புலிகளின் உள்ளிருந்து தாக்கும் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாது திண்டாடிக் கொண்டிருந்த இராணுவம் தனக்கு கிடைத்த வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்தி வன்னி மீதான படையெடுப்பிற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளத் தொடங்கியது. இதே வேளையில் புலிகளின் உள்ளிருந்து தாக்கும் அல்லது புலிகள் வவுனியா நகரின் உள்ளே மக்களோடு மக்களாக இருந்து தாக்கும் தாக்குதல்களின் வீரியத் திறனினை உணர்ந்த இராணுவம் ஏற்கனவே திட்டமிட்ட படி வழமைக்கு மாறாகப் புதிய தாக்குதல் நுட்பத்தினை நான்காம் கட்ட ஈழப் போரில் கையாளத் தொடங்கியது. அது தான் புலிகளின் குகைக்குள் சென்று பொது மக்கள் போன்று வேடமிட்டு தாக்குதல் நடாத்துவது. இந்தத் தாக்குதல் அணியினரை ஆழ ஊடுருவித் தாக்கும் அணியினர் என்றும் இவர்களின் தாக்குதல்களை ஆழ ஊடுருவித் தாக்குதல் என்றும் பெயர் சொல்லி அழைப்பார்கள்.
நீங்கள் இப்போது படித்துக் கொண்டிருப்பது உங்கள் பேரபிமானம் பெற்ற நாற்று வலைப் பதிவில் வலம் வந்து கொண்டிருக்கும் ஈழப் போரியல் வரலாற்றில் இதுவரை வெளிவராத மர்மங்களின் ஐந்தாவது பாகத்தின் தொடர்ச்சியாகும். இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள Drop Down Menu இல் கிளிக் செய்யுங்கள். கார்த்திகை மாதம் ஈழத் தமிழர்களுக்கு இரு வேறுபட்ட வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது என்று ஈழத்தில் கூறுவார்கள். ஒன்று மாவீரர்களை நினைவு கூர்ந்து மலரஞ்சலி செலுத்தும் நாள் எனும் வகையிலும் இன்னொன்று தமிழர்களைச் சூழ்ந்திருந்த காரிருளை அகற்றிக் களமாடிட கரிகாலன் பிறந்த நாள் எனும் வகையிலும் இக் கார்த்திகை மாதம் ஈழத்தில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. வவுனியாப் பகுதியில் இவ் இரு நிகழ்வுகளையும் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் நின்ற போராளிகள் 2006ம் ஆண்டும் சிறப்புறச் செய்தார்கள்.
பிரபாகரனின் பிறந்த நாளன்று உக்குளாங்குளம், கூமாங்குளம், மற்றும் பண்டாரிக்குளம் விபுலானந்தா மகாவித்தியாலத்திற்கு சமீபமாகவும் கண்டோஸ்/சாக்கிலேட்டுக்களை வழங்கித் தம் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினார்கள் போராளிகள். இதன் பின்னர் தமது வழமையான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி இராணுவத்தினருக்கு அச்சமூட்டும் வகையில் தமது செயற்பாடுகளைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். உக்குளாங்குளம், கூமாங்குளம் ஆகிய பகுதிகளினுள் புலிகள் செறிவாக வாழ்ந்த காரணத்தினால் அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் வேறு யாரும் நடமாடுவதென்பது இயலாத காரணமாக இருந்தது. இதே வேளை அங்கு வாழ்ந்த மக்களின் முகங்களும் புலிகளுக்கு நன்கு பரிச்சயமான முகங்களாக இருந்த காரணத்தினால் புலிகளை உளவு பார்ப்பதற்காக வேறு யாரும் அப் பிரதேசத்தினுள் நுழைய முடியாதவாறு புலிகளின் செல்வாக்கு அப் பகுதியில் மேலோங்கியிருந்தது.
இந் நேரத்தில் மார்கழி மாதமளவில் உக்குளாங்குளம் சிவன் கோவிலுக்குச் சமீபமாக வியாபார நிலையத்தினை வைத்திருந்த சிவகரன் அவர்கள் தன்னுடைய கடைக்கு வரும் வாடிக்கையாளரும்,நண்பருமான செல்லமுத்துவின் புதுமனைப் புகு விழா அல்லது வீடு குடி புகும் சடங்கிற்குச் செல்கின்றார். செல்லமுத்து அன்றாடம் தொழில் செய்து அப் பகுதியில் வசித்து வந்த ஈழத்தில் இந்திய வம்சாவளி மக்கள் என்ற நாமத்தினால் தமிழர்கள் என்ற பிரிவிலிருந்து பிரித்து மலையக மக்கள் எனும் அடை மொழியால் குறிக்கப்படும் இனத்தினைச் சேர்ந்த தமிழராவார். திடீரென பலஸ் போன்ற தோற்றத்துடன் அவர் வீட்டினைக் கட்டியிருப்பதும், அவருக்கு எப்படி இந்தளவு பணம் கிடைத்தது என்பதும் அப் பகுதியில் வாழும் மக்களுக்கும் புலிகளுக்கும் சந்தேகமாகவே இருந்தது. இந் நேரம் வீடு குடி புகும் நிகழ்விற்குச் சென்ற சிவகரனுக்கு எதிர்பாராத அதிர்ச்சி கண் முன்னே நிகழ்ந்தது.
பொது மக்களைப் போன்ற உடையில் அல்லது சிவில் உடையில் மல்லாவி மத்திய கல்லூரியில் சிவகரனுடன் ஒன்றாகப் படித்திருந்த சத்தியன் சிவகரனுக்கு எதிரே செல்லமுத்துவுடன் வீடு குடி புகும் நிகழ்வில் ஒன்றாகப் பேசி மகிழ்ந்து கொண்டிருந்தார். இப்போது சிவகரனின் மனதிற்கு ஒரு விடயம் புரிந்தது. செல்லமுத்துவின் புது வீட்டிற்கான உதவிகள் சத்தியன் ஊடாகவும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினூடாகவும் தான் கிடைத்திருக்க வேண்டும். சிவகரன் தன் பாடசாலை நண்பன் என்ற ரீதியில் சத்தியனைப் பார்த்துச் சிரித்தார். ஆனால் சத்தியனோ சிவகரனை இது வரை அறியாத புதிய நபர் போன்ற கோணத்தில் நினைப்பதாகப் பாசாங்கு செய்து விட்டு அவ் இடத்தை விட்டு நகர்ந்தார். சிவகரன் ஓடோடி வந்தார். தன் கடைக்கு முன்பாக யாராவது புலிகள் நிற்கிறார்களா என்று தேடினார்? வழமையாக அவ் இடத்தில் நிற்கும் புலிகளின் நடமாட்டத்தினை அன்றைய தினம் அவரால் அவதானிக்க முடியவில்லை.
உடனடியாக அமலன் - விமலன் ஆகிய இருவரினதும் சன்டெல் நிறுவன CDMA தொலைபேசிக்கு அழைப்பினை மேற்கொண்டு ஒரு முக்கியமான விடயம் பேசவிருப்பதாகவும், தன்னைச் சந்திக்க வருமாறும் கூறினார் சிவகரன். சிவகரனைப் புலிகள் மறு நாள் காலை வந்து அவரது கடையில் சந்தித்தார்கள்.செல்லமுத்துவின் வீட்டில் தனக்கு நிகழ்ந்த எதிர்பாராத அதிர்ச்சி பற்றி அச்சத்துடன் கூறியதோடு,ஸ்ரீலங்காப் படைத்துறைப் புலனாய்வாளர்களும், சத்தியனும் செல்லமுத்துவின் வீடு குடி புகுதல் சடங்கில் பிரசன்னமாகியிருந்த விடயத்தினையும் சொல்லிப் புலிகளை உஷாராக இருக்குமாறும் கூறினார்.
புலிகள் யாருக்கும் சந்தேகம் வராதவாறு சிவகரனின் கடைக்கு முன்பாக உள்ள வெற்றுக் காணிக்கு முன்பாகத் தண்ணீர் செல்லும் சிறிய சீமெந்துப் பாலத்தின் கீழ் உரப்பையினால் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறியளவிலான ஆயுதங்களைத் தூசு தட்டி எடுத்துக் கொண்டு கூமாங்குளம் அம்மன் கோவிலடிக்குச் சென்றார்கள். அப்போது தான் அங்கே நின்ற புலிகளை நோக்கி ஒரு ஆட்டோ வருவதைப் புலிகள் அவதானித்தார்கள். விமலனோடு நின்ற அமலன் வேவுத் தகவல்களைச் சேமிப்பதற்காக வவுனியா - தேக்கவத்தைப் பகுதிக்குச் சென்று விட, இப்போது விமலனும், ஏனைய நான்கு போராளிகளும் தனியாக அம்மன் கோவிலுக்குச் சமீபமாக நின்று உரையாடிக் கொண்டிருந்தார்கள்.
மழை பெய்யாது மார்கழிப் பனிப் பொழிவின் பின் மப்பும் மந்தாரத்துடன் நிலவிய வெய்யில் காலக் கால நிலையில் தம்மை நோக்கி வரும் ஆட்டோவானது கறுப்புக் கலர் படங்கினால் மழைக் காலத்தில் மூடப் பட்டிருப்பதனைப் போன்று தோற்றமளிப்பதனைத் தொலைவில் வைத்துப் பார்வையினூடாக உய்த்தறிந்த புலிகளுக்குச் சந்தேகம் வலுக்கின்றது. தம் இடுப்பில் இருந்த செமி ஆட்டோமெட்ரிக் பிஸ்டலைத் தயார் நிலையில் வைத்திருந்தார்கள் புலிகள்.புலிகளுக்குச் சமீபமாக ஆட்டோ வந்ததும், ஆடோவிலிருந்து இருவர் கறுப்புப் படங்கினை மேலே தூக்கி விட்டு சுடத் தொடங்கினார்கள். புலிகள் உஷாராகி எதிர்த் தாக்குதலைத் தொடுத்தார்கள். இந்தத் தாக்குதலின் போது விமலனுக்கு காலில் காயம் ஏற்படுகின்றது.
புலிகளைத் தாக்க வந்த இராணுவத்தினரில் ஒருவர் ஆட்டோவில் உயிரிழந்து விட, ஏனைய இருவருடன் ஆட்டோ தலை தப்பினால் போதும் எனும் நிலையில் கூமாங்குளத்தை விட்டு நகர்கின்றது. காயம்பட்ட விமலனுக்கு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சையளிக்க முடியாத நிலமை. இதற்கான பிரதான காரணம் புலிகளின் புலனாய்வுத் துறையில் இருந்த பலராலும் அறியப்பட்ட ஒரு முதன் நிலைத் தளபதி விமலன் என்பதால் வவுனியா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றால், மக்கள் கண்ணிலும், இராணுவத்தினரின் கண்ணிலும் பட வேண்டி வரும் என்பதால் புலிகள் முதலுதவிச் சிகிச்சையினை மாத்திரம் மேற் கொண்டு விட்டு, விமலனை வன்னிக்கு மேலதிக சிகிச்சையின் நிமித்தம் எடுத்துச் செல்வதாக முடிவெடுத்திருந்தார்கள்.
விமலனைச் சிகிச்சைக்காக வன்னிக்குக் கொண்டு சென்ற பின்னர், டக்ளஸ் எனும் பெயர் கொண்ட போராளி நெருப்புடன் வவுனியாவில் இணைந்து கொள்கிறான். இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த டக்ளஸ் பல களங்கள் கண்ட துணிச்சல் மிக்க போர் வீரன் என்பதோடு, நன்றாகச் சிங்கள மொழி பேசக் கூடிய போராளியாகவும் விளங்கினான். வவுனியாவில் உள்ள கருணா குழுவினரின் முகாம்களைத் தாக்கியளிக்க வேண்டும் அல்லது கருணா குழு முகாம்கள் மீது தாக்குதல் தொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தவன் தான் டக்ளஸ்! இப்போது போராளி டக்ளசும், போராளி நெருப்பும் ஒன்றாகச் சேர்ந்து விட்டார்கள். இனி என்ன நடந்திருக்கும்? இது பற்றி அறிய ஆவலா? அடுத்த பாகம் வரை காத்திருங்கள்!
இப் பதிவிற்கான படங்கள் யாவும் கூகுள் தேடல் மூலம் பெறப்பட்டவை!
நேற்றைய தினம் வெளியான பதிவினைப் படிக்காது தவற விட்டோருக்காக:
கலைஞரையும் ஜெயலலிதாவையும் ஓரங் கட்டுவது எப்படி!

|
25 Comments:
சுறு சுறு விறு விறு நிரூ..
நடந்ததை எல்லாம் கண் முன் கண்ட உணர்வு..
பகிர்வுக்கு நன்றி நிரூ
செம்ம விறுவிறுப்பு பாஸ்!
விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் செல்கிறது, இருங்கள் விவாத களம் என்னாயிற்று என்று பார்த்து விடுகிறேன்
மக்களை எவ்வாறு தம் சூழ்ச்சிக்குப் பயன்படுத்தளாம் என்பதை இனவாதப் புலனாய்வுப் படை நன்கு தெரிந்து கொண்ட வழி முறைதான் செவ்வமுத்துப் போன்றோரை தம் பக்கம் இழுக்கும் செயல்முறை!
அடுத்த பாகத்திற்கு காத்திருக்கின்ரேன் தொடருங்கள் தொடர்கின்றேன்!
சுவாரஸியமா இருக்கு பாஸ்... அடுத்த பதிவையும் அவசரமா எழுதுங்க பாஸ்...

ஈழப் போரை அலசி ஆராய்ந்து ஒரு வரலாற்று முக்கித்துவம் பெறப் போகும் தொடர்...
நடந்தது நடந்தபடி-விறுவிறுப்புடன்!
டி வில பார்ப்பது போல இருக்கு
ஒவ்வொரு கணமும் விழிப்போடு வாழ வேண்டியது போராளிக்கு அவசியம் என்று தெளிவாக உணர்த்துகிறது இந்தப் பகுதி..
டக்ளஸும் நெருப்பும் சேர்ந்தாச்சு..சீக்கிரம் அடுத்த பகுதியை இறக்குங்க நிரூ.
பகிர்வுக்கு நன்றி நண்பா!
சூப்பர்....
காலை வணக்கம்,நிரூபன்!தொடருங்கள்.விமர்சிக்க தகுதியும் இல்லை,தேவையும் இல்லை!
ஏ யப்பா..........திக் திக் திக் திரில்லரா இருக்கே, மக்கா காட்டி கொடுக்கும் தமிழ் துரோகிகள் இருக்கும் வரை தமிழன் உருப்படவே முடியாது இல்லையா...
இது கதையா இல்லை நெசமாயே நடந்ததா ???
'புலிகளின் அவசரக்குடுக்கை தனமான செயலால் ' என்று போன பகுதியில் நிறுத்திவிட்டு இந்த பகுதியில் அது பற்றி சொல்லவில்லையே ...? இனி தானா ??
அடுத்து என்ன நடந்தது???
நல்ல மூட்டில இருந்து, நல்ல நல்ல கவிதைகளை வளங்கிக்கொண்டிருந்த நிரூபனை, ஆர் திடீரென அரசியல்வாதியாக்கினது கற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்.. சே.. என்னப்பா இது எல்லாமே தடுமாறுதெனக்கு... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).
ஊசிக்குறிப்பு:
நிரூபனுக்கு ரெட்லைன் போட்டாச்சு, நானில்லை, பூஸார்தான்:))))))))))
டக்ளசும்...நெருப்பும் ஒன்றாகச் சேர்ந்து....
தொடருங்கள் அடுத்த பகுதியை....
வணக்கம் சகோ! தொடருங்கள் காத்திருக்கிறோம்,ஆவலைத்தூண்டுகிறது.
@கந்தசாமி.
இது கதையா இல்லை நெசமாயே நடந்ததா ???
//
அடிங் கொய்யாலா...
ஆமா இதுக்குத் தான் ஊரில விடிய விடிய ராமர் கதை, விடிஞ்சாப்புறம் இராமர் சீதைக்கு என்ன முறை என்று கேட்பாங்கள் என்று சொல்லுவாங்களே?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
பதிவின் ஆரம்பத்தில் என்ன சொல்லியிருக்கேன்.
உண்மைச் சம்பவம் மச்சி,
@கந்தசாமி.
'புலிகளின் அவசரக்குடுக்கை தனமான செயலால் ' என்று போன பகுதியில் நிறுத்திவிட்டு இந்த பகுதியில் அது பற்றி சொல்லவில்லையே ...? இனி தானா ??
//
இந்தப் பகுதியில் அதனைச் சேர்க்கலாம் என்று தான் எழுதினேன். ஆனால் பதிவு மிகவும் நீண்டு விட்டது. அதனால் தான் அடுத்த பாகத்தில் அந்தச் சம்பவத்தைப் பற்றிச் சொல்லப் போகின்றேன்!
Supper
Post a Comment