பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்குமுரிய உறவுகளே, எல்லோரும் எப்படி இருக்கிறீங்க?
கல்லூரி வாழ்க்கை, பள்ளிக்கூட வாழ்க்கை என்பது எம் மனதை விட்டு இலகுவில் அழிக்க முடியாதவாறு அடி மனதில் பசுமரத்தாணி போலப் பதிந்திருந்து, நினைக்க நினைக்கச் சுகம் தந்து கொண்டிருக்கும் ஒரு அற்புதமான நினைவலைகள் அடங்கிய பொக்கிஷமாகும். இப் பதிவின் மூலமாக என் பாடசாலைக் காலத்தில் சங்கீத பாட வேளையில் நாம் செய்த குறும்புகளை உங்களோடு முதலில் பகிர்ந்து கொள்கிறேன்.
நாற்று நிரூபனின்
சித்திரப் பாடம் என்று அழைக்கப்படுகின்ற படம் வரைகின்ற பாடத்தின் மீது எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. சித்திரம் என்றால் புளிப்பு என்ற நிலையில் நின்று தத்தளித்த வேளையில்,
சங்கீதம் பாடுமளவிற்கு குரல் வளம் இல்லாத காரணத்தினால், சங்கீதமும் புளிப்பாக மாறிய போதும், வேறு வழியின்றி எங்களது பள்ளிக் கூடப் பத்தாம் கிளாஸில் நாம சங்கீதத்தினைப் படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருந்தோம்.
வழமையாக எமக்குச் சங்கீதம் கற்பிக்கும் ஆசிரியைக்கு பிள்ளைப் பெறுவதற்கான டெலிவரித் திகதி நெருங்கி விட, அகில இலங்கை சங்கீத வித்துவான் எனச் சிறப்பிக்கப்படும் ஒருவரிடம் தற்காலிகமாக வருங்கால இலங்கையின் சங்கீத விற்பனர்கள், வித்தகர்கள், வித்துவான்களாகிய எம்மை, ஒப்படைத்து விட்டு, எங்கள் வகுப்பு டீச்சர் எஸ்கேப் ஆகிட்டா. எங்களுக்குச் சங்கீதம் கற்பிக்க வந்த வித்துவானின் பெயர் கடம்பநாதன். ஆளும் பேருக்கு ஏற்றாற் போல நல்ல தெம்பாகத் தான் இருப்பார்.
நாற்று நிரூபனின் வலை
ஆனால் சங்கீதப் பாட வகுப்பறைக்குள் நம்மளோடை கடம்பநாதன் வாத்தியார் நுழைஞ்சாலே போதும். சங்கீதம் படிக்கிற பசங்கள் அத்தனை பேருக்கும் செம ஜாலி. முதலில் வாத்தியார் என்ன பண்ணுவார் என்றால்,
’’பிள்ளைகளே...இது தான் ஆரோகணம், இது தான் அவரோகணம்,
இவற்றினைச் சுருதி குன்றாமல்
ஸ், ரி, க,ம,ப,த,நி,ஸ....எனும் வரிசையில் பாட வேண்டும்.
எங்கே பாடத் தொடங்குங்கோ!! என்று சொல்லி விட்டு, வாத்தியார் கண்ணை மூடித் தூங்கத் தொடங்கிடுவார்.
‘ஸாரி........காமா......பதா...நி...ஸா....
ஸாணி தப்ப....சானி தப்ப........
சாணி தப்ப...............நானும் தப்ப...............இப்படி நாம பாடி முடிச்சு,
வாத்தியார் தூக்கம் கலைஞ்சு எந்திரிக்கவும், நாற்பது நிமிடப் பாட வேளை முடிஞ்சிடும்.
நாற்று நிரூபனின் வலை
‘ஓக்கே புள்ளைங்களா...இன்னைக்குப் படிச்சது இவ்வளவும் போதும்,
மிகுதிச் ஸ்வர வரிசை பற்றிய குறிப்புக்களை அடுத்த கிளாஸில் படிப்போம் என்று சொல்லி விட்டு வாத்தியார் டாட்டா...பாய் சொல்லி நம்மளை வகுப்பறையை விட்டு அனுப்பிடுவார். நமக்கு ஏதாவது வேலை, இல்லைன்னா பாடல் பாடத் தந்து விட்டு, தூங்குவது தான் நம்ம கடம்பநாதன் மாஸ்டரோட ஸ்பெஷல் வேலை. இப்படித் தான் ஒரு தடவை...
காலையில் அதுவும் வெள்ளிக் கிழமை மூன்றாவது பாட வேளையாகச் சங்கீத பாடம் ஆரம்பமாகியது.
வாத்தியார் வந்தார்.......
‘ததரினனா.....ததரானனா..............ததரன்னனா.....ததரீனனனா...
இப்படியே பாடிக் கொண்டு வாத்தியார் வழமை போல தூங்கிட்டார்.
நாம பள்ளியில் படிச்ச காலத்தில்....பிரபுதேவாவின் படத்தில் வாற...
ததரினனனா....ததரானனா....என்று தொடங்கிற ‘காத்தடிக்குது காத்தடிக்குது...காத்துமேட்டு காத்தடிக்குது.................எனும் பாடல் மட்டும் வந்திருக்கனும்...............நாற்று நிரூபனின் வலை
மொத்த வகுப்பறையுமே....கோரஸில் இந்தப் பாட்டைப் பாடி....வாத்தியாரோடை செவிப்பறையினை உடைச்சிருக்க மாட்டோம்..
காத்தடிக்குது...காத்தடிக்குது...காத்து மேட்டு காத்தடிக்குது.......... பாட்டு அப்ப ரீலீஸ் ஆகாமல் இருந்திடுச்சே.................
நாற்று நிரூபனின் வலை
வழமை போலவே வாத்தியார், ஆரோகண அவரோகணத்தைப் பாடி ப்ராக்டீஸ் பண்ணச் சொல்லிட்டுத் தூங்கிடுவார். இல்லேன்னா. ததரினனனா......பாடச் சொல்லிட்டுத் தூங்கிடுவார். இப்படி வாத்தியார் தூங்கும் நேரம் பார்த்து, நம்ம கூட்டாளி ஒருவன் என்னா பண்ணினான் என்றால்.......
நோட் புக் பேப்பரைக் கிழித்து, சுருட்டுப் போலச் செய்து, வாத்தியாரின் வாயிற்குள் வைத்து விட்டான்.
சரியான டைம்மிங்...நாற்பது நிமிடப் பாடவேளை முடியும் வரை வாத்தியார் எந்திருக்கவேயில்லை. திடீரெனப் பார்த்தால்.....எங்களின் கல்லூரி அதிபர் சங்கீத அறைக்குள் வந்திட்டார். வாயில் பேப்பர் பீடியோடு, சீத்துவாய் வடிய வடிய(வாயிலிருந்து எச்சில் ஒழுக) தூங்கிக் கொண்டிருக்கும் கடம்பநாதன் மாஸ்டரைக் கண்டிட்டார். அப்புறமா என்ன நடந்திருக்கும்? பிறகென்ன சொல்லவா வேண்டும். கடம்பநாதன் வித்துவான் பள்ளிக்கூட்டத்தை வுட்டு டிஸ்மிஸ்....
நாற்று நிரூபனின் வலை
டிங்குசா டீச்சரும் டீசன்டான பசங்களும்!
சுட்டிப் பசங்களுக்குப் பாடம் கற்பிக்கும் லேடீஸ் டீச்சர்ஸ், என்ன பண்ணுவாங்க என்றால்,
பசங்களா...இது தான் வாழைப் பழம், இது தான் வெங்காயம் என்று ஒவ்வொரு பொருட்களாக விளங்கம் கொடுத்துக் கொண்டிருப்பாங்க. இப்படித் தான் டிங்குசா டீச்சர் என்ற சமயோசிதமான மூளை உள்ள ஒரு டீச்சரும்,
புள்ளைங்களா...இன்னைக்கு நாம பழங்கள், மரக்கறிகளைப் பற்றிப் படிப்போமா என்று சொல்லித் தன்னோட கிளாஸை ஆரம்பிச்சிருக்கிறா.
வாழைப்பழம் என்றால் எப்படி இருக்கும், வெங்காயம், மிளகாய், கத்தரிக்காய் என்றால் எப்படி இருக்கும், அவற்றின் சிறப்பியல்புகள்(ஸ்பெஷாலிட்டி) எப்படி இருக்கும் என்றெல்லாம் விளக்கம் கொடுத்துப் பார்த்திருக்கா நம்ம டிங்குசா டீச்சர்.
சுட்டிப் பையன் ஒருவன் எந்திருச்சு,
’’டீச்சர் டீச்சர், நீங்க எங்களுக்கு ரியாலிட்டியாக வெளங்கப்படுத்தினால் சூப்பார இருக்குமே என்று ஐடியா கொடுக்க..
டீச்சரும் ஒரு புதுத் தீட்டம் அறிவிச்சா பாருங்க.
புள்ளைங்களா..
நாளைக்கு உங்களுக்கு எக்ஸாம்.
உங்க வீட்டிலை இருக்கிற மரக்கறிகள், பழங்கள், இதிலை எதையாச்சும் பள்ளிக் கூடத்திற்கு எடுத்திட்டு வாங்க.
யார் அதிக காய்கறிகள் கொண்டு வந்து கிளாஸிலை எல்லோர் முன்னாடியும் வெளக்கம் கொடுக்கிறீங்களோ
அவங்களுக்கு அதிக மார்க் போடுறேன்...
இப்படிச் சொன்னது தான் தாமதம்...
மறு நாள் ஒரு விவசாயியோடை மகன்...ஒரு சாக்குப் பை நிறைய வெங்காயத்தைப் பள்ளிக் கூடத்திற்கு கொண்டு வந்திட்டான்.
மேட்டர் ஹெட்மாஸ்டருக்குத் தெரிந்தால், டிஸ்மிஸ் என்பதை உணர்ந்த டீச்சரோ, பள்ளிக் கூடத்தின் பின் வாசல் வழியாக எல்லா வகையான காய்கறிகளையும் பொதி செய்து, சந்தைக்கு கொண்டு போவதற்கு ப்ளான் பண்ணி வேன் ஒன்றை வரச் சொல்லியிருக்கா..
பிறகென்ன...யாரோ ஒருத்தன் மேட்டரை நோட் பண்ணி ஹெட் மாஸ்டரிடம் போட்டுக் கொடுத்திட்டான்.
அப்புறமா அவவும் டிஸ்மிஸ் தான்.
டிஸ்கி: டிங்குசா டீச்சர் கதையினை இலங்கையில் மிகப் பிரபலமான லூஸ்மாஸ்டரின் கஸெட்டில் கேட்ட நாடகத்தில் இருந்து உல்டா செய்து, கொஞ்சம் பூசி மெழுகி எழுதியுள்ளேன்.
***************************************************************************
'A' படம் பார்க்க வேண்டுமா....
ஏ’ படம் என்றதும், உங்கள் அனைவருக்கும் ஏடா கூடமான சிந்தனைகள் தான் மனதில் தோன்றும் என்பது நமக்குத் தெரியாதா என்ன? இது வேறை விதமான படம். ஆகுலன் என்பவர் காண்பிக்கிறார்.
2009ம் ஆண்டில் இருந்து பதிவெழுதி வரும் ஒரு சுட்டிப் பையன் தான் ஆகுலன். அதிகளவான வாசகர்கள் ஆகுலனை நாடிச் செல்லாத போதிலும், தன் எண்ணங்களை இன்று வரை சலிக்காது பதிவிட்டு வருகின்றார். தான் பதிவெழுத வந்த காலப் பகுதியினை அடிப்படையாக வைத்து, வயதில் சிறியவன் என்றாலும், தானும் ஓர் மூத்த பதிவர் என்று மார்தட்டிக் கொள்ளும், ஆகுலனின் வலைப் பதிவின் பெயர்
ஆகுலன் கனவுகள்(A+).நாற்று நிரூபனின் வலை
ஆகுலனின் வலைப் பதிவிற்கும், எமது ஆதரவினை வழங்கி, அவரது எழுத்தாற்றல் மேம்பட, வளர்ச்சியடைய உதவுவது பதிவர்களாகிய எமது கடமையல்லவா.
ஆகுலன், சின்னப் பையனாக இருந்தாலும், கடுகு சிறிதென்றாலும், காரம் அதிகம் எனும் ஆன்றோர் வாக்கிற்கமைவாக இன்று வரை பல சிறப்பான பதிவுகளை, வரலாற்றுத் தகவல்களை, தன் பயண அனுபங்களைத் தன் வலையில் பதிவிட்டு வருகின்றார். நாற்று நிரூபனின் வலை
ஆகுலனின் வலைப் பதிவின் முகவரி உங்களுக்காக.
http://akulan1.blogspot.com/
அப்புறம் ஏன் வெயிட் பண்ணிக்கிட்டு?
ஓடோடிச் சென்று ஆகுலனுக்கும் உங்கள் ஆதரவினை வழங்கலாமல்லவா..
பிற்சேர்க்கை: என்ன பதிவு இம்புட்டுப் பெரிசா இருக்கே என்று மவுஸை மேலும் கீழும் இழுத்துப் பார்க்கீறீங்க?
இன்ரநெட் கனெக்சன் ப்ராப்ளம் கொடுத்த காரணத்தால்,
ஆறு நாள் பதிவு போடாத குறையினைச் சேமித்து வைத்துப் பதிவு போட்டுக் கொல்லுறானே நிரூபன் என்று யாரும் நினைத்தால் அது மிகப் பெரிய தப்பு.
இதை விடப் பெரிய பதிவுகள் இனிமேத் தான் வரப் போகுது...........
ஜாக்கிரதை.
நாற்று நிரூபனின் வலை
|
138 Comments:
உங்க கூட்டாளிக்கு படிக்கும் போதே எவ்வளவு வில்லத்தனம்.. அது சரி இப்ப அவரும் உங்களை போல பிரபல பதிவரா?
வணக்கம் பாஸ் )
@பாரத்... பாரதி...
உங்க கூட்டாளிக்கு படிக்கும் போதே எவ்வளவு வில்லத்தனம்.. அது சரி இப்ப அவரும் உங்களை போல பிரபல பதிவரா?//
அவ்..அவ்..
இனிய இரவு வணக்கம் பாஸ்,
நானே ஒரு சாதா பதிவர்,
என் கூட்டாளி இன்னும் பதிவரே ஆகலை பாஸ்.
@கந்தசாமி.
வணக்கம் பாஸ் )//
இனிய இரவு வணக்கம் பெரிய பாஸ்,
எப்படி இருக்கிறீங்க?
///டிங்குசா டீச்சரும், டீசன்டான பசங்களும்// அந்த டீசன்டான பசங்களுள் நீங்களும் அடங்குவிங்களா பாஸ் )
இந்த பதிவின் "தில்லா டில்லா" தலைப்பு அதிக பேரை ஈர்க்கவில்லை போல... ஆன்லைனில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருக்கிறதே?
////வழமையாக எமக்குச் சங்கீதம் கற்பிக்கும் ஆசிரியைக்கு பிள்ளைப் பெறுவதற்கான டெலிவரித் திகதி நெருங்கி விட,/// ஆண் பிள்ளையா இல்லை பெண் பிள்ளையா ஹஹஹா
@கந்தசாமி.
///டிங்குசா டீச்சரும், டீசன்டான பசங்களும்// அந்த டீசன்டான பசங்களுள் நீங்களும் அடங்குவிங்களா பாஸ் )//
நம்மளைப் பார்த்தால்...எப்படி இருக்கிறது...
அவ்....
@பாரத்... பாரதி...
இந்த பதிவின் "தில்லா டில்லா" தலைப்பு அதிக பேரை ஈர்க்கவில்லை போல... ஆன்லைனில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருக்கிறதே//
பாஸ்...எல்லோரும் தூங்கியிருப்பாங்க.
நாளைக்கு காலையில் தான் வருவாங்க...
///வாத்தியார் தூக்கம் கலைஞ்சு எந்திரிக்கவும், நாற்பது நிமிடப் பாட வேளை முடிஞ்சிடும்./// வாத்தியாரை தூங்க வச்ச புண்ணியமாவது வந்திச்சே )
படத்திலே உள்ள டீச்சர் எங்களுக்கும் பாடம் எடுப்பாங்களா நண்பா...
@கந்தசாமி.
////வழமையாக எமக்குச் சங்கீதம் கற்பிக்கும் ஆசிரியைக்கு பிள்ளைப் பெறுவதற்கான டெலிவரித் திகதி நெருங்கி விட,/// ஆண் பிள்ளையா இல்லை பெண் பிள்ளையா ஹஹஹா//
அது டீச்சரோடை கணவனுக்கும்,
டாக்டருக்கும் தான் தெரியும் பாஸ்.
வந்ததுடீங்களா?கலக்குங்கோ!
@Reverie
படத்திலே உள்ள டீச்சர் எங்களுக்கும் பாடம் எடுப்பாங்களா நண்பா...//
ஓ...அவங்களா...அவா ஆல்ரெடி புக்கிங்.
இப்போ பிரபுதேவாவிற்கு மாத்திரம் தான் பாடமெடுப்பாங்களாம்;-)))))
பாவம் அந்த கடம்பநாதன் வித்துவான்.....
பள்ளிக்கூட காலங்களில் இதுபோன்ற சேட்டைகள்
நிறைய செய்வது உண்டு.
மலரும் நினைவுகளில் திளைக்க வைத்தமைக்கு
நன்றி சகோ.
@கோகுல்
வந்ததுடீங்களா?கலக்குங்கோ!//
அவ்...நீங்களும் வந்திட்டீங்களா..
வாங்க சேர்ந்தே கலக்குவோம்,.
நான்கைந்து நாட்கள் உங்கள் பதிவைக் காணமுடியவில்லை சகோ....
கொஞ்சம் வெறுமையாகத்தான் இருந்தது...
வாத்தியார்களை பூராவும் வேலையை விட்டே அனுப்புறதுலயே குறியாயிருந்துருக்கீங்க...ஹா ஹா...பகிர்வுக்கு பாராட்டுக்கள் சகோ! பதிவர்களை அறிமுகப்படுத்தும் நல்ல எண்ணங்களுக்கு நன்றி சகோ! ஆகுலனுக்கு வாழ்த்துக்கள்
இப்போதெல்லாம் வாத்தியார்கள் தான் பாடம் நடத்தி மாணவர்களை தூங்க வைக்கிறார்கள்...
‘ஸாரி........காமா......பதா...நி...ஸா....
ஸாணி தப்ப....சானி தப்ப........
சாணி தப்ப...............நானும் தப்ப...............இப்படி நாம பாடி முடிச்சு,//
நல்லா சாணி தப்பி இருப்பிங்க போல?
ஆகுலன்- மீசை முளைக்காத பெரிய பையன்.
அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்.
@மகேந்திரன்
பாவம் அந்த கடம்பநாதன் வித்துவான்.....
பள்ளிக்கூட காலங்களில் இதுபோன்ற சேட்டைகள்
நிறைய செய்வது உண்டு.
மலரும் நினைவுகளில் திளைக்க வைத்தமைக்கு
நன்றி சகோ.//
வாங்கோ அண்ணாச்சி,
கொஞ்சம் பிசியாகிட்டேன்.
உங்களுக்கும் இந்த மாதிரியான குசும்பு அனுபவங்கள் நிறைய இருக்கும் என்று நினைக்கிறேன்.
உங்களால் அறிமுகம் செய்யப்பட்ட ஆகுலனுக்கு வாழ்த்துக்கள்
@மகேந்திரன்
நான்கைந்து நாட்கள் உங்கள் பதிவைக் காணமுடியவில்லை சகோ....
கொஞ்சம் வெறுமையாகத்தான் இருந்தது...//
அவ்...அவ்...
என் இன்ரநெட்டிற்கு யாரோ சூனியம் வைச்சிட்டாங்க.
அதான் பதிவுலகப் பக்கம் வரமுடியலை.
@மாய உலகம்
வாத்தியார்களை பூராவும் வேலையை விட்டே அனுப்புறதுலயே குறியாயிருந்துருக்கீங்க...ஹா ஹா...பகிர்வுக்கு பாராட்டுக்கள் சகோ! பதிவர்களை அறிமுகப்படுத்தும் நல்ல எண்ணங்களுக்கு நன்றி சகோ! ஆகுலனுக்கு வாழ்த்துக்கள்//
வாங்க மாப்பு,
எப்படி இருக்கிறீங்க?
வாத்தியாரை நாம அனுப்பினாத் தானே,,,,
நல்ல டீச்சரையாச்சும் பள்ளிக்கூடத்திற்கு செலக்ட் பண்ணுவாங்க..
தங்களின் அன்பிற்கும்,
புரிந்துணர்விற்கும் நன்றி பாஸ்.
@பாரத்... பாரதி...
இப்போதெல்லாம் வாத்தியார்கள் தான் பாடம் நடத்தி மாணவர்களை தூங்க வைக்கிறார்கள்...//
அவ்....அவ்....
நீங்களும் இந்த மாதிரியான இன்பத்தினை அனுபவத்திருக்கிறீங்க போல இருக்கே.
கொஞ்சம் அதிகம் தான் சகோ ....
அறியாத வயதில் செய்தது
இப்போ நினைத்தால் கொஞ்சம் மனதுக்கு சங்கடமாக இருக்கிறது.
பள்ளிநேரம் முடிந்தபின் கூடுதல் நேரம் வகுப்பெடுத்தமைக்காக
ஆசிரியரின் வாகன எரிபொருள் கலனில் மணலை அள்ளிப்போட்டு
அவரை அன்று வீடு வரை வாகனத்தை நடைப்பயிர்ச்சிக்கு கூட்டிசென்ற நாளை இன்றும் மறக்க முடியவில்லை...
இப்புடி தான் சங்கீத வாத்தியார் எங்களோட கேமை கேட்டுட்டார் என்று அவற்ற சைக்கிள் ரியூப்பில இருபத்தி ஒரு ஓட்டை போட்டனாங்கள்.. ஆனால் அவருக்கு தெரிய வந்து எங்களை மன்னிச்சுட்டார்..
இங்கிலீசு டீச்சர் பேசிப்போட்டா எண்டு அவன்ர மோட்டார் சைக்கிளின் பெற்றோல் டாங் வயரை பூட்டிவிட்டுட்டம் . டீச்சர் அது தெரியாமல் வீடுவரை உருட்டிக்கொண்டு போனவா -ஹிஹி
ஆகுலன் மோதிரக்கையால் குட்டுபட்டிருக்கிறார்...
நிரூபன்..நீங்க கொஞ்ச நேரம் மகேந்திரனிடம் பேசிட்டிருங்க...
மகேந்திரனின் மறுபக்கம்னு ஒரு பதிவு போடலாம் போல...
ஐயோ ரேவேரி ஏன் இப்படி ......
இன்னைக்கு நான் அகப்பட்டேனா
நானா தான் மாட்டிகிட்டேனா?????
ஒருபக்கமே பார்க்க முடியல
இதில மறுபக்கம் வேறயா ........
ஐயோ ஐயோ....
டிங்குசா டீச்சரா...ஆஹா, இன்னைக்கு செம மேட்டர் போலிருக்கே..
// என்ன பதிவு இம்புட்டுப் பெரிசா இருக்கே என்று மவுஸை மேலும் கீழும் இழுத்துப் பார்க்கீறீங்க?//
எப்படி நிரூபன் நாங்க பண்றத அப்பிடியே சொல்றிங்களே ஏதாவது மந்திரம் தந்திரம் தெரியுமோ உமக்கு..
சங்கீதமெல்லாம் நீரு படிச்சீரோ அவ்வ்வ்வ்வ்வ்வ்
ஆகுலனின் அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்..
பாஸ் எங்கள எப்ப அறிமுகப்படுத்த போறீங்க..
எல்லாம் கேட்டுவாங்க வேண்டிய நிலை..ம்ம்ம்
டீச்சர் சந்தையில சைடு பிசினஸ் பண்ணப் பார்த்தாங்க போல..கெடுத்திட்டீங்களே(!).
ஆகுலன் நல்ல புள்ளையாச்சே..நல்லாத் தானே எழுதுறாரு..அப்புறம் ஏன் கூட்டம் இல்லை?
வாத்தியார் வாயில் பீடி வச்ச கூட்டாளி பேரு ‘நிரூபன்’ தானே..!
நான் இப்படில்லாம் பண்ணதில்லைப்பா..கிளாஸ்ல அமைதியா தூங்கறதோட சரி!
நான் இப்படில்லாம் பண்ணதில்லைப்பா..கிளாஸ்ல அமைதியா தூங்கறதோட சரி!
இந்த நிரூ, எங்க போயிட்டாரு? நான் பாட்டுக்கு தனியா பேசிக்கிட்டு இருக்கேன்..
முதலாவதாக என்னை அறிமுகபடுத்தியதற்கு நன்றி..அண்ணா
எனக்கும் உப்படி பட்ட அனுபவங்கள் உண்டு...
எனக்கு உப்பிடி ஒரு சங்கீத டீச்சர் கிடைகலியே.............
ஆகுலனுக்கு எனது வாழ்த்துக்கள்...
////ஆகுலன் said...
எனக்கு உப்பிடி ஒரு சங்கீத டீச்சர் கிடைகலியே.............//பியூச்சர்ல கிடைக்க வாழ்த்துக்கள் ஆகுலன் ஹிஹி
படுவா ராஸ்கோல்... நீ என்னத்துக்கு சங்கீத பாடம் எடுத்தாய்ன்னு எங்களுக்கு தெரியாதா மாப்பிள...!!!!! அங்கதானே பொம்பிள பிள்ளைகள் கூட.. இப்பிடி மனையியல் பாடம் எடுத்த பசங்களும் இருந்தாங்க அந்த காலத்தில அது நான் இல்ல மாப்பிள...!!!??
காட்டான் குழ போட்டான்...
@கந்தசாமி.
இனியா...............போங்க பாஸ்..
@கந்தசாமி.
இல்ல இல்ல எனக்கும் மீசை இருக்குது............
ஐயா பாத் பாரதி கொஞ்சம் பொறுங்கோ..!!! இல்லாட்டி காலையில வந்து நிரூபனின் பதிவில் இருக்கும் பின்னூட்டத்தை பாருங்கோ.. நாங்கெல்லாம் ராக்கோழிங்க.. அடுத்து காலை சேவல் ஒண்டு வர இருக்கு...!!?? அதுவும் இல்லாம இது கும்மியடிக்க வசதியான ஒரு பதிவுங்கோ...!!!!???
நானும் பார்தேன் ஆகுலனின் ஒரு பின்னூட்டத்தை.. தான் ஒரு சீனியர் என்று வெருட்டியதை.. வாடா என்ர செல்லம் நானும் பதிவுலகத்தில உன்னை விட சீனியர்.. (என்னத்தை எழுதினீங்கன்னு கேக்காதே நிலத்த உழுது காயப்போட்டு வைச்சிருந்தேன்யா!!!)உன்னையும் நான் பகிடி வதை செய்யப்போறேன்.. அது ஒன்றுமில்லை காட்டானைப்போல் கோவணத்தோடு மனத்தானை சுத்தி வர வேண்டும்...!!!!???
இஞ்ச பாரடா இந்த குழந்தைக்கும் மீசை முளைச்சிட்டாம்.. ஆகுலன் எங்களுக்கு ஆதாரம் வேண்டும்...!!??
ok ok இன்னும் நாட்டாமை வரல்ல அல்லக்கை நான் பொல்ல கொடுத்து அடி வாங்காம.. நாட்டாமை வந்தா பிறகு வாறேன்யா...!!!!!???)
ஆகுலன் மோதிரக்கையால் குட்டுபட்டிருக்கிறார்...////அட! நிரூபனுக்கு ............................ ஆயிட்டுதா?மோதிரக் கையால ஆகுலனுக்கு குட்டுறாரெண்டா?எனக்கு "காட்டான்" அறிமுகப்படுத்தி வெச்சார்!சின்னப் பொடி,படிக்கிற பொடி,பண்பான பொடி!
கிழடு வந்திட்டுது,இனிக் கும்முங்கோ,காட்டான்!!!!(சும்மா நாட்டாமை எண்டு..........)
நான் கூட நல்லாப் பாடுவன்!எட்டாம் வகுப்பில ஏதோ சோதின வைப்பினமெல்லொ?,அதில பாடி கொலிஜ்ஜிலயே சங்கீதம் பாஸ் பண்ணின ஒரே ஆள்,நான் தான்!அப்பெல்லாம் இப்புடி வாத்திமார் இல்ல!
எல்லாரும் இப்பிடித்தான்!தங்கட பொட்டுக்கேடுகள வேறை ஆருக்கோ நடந்த மாதிரி சீன் காட்டுவினம்!
நிரூபன் said.....என் இன்ரநெட்டிற்கு யாரோ சூனியம் வைச்சிட்டாங்க.
அதான் பதிவுலகப் பக்கம் வரமுடியலை.///அப்ப தம்பி மைந்தன் சொன்னான்,காசு(நெட்டுக்கு)கட்டேல்லயெண்டு?பொய்யே????
இது தான் சொல்லுறது,பதிவ மட்டும் படிச்சா பத்தாது,கொமெண்டுகளையும் படிக்க வேணுமெண்டு!இப்ப பாத்தா,சின்னப் பொடியனெண்டு சொல்லி வாய் மூடேல்ல பொடி சொல்லுது எனக்கும் மீசை முளைச்சிட்டுது!வோட்டுப் போடுற வயது வந்திட்டுதெண்டு!இந்த நாளயப் பொடி,பொட்டையள் பாத்துக் கொண்டிருக்க வளந்திடுதுகள்!?
அன்பு சகோதரா
உங்கள் வலை பூவின் மேல் என் கணினிக்கு என்ன கோபமோ தெரியல பல நாள் திறக்க முடியாவில்லை ... அதன் உங்கள் பக்கம் வரவில்லை ...நீங்களும் ஆறு நாள் வரலையா ..அப்ப சரி தான் ...
வழமை போல சிறப்பான பதிவு
Yoga.s.FR said...
இது தான் சொல்லுறது,பதிவ மட்டும் படிச்சா பத்தாது,கொமெண்டுகளையும் படிக்க வேணுமெண்டு!இப்ப பாத்தா,சின்னப் பொடியனெண்டு சொல்லி வாய் மூடேல்ல பொடி சொல்லுது எனக்கும் மீசை முளைச்சிட்டுது!வோட்டுப் போடுற வயது வந்திட்டுதெண்டு!இந்த நாளயப் பொடி,பொட்டையள் பாத்துக் கொண்டிருக்க வளந்திடுதுகள்!?
August 19, 2011 2:15 AM
வணக்கமண்ணாத்த நீங்க ஆதியில இருந்து அந்தம் வரை படிக்காம கொமெண்டு போடமாட்டியள்!!!?? பாத்துகொண்டிருக்க வளந்துடுறான்கிறீங்க..சரி நாமளும் அதோட சேர்த்து கிழவனாதானே போகுறம்...!!!???
மாப்பிள நான் பார்த்தவரை கஷ்டபடும் மாணவர்கள் சங்கீதத்தைதான் தேர்ந்தெடுத்தார்கள்... சித்திரத்தை தேர்வு செய்தால் கலர் பென்சிலும் வெள்ளைத்தாளும் வாங்கி கட்டுப்படியாகாது அக்காலத்தில் இப்ப இன்னும் கூடவாதான் இருக்கும்..!!!????
செங்கோவி said...
ஆகுலன் நல்ல புள்ளையாச்சே..நல்லாத் தானே எழுதுறாரு..அப்புறம் ஏன் கூட்டம் இல்லை?
August 19, 2011 12:37 AM
மாப்பிள அவரு முதல்ல நல்லா படிக்கட்டும் பதிவுலகம் எப்பேயும் இருக்கும்..!!! பள்ளிகூட லீவில பதிவ போடட்டும்....!!
@கோகுல்
நல்லா சாணி தப்பி இருப்பிங்க போல?//
அப்புறம், நாம இப்படியான வாத்தியம் மாட்டிக்கிட்டா,
சாணி தப்பாமல் பின்னே என்ன பண்ணி இருப்போம்?
@கந்தசாமி.
ஆகுலன்- மீசை முளைக்காத பெரிய பையன்.
அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்//
இது ரொம்ப ஓவர் காமெடி ஐயா...
பாவம் ஆகுலன்.
@பாரத்... பாரதி...
உங்களால் அறிமுகம் செய்யப்பட்ட ஆகுலனுக்கு வாழ்த்துக்கள்//
நன்றி பாஸ்.
@மகேந்திரன்
கொஞ்சம் அதிகம் தான் சகோ ....
அறியாத வயதில் செய்தது
இப்போ நினைத்தால் கொஞ்சம் மனதுக்கு சங்கடமாக இருக்கிறது.
பள்ளிநேரம் முடிந்தபின் கூடுதல் நேரம் வகுப்பெடுத்தமைக்காக
ஆசிரியரின் வாகன எரிபொருள் கலனில் மணலை அள்ளிப்போட்டு
அவரை அன்று வீடு வரை வாகனத்தை நடைப்பயிர்ச்சிக்கு கூட்டிசென்ற நாளை இன்றும் மறக்க முடியவில்லை...//
அடடா...உங்க பீலிங்ஸை எல்லாம் கிளறி விட்டிட்டேன் போல இருக்கே...
சிறு வயதில் ஜாலிக்காக, பிறரைத் துன்புறுத்தி, அவர் தம் உணர்ச்சிகளோடு நாம் விளையாடும் விளையாட்டுக்கள் பெரியவர்களானதும் நினைத்துப் பார்க்கையில் கவலையினை தான் தரும்...
@கந்தசாமி.இப்புடி தான் சங்கீத வாத்தியார் எங்களோட கேமை கேட்டுட்டார் என்று அவற்ற சைக்கிள் ரியூப்பில இருபத்தி ஒரு ஓட்டை போட்டனாங்கள்.. ஆனால் அவருக்கு தெரிய வந்து எங்களை மன்னிச்சுட்டார்..
//
அடப் பாவமே...ஓட்ட போடும் போதும் கூட எண்ணிப் போடுறீங்களே...
அவ்.....
@கந்தசாமி.
இங்கிலீசு டீச்சர் பேசிப்போட்டா எண்டு அவன்ர மோட்டார் சைக்கிளின் பெற்றோல் டாங் வயரை பூட்டிவிட்டுட்டம் . டீச்சர் அது தெரியாமல் வீடுவரை உருட்டிக்கொண்டு போனவா -ஹிஹி//
அடப் பாவி, நல்ல வேளை சாதுவான பேர்வழியிடம் மாட்டியிருக்கிறீங்க.
கொஞ்சம் சுடு தண்ணிப் பேர்வழி வாத்திமாரிடம் மாட்டியிருந்தால்...
பின்னாடி அடியில் தழும்பு வைச்சிருப்பாங்க.
மேசையில் உட்காரும் போது,
ஒவ்வோர் தடவையும் பின் பக்கத்தை, மெதுவா கையால் பிடிச்சுக் கொண்டு தான் உட்கார வேண்டி வந்திருக்கும்.
@Reverie
ஆகுலன் மோதிரக்கையால் குட்டுபட்டிருக்கிறார்...//
அவ்....அப்ப ஆகுலனோடை பக்கத்து பெஞ்சிலை நீங்க தான் உட்கார்ந்து படிச்சிருக்கிறீங்க;-))))))))))))
@Reverie
நிரூபன்..நீங்க கொஞ்ச நேரம் மகேந்திரனிடம் பேசிட்டிருங்க...
மகேந்திரனின் மறுபக்கம்னு ஒரு பதிவு போடலாம் போல...//
அவ்...இந்த ஐடியாவும் நல்லா இருக்கே...
நான் ரொம்ப ஓவராத் தான் மகேந்திரன் அண்ணாச்சியின் ஞாபகங்களை கிளறி விட்டேன் போல இருக்கே.
@செங்கோவி
டிங்குசா டீச்சரா...ஆஹா, இன்னைக்கு செம மேட்டர் போலிருக்கே..//
வாங்கோ....வாங்கோ...
இன்னைக்கு செம மேட்டர் தான்.
அவ்....
@Riyas
// என்ன பதிவு இம்புட்டுப் பெரிசா இருக்கே என்று மவுஸை மேலும் கீழும் இழுத்துப் பார்க்கீறீங்க?//
எப்படி நிரூபன் நாங்க பண்றத அப்பிடியே சொல்றிங்களே ஏதாவது மந்திரம் தந்திரம் தெரியுமோ உமக்கு..//
நானும் ஒரு பதிவர் தானே மச்சி..
எல்லாம் ஒரு அனுபவம் தான்...
அவ்...
@Riyas
சங்கீதமெல்லாம் நீரு படிச்சீரோ அவ்வ்வ்வ்வ்வ்வ்..//
மாற்றீடா வேறு வழியில்லை..
அதான் படிச்சேன்..
அவ்...
@Riyas
ஆகுலனின் அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்..
பாஸ் எங்கள எப்ப அறிமுகப்படுத்த போறீங்க..
எல்லாம் கேட்டுவாங்க வேண்டிய நிலை..ம்ம்ம்//
வெகு விரைவில் அறிமுகப்படுத்துறேன் பாஸ்..
நீங்கள் எல்லாம் சீனியர் பதிவர்கள்.. & மூத்த பதிவர்கள்.
இருந்தாலும் வெகு விரைவில் அறிமுகப்படுத்துகிறேன்.
நோட் புக் பேப்பரைக் கிழித்து, சுருட்டுப் போலச் செய்து, வாத்தியாரின் வாயிற்குள் வைத்து விட்டான்.
சரியான டைம்மிங்..//
சரியான டைம்மிங்../அருமையாய் பாடம் சொல்லிக் கொடுத்த பசங்கள் பாட்டு வாத்தியாருக்கு.
@செங்கோவி
டீச்சர் சந்தையில சைடு பிசினஸ் பண்ணப் பார்த்தாங்க போல..கெடுத்திட்டீங்களே(!).//
ஆமாய்யா.....
பள்ளிக்கூடப் பசங்களை ஏமாத்தி சைட் பிஸினஸ் பார்த்தா...யார் தான்....கெடுக்க மாட்டாங்க...
அவ்...
@செங்கோவி
ஆகுலன் நல்ல புள்ளையாச்சே..நல்லாத் தானே எழுதுறாரு..அப்புறம் ஏன் கூட்டம் இல்லை?//
அவர் தமிழ்மணம், மற்றும் ஏனைய திரட்டிகளில் இணைக்கவில்லை.
அதனால் தான் என்று நினைக்கிறேன்.
@செங்கோவி
வாத்தியார் வாயில் பீடி வச்ச கூட்டாளி பேரு ‘நிரூபன்’ தானே..!//
அவ்....அது நான் இல்லை பாஸ்.
@செங்கோவி
நான் இப்படில்லாம் பண்ணதில்லைப்பா..கிளாஸ்ல அமைதியா தூங்கறதோட சரி!//
அவ்.......................
ஐயோ...ஐயோ...
ரொமப் நல்ல பிள்ளை நீங்க.
@செங்கோவி
இந்த நிரூ, எங்க போயிட்டாரு? நான் பாட்டுக்கு தனியா பேசிக்கிட்டு இருக்கேன்..//
பாஸ்...தூங்கிட்டேன் பாஸ்.
இதோ,
இப்போதே வந்திட்டேன்.
@ஆகுலன்
முதலாவதாக என்னை அறிமுகபடுத்தியதற்கு நன்றி..அண்ணா//
என்னது...அண்ணாவா..
விட்டா வயசான அண்ணா என்றும் சொல்லுவீங்க போல இருக்கே.
எனக்கும் உங்களின் வயசு தான்..
அதான்...நானும் என்றும் 16 தான்.
நம்புங்கோ ஆகுலன்.
@ஆகுலன்
எனக்கும் உப்படி பட்ட அனுபவங்கள் உண்டு...
எனக்கு உப்பிடி ஒரு சங்கீத டீச்சர் கிடைகலியே.............//
ஆகா...அப்படீன்னா உங்க அனுபவங்களையும் சொல்லுறது.
@ஆகுலன்
எனக்கும் உப்படி பட்ட அனுபவங்கள் உண்டு...
எனக்கு உப்பிடி ஒரு சங்கீத டீச்சர் கிடைகலியே............//
ஏன் நைட்டெல்லாம் படம் பார்த்திட்டு, பள்ளிக் கூடத்திற்குப் போய் தூங்கியிருக்கலாமோ;-))))))))
வாங்க பாஸ்
@காட்டான்
ஆகுலனுக்கு எனது வாழ்த்துக்கள்...//
வாங்கோ மிஸ்டர்...காட்டான்.
உங்களோடு இணைந்து நாங்களும் வாழ்த்துவோம் ஆகுலனை.
ஆமா...நீங்க வாழ்த்து மட்டும் தான் சொல்லுவீங்களா..
கோழிக் குளம்பு வைச்சுக் கொடுக்கலாம் தானே...
ஆகுலனுக்கு.
அவ்....
@காட்டான்
படுவா ராஸ்கோல்... நீ என்னத்துக்கு சங்கீத பாடம் எடுத்தாய்ன்னு எங்களுக்கு தெரியாதா மாப்பிள...!!!!! அங்கதானே பொம்பிள பிள்ளைகள் கூட.. இப்பிடி மனையியல் பாடம் எடுத்த பசங்களும் இருந்தாங்க அந்த காலத்தில அது நான் இல்ல மாப்பிள...!!!??
காட்டான் குழ போட்டான்...//
அவ்.....
அனுபவம் பேசுறது என்று நினைக்கிறேன்.
நான் படிச்சது கலவன் பள்ளிக் கூடத்தில் இல்லை..
அதனாலை எல்லாருமே பொடியங்கள் தான்.
@காட்டான்
ஐயா பாத் பாரதி கொஞ்சம் பொறுங்கோ..!!! இல்லாட்டி காலையில வந்து நிரூபனின் பதிவில் இருக்கும் பின்னூட்டத்தை பாருங்கோ.. நாங்கெல்லாம் ராக்கோழிங்க.. அடுத்து காலை சேவல் ஒண்டு வர இருக்கு...!!?? அதுவும் இல்லாம இது கும்மியடிக்க வசதியான ஒரு பதிவுங்கோ...!!!!??? //
அவ்....சேவல் என்று நீங்க யாரைச் சொல்லுறீங்க என்று தெரியுமே...
அவ்...
@காட்டான்
இஞ்ச பாரடா இந்த குழந்தைக்கும் மீசை முளைச்சிட்டாம்.. ஆகுலன் எங்களுக்கு ஆதாரம் வேண்டும்...!!?? //
அவ்..........இது செம டைம்மிங் பில்டப்.
@காட்டான்
ok ok இன்னும் நாட்டாமை வரல்ல அல்லக்கை நான் பொல்ல கொடுத்து அடி வாங்காம.. நாட்டாமை வந்தா பிறகு வாறேன்யா...!!!!!???)//
நீங்கள் சொல்லி வாய் மூடலை..
உங்களுக்குப் பின்னாடி ஐயா வந்திட்டாரே.
ஐயாவும் ஒரு சீனியர் பதிவர் தான்.
பதிவுலகில் ஆரம்ப காலத்தில் இருந்து பதிவெழுதியிருக்கிறார் என்பதனை, இணையத்தில்
தேடிய போது கிடைத்த
யோ.....ன்...பாரி...என்ற குழந்தைங்க படம் போட்ட புரோபைலுடன் தான் கண்டு பிடிச்சோம்.
அவ்..
நானும், ஓட்டவடையும் யோகா ஐயாவைப் பற்றித் தேடினோம்.
பழைய பாடல்கள், பாரதிதாசனின் தமிழ் பற்றிய விளக்க குறிப்புக்கள், கேரளாவில் மக்களைக் கொன்ற யானைத் திருவிழா என்று அந்தக் காலத்திலை ஐயா ஐந்து ப்ளாக் வைத்துக் கலக்கியிருக்கிறார்.
அவ்....
@Yoga.s.FR
ஆகுலன் மோதிரக்கையால் குட்டுபட்டிருக்கிறார்...////அட! நிரூபனுக்கு ............................ ஆயிட்டுதா?மோதிரக் கையால ஆகுலனுக்கு குட்டுறாரெண்டா?எனக்கு "காட்டான்" அறிமுகப்படுத்தி வெச்சார்!சின்னப் பொடி,படிக்கிற பொடி,பண்பான பொடி!//
அது வாத்தியார் குட்டினதைச் சொல்லுறார்.
எனக்கு கலியாணம் ஆகலை..
அவ்...
@Yoga.s.FR
கிழடு வந்திட்டுது,இனிக் கும்முங்கோ,காட்டான்!!!!(சும்மா நாட்டாமை எண்டு..........)//
மிஸ்டர்..காட்டான்..இது தேவையா...
இது தேவையா..
@Yoga.s.FR
நான் கூட நல்லாப் பாடுவன்!எட்டாம் வகுப்பில ஏதோ சோதின வைப்பினமெல்லொ?,அதில பாடி கொலிஜ்ஜிலயே சங்கீதம் பாஸ் பண்ணின ஒரே ஆள்,நான் தான்!அப்பெல்லாம் இப்புடி வாத்திமார் இல்ல!//
அவ்....அது வட இலங்கை சங்கீத சபையின் பரீட்சை தானே..
அப்ப நீங்களும் ஒரு சங்கீத வித்துவான் என்று சொல்ல வாறீங்க.
வெகு விரைவில் பாட்டுக்குப் பாட்டு வைக்கிறேன்.
ஓடிவந்து மைக் பிடித்துப் பாடுங்கோ.
@Yoga.s.FR
எல்லாரும் இப்பிடித்தான்!தங்கட பொட்டுக்கேடுகள வேறை ஆருக்கோ நடந்த மாதிரி சீன் காட்டுவினம்!//
என்னையும் சேர்த்துத் தானே சொல்லுறீங்க.
நான் வாத்தியார் இல்லை நம்புங்கோ.
@Yoga.s.FR
நிரூபன் said.....என் இன்ரநெட்டிற்கு யாரோ சூனியம் வைச்சிட்டாங்க.
அதான் பதிவுலகப் பக்கம் வரமுடியலை.///அப்ப தம்பி மைந்தன் சொன்னான்,காசு(நெட்டுக்கு)கட்டேல்லயெண்டு?பொய்யே???//
அவ்...அவ்...
இல்லை ஐயா, நெட் திடீரென்று ப்ராப்ளம் ஆகிடுச்சு,
அதான்...ஆப்பிஸில் இருந்து முடிந்தவரை பல பதிவர்களுக்குப் பின்னூட்டம் மட்டும் போட்டேன்,
வீட்டில் இருக்கும் கனெக்சன் கறார் ஆகிடுச்சு.
பிறகு தற்காலிக இணைப்பாக ஒன்று தந்தாங்கள்.
அது வலு சிலோ..
இப்போ கனெக்சன் சரி பண்ணிட்டாங்க.
@Yoga.s.FR
இது தான் சொல்லுறது,பதிவ மட்டும் படிச்சா பத்தாது,கொமெண்டுகளையும் படிக்க வேணுமெண்டு!இப்ப பாத்தா,சின்னப் பொடியனெண்டு சொல்லி வாய் மூடேல்ல பொடி சொல்லுது எனக்கும் மீசை முளைச்சிட்டுது!வோட்டுப் போடுற வயது வந்திட்டுதெண்டு!இந்த நாளயப் பொடி,பொட்டையள் பாத்துக் கொண்டிருக்க வளந்திடுதுகள்!?//
அவ்....என்ன ஆகுலன் ஒரு நிமிடத்தில் வளர்ந்திட்டாரோ...
அவ்...
@ரியாஸ் அஹமது
அன்பு சகோதரா
உங்கள் வலை பூவின் மேல் என் கணினிக்கு என்ன கோபமோ தெரியல பல நாள் திறக்க முடியாவில்லை ... அதன் உங்கள் பக்கம் வரவில்லை ...நீங்களும் ஆறு நாள் வரலையா ..அப்ப சரி தான் ...
வழமை போல சிறப்பான பதிவு//
நன்றி பாஸ்,
வலைப் பூவில் என்ன கோளாறு என்று தெரியலை.
மீண்டும் வந்திட்டீங்க தானே.
நானும் வந்திட்டேன்.
அவ்...
@காட்டான்
மாப்பிள நான் பார்த்தவரை கஷ்டபடும் மாணவர்கள் சங்கீதத்தைதான் தேர்ந்தெடுத்தார்கள்... சித்திரத்தை தேர்வு செய்தால் கலர் பென்சிலும் வெள்ளைத்தாளும் வாங்கி கட்டுப்படியாகாது அக்காலத்தில் இப்ப இன்னும் கூடவாதான் இருக்கும்..!!!????//
அவ்....சங்கீதம் பாடுறது தானே அதை விடப் பெரிய கஸடம் பாஸ்.
@இராஜராஜேஸ்வரி
நகைசுவை மலரும் நினைவுகளுக்குப் பாராட்டுக்கள்.//
நன்றி அம்மா.
@"என் ராஜபாட்டை"- ராஜா
வாங்க பாஸ்//
வந்திட்டமில்லே...
அவ்...
>>டிஸ்கி: டிங்குசா டீச்சர் கதையினை இலங்கையில் மிகப் பிரபலமான லூஸ்மாஸ்டரின் கஸெட்டில் கேட்ட நாடகத்தில் இருந்து உல்டா செய்து, கொஞ்சம் பூசி மெழுகி எழுதியுள்ளேன்.
hi jhi பூசி மெழுகுனதே இவ்வளவா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நிரூபா கம் டூ பர்சனல் சேட் ,, ஹா ஹா
பள்ளி நினைவுகளை தட்டி எழுப்பிய தங்கள் பதிவிற்கு நன்றி நண்பரே .
தமிழ் மணம் 14
நன்றி
" சகோதரன் " எம்.ஆர்
கடைசியா படம் போட்டு இருக்கீங்களே அவுங்க தான் உங்க டிங்குசா டீச்சரா #டவுட்டு
அமா, இந்த பசங்கல்லாம் இவ்வளவு அபஸ்வரமா ஆரோகணம் அவரோகணம்
பாடும் சத்தத்தில் அந்த வாத்தியாருக்கு எப்படி தூங்க முடிஞ்சது. புரியல்லியே.
மாப்ளே.... உன் டிங்குச்சா டீச்சரு சூப்பரு.
நகைச்சுவையிலும் அசத்துங்க...
இந்த பதிவை விட நீளமா பதிவு வரப போகுதா?
வந்திட்ட்டிங்களா வரும்போது நீட்டா பதிவ போட்டு இல்லாத குறையை நிவர்த்திபன்னிடிங்க
இதவிட நீட்டா பதிவு வந்தா கயிறு கட்டி தான் மாவுச இழுக்கணும்
நிரூ….!
நீங்களும்- உங்களின் நண்பர்களும் பெரிய ரெறர் குரூப்பா இருக்கே. பாவம் ஐயா அந்த சங்கீத வாத்தியார்.
அதுதவிரவும், நீங்கள் என்னை விட அதிபயங்கர சங்கீத வித்துவான் என்பது மனதுக்கு மகிழ்வைத்தருகிறது. ஹிஹிஹி.
பாட்டுக்குப் பாட்டெண்டா "சமரசம் உலாவும் இடமே"(அந்த சீசன் பாட்டுகள்) எண்ட மாதிரி தொடங்குற பாட்டுகள் தான் கேக்க வேணும்,சரியோ?
மருதமூரானையும் சேருங்கோ!!!!
சூப்பாரான ஐடியாக்களுக்கு டிங்குசா டீச்சர்தான் போலிருக்கு.
இந்த அனுபவங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் .தொடர் பதிவு துவங்கினால் என்ன?
இலங்கையின் சங்கீத விற்பனர்கள், வித்தகர்கள், வித்துவான்களாகிய எம்மை?!?!////ஹா!ஹா!ஹா!ஹி!ஹி!ஹி!ஹி!!!
உங்கள் நினைவாற்றல் அருமை சகோ!
நிரூபன் said.......என்னையும் சேர்த்துத் தானே சொல்லுறீங்க.
நான் வாத்தியார் இல்லை நம்புங்கோ.///உங்கள நம்பாம,வேற ஆரை நம்பப் போறம்?சாணி தப்ப...............நானும் தப்ப..?!?!?!?!
சில சம்பவங்கள்,ஏன் பல சம்பவங்கள் கூட இருக்கலாம்!நான் படித்த காலத்தில் மிகவும் பயந்த சுபாவம் உடையவனாக இருந்தேன்.எங்களுக்கு உயிரியல் கற்பித்தவர் திருநெல்வேலியிலிருந்து வருவார்.மகிழூந்து வைத்திருந்தார்.சில கோபக்கார மாணவர்கள் சேர்ந்து,மகிழூந்தின் நான் கு சக்கரங்களுக்கும் ஆணி வைத்தார்கள்!கோபக்கார ஆசிரியர் தான்,கடுமையாக் தண்டிப்பவர் தான்,இருந்தாலும் என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு அது!
ஆனால் சங்கீதப் பாட வகுப்பறைக்குள் நம்மளோடை கடம்பநாதன் வாத்தியார் நுழைஞ்சாலே போதும். சங்கீதம் படிக்கிற பசங்கள் அத்தனை பேருக்கும் செம ஜாலி. முதலில் வாத்தியார் என்ன பண்ணுவார் என்றால்,
’’பிள்ளைகளே...இது தான் ஆரோகணம், இது தான் அவரோகணம்,
இவற்றினைச் சுருதி குன்றாமல்
ஸ், ரி, க,ம,ப,த,நி,ஸ....எனும் வரிசையில் பாட வேண்டும்.
எங்கே பாடத் தொடங்குங்கோ!! என்று சொல்லி விட்டு, வாத்தியார் கண்ணை மூடித் தூங்கத் தொடங்கிடுவார்.
‘ஸாரி........காமா......பதா...நி...ஸா....
ஸாணி தப்ப....சானி தப்ப........
சாணி தப்ப...............நானும் தப்ப...............இப்படி நாம பாடி முடிச்சு,
வாத்தியார் தூக்கம் கலைஞ்சு எந்திரிக்கவும், நாற்பது நிமிடப் பாட வேளை முடிஞ்சிடும்.
ஆகா இதுதான் அருமையான சந்தர்ப்பம் என்று வாத்தியாரு மூஞ்சியில
பாட்டால் சாணிதப்பிய அந்தக் கடந்தகால நிகழ்வுகளை நம்ம சகோ இன்னும்
மறக்கவில்லையோ...ஹி....ஹி.....ஹி......
நன்றி சகோ கடந்துசென்ற எமது பள்ளிப் பருவத்தை நினைத்து சிரிக்கும்வண்ணம் அழகிய
நகைச்சுவைகளைப் பகிர்ந்துகொண்டமைக்கு.
ஆ..!!!?? அண்ணாத்த அவரா நீங்க.. அந்த பிளாக்க கொஞ்ச நாளுக்கு முன்ன பார்தேன்... 2008 சித்திரைக்கு பின்பு ஒண்டுமே எழுதல... எவ்வளவு அருமையான நகைச்சுவையாளர் நீங்க.. ஏன் அண்ணாத்த அத திரும்பவும் எழுதலாந்தானே...?? இப்ப நம்ம நிரூபன போல வெடிகுண்டு போடமுந்தி கும்மிபதிவ இறக்குற மாதிரி..!!!?? உங்கட நகைச்சுவையால எவ்வளவு பதிவ தூக்கி நிறுத்திறீங்க.. மீண்டும் எழுதுங்கோண்ண ஒவ்வொருநாளும் எழுதாட்டியும் மாதத்தில இரண்டு மூன்று பதிவு போடலாந்தானேண்ண...??
அண்ணாத்த இந்த கேள்விக்கு நகைச்சுவையா கும்மியடிச்சு சடையாதீங்க உண்மையான பதில் வேண்டும்...
அப்புறம் மாப்பிள்ள நாளைக்கு என்ன வெடிகுண்டோ..!!? இப்பவே பதுங்கு குழிக்க போகத்தான் கேட்டனான்...!!? நாங்க கழுவுற மீனில நழுவுற மீந்தானேய்யா...!!!??
நிருபன் பாஸ்
நீங்க ரெம்ப லக்கி
இப்புடி ஒரு டீச்சர் கிடைச்சதுக்கு
உங்களுக்கு எங்கெல்லாம் மச்சம் இருக்கோ
ஹா ஹா
ஆகுலனுக்கு வாழ்த்துக்கள்.
நான் படிக்கும் வலைப்பூக்களில்
எனக்கு புடித்த எழுத்தாளர்களில் ஆகுலன்
முதன்மையானவர்.
என்ன துஷி இப்பிடி ஐஸ் வைக்கிறீங்க ஆகுழனுக்கு ஆனா நான் பார்த்தவரை அவரு உண்னையே ராக்கிங் பண்ணுவேன்னு மிரட்டினாரே..!!?? பயந்திட்டியா மாப்பிள..????
நாங்களும் கோத்து விடுவோமில்ல ஹிஹிஹி...
தலைப்பு சூப்பர் மச்சி..
பள்ளியில் கட்டாய சங்கீத பாடம் வரவேற்க வேண்டிய ஒன்று.எங்களுக்கெல்லாம் அந்த கொடுப்பினை இல்லை.
பதிவர்களின் அறிமுகங்கள் பாராட்டுக்குரிய ஒன்று.ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொருவரை அறிமுகப்படுத்தி விட்டு நிரந்தரமாக அவர்களுக்கான சுட்டியை நிறுவினால் இன்னும் சிறப்பாக இருக்குமே!
எங்க டீச்சர் எல்லாம் நாங்க படிக்கும் போது.....ஜயோ அதுவும் எங்கள் எக்கனாமிக்ஸ்(பொருளியல் பாடம்) மேடத்தை............ரொம்ப மதிப்பு கொடுப்போம்...ஹி.ஹி.ஹி.ஹி
உங்க டீச்சரு சூப்பரு......
137 வது கமெண்ட் டீச்சரு சூப்பரு
ஆகுலன் ஏற்கனவே பின் தொடர்கிறேன்....
வாத்தியார்க்கு நல்ல தண்டனை...
அந்த வகுப்பறையை நினைத்துப் பார்த்தால்..ஹா,ஹா..சிரிப்பா வருது!
"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
ஆகுலனுக்கு வாழ்த்துக்கள்.
நான் படிக்கும் வலைப்பூக்களில்
எனக்கு புடித்த எழுத்தாளர்களில் ஆகுலன்
முதன்மையானவர்.
அண்ணே நீங்க இப்படி சொல்லலாமா...
என்ன துஷி இப்பிடி ஐஸ் வைக்கிறீங்க ஆகுழனுக்கு ஆனா நான் பார்த்தவரை அவரு உண்னையே ராக்கிங் பண்ணுவேன்னு மிரட்டினாரே..!!?? பயந்திட்டியா மாப்பிள..????
நாங்களும் கோத்து விடுவோமில்ல ஹிஹிஹி..
எங்க நல்லாதானே போய்கிட்டிருக்குது.....
ஆகுலன் said...
என்ன துஷி இப்பிடி ஐஸ் வைக்கிறீங்க ஆகுழனுக்கு ஆனா நான் பார்த்தவரை அவரு உண்னையே ராக்கிங் பண்ணுவேன்னு மிரட்டினாரே..!!?? பயந்திட்டியா மாப்பிள..????
நாங்களும் கோத்து விடுவோமில்ல ஹிஹிஹி..
எங்க நல்லாதானே போய்கிட்டிருக்குது.....
August 20, 2011 12:38 AM
அதுதான் எங்களுக்கு பிடிக்காதேய்யா...!!?? ஹி ஹி ஹி
Post a Comment