என் மூச்சுக் காற்றில் உஷ்ணம் கலந்திருக்கிறதே. அதற்கான காரணம் தெரியாதவனாக நான் தவிக்கிறேனே, ஏன்??
ஓ அவளின் நினைப்பினால் தானே.
மௌனங்களால் மட்டும் உன்னை அடைந்து விட முடியும் என நான் கனவு கண்டு கொண்டிருந்த பொழுதுகளிலிருந்து உன் மீதான எனது மயக்க நிலையினைத் தெளித்தாயே, நீ யார்? வாய்க்குள் நுழைய முடியாத பெயர் கொண்ட உன் நினைவுகள் இன்னும் என்னை வருடிச் செல்கிறதே! மீண்டும் மீண்டும் என் நினைவுச் சுமைகளை அதிகமாக்கி உன்னைப் பற்றி எண்ண வைக்கிறாயே யார் நீ....
உன்னைப் பற்றி இராத்திரிப் பொழுதுகளில் எழும், இவ்வாறான கேள்விகளோடு என் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. தூக்கம் என்னைத் தழுவிச் செல்லத் துடிக்கும் நேரங்களில் போர்வையினை இழுத்துப் போர்த்திக் கொள்ளும் போது, அருகே வந்து, ‘What are you doing Honey? செவ் இதழ் கலந்த அழகிய அலங்கரிக்கப்பட்ட புருவங்கள் கொண்ட உன் முகம் காட்டி, என் மூச்சில் புரையேற்றிற் செல்லும் போது தான் உன்னைப் பற்றிய என் சிந்தனை முழுவதும், நீ போகும் பாதையினைப் பின் தொடர்ந்து சென்றது.
நினைக்கையில் நின் முகம் காட்டி வந்து, உறங்கையில் உயிரில் உணர்வேற்றி தன் வழி மறையும் செவ் இதழ் நங்கை நீ என நான் ஒவ்வோர் நாளும் நினைத்திருப்பேன். காலில் கொலுசோடு நீ வந்திருந்தால்...உன் வருகையினை முற் கூட்டியே அறிந்து இதய வாசலெங்கும் உனக்கான பூக்கள் பரப்பி இமை மூடாது காத்திருப்பேன் அல்லவா. சொல்லாமல் கொள்ளாமல் நீ வந்து என்னுள் கிளு கிளுப்பூட்டி விட்டு அருகே இருக்காது ஆசையினைக் கூட்டி விட்டு, மனதை அலையவைத்தல்லவா நீ செல்கிறாய்.
’You are a naughty guy? Why did you touch there? என்று என்னைப் பார்த்து நீ கேட்கும் போது தான் புரிந்தது. நான் உன்னைத் தொடாமலே தொடுவது போன்ற ஸ்பரிச உணர்வின் மூலம் என்னைப் பற்றிய நினைப்பு உன்னிடத்தே ஆழப் பதிந்து விட்டது எனும் உண்மையும்;
உன் பெயர் கேட்கும் போதில், மெதுவாய் உயிரில் உஷ்ணமேற்றி விட்டு என் உயிர் நாளங்களில் இளமைத் திராவகம் ஊற்றி விட்டு, என்னைத் தவிக்க விட்டுச் செல்லும் ஒவ்வோர் நிமிடங்களிலும், உன் பெயர் கேட்க நான் எத்தணிக்கும் போது, உன் செவ் இதழில் படிந்திருக்கும் சிகப்பு மையினை என் வாயோடு வாய் வைத்து ஒட்டியதற்கு அடையாளமாய் விட்டுச் செல்வாயே, அதன் பின்னர் நான் படும் வேதனையை எப்படிச் சொல்லி அழுவது?
அன்றும் போர்வையினை இழுத்துப் போர்த்திய அதே கணத்தில் ஜன்னலோரமிருந்த் திரைச்சீலை விலக்கி நீ வந்தாய். உன் சீண்டல்களுக்கு இன்று அனுமதி கொடுப்பதில்லை எனும் நினைப்பில், உன்னைக் கண்டும் காணாதவனாய் இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்கி விட்டேன். மெதுவாய் என் போர்வை விலக்கி, உன் நெஞ்சோடு என் மார்பை நெருங்கச் செய்து, என் உடலில் புது ரத்தம் பாய்ச்ச நீ முனைந்த போது, எட்டி விலக்கி, உன் பெயர் கேட்டேன். கோபங் கொண்டாய். பிலடெல்பியா எனச் சொல்லி விட்டுப் மறைந்து சென்றாய். ‘சீஸ் கலருக்கும், மாஜரின் கலருக்கும் வேறுபாடு அதிகம் என்று தெரிந்தும், என் மீது ஆக்கிரமிக்க நினைக்கிறாயே, இதன் பொருள் என்ன? எல்லை கடந்த காதலா? அல்லது மொழி- இனம் கடந்த என் மீதான தேடலா என்று எத்தனை நாள் ஏங்கியிருக்கிறேன் தெரியுமா அன்பே?
உன்னை அன்று இழந்த சோகம் என்னை வாட்டும் வேளையில், ஏக்கம் எனும் உணர்வு கொண்டு மனம் தேம்பி அழுதது. உன்னைப் பற்றி அறியும் நோக்கில் என் தேடலை விரிவுபடுத்தினேன். உன் பெயர் சொன்னாய், உனக்கும் எனக்குமான உரையாடல்கள் மூலம் நீ ஒரு வெள்ளை இனப் பெண் என்று அர்த்தம் கற்பித்தாய். இனியும் தாமதமேன் என உன்னை அறிய முனைந்தேன்.
உதவிக்கு எனக்குத் தெரிந்தவராய் யோகா ஐயா பிரான்ஸில் இருக்கிறார் எனும் உண்மை உணர்ந்து அலைபேசி வழியே அழைப்பொன்றை மேற்கொண்டேன்.
ஐயாவும், அலைபேசி வழியே நான் ஒப்புவித்த கருத்துக்களைச் செவிமடுத்து, மகிழ்ச்சி கொண்டார். ஒரு பச்சிலர் பையனின் வாழ்வில் ஒளியேறப் போகிறதென்று புகழ்ந்து தள்ளினார், பெயரைக் கேட்டார். பிலடெல்பியா என்றேன். கொஞ்சம் நிறுத்து என்று கெஞ்சல் மொழி பேசினார். என் கனவில் காதல் மயக்கம் தந்த சம்பவங்கள் என நான் ஒப்புவித்த விடயங்களை மீண்டும் அசை போட்டார்.
‘அட நாசமாப் போவானே...நீ பிலடெல்பியா என்று கனவு கண்டது, வெளிநாடுகளில் பிரபலமான ஒரு Cheese ஐப் பற்றி என்று கன்னத்தில் ஓங்கி அறையாத குறையாக கடுந் தமிழில் ஏசினார்.
ஓவராக் கெட்ட வார்த்தைகள் அலைபேசி வழியே சராமரியான சொற்போர்த் தாக்குதல் போன்று என் காதுகளைத் துளைத்தெடுக்க என் அலைபேசி அழைப்பினை நிறுத்தி விட்டு, சபதம் பூண்டேன். இனிமேல் வீட்டில் வெளிநாட்டு நபர்கள் அன்பளிப்பாக, விடுமுறையினக் கழிக்ப்பதற்காக ஊருக்கு வரும் பொழுதுகளில் அறிமுகப்படுத்தும் புதிய உணவுகள் மீது அதிக பிரியம் வைக்கக் கூடாதெனும் உண்மையினை உணர்ந்து தெளிந்தேன்.
நனவென ஒன்றில்லை யாயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்: திருக்குறள் எண் 1216
பொருள் விளக்கம்: நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால், கனவில் வந்த காதலி அல்லது காதலர் என்னை விட்டுப் பிரியாமல் இருப்பார்.
*********************************************************
புதிதாகப் பூத்த மொட்டு, விரைவாகப் போய்க் கை தட்டு:
பதிவுலகில் நாளாந்தம் பல புதிய பதிவர்கள் அதிரடியாக களமிறங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் வரிசையில் இப்போது வந்திருக்கும் ஒரு பதிவர் தான் பிரணவன். தமிழகத்தின் மதுரை மாநகரில் இருந்து இணையவலையினூடாக; எழுத்துலகினுள் காலடி எடுத்து வைத்திருக்கும் இவர், தன்னுடைய குறுங் கவிகள் வாயிலாக நிறைவான பொருளைத் தரும் கவிதைகளைப் படைத்து வருகிறார்.
சிறிய கவிதைகளைத் தந்தாலும், நச்சென்று மனதில் ஒட்டிக் கொள்ளும் அற்புதமான கவிதைகளைத் தருவதில் வல்லவராக இருக்கும் பிரணவனை நாமும் சென்று வாழ்த்தி வரவேற்று, எம் ஆதரவினையும் அவர் பதிவுகளுக்கு வழங்குதல் சாலச் சிறந்ததல்லவா.
ஒடோடிச் சென்று பிரணவனுக்கு எம் ஆதரவினையு வழங்குவோமா உறவுகளே!!
|
60 Comments:
மாப்பு நீ எனக்கு வைச்சிட்டாயா ஆப்பு பின்ன இண்டைக்கு மற்ற படலையிலும் குழ போடாம உன்ன சுத்திக்கொண்டே இருகிறேன்யா...
ஆனா எனக்கு உன்னில பிடிச்சதே புதியவர்களை ஆதரிக்கும் இந்த் குணந்தாயா.. வாழ்த்துக்கள் காட்டான் குழ பொட்டான் முத குழ??
அண்ணாத்தைக்கு நல்ல வேலைதான்யா குடு்த்திருக்க... அங்கின கொஞ்சம் மெனகெட்டா நல்லந்தாயா கருத்துக்கள் என்ர பேரில காட்டானின் குழ எல்லாத்தையும் சாப்பிடுறார்..
நாளைக்கு கொஞ்சம் தூர போறன் எண்டாலும் டெலிபோன் கையில இருக்கென்னு சொல்லி வை அந்த குறும்பாட்டுட்ட...
காட்டான் குழ போட்டான்...
மாப்பிள நீ அறிமுகபடு்த்தின ஆளுட்டையும் போட்டுட்தான்யா வாரன் வாழ்த்துக்கள்...
மாப்பிள இஞ்ச பூநகரி மொட்டக்கருப்பன் அரிசி இருக்கான்னு மக்கள் கடையில அடம்பிடிச்சு வாங்கிக்கொண்டுபோய் கொட்டீற்று உங்கவந்து விடுறான்யா றீலு... இதுல வேற எனக்கு ஏசி வேனும் கோசி வேனும்ன்னு இவங்க விடுற பீலாவ பார்தா எங்க முட்டுறதென்றே தெரியல.. நானும் பிள்ளை குட்டியோடதான்யா வந்தனான் சிலோனுக்கு இஞ்சதான்யா அவங்களும் பிறந்தவ உங்க வந்து கொட்டில்ல சந்தோசமாந்தான்யா இ்ருந்தவ.. ஏசியும் கோசியும் தேவையெண்டா ஏன்யா சிலோனுக்கு லீவில போறீங்க.. வீட்டில சீச சாப்பிடுற ஆட்கள நான் இன்னும் இஞ்ச பாக்கல அண்ணாத்த பார்த்தா சொல்லுங்க.. ஏன்னா காட்டான் இன்னும் எங்கட ஆக்கள புரிஞ்சுக்கேல..!!!!????
பிரணவன் கவிதைகள் அருமை நண்பா ...நன்றி நன்றி
வழமை போல் நல்ல பதிவு ,,,மீண்டும் வந்து படிக்கணும் இப்போ
வழமை போல் நல்ல பதிவு ,,,மீண்டும் வந்து படிக்கணும் இப்போ
நல்ல காத்திரமான படைப்பு மச்சி .
பிரணவன் அறிமுகத்திற்கு நன்றி!
அறிமுகப்பதிவர் அருமை..
//Why did you touch there?//
என்னமோ நினைச்சு வாசித்தால் கடைசியில் கவுத்துபுட்டிங்களே தலீவாஆஆஆஆஆ
புதிய பதிவருக்கு என் வாழ்த்துக்கள் மக்கா....
எலேய் தமிழ்மணம் ஆறாவது ஓட்டு போட்டுட்டேம்லேய், யாராவது சீக்கிரமா வந்து ஏழாவது குத்துங்கப்பூ.....
புதியவர்களை அறிமுகம் செய்வது உயர்ந்த குணம் வாழ்த்துக்கள் !!
புதிய பதிவர் பிரணவனுக்கு வாழ்த்துக்கள்
அடுத்த முறை nuttella பற்றி கனவு காண வாழ்த்துக்கள்....!
ஏலே மாப்ள தலைப்பு பிரமாதம் ..
பிரணவன் தளம் நல்லா இருக்கு..
வாழ்த்துக்கள்..
கிறங்க வைத்த வர்ணனைகள். அருமையான குறள் மூலம். புதியவர்களை வரவேற்பது பாராட்டுதலுக்குரிய செயல்.
நல்ல கனவு கண்டீங்க போங்க ....
ஆனா எழுதியிருக்கிற விதத்தை பாத்தா காதல்ல சிக்கி சின்னாபின்னமாகிக்கிட்டிருக்கவன் எழுதியிருக்கிறது மாதிரியே இருக்கு ....அப்படி ஒரு வர்ணனை ....அப்படில்லாம் ஒண்ணும் இல்லியே மாப்ள ?
அப்புறமா வர்றேன்..
வள்ளுவத்தின் மூன்றாம் பால் வழிந்தோடுகிறது...
அழகிய நடை.. மற்றும் வார்த்தைகள்...
பிரணவன்
அவருக்கும் என் வாழ்த்துக்கள்...
அடப்பாவி மகனே நானும் ஏதோ லண்டனில நடந்த கலவரம் பற்றி எண்டு நினச்சு வந்தன்
நிறைய கனவு காண வாழ்த்துக்கள் பாஸ்!
பிரணவன் அறிமுகத்திற்கு நன்றி!
கவித்துவமான வரிகளுடன்
கூடிய அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
பிரணவன் அறிமுகப் படுத்தப் படவேண்டிய
நல்ல கவிஞரே
அறிமுகப் படுத்தியமைக்கு வாழ்த்துக்கள்
அழகு வர்ணனைகள்
சிறந்த கனவு...
பிரணவனுக்கு வாழ்த்துக்கள்.
////தூக்கம் என்னைத் தழுவிச் செல்லத் துடிக்கும் நேரங்களில் போர்வையினை இழுத்துப் போர்த்திக் கொள்ளும் போது, அருகே வந்து, ‘What are you doing Honey? செவ் இதழ் கலந்த அழகிய அலங்கரிக்கப்பட்ட புருவங்கள் கொண்ட உன் முகம் காட்டி,/// என்னது ,தூக்கத்தில இருப்பவனை எழுப்பி என்ன செய்கிறாய் எண்டு கேக்கிராவோ?பொண்ணுக்கு ஏதாவது வியாதி போல ஹிஹி
///’You are a naughty guy? Why did you touch there? என்று என்னைப் பார்த்து நீ கேட்கும் போது தான் புரிந்தது. நான் உன்னைத் தொடாமலே தொடுவது போன்ற ஸ்பரிச உணர்வின் மூலம் என்னைப் பற்றிய நினைப்பு உன்னிடத்தே ஆழப் பதிந்து விட்டது எனும் உண்மையும்; /// பார்ரா ,கல்யாண வயசு வந்த இப்புடி தான் ))
ஆகா அவ்வளவும் சாப்பாடு பத்தியா அட போங்க பாஸ்
பிரணவன் பார்த்தேன் முதல் கவிதைக்கே நான் காலி. அருமையான படைப்பாளி.
இது போல ஒவ்வொரு பதிவிலும் ஒருவரை அறிமுகப்படுத்த வேண்டும்.
///உன்னைப் பற்றி அறியும் நோக்கில் என் தேடலை விரிவுபடுத்தினேன். உன் பெயர் சொன்னாய், உனக்கும் எனக்குமான உரையாடல்கள் மூலம் நீ ஒரு வெள்ளை இனப் பெண் என்று அர்த்தம் கற்பித்தாய்/// அவ்வ்வ்..... நல்லது தானே ,வெள்ளைகாரிக்கு வெள்ளை மனசு, பேசாம கட்டிக்கோங்கோ ))
///உதவிக்கு எனக்குத் தெரிந்தவராய் யோகா ஐயா பிரான்ஸில் இருக்கிறார் எனும் உண்மை உணர்ந்து அலைபேசி வழியே அழைப்பொன்றை மேற்கொண்டேன்./// ஐயா இந்த விசயங்களில அந்த மாதிரி என்று சொல்ல வரிங்களா (கோர்த்துவிடுவோம்ல) ;-)
////‘அட நாசமாப் போவானே...நீ பிலடெல்பியா என்று கனவு கண்டது, வெளிநாடுகளில் பிரபலமான ஒரு Cheese ஐப் பற்றி என்று கன்னத்தில் ஓங்கி அறையாத குறையாக கடுந் தமிழில் ஏசினார்./// அடச்... சே.. அதுவா ...நான் என்னமோ எதோ எண்டல்லோ நினச்சேன் )
///பொருள் விளக்கம்: நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால், கனவில் வந்த காதலி அல்லது காதலர் என்னை விட்டுப் பிரியாமல் இருப்பார்.//// அது தானே
பிரணவனுக்கு வாழ்த்துக்கள் ,தொடர்ந்து சிறக்க ....
பிலடெல்பியா பற்றிய கதை நல்லாயிருக்கிறது. யாரும் நிசமாவே காதல் கதையென அசடு வழிவினம். உம்மை- கொஞ்ச நாளாப் பின் தொடர்கிறேன் ஒரே அரசியல் என்பதால் வாசிப்பதோடு சரி. பிரணவனுக்கு கருத்திடுகிறேன். இவரையும் என்னிடம் வரச் சொல்லுங்கோ அண்ணை!. (வயதிலே அல்ல) மீண்டும் சந்திப்போம்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
சகா என் வலைப்பதிவை அறிமுகம் செய்தமைக்கு நன்றி. . .மேலும் இப்பதிவில் பின்னூட்டம் அளித்துள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். . .
கதை நயம் அருமை சகா. . . பிலடெல்பியா பற்றி தெரிந்திருந்தாலும், கதையை படிக்கையில் நிச்சயம் அனைவரும் ஏமார்ந்து தான் போயிருப்பார்கள். . .
அவளது நினைப்பில் மூச்சு காற்று தவிப்பது தகுமா சகோ... அறிமுக படுத்திய பதிவர் பிரணவன் அவர்கள் அருமையாகவும் எளிமையாகவும் பதிவிட்டுவருகிறார் இருவருக்கும் வாழ்த்துக்கள்
பதிவு வழமை போல் பிரமாதம் பாஸ்
ரசித்து படித்தேன்.
கட்டான் சொன்னது போல்
உங்களிடம் எனக்கும் அதிகம் புடித்ததே
புதியவர்களை ஆதரிக்கும் உங்கள் பரந்த மனசுதான்
வாழ்த்துக்கள் பாஸ்
மாப்ள கலக்கல்!
ஐயய்யோ!என்ன எழுதுறதெண்டே தெரியாம கை நடுங்குதே?உலகம் பூரா கைகொட்டி சிரிக்கப் போகுதே?விட்டேத்தியாப் பழகின என்ன கோத்து வுட்டுட்டானே?என் செய்வேன்,தாய்க்குலமே??,,,,(பொம்பிளயள் இளகின மனசுக்காரியளாம்,ஹேமா சொல்லியிருக்கிறா!)
சார்,கந்தசாமி சார்!என்ன வுட்டுட சொல்லுங்க,சார்!வூட்டுல கொழப்பம் வந்திடும் போலருக்கு,சார்!(நல்ல வேளை,மனைவிக்கு இதுவெல்லாம் தெரியாது!)
ஓவராக் கெட்ட வார்த்தைகள் அலைபேசி வழியே சராமரியான சொற்போர்த் தாக்குதல் போன்று என் காதுகளைத் துளைத்தெடுக்க.......////):):):):):):):):):;):):):):):)!
பலே பிரபு said...
ஆகா அவ்வளவும் சாப்பாடு பத்தியா அட போங்க பாஸ்!///கனவில் ஒரு பெண்ணை?!அக்கு வேறு,ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்திருக்கிறார்,சாப்பாடாம்!எங்கே போய் முட்ட?(வீட்டுச் சுவர்கள் எல்லாம் பலமானவை தான்!)
காட்டான் said.....நாளைக்கு கொஞ்சம் தூர போறன் எண்டாலும் டெலிபோன் கையில இருக்கென்னு சொல்லி வை அந்த குறும்பாட்டுட்ட...///அப்பாடி!பொடியள எங்கயோ வெளியில கூட்டிக் கொண்டு போறார் போல கிடக்கு!(Information reçue,mr.kaaddaan!நிரூபன்,-தகவல் பெறப்பட்டது என்பது அதன் பொருள்!
"அட நாசமாப் போவானே...நீ பிலடெல்பியா என்று கனவு கண்டது, வெளிநாடுகளில் பிரபலமான ஒரு Cheese"////):):):):):):):):)
நல்ல விழிப்பு?!ணர்வூட்டும் பதிவு!சின்னப் பிள்ளையளுக்கு பாடப் புத்தகத்தில சேத்துப் படிப்பிக்க வேணும்!(நன்றி:பன்னிக்குட்டி அண்ணன்)
சகோ.... வேலை பிஸி... வாக்குகள் மட்டுமே...
அவசரகால முதலுதவி சிகிச்சைகள்! தெரிஞ்சுக்கலாமே
திருக்குறள் காமத்துப்பால் கூட படிப்பீங்களா?
பிரணவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
முதலில் அறிமுகத்திற்கு...நன்றி நிரூபன்...
உங்கள் இந்த பதிவு...சீசீ..இல்லை cheesy ...creamy...
என் சிறுவயதில் இலங்கையிலிருந்து சொந்தங்கள் சீஸ் பிஸ்கிடும்...கண்டோஸ் சொக்லட்டும் கொண்டு வரும்போதெல்லாம்...இந்த மிக்கி மௌஸ் கனவுகள் வந்ததேயில்லை...கனவு காணுங்கள்...அதைதான் அப்துல் கலாமும்...வைரமுத்துவும் அடிக்கடி சொல்கிறார்களே...
ஒரு பச்சிலர் பையனின்..////பச்சிளம் பையனா?பச்சிலர் பையனா?...............! ரெண்டும் ஒண்டு தானே?
கந்தசாமி. said...
///உதவிக்கு எனக்குத் தெரிந்தவராய் யோகா ஐயா பிரான்ஸில் இருக்கிறார் எனும் உண்மை உணர்ந்து அலைபேசி வழியே அழைப்பொன்றை மேற்கொண்டேன்./// ஐயா இந்த விசயங்களில அந்த மாதிரி என்று சொல்ல வரிங்களா (கோர்த்துவிடுவோம்ல) ;-)///அசர மாட்டமே?இந்த விசயத்தில,ஒண்ணுக்கு நூறு தடவ அக்கம்,பக்கம் பாத்து சைலண்டா முடிச்சுடுவமில்ல??பையன் கொழும்பில,ஐயா பிரான்சில இல்ல??????
shanmugavel said...
திருக்குறள் காமத்துப்பால் கூட படிப்பீங்களா?///படிக்கிறதோட நிறுத்த மாட்டாரு!..........................பொருளும் சொல்லுவாருன்னு சொல்ல வந்தேன்!
நாங்களும் தெளிந்து விட்டோம்.
கைதட்டிவிட்ட்தான் இங்கே வந்து தட்டுகிறேன்.
நீ கனவு தானே காதலின் நிரந்தர இன்பம்... மற்றவையெல்லாம்..
say'cheese':)
பிரணவனுக்கு வாழ்த்துகள்.
சீஸை காட்டி கடைசியில எங்கள காண்டாக்கிட்டீங்களே!!
Post a Comment