காலையில் கன்னியை(க்) கண்டான்; அவள் மேல்
காதலை(க்) காளையும் கொண்டான்
வேளைகள் நெருங்குமென்றிருந்தான்; தினமும் தன்
வேட்கையை தீர்த்திட முயன்றான்
ஓலையில் எழுதியே கொடுத்தான்; அவள் அதை
ஒருமுறை(க்) கிருதரம் படித்தாள்
வேலையை வெட்கத்தை இழந்தான்; இப்போ அவள்
வெளிநாடென்றுமே பறந்தாள்!
தாடியை(த்) தனயனும் வளர்த்தான்; அவளோ
தமிழினைத் தப்பென்று மறந்தாள்
கோடியாய் பணத்தினை இழந்தான்; அந்த
கோதையைத் தேடியே அலைந்தான்
நாடினை நகரினை மறந்தான்; அந்த
நங்கையின் நினைப்பினால் தவித்தான்
பீடியை விரும்பியே சுவைத்தான்; இப்போ
"பாடியில் கான்சராம்" பயந்தான்!
"வண்டலூர் ஊராம் கவர்மென்ட் தொழிலாம்
"போய்" லண்டனாம் என்றதும் லட்சியம் மறந்தாள்
செண்டுகள் கொடுத்தாள்; சேலையை மறந்தாள்
"சொப்பிங்" போனாள் இதுவே சொர்க்கமாம் என்றாள்
கண்டதும் காளையை கையினால் அணைத்தாள்
கட்டிய கணவனை அக் கன்னியும் பிரிந்தாள்
இன்றைய சில பெண்களின் இழிநிலை இதுவாம்
இதனையும் நீவிர் மாற்றிட நினைப்பீர்!
என்றுமே சொல்வது எவனடா என
எண்ணிடும் முன்னே; நானும் முடிக்கிறேன் இதையாம்!
அரும்பதவுரை/ சொல் விளக்கம்:
வேட்கை: ஆசை/ இச்சை.
ஓலை: கடிதத்தினை குறிக்கும் பழந் தமிழ்ச் சொல்.
பாடி: Body எனும் ஆங்கிலச் சொல்லால் குறிக்கப்படும் மனித உடல்.
கான்சர்: புற்று நோய்.
கவர்மென்ட் தொழில்: அரசாங்க வேலை.
சொப்பிங்: Shopping போதல்/ பொருட்களை கொள்வனவு செய்யச் செல்லுதல்.
பிற் சேர்க்கை: பதிவின் தலைப்பில் வரும் "தமில்" எனும் வார்த்தை நாகரிக மோகத்தில் தமிழை தமிலாக உச்சரிக்கும் நபர்களின் நிலையினை உணர்த்தும் நோக்கோடு சரிவரப் பொருந்தி வரும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.
பிற் சேர்க்கை: இக் கவிதையின் ஒவ்வோர் பந்தியினூடாகவும் வெவ்வேறு ஒரு நபரின் வெவ்வேறு சம்பவங்கள் உரைக்கப்பட்டுள்ளது.
************************************************************************************************************
இப் பதிவின் ஊடாக நான் உங்கள் அனைவரையும் ஒரு மசாலாத் தளத்திற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன். நீங்கள் அனைவரும் தயாரா?
"அம்பலத்தார் ஐயா" அவர்கள் தன்னுடைய "அம்பலத்தார் பக்கம்" வலைப் பதிவின் ஊடாக பல் சுவைப் பதிவுகள், மசாலாச் சுவைக் கலந்த கதம்பப் பதிவுகள், மற்றும் ஈழத்து அரசியல் நிகழ்வுகளையும் பதிவுகளாக்கி வருகின்றார்.
அம்பலத்தார் ஐயாவின் "அம்பலத்தார் பக்கம்" வலைப் பதிவிற்குச் செல்ல:
*************************************************************************************************************
|
24 Comments:
அழமான கருத்துள்ள கவிதை...
வாழ்வு முறை மாறிக்கொண்டே செல்கிறது...
அடடா கன நாளைக்கு அப்புறம் சுடு சோறு சாப்பிடுறன்....
கருத்தாழமிக்க அழகான கவிதை.
வாழ்த்துக்கள்.
இது போல விஷயம் எப்படி புடிகிரிங்க ?
பகிர்வுக்கு நன்றி மச்சி...
அருமை நண்பரே
ம்ம்ம் வெளிநாட்டு வாழ்க்கை இப்பிடித்தான் போகுது...!!!
ஆழ்ந்த கருத்துள்ள கவிதை...!!!
மச்சி னா அப்பாலிக்க வறேன்..
நல்ல கருத்துள்ள கவிதைப் பகிர்வு!
அட வித்தியாசமான முறையில் சொல்லிருக்கீங்க கலக்கலா கவிதை... வாழ்த்துக்கள் பாஸ்
சொல்விளக்கம் சூப்பர் பாஸ்.
http://massalamassala.blogspot.com/
சகோதரர் அம்பலத்தார் அவர்களது வலைப்பூவிற்கு வாழ்த்துக்கள்...
பாஸ் இப்படி சம்பவங்கள் பல நடக்கின்றன...அதை கவிதையாக தந்திருப்பது அருமை.....
எனக்கு இந்தக்கவிதையை படிக்கும் போது பல எண்ணங்கள் மனதில் எழுகின்றது...
அம்பலத்தாரின் வலைப்பதிவுக்கு வாழ்த்துக்கள்
அச்சடிச்ச மாதிரி சொற்கள் வந்து விழுது
வாழ்த்துக்கள் நிருபன்
வெளிநாடு போய் மனைவியை ஏமாற்றும் ஆண்கள், இப்போ கணவனை ஏமாற்றும் பெண்கள், ஆணுக்கு பெண் சரிநிகர் சமானமென்போம்.
கருத்துள்ள கவிதை நண்பா நன்றி
புது களம் ..புது நடை...சோக்கா இருக்கு...
நிதர்சனமான உண்மை..கவிதையும் அழகு.
அம்பலத்தார் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்..
பீடி குடிச்சா கான்சர் வரும்
லேடி அடிக்கடி ஆளமாத்தினா .....வரும்
கவலையைவிடுங்க
புதிது புதிதாக முயற்சிகள் செய்கிறீர்கள் சகோ! அரும்பத உரையுடன்! வாழ்த்துக்கள்.
மீண்டும் நல்லது ஒரு கருப்பொருளை கையாண்டிருக்கிறீர்கள் நிரூ.ஆண் பெண் என்று பாகுபாடின்றி ஏமாத்துபவர்களும் ஏமாறுபவர்களும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். நிரூ " நீங்க எதை வேணுமென்றாலும் சொல்லிட்டே இருங்கோ நாங்க காதிலை வாங்கிக்கமாட்டோம் என்பதுபோலத்தானே எங்க ஜனங்கள் இருக்கிறார்கள். பிரபல பதிவர்களெல்லாம் வலம் வருகிற இடத்தில் என்னையும் மதித்து அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நிரூபன்
Post a Comment