ஐயகோ, மக்களே
என்னை வாழவைத்த தமிழே,
மெய்யே நடப்பதெல்லாம்,
என் மேனி தான்
பொய்யாய் தள்ளாடுகிறதெனில், கட்சியுமா?
மொய்யாய் பிறர் பணத்தை சுருட்டி- மேன்து க
மக்கள் வாழ வழி செய்யாது, என் மக்கள்
வாழ சொத்து(ச்) சேர்த்தேன்,
சொர்க்கமாய் நடிகைகள் ஆடி மகிழ்வதை
கண்டு களிக்க டீவி தொடங்கினேன்,!
குட்டி(த்) தீவுகளில் குளிர்ச்சியாய் (நிரூபனின் நாற்று வலையிலிருந்து காப்பி)
மட்டற்ற மகிழ்ச்சியோடு பிற்காலத்தில்
வாழப் பணத்தைப் பதுக்கினேன்,
இன்றோ எல்லாம் போய் விட்டதே!
சிபிஐ கையில் என் மஞ்சள் துண்டைத் தவிர
எல்லாமே மாட்டி விட்டதே?
நடந்ததை நினைத்து கலங்குறேன் நான்,
நடிகையின் நடனத்தை ஒளிபரப்பும்
டீவியும் பறி போய் விடுமா என ஏங்குகிறேன் ஏன்? (நாற்று நிரூபனின் வலையிலிருந்து இப் பதிவினை காப்பி செய்கிறேன்)
திஹாரிலிருந்து தீந் தமிழில் ஒரு கவிதை!
(நிரூபனின் நாற்று வலையிலிருந்து காப்பி
தந்தையே, தமிழின் உருவே,
திருக்குறளுக்கு உரையளித்த
நவீன தமிழ் செம்மலே,
தெருக் கோடியில் தமிழர்கள் இறக்கையில்
தெம்மாங்குப் பாடல் கேட்டு ரசித்த
கோபாலபுரத்தின் மன்னனே!!
எனக்குள் தமிழ்ப் பால் ஊற்றி
எளிய தமிழில் கவிதை மெருகேற்றி
தமிழால் பிழைக்கும் வழியை
கற்றுத் தந்த காவியத் தலைவனே!
கலக்கல் நடனத் தாரகைகள் விரும்பும்
முன்னாள் முதல்வனே!! (வெட்கம் மானம் சூடு சுறனையின்றி நாற்றிலிருந்து காப்பி செய்கிறேன்)
நாற்பது மாடி மண்டபத்தில்
நற்றமிழில் நீ முன்னிருந்து பார்க்க
நான் சொற்பொழிவு செய்ய வேண்டுமென
கனவு கண்டேன் - சொத்துச் சேர்த்தேன்,- ஆனால்
இன்றோ என்னை நாலு சுவர்களுக்குள்
‘ஊழலில் சிக்கிய ஊமையின் தொடர் கதை என’
காவியம் எழுத வைத்து,
உன்னை நம்பிய மக்களை கழுத்தறுத்தது போல
கண்ணீரில் மூழ்க வைத்து விட்டாயே?
துணைக்கு மூன்றடி தள்ளிப் போனாலும்
முன்னாள் கட்சித் துணைவன் ராசா
தூர நின்றே பேசுவான் என்பதால்,
நான் தனித்துத் திஹாரில் நிற்கிறேன்,
தமிழில் தொடர் எழுதி
வெந்து சாகிறேன்!!(நிரூபனின் நாற்று வலையிலிருந்து காப்பி
ஸ்டாலின் கொடுக்கும் ஸ்திரத் தன்மை! (நிரூபனின் நாற்று வலையிலிருந்து காப்பி
தங்கையே தமிழ்க் கொழுந்தே,
கவலை வேண்டாம்,
கண்ணீரில் உப்பு கரிக்கும் வேளையிலும்,
செந் நீரில் துடி துடித்து;
தந்தையின் போலி(க்)
கடித ஏமாற்று வித்தையால்
காவு கொள்ளப்பட்ட
மீனவர்களை நினைவில் கொள்!!
மீண்டும் ஆட்சி பீடத்தில்
எம் குடும்ப குல மன்னன்
வருவார் என நினைத்து
வாஞ்சையோடு காத்திருந்தோம்,
ஊழல் என்ற ஒன்று வந்து எம்
ஊழ் வினைக்குச் சான்றாக,
ஊதித் தள்ளி விட்டதே!
அஞ்சற்க (வெட்கம், மானம், சுயபுத்தியேதுமின்றி காப்பி செய்கிறேன்)
எம் குல விளக்கே,
அப்பாவின் கைகளை
அவரின் முன் வினை
கட்டிப் போட்டு விட்டது,
தமிழ்(ச்) சுடரே!!
ஆனாலும் மீண்டும் எழுவார்!!
ஐந்தாண்டு காலப் பதவி
ஜந்தாகிப் போன தன்னை
எப்போது வந்து சேரும்
எனும் ஏக்கத்தில் காத்திருக்கிறார்,
கனிவு கொள் கனியே,
கோபாலபுர இனிமையின் மொழியே!!
(நிரூபனின் நாற்று வலையிலிருந்து காப்பி செய்துள்ளேன்)
தீமைகள் செய்தோம்,
தமிழை விற்று(ப்) பணமாக்கி,
தமிழர் குருதி குடிக்கையில்
துணை நின்றோம்,
தரணி எங்கும் இலவசத்தை
தமிழ்ப் பால் போல
தாரை வார்த்தோம்; - மக்கள்
பணத்தைச் சுருட்டி
மகிழ்சி பொங்க வாழ்வோம்
என நினைத்தோம், இன்றோ,
மக்கள் முன்னே மானம் காற்றில் பறக்க
அப்பாவின் மஞ்சள் துண்டால்
முகத்தை மூடி
மறைந்து வாழ்கிறோம்!!
(நிரூபனின் நாற்று வலையிலிருந்து காப்பி செய்துள்ளேன்)
இந்தப் பதிவினையும், வழமை போல, நிரூபனின் நாற்று வலைப் பதிவிலிருந்து காப்பி செய்துள்ளேன்.
|
64 Comments:
கொலைவெறிக் கவிதைகள், அனைத்தும் உண்மை. எப்படித்தான் எழுதினால் அந்த கேடுகெட்ட ஜென்மம் திருந்தாது.
நல்ல கவிதைகள். ஆனால் எப்படி இவ்வுளவு திருடினார்கள் என்றும் இது தெரியாமல் அந்த தலைவர் எப்படி இருந்தார் என்றும்தான் எனக்கு புரியவே இல்லை. ஜெயலலிதாவும், சசிகலாவும் இவர்களிடம் பிச்சை கேட்கணும் போல, திருடும் கலையில்.
மக்கள் முன்னே மானம் காற்றில் பறக்க
அப்பாவின் மஞ்சள் துண்டால்
முகத்தை மூடி
மறைந்து வாழ்கிறோம்!!\\
வேற வழி?
சும்மா விடுமா தமிழர்களின் வலி?
//சிபிஐ கையில் என் மஞ்சள் துண்டைத் தவிர
எல்லாமே மாட்டி விட்டதே?//
ஊஹும்! அப்படியெல்லாம் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வரப்படாதுண்ணேன்! :-))
//அப்பாவின் கைகளை
அவரின் முன் வினை
கட்டிப் போட்டு விட்டது,//
ரொம்பத் தன்னடக்கத்தோட சொல்லியிருக்கிறாரே? அப்பாவின் முன்வினை மட்டும்தானா? :-))
ஹி..ஹி.! :-)
Super nakkal kavithai
Kalakurenka boss
//தெருக் கோடியில் தமிழர்கள் இறக்கையில்
தெம்மாங்குப் பாடல் கேட்டு ரசித்த
கோபாலபுரத்தின் மன்னனே//
செம வரிகள் நிரூ
உங்களுக்கும் கலைஞர் குடும்பத்துக்கும் அப்படி என்ன தான் பகை? :))
- மேன்து க
மக்கள் வாழ வழி செய்யாது, என் மக்கள்
வாழ சொத்து(ச்) சேர்த்தேன்,/// அட,,
குட்டி(த்) தீவுகளில் குளிர்ச்சியாய்// அது கச்சத் தீவோ?
கலக்கல் நடனத் தாரகைகள் விரும்பும்
முன்னாள் முதல்வனே!! // ஆஹா மச்சி நீ இதையும் விட்டு வெக்கலையா?
துணைக்கு மூன்றடி தள்ளிப் போனாலும்
முன்னாள் கட்சித் துணைவன் ராசா// ஒரு ரூம்ல போட சொல்லுவாங்களோ?
இன்றோ,
மக்கள் முன்னே மானம் காற்றில் பறக்க
அப்பாவின் மஞ்சள் துண்டால்
முகத்தை மூடி
மறைந்து வாழ்கிறோம்!!// நச்..
பெருசுக்கு எதாவது ஒண்ணுன்னா நீங்கதான் பொறுப்பு ..
FOOD said...
திருந்துவார்களா?
@@@REPEAT
சாட்டையடி வார்த்தைகள்
நளினமாய் கவிதையில்
இன்னும் இவர்கள் அனுபவிக்க வேண்டியது நிறைய இருக்கிறது...
அடடா...அடடா ...கவித கவித .....கண்ண மூடிக்கிட்டு இத முரசொலில பப்ளிஷ் பண்ண கொடுக்கலாம் !
சகா நச்சென்று சொல்லிருக்கின்றீர்கள். . .
நாளைக்கே ஜெயிலுக்குப் போனதெல்லாம் சாதனையாய், தியாகமாய் காட்டி விடுவார்கள்!
இளைய தளபதி நிரூபன், உங்களுக்கும் கலைஞர் மீது என்ன கோபம் ஹிஹி...
எல்லாமே அருமை.
பார்த்தேன்-கவிதையை
படித்தேன்- முழுவதும்
இரசித்தேன்-திறமையை
விடுத்தேன்-கருத்துரை
புலவர் சா இராமாநுசம்
பார்த்தேன்-கவிதையை
படித்தேன்- முழுவதும்
இரசித்தேன்-திறமையை
விடுத்தேன்-கருத்துரை
புலவர் சா இராமாநுசம்
முத்தான மூன்று கவிதைகளை
சத்தான தமிழில் யாத்தளித்த
வித்தகரே வாழ்த்துகிறேன் யான்!
அண்ணா அருமையான கவிதை......
இலகுவாக விளங்க கூடியதாக உள்ளது...
சில நாட்களாக வலைத்தளம் பக்கம் வர முடியல்ல சகோ கொஞ்சம் பிஸி ; நகைச்சுவை இழையோட கலந்த உண்மை வரிகளில் உங்களின் ஆற்றல் வெளிப்பாடு சிறப்பு
ஹிஹிஹி கலைஞரை விடுவதாய் இல்லை போலும் தல!!!
ஸ்டாலின் கனி என்று அறுவை தொடர்கதை!!!
மச்சி அந்த கள்ள கள்ளனை தேடித் பிடியுங்கள் யாரென்று!!நான் ஷாக் ஆகிட்டேன்!!என்ன இந்த நேரம் பதிவு??
அழகிய கவிதைகள்...வாழ்த்துக்கள் நிரூபன்...
தந்தையும் மகளும் ஆட்சியிலிருக்கும்போதுதான் இம்சிச்சாங்கனு பார்த்தால், கவிதை எழுதியும் இம்சிக்குறாங்களே
நன்றாக அனுபவிக்கட்டும் நிரூ. இதெல்லாம் கொஞ்சம்.
சான்சே இல்லை..... பின்னி பெடல் எடுத்துட்டீங்க.....
//அப்பாவின் மஞ்சள் துண்டால்
முகத்தை மூடி
மறைந்து வாழ்கிறோம்//
செம நச்!
வாழ்த்துக்கள்.
சிறப்பான கவிதை, அழகிரியையும்,தயாநிதியையும் விட்டுவிட்டீர்களே!
////மொய்யாய் பிறர் பணத்தை சுருட்டி- மேன்து க
மக்கள் வாழ வழி செய்யாது, என் மக்கள்
வாழ சொத்து(ச்) சேர்த்தேன்,
சொர்க்கமாய் நடிகைகள் ஆடி மகிழ்வதை
கண்டு களிக்க டீவி தொடங்கினேன்,!/// என் இன மக்கள் சாகும் போதும் மானாட மயிலாட பார்த்து மகிழ்ந்தேன். )=(
///நாற்பது மாடி மண்டபத்தில்
நற்றமிழில் நீ முன்னிருந்து பார்க்க
நான் சொற்பொழிவு செய்ய வேண்டுமென
கனவு கண்டேன் - சொத்துச் சேர்த்தேன்,- ஆனால்
இன்றோ என்னை நாலு சுவர்களுக்குள்
‘ஊழலில் சிக்கிய ஊமையின் தொடர் கதை என’
காவியம் எழுத வைத்து,
உன்னை நம்பிய மக்களை கழுத்தறுத்தது போல
கண்ணீரில் மூழ்க வைத்து விட்டாயே?// ஹிஹி அருமை, இதை மட்டும் கனி மொழி பார்க்கணும் ..............)))
///மீண்டும் ஆட்சி பீடத்தில்
எம் குடும்ப குல மன்னன்
வருவார் என நினைத்து
வாஞ்சையோடு காத்திருந்தோம்,// அதுக்கு இன்னும் ஐஞ்சு வருஷம் சுய நினைவோடு தமிழின தலைவர் இருக்கணுமே ))
///மீண்டும் ஆட்சி பீடத்தில்
எம் குடும்ப குல மன்னன்
வருவார் என நினைத்து
வாஞ்சையோடு காத்திருந்தோம்,// அதுக்கு இன்னும் ஐஞ்சு வருஷம் சுய நினைவோடு தமிழின தலைவர் இருக்கணுமே ))
பாஸ் எனக்கொரு ஆசை, நீங்க கலைஞர் பற்றி எழுதுற கவிதை எல்லாம் தொகுத்து கலைஞர் கையிலேயே கொடுக்கணும் எண்டு ....ஹிஹி
சகோ... கொலைஞர் குடும்பத்தை ஒரு வழி பண்ணிட்டிங்களே....
உக்கிரமான கவிதைகள்..கொலைஞரை உலுக்கும் கருத்துகள்..அருமை நிரூ.
//நிகழ்வுகள் said...
பாஸ் எனக்கொரு ஆசை, நீங்க கலைஞர் பற்றி எழுதுற கவிதை எல்லாம் தொகுத்து கலைஞர் கையிலேயே கொடுக்கணும் எண்டு ....ஹிஹி//
நிரூ, கந்து பயங்கர சதித்திட்டத்தோட தான் இங்க சுத்திக்கிட்டு இருக்காரு போல.
தமிழ்மணத்தை எங்கே?
ஹா ஹா
அனல் கக்கும் கோவத்தை கூட
ஜிலு ஜிலு கவியில் சொல்லுறேல்
சபாஸ்
தாத்தாவை நீங்கள் இப்போதைக்கு விடுறதாக இல்லைப்போல்
உங்களுக்குக் கவிதை இயல்பாக வருகிறது. Keep it up :-)
ஆனாலும் கலைஞர் ரொம்பவே பாவமையா
உண்மைகளை அப்படியே அப்பட்டமா சொல்லுகிறது கவிதை
கலைஞ்சர் உரிஞ்சுபோட்டு தான் திரியனும்
கலைஞரை கடலில் தூக்கி போட்டாலும் பரவாயில்லை போல .பின்னி பெடல் எடுக்கிறீங்க
இந்த திறத்தில் கலைஞர் ஜயா ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுக்கின்றாராம்..இவரது அரசியலுக்கு நாங்கதான் கிடைச்சமா?.இந்த கலைஞர் ஜயாவுக்கு எல்லாம் தேவைதான்.
>>தீமைகள் செய்தோம்,
தமிழை விற்று(ப்) பணமாக்கி,
தமிழர் குருதி குடிக்கையில்
துணை நின்றோம்,
ஒன்றா? இரண்டா?தீமைகள்!!!!!
என் மேனி தான்
பொய்யாய் தள்ளாடுகிறதெனில், கட்சியுமா?//
மேனி பொய்யா தள்ளாடுதா.??? அப்ப கலைஞருக்கு ஜிம் பாடியா.?
கண்டு களிக்க டீவி தொடங்கினேன்,!//
யோ.. ஹிஸ்டரியே தெரியாதவன் இத எடுத்து பாத்தா கலைஞரு தான் டிவி கண்டுபிடிச்சாருன்னு நினைக்க மாட்டானா???
இதற்கு மேல் ஒரு சவுக்கடி வேண்டுமா???
பின்னி எடுத்துடீங்க...
ஏன் இந்த கொலைவெறி
என்றோ மௌனமாய் இருந்ததற்கு
இன்று வார்த்தையால் விலாசப்படுகிறாரோ கலைஞர்!!??
கலக்கல் நிரூ...
அல்லக்கைக்கும் ஆப்பு ரெடி போல் தெரிகிறதே?ஓ! சொறி,இது நேற்றைய கவிதையல்லவா?இன்றைய ஸ்பெஷல் நியூஸ்,லேட்டஸ்ட் நியூஸ் இது தான்.கவிதை வரிகள் பிரம்மாதம்!வாழ்த்துக்கள்!!!!!
கோடிக்கணக்கான தொடண்டர்களின் உழைப்பில் உருவான பேரியக்கமொன்றை தன்னுடைய குடும்ப நன்மைகளுக்கான மட்டும் பயன்படுத்திய சுயநலவாதியாகவே கருணாநிதி கண்முன் நிற்கிறார்.
பாவம் அந்த அப்பாவித் தொண்டவர்கள்.
பதிவின் கரு அருமை நிரூ. சில இடங்களில் சொற்களின் பாவனை கொஞ்சம் உறுத்துகிறது. (நண்பனாக இன்னொரு நண்பனுக்கு சொல்வது)
தி.மு. க. வை மட்டும் இப்படி நோன்றிங்களே! கடந்த இரண்டு மாதங்களாக எந்த விதமான புத்தகம் இல்லாமல் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் நிலைமை உங்கள் கண்முன் தெரியவில்லையா ?அதற்கு காரணமான இந்த அரசின் (பேய் ஆட்சி ) காழ்புணர்ச்சி உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா ?
////செங்கோவி said...
தமிழ்மணத்தை எங்கே?////
அடடா இது கூட தெரியாதா அது கொப்பி பேஸ்ட் பண்ணும் போது சேர்ந்து போயிடுச்சு....
நிரு இந்தக் குடும்பத்தைத் தான ஆங்கிலத்தில family என்றும் சிங்களத்தில் பவுல் என்றும் சொல்லவார்கள்.. நான் சொல்வது சரி தானே...
@koodal kanna
தி.மு. க. வை மட்டும் இப்படி நோன்றிங்களே! கடந்த இரண்டு மாதங்களாக எந்த விதமான புத்தகம் இல்லாமல் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் நிலைமை உங்கள் கண்முன் தெரியவில்லையா ?அதற்கு காரணமான இந்த அரசின் (பேய் ஆட்சி ) காழ்புணர்ச்சி உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா ?//
அன்பிற்குரிய சகோ,
என்னுடைய கடந்த இடுகைகளைப் பார்த்தால் தெரியும். அதிமுக பற்றியும் எழுதியுள்ளேன். அதிமுக வின் செயலால் பாதிக்கப்படும் பள்ளிக் குழந்தைகளின் நிலையினையும் எழுதியுள்ளேன். இதோ அதற்கான இணைப்பு.
http://www.thamilnattu.com/2011/08/blog-post.html
கவிதை ரொம்பவே நல்லா வருதுங்க உங்களுக்கு..
//தமிழால் பிழைக்கும் வழியை
கற்றுத் தந்த காவியத் தலைவனே!
//
இதுதாங்க சூப்பர்..
Post a Comment