தயவு செய்து இந்தப் பதிவினைப் படித்து உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள். பதிவினைப் படிக்காது கருத்துக்களை எழுதி, பாதிக்கப்பட்ட உறவுகளின் உணர்ச்சிகளோடு விளையாடுவதை விடுத்து, உங்களின் வாக்குகளை மாத்திரம் குத்தி விட்டுச் சென்றால் கோடி புண்ணியமாகும். வாழ்வில் ஒரேயொரு நாளில் ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்கி இப் பதிவினைப் படித்து, உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்த ஊடகங்கள் வாயிலாக இப் பதிவினைப் பகிர்ந்து, பல பேரிடம் இப் பதிவினை எடுத்துச் சென்றால், உலகின் எங்கோ ஓர் மூலையில் இருக்கும், தூக்குத் தண்டனைக்காக காத்திருக்கும் மூன்று உறவுகளினதும் குடும்பத்தினருக்கு நாம் செய்கின்ற சிறு உதவியாக இது அமைந்து கொள்ளும். நிரூபனின் நாற்று வலை
ஈழத் தமிழர்கள் இந்தியாவைப் பல வழிகளிலும் நம்பிக் கெட்டவர்கள். இந்திய மத்திய அரசிற்காக தான் எழுதிய கடிதங்கள், எந்தவிதமான மனமாற்றத்தையும் மத்திய அரசின் மனதில் ஏற்படுத்தவில்லை எனும் ஒரே ஒரு காரணத்தினைத் தொடர்ந்து; தன்னுடைய இந்திய அரசு மீதான நம்பிக்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரன். சாவின் விளிம்பில் முள்ளிவாய்க்காலில் நின்ற வேளையிலும், தொப்புள் கொடி உறவுகள் எம்மைக் கைவிட மாட்டார்கள் எனும் அசைக்க முடியாத நம்பிக்கையில் நின்று இறந்த பிணங்களின் மீதேறி நடந்து வந்தவர்களுக்கு அடிமையாய் வாழப் பழகிக் கொண்டவர்கள் ஈழத் தமிழர்கள்!
ஆனால் இன்றோ ஈழத் தமிழர்கள் கையேந்துகிறார்கள். எதற்காக?
தமிழகம் இன்று உணர்வெழுச்சியுடன் திரண்டு நிற்கிறதே, எதற்காக. ஆதரமற்ற, நிரூபிக்கப்படாத- போலி ஆதாரங்கள் கொண்டு சோடிக்கப்பட்ட ராஜீவ் காந்தி கொலை வழக்கின் தூக்குத் தண்டனையினைத் தடுத்து நிறுத்துவதற்காக. இலங்கையில் தமிழர்களுக்காக, தம்மால் முடியும் வரை- தமது இறுதிக் காலம் வரை போராடிய ஒரேயொரு விடுதலை அமைப்பு தமீழ விடுதலைப் புலிகள் அமைப்பு. இனி...............விளக்கப் பகிர்வு.
*விடுதலைப் புலிகள் அமைப்பில் தற்கொலைத் தாக்குதல் நடாத்தச் செல்லுவோர்- தாம் இறப்பது நிச்சயம் என்று முடிவு செய்து தான் கரும்புலித் தாக்குதல் நடாத்தச் செல்லுவார்கள். அப்படி இருக்க, சந்தேகத்தின் பேரில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதானோரை, எப்படித் தூக்குத் தண்டனைக்கு உட்படுத்தும் போது, கருணை மனுக் கோருவார்கள்? சாவினைத் துணிந்தல்லவா அவர்கள் ஏற்க வேண்டும்.
*விடுதலைப் புலிகள் அமைப்பில் தமது உயிரைப் பற்றிக் கவலைப்படாது, தாம் இறப்பது நிச்சயம் எனத் தெரிந்து, தாக்குதல் நடத்தச் செல்லும் எவராகினும், கைது செய்யப்பட்டால், தமக்கு கருணை மனு வழங்க கோரியோ அல்லது தமது உயிரினைக் காப்பாற்றுவதற்காக கெஞ்சியதாக இது வரை காலத்திலும் ஈழத்தில் வரலாறுகள் எதுவும் எழுதப்படவில்லை.
*விடுதலைப் புலிகள் அமைப்பினரில் தம் உயிரைப் பணயம் வைத்து, பல்வேறு ரிஸ்க் எடுத்து ஓர் தாக்குதலை நடத்தி முடிக்கச் செல்லுவோர், சாவினை சிரித்தபடி வரவேற்று, எதிர் கொள்ளுவார்களேயன்றி, சாவினைக் கண்டு அஞ்சியதாக சரித்திரம் இது வரை எழுதப்படவில்லை! ஆனால் இன்று கருணைமனுக் கோருவோரைப் புலிகள் அமைப்பினர் எனக் குற்றஞ்சாட்டுவது எப்படி நியாயமாகும்?நிரூபனின் நாற்று வலை
நிரூபனின் நாற்று வலை
*புலிகள் அமைப்பினரால் மிக மிக இரகசியமாகத் திட்டம் தீட்டப்பட்டு மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல்கள் இறுதி வரை வெளியில் உள்ளோருக்குத் தெரிவதில்லை.(தோல்வியில் காட்டிக் கொடுப்புக்கள் மூலம் நடந்து முடிந்த தாக்குதல்களைத் தவிர) இந்தியாவின் CPI உளவுத் துறை கூட, விடுதலைப் புலிகளின் தாக்குதல் திட்டங்கள் குறித்து வியந்து பேசியுள்ளது.
மேற்கூறிய தகவல்களை நான் ஏன் இங்கே முன் வைத்துள்ளேன் என்றால், ராஜீவ் கொலை வழக்கில் செப்டெம்பர் மாதம் ஒன்பதாம் நாளன்று தூக்குக் கயிற்றில் ஏற்றப்படவுள்ளதாக மத்திய அரசின் அனுமதி கிடைத்துக் காத்திருப்பில் உள்ள அப்பாவிகளாகிய பேரறிவாளன், மதிசாந்தன், முருகன், ஆகியோர் ஆதரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தான் தூக்குத் தண்டணைத் தீர்ப்பிற்கு ஆளாகியிருக்கிறார்கள்.
நிரூபனின் நாற்று வலை
தற்கொலைத் தாக்குதல் நடத்தியோரைத் தூக்கில் போடுவது, என்பது வேறு, ஆனால் தற்கொலைத் தாக்குதலுக்கு உதவி செய்தார்கள் எனும் நோக்கில் கைது செய்யப்பட்டவர்களை, வெளித் தொடர்புகள் ஏதுமற்றவர்களாக வைத்திருந்து, ஒரேயொரு பெட்டிக் கடை வியாபாரியின் சாட்சியினை மாத்திரம் முன்னிறுத்தித் தூக்கில் போட்டு இருபத்தியொரு வருடங்களாக இழுபட்டுக் கொண்டிருக்கும் வழக்கிற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறது இந்திய மத்திய அரசு, சிபிஐ அமைப்பும்.
நிரூபனின் நாற்று வலை
பெட்டிக் கடை நடத்தும் வியாபாரியின் சாட்சியினை அடிப்படையாக வைத்து, ரிமோட் கான்ரோல் மூலம் இயக்கப்படும் தாக்குதலுக்கான ஒன்பது வோல்ட்டேஜ் (9 Volt) பற்றரி வாங்கியவர் பேரறிவாளன் என்றும், ஏனைய இரண்டு அப்பாவி உறவுகளும், இத் தாக்குதலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்றும் வழக்குப் பதியப்பட்டுத் தூக்குத் தண்டனைக்கான தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
நிரூபனின் நாற்று வலை
மதிசாந்தன் மீதான குற்றச்சாட்டும் இதே பாணியிலானது தான். அவரினை வெளித் தொடர்பேதுமற்றவராக வைத்திருந்து, அடித்துத் துன்புறுத்தித் தான் போலியான வாக்கு மூலம் வாங்கி கையெழுத்து வைத்து தூக்குத் தண்டணைக்கு தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள் இந்திய காவல் துறையினரும், அவர்களோடிணைந்த நீதிபதிகளும்.
மதிசாந்தன் எனும் பெயரினைக் கேட்டதும் உங்களுக்கு வலையில் உள்ள உறவொன்றின் பெயரும் நினைவிற்கு வரும் அல்லவா. உங்களோடு ஒருவனாக. உங்கள் அனைவருக்கும் சுடுசோறுப் பின்னூட்டம் வழங்கிய பதிவரின் அண்ணன் தான் இந்த மதி சாந்தன். இலங்கைத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் அகதிப் புகலிடம் கோருவதற்குச் சட்டவிரோதமான முறையில் செல்வதற்கு இன்றும் சரி, அன்றும் சரி தமிழகத்தையும் தமக்கான ஒரு மாற்றிடமாகப் பயன்படுத்தி வந்துள்ளார்கள். அந்த வரிசையில் தான் மதிசாந்தனும், இலங்கையின் விமான நிலையமூடாக வெளியேறித் தமிழகத்திற்குச் செல்ல முடியாது என்பதால், கடல் வழிப் பயணம் மூலம் இந்தியாவிற்குச் சென்று, தன்னுடைய இலங்கையின் ஒறிஜினல் பாஸ்போர்ட்டுடன் சென்று, ஏஜெண்ட் மூலமாக போலிப் பாஸ்போர்ட்டுடன் வெளிநாடொன்றிற்குப் போவதற்குத் திட்டமிட்டிருந்தார்.
இவ் இடத்தில் நிற்க. தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்காகத் தமிழகத்திற்குள் மதிசாந்தன் நுழைந்திருந்தால், இலங்கைப் பாஸ்போர்ட்டையுமா தன் கூட எடுத்து வருவார்?
ஆனால் சிபிஐ வழங்கும் சோடிப்புக் கதையில் அவரைப் பற்றிய உண்மையான கருத்துக்கள் யாவும் மறைக்கப்பட்டு, மதிசாந்தனை அடித்துத் துன்புறுத்தித் தான் சிபிஐ போலியான வழக்குப் பதிவு செய்து, தூக்குத் தண்டனையினை வழங்குவதற்கான தீர்மானத்தினை நிறைவேற்றியிருக்கிறார்கள் எனும் விடயத்தினை இம் மூவராலும் அண்மையில் ஆனந்த விகடனுக்கு வழங்கப்பட்ட பேட்டியிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
விகடனில் வெளியான பேட்டியினைப் படிக்க
http://adrasaka.blogspot.com/2011/08/3.html
இதே போன்று தான் முருகன், பேரறிவாளன் மீதான வழக்கும்.
''அம்பினை எய்தவர்கள் தப்பி ஓடி விட, அப்பாவிகள், சம்பவத்தோடு தொடர்பில்லாத அப்பாவிகள் மாத்திரம் கடுமையான சித்திரவதைகளின் பின்னணியில் சோடிக்கப்பட்ட வழக்கின் தீர்பின் அடிப்படையில் தற்போது தூக்குத் தண்டனை வழங்கும் நாளை எண்ணிக் காத்திருக்கிறார்கள்.
(மதிசாந்தன் அவர்கள் சிறையில் இருக்கும் போது எழுதிய நூல்)
ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது அவரது கையிலிருந்த பெரிய சூட்கேஸ் எங்கே என்கின்ற சோனியா காந்தியின் வினாவிற்கே இதுவரை முற்றுப் புள்ளி வைக்கப்படவில்லை. குற்றம் சுமத்தப்பட்டுத் தூக்குத் தண்டணை விதிக்கப்பட்டுள்ளோர் கேட்கும் வினாக்களுக்கோ, அல்லது அவர்கள் மீதான குற்றங்களுக்கோ ஆதாரமெதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை. அப்படி இருக்க.......
அப்பாவிகளைத் தூக்கிலேற்றும் போது,
நீ பார்த்துக் கொண்டிருக்க
போகிறாயா தமிழகமே?
எட்டுக் கோடி மக்கள் இருக்கின்றார்கள்
எனும் உணர்வுடன் தானே
முள்ளிவாய்க்காலிலிருந்து கதறிக் கதறி
உன் பெயர் சொல்லி அழுதோம்?
அப்போதாவது கடல் தடுத்ததால்
கைவிட்டு விட்டோம் எனச் சொல்லி
நீ எம்மைத் தேற்றலாம்- ஆனால்
இன்று உன் தேசத்தில்
தூக்குத் தண்டனைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு,
தம் வாழ்வின் நாட்களை எண்ணி வாடும்
ஜீவன்களுக்கு
என்ன பதில் கூறப் போகின்றாய் தமிழகமே?
நிரூபனின் நாற்று வலை
உன்னால் முடியாதது
எதுவும் இல்லை தமிழகமே!!
நீ நினைத்தால்
தடுத்து நிறுத்தலாம் அல்லவா
இருண்டவன் கண்ணுக்கு அருண்டதும்
பேய் என்பது போல
அப்பாவித் தமிழர்களைக் கொன்று
தம் ஆதிக்கப் பசி தீர்க்கத் துடிக்கின்றது
காங்கிரஸின் கைங்கரியம்-
நீ என்ன கை கட்டி வாய் பொத்தி
பார்த்துக் கொண்டா நிற்கப் போகின்றாய் தமிழகமே?
நிரூபனின் நாற்று வலை
உணர்வு கொள் தமிழகமே
உன்னால் முடியாதது எதுவுமில்லை,
எம் உடம்பில் ஓடுவதும்
உன் ஆதி மூலத்திலிருந்து
பிறந்த இரத்தம் தானே.
நாங்கள் அடக்கு முறைக்கு
எதிராய் கிளர்ந்தெழுந்ததுவும்
நீ எமக்கு ஊட்டிய
அரியாசனக் கதைகளால் தானே சாத்தியமாகியது!
உங்களை இரந்து கேட்கின்றோம்,
இமை திறந்து
எழுச்சி கொள்ளுங்கள்!!
தமிழக உறவுகளே, உங்களால் முடியாதது எதுவுமில்லை. அலைகடலெனத் திரண்டு உங்களின் ஆதரவினைக் காட்டுங்கள். அப்பாவிகளின் உயிர் உங்களின் தேசத்தில் பறிக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டுமா மௌனமாக இருக்கப் போகின்றீர்கள்?
பெரு மதிப்பிற்குரிய வலையுலகப் பெரு மக்களே,
தன்னுடைய சின்ன வயதில் பார்த்த அண்ணனின் முகத்தினைப் 21 வருடங்களின் பின்னராவது பார்க்க வேண்டும் எனும் ஆவலோடு காத்திருக்கும் உங்களின் தோழன், உங்களின் சுடு சோற்று நண்பன் மதிசுதா தன் ஆசை அண்ணன் மதிசாந்தனுக்காய் எழுதிய அன்பு மடலினையும் இங்கே இணைத்துள்ளேன்.
http://www.mathisutha.com/2011/08/blog-post_19.html
இம் மடலில் உள்ள உணர்வுகளைப் புரிந்து கொண்டாவது, உங்கள் உணர்வுகளுக்கு வேகங் கொடுங்கள் உறவுகளே!
உறவுகளே, உங்களுக்குத் தெரிந்த அனைத்து பேஸ்புக், டுவிட்டர், குழுமங்களிலும் இந்தப் பதிவினைப் பகிர்ந்து தமிழகத்தின் ஒட்டு மொத்த மனச்சாட்சியினையும் தட்டி எழுப்ப உதவி செய்யுங்கள்!
உருக்கமான வேண்டுகோள்: இப் பதிவில் ராஜீவ் கொலைக்கான காரணங்களை அல்லது, தூக்குத் தண்டணை தேவையா இல்லையா எனும் கேள்விகள் எதனையுமே முன் வைக்கவில்லை. இப் பதிவினூடாக நான் கேட்டுக் கொள்வது, அப்பாவிகளின் உயிரினைக் காப்பாற்ற அலைகடலெனத் தமிழகம் திரள வேண்டும் எனும் ஒரேயொரு வரமாகும்.
பதிவினைப் படிக்காது குதர்க்க வாதம் புரிவோர் தயவு செய்து ஒதுங்கி நில்லுங்கள். இப் பதிவிலும் உங்களின் உண்மை முகத்தினைக் காட்ட நினைத்து, பாதிக்கப்பட்டோரின் மன உணர்வோடு விளையாட வேண்டாம்.
|
141 Comments:
Pallkoppikidaikkuma bass
இருங்க பதிவைப் படித்துவிட்டு வாரன் கோப்பி சூடாக வேனும்!
அன்பிற்குரிய சகோதரம், பதிவின் ஆரம்பத்தில் சிகப்பு மையினால் குறியிட்டிருப்பதைக் கொஞ்சம் படிக்கலாம் அல்லவா.
அடக்க முடியாத மனகொந்தளிப்பும், அனைத்திலும் தோற்றுவிட்ட விரக்தியான மனநிலையுமே மிஞ்சுகிறது. தமிழனாய் பிறப்பதே பெரும்பாவம்.
நிஜமான பதிவு பாஸ், என்ன சொல்வது என்றே தெரியவில்லை. மேற்கொண்டு எழுதுவதற்க்கு வார்த்தைகளே வர மாட்டேன் என்கிறது.. :(
மதிசுதா அண்ணாவின் மனசு இப்போது என்ன பாடுபடும், கடவுளே.. நினைக்கும் போதே தொண்டை அடைக்குது, நம்மை மட்டும் ஏன் இப்படி குறிவைத்து தாக்கிறார்கள் என்றே தெரியவில்லை. மதிசுதா அண்ணா,உங்களை என்ன வார்த்தை கொண்டு சமாதானப்படுத்துவது என்றே தெரிய வில்லை, ஆனாலும் நல்லது நடக்கும் என்ற ஒரு நம்பிக்கை இன்னும்
என்னுள் ஒட்டியே இருக்கு அண்ணா. :(
சகோ... சொல்லிய கருத்துக்கள் அனைத்தும் உண்மை... தமிழகம் ஒலித்தாலும் அரசின் காதுக்கு கேட்க வேண்டுமே...
ராஜீவ் கொலை இந்திய அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்திய உளவுத்துறையும் வெட்கித் தலைகுனியும் நிலை ஏற்பட்டது.
தொடர்ந்து நடந்த விசாரணை பல விவகாரமான விஷயங்களையும், பல பெருந்தலைகளையும் சுட்டுவதாய் அமைந்தது.
அந்த பெரும் தலைகளை ஒன்றும் செய்ய முடியாத நிலையில் மக்களை அமைதிப்படுத்த, தாங்களும் செயல்பட்டோம் என்பதைக் காட்ட இந்திய அதிகார வர்க்கம் கொடுக்கும் பலியே இந்த மூன்று உயிர்கள்.
ஒரு ஈழ தமிழனாக எனக்கு நம்பிக்கை உள்ளது, ஆறு கோடி தமிழர்களும் அந்த அப்பாவி உயிர்களை ஒரு போதும் தூக்கு கயிற்றுக்கு முன்னால் அனுமதிக்கமாட்டார்கள் என்று..
வழக்கை முடித்தாக வேண்டிய அவசரத்தில் உள்ளது அரசு..இந்த மூன்று உயிர்களின் பலியோடு, விஷயம் முற்றுப்பெறும்!
என்ன செய்யப் போகிறோம்?
இன்று வைகோ, ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத் தலைவர்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அறிக்கை வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளனர், இதில் தலையிட.
அது எந்த அளவிற்கு பயனளிக்கும் என்று தெரியாவிட்டாலும், அதையும் புறக்கணிக்கும் நிலையில் நாம் இல்லை.
முசோலினி வாரிசுகளுக்கு அந்த தேவை இருக்கலாம். ஆனால், காந்தியும் திரேசாவும் வாழ்ந்த மண்ணில் இந்த கொடுமை நடக்காதே என்று தான் மனம் சொல்கிறது..
இயலாதவர்கள் இயலாதவர்கள் எண்டு நான் நெடுகலும் சொல்லுவது உண்டு இன்றுதான் அதை நான் முதலாவதாக உணருகிறேன்..............
ஒவ்வொரு உறவுகளும் தங்களால் இயன்றதைச் செய்ய வேண்டும்.இறைவன் படைத்த உயிரை இன்னுமொருவர் பறிக்க அதிகாரமில்லை என்னும் நீதிக்காகவாவது குரல் கொடுக்கவேண்டும். நன்றி!
உண்மையாகவே மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்குறது........
சட்டம் தன் கடமையென்ற பெயரில் இந்தக் கொடுமையை செய்யப் போகிறதா..நியாயம் பற்றி கவலைப்படப் போவதில்லையா..
சட்டம் தன் கடமையென்ற பெயரில் இந்தக் கொடுமையை செய்யப் போகிறதா..நியாயம் பற்றி கவலைப்படப் போவதில்லையா..
தமிழக அரசு நினைத்தால் இதை தடுக்கலாம் என்று சொல்கிறார்கள். பார்க்கலாம், இன்னும் நம்பிக்கை உள்ளது......!
உண்மையிலே இதன் மூலம் யாரை பழி வாங்குகிறார்கள் என்று புரியவில்லை.
இதன் மூலம் அவர்கள் அடைந்து கொள்ளும் திருப்தி எவ்வாறானதாக இருக்கப்போகிறது... சம்மந்தமே இல்லாமல் மூன்று உயிர்களை பலி எடுக்கும் அளவுக்கு சட்டம் முசோலினி வாரிசின் கையிலா? இந்த தண்டனை என்பது ஆளும் வர்க்கத்தை திருப்தி படுத்துவதற்கு மட்டும் தான் என்பது வெட்ட வெளிச்சம்..
அப்பாவிகளின் உயிரில் அரசியல் சதுரங்கம் ஆடுகிறார்கள் ,மனிதர்களா இவர்கள்??
நண்பர் மதி.சுதாவிற்கு என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை..
நிச்சயம் தமிழக உறவுகள் கைகொடுப்பார்கள் என்று நம்புகின்றேன் மதியின் சகோ என்பது இப்போது தான் தெரிந்து கொண்டேன் வருத்தமான பதிவினைத் தந்திருக்கும் போது நானும் ஆவலிம் முதலில் வந்து சபைமரபை மீறிவிட்டேன் !மன்னிக்கவும் நிரூ!
பெல்ட் வெடிகுண்டை செய்தவர் யாரென்றே இதுவரை கண்டுபிடிக்கவில்லை.இந்த லட்சணத்தில் இரண்டு ரூபாய் பற்றரி வாங்கிக் கொடுத்தார் என்று குற்றம் சாற்றி தூக்கா?
மதியின் குடும்பத்தின் துயரத்தை வார்த்தையில் விபரிக்க முடியாது மிகவும் கவலை தருகின்றது! நல்லதே நடக்கும் நம்புவோம்!
நண்பா மதிசுதா, நல்லதே நடக்கும் என்பதே பலரின் விருப்பமும்... ஆண்டவனை பிரார்த்திப்போம். அவர் நம்முடன் இருக்கிறார்...
மதிசுதாவை நினைத்தால் மனதிற்கு மிகவருத்தமாக உள்ளது. அருகில் உள்ள நல்லுள்ளங்கள்தான் அவரை ஆறுதல் படுத்த வேண்டும்!
நம்பிக்கை கை கொடுக்கும்.தமிழ் நாட்டு உறவுகள் போராடுவார்கள்.முதல்வர் உதவுவார் என்ற நம்பிக்கை உண்டு.
நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.
ராஜீவ் கொலை வழக்கு மர்மம் – வெளிப்படுத்தும் முன்னாள் சி.பி.ஐ அதிகாரி மோகன்ராஜ்
http://www.voicetamil.com/?p=34798
மதி நாங்கள் உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை இந்த இக்கட்டான நேரத்திலும் நான் உங்களை மெயில் போட வைத்ததற்காக வருந்துகிறேன்..
ஆறு கோடி தமிழனும் உதவி செய்வான் என எட்டு கோடி தமிழனில் ஒருவனாக நானும் நம்பிக்கொண்டிருக்கிறேன் !!!
இந்த மூன்றுபேரும் குற்றமற்றவர்கள் ஆதலால் இவர்களை விடுதலை செய்ய வேண்டும். அதையும் மீறி தூக்கில்போடுவதென்றால் ராசிவ்காந்தி என்ற கொடுங்கோல் கொலைகாரனை கொன்ற வழக்கில் தண்டனையை நிறைவேற்றட்டும். மானங்கெட்ட இந்திய அரசு தமிழ் மீனவர்களை பாதுகாக்க வக்கில்லை, முதல்ல இந்த இந்திய நடுவன அரசு தலைவர்களை தூக்கில் இடவேண்டும்.
தமிழா நீ இந்திய நாட்டில் அடிமையாய் இருக்கிறாய்
என்பதற்கு பல சான்று உண்டு அதில் இது ஒன்று.
துரோகி இந்தியாவை ஈழம் நம்பி சீரழிந்தது
தமிழர்களும் இந்தியாவை நம்பியிருந்தால் நாம் அழிவது நிச்சயம்,
இந்தியாவின் சுயருபத்தை உணர்ந்துகொள் தமிழா,
இந்தியா என்றுமே தமிழனுக்கு நண்பனாக இருந்ததில்லை
காலம் தரும் பாடத்தை கற்றுகொள்.
காலவதியான தடா சட்டங்களின்படி வழங்கபட்ட தண்டனைகளை ரத்து செய்யவேண்டும். இவர்களின் மீது சுமத்த பட்டுள்ள குற்றசாட்டுகள் கடுமையனவைகள் அல்ல. அப்படியே குற்றம் என்றாலும், அவர்கள் ஏற்கனேவே சுமார் 20 ஆண்டுகள் தனிமை சிறையில் அனுபவித்த தண்டனைகளை கருத்தில் கொண்டு, அவர்களை விடுவிக்கவேண்டும். அப்படி விடுவிகமுடியவிட்டால், தூக்கு தண்டனையை மாற்றி, அரசாங்கம் விரும்பும் வரை சிறையிலாவது உயிருடன் இருக்கவிடுங்கள்...
ஆனால் நடப்பவை கவலை அளிபதாக உள்ளது, இந்த பிரச்னையை சட்டசபையில் பற்றி பேச 15 முறை அனுமதி கேட்டும் அனுமதி மறுப்பு. சட்டசபையில் பேசியதும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கம். இலங்கைத் தமிழர்களுக்காக திடீர் குபீர் ஆதரவு தெரிவித்தவர்கள் இப்படி திடீர் என்று மாறி சட்டசபையில் பேசக்கூட முடியாத நிலைமை.
தங்களால் முடியாத, தான் நேரடியாக செய்யமுடியாத ஒன்றிற்காக ஆவேசமாக தீர்மானம் நிறைவேறும் போது, தனது அரசு சமந்தப்பட்ட, தன்னால் நேரடியாக செய்யமுடிந்த ஒன்றை பற்றி, குறைந்தபட்சம் சட்டசபையில் பேச கூட அனுமதி இல்லை..
அடுத்தது என்ன நடக்கும் என்று தெரியவில்லை...
கருணாநிதியும் மற்ற அனைத்து தமிழகத்து தலைவர்களும் தங்கள் ஆதரவை தெரிவித்து விட்டனர், காங்கிரேசை தவிர. இன்னும் ஜெயா இதுகுறித்து எந்த கருதும் தெரிவிக்கவில்லை...சோனியா இந்த முறையாவது கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்பாரா ?..
அப்படி செய்தல், ஈழ துரோகத்தால் காயம்பட்டு உள்ளவர்களுக்கு , சிறிது மருந்திடுவது போல இருக்கும்...செய்வாரா ?
வணக்கம் நிரூபன்! நெஞ்சு கனத்துப் போயிருக்கும் ஒரு இருள் கால வேளை! தூக்கமும், பசி முதலிய இன்ன பிற உணர்வுகளும் தொலைந்து போய்விட்ட ஒரு கொடும் காலப்பகுதியில் நிற்கிறோம்! நெஞ்சமோ துடியாய் துடிக்கிறது! என்னதான் நடக்கப் போகிறது?
ஈழத் தமிழர்கள் இந்தியாவைப் பல வழிகளிலும் நம்பிக் கெட்டவர்கள். இந்திய மத்திய அரசிற்காக தான் எழுதிய கடிதங்கள், எந்தவிதமான மனமாற்றத்தையும் மத்திய அரசின் மனதில் ஏற்படுத்தவில்லை எனும் ஒரே ஒரு காரணத்தினைத் தொடர்ந்து; தன்னுடைய இந்திய அரசு மீதான நம்பிக்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரன். ////
அவர் அன்றே உணர்ந்துவிட்டார்! நாம்தான் தாமதித்து விட்டோம்!
*விடுதலைப் புலிகள் அமைப்பில் தற்கொலைத் தாக்குதல் நடாத்தச் செல்லுவோர்- தாம் இறப்பது நிச்சயம் என்று முடிவு செய்து தான் கரும்புலித் தாக்குதல் நடாத்தச் செல்லுவார்கள். அப்படி இருக்க, சந்தேகத்தின் பேரில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதானோரை, எப்படித் தூக்குத் தண்டனைக்கு உட்படுத்தும் போது, கருணை மனுக் கோருவார்கள்? சாவினைத் துணிந்தல்லவா அவர்கள் ஏற்க வேண்டும்.///
கண்டிப்பாக! இந்த மூன்று அப்பாவி ஜீவன்களுக்கும், ராஜீவ் காந்தி கொலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று மத்திய அரசுக்கும், சோனியாவுக்கும் நன்கு தெரியும்!
சோடித்து குற்றம் சாட்டி தண்டனை வழங்குவர்களுக்குத் நியாயம் சொல்லி என்ன பயன்?
இந்திய மத்திய அரசு தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகள் அவர்களுக்கு திருப்தி தரவில்லை போலும்! அதனால் தான் இன்னும் இன்னும் உயிர்ப்பலி கேட்கிறார்கள்!
இப்பதிவுக்கு போடப்பட்டுள்ள முதலாவது படம் - இத்தருணத்தில் சாலவும் பொருத்தம்! தனது கணவனை துவக்கால் அடித்த சிங்களக் கொலைவெறிக் கூட்டத்தோடு சோனியா நல்லுறவுதானே பேணுகிறார்! எம்மோடு மட்டும் ஏன் இப்படி?
இனிவரும் நாட்களில்.... அந்தப் பெற்றோர்கள்... அவர்தம் சகோதரர்கள்... உறவினர்கள்..... சாப்பிடுவார்களா? தூங்குவார்களா? எப்படிக் கழியப் போகின்றன அவர்களது பொழுதுகள்? நரகத்தைவிடக் கொடுமையாக அல்லவா இருக்கப் போகிறது... அடுத்து வரும் நாட்கள்!
தமிழகம் இப்போது மிகவும் கொந்தளிப்பாக உள்ளது! ஈழத்தமிழனுக்கு அடிவிழும் போதெல்லாம், அவற்றை தன் மடியில் தாங்கி, எமக்காக பாரம் சுமப்பவர்கள், தமிழக உறவுகள்! - முள்ளிவாய்க்கால் சம்பவத்தின் போது இதனை நாம் நேரடியாக கண்டோம்! அந்த தூய இதயங்களுக்காக, நாம் காலம் முழுவதும் நன்றி சொல்ல வேண்டும்!
ஆனால் எமக்காக, தங்கள் மத்திய அரசிடம் எவ்வளவு கெஞ்சினார்கள் தமிழக உறவுகள்? ஆனால் சோனியா கோஷ்டி எவற்றையுமே பொருட்படுத்தவில்லையே? ஏன்?
உண்மையில் இந்திய மத்திய அரசு, தமிழகத்தை தனது ஒரு மாநிலமாக கருதுகிறதா? அல்லது அந்நிய நாடாக கருதுகிறதா?
இலங்கைத் தமிழனை சிங்களவன் சீரழிப்பது போல, தமிழகத் தமிழனை மத்திய அரசு பந்தாடுகிறதே! அப்படியானால் தமிழனுக்கு உலகில் மதிப்பே இல்லையா?
ஈழத்தமிழன் இன்றுவரை போராடிக்கொண்டுதான் இருக்கிறான்! இனியும் போராட்டம்தான் அவனது வாழ்க்கை!
இதுபோல தமிழகத் தமிழனும் தனிநாடுகேட்டுப் போராட வேண்டுமோ?
நேரவிருக்கும் கொடூரத்தை தடுத்து நிறுத்த, தமிழக முதல்வரால் முடியுமாம்! அம்மா.... உங்களது காலைப் பிடித்துக் கெஞ்சுகிறோம்! உங்களை நம்புகிறோம்! உங்கள் நெஞ்சுறுதியும், தீர்க்கமான முடிவும் எமக்குத் தெரியும்!
தயவுசெய்து எங்கள் கண்ணீரைத் துடையுங்கள்!
ரோம் நகரம் எரியும் போது, நீரோ மன்னன் பிடில் வாசித்ததாக ஒரு கதை சொல்வார்கள்!
அதுபோல, வன்னி பற்றி எரியும்போது, அந்தப் பெரியவர் மான்களையும், மயில்களையும் ஆடவிட்டு ரசித்தார்! தமிழன் கெஞ்சினான்! கதறினான்!! நெருப்பிலே வீழ்ந்து உயிர்விட்டான்! அந்தக் கல்நெஞ்சுக்காரனை எம்மால் கரைக்க முடியவில்லை!
பின்னர் தேர்தலின் போது தமிழன் வெகுண்டு எழுந்தான்! தனது ஒட்டு மொத்தக் கோபத்தையும் தேர்தலில் காட்டினான்! கலைஞர் குழாத்திற்கு மரண அடி கொடுத்தான்!
இப்போது அம்மாவின் முறை! மீண்டும் தமிழன் அழுகிறான்!
அம்மா..... இது தேன்கிண்ணம் ஏந்தும் நேரமில்லை!! புரிந்துகொள்ளுங்கள் எம்மை!
சனிக்கிழமை தொடக்கம் தமிழகத்தில் நடைபெறவுள்ள போராட்டங்கள், ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும் என்றே நம்புவோம்!
சுதா.... அழாதடா.... உன்னை நினைக்க நினைக்க..... எங்கள் நெஞ்சு படும் வேதனையை வார்த்தையில் வடிக்க முடியலைடா!!!
தயவு செய்து அம்மாவை ஆறுதல்படுத்து! சித்தாராவையும், டீச்சர் அக்காவையும் மற்ற எல்லா உறவுகளையும் அழவேண்டாம் என்று சொல்லு!
கண்டிப்பாக நல்லதுதான் நடக்கும்!
நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை, பாரிஸ், லா சப்பேலில் மாபெரும் ஊர்வலம் ஒன்றை நடத்துகிறோம்! எங்கெல்லாம் தமிழன் வாழ்கிறானோ, அங்கெல்லாம் போராட்டம் வெடிக்கட்டும்!
//எட்டுக் கோடி மக்கள் இருக்கின்றார்கள்
எனும் உணர்வுடன் தானே
முள்ளிவாய்க்காலிலிருந்து கதறிக் கதறி
உன் பெயர் சொல்லி அழுதோம்?
அப்போதாவது கடல் தடுத்ததால்
கைவிட்டு விட்டோம் எனச் சொல்லி
நீ எம்மைத் தேற்றலாம்//
:-(
என்ன சொல்றதுன்னே தெரியல சகோ.......
சோகம் தொண்டை அடைத்து எதுவும் பேசவோ சிந்திக்கவோ இயலாதவளாய் என்னை மாற்றிவிட்டது,எனக்கு மரணம் என்ற உணர்வை ஏற்படுத்திவிட்டது...
நம்மால் இயன்ற முயற்சிகளை கடைசிவரை செய்வதை தவிர வேறொன்றும் வழியில்லை. கடைசி வரை போராடுவோம்
மதிசுதா கடிதத்தை அன்றே படித்தேன். இன்று தான் விடை கிடைத்தது. இறைவன் அவர்களுக்கு பக்கபலமாய்,உதவியாய் இருக்க போதுமானவன்.
மரண த்ன்டணை என்பதே நாகரிக உலகில் ஒழிக்கப் படவேண்டும்.இந்த வழக்கை பொறுத்த வரையில் சரியாக விசாரணை இந்த 20 வருடங்களில் நடத்தவில்லை ,குற்றத்திற்கு உதவினார்கள் என்பதுதான் குற்றச்சாட்டு.அதுவும் சரியாக் நிரூபிக்க படவில்லை எனும் போது இவர்கள் விடுவிக்கப் படுவதே நியாயம்.
நீதியான விசாரணை இல்லை!
ராஜீவின் படுகொலை பற்றிய உண்மைகள் சுப்பிரமணிசுவாமிக்குத் தெரியும்.இதுவரை அந்த ஆசாமி விசாரிக்கப்படல! விசாரிக்கப்படவும் மாட்டார்.
ம.தி.சுதாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியல!
இந்த பிரச்சனை முடிவுக்கு வராவிட்டால் தமிழகத்தையும் தமிழக மக்களையும் ஒரு நாளும் வரலாறு மன்னிக்காது தமிழர்களும் மன்னிக்க,மாட்டார்கள்.
எப்பவோ நடந்துவிட்ட ஒரு சம்பவத்துக்காக..இன்று இந்த முடிவு எடுத்திருப்பது இன்னமும் தமிழ் மக்கள் மனதை படிக்காத இந்திய செயல்ப்பாடே!
இந்த பிரச்சனை முடிவுக்கு வராவிட்டால் தமிழகத்தையும் தமிழக மக்களையும் ஒரு நாளும் வரலாறு மன்னிக்காது தமிழர்களும் மன்னிக்க,மாட்டார்கள்.
எப்பவோ நடந்துவிட்ட ஒரு சம்பவத்துக்காக..இன்று இந்த முடிவு எடுத்திருப்பது இன்னமும் தமிழ் மக்கள் மனதை படிக்காத இந்திய செயல்ப்பாடே!
மரண தண்டனை என்ற கொள்கையே எப்போது மாறுமோ???
மிக மிக வேதனைக்குரிய விடயம்...
அப்பாவிகளை வைத்து இப்படிச்செய்ய எண்ணுகிறார்களே ..
யார் தான் எமக்கென்று நியாயம் கேட்க ..
தமிழக உறவுகளே இதற்கெதிராக பெரும் போராட்டம் ஒன்றைச்செய்யுங்களேன் ...
மதிசுதாவின் அண்ணனுமா..??
என்ன சொவதென்றே தெரியவில்லை..
உண்மையான சரியான கருத்துக்கள்...சகோ...
வேதனை, வெட்கம், அவமானம்
நல்லது நடக்கும் என நம்புவோம் .....ஆறு கோடி தமிழர்கள் உங்களுக்கு ஆதரவாக உள்ளார்கள் சகோதரர் மதி சுதா .....
இவர்கள் தூக்கிலடப்போவது இந்த மூன்று பேரை அல்ல உலகேங்கிலும் உள்ள மொத்த தமிழர்களின் உணர்வையும்தான்.
மதி.சுதா அவர்களின் கடிதத்தை அன்றைக்கு படிக்கும் போதே கண்ணில் நீர் கோத்துக்கொண்டது.இந்த சூழலில் அவரின் மனநிலையை நினைத்துப்பார்க்கவே மனம் கனக்கிறது.அற்புதம்மாள் என்ற தமிழ்த்தாயின் கதறல் அதிகாரதிலிருப்போருக்கு கேட்க்க வில்லையா?
நாம் என்ன செய்வது போராடுவதைத்தவிர.
நல்லதே நடக்கும் என்று நம்புவோம்!
வந்தேன் வாசித்தேன் வாக்களித்தேன் என்ன சொல்வதென்று புரியவில்லை
மிகவும் வருந்ததக்க விஷயம். ஏன்
இப்படி நடந்துக்கராங்க. இவர்களை
தூக்கில் போட்டால் போனவங்க
திரும்ப வந்துடுவாங்களா.இருக்குரவங்களையும் சாகடிக்கராங்க.மனசு பூரா பாரமாத்தான்
இருக்கு. புலம்புவதைதவிர நம்மால
என்ன செய்ய முடியுது. ஒன்னுமே இல்லே
நன்மையில் முடியுமென்றே நம்புவோம்.
சகோ
மத்திய அரசின் பிடி வாதம்
மாநில அரசின் மௌனம்
உணர்வுத் தமிழர்களின் வெறும்
அறிக்கைகள் தடுத்துவிடும் என்று
தோன்றவில்லை
நேரடி நடவடிக்கைகளோ
பெருமளவில் போராட்டங்கள்
நடந்தால் தவிர பலனில்லை
நடக்குமா...
புலவர் சா இராமாநுசம்
எழுத வார்த்தைகள் வரவில்லை.வார்த்தைகளால் உணர்த்த முடியாத வேதனை,நெஞ்சை அடைக்கிறது.
எழுத வார்த்தைகள் வரவில்லை நிரூபன். நாம் நாளை சாகப்போகிறோம் என்று உயிர்வாழ்வது கொடுமையிலும் கொடுமை. மரண வேதனையை அனுபவித்து கொண்டு இருக்கின்றனர். இதை விட ஒரு தண்டனை அவர்களுக்கு வேண்டுமா தமிழக அரசே உங்களை நம்பி அரியணையில் ஏற்றி உள்ளோம். கருணாநிதி செய்த அதே தவறை நீங்களும் செய்யாதீர்கள். ஏன் உடன் பிறப்புகளை காப்பாற்றுங்கள்.
தவறு புரிந்தவனையே தண்டிப்பது கோழைத்தனம் மன்னிப்பதே மனித குணம்.இவர்கள் தவறே புரிந்தார்களா? என்பதே ஐயம் திரிபுற உறுதிப்படுத்தாமல் உயிர் குடிக்க துடிக்கும் இந்திய தேசமே ஒரு கணம் சிந்திப்பாயா? இவர்கள் உயிர்களை பறிப்பதன் மூலம் ராஜீவ் காந்தி மீண்டுவரப்போறாரா? அல்லது தமிழகத் தமிழர்களால் இந்திய தேசத்தில் ஈழத்தமிழனுக்காய் எந்த துரும்பையும் அசைக்க முடியாது என்று மீண்டும் நீருபித்து சவால் விடுத்து இந்த நரபலி செய்வதால் தானும் அவர்களுக்கு வீரம் இன உணர்வு வந்துவிட போகிறதா?
இரண்டும் நடவாத நிகழ்வுகள் என்பது தெரிந்தும் ஏன் இந்த நரபலி?
நல்லதே நடக்கும் மக்கா கவலை வேண்டாம்....
அவர்கள் தவறு செய்யவில்லை என்ற பட்ச்சத்தில் , நிச்சயம் அவர்களுக்கு தண்டனை இல்லாமல் இருக்க ஆண்டவனிடம் வேண்டுகிறேன். இறைவன் நிச்சயம் உதவுவார்.
பதிவை படிக்கையில் நெஞ்சம் கனக்கிறது.
ஆறுதல் மட்டும் சொல்லும் நிலையில் நாங்கள்....
நல்லது நடக்க மனதார நினைக்கிறேன்....
நண்பர் மதிசுதா கலங்காதீர்கள்...
மாற்றம் எதிர்பார்ப்போம்! மற்றதிற்கு எதிர்ப்பாவோம்!!
இத்துடன் ஆவது மத்திய அரசின் தமிழ் விரோத போக்கிற்கு முடிவுகாண வேண்டும். தலைவர் அன்று உணர்ந்தது மிகச்சரியே. கடவுள் தான் இரங்க வேண்டும் see http://sarujan-sarujan.blogspot.com/2011/08/blog-post_26.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+Sarujan+%28sarujan%29
இன்னுமா அடங்கவில்லை உன் கொலை வெறி ?
ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்,ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது.
அன்றாட வாழ்கையில் நாம் செய்கின்ற சிறு தவறுகளுக்கு அதற்குரிய தண்டனை அனுபவிப்பதற்கு நம் மனம் ஒத்துக்கொள்வதில்லை.ஆனால் அபாண்டமாய்ப் பழி சுமத்தப் பட்டு,வசந்த காலமான இளமையை சிறைகூண்டுக்குள் இழந்து(ஒன்றல்ல இரண்டல்ல 21 ஆண்டுகள்),தன் பக்க நியாயத்தைச் சொல்லக்கூட வாய்ப்பில்லாமல் சாவுக்கு நாள்க்குறிக் கப் பட்ட அந்த மனிதர்களின் உணர்வுகளை உணர்ந்து பாருங்கள்!!!!!!!!
தமிழனே உன் சகோதரன் பலிக்கடா ஆவதைப் பார்த்துகொண்டிராதே.
மனம் வேதனையில் கொந்தளிக்கிறது...
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட,நரித்தனமிக்க, மானங்கெட்ட மத்திய அரசை நினைக்கையிலே
எங்கள் உடன் பிறப்புக்களை காப்பாற்றுங்கள்
கரையாத மனங்களும் கரையட்டும்!
ராஜீவ் காந்திஐ துடிக்க துடிக்க கொடூரமாக கொலை செய்தவர்களுக்கு மன்னிப்பா...ராகுலும், பிரியங்காவும் கல்வியை கூட தொடர முடியாத நிலையில் கொடுரம் செய்தவர்களுக்கு மன்னிப்பா. இன்றைக்கு அமெரிக்க, ஐரோப்பா, மிடில் ஈஸ்ட் , இந்திய என பல நாடுகளில் செமிகால், ஆட்டோ, கம்ப்யூட்டர் வல்லுனர்கள் பணிபுரிந்து நாட்டின் வளர்ச்சிக்கும், கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள் என்றால் அதற்கு முழு முதற் காரணம் சாம் பிட்ரோடவும், ராஜீவ் காந்தியும் மட்டுமே. ராஜீவ் காந்தி இறந்த படியால்தான் தமிழ்நாட்டின் ஹிட்லர் , மாயவதி, எடியுரப்பா போன்ற அரசியல்வாதிகள் வந்து ச்பெக்ட்ரும் வரை கொள்ளை அடித்து இருக்கிறார்கள். அவர் இறந்தது நாட்டுக்கு மிக பெரிய இழப்பு.
தமிழகம் என்றில்லாமல் எல்லா இடங்களிலும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன.நேற்றே எங்கள் மனித உரிமை ஆர்வலர்களால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சகோ!உங்கள் பதிவுக்கு சொல்ல வேண்டியவற்றை செங்கோவியின்
http://sengovi.blogspot.com/2011/08/blog-post_27.html
பதிவில் சொல்லி விட்டேன்.இந்தப் பின்னூட்டம் எதிர்கால பார்வையாளர்களுக்கான பதிவு மட்டுமே.
நிரூ….!
///பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரைச் சாகடித்து விடுவதன் மூலம் ராஜிவ் காந்தியின் கொலைக்கு தீர்வு எட்டப்பட்டதாக சம்பந்தப்பட்டவர்கள் நினைத்தால், அது மிகப்பெரிய தவறு. வேணுமென்றால் பழிவாங்கிய திருப்தியை அது அவர்களுக்கு வழங்கலாம். ஆனால், மறுபக்கத்தில் பலரது மனங்களில் அதே வன்மத்தையும்- பழிவாங்கும் உணர்ச்சியையும் விதைத்துவிட்டே செல்லும். எந்தக் காலத்திலும் மரணம் சம்பந்தப்பட்டவரை திருத்தியதாக வரலாறுகள் இல்லை!! ////
இது என்னுடைய இன்றை பதிவில் சொன்னது. பொருத்தமான இருக்கும் என்று நினைக்கிறேன்.
////jagadeesh said...
ராஜீவ் காந்திஐ துடிக்க துடிக்க கொடூரமாக கொலை செய்தவர்களுக்கு மன்னிப்பா/// விடிய விடிய ராமன் கதை விடிஞ்ச பிறகு ராமன் சீதைக்கு என்ன முறை....
போங்க சார் போய் புள்ள குட்டியாவது நல்லா வளர்க்க பாருங்க ....
மனம் கனக்கிறது சகோதரா ,பதிவு படிக்கையிலே மனதில் வேதனை மிஞ்சுகிறது,இறைவனை வேண்டிக்கொள்கிறேன் நண்பரே.
சுதாவின் கடிதம் படித்தேன்,முழுதும் படிக்க இயலவில்லை கண்களில் கண்ணீர் மறைக்கிறது.
@jagadeesh
ராஜீவ் காந்திஐ துடிக்க துடிக்க கொடூரமாக கொலை செய்தவர்களுக்கு மன்னிப்பா...ராகுலும், பிரியங்காவும் கல்வியை கூட தொடர முடியாத நிலையில் கொடுரம் செய்தவர்களுக்கு மன்னிப்பா. ///
ஏன் ராஜீவ் காந்தி தெருத்தெருவாக பிச்சையெடுத்து, தனது பிள்ளைகளைப் படிக்க வைத்தாரா? அவர் இறந்த பிறகு பிள்ளைகளின் படிப்பு தடைப்படுவதற்கு!
ஒரு வேளை தந்தை இறந்த கவலையில் பிள்ளைகள் படிப்பைத் தொலைத்தனர் என்று வைத்துக் கொள்வோம்! அப்படியானால், ராஜீவ்காந்தியின் படைகள் ஈழத்தில் எத்தனை அப்பாவி தந்தையர்களை படுகொலை செய்தார்கள்? அவர்களது பிள்ளைகளும் தானே படிப்பைத் தொலைத்து நிற்கிறார்கள்!
உலகத்தில் எல்லா உயிர்களும் சமம் தானே! உணர்வு எல்லோரும் ஒன்றுதானே! பிறகெப்படி அரசனுக்கொரு நீதி, ஆண்டிக்கொரு நீதி?
எல்லோரும் ஏதோ சோகத்தில் இடிந்து போயிருக்கும் இந்த நேரத்தில், ஈழத்தமிழர்களும், தமிழக உறவுகளும் ஒரு சேர, துயரத்துள் மூழ்கியிருக்கும் இந்த நேரத்தில், எதை பேசுவது? எங்கே பேசுவது என்று தெரியாமல், இங்கு வந்து நின்று சத்தியெடுக்கிறார்கள்!
என்ன செய்ய?
இவர்களுக்காக கடவுளிடம் பிராத்திப்போம்..
///ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
எல்லோரும் ஏதோ சோகத்தில் இடிந்து போயிருக்கும் இந்த நேரத்தில், ஈழத்தமிழர்களும், தமிழக உறவுகளும் ஒரு சேர, துயரத்துள் மூழ்கியிருக்கும் இந்த நேரத்தில், எதை பேசுவது? எங்கே பேசுவது என்று தெரியாமல், இங்கு வந்து நின்று சத்தியெடுக்கிறார்கள்!
என்ன செய்ய?/// என்ன செய்வது ஆரிய கூட்டத்துக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டார்கள் போலும் .
@அனாமிகா துவாரகன்
சீ தூ
இதனை படிக்கவே கேவலமாக இருக்கின்றது. வன்னியில் சாராயம் காய்ச்சியதாக கட்டுரை எழுதிய மதிசுதா போன்ற தேசத் துரோகிகளுக்கு அண்ணனாக சாந்தன் இருப்பதை விட தூக்கில் தொங்குவதே சிறந்தது.////
ஆஹா மறுபடியும் ஆரம்பிச்சுட்டாங்களா? இதுகளுக்கு விளக்கம் சொல்லிச் சொல்லியே மண்டையில இருக்குற மிச்ச மயிரும் கொட்டுண்டிடும் போல!
வன்னி மக்கள் சாராயம் காய்ச்சினர் என்று சொன்னதற்காக, மதி சுதாவை துரோகி என்பதா? ஒரு துரோகிக்குரிய வலியூ இவ்வளவுதானா? நாசமாப் போச்சு!
பற்றரி வாங்கிக் கொடுத்தார் என்பதற்காக அண்ணனுக்கு தூக்குத் தண்டனை!
வன்னிமக்கள் சாராயம் காய்ச்சினர் என்று சொன்னதற்காக தம்பியாருக்கு துரோகிப் பட்டம்! நல்லா இருக்குங்கையா உங்க நீதி!
ஏந்தான் சுதாவின் குடும்பத்தாருக்கு இப்படியெல்லாம் அடிமேல் அடியாய் விழுகிறதோ தெரியவில்லை!
இதைத்தான் பட்ட காலிலே படும் என்று சொல்வார்களோ?
நான் ஒன்றும் காங்கிரஸ் கட்சி அனுதாபி கிடையாது.ஆனால் ராஜீவ் காந்தி என் நாட்டின் பிரதமர்.அவர் நல்லவரா, திறமையுள்ளவரா என்பது எனக்கு தெரியாது.ஆனாலும் அவர் என் நாட்டின் பிரதமர்.குப்பனோ சுப்பனோ யார் வேண்டுமானாலும் பிரதமர் ஆனாலும் அவரும் என் தாய் நாட்டின் பிரதமரே.என் பிரதமரை கொல்வதற்கு எந்த நாட்டை சேர்ந்தவருக்கும் எந்த இனத்தை சேர்ந்தவருக்கும் எந்த சூழ்நிலையிலும் எந்த காரணத்திற்காகவும் உரிமை கிடையாது.
வன்னிமக்கள் சாராயம் மட்டும் காய்ச்சவில்லை! இன்னும் பல சமூக தீங்கான காரியங்களும் செய்தார்கள்! இளவயதுத் திருமணம், கள்ளக் காதல், செக்ஸ் வீடீயோ பார்த்தல் போன்ற பல வேலைகள் செய்துள்ளார்கள்!.....
சரியா? சுதா சொன்னதை விடவும் கொஞ்சம் மேலதிகமாக நான் சொல்லியிருக்கிறேன்! எனவே அந்த துரோகிப் பட்டத்தை எனக்குத் தாருங்கள், அனாமிகா!
நண்பனுக்காக அந்தப் பட்டத்தை நான் சுமக்கிறேன்! அவனை சிறிது காலம் நிம்மதியாக இருக்கவிடுங்கள்!
அப்புறம் அனா, உங்களிடம் ஒரு கேள்வி! துரோகிப் பட்டத்தை சாதாரணமாகத் தருவீர்களா? அல்லது மேடை போட்டு பொன்னாடை போர்த்திக் கவுரவித்துத் தருவீர்களா?
ஏன்னா, முன்னப் பின்ன துரோகிப் பட்டம் வாங்கிய அனுபவம் இல்லை! அதனால்தான் கேட்கிறேன்!
இன்னும் நிறைய எழுதுவேன்! இப்போது காமெடி பண்ண மனசு வரல!
கொஞ்ச நாள் பொறுங்க!
////jagadeesh said...
நான் ஒன்றும் காங்கிரஸ் கட்சி அனுதாபி கிடையாது.ஆனால் ராஜீவ் காந்தி என் நாட்டின் பிரதமர்.அவர் நல்லவரா, திறமையுள்ளவரா என்பது எனக்கு தெரியாது.ஆனாலும் அவர் என் நாட்டின் பிரதமர்.குப்பனோ சுப்பனோ யார் வேண்டுமானாலும் பிரதமர் ஆனாலும் அவரும் என் தாய் நாட்டின் பிரதமரே.என் பிரதமரை கொல்வதற்கு எந்த நாட்டை சேர்ந்தவருக்கும் எந்த இனத்தை சேர்ந்தவருக்கும் எந்த சூழ்நிலையிலும் எந்த காரணத்திற்காகவும் உரிமை கிடையாது./// இதையே அப்பிடியே ஒரு ஈழ தமிழனாய், ராஜீவ் படையால் சீரழிந்த குடும்பத்தை சேர்ந்தவனாய் ,அவன் நிலையில் இருந்து ஜோசித்து பாருங்கள்!
பாரத பிரதமரை அவர் நாட்டில் வைத்து கொன்றதை நான் ஏற்ருக்கொள்ளவிலை ..ஆனால் தனக்கு இருந்த அதிகாரங்களை வைத்து ஒரு இனத்தையே கருவருத்தாரே ,அவரின் இறப்பு எந்த விதத்திலும் எமக்கு தப்பாக படவில்லை...
தமிழ் ஈழ விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் அனைவருக்கும் சில கேள்விகள். இன்றைய தினம் மனிதாபிமானம், மனசாட்சி என்று பேசும் நீங்கள், எந்த காரணத்தை மனதில் வைத்துக்கொண்டு ராஜீவ் காந்தி அவர்களை குண்டுவெடித்து கொன்றனர் விடுதலைப்புலிகள் இயக்கத்தினர். அதே மனிதாபிமானத்தோடு ராஜீவ் காந்தியையும் உயிருடன் வாழ வைத்திருக்கவேண்டியதுதானே. ஏன் செய்யவில்லை?? போகட்டும், ராஜீவ் காந்தியுடன் சேர்ந்து பல்வேறு மனித உயிர்ப் பலிகள் ஏற்படும் என்று குண்டுவெடிப்பு சதித் திட்டம் தீட்டும்பொழுது இவர்கள் யாருக்கும் தெரியாதா?? தமிழர் தமிழர் என்று வெறும் வாயில் "மூச்சு" விடும் உங்களுக்கெல்லாம் ஒரு இறுதி கேள்வி, ராஜீவ் காந்தியைக் கொல்ல தமிழகத்தை ஏன் தேர்ந்தெடுத்தனர். காரணம், ஈழ விடுதலைப்புலிகளைக் கண்மூடித்தனமாக ஆதரிக்க உங்களைப்போன்று இனவெறி கொண்ட ஆட்கள் இருப்பதால்தான்.
நான் ஒன்றும் காங்கிரஸ் கட்சி அனுதாபி கிடையாது.ஆனால் ராஜீவ் காந்தி என் நாட்டின் பிரதமர்.அவர் நல்லவரா, திறமையுள்ளவரா என்பது எனக்கு தெரியாது.ஆனாலும் அவர் என் நாட்டின் பிரதமர்.குப்பனோ சுப்பனோ யார் வேண்டுமானாலும் பிரதமர் ஆனாலும் அவரும் என் தாய் நாட்டின் பிரதமரே.என் பிரதமரை கொல்வதற்கு எந்த நாட்டை சேர்ந்தவருக்கும் எந்த இனத்தை சேர்ந்தவருக்கும் எந்த சூழ்நிலையிலும் எந்த காரணத்திற்காகவும் உரிமை கிடையாது.////
நன்றி ஜெகதீஸ்! உங்கள் தாய்நாட்டுப் பற்றை மிகவும் நேசிக்கிறேன்! ஒரு தூய்மையான இந்தியனாக நீங்கள் பேசுகிறீர்கள்! சொல்லப் போனால் உங்கள் மீது இன்னும் கொஞ்சம் மரியாதை கூடுகிறது! தாய் நாட்டை நேசிக்கும் எவரையும் நான் மதிக்கிறேன்!
இப்போது புரிந்து கொள்கிறேன் உங்கள் கோபம் நியாயமானது என்பதை!
நிற்க, ஒரே ஒரு கேள்வி!பதிலை எதிர்பார்க்கிறேன்!
தமிழகத்தில் நிறைய, கட்சிகளும், தனி மனிதர்களும், மக்களும் இந்த தூக்குத் தண்டனையை எதிர்க்கிறார்களே! இணையத் தளங்களில் துடியாத் துடிக்கிறார்களே! அவர்கள் எல்லாம் யார்? தாய் நாட்டை நேசிக்காதவர்களா? அல்லது தங்கள் பிரதமரை நேசிக்காதவர்களா? அவர்கள் இந்தியர்கள் இல்லையா?
உங்கள் பார்வையில் அவர்கள் யார் நண்பரே?
jagadeesh said...@ ஒருவேளை அன்று ராஜீவ் அவர்கள் ஈழத்திலே செய்த படுகொலைகளுக்காக ஐநாவோ இல்லை வேறு ஒரு பலம் வாய்ந்த நாடுகளோ ஒன்றிணைந்து அவருக்கு மரண தண்டனை அறிவித்தார்கள் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்ளுங்கள்...... உங்கள் மனநிலை எப்படி இருந்திருக்கும்??
@கந்தசாமி.
jagadeesh said...@ ஒருவேளை அன்று ராஜீவ் அவர்கள் ஈழத்திலே செய்த படுகொலைகளுக்காக ஐநாவோ இல்லை வேறு ஒரு பலம் வாய்ந்த நாடுகளோ ஒன்றிணைந்து அவருக்கு மரண தண்டனை அறிவித்தார்கள் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்ளுங்கள்...... உங்கள் மனநிலை எப்படி இருந்திருக்கும்??
அதானே?
அத்துடன் ஜகதீஸ் அவர்களே, மேலே பாருங்கள், உங்கள் பிரதமரை ஒரு சிங்களவன், துவக்குப் பிடியால் அடிக்கிறானே! அவன் மீது நீங்கள் ரொளத்திரம் கொள்கிறீர்களா?
////jagadeesh said...
எந்த காரணத்தை மனதில் வைத்துக்கொண்டு ராஜீவ் காந்தி அவர்களை குண்டுவெடித்து கொன்றனர் விடுதலைப்புலிகள் இயக்கத்தினர்.//// முதலில் வழக்கை நியாயமான வழியில் விசாரணை செய்ய சொல்லுங்கள் அவிழ்க்கப்படாத முடிச்சுக்கள் இன்னமும் பல உள்ளன. அவற்றை எல்லாம் மூடி மறைக்க தான் இன்று இந்த மூன்று அப்பாவி உயிர்கள் பலி எடுக்கப்படுகிறார்கள்.
ம.தி.சுதா வின் பதிவை படித்த போதே நினைத்தேன். மிக வருத்த மாக உள்ளது.
தமிழனாய் பிறந்ததுக்கு வெட்கப்படுகிறேன்.
இந்த தூக்குத் தண்டனை மட்டுமல்ல எல்லா தூக்கு தண்டனையும் தடை செய்யப் பட வேண்டியதே.
தமிழன் என்பது வேறு, தீவிரவாதம் என்பது வேறு. இவர்களுக்கு கருணை அளிப்பது என்றால் அப்புறம் எதுக்கு சட்டம், போலீஸ் எல்லாம். யார் வேண்டும்னாலும் கொலை, கொள்ளை பண்ணிக்கலாம் ஆனால் தண்டனை இல்லை அல்லது குறைவு என்றால் இன்னமும் குற்றங்கள் பெருகும்.அப்படி இவர்கள் உத்தமர்கர்களாக இருந்தால் நிச்சயம் காப்பாற்றப் படுவர்.
jagadeesh said.../////தமிழ் ஈழ விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் அனைவருக்கும் சில கேள்விகள். இன்றைய தினம் மனிதாபிமானம், மனசாட்சி என்று பேசும் நீங்கள், எந்த காரணத்தை மனதில் வைத்துக்கொண்டு ராஜீவ் காந்தி அவர்களை குண்டுவெடித்து கொன்றனர் விடுதலைப்புலிகள் இயக்கத்தினர்./// தீவிரவாத போக்கை கையில் எடுத்த ஒரு அமைப்புக்கும் ஒரு ஜனநாயக ஆட்சிக்குரிய நாட்டுக்கும் மிக பெரிய வித்தியாசம் உங்களால் உணர்ந்து கொள்ள முடியவில்லையா?
புலிகள் மனிதாபிமானத்தை அதிகளவில் கையில் எடுத்திருந்தால் அவர்கள் காந்திய வழியை அல்லவா பின்பற்றியிருந்திருப்பார்கள்.
ஈழ விடுதலை போரில் காந்திய வழி தோற்றதனால் தானே இளைஞர்கள் அன்று ஆயுதம் தரித்தார்கள்......
(இதுக்கெல்லாம் இனி முதலில இருந்தேல்லோ வரணும்)
jagadeesh said...////இவர்களுக்கு கருணை அளிப்பது என்றால் அப்புறம் எதுக்கு சட்டம், போலீஸ் எல்லாம். // அந்த சட்டம் போலிசை வைத்து தானே இன்னமும் நியாயமான விசாரணை இருபத்தி ஒரு வருடங்கள் கழித்தும் மேற்கொள்ளப்படவில்லை..
ஒரு வேளை எதிர்காலத்தில் ஆட்சிகள் மாறும் போது இவர்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கப்பட்டால் பாலைவனமாகி போன இவர்களின் இருபத்தியொரு வருடங்களையும் யார் மீட்டு கொடுப்பது?
jagadeesh said...///யார் வேண்டும்னாலும் கொலை, கொள்ளை பண்ணிக்கலாம் ஆனால் தண்டனை இல்லை// இந்த கேள்வியை நீங்கள் ராஜீவ் காந்தி அவர்களை நோக்கியும் கேட்கலாம் அல்லவா ?
சட்டம் அனைவருக்கும் பொதுவானது தானே !!!
அப்படி இவர்கள் நிரபராதிகள் என்றால், நிச்சயம் தண்டனை ரத்து செய்ய பிரார்த்திக்கிறேன். நான் பேசியதை இலங்கைத் தமிழர்கள் யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம், நன்றி.
ஆதாராங்கள் அடிப்படையில் ஆணித்தரமாக கருத்தை வலியுறுதியுள்ளீர்கள்.
எனது கேள்விக்கு சகோதரர் ஜகதீஸ் இன்னும் பதில் சொல்லவில்லை என்று நினைக்கிறேன்!
சுயநல அரசியல்வாதிகள் தான் அப்படி படை எடுத்திருக்கிறார்கள், சில கூட்டம் தமிழ் தமிழ் என்று சுற்றித் திரிகிறார்கள். எல்லோருக்கும் தனிப்பட்ட கருத்து இருக்கும் ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி..
என்னவோ எனக்கு தமிழன் என்பதால் தவறுக்கு தண்டனை கிடையாது என்பதில் உடன்பாடு இல்லை.
உங்கள் கருத்துகளுக்கு நன்றி ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி அவர்களே.
மீடீயாக்கள் மனது வைத்தால் மூன்று உயிர்களும் காப்பாற்றப்படும்.
இந்த தூக்குதண்டனையை பின்னிருந்து ஊக்குவிப்பது யார்?
பாவம்,அந்தப் பச்சைக் குழந்தை ஜெகதீஷ்.அவரை ஏன் வைகிறீர்கள்?ஊறியதை அவ்வளவு எளிதில் தெளிய வைக்க முடியாது.நீதியற்ற முறையில் வழக்கு விசாரணை என்ற பெயரில் ஓர் நாடகத்தை நடாத்தி,அரசுக்கு விசுவாசம் காட்டி,இப்போ பதினோரு ஆண்டுகளுக்கு முன் ஜனாதிபதிக்கு(யாரோ ஒரு)அனுப்பிய கருணை மனுவை"தூசி"தட்டி எடுத்து "நிராகரித்து"மரண தண்டனை உறுதிப்படுத்தப்படுகிறது என்றால்,அங்கே தெரிகிறது நீதியின் லட்சணம்!
////jagadeesh said...
சுயநல அரசியல்வாதிகள் தான் அப்படி படை எடுத்திருக்கிறார்கள்// எங்கே பொது நல அரசியல்வாதிகள் நாலு பேருடைய பெயரை சொல்லுங்கள் பார்ப்போம்?
ஐயா நீங்கள் சொல்வது தவறு. தானாடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்களே ....அந்த வகையில் தான் தன் இனத்துக்கு ஒரு பிரச்சனை வரும் போதும்....
இவர்களுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை நீக்கக் கோரி பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள போதிலும் ஒரு தேசத்தின் தலைவர் கொலை செய்யப்பட்டதில் அனுதாபமோ, பாரபட்சமோ பார்க்கக் கூடாது என இந்தியத் தேசம் நினைக்கிறது.
இந்த மூவருக்கும் வழங்கப்பட்ட கருணை மனு இவ்வளவு காலம் கிடப்பில் கிடந்து தற்போது முழு மூச்சாக தண்டனை வழங்கப்பட்டுள்ளதன் பின்னணி குறித்துச் சிந்திக்கையில் பொங்கியெழும் தமிழ்ச் சமூகத்துக்கு மறைமுகமான பதிலடியாகக் கூட இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
எவ்வாறாயினும் தமிழக முதல்வரின் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் மரணத்தின் விளிம்பிலிருக்கும் இவர்களுடைய உயிர்கள் காப்பாற்றப்படலாம் என்ற நம்பிக்கை உலகத் தமிழரிடத்தே உண்டு என்பது யதார்த்தமான உண்மையாகும்.////இது இன்றைய வீரகேசரி(கொழும்பு)பத்திரிகையில் வெளியான இராமானுஜம் நிர்ஷனின் கருத்தோட்டம். நன்றி;வீரகேசரி.
jagadeesh @ எனது தந்தை கடுமையாக தாக்கப்பட்டு இறந்தது இதே இந்திய அமைதிபடையால் எனது அம்மாவும் கர்ப்பிணி என்று பாராது கடுமையாக தக்கபட்டார். இப்ப எனது அம்மா ஒரு இதய நோயாளி எங்களது கல்வி வாழ்கை இதே போல பல குடும்பங்களுக்கு உங்களது பதில் என்ன ?
jagadeesh @ எனது தந்தை கடுமையாக தாக்கப்பட்டு இறந்தது இதே இந்திய அமைதிபடையால் எனது அம்மாவும் கர்ப்பிணி என்று பாராது கடுமையாக தக்கபட்டார். இப்ப எனது அம்மா ஒரு இதய நோயாளி எங்களது கல்வி வாழ்கை இதே போல பல குடும்பகளுக்கு உங்களது பதில் என்ன ? ??
**நான் ஒன்றும் காங்கிரஸ் கட்சி அனுதாபி கிடையாது.**
சரி இருக்காத,
நிங்க மட்டும் அல்ல அவனுங்களுக்கு தமிழ்நாட்ல ஒருத்தன்கூட கிடையாது
**ஆனால் ராஜீவ் காந்தி என் நாட்டின் பிரதமர்.**
சரி இருக்கட்டும்.
உன்நாட்டு பிரதமர்னா என்ன ரெண்டு கொம்பா
உன் நாட்டு பிரதமர் உன் நாட்டு பிரச்சனைகளை கவனிக்காமல் ஏன் தேவையில்லாமல்
அடுத்தவரின் உரிமை போராட்டத்தில் தலையிட்டு அப்பாவி மக்களை கொன்று குவித்தால் விடுவார்களா
அதுதான் வாரிட்டானுங்க,
இதுல வெட்கம்கெட்ட காங்கிரசுங்க ராசிவ்காந்தி தமிழ் மக்களுக்காக பாடுபட்டாராம்
இந்த லட்சணத்துல தமிழக சாலைகளுக்கும், மருத்துவமனைக்கும் இவன் பேர் வேற
**அவர் நல்லவரா, திறமையுள்ளவரா என்பது எனக்கு தெரியாது. **
அதுகூட தெரியாமல் ஏன் சபையில ஒவரா ஒப்பிக்கிற.
**ஆனாலும் அவர் என் நாட்டின் பிரதமர்.**
இதுவே உன் குடும்பம் பாதிக்கபட்டிருந்தால் என்ன இருந்தாலும் என் பிரதமர் என்று சொல்வாயா.
அவனே ஒரு பிரங்கி திருடன் இதன் நிமித்தமாக பல வெளிநாட்டு நாளிதழ்கள் முழங்குகின்றன
ஆனால் இதை எதிர்த்து ஒரு வார்த்தைகூட காங்கிரசு சொன்னதில்லை.
கடந்த ஆண்டுக்கு முன்பு பெத்த தந்தையே தன் மகளை கற்பழிக்க முயற்சித்தான்
அந்த பெண் அவனை(விலங்கை) கொன்றாள்,
நீ சொல்வதுபோல் என்ன இருந்தாலும் என் அப்பா என்று அந்த பெண் விட்டுயிருக்க வேண்டும்போல.
தமிழ் மீனவர்கள் திட்டமிட்டு கொள்ளபடுகிறார்கள்
இலங்கை கடற்படை தமிழனை நாயை சுடுகிற மாதிரி சுட்டு தள்ளுகிறான்
ஆனால் இந்திய அரசு அதை நன்கு தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது,
இதுபோதாதுனு இலங்கை இராணுவத்துக்கு இந்தியா பயிற்ச்சி கொடுக்கிறது
ஆகா தமிழர்கள் மேல்தான் என்ன ஒரு பற்று நேசம் இந்தியாவுக்கு.
**குப்பனோ சுப்பனோ யார் வேண்டுமானாலும் பிரதமர் ஆனாலும் அவரும் என் தாய் நாட்டின் பிரதமரே.**
ஆமா அப்படியே பிரதமரா ஆக்கிடபோறிங்க, போங்கடா டேய்
முதல்ல தமிழ் மீனவர்களை உன் இந்திய அரசை காபாற்ற சொல் அப்பறம் பேசலாம்
**என் பிரதமரை கொல்வதற்கு எந்த நாட்டை சேர்ந்தவருக்கும் எந்த இனத்தை சேர்ந்தவருக்கும்
எந்த சூழ்நிலையிலும் எந்த காரணத்திற்காகவும் உரிமை கிடையாது.**
இதே மனநிலைதான் இலங்கை தமிழ் இனத்துக்கும் இருக்கும்.
எந்த சூழ்நிலையிலும் எந்த காரணத்திற்காகவும் என்பது உங்களின் அடிமைதனத்தின் உச்சத்தை காட்டுகிறது
இவ யாரு அங்கு சமாதாண படைனு சொல்லி அங்கு இருக்கும் அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவிக்க.
படைத்த கடவுளே வந்து இதுபோல் கொடுமைகளை செய்தால் கடவுளையும் அழிப்பதில் தவறுயில்லை,
என்ன இருந்தாலும் கடவுள் என்று பொத்திகொண்டுயிருக்க முடியாது.
அது என்னனு தெரியல தமிழனுக்கு எதிராக ஒரு தமிழன் பேசினால் அவன் ஒரு நடுநிலைவாதி என்று மாயயை உள்ளது
தோழரே நம் இனத்துக்காக நாம் பாடுபடமால் உலகத்தில் உள்ளவனா வந்துபாடுபடுவான்.
நாளைய உலகம் நம்மளை இழிவாக பேசும்
மூச்சு இழுக்க மூக்கிருந்தும்
காற்று வாங்க உரிமை இழந்த
இனத்தில் பிறந்துவிட்டோம்
ஒன்றுபட்ட மக்களின் போராட்டங்கள் மிகவும் வலுப்பெற்றால் மாற்றங்கள் ஏற்படலாம். இற்திவரை போராடுவோம்
அடடே! ராகுலும் பிரியங்காவும் தன் தந்தை கொல்லப்பட்ட போது எவ்வளவு துயரப்பட்டு இருப்பார்கள்? அட போடா வெண்ண. அவன் நோர்த் இந்தியன் டா...இவங்க யாரு? தமிழன். நமக்கு தனி நீதி அல்லவா?
Can you see this viedo http://youtu.be/7YYfXWxe_1A
jagadeesh @@@@Can you see this video http://youtu.be/7YYfXWxe_1A
jagadeesh @@@@Can you see this video http://youtu.be/7YYfXWxe_1A
நெஞ்சை உருக்குகின்றது சகோ இவர் மதி சுதாவின் சகோதரரா!.....
இந்தக் குடும்பத்தினரையா குற்றவாளி எனத் தூக்கிலிடத் துடிக்கின்றனர்!..
சகித்துக்கொள்ள முடியாத துன்பம்.தொடர்ச்சியாக இந்தக் கொலையை நிறுத்தும்படி எத்தனை லெச்சம்பேர் குரல் கொடுத்தவண்ணம் உள்ளனர் அப்படியிருந்தும் .இவர்களைத் தூக்கிலிடத் துடிப்பதை என்னவென்று சொல்ல!....
நிட்சயம் இவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எனது பிரார்த்தனையும் .
நன்றி சகோ உங்கள் முயற்சிக்கு .மதி சுதாவிற்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும்
விரைவில் நல்ல செய்தி கிட்ட வேண்டும் இறைவா.......
நன்றி நிரூபன் அடுத்த பதிவை விரைவாக பதிவேற்றம் செய்யாமல் விட்டதற்கு... நானும் பார்தேன் இந்த பதிவை நீங்கள் விளம்பரம் செய்ததை(முதல்தடவையாக!) இதை நான் ஆதரிக்கிறேன்.. இதன் மூலம் இப்பதிவு அதிகமான வாசகர்களை சென்றடைந்திருக்கும் என நான் நம்புகிறேன்..
நன்றி நிரூபன் அடுத்த பதிவை விரைவாக பதிவேற்றம் செய்யாமல் விட்டதற்கு... நானும் பார்தேன் இந்த பதிவை நீங்கள் விளம்பரம் செய்ததை(முதல்தடவையாக!) இதை நான் ஆதரிக்கிறேன்.. இதன் மூலம் இப்பதிவு அதிகமான வாசகர்களை சென்றடைந்திருக்கும் என நான் நம்புகிறேன்..
நன்பர்களே நான் பதிவுலகில் முதல்தடவையாக பார்கிறேன் நிரூபனின் பின்னூட்டப்பெட்டி அனுமதியின் பின்னே கருத்துக்கள் வெளியிடப்படும்ன்னு போட்டிருப்பதை.. இப்பிடியான ஒரு பதிவை முழுமையாகவாசித்திவிட்டு பின்னூட்டமிடலாமே...
நிரூபன் எதை எழுதினாலும் எதிர்கவேண்டும்ன்னு இருப்பவர்களை என்னசெய்வது..!? இது நான் நிரூபனுக்கு வக்காலத்து வாங்க போட்ட பின்னூட்டம் இல்லை அப்பிடி ஒரு தேவை எனக்கில்லை.. மூன்று உயிர்கள் தூக்கு கயிற்றுக்கு முன்னால் நிற்கும் போதும் இப்பிடியான வக்கிர புத்திக்காரர்களை என்ன செய்வது...
நிரூபன் 121 பின்னூட்டத்தில் முக்கால் வாசி, வாசித்தேன் இடுகை மிகக் கனதியானது. எல்லோர் முயற்சியாலும் நல்லது நடக்கும் என்று எதிர்பார்ப்போம். அந்த மன வேகமே பலரை இயங்கப் பண்ணும். மதி சுதாவின் குடும்பத்தாருக்கும் அமைதி கிட்ட வேண்டும். அவரது இடுகைகளையும் பின் தொடர்தேன். அண்ணர் கடிதம் பற்றியதும் பார்த்தேன்.
வேதா. இலங்காதிலகம்.
நிரூபன் 121 பின்னூட்டத்தில் முக்கால் வாசி, வாசித்தேன் இடுகை மிகக் கனதியானது. எல்லோர் முயற்சியாலும் நல்லது நடக்கும் என்று எதிர்பார்ப்போம். அந்த மன வேகமே பலரை இயங்கப் பண்ணும். மதி சுதாவின் குடும்பத்தாருக்கும் அமைதி கிட்ட வேண்டும். அவரது இடுகைகளையும் பின் தொடர்தேன். அண்ணர் கடிதம் பற்றியதும் பார்த்தேன்.
வேதா. இலங்காதிலகம்.
தமிழக முதல்வரும் ஆளுனரும் நினைத்தால் இவர்களை தூக்கில் இருந்து காப்பாற்ற இயலும்.
http://ibnlive.in.com/news/window-of-opportunity-for-rajiv-killers/179212-60-118.html
ஏற்கனவே இந்த சட்ட வழிமுறையில் தமிழகத்திலேயே சிலர் தூக்கில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.
ஜெயா இவர்கள் இப்படி சொல்வதை கேட்பாரா....
பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்கு தண்டனையை தமிழக அரசு ரத்து செய்ய முடியும்: வழக்கறிஞர் புகழேந்தி
குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகும் கூட, தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க அரசியல் சட்டத்தின் 161-வது பிரிவு, மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கிறது.
அதன்படி முதல்வர் ஜெயலலிதா தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதற்கு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்து அதை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பலாம்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=60329
அல்லது இவர்கள் இவர்கள் சொல்வதை கேட்பாரா....
தூக்கில் போட ராம. கோபாலன் ஆதரவு..
அப்போது அவர்,ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் தண்டனைக்கு தயாராகியுள்ளனர்.
அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=60310
நிருபன் என் கருத்தில் தவறுகள் இருந்தால் மன்னிக்கவம்
இந்த வடநாட்டானுக்கு வக்காளத்து வாங்கும் ஜகதீஸ் இன்னும் உசிரோடையா இருக்கான்.
பதிவுலகமே! இவன் செமையா அடி வாங்கி ஒரு வருசமாச்சு அடங்கியிருந்தான் வந்திட்டான்.
ம.தி.சுதாவின் பதிவொன்றில் போய் ஈழத் தமிழன் சோத்துக்கு வழியில்லாதவன் அது தான் தமிழ் நாட்டில் பிச்சை எடுக்கிறான் என்று அடிச்சு மனங்கெட்டு வந்தவரு தான் இந்த புண்ணியவான்.
இப்ப வந்து தான் அரசியல் இல்லியாமா வடிவாக அதில் இட்டுள்ள கருத்தில் போட்டுள்ள படத்தை பாருங்கள் யார் படம் போட்டுள்ளார் என்று
http://www.mathisutha.com/2010/09/blog-post_23.html
http://mathisutha.blogspot.com/2010/10/blog-post_11.html
அம்மா அனாமிகா துவாரகன் அவர்களே
சாரயம் பற்றி எழுதினவன் துரோகி என்றால் கிளாலி கடலால ததொடை தெரிய பாவாடையை தூக்கிக் கொண்டு கள்ளப் பாசில ஓடிப் போன உங்களை என்னவென்று அழைப்பதாம்
@புகைப் போக்கி
நியாத்தை சொன்னா உங்களுக்கு கோவம் வருமோ... வடநாட்டவன், தமிழன், அவன் இவன் ன்னு இருந்து தான "செமையா" அடிவாங்கி இருக்கீங்க..இன்னும் திருந்தலையோ.
நமது நாட்டின் பிரதமராக இருந்த ஒரு தலைவர் கொடுரமான முறையில் கொலை செயப்பட்டுள்ளார். மேலும் அவருடன் பல அப்பாவிகளும் இறந்துள்ளார்கள். பல கட்டங்களாக விசாரணைகள் நடைபெற்று இந்திய நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது அந்த தீர்ப்பை ஜனாதிபதி பதினோரு வருடங்களுக்கு பின் உறுதி செய்துள்ளார். இதுவே பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைத்த காலதாமதமான நீதியாகும். கருணை மனு பெறப்பட்ட உடனேயே நிராகரிப்பு செய்து மூவரையும் தூக்கில் போட்டிருக்க வேண்டும். இன்று இந்த மூன்று பேருக்காக போராடுபவர்கள் நாளை பஸ்சை எரித்து மாணவிகளை கொன்றவர்களையும், மும்பையை குண்டு வைத்து தகர்தவர்களையும், பாராளுமன்றத்தை தாக்கியவர்களையும் தூக்கில் போடகூடாது என போராடுவார்கள். உலக்குக்கே அகிம்சையை போதித்த காந்தி மகான் "தன்னை கொல்ல வருவது பசுவேயனாலும் கொல்ல வேண்டும்" என கூறியுள்ளார். தற்போது இந்தியாவில் கடும் குற்ற செயல்களை செய்துள்ள குற்றவாளிகள் பெருகி விட்டனர். அவர்களுக்கு உடனடியாக கடுமையான தண்டனைகள் வழங்கபட்டால் தான் குற்றங்கள் குறைய வாய்ப்பு உண்டு. தமிழக முதல்வரின் நிலைப்பாடு சரியானதே.
hi jegadesh
eanda unaku vekama ila asingama vaai la vanthidum da (jegadesh)antha 3 peru oda kaal thoosiku vara mata rascal peria pudunki madhiri vanthu pesuran
இங்கே எழுதும் பின்னூட்டம் ஜீவ மரண போராட்டம் நடத்தி கொண்டிருக்கும்
பாதிக்கபட்டோரின் குடும்பத்தினரை ஆறுதல் படுத்தும் ,நம்பிக்கையூட்டும் விதத்தில் இருந்தால் நல்லது .தயவு செய்து அதனை உணர்ந்து கருத்துக்களை எழுதுங்கள் .மரண தண்டனையே இனி யாருக்கும் வேண்டாம் என்பது தான் என் வேண்டுதல் .
ஜெகதீஸ் என்ன சொல்ல வாரீங்க நீங்க ஒரு மனநல வைத்தியரிடம் போவதே நல்லது .. அப்படி பார்த்தா ராஜீவ் காந்திய எப்போவே தூக்கில போட்டு இருக்கனும்.. உன்னுடய உடன் பிறப்புகள் கொலைகெய்யப்பட்டு கற்பழிக்கப்பட்டா உனக்கு தெரியும் அந்த வேதனை நானும் இந்திய ராணுவத்தின் பிடியில இருந்தவந்தான் எனக்கும் அவர்களைபற்றி தெரியும்.. இப்ப நாங்க அந்த மூன்று பேருடைய உயிரைப்பற்றி பேசுகிறோம் உங்களைப்போல கொலைவழக்க பேசப்போனால் இந்திய ராணுவத்தின் அட்டூலியங்களைப்பற்றியும் கட்டாயம் பேசனும் இப்ப இதுவல்ல நேரம்.. நானும் உங்களைபோல மனநோயாளிகளுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை.. இப்போதைய அந்த மூன்று உயிர்கள் காப்பாற்றபடவேண்டும் பற்றி வாங்கிகொடுத்தவனுக்கு மரணதண்டனையா?.. காட்டுமி்ராண்டிகளின் தீர்பு இப்படித்தான்யா இருக்கும் உனக்கு பதில் சொல்லப்போனால் உண்மையான இந்தியர்கள் மனவருத்தமடைவார்கள்.. நீ சோனியாவுக்கு ...... கழுவிக்கொண்டிரு.. உண்மையான இந்தியர்களையும் விபச்சாரிகள் போல் இத்தாலிக்காரிக்கு வித்துக்கொண்டிரு...
பிணம்தின்னி பதிவு எழுதுபவனுக்கு இப்பிடியாண கருத்துக்கள்தான் வரும் ஊரில ஒண்டு சொல்லுவாங்களே எவன் பொண்டில் எவனோடு போனா எனக்கென்ன இலுப்பைக்கு இரண்டுகாசெண்டு ஜெகதீஸ் நீங்க நல்லா நக்க தெரிந்தவர் இத்தாலிக்காரி இருக்கிறா போய்....
jagadeesh said... Best Blogger Tips///இதுவே பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைத்த காலதாமதமான நீதியாகும்./// அப்ப ராஜீவ் படைகளால் ஈழத்தில் அழிந்த மக்களுக்கு எப்ப நியாயம் கொடுக்க போறீர்கள்?
///jagadeesh said...
நமது நாட்டின் பிரதமராக இருந்த ஒரு தலைவர் கொடுரமான முறையில் கொலை செயப்பட்டுள்ளார். // புல்டோசர் ஏற்றி கொன்றார்களே அது என்ன கொலை, மென்மையான கொலையா?
///jagadeesh said...கருணை மனு பெறப்பட்ட உடனேயே நிராகரிப்பு செய்து மூவரையும் தூக்கில் போட்டிருக்க வேண்டும். ////ஓஹோ துகில போட்டுவிட்டுதான் உங்க நாட்டில விசாரணை பண்ணுவார்களா?
///தற்போது இந்தியாவில் கடும் குற்ற செயல்களை செய்துள்ள குற்றவாளிகள் பெருகி விட்டனர்.// ஆமா ,போபால் வழக்கினையும், பீரங்கி திருடி ஏப்பம் விட்ட வழக்கினையும் விசாரித்து குற்றவாளிகளை கைது செய்து தூக்கு தண்டனை வழங்க சொல்லும் முக்கியமா சோனியா அம்மையாருக்கு...
அருமை நண்பா ,ஆரியத்துக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்த ஜெகதீஸ் இதை ஒரு தடை படியுங்கள் http://krelango.blogspot.com/2011/02/blog-post_27.html
இதை வாசித்த பின் , உங்கள் இத்தாலி அன்னையிடம் சென்று கேளுங்கள் ராஜிவை கொன்றது உண்மையிலே யார் என்று!
அரசியல்வாதியா கொறை சொல்லனும்னா மட்டும் அப்புடியே வரிஞ்சு கட்டிட்டு வருவானுக, நீ கெட்டவன், மோசமானவன், திருட்டு பய, கொலைகாரன், கொள்ளைக்காரன், வெக்கம் கெட்டவன், மான ரோசம் இல்லாதவன், வயித்துக்கு சோத்த திங்குரியா இல்ல வேற எதியாச்சும் திங்குரியான்னுட்டு, அப்புறம் நீங்க மட்டும் என்னவாம்? தமிழன்னு சொல்லிக்கிட்டு கொலைகார பசங்களுக்கு பரிஞ்சு பேசிகிட்டு வரும் சல்லி காசுகளே... மொதல்ல உங்களுக்கு இதெல்லாம் இருக்கானு பாருங்க, அப்புறமா மத்தவங்களை குறை சொல்லலாம்.
மொதல்ல எல்லாரும் இதப் படிங்க. அப்புறம் பேசுங்க.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=307295
Post a Comment