இப்போது கார்த்திகை மாதம்!
கரு மேகம் சூழ்ந்து இடி இறக்கி
எம் கண்ணீரில் வறண்டு போன
தேசத்திற்கு மழை பொழிந்து
காலப் பெரு வெளியில்
தமிழர் தம் வாழ்விற்காய்
கல்லறையுள் துயில் கொள்ளும்
ஞாலத்தில் வாழும் தெய்வங்களினை
நினைவு கூர்ந்து
குளிர்விக்கும் நன் நாள் இது!
அடிமைத்தளையுள் சிக்கி
தமிழன் உணர்வை தொலைத்து
வம்சம் தனை இழந்து
வாழ்வை பறி கொடுத்து
வந்தேறு குடி என சிங்களரால்
வழங்கப்படும் நாமத்தை பெற்று
வடக்கிலும் கிழக்கிலும் புதைந்து
உலகறியா இனமாக ஈழத் தமிழன்
உருமாறிச் சிதைந்திடுவான்
என இறுமாப்போடு
எமை அழிக்க வந்தோர்க்கு
தமிழர் தம் வீரம் உணர்த்தி
துயில் கொள்ளும்
குழந்தைகளை
நினைவு கூறும் நன் நாள் இது!
பேசும் தெய்வங்களும்
காவல் தெய்வங்களும்
எங்கே என அடி முடி தேடிய
தமிழர் தலை முறைக்கு
நும் அருகே இருக்கிறார்கள்
காவல் தெய்வங்கள்-
உமை(க்) காக்க வந்த தெய்வங்களாய்
கல்லறையினுள் துயில்கிறார்கள்
என சேதி சொல்லி எமை நிமிர்ந்து
நிற்கச் செய்த மழைக் கால மாவீரர் மாதமிது!
வீழும் தமிழர் இனம்;
தமைக் காக்க வழி தெரியாது
தம் எதிர் கால வாழ்வை
தொலைத்து சாகும் தமிழர் இனம்
என இனவழிப்பு நடனம் ஆடிய
இனவாதப் பேய்களுக்கு
ஆளப் பிறந்தவர்கள் தமிழர்கள் என
உணர்த்த ஒரு தானைத் தலைவனை
தந்ததும் இந்த மாதம் தான்!
கல்லறையை அழித்தோம்;
கருமமே கண் எனவாகி
தமிழர் தம் உணர்வுகளை
நீறாக்கி பொசுக்கி விட்டோம்;
போரில் பின்னடையை வைத்தோம்;
ஊரில் இருந்த உணர்வுள்ள
மனிதர்களையும் உருத் தெரியாதோர்
ஊடாக உருவம் அழித்தோம் - என
இறுமாப்பு கொண்டு நிற்கும்
இனவாத சித்தாந்தப் பேய்களுக்கு
மக்கள் தம் மனதில்
இன்றும் இவர்கள் இருக்கிறார்கள்
எனும் உண்மை தெரியாது போய் விட்டதே!!
நீங்கள் வாழும் தெய்வங்கள்!
எம் வாசல் வந்த பகையை
அழித்து எமை காத்து நின்ற
நடமாடும் செல்வங்கள்!
கண் முன்னே தரிசித்தோம்!
பகை கண்டு அஞ்சற்க
எனச் சொல்லி நின்றவர்கள்!
என மண் முன்னே நிற்கையிலும்
மன்னவனின் மொழியினை
மனதில் நிறுத்தி
தாயகம் ஒன்றே கனவெனக் கொண்டு - இன்று
வேரென எம்மோடு தொடரும்
பெரு விருட்சங்கள் நீவிர்!
கார்த்திகைப் பூவும்
கதிரவன் ஒளியும்
பார்த்திருக்கப் புலியானோர்
சேதிகளும்
உம் பாதம் தொடர்ந்தனவே!
வார்த்தைகள் கொண்டு உமை
எப்படிப் பாடி
கவிப் பா ஆக்கிடலாம் என
எண்ணினாலும் தமிழில்
ஏதும் சிக்கலையே எம் தேவரீரே!
நும் நினைவுகள்
எம் மனக் கனவுகள்!
கல்லறையை அழித்தோம்
என கூப்பாடு போடுவோர்
மனக் கல்லறையை
திறந்து பார்க்கா
இனத்துவேச மனிதர்களுக்கு
இன்றும் மக்கள் மனங்களில்
வாழ்கிறோம் யாம் என
சேதி உரைத்து நிற்கிறீர்களே!
உங்கள் கனவும் ஒரு நாள் பலிக்கும்
எனும் உணர்வோடு
நாமும் நடக்கிறோம்!
**********************************************************************************************************
இப் பதிவிற்கு முதல் வெளியாகிய பதிவுகள்:
*விஜயிற்காய் தீக்குளிக்க தயாரான பதிவர் - வேலாயுத வெறி!
**********************************************************************************************************
**********************************************************************************************************
|
22 Comments:
காவல் தெய்வங்கள் நினைவகங்கள் சீர் குழைக்கப்பட்டாலும் இனவாதிகள் கொட்டம் அடினாலும் தூய மனிதர்கள் நினைவுகள் நெஞ்சில் ஆடும் இதை வையகம் சொல்லும்!
அன்பு வணக்கம் சகோ நிரூபன்,
////பகை கண்டு அஞ்சற்க
எனச் சொல்லி நின்றவர்கள்!////
வாழ்வின் சுவை மறந்து
சுமைதாங்கியாய் காலம் முழுதும்
காவல் நின்றவர்கள்...
தலை வணங்குகிறேன்.....
நெறிகெட்ட ஆட்சியாளர்களுக்குத் தெரியவில்லை மரனித்தவர்களைக் கூட மதிக்கும் பண்பைப்பற்றி!
வேதனைகளைச் சொல்லும் கவிதை!
//பேசும் தெய்வங்களும்
காவல் தெய்வங்களும்
எங்கே என அடி முடி தேடிய
தமிழர் தலை முறைக்கு
நும் அருகே இருக்கிறார்கள்
காவல் தெய்வங்கள்-
உமை(க்) காக்க வந்த தெய்வங்களாய்
கல்லறையினுள் துயில்கிறார்கள்
என சேதி சொல்லி எமை நிமிர்ந்து
நிற்கச் செய்த மழைக் கால மாவீரர் மாதமிது
//
நல்ல வரிகள்
குறிப்பிட்டு ஒருவரியை கூட சொல்ல முடியாது..
நான் இவர்களில் விஜப்பது இவர்களது மான உறுதியைத்தான்..
உலகுக்கு எங்கே தெரியும் இவர்கள்
உத்தமர்கள் என்று
என் உள்ளத்துக்கு தெரியும்..
இவர்கள் உயிரிலும் மேலானவர்கள் என்று......
வணக்கம் நிரூபன்
மாவீரர் துயிலும் இல்லங்களை அழித்தால் அவர்கள் எங்கள் மனங்களில் இருந்தும் அழிக்கலாம்ன்னு கனவுகானும் சிங்கள பேரினவாதிகளுக்கு சாட்டையடி கொடுத்துள்ளீர்கள்..
இதை தான் செத்த பிறகும் வாழ்வது என்பது... நாமும் வாழ வேண்டும் இந்த வாழ்க்கையை..
ஆம், உண்மையில் அவர்கள் காவல் தெய்வங்கள் தான்..
மாவீரர்களுக்கு எம் வீர வணக்கங்கள்.
சாட்டை அடி பலமாய் தான் இருக்கு
காலை வணக்கம் நிரூபன்!புண்ணியம் செய்த,செய்யும் கார்த்திகையில் வந்துதித்த அந்த மாபெரும் தலைவன் வழியில் எம் சுதந்திரம் பெற்றிட உழைப்போம் என ஒவ்வோர் தமிழனும் உறுதியெடுப்போம்!மாவீரர் நினைவு சுமக்கும் மாதமதில் நம் செயல்கள் அனைத்தும் ஆக்கபூர்வமானதாக இருக்கட்டும்.
நிரூபன்!புண்ணியம் செய்த,செய்யும் கார்த்திகையில் வந்துதித்த அந்த மாபெரும் தலைவன் வழியில் எம் சுதந்திரம் பெற்றிட உழைப்போம் என ஒவ்வோர் தமிழனும் உறுதியெடுப்போம்!மாவீரர் நினைவு சுமக்கும் மாதமதில் நம் செயல்கள் அனைத்தும் ஆக்கபூர்வமானதாக இருக்கட்டும். ///
ஐயா சொன்னதை நான் முற்றிலும் வழி மொழிகிறேன்...
வீர வணக்கம்...
கல்லறைக்குள் வாழ்வதைவிட எம் காவல்தெய்வங்கள் எங்கள் நெஞ்சறைக்குள் என்பதுதானே உண்மை.நேற்றும் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வணக்கம் செலுத்தினோமே !
எம் கண்ணில் ரத்தம் கசிகிறது....!!!
@Yoga.S.FR
காலை வணக்கம் நிரூபன்!புண்ணியம் செய்த,செய்யும் கார்த்திகையில் வந்துதித்த அந்த மாபெரும் தலைவன் வழியில் எம் சுதந்திரம் பெற்றிட உழைப்போம் என ஒவ்வோர் தமிழனும் உறுதியெடுப்போம்!மாவீரர் நினைவு சுமக்கும் மாதமதில் நம் செயல்கள் அனைத்தும் ஆக்கபூர்வமானதாக இருக்கட்டும்.
//
மதிய வணக்கம் ஐயா,
நலமா?
லண்டன் எப்படி இருக்கிறது?
தற்போது ஸ்னோ தொடங்கி விட்டதா?
குளிரா?
உங்களுக்கு ஒரு பேஸ்புக் உருவாக்குங்கள்.
நாம பேசுவோம்
அல்லது ஸ்கைப் எக்கவுண்ட் ஒன்று உங்கள் பேரமாரிடம் சொல்லி உருவாக்குங்கள்.
ஒரு நாள் பேசுவோம்...
உங்கள் கனவும் ஒரு நாள் பலிக்கும்//
அது நம் காலத்தில் நினைவாய் ஆகும் சகோதரம்...
வீர வணக்கங்கள்...
//நீங்கள் வாழும் தெய்வங்கள்!
எம் வாசல் வந்த பகையை
அழித்து எமை காத்து நின்ற
நடமாடும் செல்வங்கள்!//
good
அந்த வாழும் தெய்வங்களுக்கு என் வணக்கங்கள்.
நெஞ்சில் குடிகொண்ட அந்த உயர் தெய்வங்களுக்கு வீர வணக்கங்கள்.
உங்கள் கனவும் ஒரு நாள் பலிக்கும்
எனும் உணர்வோடு ... நண்பன்
மாலை வணக்கம்! நீங்கள் கேட்ட விடயம் ஒருவகையில் நல்லதுதான்.பிள்ளைகள் உரு வாக்கியிருக்கிறார்கள் தான்,எனினும் எனக்கு அதில் அவ்வளவு நாட்டமில்லையே,என் செய்ய?பார்ப்போம்,முடிந்தால் ஸ்கைப்பில் பேசுவோம்.அதற்கும் அந்தக் கமெரா வாங்க வேண்டும்,பார்ப்போம்.
@Yoga.S.FR
மாலை வணக்கம்! நீங்கள் கேட்ட விடயம் ஒருவகையில் நல்லதுதான்.பிள்ளைகள் உரு வாக்கியிருக்கிறார்கள் தான்,எனினும் எனக்கு அதில் அவ்வளவு நாட்டமில்லையே,என் செய்ய?பார்ப்போம்,முடிந்தால் ஸ்கைப்பில் பேசுவோம்.அதற்கும் அந்தக் கமெரா வாங்க வேண்டும்,பார்ப்போம்.
//
ஹி..ஹி..
ஐயா ஸ்கைப்பிற்கு மைக் இருந்தாலே ஓக்கே..
நாம என்ன லவ் பண்ணுறோமா?
வீடீயோ கமெடா பார்த்து கதைக்க?
கமெரா தேவையில்லை ஐயா.
ஸ்கைப் இருந்தாலே போதும்.
கவிதை நீட்..
>>கல்லறையை அழித்தோம்;
கருமமே கண் எனவாகி
தமிழர் தம் உணர்வுகளை
நீறாக்கி பொசுக்கி விட்டோம்;
நீறு= சாம்பல்
பொசுக்கி எரித்த பின் தானே சாம்பல் வரும்?
மறைந்தும் மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கும் தெய்வங்களுக்கு என் வீர வணக்கங்கள்.
Post a Comment