அன்பிற்கினிய உறவுகளே,
கண்ணீர் என்பது ஒரு மனிதன் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படும் போதும், இயலாமை எனும் உணர்வானது ஒருவனிடத்தே வருகின்ற போதும் தான் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றது என்று கூறுகிறார்கள். கண்ணீரை ஆயுதமாகப் பயன்படுத்துவதில் பெண்கள் வல்லவர்கள் என்று ஆய்வாளர்கள் சொல்லியிருக்கிறார்கள். நாம் சிறு பிள்ளையாக இருக்கும் போது ‘எமக்குப் பிடித்த ஒரு பொருளை வாங்கித் தரவில்லை என்றால்’ கூப்பாடு போட்டு அழுது, தரையில் விழுந்து கத்திக் குழறித் தான் எமக்குப் பிடித்தமான பொருளைக் கேட்டு வாங்குவோம்.
ஆனால் ஒரு சில வீடுகளில் ‘இந்தச் செயலுக்கு இடங் கொடுக்க மாட்டார்கள்.
அழுத பிள்ளை பால் குடிக்காது எனும் சான்றோர் வாக்கினைக் காரணங் காட்டி, ‘இன்னைக்கு ஒருவாட்டி இவன் அழும் போது, அவனது கோரிக்கைக்கு நாம செவி சாய்த்தால், தொடர்ந்தும் அழுதுகிட்டே இருப்பான்’
’அழுது மிரட்டி இடங் கண்டு கொண்டான்’ என்று ஏசி, அழுகின்ற பிள்ளையைக் கவனிக்காது விட்டு விடுவார்கள்.
மேற்படி சம்பவ விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கின்ற போது, எமக்குரிய தேவைகள் நிறைவேற்றப்படாத போது சிறு வயதில் அழுகையினை ஆயுதமாக்கியிருக்கிறோம். ஆனால் பெண்களின் அழுகை கொஞ்சம் வித்தியாசமானது. பாடசாலை படிக்கும் போது, சக நண்பர்களின் கேலி - கிண்டல் பேச்சுக்கள் மூலமாக ஒருவன் அழுகின்ற போது, ‘ஏன் பொட்டைப் புள்ள மாதிரி அழுதுகிட்டிருக்காய்’ என்று கேலி பண்ணிச் சக நண்பர்கள் கிணடல் பண்ணுவார்கள்.
சில பெண்கள் அழுகை மூலம் தமக்குரிய காரியங்களைச் சாதகமாக நிறைவேற்றவும் அழுகையினை ஆயுதமாகப் பிரயோகிக்கிறார்கள். முதலில் கணவனைக் கொஞ்சிக் குலாவி ‘என் அத்தானெல்லே, என் மாமாவெல்லே, பக்கத்து வீட்டுப் பரிமளம் புதுசா வந்த ஹன்சிகா சாரி வாங்கிக் கட்டியிருக்கா’ அதே மாதிரிப் புடவை ஒன்னு எனக்கு வாங்கிக் கொடுக்க முடியுமா’ என்று கேட்டுப் பார்ப்பார்கள். இன்றைய கால கட்டத்தில் பெண்களும் ஆண்களுக்குச் சரி சமனாக வேலை செய்யப் பழகினாலும், கணவனிடம் அடிபட்டு, அழுகை மூலம் சாதித்து வாங்குவதில் ஒரு சுகம் இருக்கிறதோ எனக் கருதுகிறார்களோ தெரியவில்லை.
கணவன் கொஞ்சம் மசிந்து கொடுக்கா விட்டால்,
‘நீங்களும் தான் இருக்கியளே, உங்களைக் கலியாணம் கட்டி இத்தனை வருசத்திலை என்ன பிரயோசனம்?
நம்ம பக்கத்து வீட்டுப் பரிமளத்திற்கு, அவளோடை புருஷன் எப்பூடி அழகான ஹன்சிகா சாரி வாங்கிக் கொடுத்திருக்கான்! நீங்களும் தான் இப்படி இருக்கிறீங்களே? இப்பவே நான் உங்களை விட்டுப் போறேன்’ என்று ஒரு கண்ணீர் விடுவா பாருங்க.
அதற்கு கணவன் கட்டுப்பட்டு விடுவாராம். {அனுபவப்பட்ட பெரியவங்க சொல்லி வேதனைப்பட்ட விடயம்.}
இங்கே கணவன் அன்பிற்கு கட்டுப்படுகின்றாரா? அல்லது கண்ணீரை ஆயுதமாக்கிப் பெண் வார்த்தைகளைக் கொட்டுகின்ற போது, கண்ணீருக்குக் கட்டுப்படுகின்றாரா? என்பது புரியாத விடயமாக இருக்கின்றது.
இத்தகைய கண்ணீரை நீலிக் கண்ணீர் என்றும் கூறுவார்கள். அலுவலகங்களிலும் சரி, பாடசாலைகளிலும் சரி சக நண்பர்கள் யாருடனாவது சண்டை என்றால், தம்மால் முடிந்த வரை வாய் வீரத்தினைப் பெண்கள் நிலை நாட்டப் பார்ப்பார்கள். இல்லையேல் இறுதி அஸ்திரமான கண்ணீரை ஆயுதமாக்கி ஒரு சில வார்த்தைகள் சொன்னாலே போதும். எதிர்த் தரப்பினர் கப் சிப் ஆகிவிடுவார்கள்.
பெண்களின் அழுகையானது ஆண்களை ரசிக்க வைக்கிறது என்று கூறுகிறார்கள். பெண்களின் கண்ணீர் பற்றி இணையத்தில் தேடிய போது,
*பெண்களின் கண்ணீர் மூலம் ஆண்மையினையும் ஆண்களின் பாலியல் உணர்ச்சிகளையும் அடக்கச் செய்யலாமாம்.
*பெண்களின் கண்ணீர் அவர்களைப் பாதுகாக்கிறது.
*பெண்களின் கண்ணீரானது ஆண்களைத் தம் வசப்படுத்தவும் பெண்களுக்கு உதவுகிறது என்று கூறுகிறார்கள்.
இத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, என் தரப்பில் தோன்றும் ஐயங்களை உங்கள் முன் வைக்கின்றேன்.
*தமக்குப் பிடித்தமான ஒரு விடயத்தினை நிறைவேற்றக் கண்ணீர் அவசியமா?
*அன்பினால் எதனையும் சாதிக்கலாம் எனக் கூறும் உலகில், ஒரு சில விடயங்களில் தம் தரப்பு நியாயத்தினை வெளிப்படுத்தப் பெண்கள் கண்ணீரை ஏன் ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும்?
*கண்ணீரின் மூலம் தம் பக்க கருத்துக்களை நியாயமாக்குவதை விடுத்து, காத்திரமான வழிகளில் தன்னம்பிக்கை நிறைந்த திடமான கருத்துக்கள் மூலம் பெண்கள் தமது பக்கக் கருத்துக்களை நியாயப்படுத்த முடியாதா?
உங்களது கருத்துக்களைக் காத்திரமான பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள். தாய்க் குலங்களே, சகோதர சகோதரிகளே, இன்றைய பதிவு உங்களுக்கானது. உங்கள் பக்க நியாயக் கருத்துக்களை, உங்களின் மன உணர்வுகளை இந்தப் பதிவின் மூலமாக வெளிக்காட்டலாமல்லவா.
பிற் சேர்க்கை: பெண்களின் கண்ணீர் எனும் ஆயுதம் எல்லா இடத்திலும் சாத்தியப்படாது எனும் உண்மைக்கு உதாரணமாக விளங்குவது எங்கள் நாடு. காரணம் தம்மை வன் புணர்ச்சி- வல்லுறவு செய்ய வேண்டாம் எனக் கதறிக் கையெடுத்துக் கும்பிட்ட பல பெண்களைப் புணர்ந்த பின்னர் துடிக்கத் துடிக்க துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து, அவற்றினை வீடியோப் படமாக்கி உலகம் முழுவதும் பரவ வைத்த பெருமையும் புத்தனின் பிள்ளைகளைத் தானே சேரும்.
|
174 Comments:
@Priya
பயன்னுள்ள தகவல்!
நன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com//
ஸப்பா...இந்த டெம்பிளேட் கமெண்ட் தொல்லை தாங்க முடியவில்லையே,
பெண்களின் கண்ணீர் பற்றிய விவாதப் பதிவிற்கு கருத்தினை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
ஓடோடொ வந்து பயனுள்ள தகவல் என்று சொல்லுறீங்களே, இது நியாயமா?
பெண்களின் கண்ணீர் சூழ்நிலையை பொறுத்தே அமைகிறது. நீலிக்கண்ணீர்கள் நிச்சயம் ஒரு ஆயுதமாகவே பயன்படுகின்றன, ஆனால் இயற்கையாக வரும் கண்ணீர் பெரும்பாலான நேரங்களில் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பை வழங்குகிறது. பெண்களின் கண்ணீரால் எரிச்சலடையும் ஆண்களும் உண்டு!
@பன்னிக்குட்டி ராம்சாமி
பெண்களின் கண்ணீர் சூழ்நிலையை பொறுத்தே அமைகிறது. நீலிக்கண்ணீர்கள் நிச்சயம் ஒரு ஆயுதமாகவே பயன்படுகின்றன, ஆனால் இயற்கையாக வரும் கண்ணீர் பெரும்பாலான நேரங்களில் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பை வழங்குகிறது. பெண்களின் கண்ணீரால் எரிச்சலடையும் ஆண்களும் உண்டு!//
வாங்கோ பாஸ்,
நல்லதோர் கருத்தினைத் தந்திருக்கிறீங்க.
இதனை மறுத்துரைக்க யாராவது வருகிறார்களா என்று பார்ப்போம்.
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
"azhutha pillai thaan paal kudikkumaam"
pazhamozhi-yaaro
/// ‘இன்னைக்கு ஒருவாட்டி இவன் அழும் போது, அவனது கோரிக்கைக்கு நாம செவி சாய்த்தால், தொடர்ந்தும் அழுதுகிட்டே இருப்பான்’
’அழுது மிரட்டி இடங் கண்டு கொண்டான்’ என்று ஏசி, அழுகின்ற பிள்ளையைக் கவனிக்காது விட்டு விடுவார்கள்./// அனுபவமோ ...))
வேஷம் என்று சொல்லிவிட முடியாது...
நிறையவீடுகளில் கணவரின் கொடுமையால் மனைவிகள் அழுதுக் கொண்டு இருக்கிறார்கள்...
இதை என்னவென்று சொல்வது...
///‘என் அத்தானெல்லே, என் மாமாவெல்லே, பக்கத்து வீட்டுப் பரிமளம் புதுசா வந்த ஹன்சிகா சாரி வாங்கிக் கட்டியிருக்கா’ அதே மாதிரிப் புடவை ஒன்னு எனக்கு வாங்கிக் கொடுக்க முடியுமா’ // ஹிஹி அது சரி ஹன்சிகா சாரி எண்ட ஒன்று வந்திருப்பது உங்களுக்கு எப்பிடி தெரியும் ))
கண்ணீர் என்பது பெண்களுக்கு ஒரு ஆயுதம்...
தன் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள..
இயலாமையை காட்ட...
கோவத்தை வெளிகாட்ட...
என பெண்கள் கண்ணீரை பயன்படுத்திக் கொள்கிறார்கள்...
என்னைப் பொருத்த வரை பெண்களுக்கு கண்ணீர் என்பது வேஷம் இல்லை.. ஆயுதம்தான்...
வேலை பளு காரணமாகவே அடிக்கடி வர இயலவில்லை...
விரிவாகவும் பின்னுட்டம் இடமுடியவில்லை...
///பெண்களின் அழுகையானது ஆண்களை ரசிக்க வைக்கிறது என்று கூறுகிறார்கள். // ஆண்கள் அவ்வளவு காட்டான்களா (பதிவர் காட்டான் அல்ல ஹிஹி) வன்மையான கண்டனம். இப்படிக்கு ஆண்கள் முன்னேற்ற கழ(ல)கம் )
////*பெண்களின் கண்ணீர் மூலம் ஆண்மையினையும் ஆண்களின் பாலியல் உணர்ச்சிகளையும் அடக்கச் செய்யலாமாம்.// இது புதுசா இருக்கே..
@Rathnavel
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.//
நன்றி ஐயா.
ஆனந்த கண்ணீர், வேதனையால் வரும் கண்ணீர், நீலிக்கண்ணீர் ..கண்ணீரில் எத்தனை வகை..
@FOOD
பெண்கள் பொதுவாகவே மெல்லிதயம் படைத்தவர்கள். வெளி உலக பழக்கம் இல்லாத அந்த காலத்தில் கண்ணீர் அவர்களின் இயலாமையை வெளிப்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டம், பெண்கள் உலகை ஆளும் காலம். இப்போதும், கண்ணீரை ஆயுதமாய் எண்ணினால், அது துரதிர்ஷ்டமே!//
இக் காலத்திலும் கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும் ஒரு சில பெண்கள் இவ்வாறு இருக்கிறார்களே,
அது என்ன செல்லக் கோபமா ஆப்பிசர்.
//கணவன் கொஞ்சம் மசிந்து கொடுக்கா விட்டால்,
‘நீங்களும் தான் இருக்கியளே, உங்களைக் கலியாணம் கட்டி இத்தனை வருசத்திலை என்ன பிரயோசனம்?
நம்ம பக்கத்து வீட்டுப் பரிமளத்திற்கு, அவளோடை புருஷன் எப்பூடி அழகான ஹன்சிகா சாரி வாங்கிக் கொடுத்திருக்கான்! நீங்களும் தான் இப்படி இருக்கிறீங்களே? இப்பவே நான் உங்களை விட்டுப் போறேன்’ என்று ஒரு கண்ணீர் விடுவா பாருங்க.
அதற்கு கணவன் கட்டுப்பட்டு விடுவாராம். {அனுபவப்பட்ட பெரியவங்க சொல்லி வேதனைப்பட்ட விடயம்.}//
ஹி ஹி ஹி அப்ப இந்த கலியாணப்பீல்டுக்குள்ள போக முன் நல்லா யோசிக்கனும் போல ஹி,ஹி,ஹி,ஹி அதற்கு எனக்கு இன்னும் வயசு வரலை.ஹி,ஹி,ஹி.
எந்தத் துன்பத்தைதான் நாங்கள் சந்திக்கவில்லை.
@shrek
"azhutha pillai thaan paal kudikkumaam"
pazhamozhi-yaaro///
அழுத பிள்ளை பால் குடிக்காது என்பது பொய்யா..
அவ்...அவ்...
@கந்தசாமி.
/// அனுபவமோ ...)//
அதான் கீழே போட்டிருக்கேனே, காட்டானும், யோகா ஐயாவும் உதவி செய்தவர்கள் என்று அடைப்புக் குறிக்குள் போட்டிருக்கேனே.
ஹி.....ஹி......
@ கவிதை வீதி சௌந்தர்....
வேஷம் என்று சொல்லிவிட முடியாது...
நிறையவீடுகளில் கணவரின் கொடுமையால் மனைவிகள் அழுதுக் கொண்டு இருக்கிறார்கள்...
இதை என்னவென்று சொல்வது..//
அந்த அழுகை வேறு, நான் சொல்லும் இந்த அழுகை வேறு பாஸ்.
@கந்தசாமி.
ஹிஹி அது சரி ஹன்சிகா சாரி எண்ட ஒன்று வந்திருப்பது உங்களுக்கு எப்பிடி தெரியும் ))//
அதான் பெரியவங்கள் சொல்லியிருக்காங்க என்று போட்டிருக்கேனில்லே.
நீங்கள் காட்டானையும், யோகா ஐயாவையும் அவமானப்படுத்தி விட்டீங்க.
எப்பூடிப் போட்டுக் குடுத்து,
கோர்த்து வைப்பமில்லே.
கண்ணகியின் கோபத்தால் மதுரை எரிந்ததா இல்லை கண்ணீராலா.
பாஞ்சாலியின் கோபத்தால் கெளரவர்கள் அழிந்தார்களா இல்லை கண்ணீராலா.... எதோ, இன்று வரை ஆக்கத்துக்கு பின்னால் மட்டுமல்ல, அழிவுக்கு பின்னாலும் பெண்களின் கண்ணீர்,கோபம் இருந்து வருகிறது என்பது உண்மை. (தாய்குலமே மன்னியுங்கள் )
@கவிதை வீதி சௌந்தர் said...
கண்ணீர் என்பது பெண்களுக்கு ஒரு ஆயுதம்...
தன் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள..
இயலாமையை காட்ட...
கோவத்தை வெளிகாட்ட...
என பெண்கள் கண்ணீரை பயன்படுத்திக் கொள்கிறார்கள்...
என்னைப் பொருத்த வரை பெண்களுக்கு கண்ணீர் என்பது வேஷம் இல்லை.. ஆயுதம்தான்...//
சபாஷ் பாஸ், காத்திரமான கருத்தினை முன் வைத்திருக்கிறீங்க.
ஆனால் கண்ணீர் என்பதை நாம் ஏன் செல்லச் சிணுங்கலாக எடுத்துக் கொள்ளக் கூடாது?
///பெண்களின் கண்ணீர் எனும் ஆயுதம் எல்லா இடத்திலும் சாத்தியப்படாது எனும் உண்மைக்கு உதாரணமாக விளங்குவது எங்கள் நாடு. // ஆனால் என்றோ ஒருநாள் அதற்கு பதில் /நீதி கிடைக்கும் என்பது மட்டும் மறுக்க முடியாது.
@ கவிதை வீதி சௌந்தர் said...
வேலை பளு காரணமாகவே அடிக்கடி வர இயலவில்லை...
விரிவாகவும் பின்னுட்டம் இடமுடியவில்லை...//
பரவாயில்லை பாஸ்,
இவ்வளவு கருத்துக்களுமே போதும்.
நான் இந்த விளையாட்டுக்கு வரல..
@கந்தசாமி.
/ ஆண்கள் அவ்வளவு காட்டான்களா (பதிவர் காட்டான் அல்ல ஹிஹி) வன்மையான கண்டனம். இப்படிக்கு ஆண்கள் முன்னேற்ற கழ(ல)கம் )//
கலகமூட்டுவதில் தான் குறியாக இருக்கிறீங்களோ பாஸ்,
இருங்க காட்டான் வந்து உங்களுக்கு நல்லதோர் மருந்து கொடுப்பார்.
@கந்தசாமி.
//இது புதுசா இருக்கே//
ஏன் இப்பவே போய், யாரையாச்சும் அழ வைத்து ட்ரை பண்ணப் போறீங்களோ?
சில பெண்கள் மட்டுமே தன் கண்ணீரை வேஷமாக பயன்படுத்துகிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்...
@கந்தசாமி.
ஆனந்த கண்ணீர், வேதனையால் வரும் கண்ணீர், நீலிக்கண்ணீர் ..கண்ணீரில் எத்தனை வகை..//
அவ்..அவ்...மக்களே அனுபவப்பட்டவர் சொல்லுறாரு, எல்லோரும் நன்றாகப் படித்து நோட் பண்ணி வையுங்கோ.
@Kss.Rajh
ஹி ஹி ஹி அப்ப இந்த கலியாணப்பீல்டுக்குள்ள போக முன் நல்லா யோசிக்கனும் போல ஹி,ஹி,ஹி,ஹி அதற்கு எனக்கு இன்னும் வயசு வரலை.ஹி,ஹி,ஹி.
எந்தத் துன்பத்தைதான் நாங்கள் சந்திக்கவில்லை.//
அப்படீன்னா நீங்களும் என்னை மாதிரித் தான்.
எப்பவோ ஒரு நாளைக்கு வயசு வருமில்லே,
அப்ப நானும் நீங்களும் மாட்டுவோம் என்று நினைக்கிறேன்.
@கந்தசாமி.
கந்தசாமி. said...
This post has been removed by the author.//
ஏனய்யா...ஏனு...சொந்த அனுபவத்தை நொந்த அனுபவமாக எழுதி விட்டு அழித்து விட்டீங்களா.
@கந்தசாமி.
கண்ணகியின் கோபத்தால் மதுரை எரிந்ததா இல்லை கண்ணீராலா.
பாஞ்சாலியின் கோபத்தால் கெளரவர்கள் அழிந்தார்களா இல்லை கண்ணீராலா.... எதோ, இன்று வரை ஆக்கத்துக்கு பின்னால் மட்டுமல்ல, அழிவுக்கு பின்னாலும் பெண்களின் கண்ணீர்,கோபம் இருந்து வருகிறது என்பது உண்மை. (தாய்குலமே மன்னியுங்கள் )//
பப்ளிக்கிலை சொல்லவும் ஒரு தில் வேணுமைய்யா.
தாய்க் குலங்களே இம்புட்டுப் பொறுமையாகப் பதிவினைப் படிப்பது நியயமா?
கந்தசாமியின் கருத்துக்களை நிராகரித்து எதிர்வாதம் செய்ய இப்போதே ஓடி வர வேண்டாமா?’
@!* வேடந்தாங்கல் - கருன் *!
நான் இந்த விளையாட்டுக்கு வரல..//
இப்புடிச் சொல்லிட்டு எஸ் ஆகினால் எப்பூடி?
மச்சி, சும்மா ஒரு தடவை ஓடி வாரது.
ஹி....ஹி....
பெண்களின் கண்ணீர் என்பது பெரும்பாலும் நீலிக் கண்ணீரே
தாங்கள் நினைத்தைதை நடத்த அவர்களின் கடைசி ஆயுதமாக இதை பயன் படுத்துகிறார்கள்.
இதனால்த்தான் ஒரு ஆண் கண்ணீர்க்கு இருக்கும் மதிப்பு
பெண் கண்ணீருக்கு இருப்பது இல்லை
சில பெண்களின் கண்ணீரில் அர்த்தமுண்டு
சில பெண்களின் கண்ணீரில் அரியண்டம் உண்டு
சில பெண்கள் வாழ்வதற்காக கண்ணீர் விடுகிறார்கள்
சில பெண்கள் வாழ்வை அழிப்ப்தகாக கண்ணீர் விடுகிறார்கள்
சில பெண்களின் கண்ணீரை கவனிக்கலாம்
சில பெண்களின் கண்ணீரை கவனிக்கவே கூடாது
ஆக சந்தர்ப்பத்தை பொறுத்து கண்ணீர் மாறுபடுகிறது
சாதாரண பெண் தன் கருத்தை விட கண்ணீரையே குடும்பத்தில் பாவிக்கிறாள் ஊடலின் பின் தானே கூடல்
படித்தபெண் கண்ணீரை விட கருத்தையே பாவிக்கிறாள் கட்டினவன் புரிந்துகொல்பவனாய் இருந்தால் மதிக்கப்படும் அவன் சாதாரணமான ஆணாக இருந்தால் கருத்து மட்டுமன்றி பெண்ணே தூக்கிஎரியப்படும்
@"கற்றது தமிழ்" துஷ்யந்தன்
பெண்களின் கண்ணீர் என்பது பெரும்பாலும் நீலிக் கண்ணீரே
தாங்கள் நினைத்தைதை நடத்த அவர்களின் கடைசி ஆயுதமாக இதை பயன் படுத்துகிறார்கள்.
இதனால்த்தான் ஒரு ஆண் கண்ணீர்க்கு இருக்கும் மதிப்பு
பெண் கண்ணீருக்கு இருப்பது இல்லை//
மச்சி, இம்புட்டுத் தெனாவெட்டோடு ஒரு கருத்தினை வைச்சிருக்கிறீங்களே,
பெண்கள் யாரும் பதிவினைப் படிக்க வரமாட்டார்களா எனும் தெம்பிலையா?
இதோ மகளிர் பட்டாளமே எதிர்க் கருத்தோடு வரவிருக்கிறது.
நிரூபன் said... Best Blogger Tips [Reply To This Comment]
@கந்தசாமி.
/// அனுபவமோ ...)//
அதான் கீழே போட்டிருக்கேனே, காட்டானும், யோகா ஐயாவும் உதவி செய்தவர்கள் என்று அடைப்புக் குறிக்குள் போட்டிருக்கேனே.
ஹி.....ஹி......////நான் அழுதுடுவேன்!!!!!!!!!!!!
@"கற்றது தமிழ்" துஷ்யந்தன்
இதனால்த்தான் ஒரு ஆண் கண்ணீர்க்கு இருக்கும் மதிப்பு
பெண் கண்ணீருக்கு இருப்பது இல்லை//
ஆண் எப்போது மச்சி கண்ணீர் விட்டிருக்கிறான்?’
ஆணின் கண்ணீர் சரித்திரத்தில், வரலாற்றில் ஏதாவது மாற்றங்களை வழங்கியிருக்கிறதா?
பெண்களின் கண்ணீருக்கு என்று மிக அதிகமான சக்தி இருக்கிறது என்பது உண்மைதான்.அதிக உண்மை தன்மையும், நம்பகத்தன்மையும், தனிப்பட்ட மனிதர்களின் சூழ்நிலையை சார்ந்தது.
@நிரூபன்
சில பெண்களின் கண்ணீரில் அர்த்தமுண்டு
சில பெண்களின் கண்ணீரில் அரியண்டம் உண்டு
சில பெண்கள் வாழ்வதற்காக கண்ணீர் விடுகிறார்கள்
சில பெண்கள் வாழ்வை அழிப்ப்தகாக கண்ணீர் விடுகிறார்கள்
சில பெண்களின் கண்ணீரை கவனிக்கலாம்
சில பெண்களின் கண்ணீரை கவனிக்கவே கூடாது
ஆக சந்தர்ப்பத்தை பொறுத்து கண்ணீர் மாறுபடுகிறது //
கண்ணீரை வைத்து ஒரு தத்துவத்தையல்லவா சொல்லியிருக்கிறீங்க.
பெண்களின் கண்ணீரை நம்பித்தானே பல திரைப்பட இயக்குனர்களும், சின்னத்திரையும் இருக்கிறது.
இந்தப் பதிவை அடியிலிருந்து நுனி வரை(வழமை போல்)படித்து விட்டு,பின்னூட்டங்களையும் அவ்வாறே படித்து விட்டு "ஆனந்தக் கண்ணீர்" வடிக்கிறேன்,இந்தப் பிள்ளைக்கு இவ்வளவு ஆளுமையைக் கொடுத்திருக்கிறாயே ஆண்டவா என்று!!!!!!!!!!!!!!!!!!
@கவி அழகன்
சாதாரண பெண் தன் கருத்தை விட கண்ணீரையே குடும்பத்தில் பாவிக்கிறாள் ஊடலின் பின் தானே கூடல்
படித்தபெண் கண்ணீரை விட கருத்தையே பாவிக்கிறாள் கட்டினவன் புரிந்துகொல்பவனாய் இருந்தால் மதிக்கப்படும் அவன் சாதாரணமான ஆணாக இருந்தால் கருத்து மட்டுமன்றி பெண்ணே தூக்கிஎரியப்படும்//
கண்ணீர் பற்றி இவ்வளவு புரிந்து வைத்திருக்கிறீங்களே,
பெண்களின் கண்ணீரை ஏன் நாம் செல்லச் சிணுங்கலாக எடுத்துக் கொள்ளக் கூடாது?
ஆஹா. அப்படியே புத்தனின் பிள்ளைகளை சாடியதையும் கவனித்தேன்..
@Yoga.s.FR
அதான் கீழே போட்டிருக்கேனே, காட்டானும், யோகா ஐயாவும் உதவி செய்தவர்கள் என்று அடைப்புக் குறிக்குள் போட்டிருக்கேனே.
ஹி.....ஹி......////நான் அழுதுடுவேன்!!!!!!!!!!!!//
அவ்....அவ்....எங்கே இருந்தாலும் ஓடோடி வந்திருக்கிறீங்களே.
என்ன செய்ய, பெரியவங்களின் அனுபவத்தினை அடியொற்றித் தானே ஒரு சில கருத்துக்களை ஆராய முடிகிறது,
*தமக்குப் பிடித்தமான ஒரு விடயத்தினை நிறைவேற்றக் கண்ணீர் அவசியமா?///வேறு வழி??????????
வீம்புக்காக அழுவதும்
அர்த்தமற்ற கண்ணீரும் எரிச்சல் தான் ...
@பாரத்... பாரதி...
பெண்களின் கண்ணீருக்கு என்று மிக அதிகமான சக்தி இருக்கிறது என்பது உண்மைதான்.அதிக உண்மை தன்மையும், நம்பகத்தன்மையும், தனிப்பட்ட மனிதர்களின் சூழ்நிலையை சார்ந்தது.//
ஆமாம் மச்சி, சில நடிகைகள் தம்மைப் பற்றிய கருத்துக்களை நிரூபிக்கக் கூட டீவி பேட்டிகளில் கண்ணீரை ஆயுதமாக்குவதைப் பார்த்திருக்கிறேன்.
சரியாகச் சொல்லியிருக்கிறீங்க.
டீவி...சின்னத் திரை இன்று கண்ணீரால் தாம் வாழ நீரூற்றிக் கொண்டிருக்கின்றன.
*அன்பினால் எதனையும் சாதிக்கலாம் எனக் கூறும் உலகில், ஒரு சில விடயங்களில் தம் தரப்பு நியாயத்தினை வெளிப்படுத்தப் பெண்கள் கண்ணீரை ஏன் ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும்?////மிகவும் சுலபமாக வெளியேறி (கண்ணீர்) விடும் என்பதால் இருக்கலாம்!
@Yoga.s.FR
இந்தப் பதிவை அடியிலிருந்து நுனி வரை(வழமை போல்)படித்து விட்டு,பின்னூட்டங்களையும் அவ்வாறே படித்து விட்டு "ஆனந்தக் கண்ணீர்" வடிக்கிறேன்,இந்தப் பிள்ளைக்கு இவ்வளவு ஆளுமையைக் கொடுத்திருக்கிறாயே ஆண்டவா என்று!!!!!!!!!!!!!!!!!!//
அவ்....அவ்....
இது என்னத்திற்கு;-))))
ஆனந்தக் கண்ணீரை விளக்கவா.
@பாரத்... பாரதி...
ஆஹா. அப்படியே புத்தனின் பிள்ளைகளை சாடியதையும் கவனித்தேன்..//
இதையெல்லாம் கூர்ந்து கவனித்திருக்கிறீங்களே,
வாழ்த்துக்க்ள்.
அவ்வ்வ்வ்வ்வ் இந்த பதிவ பார்த்த உடனேயே அழுகை வருதே. சகோதரிகளே.... அழாமல் இந்த ஆண்களை தூக்கி போட்டு மிதித்துக் கேட்டு இருந்தால் இந்த சமூகம் இந்தக் கேள்வியை கேட்டு இருக்குமா? நிரூபன் பதிவு போட்டு இருப்பாரா? (அப்பாடா நிரூபன் அடிவாங்க ஒரு கமெண்ட் போட்டாச்சு)
@Yoga.s.FR
*தமக்குப் பிடித்தமான ஒரு விடயத்தினை நிறைவேற்றக் கண்ணீர் அவசியமா?///வேறு வழி??????????//
அது சரி, ஆனால் எல்லா விடயத்தினையும் நிறைவேற்றும் வண்ணம் சிறு பிள்ளை போன்று செல்லச் சிணுங்கல் போட்டுக் கொண்டிருந்தால் என்ன பண்ண முடியும்?
இப்படிப் பல பெரிசுகள் வருத்தப்படுகிறார்களே,
இதற்கு என்ன பதில் சொல்ல முடியும்?
@ரியாஸ் அஹமது
வீம்புக்காக அழுவதும்
அர்த்தமற்ற கண்ணீரும் எரிச்சல் தான் ..//
ஆமாம் என்றே நினைக்கிறேன். காரணம் அனுபவப்படவில்லை(((((((:
@Yoga.s.FR
மிகவும் சுலபமாக வெளியேறி (கண்ணீர்) விடும் என்பதால் இருக்கலாம்!//
அப்படியென்றால் சில தவறுகளை நிரூபிக்கவும் கண்ணீரைப் பயன்படுத்தலாம் என்று சொல்லுறீங்களா?
நிரூபன் said...என்ன செய்ய, பெரியவங்களின் அனுபவத்தினை அடியொற்றித் தானே ஒரு சில கருத்துக்களை ஆராய முடிகிறது?////உண்மை தான்!ஆனால்,சும்மா வயதில் மூத்தவர்கள் என்று குறிப்பிட்டாலே போதுமானது!பெரியவர்கள் என்றால் பல்கலை வல்லுனர்கள்,போற்றப்படும் ஆசான் கள் வரிசையில் சேர்ந்து விடுமில்லையா?நாங்கள் எம்மாத்திரம்?
நிரூபன் said...
@Yoga.s.FR
மிகவும் சுலபமாக வெளியேறி (கண்ணீர்) விடும் என்பதால் இருக்கலாம்!//
அப்படியென்றால் சில தவறுகளை நிரூபிக்கவும் கண்ணீரைப் பயன்படுத்தலாம் என்று சொல்லுறீங்களா?///அதிகாரங்களையே தவறாகப் பயன்படுத்தும் காலம் இது!
@பலே பிரபு
அவ்வ்வ்வ்வ்வ் இந்த பதிவ பார்த்த உடனேயே அழுகை வருதே. சகோதரிகளே.... அழாமல் இந்த ஆண்களை தூக்கி போட்டு மிதித்துக் கேட்டு இருந்தால் இந்த சமூகம் இந்தக் கேள்வியை கேட்டு இருக்குமா? நிரூபன் பதிவு போட்டு இருப்பாரா? (அப்பாடா நிரூபன் அடிவாங்க ஒரு கமெண்ட் போட்டாச்சு)//
அடப் பாவி....இப்படியெல்லாம் பண்ணி விடுறீங்களே, நியாயமா?
நீங்க சொல்லும் ஐடியாவும் ஒரு வகையில் நல்லது தான். ஆண்களைத் தூக்கிப் போட்டு மிதிக்கும் அளவிற்கு இன்று பெண்கள் வளர்ந்து வருவதனை நினைத்துப் பெருமையடைகின்றேன்.
சகோதரன் சிபி, செந்தில்குமாரின் பதிவில் மீதிக் காசு கொடுக்காத பஸ் கண்டக்டரை அடித்த பெண் பற்றி இன்று பகிர்ந்திருந்தார். இதுவே ஒரு சிறந்த உதாரணமல்லவா.
நிரூபன் said...
@Yoga.s.FR
இந்தப் பதிவை அடியிலிருந்து நுனி வரை(வழமை போல்)படித்து விட்டு,பின்னூட்டங்களையும் அவ்வாறே படித்து விட்டு "ஆனந்தக் கண்ணீர்" வடிக்கிறேன்,இந்தப் பிள்ளைக்கு இவ்வளவு ஆளுமையைக் கொடுத்திருக்கிறாயே ஆண்டவா என்று!!!!!!!!!!!!!!!!!!//
அவ்....அவ்....
இது என்னத்திற்கு;-))))
ஆனந்தக் கண்ணீரை விளக்கவா.§§§§அப்படியும் கொள்ளலாம்!!!!!
மச்சி... பெண்கள் கண்ணீரில் வேஷம் இருந்தாலும் விவேகம் இருக்கும்...
நிரூபன் said...
@Yoga.s.FR
*தமக்குப் பிடித்தமான ஒரு விடயத்தினை நிறைவேற்றக் கண்ணீர் அவசியமா?///வேறு வழி??????????//
அது சரி, ஆனால் எல்லா விடயத்தினையும் நிறைவேற்றும் வண்ணம் சிறு பிள்ளை போன்று செல்லச் சிணுங்கல் போட்டுக் கொண்டிருந்தால் என்ன பண்ண முடியும்?
இப்படிப் பல பெரிசுகள் வருத்தப்படுகிறார்களே,
இதற்கு என்ன பதில் சொல்ல முடியும்?////பலே பிரபு!!!!!!!!!!!!!
@Yoga.s.FR
அப்படியென்றால் சில தவறுகளை நிரூபிக்கவும் கண்ணீரைப் பயன்படுத்தலாம் என்று சொல்லுறீங்களா?///அதிகாரங்களையே தவறாகப் பயன்படுத்தும் காலம் இது!//
ஆமாம்...ஆனால் பெண்கள் சில அதிகாரங்களைச் சாதிக்கவும், தம் வழிக்கு வர வைக்கவும் கண்ணீரை ஏன் அம்பாக எய்ய வேண்டும்?
இப்போ இதற்கு என்ன பதில் சொல்லப் போறீங்க ஐயா?
@Yoga.s.FR
என்ன செய்ய, பெரியவங்களின் அனுபவத்தினை அடியொற்றித் தானே ஒரு சில கருத்துக்களை ஆராய முடிகிறது?////உண்மை தான்!ஆனால்,சும்மா வயதில் மூத்தவர்கள் என்று குறிப்பிட்டாலே போதுமானது!பெரியவர்கள் என்றால் பல்கலை வல்லுனர்கள்,போற்றப்படும் ஆசான் கள் வரிசையில் சேர்ந்து விடுமில்லையா?நாங்கள் எம்மாத்திரம்?//
என்னைப் பொறுத்தவரை பல்கலை வல்லுனர்களுக்கும், உங்களுக்கும் வேறுபாடிருப்பதாக அறியவில்லை. காரணம் பட்டறிவில் உங்களுக்கு அவர்களை விட அனுபவம் இருக்கலாமல்லவா.
என் பதிவுகள் ஒவ்வொன்றிற்கும் எவ்வளவு காத்திரமான கருத்துக்களைச் சொல்றீங்களே. அது போதாதா.
@தமிழ்வாசி - Prakash
மச்சி... பெண்கள் கண்ணீரில் வேஷம் இருந்தாலும் விவேகம் இருக்கும்...//
எங்கேயோ வசமா மாட்டிக்கிட்டவர் சொல்லுறாரு.
அவ்...அவ்..நம்புறோம் மச்சி.
*தமக்குப் பிடித்தமான ஒரு விடயத்தினை நிறைவேற்றக் கண்ணீர் அவசியமா?
அவசியமே இல்லை..அது அவர் அவர் சூழலை பொறுத்தது சகோ ....
பெண்களின் கண்ணீர் உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி _ வில்சன் மிஸ்னர்
என்னும் அறிஞர் கூறியுள்ளார்...
நீலிக் கண்ணீர் பெரும்பாலும், ஆண் பெண் என்ற இரு தரப்பிலும் இருக்கிறது...உங்களுக்கு வந்த மறுமொழியில் ஒரு நண்பரது மறுமொழி கேலியாய் இருக்கிறது, ஆண்களின் கண்ணீர்க்கு இருக்கும் மதிப்பு பெண் கண்ணீர்க்கு இருப்பது இல்லையாம்... ஹ ஹ...காலம் காலமாய் பெண் என்பவள் ஒடுக்கப்பட்ட இனமாகவும், கண்ணீரில் காரீயம் சாதிக்கும் இனமாகவுமே சித்தர்க்க பட்டாகிவிட்டது, சில நேரங்களில் எங்கள் கண்ணீர் எங்களுக்கு பாதுகாப்பே...ஆனாலும் நீலிக் கண்ணீர் என்னும் முதுகெலும்பில்லா வார்த்தைக்குள் நாங்கள் அடைபடும் மண்புழுக்கள் அல்ல சகோ...ஆயினும் இது ஆளுக்கு ஆள் மாறுபடலாம்...கண்ணீரில் காரியம் சாதிக்கும் மாந்தர்கள் நாங்கள் அல்ல........(if anything wrng sorry for this comment)
@ரேவா
தமக்குப் பிடித்தமான ஒரு விடயத்தினை நிறைவேற்றக் கண்ணீர் அவசியமா?
அவசியமே இல்லை..அது அவர் அவர் சூழலை பொறுத்தது சகோ ....//
மகளிர் அணி சார்பில் முதன் முதலாக களமிறங்கியிருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்களும், வணக்கங்களும்,
@ரேவா
தமக்குப் பிடித்தமான ஒரு விடயத்தினை நிறைவேற்றக் கண்ணீர் அவசியமா?
அவசியமே இல்லை..அது அவர் அவர் சூழலை பொறுத்தது சகோ ....//
அப்படியென்றால், சூழலுக்கு ஏற்ற மாதிரிக் கண்ணீரும் பச்சோந்தி போன்று வெளிப்படுமா அக்காச்சி?
@ரேவா
பெண்களின் கண்ணீர் உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி _ வில்சன் மிஸ்னர்
என்னும் அறிஞர் கூறியுள்ளார்...
நீலிக் கண்ணீர் பெரும்பாலும், ஆண் பெண் என்ற இரு தரப்பிலும் இருக்கிறது...உங்களுக்கு வந்த மறுமொழியில் ஒரு நண்பரது மறுமொழி கேலியாய் இருக்கிறது, //
பார்த்தேன், அதற்குரிய என் கேள்வியினையும், கேட்டிருந்தேன், அச் சகோதரன் பதில் சொல்லாது எஸ் ஆகிட்டார்.
அப்படியென்றால், சூழலுக்கு ஏற்ற மாதிரிக் கண்ணீரும் பச்சோந்தி போன்று வெளிப்படுமா அக்காச்சி?
பெண்களின் கண்ணீர் மூலம் ஆண்மையினையும் ஆண்களின் பாலியல் உணர்ச்சிகளையும் அடக்கச் செய்யலாமாம்.
ஒரு ஆணிடம் இருந்து ஒரு பெண் உடல் ரீதியில் தப்பிக்க கண்ணீர் பயன்படும் என்றால் அது பஞ்சோந்தி தனமா சகோ?
@ரேவா
ஹ ஹ...காலம் காலமாய் பெண் என்பவள் ஒடுக்கப்பட்ட இனமாகவும், கண்ணீரில் காரீயம் சாதிக்கும் இனமாகவுமே சித்தர்க்க பட்டாகிவிட்டது, சில நேரங்களில் எங்கள் கண்ணீர் எங்களுக்கு பாதுகாப்பே...ஆனாலும் நீலிக் கண்ணீர் என்னும் முதுகெலும்பில்லா வார்த்தைக்குள் நாங்கள் அடைபடும் மண்புழுக்கள் அல்ல சகோ...ஆயினும் இது ஆளுக்கு ஆள் மாறுபடலாம்...கண்ணீரில் காரியம் சாதிக்கும் மாந்தர்கள் நாங்கள் அல்ல........(if anything wrng sorry for this comment)//
உங்கள் கருத்துக்களுக்கு நான் மதிப்பளிக்கிறேன்,.
இப் பதிவினூடாக ஒட்டு மொத்தப் பெண்களையும் நான் குற்றம் சுமத்தவில்லை. நீலிக் கண்ணீர் வடிப்போர் எனும் வசனத்தோடு பொருத்திப் பார்த்தீர்கள் என்றால் புரியும்.
இன்றைய காலகட்டத்திலும், தகவற் தொழில் நுட்பப் புரட்சி மூலம் உலகம் முன்னேற்றம் கண்டு வரும் வேளையிலும், சின்னத் திரைகளும், திரைப்படங்களும் பெண்களை ஆண்களுக்குப் பணிந்து அடக்க ஒடுக்கமாகப் போவோராகவும், கண்ணீர் வடித்துக் காலத்தைக் காட்டுவோராகவும் தானே காட்டுகின்றன.
இதற்கு உங்கள் பதில் என்ன?
@ரேவா
பெண்களின் கண்ணீர் மூலம் ஆண்மையினையும் ஆண்களின் பாலியல் உணர்ச்சிகளையும் அடக்கச் செய்யலாமாம்.
ஒரு ஆணிடம் இருந்து ஒரு பெண் உடல் ரீதியில் தப்பிக்க கண்ணீர் பயன்படும் என்றால் அது பஞ்சோந்தி தனமா சகோ?//
ஓக்கே நீங்கள் சொல்லும் கண்ணீர் பெண்கள் தம்மைச் சூழ்ந்து கொள்ளும் துன்பங்களிலிருந்து விடுவித்துக் கொள்ளப் பயன்படுத்தும் ஆயுதம் எனும் கருத்தினை ஏற்றுக் கொள்கிறேன்.
ஆனால், திருமணமான பெண்களோ, இல்லை காலேஜ் படிக்கும் பெண்களோ செல்லச் சிணுங்கல்களாக தமது தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு வெளிப்படுத்தும் க்ண்ணீர் என்ன ஆயுதமா?
இல்லை வேஷமா?
இதற்கு உங்கள் பதில் என்ன?
wait....still typing
பெண்கள் நாட்டின் கண்கள்..பெண்கள் சக்தியின் மறு வடிவம். அப்புறம்.... மறந்து போச்சே..பெண்கள் வாழ்க. (இப்படியே எஸ்கேப் ஆகிடறது நல்லது சாமியோவ்)
@ரேவா
wait....still typing//
அக்காச்சி, இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் வெளியே கிளம்பிடுவேன், நைட் வந்து மிகுதிக் கமெண்டுகளுக்குப் பதில் போடுறேன்.
இன்றைய காலகட்டத்திலும், தகவற் தொழில் நுட்பப் புரட்சி மூலம் உலகம் முன்னேற்றம் கண்டு வரும் வேளையிலும், சின்னத் திரைகளும், திரைப்படங்களும் பெண்களை ஆண்களுக்குப் பணிந்து அடக்க ஒடுக்கமாகப் போவோராகவும், கண்ணீர் வடித்துக் காலத்தைக் காட்டுவோராகவும் தானே காட்டுகின்றன.
இதற்கு உங்கள் பதில் என்ன?
சகோ அது தானே சகோ ஆண் உலகம்...ஆயிரம் தானாயினும் பெண் என்பவள் ஆணுக்கு கீழ் என்று தானே வழக்கப்படுத்தி வளர்க்கப்பட்டோம்...திரையுலகம் ஆண்களுக்கான உலகம் இது அனைவரும் அறிவர்..அவர்களை ஈர்க்கும் வகையிலேயே, இங்கே அனைத்தும் நடந்தேறுகிறது, இதில் எங்கள் தவறு என்ன சகோ
@செங்கோவி
பெண்கள் நாட்டின் கண்கள்..பெண்கள் சக்தியின் மறு வடிவம். அப்புறம்.... மறந்து போச்சே..பெண்கள் வாழ்க. (இப்படியே எஸ்கேப் ஆகிடறது நல்லது சாமியோவ்)//
அடப் பாவி, இப்படியும் சொல்லிட்டு எஸ் ஆகலாமா?
அவ்....
ஆனால், திருமணமான பெண்களோ, இல்லை காலேஜ் படிக்கும் பெண்களோ செல்லச் சிணுங்கல்களாக தமது தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு வெளிப்படுத்தும் க்ண்ணீர் என்ன ஆயுதமா?
இல்லை வேஷமா?
இதற்கு உங்கள் பதில் என்ன?
சகோ செல்லச்சிணுங்கல்ன்னு நீயே சொல்லிட்ட, இத விளையாட்ட எடுத்துக்கலாமே, இல்ல இதற்கும் காத்திரமான மறுமொழி வேண்டுமாயின், இந்த கண்ணீர் வேஷம் கிடையாது, அன்பு வைத்தவரிடம் தனக்கான ஒன்று கிடைக்காத போது, எம்மால் தர்க்கம் செய்யவா முடியும், கண்ணீர் தானே...இதை வேஷம் என எங்கனம் சொல்வாய்
ஓகே நீ வந்த பிறகு கேற்கும் கேள்விகளை பொறுத்து எம் தரப்பு நியாயத்தை யாம் எடுத்துவைப்போம், இப்போ கிளம்புறோம்...பட் பதிவு சூப்பர்...பெண்களுக்கு கண்ணீர்னா, ஆண்களோட பூசல் பேச்ச வச்சு அடுத்த பதிவு போடுவியா? இல்லாட்டி மகளிர் அணியினர் கண்ணீர் போராட்டம் நடத்த மாட்டோம், கண்டன போராட்டம் நடத்துவோம்... ஹ ஹ.... பெண் கண்ணீரில்ங்கிற இந்த பதிவ மையமா வச்சு, பல ஆண்களோட கருத்த, இந்த பதிவுல பாக்க முடிந்தது...அதற்க்கு நன்றி
பலமானவனிடம் இருந்து பலம் குன்றியவன் உடல் ரீதியாகவோ, உணர்வு ரீதியாகவோ தப்பிக்க ,அல்லது இயலாமையின் பொருட்டு வெளிப்படுத்தும் ஒரே ஆயுதம் கண்ணீர் ,இதில் ஆண் பெண் வித்தியாசம் ஏது?
ஐயா நிரூபன் இந்த பதிவ பார்க்கும் உங்கள் வருங்கால மனைவி இப்பவே இந்தாள காய் வெட்டுவமோ என்று யோசிப்பதாக தகவல்...??பின்ன இந்தாளிடம் அழுது காரியம் பெற முடியாதென்றுதானையா???
பெண்களின் கண்ணீர் பல காமவேட்டை நாய்களிடம் எடுபடுவதில்லை...??
என்னன்னுயா 24மணி்த்தியாலத்திற்குள்2பதிவுகளை எழுதி போட்டது மட்டுமில்லாது...எல்லார் படலையிலும் குழ வைக்கிறாய் பொடியங்கள விளையாட விட்டுட்டு உன்னுடய பதிவுக்கு மறுமொழி இடவே தாவு தீர்து போச்சு..!!!
அண்ணாத்த அது என்ன கீழ இருந்து தொடங்குறது....!!!!
எல்லோரையும் போல் மேழிருந்து வரலாமே அண்ண..!!!????
தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை "அழுகை"
உங்கள் நாட்டு பெண்களின் கண்களில் இருந்து வருவது கண்ணீரா? ரத்தமல்லவா?
பிற் சேர்க்கை படித்துவிட்டு கண்ணீர் வந்தால் மனிதன் என்று பொருள்.
நிரூபன்said...
@Rathnavel
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.//
நன்றி ஐயா.
என்னையா சொல்லி வைச்சு விளையாடுறீங்களா...
நான் பெண்களின் கண்ணீரை விட ஆண்கள் ஆற்றாமையால் விடும் கண்ணீரைதான்யா பார்கிறேன்.. இதுக்கொரு குறும்பாடு வந்து உன்ர அனுபவத்த ஏன்யா இங்கு வந்து எழுதிராய் எண்டு கேக்க போகின்றது..
அனுபவிச்சவங்களுக்குத்தான்யா அதன் வலி தெரியுமையா..ஆண்களின் கண்ணீர் ஆற்றாமையின் வெளிப்பாடு ஐய்யா..
காட்டான் குழ போட்டான்...
பெண்களின் கண்ணீர்த்துளி விழுகிற நிலத்தில் புல்பூண்டு கூட முளைக்காது என்று விதுரர் பாரதத்தில் சொல்கிறார். என் அனுபவத்தில், அம்மாவின் கண்களில் கண்ணீர் பார்த்தால், வாழ்க்கையின் குறிக்கோளே தோல்வியடைந்து விட்டதோ என்று கிலி ஏற்படும்.
பொதுவாக பெண்கள் எதையும் நேராக பேசாமல் சுற்றி வளைத்து பேசுவார்கள்..
அதேபோல்தான் கண்ணீரையும் சில விடயங்களை சாதிக்க பாவிப்பர்..
நிரூ, நான் எதுக்கும் அழுவதில்லை. கண்ணீரால் தான் காரியம் சாதிக்க வேண்டிய அவசியம் எனக்கிருந்ததில்லை. எதுவா இருந்தாலும் ( விருப்பமான பொருட்கள் ) கேட்டு வாங்கி கொள்வேன்( பெரும்பாலும் நான் கேட்காமலே என் கணவர் எல்லாவற்றையும் வாங்கி கொடுத்து விடுவார்). இந்தக் காலத்தில் அழுது காரியம் சாதிக்கும் பெண்கள் இருக்கிறார்களா?
vanathyஅம்மாவின் கருத்தை பாருங்கோயா பெண்கள் அழுவதில்லையாமப்பு அதுதானே எல்லாத்தையும் சேர்த்து ஆண்கள் அழுகிறார்களே..
அது என்னப்பு தமிழமணத்தில் மைனஸ் ஓட்டு போட்டுத்தள்ளுகிறார்கள்... காட்டான் ஒழுங்காதான் ஓட்டு போடுகிறானோ என்று செகபண்ணி சொல்லு மாப்பிள...?????
இலக்கணமேவும்
இனிய உரையாடல்..
காலம்காலம் தொட்டு
இதை வாதிடாதவர்கள் இல்லை...
ஆயினும் இந்த தலைப்பை தொடுவதற்கே
ஒரு துணிச்சல் வேண்டும்..
என்னைப்பொருத்தவரையில் பெண்களின் கண்ணீர் ஆயுதமே ...
அதிலும் மனம் இலகியவர் எதிர்நின்றால் அவர்நிலை சமாதிதான்...
வேஷம் என்பது இதில் சிறிதும் இல்லை...
வஞ்சக எண்ணம் கொண்ட பெண்களாக இருப்பினும் அது கூர்முனை
ஆயுதமாகவே உருவெடுக்கும்.
சாந்தோம் கடற்கரையில் அன்று அவள் உதிர்த்த கண்ணீர் நிச்சயமாய் வேஷமல்ல!
அவள் வேதனையின் வெளிப்பாடு!
என்னைக் காயப்படுத்தவேண்டும் என்ற நினைப்பின்றி அவள் எய்த ஆயுதம்!
காயம் இன்று வரை ஆறவில்லையே!
காதலியின் கண்ணீர் என்றும் வேஷமில்லை!
மனைவியின் சாதுர்யக் கண்ணீர்?!
பெண்களில் பலர் அப்படி இருக்கலாமோ என்னவோ? எல்லா பெண்களின் நடவடிக்கையாக எடுத்துக் கொள்ள முடியாது.
I remember reading one quote: "women at least have the luxury of crying and men don't." ha,ha,ha,ha,ha...
Your post was interesting to read.
Whenever you have time, read this post: (not mine)
http://sofiastry.wordpress.com/2011/06/15/why-dont-men-cry/
நான் எப்பவுமே லேட்...இருந்தாலும் என் வாழ்த்துக்களை பிடியுங்கள் நிரூபன்...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் உப்பூடி டபுக் கெனக் கேள்வியைக் கேட்டால் எப்பூடியாம் பதில் சொல்றது?:)) கொஞ்சம் யோசிக்கவெல்லோ வேணும்...
நிரூபன்... ஏன் உங்களுக்கு இப்படி விபரீதமான பதிவெல்லாம் போட வருது?:))))... சரி அதை விடுங்க விஷயத்துக்கு வருவம்ம்ம்ம்....
கண்ணீர் என்பதும் ஒருவித உணர்வுதானே? அதை நீலிக் கண்ணீர் என எப்படிச் சொல்வது, அது தானா வருவதுதானே? சிலரால் அடக்க முடியுது சிலரால் முடிவதில்லை அவ்வளவுதான், பெண்கள் எப்பவுமே சென்சிட்டிவ்வானவர்கள்(ஆண்களோடு ஒப்பிடுகையில்).. அதனால் மனம் இலகுவில் இளகிவிடும்... அது கண்ணீராக வெளிப்படலாம்.
சும்மா கட்டுக்கதைதான் நீலிக் கண்ணீர் என்பது. என் பிள்ளைகள் அழுதால் எனக்கும் கண்ணால் தண்ணி வரும்... அதை என்னால் கட்டுப்படுத்த முடிவதில்லை... அதேபோல... ஒரு மிருகமோ பறவையோ... ஏதும் உபாதைக்குள்ளாகி கத்தினால்... கண் கலங்கும்...
அதுமட்டுமில்லை, ஆராவது என்னைப்பற்றியோ அல்லது கணவர் குழந்தைகள் பற்றியோ, நல்ல விதமாகச் சொன்னால், உடனே எனக்கு கண்ணால் தண்ணி வந்திடும்...
இதெல்லாம் இயற்கையாக வருவதுதானே... ஒவ்வொருவரின் இதயத்தில் பலத்தைப் பொறுத்து, சிலரால் கவலையை/சந்தோஷத்தை உள்ளடக்க முடியுது, சிலரால் முடிவதில்லை.... இதில் முக்கால்வாசிப் பெண்களாலும் முடிவதில்லை.
நான் அழுதால் என் நண்பிகளும் கண்கலங்குவதை நான் பார்த்திருக்கிறேன். ஆனா ஆண்களுக்கு கவலை இல்லாமலில்லை, அவர்களால் கட்டுப்படுத்த முடிகிறது, அதே நேரம் அவர்களின் முகத்தைப் பார்த்தால் தெரியும் கவலை. ஆண்கள் அனைத்தையும் உள்ளே அடக்குவதால்தானே அவர்களுக்கு கார்ட் அட்டாக் அதிகம், பெண்கள் அழுவதினால்... இதயத்தாக்கம் குறைவு என ஆய்வுகளில் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
இன்னுமொன்று... ஆண்பிள்ளை அழக்கூடாதென அன்று தொட்டுச் சொல்லிச் சொல்லியே... அவர்களை கார்ட் அட்டாக்குக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கிறார்கள்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).
பெண்கள் அழும்போது இரங்குவதும் இரங்காததும்கூட ஆண்களின் இதயத்தைப் பொறுத்ததே...
athira said...
//பெண்கள் எப்பவுமே சென்சிட்டிவ்வானவர்கள்(ஆண்களோடு ஒப்பிடுகையில்).. அதனால் மனம் இலகுவில் இளகிவிடும்... அது கண்ணீராக வெளிப்படலாம்.//
பெண்களோடு ஒப்பிடுகையில் ஆண்கள் இலகுவானவர்கள்... பெண்களின் கண்ணீரில் ஆண்கள் கசிந்துவிடுவார்கள்
ஆனந்த கண்ணீர் - சோக கண்ணீர் - நீலிக்கண்ணீர் - கோபக்கண்ணீர் என பல வகை உள்ளன... இதில் எந்த வகையானாலும் ஆண்கள் பாவம் இளகிவிடுவார்கள்... ஏமாந்தே பழக்கப்பட்டவய்ங்க..ஹி ஹி ஹி
அதே போல் பெண்களின் உண்மையான பாதிப்புள்ள கண்ணீர் துடைக்கப்படவேண்டியது அவசியம்.. புரிந்துகொள்வதும் அவசியம்... ஏனென்றால் அந்த கண்ணீர் வலிமையுள்ளது...
நல்ல பெண்களின் கண்ணீரை பார்த்து ஆனந்தப்படும் ஆண்கள்... மனிதர்களே அல்ல காட்டுமிராண்டிகள்..அவர்கள் தண்டிக்கபடவேண்டியவர்களே... நல்ல பயனுள்ள விவாத பகிர்வு நன்றி சகோ
கண்ணீர் அன்புடன் கலக்கையில் காதலாகின்றது. . .
கண்ணீர் பிறர் வேதனைக்காக வழியும்பொழுது அர்த்தமுள்ளதாகின்றது. . .கண்ணீர் ஆயுதம் மட்டுமல்ல, அன்பின் வெளிப்பாடும் கூட. . . நன்றி சகா. . .
உந்தப் பெடி நிரூ சும்மா இருக்கமாட்டான்போல.யாரையாவது கிண்டிக் கிளறிக்
கொண்டேயிருக்கிறான்.பெரியவை சொன்னவையாமெல்லோ.அவருக்கு அனுபவம் எண்டு சொன்னா என்னவாம்.வீட்ல என்னமோ அழுகைக் கச்சேரி நடக்குதுபோல சொல்லி அழ இவருக்கு ஆளில்லைப்போல.அதான் இணையத்தில எல்லாரையும் கூப்பிட எல்லாருமெல்லோ சேர்ந்து அழுகினம் பெண்பிள்ளைகளைத் தவிர !
எல்லாரின்ர பின்னூட்டங்களும் வாசிச்சனான்.எல்லாரையும் கவனிச்சுக்கொள்றன்.முக்கியமா,
கந்தசாமி,கவிக்கிழவர்,யோகா,
காட்டான்.இருங்கோ இருங்கோ நீங்கள் எல்லாரும்.கவிக்கிழவர் அடுக்கடுக்கா அடுக்கியெல்லோ சொல்லியிருக்கிறார்.இனிக் காதல் கவிதை எழுதட்டும் வாறன் !
நிரூ....எல்லாப் பெண்களும் அழுகிறண்டு இல்ல.இயல்பாகவே மென்மையானவர்களாதலால் பயந்த சுபாவம் உள்ளவர்கள் உடனடியாக அழுதுவிடுவார்கள்.வீட்டில் இருப்பவர்களின் மனநிலை அறிந்தே காரியம் சாதிக்க அழுது பார்ப்பார்கள்.இங்கதான் நீலிக்கண்ணீர் வரும்.ஆனால் எல்லா வீட்லயும் பருப்பு அவியாது.
வேதனைகளை,காட்டமான வார்த்தைகளைத் தாங்கமுடியாததாலும் அழுவார்கள்.
ஆனால் எல்லாரும் இல்லை.
வாழ்வின் அனுபவம்,உறவுகளை சமூகத்தை புரிந்துகொண்டால் அழத் தேவையே இல்லை.பெண்களின் பலஹீனம்தான் கண்ணீர்.சில இடங்களில் பலம் !
//கண்ணகியின் கோபத்தால் மதுரை எரிந்ததா இல்லை கண்ணீராலா.
பாஞ்சாலியின் கோபத்தால் கெளரவர்கள் அழிந்தார்களா இல்லை கண்ணீராலா.... எதோ, இன்று வரை ஆக்கத்துக்கு பின்னால் மட்டுமல்ல, அழிவுக்கு பின்னாலும் பெண்களின் கண்ணீர்,கோபம் இருந்து வருகிறது என்பது உண்மை. (தாய்குலமே மன்னியுங்கள் )//
பப்ளிக்கிலை சொல்லவும் ஒரு தில் வேணுமைய்யா.
தாய்க் குலங்களே இம்புட்டுப் பொறுமையாகப் பதிவினைப் படிப்பது நியயமா?
கந்தசாமியின் கருத்துக்களை நிராகரித்து எதிர்வாதம் செய்ய இப்போதே ஓடி வர வேண்டாமா?’//
எதுக்கு நிரூபன் அவருக்கு எதிரா சங்கத்தை கூட்டுறீங்க..?? பாவம் விட்டிடுங்க.. ஆனால் ஒன்றை அவர் மறந்திட்டார்.அந்த இரண்டு சந்தர்ப்பத்துக்கும் முன்னாடி அநீதி நடந்ததால் தான் கண்ணகியும் பாஞ்சாலியும் கொதிக்க நேர்ந்தது...(அது கண்ணீரால் அல்ல... அந்த ஆயுதத்துக்கு அப்புறம் வந்த கோபம்) இப்பிடி அநீதியைக் கண்டு அந்தக் காலத்தில ஆண்கள் யாராவது கொதிச்சிருக்கிறாங்களா?
நல்ல படைப்பு நிரூபன் வாழ்த்துக்கள்
கொஞ்சம் லேட்டா வந்துடன்..இருந்தாலும்..பதிவு சூப்பர்..
என்னிடமும் யாரும் அழுதால் விட்டு கொடுத்து விடுவேன்..(நல்ல மனம் பாருங்கோ)
நாம அழுறதுக்கு முன்னாடியே சரியா நடந்துக்கலாமில்ல? கண்ணீரை கத்தி மாதிரி காட்டினா தானே மிரள்றீங்க...அப்புறம் அந்த செல்லச் சிணுங்கல்... அது நல்லா இருக்குதுண்ணு நீங்க தானே சார் ரசிக்கிறீங்க...
பூங்கோதை said... ////எதுக்கு நிரூபன் அவருக்கு எதிரா சங்கத்தை கூட்டுறீங்க..?? பாவம் விட்டிடுங்க.. ஆனால் ஒன்றை அவர் மறந்திட்டார்.அந்த இரண்டு சந்தர்ப்பத்துக்கும் முன்னாடி அநீதி நடந்ததால் தான் கண்ணகியும் பாஞ்சாலியும் கொதிக்க நேர்ந்தது./// சகோதரி, பாண்டிய மன்னன் செய்த தவறுக்காக அந்த மாநகரையே அழிப்பது எந்த விதத்தில் நியாயம், மன்னன் செய்த தவறுக்கு தண்டனை மக்களுக்கா??' இந்த விடயத்தில் கண்ணகி செய்தது தவறு தான் என்று அடிச்சு சொல்லுவேன்...
என்ன சொல்ல வாறீங்கள்? நான் அழலாமா இல்லையா? கண்ணீர்விட்டு அழலாமா? கண்ணீர் விடாம அழலாமா?
///இப்பிடி அநீதியைக் கண்டு அந்தக் காலத்தில ஆண்கள் யாராவது கொதிச்சிருக்கிறாங்களா?/// சகோதரி, பசுவுக்காக தன் மகனை பலி கொடுக்க முன்வந்த மனுநீதி சோழனில் இருந்து ,சோ குவேர வரை தொடர்கிறது...
ஹேமா said...எல்லாரின்ர பின்னூட்டங்களும் வாசிச்சனான்.எல்லாரையும் கவனிச்சுக்கொள்றன்.எல்லாப் பெண்களும் அழுகிறண்டு இல்ல.இயல்பாகவே மென்மையானவர்களாதலால் பயந்த சுபாவம் உள்ளவர்கள் உடனடியாக அழுதுவிடுவார்கள்.வீட்டில் இருப்பவர்களின் மனநிலை அறிந்தே காரியம் சாதிக்க அழுது பார்ப்பார்கள்.இங்கதான் நீலிக்கண்ணீர் வரும்.ஆனால் எல்லா வீட்லயும் பருப்பு அவியாது.////"பெண்கள் இயல்பாகவே மென்மையானவர்கள்!"ஒரு ஆண் அழுதால் அந்த மென்மை எங்கே போய் ஓடி ஒழிந்து கொள்கிறது,சகோதரி?உங்கள் கூற்றுப்படி ஆண்களிடம் மென்மை கிடையாது,அப்படித் தானே?பருப்பு வேகுவது இருக்கட்டும்!நியாயமாக அழுதால் இரக்கப்படலாம்!இது என்னடாவென்றால் கை பட்டால்,கால் பட்டால் என்றாகி விடுகிறதே?இப்படிக் கூறுவதால் பெண்ணடிமை வாதியென்று கற்பனை பண்ணி விடாதீர்கள்!சமமாக மதிக்கவேண்டுமென்ற கொள்கையுடையவன் நான்.ஏதோ உங்களால் முடிந்த வரை வாதிடுங்கள்.நியாயமானவற்றை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்!
அடிக்கடி வரும் கண்ணீரை விட எப்போவாவது இருந்திட்டு வரும் கண்ணீருக்கு வலிமை அதிகம்..)
நிரூபன் said...
@Yoga.s.FR
அப்படியென்றால் சில தவறுகளை நிரூபிக்கவும் கண்ணீரைப் பயன்படுத்தலாம் என்று சொல்லுறீங்களா?///அதிகாரங்களையே தவறாகப் பயன்படுத்தும் காலம் இது!
ஆமாம்...ஆனால் பெண்கள் சில அதிகாரங்களைச் சாதிக்கவும், தம் வழிக்கு வர வைக்கவும் கண்ணீரை ஏன் அம்பாக எய்ய வேண்டும்?
இப்போ இதற்கு என்ன பதில் சொல்லப் போறீங்க ஐயா?////எங்கள் கலாச்சாரம்?!பெண்கள் ஆண்களை நோக்கி கை நீட்டுவதை விரும்பத்தகாததாக வரித்து விட்டது.(புலம்பெயர் மண்ணில் கை நீட்டுகிறார்களாம்!)மேலை நாட்டு ஆண்கள் மீது பெண்கள் கை நீட்டுவது சர்வசாதாரணம்!ஆனால், ஆண்கள் கை நீட்டினால் கதை கந்தல் தான்!(ஹேமா,திருப்தி தானே?)அதிகாரங்கள் என்று எதனைக் கேட்கிறீர்கள்,நிரூபன்?தம் வழிக்கு வரவைக்க.................சாம,தான,பேத,தண்டங்களுக்கு மசியா விட்டால்?????????????
கந்தசாமி. said...
அடிக்கடி வரும் கண்ணீரை விட எப்போவாவது இருந்திட்டு வரும் கண்ணீருக்கு வலிமை அதிகம்..)///அது தான் இப்போது ஹேமாவுக்கு வருகிறது?பீ கேர்புல்!!!!!!!!
நிரூபன் said...
@!* வேடந்தாங்கல் - கருன் *!
நான் இந்த விளையாட்டுக்கு வரல..//
இப்புடிச் சொல்லிட்டு எஸ் ஆகினால் எப்பூடி?
மச்சி, சும்மா ஒரு தடவை "ஓடி" வாரது.
ஹி....ஹி....///கடேசியா வந்தாலும் ஆறுதல் பரிசு இருக்கு,சகோ!!!
காட்டான் said...
நிரூபன்said...
@Rathnavel
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.//
நன்றி ஐயா.
என்னையா சொல்லி வைச்சு விளையாடுறீங்களா...
நான் பெண்களின் கண்ணீரை விட ஆண்கள் ஆற்றாமையால் விடும் கண்ணீரைதான்யா பார்கிறேன்.. இதுக்கொரு குறும்பாடு வந்து உன்ர அனுபவத்த ஏன்யா இங்கு வந்து எழுதிராய் எண்டு கேக்க போகின்றது..
அனுபவிச்சவங்களுக்குத்தான்யா அதன் வலி தெரியுமையா..ஆண்களின் கண்ணீர் ஆற்றாமையின் வெளிப்பாடு ஐயா..
காட்டான் குழ போட்டான்...////சீச்சீ....அப்படிச் சொல்வேனா?அது பாவமில்லையா?மனிதாபிமானமற்ற செயலில்லையா?பிறர் பழிக்கு ஆளாகலாமா?குற்ற உணர்ச்சி கொல்லுமில்லையா?(போட்டுக் குடுத்தாச்சு!காட்டான் மனைவி காட்டில் மழை!!!!!)
//சகோதரி, பாண்டிய மன்னன் செய்த தவறுக்காக அந்த மாநகரையே அழிப்பது எந்த விதத்தில் நியாயம், மன்னன் செய்த தவறுக்கு தண்டனை மக்களுக்கா??' இந்த விடயத்தில் கண்ணகி செய்தது தவறு தான் என்று அடிச்சு சொல்லுவேன்...
//
ஹையோ... ஹையோ... 2012 இல உலகம் அழியப்போகுதாம்... அதுக்கு ஏதாவது வழி கண்டுபிடிச்சாக்கூடப் பறவாயில்லை... இன்னும் பழையதையே கிண்டிக்கொண்டிருக்கினம்ம்ம்..
நிரூபன் கெதியா வந்திடுங்க. இல்லாட்டில் 2,3 கொலை நடந்திடப்போகுது இங்க.
அண்ணாத்த உடையாத தும்புக்கட்டையெல்லாம் வாங்க வைச்சிட்டீங்க..இப என்ர மனிசியும் அண்ணாத்த என்ன புது டெக்கினிக் சொல்லப்போறார்ன்னு பார்துக்கொண்டு இருக்கிறா பப்பிளி குட்டிக்கு ஆசைப்பட்டு இப்பிடி வந்து மாட்டீட்டேனய்யா..
Yoga.s.FR said...
நிரூபன் said...என்ன செய்ய, பெரியவங்களின் அனுபவத்தினை அடியொற்றித் தானே ஒரு சில கருத்துக்களை ஆராய முடிகிறது?////உண்மை தான்!ஆனால்,சும்மா வயதில் மூத்தவர்கள் என்று குறிப்பிட்டாலே போதுமானது!பெரியவர்கள் என்றால் பல்கலை வல்லுனர்கள்,போற்றப்படும் ஆசான் கள் வரிசையில் சேர்ந்து விடுமில்லையா?நாங்கள் எம்மாத்திரம்?
ஆமாய்யா அண்ணாத்த காட்டான்னா ஒரு விவசாயின்னு சொல்லி என்ர பப்புளிகுட்டிய கெடுத்து வைச்சிருக்கார் இதுல நீ வேற மாப்பிள..
கண்ணீர் சிறந்த ஆயிதம் , பல ஆண்களை நிலை குலைய வைப்பது பெண்களின் கண்ணீரே
@ரேவா
சகோ அது தானே சகோ ஆண் உலகம்...ஆயிரம் தானாயினும் பெண் என்பவள் ஆணுக்கு கீழ் என்று தானே வழக்கப்படுத்தி வளர்க்கப்பட்டோம்...திரையுலகம் ஆண்களுக்கான உலகம் இது அனைவரும் அறிவர்..அவர்களை ஈர்க்கும் வகையிலேயே, இங்கே அனைத்தும் நடந்தேறுகிறது, இதில் எங்கள் தவறு என்ன சகோ//
ஓக்கே, ஆண்களின் உலகத்தால் வரும் சினிமா தவறு என்று சொல்லுகிறீர்களே, இந்தச் சினிமாவினைப் பார்த்து அழும் பெண்களின் நிலைக்கு என்ன பரிகாரம் தேடப் போகிறீர்கள்?’
சின்னத் திரை என்றதும், முன்னால் குந்தியிருந்து அழுகின்ற உள்ளங்களுக்கு உங்களால் தீர்வு கொடுக்க முடியாதா?
ஆண்களின் உலகத்தால் படைக்கப்படும் சின்னத்திரை பற்றிச் சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பெண்களால் முடியாதா?
பல பெண் படைப்பாளிகள் இன்று சமூகத்தில் புரட்சிகரமான ஆக்கங்களைப் படைத்து வருகிறார்கள். அவர்களால் சின்னத்திரை பற்றிச் சிந்திக்க முடியாதா?
@ரேவா
சகோ செல்லச்சிணுங்கல்ன்னு நீயே சொல்லிட்ட, இத விளையாட்ட எடுத்துக்கலாமே, இல்ல இதற்கும் காத்திரமான மறுமொழி வேண்டுமாயின், இந்த கண்ணீர் வேஷம் கிடையாது, அன்பு வைத்தவரிடம் தனக்கான ஒன்று கிடைக்காத போது, எம்மால் தர்க்கம் செய்யவா முடியும், கண்ணீர் தானே...இதை வேஷம் என எங்கனம் சொல்வாய்//
செல்லச் சிணுங்கல் என்று தான் இதனைக் கூற முடியும்,
ஆனால் எடுத்ததெற்கெல்லாம் இப்படிச் சிணுங்கிக் கொண்டிருந்தால்.
தொணதொணத்துக் கொண்டிருந்தால்,
வீட்டில் உள்ள ஆண்மகனுக்கு எரிச்சல் வராதா?
இந்தச் சிணுங்கலுக்கே அர்த்தம் இல்லாமற் போகாதா?
பெண்கள் செல்லமாகச் சிணுங்கித் தான் இவ்வாறான காரியங்களை நிறைவேற்ற வேண்டுமா?
@ரேவா
ஓகே நீ வந்த பிறகு கேற்கும் கேள்விகளை பொறுத்து எம் தரப்பு நியாயத்தை யாம் எடுத்துவைப்போம், இப்போ கிளம்புறோம்...பட் பதிவு சூப்பர்...பெண்களுக்கு கண்ணீர்னா, ஆண்களோட பூசல் பேச்ச வச்சு அடுத்த பதிவு போடுவியா? இல்லாட்டி மகளிர் அணியினர் கண்ணீர் போராட்டம் நடத்த மாட்டோம், கண்டன போராட்டம் நடத்துவோம்... ஹ ஹ.... பெண் கண்ணீரில்ங்கிற இந்த பதிவ மையமா வச்சு, பல ஆண்களோட கருத்த, இந்த பதிவுல பாக்க முடிந்தது...அதற்க்கு நன்றி//
ஓக்கே நான் வந்திட்டேன், நைட் ரிப்ளே பண்ணியிருக்கனும், நித்திரை கண்ணைக் கட்டத் தூங்கிட்டேன், அதான் இப்போ வந்திட்டேனே,
என் பதிவில் கருத்துக்களுக்கு எப்போதும் மரியாதை உண்டு, ஆகவே உங்கள் கருத்துக்களை நீங்கள் தாராளமாக நீங்கள் எடுத்து
வைக்கலாம்.
சே...சே...நான் இப்படித் தட்டை மாற்றி அடுத்த பதிவை ஆண்களின் அனுதாபத்திற்காகப் போட மாட்டேன், உங்களுக்கு ஓவர் குசும்பு.
ஆண்களின் பூசல் பேச்சுப் பற்றி வெகு விரைவில் ஓர் பதிவு போடுறேன்.
என்னது....கண்டனப் போராட்டமா..
எனக்கு எதிராகவா..
எப்போ ஆரம்பிக்கப் போறீங்க?
அம்மாக்களே! அக்காக்களே! சகோதரிகளே! தங்கைகளே!
அடியேனை மன்னியுங்கள்!
எடுங்கடா அந்த ஆப்பிஸ் CLOCK ON AND OFF CARD,
இப்பவே வேலைக்கு Half Day உடன் லீவு போட்டு விட்டு எஸ் ஆகிடனும்,
என்னை விட்டு விடுங்கள்!
மீ.....பாவம்!
@கந்தசாமி.
பலமானவனிடம் இருந்து பலம் குன்றியவன் உடல் ரீதியாகவோ, உணர்வு ரீதியாகவோ தப்பிக்க ,அல்லது இயலாமையின் பொருட்டு வெளிப்படுத்தும் ஒரே ஆயுதம் கண்ணீர் ,இதில் ஆண் பெண் வித்தியாசம் ஏது?//
ஓக்கே,, என்னதான் நீங்கள் சொன்னாலும் ஆண்கள் இக்கட்டான சூழலிலும் அழுவது குறைவு, கண்களில் கண்ணீர் சுரக்க ஆரம்பித்தாலும்,....பெரிசாக கண்ணீர் சிந்தி நிலத்தினை நனைக்கும் அளவிற்கு அழமாட்டார்கள்.
உங்களுடைய கருத்தினை வைத்துப் பார்க்கையில்,....
பெண்கள் தமக்கு நேரும் இக்கட்டான சூழலில் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ள கண்ணீரினை ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள்.
அக்காச்சி- ரேவா சொல்லியது போல..பெண்கள் சந்தர்ப்பத்திற்கு ஏற்றமாதிரியே கண்ணீரினைச் சூழலுக்குத் தகுந்த மாதிரிப் பயன்படுத்துகிறார்கள்.
@காட்டான்
ஐயா நிரூபன் இந்த பதிவ பார்க்கும் உங்கள் வருங்கால மனைவி இப்பவே இந்தாள காய் வெட்டுவமோ என்று யோசிப்பதாக தகவல்...??பின்ன இந்தாளிடம் அழுது காரியம் பெற முடியாதென்றுதானையா???//
அண்ணாத்த ஓவர் குசும்பையா உங்களுக்கு..
என்னைப் போயிக் கழட்டி விடுவோம் என்று சொல்லுவாங்களா?
நான் தானே அவாவுக்காக சமையல் செய்வேன் என்று எம் சந்திப்பு நிகழ்ந்த முதல் நாளே சொல்லியிருக்கிறேன்.
‘ஹரிகரன் பாடிய ஓர் பாட்டுத் தான் என் நினைவிற்கு வருது.
‘வெங்காயத்தை வெட்டும் போதும் கண் கலங்கக் கூடாதம்மா...
வெங்காயமே வேண்டாம் கண்ணே,
நானதை வெறுத்திடுவேன்..
(காஞ்சிப் பட்டு சேலை கட்டி...._
@காட்டான்
பெண்களின் கண்ணீர் பல காமவேட்டை நாய்களிடம் எடுபடுவதில்லை...??//
அதனைத் தான் பிற்சேர்க்கையாக, தகுந்த ஒரு உதாரண விளக்கமாகத் தந்திருக்கிறேன்.
@காட்டான்
என்னன்னுயா 24மணி்த்தியாலத்திற்குள்2பதிவுகளை எழுதி போட்டது மட்டுமில்லாது...எல்லார் படலையிலும் குழ வைக்கிறாய் பொடியங்கள விளையாட விட்டுட்டு உன்னுடய பதிவுக்கு மறுமொழி இடவே தாவு தீர்து போச்சு..!!!//
ஓ...அதுவா, இப்போ ஆப்பிஸில் புதுசா லேடிஸ் மனேஜர் இருக்காங்க. அவா கொஞ்சம் கருணை காட்டுறா. அதனாலை தான் அவங்களும் என் ப்ளாக் படிக்கிறாங்களோ எனும் ஐயத்தில் பெண்களைப் பற்றிய காத்திரமான பதிவுகளையும் போடத் தொடங்கிட்டேன்,.
இல்லேன்னா என்னை கம்பியூட்டருக்கு முன்னாடி உட்காரா அனுமதி கொடுக்காது Out door டியூட்டிக்கு அனுப்பிடுவாங்க எல்லே.
@காட்டான்
அண்ணாத்த அது என்ன கீழ இருந்து தொடங்குறது....!!!!
எல்லோரையும் போல் மேழிருந்து வரலாமே அண்ண..!!!???//
அவர் எப்போதுமே பின் ஊட்டங்களை ரசித்துத் தான் பதிவினைப் படிப்பார் போல இருக்கும்;-)))))
@நாய்க்குட்டி மனசு
தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை "அழுகை"
உங்கள் நாட்டு பெண்களின் கண்களில் இருந்து வருவது கண்ணீரா? ரத்தமல்லவா?//
இதனை நாம நம்பனுமாக்கும்?
சின்ன வயசிலையாச்சும் நீங்க அடம் பிடித்து அழவில்லை.
எங்கள் நாட்டுப் பெண்களினைப் பெண்களாக மதிக்காது, யுத்தப் பிரதேசங்களில் வாழ்வோரில் குறிப்பிட்ட ஒரு சிலரை மாத்திரம் புணர்ச்சிப் பொருளாக நினைத்ததன் விளைவு தான் அந்த ரத்தம்.
கண்ணீர்- இரத்தம் இரண்டும் தான் எம் நாடுகளில் பெண்களால் அதிகமாகச் சிந்தப்பட்டன.
தங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றி சகோதரி.
@shanmugavel
பிற் சேர்க்கை படித்துவிட்டு கண்ணீர் வந்தால் மனிதன் என்று பொருள்.//
அது....
அவ்..அவ்...
@காட்டான்
நன்றி ஐயா.
என்னையா சொல்லி வைச்சு விளையாடுறீங்களா...
நான் பெண்களின் கண்ணீரை விட ஆண்கள் ஆற்றாமையால் விடும் கண்ணீரைதான்யா பார்கிறேன்.. இதுக்கொரு குறும்பாடு வந்து உன்ர அனுபவத்த ஏன்யா இங்கு வந்து எழுதிராய் எண்டு கேக்க போகின்றது..
அனுபவிச்சவங்களுக்குத்தான்யா அதன் வலி தெரியுமையா..ஆண்களின் கண்ணீர் ஆற்றாமையின் வெளிப்பாடு ஐய்யா..
காட்டான் குழ போட்டான்...//
ஆகா...நாம ஒன்றும் சொல்லி வைத்து விளையாடவில்லை, அவர் என் பதிவின் கருத்திற்காக வாழ்த்துச் சொல்லியிருக்க வேண்டும் என நினைக்கிறேன்,.
குறும்பாடு, உங்கள் வீட்டுக்காரம்மாவிடம் போட்டுக் கொடுக்க வேண்டும் எனும் நோக்கத்தில் உங்களை உசுப்பேத்தி விடுறார்.
ஜாக்கிரதையாக இருங்கோ.
@சேட்டைக்காரன்
பெண்களின் கண்ணீர்த்துளி விழுகிற நிலத்தில் புல்பூண்டு கூட முளைக்காது என்று விதுரர் பாரதத்தில் சொல்கிறார். என் அனுபவத்தில், அம்மாவின் கண்களில் கண்ணீர் பார்த்தால், வாழ்க்கையின் குறிக்கோளே தோல்வியடைந்து விட்டதோ என்று கிலி ஏற்படும்.//
ஆமாம் சகோதரா....அர்த்தமற்ற வகையில் தான் பெண்கள் கண்ணீர் சிந்துகிறார்களா? என்று தான் எண்ணத் தோன்றுகிறது,
பெண்கள் கண்ணீர் சிந்தாமல் காரியங்களைச் சாதிக்க முடியாதா என்பது தான் என் கேள்வி.
@Mohamed Faaique
பொதுவாக பெண்கள் எதையும் நேராக பேசாமல் சுற்றி வளைத்து பேசுவார்கள்..
அதேபோல்தான் கண்ணீரையும் சில விடயங்களை சாதிக்க பாவிப்பர்.//
எங்கேயோ ஓவரா நொந்திருக்கிறீங்க போல இருக்கே;-)))
வாங்கோ சகோதரா,
தங்களின் முத்தான முதல் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி.
@vanathy
நிரூ, நான் எதுக்கும் அழுவதில்லை. கண்ணீரால் தான் காரியம் சாதிக்க வேண்டிய அவசியம் எனக்கிருந்ததில்லை. எதுவா இருந்தாலும் ( விருப்பமான பொருட்கள் ) கேட்டு வாங்கி கொள்வேன்( பெரும்பாலும் நான் கேட்காமலே என் கணவர் எல்லாவற்றையும் வாங்கி கொடுத்து விடுவார்). இந்தக் காலத்தில் அழுது காரியம் சாதிக்கும் பெண்கள் இருக்கிறார்களா?//
ஆகா...கேட்கவே சந்தோசமாக இருக்கு அக்காச்சி,
இப்படியே காலம் பூராகவும் வாழ வாழ்த்துக்கள்.
ஆனால்....உங்கள் துணைவரைப் போன்று கேட்டவுடன் வாங்கிக் கொடுக்கும் கணவன் எல்லோருக்கும் கிடைக்க வேண்டுமே?
ஆம்...இந்தக் காலத்தில் நகர்ப்புறங்களில் குறைவு...சேஞ் ஆகிக் கொண்டு வருகிறார்கள். ஆனால் கிராமப் புறங்களில் இன்றும் இதே மாதிரியான அழுகையினை வைத்துச் சாதிக்கும் பண்பில் பலர் இருக்கிறார்கள்.
ஆப்பிசுகளில், பள்ளிக்கூடங்களில் சில பிரச்சினைகள் எழுகின்ற போது அழுகையினை வைத்துத் தமக்குச் சாதகமாக கருத்துக்களைத் திசை திருப்பும் குணம் கொண்ட பெண்கள் இன்று எல்லா இடமும் இருக்கிறார்களே,
இவர்களின் குணம் பற்றி உங்கள் கருத்து என்ன?
@காட்டான்
vanathyஅம்மாவின் கருத்தை பாருங்கோயா பெண்கள் அழுவதில்லையாமப்பு அதுதானே எல்லாத்தையும் சேர்த்து ஆண்கள் அழுகிறார்களே..
அது என்னப்பு தமிழமணத்தில் மைனஸ் ஓட்டு போட்டுத்தள்ளுகிறார்கள்... காட்டான் ஒழுங்காதான் ஓட்டு போடுகிறானோ என்று செகபண்ணி சொல்லு மாப்பிள...?????//
அவ்....உங்கடை அனுபவத்தையும் இப்படி ஓப்பினாகச் சொல்லிட்டீங்களே காட்டான்.
மைனஸ் ஓட்டு இந்தப் பதிவிற்கு இன்னமும் வரவில்லை அண்ணாச்சி.
@மகேந்திரன்
இலக்கணமேவும்
இனிய உரையாடல்..
காலம்காலம் தொட்டு
இதை வாதிடாதவர்கள் இல்லை...
ஆயினும் இந்த தலைப்பை தொடுவதற்கே
ஒரு துணிச்சல் வேண்டும்..//
நீங்கள் இப்படிப் பாராட்டு மழை பொழியிறீங்க. தலைப்பில் ஒரு துளி பிசகு என்றாலும், மன்னிப்புக் கேட்கப் போவது நான் தானே...
நன்றி அண்ணாச்சி.
@மகேந்திரன்
என்னைப்பொருத்தவரையில் பெண்களின் கண்ணீர் ஆயுதமே ...
அதிலும் மனம் இலகியவர் எதிர்நின்றால் அவர்நிலை சமாதிதான்...
வேஷம் என்பது இதில் சிறிதும் இல்லை...
வஞ்சக எண்ணம் கொண்ட பெண்களாக இருப்பினும் அது கூர்முனை
ஆயுதமாகவே உருவெடுக்கும்.//
ஆகா....இந்தக் கருத்திற்கான மாற்றுக் கருத்தினை யாராவது வைத்திருப்பின் அவர்கள் முன் வரவும்.
பெண்களின் கண்ணீர் சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற் போல ஆயுதமாகவும்,
செல்லச் சிணுங்கலாக மாறுகின்ற போது-- ஒரு வேஷம் போடப்பட்ட நாடகமாகவும் தான் பல இடங்களில் வந்து போகின்றது.
@சென்னை பித்தன்
சாந்தோம் கடற்கரையில் அன்று அவள் உதிர்த்த கண்ணீர் நிச்சயமாய் வேஷமல்ல!
அவள் வேதனையின் வெளிப்பாடு!
என்னைக் காயப்படுத்தவேண்டும் என்ற நினைப்பின்றி அவள் எய்த ஆயுதம்!
காயம் இன்று வரை ஆறவில்லையே!
காதலியின் கண்ணீர் என்றும் வேஷமில்லை!
மனைவியின் சாதுர்யக் கண்ணீர்?!//
அனுபவசாலி ஐயாவே, என்னிடம் கேள்வி கேட்கிறார், இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீங்க?
////மனைவியின் சாதுர்யக் கண்ணீர்...
அவர் கண்ணீர் சிந்தும் நோக்கத்தினைப் பொறுத்துத் தான் அமையும் என்று நினைக்கிறேன்.
@Chitra
பெண்களில் பலர் அப்படி இருக்கலாமோ என்னவோ? எல்லா பெண்களின் நடவடிக்கையாக எடுத்துக் கொள்ள முடியாது.
I remember reading one quote: "women at least have the luxury of crying and men don't." ha,ha,ha,ha,ha...
Your post was interesting to read.
Whenever you have time, read this post: (not mine)
http://sofiastry.wordpress.com/2011/06/15/why-dont-men-cry///
Thanks for your nice comment.
//I remember reading one quote: "women at least have the luxury of crying and men don't." ha,ha,ha,ha,ha...//
I totally agree with that, that's what i mentioned, Women tears is very power full and also it's could be a beauty of women.
//Whenever you have time, read this post: (not mine) //
Not a problem, I will have a look, after i finished my this debate.
Thanks for sharing with me those links.
@Reverie
நான் எப்பவுமே லேட்...இருந்தாலும் என் வாழ்த்துக்களை பிடியுங்கள் நிரூபன்...//
நீங்க லேட் இல்லை, சரியான டைம்மில் தான் வந்திருக்கிறீங்க. இப்போ தான் பதிவு சூடாக ஆரம்பித்திருக்கிறது,
உங்கள் கருத்துக்களையும் சொல்லியிருக்கலாமே.
@athira
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் உப்பூடி டபுக் கெனக் கேள்வியைக் கேட்டால் எப்பூடியாம் பதில் சொல்றது?:)) கொஞ்சம் யோசிக்கவெல்லோ வேணும்...
நிரூபன்... ஏன் உங்களுக்கு இப்படி விபரீதமான பதிவெல்லாம் போட வருது?:))))... சரி அதை விடுங்க விஷயத்துக்கு வருவம்ம்ம்ம்....//
இதெல்லாம் யோசித்துச் சொல்லும் ஆராய்சி விஷயம் இல்லை அக்காச்சி,
அவ்....அவ்....
விபரீதமான பதிவு போட்டால் தானே, படிக்கவும் புதுசா இருக்கும், எப்பவும் ஒரே மாதிரிப் பதிவு போடக் கூடாதில்லே.
அதான் ஒரு சின்னச் சேஞ்.
@athira
கண்ணீர் என்பதும் ஒருவித உணர்வுதானே? அதை நீலிக் கண்ணீர் என எப்படிச் சொல்வது, அது தானா வருவதுதானே? சிலரால் அடக்க முடியுது சிலரால் முடிவதில்லை அவ்வளவுதான், பெண்கள் எப்பவுமே சென்சிட்டிவ்வானவர்கள்(ஆண்களோடு ஒப்பிடுகையில்).. அதனால் மனம் இலகுவில் இளகிவிடும்... அது கண்ணீராக வெளிப்படலாம்./
இவ் இடத்தில் நிற்க...
நீலிக் கண்ணீர் என்பது வேஷத்துடன் போடப்படும் கண்ணீர்,.
ஒரு சிறிய உதாரணம் தாரேன், அத்தோடு உங்கே எல்லாப் பெண்களையும் நான் உதாரணப்படுத்தவில்லை,
டியூசன் முடிஞ்சு போகும் போது, ஒரு பையன் பெண்ணைப் பார்த்து ஓவரா லுக்கு விட்டு, டிஷ்ரப் பண்ணும் போது, அந்தப் பெண் பெற்றோரிடம் போய்,...நேரடியாக ஒரு விடயத்தினைச் சொல்லாது..கண்ணீர் விட்டுச் சொல்லுறாவே?
அந்தக் கண்ணீருக்கு என்ன பெயர்?
அது நீலிக் கண்ணீர் இல்லையா?
@athira
சும்மா கட்டுக்கதைதான் நீலிக் கண்ணீர் என்பது. என் பிள்ளைகள் அழுதால் எனக்கும் கண்ணால் தண்ணி வரும்... அதை என்னால் கட்டுப்படுத்த முடிவதில்லை... அதேபோல... ஒரு மிருகமோ பறவையோ... ஏதும் உபாதைக்குள்ளாகி கத்தினால்... கண் கலங்கும்...//
அவ்...பிள்ளைகள் அழும் போது வரும் கண்ணீர் பாசத்தின் அடிப்படையில் வருவது,
ஆனால் ஒருவர் மீது அபாண்டமாகப் பழி சுமத்தி அதனை நிரூபிக்கும் நோக்கில் ஒரு வகையான நடிப்போடு போடப்படும் கண்ணீர் எந்த வகையானது?
நீலிக் கண்ணீர் தானே?
@athira
அதுமட்டுமில்லை, ஆராவது என்னைப்பற்றியோ அல்லது கணவர் குழந்தைகள் பற்றியோ, நல்ல விதமாகச் சொன்னால், உடனே எனக்கு கண்ணால் தண்ணி வந்திடும்...//
இது ஆனந்தக் கண்ணீர், எல்லோருக்கும் பொதுவானது, ஒரு படைப்பாளி பலர் முன்னிணையில் வைத்துக் கௌரவிக்கப்படும் போதும், மேடையில் அவன் கண்களில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்துமே...
அது தான் இது.
நிரூபன்...இதோ சில கண்ணீர் வகைகள்...
எம்ஜியார் இறுதி ஊர்வலத்தில் ஜெவை அமரர் ஊர்தியில் இருந்து தள்ளிவிட்டதற்க்கு அவர் வடித்த கண்ணீர் அதிமுகவின் தலைவியாக்கிவிட்டது.
கனி ஜெயிலுக்கு போனதற்க்கு கருனாநிதி வடிக்கும் கண்ணீர் தமிழர்களிடம்..ஏன் திமுகவினரிடம் கூட எந்த சலனத்தையையும் ஏற்படுத்தவில்லை.
ஈழத்தமிழர்களுக்காக திருமா,ராமதாஸ் வடிக்கும் கண்ணீர் மிகுந்த நகைச்சுவையை ஏற்ப்படுத்தி வருகிறது.
சமச்சீர் கல்விக்காக பெற்றோர் வடிக்கும் கண்ணீர்...
உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்க்கு மரண அடி கொடுக்கும்.
@athira
இதெல்லாம் இயற்கையாக வருவதுதானே... ஒவ்வொருவரின் இதயத்தில் பலத்தைப் பொறுத்து, சிலரால் கவலையை/சந்தோஷத்தை உள்ளடக்க முடியுது, சிலரால் முடிவதில்லை.... இதில் முக்கால்வாசிப் பெண்களாலும் முடிவதில்லை.//
ம்...ஏற்றுக் கொள்கிறேன். பெண்கள் மனம் விட்டு அழுதால் கவலை போகும் என்பதற்காகவும் கண்ணீரினைப் பாவிக்கிறார்கள்.
ஆனால்...வீட்டில் எல்லாவிதமான காரியங்களையும் நிறைவேற்றிக் கொள்ள இந்தக் கண்ணீர் அவசியமா?
‘நான் அம்மா வீட்டில் இருக்கும் போது இப்படியெல்லாம் இல்லை,
என்றைக்கு உங்களைக் கட்டினேனோ,
என் சந்தோசம் எல்லாம் போச்சு?
புதுசா வந்த Eye Brow, புதுசா வந்த முகப் பூச்சுக் கிரீம் எல்லாம் வாங்கித் தாரன் வாங்கித் தாரேன் என்று எத்தினை நாளைக்குத் தான் என்னை ஏமாத்துவீங்க?
இப்பவே இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்,.
இப்பவே நான் என் அம்மாவீட்டிற்கு கிளம்புறேன்’’
எனும் உணர்வோடு சிந்தப்படும் கண்ணீருக்கு என்ன பதில்?
இதற்கு மாற்று வழி ஏதும் இல்லையா?
@athira
நான் அழுதால் என் நண்பிகளும் கண்கலங்குவதை நான் பார்த்திருக்கிறேன். ஆனா ஆண்களுக்கு கவலை இல்லாமலில்லை, அவர்களால் கட்டுப்படுத்த முடிகிறது, அதே நேரம் அவர்களின் முகத்தைப் பார்த்தால் தெரியும் கவலை. ஆண்கள் அனைத்தையும் உள்ளே அடக்குவதால்தானே அவர்களுக்கு கார்ட் அட்டாக் அதிகம், பெண்கள் அழுவதினால்... இதயத்தாக்கம் குறைவு என ஆய்வுகளில் கண்டு பிடித்திருக்கிறார்கள். //
நீங்கள் அழுவதைப் பார்த்து நண்பிகள் அழுவது- அனுதாபக் கண்ணீர் அல்லது இரக்கக் கண்ணீர்.
ஆண்கள் கவலைகளை மறந்து வாழ நினைக்கிறார்கள், அதனால் தான் எல்லா விடயங்களையும் மனசிற்குள் பொத்திப் பூட்டி வாழ்கிறார்கள்.
ஆண்களால் பெண்களின் மனதினைப் போல நீண்ட காலத்திற்கு கவலைத் தாங்கி நடை போட முடியாது.
அது இயற்கை கொடுத்த வரம்!
இது எப்பூடி?
@athira
இன்னுமொன்று... ஆண்பிள்ளை அழக்கூடாதென அன்று தொட்டுச் சொல்லிச் சொல்லியே... அவர்களை கார்ட் அட்டாக்குக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கிறார்கள்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).
பெண்கள் அழும்போது இரங்குவதும் இரங்காததும்கூட ஆண்களின் இதயத்தைப் பொறுத்ததே...//
இது ரொம்ப ஒவர்.
இருந்தாலும் அக்காச்சி, மனிதாபிமானம் உள்ள 98% வீதமான ஆண்கள் தம்மிடம் இருக்கும் பொருளாதாரத்தினை அடிப்படையாக வைத்துக் கண்டிப்பாக இரங்குவார்கள்.
பொருளாதாரச் சிக்கல்கள் மூலம் மனைவிக்குரிய பொருட்களை வாங்கிக் கொடுக்க முடியாதோர் தான் இரங்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
@மாய உலகம்
athira said...
//பெண்கள் எப்பவுமே சென்சிட்டிவ்வானவர்கள்(ஆண்களோடு ஒப்பிடுகையில்).. அதனால் மனம் இலகுவில் இளகிவிடும்... அது கண்ணீராக வெளிப்படலாம்.//
பெண்களோடு ஒப்பிடுகையில் ஆண்கள் இலகுவானவர்கள்... பெண்களின் கண்ணீரில் ஆண்கள் கசிந்துவிடுவார்கள்//
அவ்....அக்காச்சி, இதுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க?
@மாய உலகம்
ஆனந்த கண்ணீர் - சோக கண்ணீர் - நீலிக்கண்ணீர் - கோபக்கண்ணீர் என பல வகை உள்ளன... இதில் எந்த வகையானாலும் ஆண்கள் பாவம் இளகிவிடுவார்கள்... ஏமாந்தே பழக்கப்பட்டவய்ங்க..ஹி ஹி ஹி//
ஆண்கள் ஏமாந்து பழக்கப்பட்டவர்கள் ஓக்கே,
ஆனால் கண்ணீரை வைத்துத் தான் சாதிக்க வேண்டுமா?
ஏன் கண்ணீரை உணர்வுகளை வெளிப்படுத்தும் ஊடகமாக நாம் கையாண்டு எம் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் சகோ?
@மாய உலகம்
நல்ல பெண்களின் கண்ணீரை பார்த்து ஆனந்தப்படும் ஆண்கள்... மனிதர்களே அல்ல காட்டுமிராண்டிகள்..அவர்கள் தண்டிக்கபடவேண்டியவர்களே... நல்ல பயனுள்ள விவாத பகிர்வு நன்றி சகோ//
நன்றி சகோதரம்,
@பிரணவன்
கண்ணீர் அன்புடன் கலக்கையில் காதலாகின்றது. . .
கண்ணீர் பிறர் வேதனைக்காக வழியும்பொழுது அர்த்தமுள்ளதாகின்றது. . .கண்ணீர் ஆயுதம் மட்டுமல்ல, அன்பின் வெளிப்பாடும் கூட. . . நன்றி சகா. . //
கண்ணீர் ஆயுதம் என்பதும் ஓக்கே, அன்பின் வெளிப்பாடு என்பதும் ஓக்கே பாஸ்,
ஆனால் கண்ணீர் வேஷம் என்றும், தம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள எய்யப்படும் அம்பாகவும் பயன்படுத்தபடுகிறதே.
அதற்கான காரணம் என்ன சகோதரா?
@ஹேமா
உந்தப் பெடி நிரூ சும்மா இருக்கமாட்டான்போல.யாரையாவது கிண்டிக் கிளறிக்
கொண்டேயிருக்கிறான்.பெரியவை சொன்னவையாமெல்லோ.அவருக்கு அனுபவம் எண்டு சொன்னா என்னவாம்.வீட்ல என்னமோ அழுகைக் கச்சேரி நடக்குதுபோல சொல்லி அழ இவருக்கு ஆளில்லைப்போல.அதான் இணையத்தில எல்லாரையும் கூப்பிட எல்லாருமெல்லோ சேர்ந்து அழுகினம் பெண்பிள்ளைகளைத் தவிர !//
ஏன்,..எனக்கு அனுபவம் என்று சொல்ல....ஆள் வீட்டில் இருக்க வேண்டுமே?
கலியாணம் ஆகியியெல்லே இருக்க வேண்டும் அக்காச்சி,
காதல் தோல்வி என்றா இணையத்தில் கூப்பிட்டுக் கச்சேரி வைக்கிறேன்.
இப்பத் தான் விதானையாரின் பொட்டைக்கு ரூட்டு விட்டு லவ்சு விடத் தொடங்கியிருக்கேன், எங்கள் காதல் பயங்கர ஸ்ரோங்....
அவ்....அவ்வ்...
@ஹேமா
எல்லாரின்ர பின்னூட்டங்களும் வாசிச்சனான்.எல்லாரையும் கவனிச்சுக்கொள்றன்.முக்கியமா,
கந்தசாமி,கவிக்கிழவர்,யோகா,
காட்டான்.இருங்கோ இருங்கோ நீங்கள் எல்லாரும்.கவிக்கிழவர் அடுக்கடுக்கா அடுக்கியெல்லோ சொல்லியிருக்கிறார்.இனிக் காதல் கவிதை எழுதட்டும் வாறன் !//
அப்ப அவைக்கு இனிமேல் ஆப்பு என்று சொல்ல வாறீங்க.
அவ்.....பாவம் பசங்கள்.
@ஹேமா
நிரூ....எல்லாப் பெண்களும் அழுகிறண்டு இல்ல.இயல்பாகவே மென்மையானவர்களாதலால் பயந்த சுபாவம் உள்ளவர்கள் உடனடியாக அழுதுவிடுவார்கள்.வீட்டில் இருப்பவர்களின் மனநிலை அறிந்தே காரியம் சாதிக்க அழுது பார்ப்பார்கள்.இங்கதான் நீலிக்கண்ணீர் வரும்.ஆனால் எல்லா வீட்லயும் பருப்பு அவியாது.//
அவ்.....
நான் கேட்பது சில இடங்களில் பெண்கள் ப்ளான் பண்ணி அழுவது போன்று அழுகிறார்களே, அதற்கான காரணம் என்ன?
பெண்கள் அழுகை மூலம் அலுவலகங்களிலும், பாடசாலைகளிலும் அனுதாபத்தினைப் பெற்றுக் கொள்வதில்லையா?
@ஹேமா
வேதனைகளை,காட்டமான வார்த்தைகளைத் தாங்கமுடியாததாலும் அழுவார்கள்.
ஆனால் எல்லாரும் இல்லை.
வாழ்வின் அனுபவம்,உறவுகளை சமூகத்தை புரிந்துகொண்டால் அழத் தேவையே இல்லை.பெண்களின் பலஹீனம்தான் கண்ணீர்.சில இடங்களில் பலம் !//
அப்படியென்றால் பெண்களின் ஆயுதம் கண்ணீர் இல்லை என்று சொல்ல வாறீங்களா?
@பூங்கோதை
எதுக்கு நிரூபன் அவருக்கு எதிரா சங்கத்தை கூட்டுறீங்க..?? பாவம் விட்டிடுங்க.. ஆனால் ஒன்றை அவர் மறந்திட்டார்.அந்த இரண்டு சந்தர்ப்பத்துக்கும் முன்னாடி அநீதி நடந்ததால் தான் கண்ணகியும் பாஞ்சாலியும் கொதிக்க நேர்ந்தது...(அது கண்ணீரால் அல்ல... அந்த ஆயுதத்துக்கு அப்புறம் வந்த கோபம்) இப்பிடி அநீதியைக் கண்டு அந்தக் காலத்தில ஆண்கள் யாராவது கொதிச்சிருக்கிறாங்களா?
நல்ல படைப்பு நிரூபன் வாழ்த்துக்கள்//
ஐயோ...அக்காச்சி...அவரை இப்படித் தூண்டி விட்டால்...விவாதம் சூடாகப் போகுமே எனும் நோக்கத்தில் தான் இப்படிச் சொன்னேன்,
வாழ்த்துக்களுக்கு நன்றி அக்காச்சி.
@ஆகுலன்
கொஞ்சம் லேட்டா வந்துடன்..இருந்தாலும்..பதிவு சூப்பர்..
என்னிடமும் யாரும் அழுதால் விட்டு கொடுத்து விடுவேன்..(நல்ல மனம் பாருங்கோ)//
அடப் பாவி...லேட்டா வந்துட்டு, அழுதுடுவேன் என்று சொல்லுறீங்களே,.
அப்போ உங்களுக்கு நல்ல இரக்க மனம் இருக்கிறது தானே.
எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கோ.
@ஆகுலன்
கொஞ்சம் லேட்டா வந்துடன்..இருந்தாலும்..பதிவு சூப்பர்..
என்னிடமும் யாரும் அழுதால் விட்டு கொடுத்து விடுவேன்..(நல்ல மனம் பாருங்கோ)//
அடப் பாவி...லேட்டா வந்துட்டு, அழுதுடுவேன் என்று சொல்லுறீங்களே,.
அப்போ உங்களுக்கு நல்ல இரக்க மனம் இருக்கிறது தானே.
எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கோ.
@பூங்கோதை
நாம அழுறதுக்கு முன்னாடியே சரியா நடந்துக்கலாமில்ல? கண்ணீரை கத்தி மாதிரி காட்டினா தானே மிரள்றீங்க...அப்புறம் அந்த செல்லச் சிணுங்கல்... அது நல்லா இருக்குதுண்ணு நீங்க தானே சார் ரசிக்கிறீங்க...//
அது சரி தான், ஆனால் ஒரு மாசத்திலை நான்கு புதுப் புடவை, நான்கு வளையல்...ஆறு சோடி டிசைனான தோடு எல்லாம் வேண்டும் என்று கண்ணீரை அஸ்திரமாக்கி அழுதால் ஆண்கள் எங்கே போவது?
செல்லச் சிணுங்கலை எல்லா இடமும், எல்லா நேரத்திலும் ரசிக்க முடியாதென்று அழும் வலையுலக ஆண்களின் மன உணர்வினைத் தானே இந்தப் பதிவில் கொட்டித் தீர்த்திருக்கேன்.
@கார்த்தி
என்ன சொல்ல வாறீங்கள்? நான் அழலாமா இல்லையா? கண்ணீர்விட்டு அழலாமா? கண்ணீர் விடாம அழலாமா?//
அடப் பாவி....கொஞ்சம் பிரயோசனமா ஏதாச்சும் சொல்லாமில்லே.
இப்படிச் சொல்லிட்டு எஸ் ஆகுதல் நியாயமா?
@கந்தசாமி.
எதுக்கு நிரூபன் அவருக்கு எதிரா சங்கத்தை கூட்டுறீங்க..?? பாவம் விட்டிடுங்க.. ஆனால் ஒன்றை அவர் மறந்திட்டார்.அந்த இரண்டு சந்தர்ப்பத்துக்கும் முன்னாடி அநீதி நடந்ததால் தான் கண்ணகியும் பாஞ்சாலியும் கொதிக்க நேர்ந்தது./// சகோதரி, பாண்டிய மன்னன் செய்த தவறுக்காக அந்த மாநகரையே அழிப்பது எந்த விதத்தில் நியாயம், மன்னன் செய்த தவறுக்கு தண்டனை மக்களுக்கா??' இந்த விடயத்தில் கண்ணகி செய்தது தவறு தான் என்று அடிச்சு சொல்லுவேன்...//
அப்பாடா...நான் எஸ் ஆகிட்டேன்.
நீங்க நன்றாக மோதுங்க.
நான் வழி விடுறேன்;-)))))
@கந்தசாமி.
///இப்பிடி அநீதியைக் கண்டு அந்தக் காலத்தில ஆண்கள் யாராவது கொதிச்சிருக்கிறாங்களா?/// சகோதரி, பசுவுக்காக தன் மகனை பலி கொடுக்க முன்வந்த மனுநீதி சோழனில் இருந்து ,சோ குவேர வரை தொடர்கிறது..//
இந்த லிஸ்ட்டில் நீங்கள் முக்கியமான ஒருவரையும் சேர்த்திருக்கலாம்.
ஆனாலும் வெள்ளைவானுக்குப் பயந்து பெயர் சுட்டாமல் விட்டு விட்டீங்களோ தெரியாது.
@கந்தசாமி.
அடிக்கடி வரும் கண்ணீரை விட எப்போவாவது இருந்திட்டு வரும் கண்ணீருக்கு வலிமை அதிகம்..)//
சபாஷ் மச்சி...அடிக்கடி வரும் கண்ணீரால் தானே பிரச்சினையே இருக்கிற்து?
@Yoga.s.FR
அதிகாரங்கள் என்று எதனைக் கேட்கிறீர்கள்,நிரூபன்?தம் வழிக்கு வரவைக்க.................சாம,தான,பேத,தண்டங்களுக்கு மசியா விட்டால்?????????????//
வீட்டில் அதிகாரத்தினை,
ஆப்பிசில் தனக்கு மேல் உள்ள மேல் அதிகாரி மீது பழி சுமத்தி அவரின் அதிகாரத்தை...இப்படிப் பல அதிகாரங்களைச் சொல்லாம் அல்லவா.
@athira
ஹையோ... ஹையோ... 2012 இல உலகம் அழியப்போகுதாம்... அதுக்கு ஏதாவது வழி கண்டுபிடிச்சாக்கூடப் பறவாயில்லை... இன்னும் பழையதையே கிண்டிக்கொண்டிருக்கினம்ம்ம்..
நிரூபன் கெதியா வந்திடுங்க. இல்லாட்டில் 2,3 கொலை நடந்திடப்போகுது இங்க.//
வந்திட்டேன்....வந்திட்டேன்....
இப்பவும் பழைய பஞ்சாங்கத்தை வாசிச்சுக் கொண்டிருப்பது யாரு?
@Yoga.s.FR
////சீச்சீ....அப்படிச் சொல்வேனா?அது பாவமில்லையா?மனிதாபிமானமற்ற செயலில்லையா?பிறர் பழிக்கு ஆளாகலாமா?குற்ற உணர்ச்சி கொல்லுமில்லையா?(போட்டுக் குடுத்தாச்சு!காட்டான் மனைவி காட்டில் மழை!!!!!)//
அவ்.....காட்டான் இன்னைக்கு மாட்டினாரா...
நல்லதோர் சமூக சேவை செய்யும் ஐயா வாழ்க!
@காட்டான்
அண்ணாத்த உடையாத தும்புக்கட்டையெல்லாம் வாங்க வைச்சிட்டீங்க..இப என்ர மனிசியும் அண்ணாத்த என்ன புது டெக்கினிக் சொல்லப்போறார்ன்னு பார்துக்கொண்டு இருக்கிறா பப்பிளி குட்டிக்கு ஆசைப்பட்டு இப்பிடி வந்து மாட்டீட்டேனய்யா..//
அவ்...பொது இடத்தில் உங்களை இப்படிப் போட்டுக் கொடுத்திட்டாரே,
அன்ணாத்த வீட்ட எப்படி செம அடியா விழுந்திச்சு?
துட்பங்கட்டை பிஞ்சிட்டுதா?
வெட்கப்படாமல் சொல்லுங்களேன்?
அவ்......அவ்....
@காட்டான்
ஆமாய்யா அண்ணாத்த காட்டான்னா ஒரு விவசாயின்னு சொல்லி என்ர பப்புளிகுட்டிய கெடுத்து வைச்சிருக்கார் இதுல நீ வேற மாப்பிள..//
அவ்....இது வேறையா....நடக்கட்டும், நடக்கட்டும்,
@சி.பி.செந்தில்குமார்
கண்ணீர் சிறந்த ஆயுதம் , பல ஆண்களை நிலை குலைய வைப்பது பெண்களின் கண்ணீரே//
ஆமாம்...ஆண்களின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவம் கண்ணீர் தான், ஆனால்...
இந்தக் கண்ணீர் வேஷமா...இல்லை ஆயுதமா?
மிகுதிக் கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
@உலக சினிமா ரசிகன்
நிரூபன்...இதோ சில கண்ணீர் வகைகள்...
எம்ஜியார் இறுதி ஊர்வலத்தில் ஜெவை அமரர் ஊர்தியில் இருந்து தள்ளிவிட்டதற்க்கு அவர் வடித்த கண்ணீர் அதிமுகவின் தலைவியாக்கிவிட்டது.
கனி ஜெயிலுக்கு போனதற்க்கு கருனாநிதி வடிக்கும் கண்ணீர் தமிழர்களிடம்..ஏன் திமுகவினரிடம் கூட எந்த சலனத்தையையும் ஏற்படுத்தவில்லை.
ஈழத்தமிழர்களுக்காக திருமா,ராமதாஸ் வடிக்கும் கண்ணீர் மிகுந்த நகைச்சுவையை ஏற்ப்படுத்தி வருகிறது.
சமச்சீர் கல்விக்காக பெற்றோர் வடிக்கும் கண்ணீர்...
உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்க்கு மரண அடி கொடுக்கும்.//
அப்பாடா...இம்புட்டு வகை இருக்கா கண்ணீரில்..
நன்றாகத் தான் கூர்ந்து கவனித்துப் பகிர்ந்திருக்கிறீங்க.
நன்றி அண்ணாச்சி.
ஆர்வமுள்ளோர், எதிர்க் கருத்துக்களை- மாற்றுக் கருத்துக்களை முன் வைப்போர்; உங்கள் கருத்துக்களைப் பின்னூட்டமாக எழுதலாம். உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
@உலக சினிமா ரசிகன்
நிரூபன்...இதோ சில கண்ணீர் வகைகள்...
எம்ஜியார் இறுதி ஊர்வலத்தில் ஜெவை அமரர் ஊர்தியில் இருந்து தள்ளிவிட்டதற்க்கு அவர் வடித்த கண்ணீர் அதிமுகவின் தலைவியாக்கிவிட்டது.
கனி ஜெயிலுக்கு போனதற்க்கு கருனாநிதி வடிக்கும் கண்ணீர் தமிழர்களிடம்..ஏன் திமுகவினரிடம் கூட எந்த சலனத்தையையும் ஏற்படுத்தவில்லை.
ஈழத்தமிழர்களுக்காக திருமா,ராமதாஸ் வடிக்கும் கண்ணீர் மிகுந்த நகைச்சுவையை ஏற்ப்படுத்தி வருகிறது.
சமச்சீர் கல்விக்காக பெற்றோர் வடிக்கும் கண்ணீர்...
உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்க்கு மரண அடி கொடுக்கும்.//
சூப்பரா இருக்கே மக்கா........!!!
பெண்கள் அழுறாங்களா பாஸ்? எங்கே? எங்கே? ஸாரி பாஸ் நான் பார்த்ததில்லையா (வெகு குறைவு!) அதான்!
பெண்களால் (காதல் தோல்வியால்) அழும்/கண்கலங்கும் ஆண்களைப் பார்த்திருக்கிறேன்! பெண்கள்?...சரி வேணாம் விடுங்க..
பெண்கள் அழுதால் பெரும்பாலும் அதற்குக் காரணம் பெண்களேதான்! (அலுவலகங்களில்!)
மற்றபடி பெண்கள் நம் கண்கள்! சக்தியின் மறுவடிவம்! பெண்கள் வாழ்க! முக்கியமா ஐ லவ் பெண்கள்!! :-)
இதுக்கெல்லாம் கமெண்ட்ஸ் போட்டு பின்விளைவுகளுக்குப் பயப்படாமல் இருக்க முடியாது தலைவா.
Post a Comment