Tuesday, November 1, 2011

அம்மா நான் போராடப் போறேன்!

அம்மா நான் இயக்கத்துக்குப் போறேன்/ போகிறேன்!
ஞாபகச் சிதறல்களாய் எம் குருதி தோய்ந்த மண்ணில் இற்றை வரை எஞ்சியிருக்கும் ஒவ்வோர் சம்பவங்களும் பல வரலாற்றுக் கதைகளை எம் கண் முன்னே கொண்டு வரும் சக்தி வாய்ந்தவையாக விளங்குகின்றன. முன்னொரு காலத்தில் அழகு நிறை பூமியாக, பூத்துக் குலுங்கும் வளம் நிறைந்த சோலையாக இருந்த எங்கள் ஈழ வளத் திருநாட்டின் தமிழர் தாயகப் பகுதியினை யுத்த அரக்கன் சூழ்ந்த வேளையில் பிரபல்யமாக இருந்த ஒரு விடயம் தான் இந்தப் இயக்கத்துக்குப் போறேன் எனும் விடயமாகும். இயக்கம் எனப் பொதுவாக ஈழத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரைத் தான் அழைப்பார்கள். இயக்கம் என்றால் ஒரு போராட்டக் குழு,அமைப்பு எனவும் பொருள் கொள்வார்கள்.
இதே போல பொடியங்கள்/ பொடியள் எனும் சிறப்புப் பெயரும், புலிகள் அமைப்பினரை அழைக்க ஈழத்து மக்கள் பயன்படுத்தும் ஓர் சொல்லாகும்.பிள்ளையள் என்று பொதுவாகச் சொல்லும் போது ஈழத்தில் அது பெண் புலிப் போராளிகளைச் சுட்டும் சொல்லாகத் தான் கருதப்படும். இயக்கத்தில் போராடுவதற்காகச் சேர்ந்து கொள்ளும் நபர்களுள் முதன்மையானவர்கள் தாமக விரும்பித் தம் தாயகம் மீட்கப்பட வேண்டும் எனும் உயரிய நோக்கோடு தம்மைப் போராட்டத்திற்காகத் தம் வாழ்வை அர்ப்பணிப்போர். ஏனையோர் விரும்பியோ விரும்பாமலோ இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டோர்.அல்லது இயக்கத்தால் இணைக்கப்பட்டோர். 

தாமாக விரும்பிப் போராட்டத்தில் இணைந்து கொண்டோரைத் தவிர்த்து, நாம் இங்கே இயக்கத்துக்குப் போகப் போறேன் என மிரட்டலுடன் இயக்கத்திற்குப் போனோரைப் பற்றித் தான் இப் பதிவினூடாக கொஞ்சம் ஆராய்ந்து பார்க்கப் போகின்றோம்."குரைக்கிற நாய் கடிக்காது"எனும் ஆன்றோர் வாக்கிற்கமைவாக, யார் ஒருவன் தான் இயக்கத்திற்குப் போகப் போறேன் அல்லது அம்மா நான் புலியாகப் போகிறேன் - போராடப் போகிறேன் என எழுமாற்றாக எல்லாச் செயல்களுக்கும் சொல்கிறானோ அவன் நிச்சயமாகப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொள்ள மாட்டான் என்பது ஊருக்கே தெரிந்த விடயம். ஹி.....ஹி....

இதன் உச்சபட்ச வெளிப்பாடு, இப்படி அடிக்கடி சொல்லும் நபரின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பி யாராவது உசுப்பேத்தி விட்டால் தான் இத்தகைய வகையறா மனிதர்கள் இயக்கத்திற்குப் போவார்கள். வீட்டில் தான் ஆசைப்படும் பொருட்களை, இலத்திரனியல் உபகரணங்களைப் பெற்றோர் வாங்கிக் கொடுக்கவில்லை என்றால், தான் விரும்பும் ஒரு பெண் தன் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், காதலில் தோல்வி அடைந்தால், பரீட்சையில் சித்தியடையவில்லை என்றால் பொதுவாகவே ஈழத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழுவோர் கையில் எடுக்கும் அஸ்திரம் தான் இயக்கத்துப் போகிறேன் எனும் மிரட்டல் ஆயுதமாகும். மனதில் பல தோல்விகளால் ஏற்படும் ஆற்றாமையும் இயக்கத்துக்குப் போவதற்கு வடிகாலாக இருந்திருக்கிறது.

ஒரு பெண்ணை தம்மால் முடியுமானவரை நூல் விட்டுப் பார்ப்பார் ஆடவன்.(சைற் அடித்தல்) அவள் இவனின் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலே போதும், "நீ என்னைப் புரிந்து கொள்ளவில்லைத் தானே...இப்ப பார் நான் உனக்கு யார் என்று காட்டுறேன். நான் இப்பவே இயக்கத்திற்குப் போகிறேன்" என மிரட்டும் ஆண் மகனைப் பார்த்து அப் பெண் "போடா..முடிஞ்சா நீ இயக்கத்திற்குப் போய்க் காட்டு! நீ இயக்கத்திற்குப் போவதால் எனக்கென்ன நஷ்டம்?" என்று கேட்டு அவரின் உணர்ச்சியினை உசுப்பி விட்டாலே போது. அடுத்த நிமிடமே, புலிகளின் முகாம் முன் நின்று தன்னையும் போராட்டத்தில் இணைத்துக் கொள்ளச் சொல்லி உரையாடத் தொடங்கிடுவார் இந்த வகையறா ஆடவர்கள். 
இதில் பெரிய காமெடி என்னவென்றால், இப்படி பெண்ணால் உசுப்பேற்றப்பட்டு ஒருவன் நிஜமாகவே இயக்கத்திற்குப் போய் விட்டான் என்றால், அந்தப் பெண்ணின் வாழ் நாள் பூராகவும் இயக்கத்திற்குப் போன ஆடவனைப் பற்றிய நினைப்பே அவள் கூட வந்து கொள்ளும். அதிலும் இயக்கத்திற்குப் போனவன் போர்க் களத்தில் வீரச்சாவடந்தாலே போது, தன்னால் தானே, தான் காதலைச் சொல்லாத காரணத்தினால் தானே அந்த ஆடவன் இயக்கத்திற்குப் போனான் என நினைத்து நினைத்து, மன அழுத்த்திற்கு ஆளாகிடுவாள் அப் பெண். "நீ ஏமாத்தின பொடியன் இயக்கத்திற்குப் போய் விட்டான்" என சக பாடசாலை நண்பிகள் ஒவ்வோர் தடவையும் சொல்லும் போதும் மனதினுள் விம்மி அழுத சகோதரிகளை நான் கண்டிருக்கிறேன்.

தம் காதலியுடன், தம் நண்பர்களுடன் முரண்பட்டுக் கொண்டு இயக்கத்திற்குப் போகும் நபர்களுக்கு மனதினுள் இருக்கும் நம்பிக்கை தான்; கண்டிப்பாகப் பெற்றோரின் கோபம் ஆறியதும் தன்னைத் தேடி, மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் நோக்கோடு பெற்றோர் வருவார்கள் என்பதாகும். இத்தகைய நபர்களை, மிரட்டல் தொனியுடன் இயக்கத்திற்கு போகப் போகிறேன் என்று சொல்லிச் செல்லும் நபர்களைப் புலிப் போராளிகள் இலகுவில் அடையாளம் கண்டு கொள்வார்கள். பெற்றோர்கள் வந்து கெஞ்சி அழுதாலும், இயக்கத்துக்குப் போகிறேன் எனும் வார்த்தையை விபரீதமான செயலுக்காக பயன்படுத்திய காரணத்தினைக் கூறி, வீட்டிற்கு அனுப்பாது புலிகளுடனே இணைத்துக் கொள்வார்கள்.

"விடாப் பிடியாக, நான் வீட்டுக்காரரோடு கோவிச்சுக் கொண்டு இயக்கத்துக்கு வந்தேன், எனக்குச் சண்டை செய்ய மனமில்லை" என்று யாராச்சும் சொன்னாலே போதும். அப்புறம் என்ன? பச்சை மட்டை அடி கொடுத்து ஆளைப் பதம் பார்த்துத் தான் அனுப்புவார்கள். ஒரு காலத்தில் தாம் விரும்பிய பொருட்கள் வாங்கித் தரவில்லை என்றால், தனக்கு விருப்பமான பெண்ணைப் பெற்றோர் கட்டி வைக்கவில்லை என்றால் காரியம் சாதிக்கும் ஒரு அஸ்திரமாக எங்கள் ஊர்களில் "அம்மா ரொம்ப ஓவராப் போனீங்க. இயக்கத்துக்குப் போயிடுவேன் எனும் வார்த்தை புழக்கத்தில் இருந்திருக்கிறது. பெற்றோரும் தம் பிள்ளை போராடப் போய் விட்டால், வீரச் சாவடைந்து விடுவான் எனும் அச்சத்தில் பிள்ளையின் ஆசைக்கு ஒத்துழைத்திருக்கிறார்கள். இதுவும் ஈழ வரலாற்றில் இடம் பிடிக்க வேண்டிய முக்கியமான அம்சம் தானேங்கோ...
*******************************************************************************************************************************************
இன்று கொஞ்சம் வித்தியாசமான பதிவர் அறிமுகத்தினைப் பார்ப்போமா? சமையற் குறிப்புக்கள் என்றதும் நமக்கெல்லாம் ஞாபகம் வருவது எங்கள் வலையுலகச் சகோதரிகள் பலரின் வலைப் பூக்கள் தானே. அந்த வகையில் இன்றைய பதிவர் அறிமுகம் பகுதியினூடாக மிகச் சிம்பிளான அதே நேரம் சுவையான சமையற் குறிப்புக்களை ஆங்கிலத்தில் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையாகப் பகிர்ந்து வரும் சகோதரி "CHRISTY GERALD" அவர்களின் "MY KITCHEN FLAVORS - BON APPETIT" வலைப் பதிவிற்குப் போவோமா?

"MY KITCHEN FLAVORS - BON APPETIT" வலைப் பதிவிற்குச் செல்ல:
******************************************************************************************************************************************
பிற் சேர்க்கை: பதிவின் தலைப்பு, கடந்த கால விடயத்தினை ஞாபகமூட்டும் வண்ணம் வைக்கப்பட்டிருக்கிறது. பதிவினை உற்றுப் பார்த்து, போராட்டம் பற்றி நிரூபன் பேசுறானே என்று கோவிச்சுக்க வேணாம் அண்ணங்களா. எதுவாக இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம். (இது அவங்களுக்கு....)

இப் பதிவில் உள்ள ஓவியப் படங்கள் கூகிள் தேடல் மூலம் பெறப்பட்டவை. முதலாவது ஒளிப் படம் ஓவியர் "மூனா" அவர்களின் கை வண்ணத்தில் உருவானது.

36 Comments:

Astrologer sathishkumar Erode said...
Best Blogger Tips

ஈழப்புலிகள் ;-))

Astrologer sathishkumar Erode said...
Best Blogger Tips

காத்லியை ஏமாற்ற..அம்மா அப்பாவை ஏமாற்ற....சிலர் போயிருக்கலாம்...தமிழ் மக்களுக்காக போராட பலரும் இயக்கத்தில் தன்னை அர்ப்பணித்தனர் என்ற வரியை சேர்த்திருக்கலாம்...

Astrologer sathishkumar Erode said...
Best Blogger Tips

நீங்கள் எழுதிய கோணத்தை புறந்தள்ள முடியாது..இதுவும் ஆங்காங்கே நடக்கும் நிதர்சனம் தானே

நிரூபன் said...
Best Blogger Tips

@josiyam sathishkumar

காத்லியை ஏமாற்ற..அம்மா அப்பாவை ஏமாற்ற....சிலர் போயிருக்கலாம்...தமிழ் மக்களுக்காக போராட பலரும் இயக்கத்தில் தன்னை அர்ப்பணித்தனர் என்ற வரியை சேர்த்திருக்கலாம்...
//

வணக்கம் அண்ணே,
முதலாவது படத்தின் கீழே,
இரண்டாவது பந்தியில் இயக்கத்துக்குப் போனோரின் வகைப்படுத்தல்களை எழுதியிருக்கிறேனே.....

//
இயக்கத்தில் போராடுவதற்காகச் சேர்ந்து கொள்ளும் நபர்களுள் முதன்மையானவர்கள் தாமக விரும்பித் தம் தாயகம் மீட்கப்பட வேண்டும் எனும் உயரிய நோக்கோடு தம்மைப் போராட்டத்திற்காகத் தம் வாழ்வை அர்ப்பணிப்போர். ஏனையோர் விரும்பியோ விரும்பாமலோ இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டோர்.அல்லது இயக்கத்தால் இணைக்கப்பட்டோர்.

மாய உலகம் said...
Best Blogger Tips

சகோதரி "CHRISTY GERALD" அவர்களின் "MY KITCHEN FLAVORS - BON APPETIT" வலைப்பூவிற்க்கு வாழ்த்துக்கள்...

மாய உலகம் said...
Best Blogger Tips

தன்னால் தானே, தான் காதலைச் சொல்லாத காரணத்தினால் தானே அந்த ஆடவன் இயக்கத்திற்குப் போனான் என நினைத்து நினைத்து, மன அழுத்த்திற்கு ஆளாகிடுவாள் அப் பெண். "நீ ஏமாத்தின பொடியன் இயக்கத்திற்குப் போய் விட்டான்" என சக பாடசாலை நண்பிகள் ஒவ்வோர் தடவையும் சொல்லும் போதும் மனதினுள் விம்மி அழுத சகோதரிகளை நான் கண்டிருக்கிறேன்.//

சகோதரிகள் என்ன செய்வார்கள் பாவம்... பகிர்வுக்கு நன்றி பாஸ்

ஆகுலன் said...
Best Blogger Tips

///பச்சை மட்டை அடி கொடுத்து ஆளைப் பதம் பார்த்துத் தான் அனுப்புவார்கள்.///

ஏற்று கொள்ள பட வேண்டியது........

நானும் கேள்வி பட்டிருக்குறேன்.....

கூடல் பாலா said...
Best Blogger Tips

\\\"விடாப் பிடியாக, நான் வீட்டுக்காரரோடு கோவிச்சுக் கொண்டு இயக்கத்துக்கு வந்தேன், எனக்குச் சண்டை செய்ய மனமில்லை" என்று யாராச்சும் சொன்னாலே போதும். அப்புறம் என்ன? பச்சை மட்டை அடி கொடுத்து ஆளைப் பதம் பார்த்துத் தான் அனுப்புவார்கள்\\\ கண்டிப்பாக கொடுக்கவேண்டியதுதான்

SURYAJEEVA said...
Best Blogger Tips

வரலாற்று பக்கங்களில் பல விஷயங்கள் பதியப் படாமல் புதைக்கப் பட்டே போகின்றன... அந்த வகையில் ஒவ்வொரு விஷயமும் வரலாறே... இந்த பணியை வலை பதிவர்கள் சிறப்பாக செய்வதாகவே எனக்கு தோன்றுகிறது..

rajamelaiyur said...
Best Blogger Tips

//எதுவாக இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம். (இது அவங்களுக்கு....)
//

யார் அவங்க ?

rajamelaiyur said...
Best Blogger Tips

இன்று என் வலையில்

உங்களுக்கு மிகவும் பயனுள்ள இனையதளங்கள் பகுதி - 1

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

சில விஷயங்கள் வாரலாறு பதியாமல் போகிறது, தங்களைப் போன்றோர் அந்தப் பணியை செய்வதாகவே தோன்றுகிறது..

உலக சினிமா ரசிகன் said...
Best Blogger Tips

போராட்ட காலத்தில் நடந்த நிகழ்வுகளை நேரடி படப்பிடிப்பு போல எடுத்துக்காட்டும் பணி மிகவும் சிறப்பானது.
இந்த எழுத்துக்கள் நூலாகவும் வரவேண்டும் நண்பரே!

test said...
Best Blogger Tips

ம்ம்ம்ம்...நல்லாத்தான் சொல்றீங்க பாஸ்!

பிரெஞ்சுக்காரன் said...
Best Blogger Tips

ஹி ஹி ஹி செம காமெடி நண்பா!நானும் இப்படி வெருட்டியிருக்கிறேன்!

காட்டான் said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்..
பதிவை இரண்டு தடவை வாசித்தேன் பகிர்வுக்கு நன்றி..

செங்கோவி said...
Best Blogger Tips

வணக்கம் நிரூ..

செங்கோவி said...
Best Blogger Tips

இன்றும் ஒரு வித்தியாசமான விஷயத்தை வழங்கியுள்ளீர்கள்..பச்சை மட்டையடி நியாயம் தான்.

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
Best Blogger Tips

இது சாதா பதிவா தெரியல, ஷங்கர் பாணி பதிவா தெரியுது..

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
Best Blogger Tips

அகாதுகா அப்பாடக்கர்ஸ்: நாம் சுதந்திரம் பெற்றோமா அடிமைப் படுத்தப்பட்டோமா? - ஏழாம் அறிவு என்னுள் எழுப்பிய கேள்வி

அண்ணே இந்த பதிவையும் தொடரும்படி உங்களை அன்புடன் அழைக்கிறேன்.

சசிகுமார் said...
Best Blogger Tips

பல இன்னுயிர்கள் மாண்டும் தனி நாடு பெற முடியவில்லையே... என்ற சோகம் தான் எழுகிறது....

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

சகோ இன்னும் இப்படித்தான் நடக்குதா?

ஹேமா said...
Best Blogger Tips

நிரூ...பழைய ஞாபகங்களைக் கிளறி சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது உங்கள் பதிவினூடாக இப்போ !

K.s.s.Rajh said...
Best Blogger Tips

நோ கமண்ட்ஸ் ஒன்லி ஓட்டு...இப்ப அப்பீட்டு நெக்ஸ்ட் போஸ்ட் ரிப்பீட்டு.....

Anonymous said...
Best Blogger Tips

அறியாத வயதில் தூத்துக்குடி Campஇல் நானும் சேருவேன் என்று வீரத்தோடு நின்றபோது...உனக்கு போராடும் வயசில்லை...
முடிந்தால் "சீக்கிரம்" வளர்ந்துவிட்டு வாருங்கள் என்று கமாண்டர் சொன்னது நினைவுக்கு வருகிறது...

ஆரம்ப காலத்தில் அனைவரும் போராட்டத்தில் முழு மனதோடு தான் ஐக்கியமானார்கள் என்று உறவுகள் சொல்லி கேள்விப்பட்டுள்ளேன்... சகோதரம்...

இது போர் முடியும் தருவாயில் இருந்த நிலையோ...

shanmugavel said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்,பல புதிய தகவல்கள்.சமூக நிலையை தெளிவாக கூறியிருக்கிறீர்கள்.

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

இது வரை பலர் அறிந்திருக்க முடியாத புதிய தகவல்களுடன் நல்ல பகிர்வு!

Muruganandan M.K. said...
Best Blogger Tips

வித்தியாசமான அலசல்.

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன். நலமா?ஒரு உண்மையை அல்ல,பல உண்மைகளை வெளிக் கொணர்ந்திருக்கிறீர்கள்.

கரவைக்குரல் said...
Best Blogger Tips

வித்தியாசமாக நினைவூட்டியிருக்கிறீர்கள் அன்றைய நினைவுகளை,
அடிக்கடி கேள்விப்பட்ட ஒரு வாக்கியத்தையே பதிவாக்கியிருக்கிறீர்கள்
வாழ்த்துக்கள்,
உணர்வான கூட்டங்களில் இயக்கத்துக்கு போகப்போறேன் என்று உணர்ச்சி வெளிப்பாடோடு சென்று வீரச்சாவு அடைந்தவர்களும் இருக்கிறார்கள்,
அவர்களும் நினைவுகொள்ளவேண்டியவர்கள்

Angel said...
Best Blogger Tips

பகிர்வுக்கு நன்றி .

வாழ்த்துக்கள் Christy

Anonymous said...
Best Blogger Tips

அழகா சொல்லியிருக்கீங்கா.. நான் நிறைய இடத்தை பார்த்த உண்மை.. என்கூட உயர்தரத்தில் படிச்ச ஒரு பொம்புள புள்ள அப்பன்காரன் அடிச்சிட்டான் எண்டு சொல்லி கடிதம் எழுதி வச்சுட்டு இயக்கத்துக்கு ஓடிட்டுது.. இப்ப இறுதி யுத்தத்தில செத்துப்போச்சு..

இராஜராஜேஸ்வரி said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
இராஜராஜேஸ்வரி said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
Thooral said...
Best Blogger Tips

நாங்கள் அறியாத
ஈழத்தின் பல புதிய விடயங்களை
அறிந்தோம் நன்றி

Asiya Omar said...
Best Blogger Tips

நீங்கள் சொல்வது அரசல் புரசலாக கேள்விபட்ட மாதிரி இருக்கு,இப்ப முழுமையும் தெரிந்து கொண்டோம்..
அறிமுகப் பதிவருக்கு வாழ்த்துக்கள்..

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails