபகரித்தவர்களைப் பற்றிய உண்மையினைக் கேட்டறிந்த இராணுவம் நம்பியும், நம்பாலும் நடிப்பது போன்று பாசாங்கு செய்து விண் மிக்ஸர் உரிமையாளரின் வீட்டினை உடைத்து நாசம் செய்ததோடு, விண் மிக்ஸர் உரிமையாளர் மற்றும் அவரது மகன் மீதும் கடுமையான தாக்குதல் நடாத்தி விட்டு மறு நாள் காலை ஜோசேப் இராணுவ முகாமிற்கு வந்து தம்மைச் சந்திக்குமாறு இராணுவத்தினர் கூறிவிட்டுச் சென்று விட்டார்கள்.விண் மிக்ஸர் உரிமையாளருக்கோ மனதினுள் அச்சம். தனியே ஜோசேப் இராணுவ முகாமிற்குச் சென்றால், இராணுவத்தினர் தனக்கு ஏதும் செய்து விடுவார்கள் என்றெண்ணி தனக்குத் துணையாக செல்லமுத்துவினை அழைத்துச் சென்றார்.
இச் சம்பவத்திற்குச் சில நாட்களுக்கு முன்பதாக செல்லமுத்து சிவகரனின் கடைக்குச் செல்லும் போது வழமையாகவே நக்கலும் நையாண்டியும் கலந்து அவருடன் பேசும் கடை உரிமையாளர் சிவகரன், கொஞ்சம் கோபங் கொண்டவராக நீ துரோகிளுடன் சேர்ந்திருக்கிறாய் இது சரியில்லை. ஏன் உனக்கெல்லாம் இப்படி ஒரு பிழைப்புத் தேவையா? என்றெல்லாம் ஆத்திரத்தோடு ஏசியிருந்தார். இந்தச் சம்பவங்களும், சிவகரனின் கடையில் புலிகள் வந்து உணவுப் பொருட்களை வாங்குவது, உரையாடிச் செல்வது; உக்குளாங்குள - கூமாங்குள வீதிகளில் துப்பாக்கிகளுடன் புலிகள் வலம் வந்து போவது போன்ற செயல்களும் அவர் மனதில் ஓடின. சத்தியனும், இராணுவத்தினரும் தனக்கு இன்னும் அதிகமாக வசதி வாய்ப்புக்கள் வழங்குவார்கள் என நினைத்தாரோ என்னவோ விண் மிக்ஸர் உரிமையாளருடன் இராணுவத்தினைச் சந்திக்கச் சென்ற செல்லமுத்து புலிகளின் உக்குளாங்குள கூமாங்குள நடமாட்டங்கள் பற்றி விரிவாகச் சொல்லத் தொடங்கினார்.
விண் மிக்ஸரும் தன் உயிரைக் கருத்திற் கொண்டு, இராணுவத்தினரிடம், தன்னிடம் வந்து மோட்டார் சைக்கிள் கேட்டு மிரட்டிய புலிகள் தொடர்பான விடயங்கள் முதல், புலிகளின் நடமாட்டங்கள் வரை அனைத்தையும் சொல்லத் தொடங்கினார். இப்போதும் அவர்களுக்கு அச்சமூட்டும் பெயராக நெருப்பு என்ற பெயரே செல்லமுத்து, மற்றும் விண் மிக்ஸர் உரிமையாளரின் வாயிலிருந்து வந்து கொண்டிருந்தது. இராணுவம் விழித்துக் கொண்டது. புலிகளைத் தேடி உக்குளாங்குளத்தினுள் சென்று தாக்குதல் நடாத்துவது. இம் முறையோடு வவுனியாவில் உள்ள புலிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என இராணுவம் தீர்மானம் எடுத்தது. ஒருவர் உதவி செய்யவில்லை என்றால், அவரோடு ஒரு இணக்க்கப்பாட்டிற்குப் புலிகள் வந்திருக்கலாம். ஆனால் இங்கே புலிகள் செய்த பாரிய தவறு. விண் மிக்ஸர் மோட்டார் சைக்கிள் கொடுக்கவில்லையே என்ற காரணத்தினால் அவரது மோட்டார் சைக்கிளைக் கடத்தி கிளைமோர் தாக்குதலுக்குப் பயன்படுத்தியமையே ஆகும்.
இந்தத் தாக்குதல் தான் புலிகளின் மக்கள் ஆதரவினை வவுனியாவில் குலைக்கும் நோக்கில் அமைந்த முதலாவது தவறான நடவடிக்கையாகும். புலிகளைத் தேடி அழிப்பதற்காக ஒவ்வோர் தடவையும் உக்குளாங்குளம், கூமாங்குளத்திற்கு வரும் இராணுவத்தினருக்கு ஏமாற்றம் தான் ஒவ்வோர் தடவையும் கிடைத்தது. இதற்கான பிரதான காரணம் அப் பகுதியில் வாழ்ந்த மக்களின் பேராதரவும், பங்களிப்புமாகும். செல்லமுத்துவின் மீது தாக்குதல் நடாத்த புலிகள் தீர்மானித்து தம் நடவடிக்கையினை ஆரம்பிக்க முன்பதாக செல்லமுத்து தன் புதிய வீட்டினையும் விற்று விட்டு, அவசர அவசரமாக குடும்பத்தோடு இலங்கையின் மத்திய மலை நாட்டுப் பகுதிக்கு ஓடி ஒளித்துக் கொண்டார். இராணுவ உளவாளிகள் பலர் உக்குளாங்குளம், கூமாங்குளம் ஆகிய பகுதிகளில் புலிகள் இருக்கின்றார்கள் என்று கூறினாலும் இராணுவத்தினருக்கு புலிகள் எங்கே இருக்கின்றார்கள் எனும் விடயம் மட்டும் மர்மாகவே இருந்தது.
இவ் வேளையில் சத்தியன் தலமையில் இராணுவத்தினர் நெருப்பினையும், ஏனைய போராளிகளையும் தேடி அழிக்கும் நோக்கில் ஒரு அதிரடி நடவடிக்கைக்குத் திட்டமிட்டார்கள். நெருப்பினைத் தேடியளிக்கப் புறப்பட்ட இராணுவத்தினரும், அப்பாவி மக்களைக் கொன்று தம் ஆத்திரத்தை அடக்கிய படைத்துறைப் புலனாய்வாளர்களும் பற்றிய விபரங்களையும், நெருப்பு இராணுவத்திடம் அகப்பட்டானா?வவுனியாவில் புலிகளின் நடவடிக்கைகளுக்கு என்ன ஆயிற்று? வன்னிக் கள முனையில் நிகழ்ந்த மாற்றங்கள் எவை? இது பற்றிய மேலதிக விபரங்களை அறிய ஆவலா? அடுத்த பாகம் வரை காத்திருங்கள்!
|
17 Comments:
வாழ்த்துக்கள் நிரூ...ஒவ்வொரு அத்தியாயமும் தமிழ் வீரம் விளைந்த நிலங்களாக ஜொலிக்கிறது.
அத்தனை வீரங்களும் விதை நெல்லாக முளைக்கட்டும்.
அத்தனை தரவுகளையும் அழகா தொகுத்து தாறியல் சகோ. அடுத்த பாகத்துக்கு வெயிட்டிங்.
waiting
waiting
waiting.....
புத்தகமாக இதை வெளியிடலாமே நிரூபன்?
தொடருங்கள் தொடரை பல விடயங்களை தெரிந்து கொள்ள உதவியாக இருக்கின்றது .
இன்னும் சம்பவங்கள் தொடரட்டும்....
நம்ம தளத்தில்:
ஹையோ! எவ்ளோ அருமையான படங்கள்! சூப்பரோ சூப்பர்!!
//ஏனைய 5 வீதத்திற்கும் குறைவான மக்கள் புலிகள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்ல பாஸ் அனுமதி வழங்காத காரணத்தினால் புலிகளோடு விரும்பியும், விரும்பாமலும் ஒட்டியிருந்தார்கள்//
பாஸ், நீங்கள் சொல்வதைப் பார்க்கும்போது 95 சதவீதம் பேர் போக விரும்பவில்லை! மீதி 5 வீதம் பேருக்கு புலிகள் பாஸ் வழங்க மறுத்துவிடுகிறார்கள்!
ஆக, 50 வீதம் பேர் ஏன் 100 வீதமானோரும் விரும்பியிருந்தாலும் கூட புலிகள் அனுமதித்திருக்க மாட்டார்கள்/ அனுமதிக்கவில்லை என்பதுதான் உண்மையா?
//புத்தகமாக இதை வெளியிடலாமே நிரூபன்?//
மச்சி என்னுடைய விருப்பமும் இதே தான்...
நிரூபன்,
சிறு இடைவெளிக்கு பின் இன்று அனைத்து பாகங்களையும் படித்தேன்.
வரலாறு சிறப்பாக வளர்கிறது.
அடுத்தடுத்த பகுதிகளுக்காக மனதில் ஒரு ஏக்கம்..!
@ஜீ...
பாஸ், நீங்கள் சொல்வதைப் பார்க்கும்போது 95 சதவீதம் பேர் போக விரும்பவில்லை! மீதி 5 வீதம் பேருக்கு புலிகள் பாஸ் வழங்க மறுத்துவிடுகிறார்கள்!
ஆக, 50 வீதம் பேர் ஏன் 100 வீதமானோரும் விரும்பியிருந்தாலும் கூட புலிகள் அனுமதித்திருக்க மாட்டார்கள்/ அனுமதிக்கவில்லை என்பதுதான் உண்மையா?
//
ஆமாம் ஜீ, உண்மையிலே மக்களினைத் தம்மோடு வைத்திருக்க வேண்டும் என்பதனைக் கருத்திற் கொண்டு அனுமதி வழங்க மறுத்திருந்தார்கள்!
பயமாக விறு விறுன்னு போகுது சொல்லுங்க சொல்லுங்க....!!!
அடுத்த பாகத்துக்கு வெயிட்டிங்.
கடல் வெள்ளரிகளுடன் கல்பிட்டியில் ஒருவர் கைது
நிரூபன் வராற்றின் தொடர்ச்சியை எதிர் பார்த்திருக்கிறோம்.
தொடர் விருவருப்பாக செல்கிறது.....
எத்னை எத்தனை விடயங்களில் நாம் நம்மை ஏமாற்றிக்கொள்கிறோம் என்பது புரிகிறது...
வாழ்த்துக்கள் நிரூபன்....
தொடர்கிறேன்,காத்திருத்தலோடு!
வணக்கம் சகோ! அனைத்தும் புதிய விஷயங்கள் தொடருங்கள்.
புதிய விஷயங்கள்...அடுத்த பாகத்துக்கு வெயிட்டிங்...தொடருங்கள் சகோதரம்...
Post a Comment