மேகத் திரளிடையே
அடிக்கடி விட்டு விட்டு
பொழிகின்ற செவ்வானத் தூறல்களாய்
சீழ் கட்டிய இரத்த வாடைகள்
நிரூபனின் நாற்று வலை
தாங்குவோர் இன்றி
தத்தளிக்கும் ஈழ மக்களை
ஏந்திட
நாமிருக்கிறோம் எனும்நிரூபனின் நாற்று வலை
குரலுக்கு
ஏதும் செய்திய முடியாதோராய்
நாமிங்கு!
நேற்று முத்துக்குமார் மூட்டிய தீ
முது பெரும் விடுதலைத் தீயாய்
கனன்று மிளாசி எரிந்தது,
அதில் காங்கிரஸின் பொய்
வேடத்தை தமிழகம்
உணர்ந்து கலைஞரின்
வாழ்விற்கும்
காற் புள்ளி குத்தி
வீட்டுக்கு அனுப்பி
மகிழ்ந்திருந்தது!
நிரூபனின் நாற்று வலை
இன்று செங்கொடி அவர்கள்;
முத்துக்குமார்
வரிசையில்....
நீயும் போனாயா சகோதரி- இல்லை
உன் கண் முன்னே
காங்கிரஸின் நர்த்தன நடனத்தில்
உறவுகள் மூவர்
நசியுண்டு போவதை
பொறுக்காது
தீயில் பாய்ந்தாயா தோழி?
நிரூபனின் நாற்று வலை
ஈழ மக்கள் மீதான
இன எழுச்சித் தீ
தமிழிகத்தில்
கனன்று எரிய வேண்டும்
எனும் எண்ணத்தில் வீழ்ந்தவளே!
சிரம் தாழ்த்தி
உன் பாதம் பணிகின்றேன் அம்மா!
இன்று உன் முகம் கூட
பார்க்க முடியாதவளாய்
தீயில் கருகினாயே தோழியே
இதனையா உந்தனிடம்
எதிர்பார்த்தோம் தங்கையே?
இடி மேல் இடி பொழிந்து
நாம் இன்னலுற்ற வேளையில்
எம் துயர் துடைக்க
முத்துக்குமாரன் தீயில்
மூழ்கித் தமிழ் வீரம் உரைத்தானே
அதற்கும் நாம் என்ன
செய்வோம் என ஏங்கி
நிற்கும் வேளையிலா
நீயும் குதித்தாய்?
நிரூபனின் நாற்று வலை
நெஞ்சில் சுதந்திரத் தீ
மனதில் ஈழத் தீ
நினைவில்
பிரபாகரனியம் கற்றுத் தந்த
விடுதலைத் தீநிரூபனின் நாற்று வலை
பெரியார் வழி உணர்ந்த
பெருமை மிக்க பெண் தீ நீ
இருந்தும் வெந்தீயில்
வேகியானாயே ஏன் தோழி?
இதனையா உந்தனிடம் எதிர்பார்த்தோம்?
வெள்ளரசின் கீழிருந்து
பௌத்த வேதாந்தம் பேசும்
இனவாத அரசும்,
கைங்கரிய அரசியல் நடத்தும்
காங்கிரசும் எதிர்பார்ப்பது
தமிழர் உயிரைத் தானே?
உன் உயிரும்
அவர்கள் எதிர்பார்க்கும்
தோரணையில் போகப் போகின்றது
என்பதனை உணராது
தீயில் பாய்ந்தனையோ தோழி?
நிரூபனின் நாற்று வலை
மூன்று உயிர்களைக் காக்க
மூவாயிரம் அசுர பலம் கொண்ட
ஓருயிராய் நீ வீழ்ந்திருக்கிறாயே?
என் செய்வோம் நாம்?
உனக்காக ஏதும் செய்ய முடியாது
எட்டித் தொடும் தூரத்திலல்லவா
நாம் இருக்கின்றோம்?
கிட்ட நெருங்கி வந்து
ஒரு சேதி சொல்லிப் போயிருப்பின்
தொட்டுத் தடுத்து
உன்னை எம்
விடுதலை வேண்டிய
குடிலுக்கு தலைவியாய் அல்லவா
ஆக்கி மகிழ்ந்திருப்போம்?
இன்று எம்மை அந்தரத்தில்
அந்தரிக்க விட்டுப் போய் விட்டாயே
முகம் தெரியாத சோதரியே?
எங்கள் ஆதி மூலமே,
அன்னைத் தமிழகமே!!
மூவாயிரம் யானை பலம்
கொண்ட மன்னற்கு இவள் சமன்
மூக்கறுந்த சூர்ப்பனை போல
துடிக்கும் சோனியாவின்
பழிவாங்கும் உணர்விற்கு
பாடம் கற்பித்த தெய்வ மகள்!
எம் கண் முன்னே வரிசை கட்டி நிற்கும்
நவீன புற நானூற்றுத் தமிழ் மகள்- இவள்!
இனியுமா நீ உறங்கி இருக்கிறாய்?
உந்தன் உணர்வுகளைத் தொலைத்துமா
அமைதி காண்கிறாய்?
உன் தேசம்-நீ
எழுச்சி கொள்ள வேண்டும் என்பதற்காய்
ஒருத்தி வீழ்ந்தனளே!
அவளின் ஆத்ம ஈடேற்றத்திற்கு
என்ன பதில் கூறப் போகின்றாய் தமிழகமே?
கல்லு மனம் கொண்ட கலைஞர் கூட
சந்தர்ப்பம் பார்த்து
தன் பங்கை இப்போது உரைத்திருக்கின்றார்.
தாய்மையின் இருப்பிடம் என்று போற்றும்
உத்தமி மட்டும் இவ் விடயத்தில்
உறைந்து போய் இருக்கிறாவே என் செய்வோம்?
அரசியல்வாதிகளே,
அனல் பறக்கும் பேச்சாளர்களே!!
உசுப்பேத்தி ரணகளமாக்கி
நெருப்பாற்றில் ஓர்
உயிர் போக முன்
தடுத்திடும் வழிகளை
எம் சோதரர்க்கும் உரைக்கலாமே?
நிரூபனின் நாற்று வலை
தமிழகமே! இறப்பிற்கு இறப்பு
ஈடாகாது எனும் பண்பினை
இவள் மூலமாவது உணர்ந்து கொள்!!!!
இனியும் எமக்கு
இப்படி ஓர் செய்தி
உங்களிடமிருந்து வேண்டாம்,
கனிவாய் நல்ல சேதி
எம் காதுகளை வந்து சேரா விடினும்
செங்கொடிகள் உடலில் தீங்கில்லை
எனும் சேதி வந்தாலே
உள்ளம் குளிரும்,
உடலெங்கும் புரட்சித் தீ எழும்,
நல்லோர் நீவீர்
வல்லோராய் எமைத் தாங்குதற்கு
இருக்கின்றீர் எனும்
உணர்வில்
நம் தேகம் சிலிர்க்கும்!!
பிற் சேர்க்கை: என் வலையில் தொடர்ச்சியாக இடம் பெற்று வந்த பதிவர் அறிமுகத்தினைத் தற்போதைய தூக்குத் தண்டனையினை நிறுத்தக் கோரும் உணர்வெழுச்சிப் போராட்டங்களினைத் தொடர்ந்து, மீண்டும் இணைத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளேன்.
இப் பதிவிற்கான படங்களை ரோஜாப்பூந்தோட்டம் வலையிலிருந்து பெற்றுக் கொண்டேன்.
நன்றிகள் சகோதரன். பாரத் பாரதி.
|
80 Comments:
இனியுமா நீ உறங்கி இருக்கிறாய்?
உந்தன் உணர்வுகளைத் தொலைத்துமா
அமைதி காண்கிறாய்?
உன் தேசம்
நீ எழுச்சி கொள்ள வேண்டும் என்பதற்காய்
ஒருத்தி வீழ்ந்தனளே!
அவளின் ஆத்ம ஈடேற்றத்திற்கு
என்ன பதில் கூறப் போகின்றாய் தமிழகமே?//
உணர்வின் வேட்கை கொண்டு உணர்வுத்தீயாலே கருகிவிட்டார்!
உணர்வுகளை நெஞ்சில் மட்டும் ஏற்றுவோம்.//
நிச்சயம் பதில் கூறியே தீர வேண்டும்!
இந்த தண்டனையை தகர்த்து நம் சகோதரியின் ஆத்மா நிம்மதியடைய ஆண்டவனிடத்தில் வேண்டுகிறேன்..
அரசியல்வாதிகளே,
அனல் பறக்கும் பேச்சாளர்களே!!
உசுப்பேத்தி ரணகளமாக்கி
நெருப்பாற்றில் ஓர்
உயிர் போக முன்
தடுத்திடும் வழிகளை
எம் சோதரர்க்கும் உரைக்கலாமே?//
ஆம் தோழர்களே!இதை தியாகமென்று கூறியும்,வீரவணக்கங்கள் செலுத்தியும் ஒரு தவறான உதாரணத்தை பிறர்க்கு ஏற்படுத்திவிடாதீர்!இனியொரு முத்துக்குமாரோ!செங்கோடியோ!வீண்டாமே!மௌன அஞ்சலி செலுத்துவோம்!மொத்த உணர்வையும்
போராடுவதில் செலுத்துவோம்//
!ஏதேனும் பிழையாகப்பட்டால் மன்னிக்கவும்!
ஆன்மா சாந்தி அடைக
@கோகுல்
உணர்வின் வேட்கை கொண்டு உணர்வுத்தீயாலே கருகிவிட்டார்!
உணர்வுகளை நெஞ்சில் மட்டும் ஏற்றுவோம்.//
நிச்சயம் பதில் கூறியே தீர வேண்டும்//
நம்பிக்கையோடு காத்திருப்போம், நல்ல தீர்வு கிடைக்கும் எனும் நம்பிக்கையினைத் தளரவிடாதவர்களாய்.
@!* வேடந்தாங்கல் - கருன் *!
இந்த தண்டனையை தகர்த்து நம் சகோதரியின் ஆத்மா நிம்மதியடைய ஆண்டவனிடத்தில் வேண்டுகிறேன்..//
நன்றி சகோதரா, உங்களின் புரிந்துணர்விற்கும், உள்ளத்து உணர்வலைகளுக்கும்,
அந்தப் பெண் செய்த முட்டாள்தனத்தை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை... ஆனால் நல்ல தீர்வுக்கு நான் பிரார்த்திக்கிறேன்.
@கோகுல்
ஆம் தோழர்களே!இதை தியாகமென்று கூறியும்,வீரவணக்கங்கள் செலுத்தியும் ஒரு தவறான உதாரணத்தை பிறர்க்கு ஏற்படுத்திவிடாதீர்!இனியொரு முத்துக்குமாரோ!செங்கோடியோ!வீண்டாமே!மௌன அஞ்சலி செலுத்துவோம்!மொத்த உணர்வையும்
போராடுவதில் செலுத்துவோம்//
!ஏதேனும் பிழையாகப்பட்டால் மன்னிக்கவும்!//
ஆம் சகோதரா, இதனைத் தான் என் கவிதையிலும் வலியுறுத்திக் கூறியுள்ளேன்,
தியாகங்களை மதிக்கிறோம், ஆனால் இப்படியான உயிரிழப்புக்கள் ஏன்?
எல்லா உயிர்களும் சமம் தானே.
உணர்ச்சிமிகு தருணங்கள்...
தமிழகம் பொங்கி எழுகிறது ஆனால் முன்பெல்லாம் உணர்வுபூர்வமாகப் பொங்கி எழுந்த புலம்பெயர் சமூகம் என்ன செய்கிறது. தூக்கம் கலையவில்லையா?
வணக்கம் நிரூபன்!
@அம்பலத்தார்
தமிழகம் பொங்கி எழுகிறது ஆனால் முன்பெல்லாம் உணர்வுபூர்வமாகப் பொங்கி எழுந்த புலம்பெயர் சமூகம் என்ன செய்கிறது. தூக்கம் கலையவில்லையா?////
நண்பரே, நேற்று முன் தினம் ஃபிரான்சில் மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தப்பட்டது! ஆனால் ஏனைய நாடுகளின் நிலவரங்கள் தெரியவில்லை!
சகோதரி செங்கொடிக்கு எனது வீர வணக்கங்கள்!
தியாகத்துக்கு பேர் போனவர்கள் தமிழர்கள்
ஆனாலும் தமிழகத்து சகோதர சகோதரிகளே தயவு செய்து உங்கள் இப்படி பட்ட தியாகங்களை நிறுத்துங்கள்.இனி யாரும் இப்படி முட்டாள்தனமானசெயல்களைச்செய்ய
வேண்டாம் அமைதியான வழியில் உங்கள் எதிர்ப்பை காட்டுங்கள்.
//தமிழகமே! இறப்பிற்கு இறப்பு
ஈடாகாது எனும் பண்பினை
இவள் மூலமாவது உணர்ந்து கொள்!!//
ஒவ்வொரு வரியும் நெஞ்சில் அறைகிறது நிரூபன்.
தமிழன் தனது உணர்ச்சியை இயலாமையை இனியும் இப்படி வெளிபடுத்தலாகாது.
சகோதரியின் ஆன்மா சாந்தியடைய பிராத்திப்போம். நல்ல தீர்வு விரைவில் கிட்டும்...நம்புவோம்.
பல வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த புரட்சிப்பாடல் ஒன்றின் வரிகள், தற்போதைய சூழலுக்கு பொருந்திப்போவதைப் பாருங்கள்!
” செவ்வானம் சிவந்ததும் ஏன் - ஒரு
செங்கொடியை நினைப்பதற்கே!
செங்கொடியின் மத்தியிலே - ஒரு
சிறுத்தை ஒன்று சிரித்ததிங்கே!”
நிரூ, வேலைக்குச் செல்கிறேன்! பின்னர் வருகிறேன்!
எல்லாம் வாசித்தேன் சகோதரனே!
வேதா. இலங்காதிலகம்.
உண்மைதான் நிரூபன்.. நாங்களே அந்த மூன்று உயிர்களும் காப்பாற்றப்பட வேண்டும் என கவலைப்படும் இன்நேரம் சகோதரி செங்கொடியின் செயலை ஆதரிக்கக் கூடாது.. உணர்வு மிக்க செங்கொடிகளே முத்துக்குமாரர்களே.. உங்கள் உயிர்களை மாய்காதீர்கள்.. போராட்டத்திற்கு வேறு வழிகள் இருக்கின்றன.. எங்கள் சொந்தங்களின் உயிரை எடுக்க யாருக்குமே உரிமையில்லை உங்களுக்கும் கூட..
சகோ போராட்டத்தின் முதல் வெற்றி... முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை 8 வாரத்துக்கு நிறுத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டள்ள்னர்.... நன்றி
நீயும் போனாயா சகோதரி- இல்லை
உன் கண் முன்னே
காங்கிரஸின் நர்த்தன நடனத்தில்
உறவுகள் மூவர்
நசியுண்டு போவதை
பொறுக்காது
தீயில் பாய்ந்தாயா தோழி?//
கொஞ்சம் பொருத்திருக்கலாமே சகோதரி... கையாளாகமல் இருந்துவிட்ட எங்களை பொருத்தருள்வாய் சகோதரி
இதோ கண்முன்
காணாமல் போனாயே
காத்திருந்த எமனை
தானாக கூப்பிட்டாயே
ஏன் சகோதரி
உனக்கிந்த பதட்டம்.....
நெஞ்சம் பதறுகிறது அம்மா..
உன் நிழற்படம் காண்கையிலே ....
உன் இழப்பிற்கு
ஓர் நிர்மலம் கிடைக்கட்டும்..
நல்லதொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது சட்டசபையில்.
நம்பிக்கை வைப்போம்.
//இதனையா உந்தனிடம் எதிர்பார்த்தோம்?
வெள்ளரசின் கீழிருந்து
பௌத்த வேதாந்தம் பேசும்
இனவாத அரசும்,
கைங்கரிய அரசியல் நடத்தும்
காங்கிரசும் எதிர்பார்ப்பது
தமிழர் உயிரைத் தானே?/// உண்மை தான், இவ்வாறான காரியங்களை தயவு செய்து பின்பற்றாதீர்கள்.
சகோதரிக்கு என் அஞ்சலிகளும் வணக்கங்களும். அவர் தம் நோக்கம் நிறைவேற பிரார்த்திக்கிறேன்.
மனசுக்கு கஷ்டமான விடயம்
செங்கொடி ஆன்மா குளிரும் வகையில் முதல் வெற்றி நீதிமன்றத்தில் கிடைத்திருக்கிறது...நண்பா
wait for good news
I pray to god for her soul
I pray to god for her soul
I pray to god for her soul
அவரது ஆன்மா சாந்தியடையட்டும்..இனியாவது நம் மக்கள் இத்தகைய உணர்ச்சிவசப்படலை நிறுத்தட்டும்.
தண்டனை நிறுத்திவைப்பு என்ற நல்ல தகவல் வந்துவிட்டது..தொடர்ந்தும் நல்லதே நடக்கட்டும்.
இன்று நீதிமன்றதீர்ப்பு,சட்டசபை தீர்மானம் என இரண்டு நல்ல செய்தி கிடத்துள்ளது.நம் நம்பிக்கை வீண் போகாது.நல்லதே நடக்கும்.
வேதனை நிறைந்த செயல் அந்த சகோதரி செய்தது உசுப்பேர்த்தும் அரசியல் வாதிகள் இதை ஊக்கிவிக்கக் கூடாது இனியும் ஒரு தூர்மரணம் வேண்டாம்!
அழகாய் ஆழமான கவிதையை பதிவு செய்துள்ளீர்கள் சகோ!
சகோதரி செங்கொடியின் ஆத்மா சாந்தியடையட்டும்! வீரவணக்கங்கள்!
//நெஞ்சில் சுதந்திரத் தீ
மனதில் ஈழத் தீ
நினைவில்
பிரபாகரனியம் கற்றுத் தந்த
விடுதலைத் தீநிரூபனின் நாற்று வலை
பெரியார் வழி உணர்ந்த
பெருமை மிக்க பெண் தீ நீ
இருந்தும் வெந்தீயில்
வேகியானாயே ஏன் தோழி?//
கவிதைக்கு நன்றி தோழா.. மனம் இன்னும் அழுதுகொண்டேதான் இருக்கிறது..
ஒன்றிணைந்த போராட்டங்கள் பலன் தெரிகிறது. இப்பொழுது ஒர் சற்றே ஆறுதல் தரும் செய்தி வெளியாகி இருக்கிறது. நீதிமன்றம் மரண தண்டனையை நிறைவேற்றுவதைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.அத்துடன் தமிழ்நாடு சட்டச்பையிலும் முதல்வர் ஜெயல்லிதா அம்மையார் இம்மூவருக்கும் ஆதரவாகப் பிரேரணை நிறைவேற்றியுள்ளார். மாறுதல் தெரிகிறது
சகோதரியின் எண்ணம் இப்போது நிறைவேறி விட்ட வேளையிலும்
அதை பார்க்க அவர் இல்லையே என்பதுதான் மிக மிக வேதனை அளிக்குது
அவர் ஆத்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகள்
//நேற்று முத்துக்குமார் மூட்டிய தீ
முது பெரும் விடுதலைத் தீயாய்
கனன்று மிளாசி எரிந்தது,
அதில் காங்கிரஸின் பொய்
வேடத்தை தமிழகம்
உணர்ந்து கலைஞரின்
வாழ்விற்கும்
காற் புள்ளி குத்தி
வீட்டுக்கு அனுப்பி
மகிழ்ந்திருந்தது!
//
சத்திய உண்மைகள்....
//ஈழ மக்கள் மீதான
இன எழுச்சித் தீ
தமிழிகத்தில்
கனன்று எரிய வேண்டும்
எனும் எண்ணத்தில் வீழ்ந்தவளே!
சிரம் தாழ்த்தி
உன் பாதம் பணிகின்றேன் அம்மா!//
அவர் எண்ணம் நிறைவேற வேண்டும்........
சகோதரியின் செய்கையை ஆதரிக்க முடியாவிட்டாலும்
அவரின் தியாகத்தை தலைவணங்கி செல்கிறது உங்கள் பதிவு.....
நிருபன் உங்கள் என்ன ஓட்டமே எம் என்னோட்டமும்....
இந்திய அரசு மக்களிடம் நாடகம் ஆடி வருகிறது இவர்களிடம் நமக்கு நியாயம் கிடைக்காது தோழரே....
இறப்பிற்கு இறப்பு
ஈடாகாது எனும் பண்பினை
இவள் மூலமாவது உணர்ந்து கொள்!!!!
இனியும் எமக்கு
இப்படி ஓர் செய்தி
உங்களிடமிருந்து வேண்டாம்,
மனதைக் கணக்கும் கவிதை சகோ....செங்கொடியின் செயல் ஏற்க முடியாவிடினும், மூன்று உயிர்க்காய் தன் உயிரை துச்சம் என எண்ணிய அவர் தம் தியாகத்திற்கு ஈடு இல்லை..இந்த செங்கொடியோடு இனி
உயிர் இழப்பு இல்லாமல் போகட்டும் என்பதே எல்லோரும் ஆசையும்.... அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்....நல்லதே நடக்கும் என்று நம்புவோம் சகோ...
உம்மை என்ன சொல்லி பாராட்டுவது என்றே தெரியவில்லை ......
என்ன சொல்வதென்று தெரியவில்லை.
சகோதரி செங்கொடியின் ஆத்மா சாந்தியடையட்டும்...
அந்த இழப்பு எண்ணற்ற ஈழ சகோதரிகள் வாழ்வில் ஒளியேற்றும் வேள்வியாய் இருக்கட்டும்...
ஒரு உயிரின் மதிப்பு அவ்வளவுதானா? நல்லது நடந்து அவர் ஆன்மா சாந்தியடையட்டும்!
அந்த தாய் குலத்திற்காய் என்னிடம் வார்த்தைகள் இல்லப்பா. தயவு செய்து இப்படியான முடிவுகளை ஆதரிக்காதிர்கள். மற்றவருக்கும் வேண்டாமென்று பரப்புரை செய்யுங்கள்.
தாயே என் கண்ணீரைத் தவிர உன்னிடம் சமர்ப்பிக்க என்னிடம் ஏதுமில்லை.
ஒரே ஒரு கேள்வி ?
சுயநலத்துக்காய் மதுரையை எரித்த கண்ணகியை கொண்டாடுகிறோம். பொது நலத்துக்காய் தன்னை எரித்த இவளுக்கு ஒரு கோயில் கட்டினால் என்ன ?
சார்! ரொம்ப உணர்வுபூர்வமா இருந்திச்சுது உங்க கவிதை!இப்போ எல்லோரும் கொஞ்சம் நிம்மதியா இருக்காங்க!
@♔ம.தி.சுதா♔
ஒரே ஒரு கேள்வி ?
சுயநலத்துக்காய் மதுரையை எரித்த கண்ணகியை கொண்டாடுகிறோம். பொது நலத்துக்காய் தன்னை எரித்த இவளுக்கு ஒரு கோயில் கட்டினால் என்ன ?////
கண்டிப்பாக கட்டலாம் சார்! கட்டணும்!
//அவளின் ஆத்ம ஈடேற்றத்திற்கு
என்ன பதில் கூறப் போகின்றாய் தமிழகமே?//
பதில் தேடும் படலத்தில், கேள்விகளே துரத்துகின்றன சகோ! :-(
இடி மேல் இடி பொழிந்து
நாம் இன்னலுற்ற வேளையில்
எம் துயர் துடைக்க
முத்துக்குமாரன் தீயில்
மூழ்கித் தமிழ் வீரம் உரைத்தானே
அதற்கும் நாம் என்ன
செய்வோம் என ஏங்கி
நிற்கும் வேளையிலா
நீயும் குதித்தாய்?//
இதுதான் எனது கேள்வியும்,,நாம் என்ன செய்ய போகிறோம்...
tamil manam 32
நல்லது நடக்கும் என்று நம்புவோம் .
சகோதரி இறந்து சாதிப்பதை விட
இருந்து சாதித்து இருக்கலாமே.
தங்களின் மரணம் ம்ன வேதனை அளிக்கிறது.
(வெள்ளரசின் கீழிருந்து
பௌத்த வேதாந்தம் பேசும்
இனவாத அரசும்,
கைங்கரிய அரசியல் நடத்தும்
காங்கிரசும் எதிர்பார்ப்பது
தமிழர் உயிரைத் தானே?
உன் உயிரும்
அவர்கள் எதிர்பார்க்கும்
தோரணையில் போகப் போகின்றது
என்பதனை உணராது
தீயில் பாய்ந்தனையோ தோழி?) உண்மை வரிகள் மிகச் சரியான வரிகள் .தமிழன் உயிர் குடிக்க பல அரசுகள் ஒன்றாக இயங்கிவருகிறது. அந்த வகையில் எந்த தமிழன் இறந்தாலும் அவர்களுக்கு சந்தோசம் எனவே எந்த தமிழனும் தமது இன் உயிரை இழக்கவேண்டம்.
இந்தத் தணல் அணையாது!
நாளை பிற்பகல் மூன்று மணிக்கு பிரான்சிலுள்ள இந்திய தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும்,தூக்குத் தண்டனையை நிருத்தக் கோரி!
சுவிஸ் ஜெனிவாவிலுள்ள ஐ.நா முன்பாக வரும் 19-ம் திகதி பொங்கு தமிழ் நிகழ்வு!
@ Yoga.s.FR said...
சகோதரா ஒரு அன்பான வேண்டு கோள்..
இப்படியான ஒன்று கூடல்களில் தீக்குளிப்புப் போன்ற தற்கொலை முயற்சிகள்செய்ய வேண்டமென பரப்புரை செய்ய முடியுமா ?
முகம் தெரியாதிருந்த,இப்போது முகம் தெரிந்த அந்த சகோதரி செங்கொடியின் தியாகம் வீண் போகாது.நல்லதே நடக்கும்!செங்கொடி ஆன்ம சாந்திக்குப் பிரார்த்திப்போம்!
♔ம.தி.சுதா♔ said...
@ Yoga.s.FR said...
சகோதரா ஒரு அன்பான வேண்டு கோள்..
இப்படியான ஒன்று கூடல்களில் தீக்குளிப்புப் போன்ற தற்கொலை முயற்சிகள்செய்ய வேண்டமென பரப்புரை செய்ய முடியுமா ?////கண்டிப்பாக!நாளை நடைபெற இருக்கும் ஆர்ப்பாட்டம்,செங்கொடியின் மரணத்தையடுத்தும்,மூவரின் தண்டனைக் குறைப்பு குறித்ததாகவுமே இருக்கிறது!ஜெனீவா நிகழ்வு ஏலவே ஒழுங்கு செய்யப்பட்டது!எனவே ஜெனீவா நிகழ்வும் உணர்வுபூர்வமானதாக மாற்றமடையும்!
@ Yoga.s.FR
போராடியோருக்கு நன்றி சொல்வதா? அல்லது உறங்கியோரை தட்டி எழுப்பிய அந்த தாயின் காலை தொழுவதா என தெரியவில்லை. ஆனால் கடவுளை காணாதவர்கள் இந்த மனிதர்களையும் அவர் எழுத்துக்களையும் பாருங்கள் ஏனென்றால் இந்த வாரம் முழுதும் நான் பல கடவுள்களையும் திருமந்திரங்களையும் கண்டு விட்டேன்.
நிரூபனின் கவிதை பொறுமையாகப் படித்து நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டேன்.
அந்தத் தங்கை எதற்காக இப்படி ஒரு முடிவுக்கு வந்தாவோ.... மனம் கனக்கிறது.... ஒன்றை இழந்தால்தான் இன்னொன்றைப் பெற முடியும் என நினைத்தாவோ..
தற்போதுதான் நம்பிக்கை துளிர்விட துவங்கியுள்ளது, சகோ.
மாப்ள இந்த உயிர் போனது இன்னோர் பெரிய இழப்பு...அதுமட்டும் இல்லாமல் தவறான முன்னுதாரணமாகிவிடக்கூடாது...இந்தக்குழந்தையின் ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்...பகிர்வுக்கு நன்றி!
மாப்ள இந்த உயிர் போனது இன்னோர் பெரிய இழப்பு...அதுமட்டும் இல்லாமல் தவறான முன்னுதாரணமாகிவிடக்கூடாது...இந்தக்குழந்தையின் ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்...பகிர்வுக்கு நன்றி!
நல்லதே நடக்கும் நிரூபன். நம்புவோம். அந்த நம்பிக்கையின் வெளிச்சத்தில் பணியினைத் தொடர்வோம்
தாங்குவோர் இன்றி
தத்தளிக்கும் ஈழ மக்களை
ஏந்திட
நாமிருக்கிறோம் எனும்நிரூபனின் நாற்று வலை
குரலுக்கு
ஏதும் செய்திய முடியாதோராய்
நாமிங்கு!
நெஞ்சு கணக்குது ஐயா அம்மா போல தமிழ்நாட்டு மக்கள் காட்டும் கருசனை கவிவரிகளில் கண்டேன்
இடி மேல் இடி பொழிந்து
நாம் இன்னலுற்ற வேளையில்
எம் துயர் துடைக்க
முத்துக்குமாரன் தீயில்
மூழ்கித் தமிழ் வீரம் உரைத்தானே
அதற்கும் நாம் என்ன
செய்வோம் என ஏங்கி
நிற்கும் வேளையிலா
நீயும் குதித்தாய்?
ஈழத்து நெஞ்சங்கள்
ஒரு போதும்
உயிர்பலி கேட்க்க
இல்லையம்மா
தமிழகமே! இறப்பிற்கு இறப்பு
ஈடாகாது எனும் பண்பினை
இவள் மூலமாவது உணர்ந்து கொள்!!!!
இனியும் எமக்கு
இப்படி ஓர் செய்தி
உங்களிடமிருந்து வேண்டாம்,
நாம் நொந்தது போதும்
செங்கொடியே
இவள் செய்தது வேண்டாம்
எம் இனமே
மூன்று உயிர்களைக் காக்க
மூவாயிரம் அசுர பலம் கொண்ட
ஓருயிராய் நீ வீழ்ந்திருக்கிறாயே?
என் செய்வோம் நாம்?
உன்னையே கொன்று
எம்மை கொல்கிறாய்
உயிர்களை மதித்தே
உன் உயிரினை விட்டாய்
// துஷ்யந்தன் said...
சகோதரியின் செய்கையை ஆதரிக்க முடியாவிட்டாலும்
அவரின் தியாகத்தை தலைவணங்கி செல்கிறது உங்கள் பதிவு.....
நிருபன் உங்கள் என்ன ஓட்டமே எம் என்னோட்டமும்//
அதுவே!
இனியுமா நீ உறங்கி இருக்கிறாய்?
உந்தன் உணர்வுகளைத் தொலைத்துமா
அமைதி காண்கிறாய்?
உன் தேசம்
நீ எழுச்சி கொள்ள வேண்டும் என்பதற்காய்
ஒருத்தி வீழ்ந்தனளே!
அவளின் ஆத்ம ஈடேற்றத்திற்கு
என்ன பதில் கூறப் போகின்றாய் தமிழகமே?//
நிட்சயமாக ஒரு நல்ல பதில் கிட்டவேண்டும் சகோ
இது எம் அனைவரினதும் பிரார்த்தனைகளும்கூட
நம்பிக்கையோடு காத்திருந்து போராட்டம் தொடரட்டும் ....
அந்த சகோதரியின் ஆத்மா சாந்தியடையட்டும் .நன்றி
சகோ உங்கள் முயற்சிகளுக்கு தலைவணங்குகின்றேன்
வலை வந்து கருத்துரை வழங்
கினிர் நன்றி
கடுமையான முதுகுவலி
காரணமாக அமர்ந்து கருத்துரை
வழங்க இயலவில்லை மன்னிக்க!
பின்னர் எழுதுகிறேன்
புலவர் சா இராமாநுசம்
முருகன் உள்ளிட்டோருக்கு தவறான தீர்ப்பு வழங்கியமையை திருத்தி, உண்மையை வெளிக் கொண்டுவருவதில் கருத்து வேறுபாடில்லை. மூன்று மாணவகளை உயிரோடு எரித்துக் கொன்றவர்களுக்கும் கருணையா எம் நண்பர்களே!. செங்கொடி மட்டும்தான் நம் உறவா. ஜெயலலிதாவிற்கு தீர்ப்பினை தவறாக வழங்கியமை காரணம் காட்டி எரிக்கப்பட்ட கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகியோரும் நம் உறவுகள்தானே. ஒட்டுமொத்தமாக தூக்கினை ரத்து செய்யும் போராட்டத்திற்கு முன் சற்று சிந்தியுங்கள்.
http://www.youtube.com/watch?v=xn8ne0Qmou4
என்ன சொல்வது என தெரியவில்லை!
தமிழர்கள் உணர்வாளர்களா?உணர்ச்சியாளர்களா?
தமிழருக்கென்று ஒரு குணமுண்டு என்பதில் இதுவும் சேர்த்தியா?
இதுவும் தவிர்க்க வேண்டிய ஒரு சமூக கொலை தான்!
Post a Comment