மனித மனங்கள் ஒவ்வொன்றிற்கும் வித்தியாசமான ரசனை உணர்வுகள் இருக்கும். அவை ஒவ்வோர் மனங்களினதும் தனிப்பட்ட விருப்பு- வெறுப்புக்களின் அடிப்படையில் வயதிற்கேற்ப வேறுபட்டிருக்கும். இதே போலத் தான் ஒரு படைப்பாளியின் உணர்வுகளும்- வாசகனின் உணர்வுகளும் சில இடங்களில் வேறுபட்டுக் கொள்கின்றன. அதே வேளை சில இடங்களில் முரண்பட்டும் கொள்கின்றது.
பதிவுலகில், ஒரு படைப்பாளியாக ஒருவன் தன்னை நிலை நிறுத்துவது என்பதனை விட, மக்களுக்குள் இலக்கிய ரசனை நிறைந்த ஜன ரஞ்சகப் பதிவுகளைக் கொடுப்பது எவ்வளவு கடினமானது என்பதனை, எல்லோராலும் இலகுவில் உணர முடிவதில்லை. இன்றைய கால கட்டத்தில் கணினித் துறையோடு நெருங்கிய வாசக வட்டத்தினால் சூழப்பட்டிருக்கும் பதிவுலகில், அதிரடி அரசியல்- சினிமா- மொக்கைப் பதிவுகளுக்கு அப்பால் இலக்கிய நயம் மிக்க பதிவுகளை ஜனரஞ்சக அந்தஸ்தோடு நகர்த்துதல் எவ்வளவு கடினமான செயல் என்பதனை என் பதிவுகளுக்கு நான் வைக்கும் இடக்கு முடக்கான- முகம் சுளிக்கும் தலைப்புக்களிலிருந்தே நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.
நான் பதிவெழுத வந்த ஆரம்ப காலங்களில், கவி நயம் கலந்த தலைப்புக்களை என் பதிவுகளுக்கு வைத்து, காத்திரமான பதிவுகளைப் பகிருவோம் எனும் நினைப்போடு தான் களமிறங்கினேன். தனிக் கடையில் நானே வியாபாரி, நானே முதலாளி எனும் நிலையில் நொந்து நூலாகி, ஈயோட்டியதன் விளைவின் பயனாகத் தான் கிளு கிளுத் தலைப்புக்களைக் கொஞ்சம் ரசனை கூட்டி வைத்தால் பரந்து பட்ட வாசக உள்ளங்களிற்கு என் பதிவுகள் சென்றடையும் எனும் நப்பாசையோடு, என் பயணப் பாதையில் சிறிய மாற்றத்தினை ஏற்படுத்தினேன்.
அந்த வழி எனக்கும் பிடித்திருந்தது. ஆனால் என்னைத் தேடி வரும் வாசகர்களுக்குப் பிடிக்காதிருந்தது. நாகரிகமான கவர்ச்சி மிகு தலைப்புக்களைப் பதிவுகளுக்கு வைத்தாலும், அசிங்கமான பதிவுகளை நிரூபன் ஆபாசமாய் எழுதுகிறான் எனும் குற்றச்சாட்டின் காரணமாக இனிமேல் கில்மாத் தலைப்புக்களைப் பதிவுகளுக்கு வைப்பதில்லை என இரு மாதங்களுக்கு முன்னர் நான் முடிவெடுத்திருந்தேன், இவ்வாறு முடிவெடுத்ததில் கிடைத்த பலன்?
யார் யார் கில்மாத் தலைப்புக்களைப் பதிவுகளுக்கு வைக்காதே எனக் கூறினார்களோ, அவர்கள் என் பதிவுகளுக்கு வருவதனைக் குறைத்து விட்டார்கள். ஹா...ஹா.....ஹா..அவ்...அவ்....அவ்.....
அப்புறமென்ன, பழையபடி மீண்டும் வேதாளம் முருங்க மரத்தில் ஏறிய கதை போன்று என் பதிவுகளின் தலைப்பும் மாறத் தொடங்கியது. கிளு கிளுப்பான தலைப்பு வைத்தால் அதிகமான கூட்டம் வருகிறதே என மகிழ்ச்சியடைந்தாலும், பதிவினைப் படிக்க ஆவலோடும், ஆர்வக் கோளாறோடும் வரும் எத்தனை பேர் என் பதிவுகளைப் படிக்கிறார்கள் எனும் எண்ணிக்கையில் சந்தேகமே நிலவுகின்றது. இதனை விட, வலைக்கு கிளு கிளு மேட்டர்கள் படிக்க வந்து ஏமாந்து முகம் சுளித்து, ‘என் மூஞ்சியில் காறித் துப்பாத குறையாக ஓடியவர்கள் எத்தனை பேரோ தெரியவில்லை’’.
என்னுடைய எழுத்துக்கள் மூலம், என்னால் இயன்ற வரை எல்லோரையும், எல்லாவிதமான வயதினரையும் திருப்திப்படுத்தியிருக்கிறேன் என்றே எண்ணுகிறேன். ஈழத்தின் இருண்டு போன, முள்ளி வாய்க்காலோடு முடங்கிப் போன, இறுதியில் எவராலும் பூரணப்படுத்தப்படாத அழிந்து போன வம்சத்தின், வரலாற்றினை பக்கச் சார்பின்றி- நடு நிலையோடு இலக்கியமாக தமிழர் வம்சத்தின் பேர் சொல்லும் நூலாகப் படைக்க வேண்டும் எனும் ஆவலோடு தான் இப் பதிவுலகத்தினுள் நுழைந்தேன். ஆனாலும் அதற்கான சந்தர்ப்பம் இன்னும் கிடைக்காத காரணத்தினால் தான் ஏற்கனவே நான்கு பாகங்கள் வரை தொடர்ச்சியாக வெளி வந்த ''ஈழ வயல்களிற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள்’ தொடர் பதிவினைத் தற்போது நிறுத்தியிருக்கிறேன்.
இதற்கான காரணம், என் பதிவுகள் தற்போது வரை ஓர் குறிகிய வட்டத்தினுள் நிற்பதேயாகும். இன்னும் பல வாசக உள்ளங்களை என் பதிவுகள் சென்று சேருகின்ற போது, என் பதிவுகள் படிக்கப்படும் விஸ்தீரணப் பரப்பெல்லை அதிகரிக்கின்ற போது, என் குறிக்கோளை நோக்கிய என் பயணமும் விட்ட இடத்திலிருந்து தொடரும். அது வரை, என் எழுத்துக்களைப் படித்து கருத்துக்களையும், கும்மிகளையும் வழங்குகின்ற பரி பூரண சுதந்திரம் உங்களுக்கு எவ்வாறு இருக்கிறதோ, அதே போன்று என் பதிவில் உள்ள குறை நிறைகளையும், பதிவின் கருத்துக்கள்- பதிவுகளின் தரம் தொடர்பான விமர்சனங்களையும் ஆக்கபூர்வமான கருத்துக்களாக முன் வைத்து நாற்றில் வரும் பதிவுகளின் எண்ணிக்கையை விருட்சமாக வளர வைக்க வேண்டியதும் உங்கள் கைகளில் தான் தங்கியுள்ளது உறவுகளே! (மேற்படி வசன உதவி சகோதரன் பொட்டலம் வலைப் பதிவு ஓனர்- கார்த்தி)
ஆகவே என் பதிவில் காணப்படும் குறை நிறைகளை கண்டிப்பாகச் சொல்லி, என் எழுத்துக்கள் மேம்பட உதவுங்கள் உறவுகளே! இன்று முதல் வித்தியாசமான ஒரு வடிவத்தினை என் பதிவுகள் தாங்கி வரும் எனும் நம்பிக்கையோடு இப் பதிவினை உங்கள் முன் தவழ விடுகின்றேன். வெகு விரைவில் வரவிருக்கும் இரண்டு பதிவுகள், என் எழுத்துக்கள் வாயிலாக ஒரு வித்தியாசமான உணர்வினை உங்கள் முன் கொண்டு வரும் என நினைக்கிறேன்.
1)இலங்கை அரசியலில் ஒரு சிறிய அளவிலான திருப்பத்தையாவது ஏற்படுத்தவல்ல அரசாங்கத்தோடு இணைந்திருக்கும், தமிழ் எம்.பி ஒருவரின் கொலையின் பின்னணி தொடர்பான மர்ம நாடகத்தின் வெளி வராத விடயங்கள்,
அதாவது இராணுவ அதிகாரியினைக் குறி வைத்து நடாத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலைத் தனக்குச் சாதகமாக்கிச் சந்தர்ப்ப வாத அரசியல் நடத்தித் தன் பாதுகாப்பைப் பந்தா மூலம் அதிகரித்தவரினைப் பற்றிய அதிர்சியூட்டும் விடயங்கள் உங்களை நாடி வரவிருக்கிறது.
2)தமிழக- புலம் பெயர் தமிழ் மக்கள்-
இலங்கை அரசியல் மட்டங்களிலும்- புலி ஆதரவு & புலி எதிர்ப்பு சக்திகளிடையே அதிருப்தியினையும் ஏற்படுத்தவல்ல ஒரு முழுமையான தரவுகள் தாங்கிய ஆராய்ச்சிப் பதிவு
இவை இரண்டும் என் பதிவுகளின் வரிசையில் ஒரு வித்தியாசமான நகர்வினை என் வலைப் பதிவின் வாசகர்களுக்குத் தரும் என நம்புகிறேன்.
அப்புறம் என்ன பார்க்கிறீங்க. வழமை போல, பதிவிற்கும் தலைப்பிற்கும் என்ன தொடர்பு என்று கேட்கலாமில்லே. நீங்களே கேட்டு, உங்கள் கைகள் வலிக்க டைப் செய்வதை விட, நானே விளக்கத்தைக் கூறிவிடுகிறேன் உறவுகளே!
ஆபாசப் பதிவுகளை எழுதி வரும் நிரூபனின் அந்தரங்கமாக தற்போது அமைந்திருப்பது இந்த நாற்று இணையத் தளமாகும், ஆகவே நாற்று இணையத் தளத்தில் வரும் பதிவுகளைப் பற்றிய கிளறல் தான் இந்தப் பதிவு.
ஹா.....ஹா....ஹா....
பிற் சேர்க்கை: நாற்று வலைப் பதிவில் வெளியாகும் புதிய பதிவுகளை உடனுக்குடன், மின்னஞ்சல் வழியாகப் பெற்றுக் கொள்ளும் வகையில் வாசகர்களுக்காக என் சைட் பாரில் வலது பக்கத்தில் ஒரு ஆப்சனை இணைத்துள்ளேன். பதிவுகளை மின்னஞ்சல் வழியாகப் பெற விரும்பும் உறவுகள் அங்கே கிளிக் செய்து உங்கள் மின்னஞ்சல் முகவரியினைக் கொடுத்தால் போதும். பதிவுகள் உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சல் மூலமாக அப்டேற் ஆகும்.
|
101 Comments:
நான் தான் முதலாவதா...?
தொடர்ந்து உங்க ஸ்டையிலேயே எழுதுங்க நண்பரே யாரைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம்
வட போச்சே...?
வணக்கம் நிரூபன்..
நீங்கள் சொல்வது போல் கிளு கிளு தலைப்பு வெச்சாத்தான் கூட்டம் அதிகமாக வரும் என்கிறது உண்மைதான்.. நானும் இதை சில பதிவுகளில் முயற்சித்துப்பார்த்தேன் கூட்டம் நிறையவே வந்தது,,
ஆனால் இலக்கியத்தரமான தலைப்பு வெச்சா ஒரு பயபுள்ள எட்டிப்பார்க்க மாட்டான்,,
அதற்காகவேண்டி முகம்சுழிக்கும் அளவுக்கு ஆபாசமான தலைப்புகள் வைப்பது அவ்வளவு நல்லதாக படவில்லை,,
இன்றைய பதிவுலகம் என்பது சமகால சினிமா போன்றது... மசாலா வகைகள் அதிகமாக இருப்பதுதான் அதிகமானோருக்கு பிடிக்கிறது..
அதையும்தாண்டி சில நல்ல பதிவுகளும் வெற்றி பெறத்தான் செய்கிறது
//வலைக்கு கிளு கிளு மேட்டர்கள் படிக்க வந்து ஏமாந்து முகம் சுளித்து, ‘என் மூஞ்சியில் காறித் துப்பாத குறையாக ஓடியவர்கள் எத்தனை பேரோ தெரியவில்லை’//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@Raazi
நான் தான் முதலாவதா...?
ஆமாம், சந்தேகமே இல்லை, நீங்கள் தான் முதலாவது.
வாங்கோ! வாங்கோ!
நண்பர்களே, தற்போது பிற்சேர்க்கையாக ஒரு புதிய விடயம் இணைத்திருக்கிறேன். தயவு செய்து page Refresh பண்ண முடியுமா?
@Raazi
தொடர்ந்து உங்க ஸ்டையிலேயே எழுதுங்க நண்பரே யாரைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம்//
ஆனால்....ஒரு சில விடயங்களுக்காக ஊரே கூடி அடிக்கிறதே, என்ன பண்ண?
@Riyas
வட போச்சே...?//
இல்ல பாஸ், இப்பவும் சூடான கார வடை கடையில் இருக்கும், காலைப் பொழுது தானே. சீக்கிரம் முடிஞ்சிடாது.
டைட்டிலுக்கு அட்ராக்டிவ்வான வாசகம் வைப்பது தவறில்லை. ஆனால் வலிய திணிக்கக்கூடாது.. 98% ஓக்கே. மிக சில பதிவுகள் மட்டும் அப்படி அமைந்திருக்கும், அதனால் பாதகம் இல்லை.. அடிக்கப்படும் எல்லா பால்களும் சிக்சர் ஆகாது.
//ஆகவே என் பதிவில் காணப்படும் குறை நிறைகளை கண்டிப்பாகச் சொல்லி, என் எழுத்துக்கள் மேம்பட உதவுங்கள் உறவுகளே//
தாய் குலங்கள் அவ்வளவா ஆஜர் ஆகாததை கவனிச்சுருகீங்களா நிரூபண் ;)
@Riyas
வணக்கம் நிரூபன்..
நீங்கள் சொல்வது போல் கிளு கிளு தலைப்பு வெச்சாத்தான் கூட்டம் அதிகமாக வரும் என்கிறது உண்மைதான்.. நானும் இதை சில பதிவுகளில் முயற்சித்துப்பார்த்தேன் கூட்டம் நிறையவே வந்தது,,
ஆனால் இலக்கியத்தரமான தலைப்பு வெச்சா ஒரு பயபுள்ள எட்டிப்பார்க்க மாட்டான்,,
அதற்காகவேண்டி முகம்சுழிக்கும் அளவுக்கு ஆபாசமான தலைப்புகள் வைப்பது அவ்வளவு நல்லதாக படவில்லை,,//
வணக்கம் சகோதரம்,
நீங்கள் சொல்வது சரிதான், ஆனால் முகஞ் சுழிக்கும் ஆபாசத் தலைப்புக்களை வைப்பதில்லை என்ற திடசங்கற்பத்தோடு, கொஞ்சம் ரசிக்கக் கூடிய தலைப்புக்களைத் தான் வைக்கின்றேன்,.
@Riyas
இன்றைய பதிவுலகம் என்பது சமகால சினிமா போன்றது... மசாலா வகைகள் அதிகமாக இருப்பதுதான் அதிகமானோருக்கு பிடிக்கிறது..
அதையும்தாண்டி சில நல்ல பதிவுகளும் வெற்றி பெறத்தான் செய்கிறது//
நன்றாகத் தான் கூர்ந்து கவனிக்கிறீங்க போல இருக்கே,
@Riyas
//வலைக்கு கிளு கிளு மேட்டர்கள் படிக்க வந்து ஏமாந்து முகம் சுளித்து, ‘என் மூஞ்சியில் காறித் துப்பாத குறையாக ஓடியவர்கள் எத்தனை பேரோ தெரியவில்லை’//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
அப்போ நீங்களும் நொந்திருக்கிறீங்களா;-)))
அவ்..அவ்..அவ்..
@சி.பி.செந்தில்குமார்
டைட்டிலுக்கு அட்ராக்டிவ்வான வாசகம் வைப்பது தவறில்லை. ஆனால் வலிய திணிக்கக்கூடாது.. 98% ஓக்கே. மிக சில பதிவுகள் மட்டும் அப்படி அமைந்திருக்கும், அதனால் பாதகம் இல்லை.. அடிக்கப்படும் எல்லா பால்களும் சிக்சர் ஆகாது.//
ஆமாம் பாஸ், நன்றாகத் தான் கூர்ந்து கவனித்துச் சொல்லியிருக்கிறீங்க.
தங்களின் புரிந்துணர்விற்கும், கருத்துக்களுக்கும் நன்றி,.
@ஆமினா
/ஆகவே என் பதிவில் காணப்படும் குறை நிறைகளை கண்டிப்பாகச் சொல்லி, என் எழுத்துக்கள் மேம்பட உதவுங்கள் உறவுகளே//
தாய் குலங்கள் அவ்வளவா ஆஜர் ஆகாததை கவனிச்சுருகீங்களா நிரூபண் ;)///
அவ்....என் வலைக்கு குறிப்பிட்ட ஒரு சில பெண் வாசகர்கள் தான் வருகிறார்கள். அவர்கள் பதிவுகளின் தலைப்பினைப் புரிந்து கொண்டு தான் வருகிறார்கள் என்று நினைக்கிறேன்.
தங்களின் கருத்தினைக் கவனத்தில் கொள்கிறேன் சகோதரி.
மாப்ள உங்க தனித்துவம்(!) என்றும் தொடர வாழ்த்துக்கள்!
நிரூபன்...நீங்கள் இப்போது ஒரு முன்னணி பதிவர்...என்னைக்கேட்டால் இந்த தலைப்புகளையும்...வோட்டுகளையும் மறந்து உங்கள் எழுத்தில் கவனம் செலுத்தினால் கண்டிப்பாக உங்களுக்கான வட்டம் எங்கேயும் போகாது...காலப்போக்கில் உங்கள் எழுத்து கண்டிப்பாய் உங்களுக்கு எண்ணற்ற வாசகர்களை பெற்றுத்தரும்...
எப்போது நீங்கள் யோசிக்க ஆரம்பித்தீர்களோ அப்போதே ஜெயிக்கத்தொடங்கி விட்டீர்கள்..
தொடர்ந்து கலக்க என் வாழ்த்துக்கள்...
என் அன்புக்கும் பாசத்திற்கும் மரியாதைக்கும்...... (இதில் மற்றவைகளை நிறப்பிக் கொள்ளுங்க) நீங்கள் அதிகமான வாசகர்களை சென்றடைந்திருப்பீர்கள்.. ஆனால் அதை எழுதியது நீங்கள் என்று தெரியாமலே.. கொப்பி பேஸ் பதிவர்கள் மூலம்..!!!?? அதற்கு நீங்கள் உங்கள் கணணி அறிவை பாவித்து ஏதாவுதல் செய்யுங்கள்..
இனி நீங்க அந்த மாதிரியான தலையங்கம் வைக்கமாட்டீர்களா...!!!??
என்னப்பா நடக்குது நாட்டில...???
///அதாவது இராணுவ அதிகாரியினைக் குறி வைத்து நடாத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலைத் தனக்குச் சாதகமாக்கிச் சந்தர்ப்ப வாத அரசியல் நடத்தித் தன் பாதுகாப்பைப் பந்தா மூலம் அதிகரித்தவரினைப் பற்றிய அதிர்சியூட்டும் விடயங்கள் உங்களை நாடி வரவிருக்கிறது./// ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்
நான்கூட வலைப்பூ ஆரம்பித்தது சுற்று சூழல் பாது காப்பை வலியுறுத்தத்தான் .....இன்று அதற்காகவே பல்சுவைப் பதிவுகளையும் தரவேண்டியுள்ளது ....
மாப்பிள தமிழ்10இல் 11வது ஒட்டும் தமிழ் மணத்திலும் இண்ட்லியிலும் ஓட்டு போட்டாச்சு... பாருங்கையா காட்டானும் கைநாட்டு இல்லாமல் வோட்டு போட்டிருக்கான்யா...??
இது உங்கள் தளம். இதில் உங்கள் கருத்துக்குளையும், பிடித்தவற்றை பதிவிட உங்களுக்கு உரிமையுண்டு. ஆனால், முகம் சுலிக்க வைக்கும் வார்த்தைகள் இருப்பதால், பெண்கள் வரத்தயயங்குகிறோம். வ்னதாலும் கருத்திட தயங்குகிறோம். இதனால், நல்ல பதிவிற்கும் எங்கள் கருத்துக்கள் தங்களை வந்து சேர இயலவில்லை. இனி, அதுப்போல வார்த்தைகளை குறைத்துக் கொள்ளுங்கள் சகோ. வசீகரமான வார்த்தைகள் தமிழில கொட்டிக் கிடக்கிறது. அவற்றையெல்லாம் பயன்படுத்தலாமே சகோ.
நல்ல பதிவு ...
நல்ல பதிவு ...
இவ்வாறு முடிவெடுத்ததில் கிடைத்த பலன்?
யார் யார் கில்மாத் தலைப்புக்களைப் பதிவுகளுக்கு வைக்காதே எனக் கூறினார்களோ,/// மச்சி யார்றா அது எனக்கு மட்டும் சொல்லேன்..
மாப்பிள என்ர குறும்பாடு(அண்ணாத்த..) சொன்னதுதான் அத நான் அவரிட்ட கேட்காமலே மாற்றி (கொப்பி பேஸ் செய்யுறன்..??)சொல்கிறேன் நீ ஒரு பிறவிக்கவிஞ்ஞன்.. உங்களுக்கு தேவையில்லை இப்பிடியான தலைப்பு.. கொப்பி பேஸ் காரர்களோடு கவணமாய் இருந்தால் இன்னும் போகலாம் தூரம்..அட மறந்திட்டேனே...
காட்டான் குழ போட்டான்...
வலைக்கு கிளு கிளு மேட்டர்கள் படிக்க வந்து ஏமாந்து முகம் சுளித்து, ‘என் மூஞ்சியில் காறித் துப்பாத குறையாக ஓடியவர்கள் எத்தனை பேரோ தெரியவில்லை’’.// எப்படி மச்சி உனக்கு இப்படியெல்லாம் தோணுது.. ஹீ,ஹீ...
@விக்கியுலகம்
மாப்ள உங்க தனித்துவம்(!) என்றும் தொடர வாழ்த்துக்கள்!//
நன்றி அண்ணாச்சி,
வாழ்த்துக்கள்...
அட.. இப்படியெல்லாமா?
உங்கள் மனம் எதை சரியென்று சொல்கிறதோ, உங்கள் அனுபவம் எதை சரியென்று காட்டுகிறதோ அதன் படி நடவுங்கள் நிரூபன்..
பிடித்தவர்கள் படிப்பார்கள்..
பிடிக்காதோர் பிடிக்காதோரே..
@Reverie
நிரூபன்...நீங்கள் இப்போது ஒரு முன்னணி பதிவர்...என்னைக்கேட்டால் இந்த தலைப்புகளையும்...வோட்டுகளையும் மறந்து உங்கள் எழுத்தில் கவனம் செலுத்தினால் கண்டிப்பாக உங்களுக்கான வட்டம் எங்கேயும் போகாது...காலப்போக்கில் உங்கள் எழுத்து கண்டிப்பாய் உங்களுக்கு எண்ணற்ற வாசகர்களை பெற்றுத்தரும்...
எப்போது நீங்கள் யோசிக்க ஆரம்பித்தீர்களோ அப்போதே ஜெயிக்கத்தொடங்கி விட்டீர்கள்..
தொடர்ந்து கலக்க என் வாழ்த்துக்கள்.//
வாங்கோ சகோதரி, தங்களின் புரிந்துணர்விற்கும், கருத்துக்களுக்கும் நன்றி,
@காட்டான்
என் அன்புக்கும் பாசத்திற்கும் மரியாதைக்கும்...... (இதில் மற்றவைகளை நிறப்பிக் கொள்ளுங்க) நீங்கள் அதிகமான வாசகர்களை சென்றடைந்திருப்பீர்கள்.. ஆனால் அதை எழுதியது நீங்கள் என்று தெரியாமலே.. கொப்பி பேஸ் பதிவர்கள் மூலம்..!!!?? அதற்கு நீங்கள் உங்கள் கணணி அறிவை பாவித்து ஏதாவுதல் செய்யுங்கள்.. //
வாங்கோ அண்ணாச்சி,
காப்பி பேஸ்ட்டை இல்லாமற் செய்யலாம் தான்,
காப்பி பேஸ்ட் பண்ண முடியாதவாறு கோடிங் இணைக்கலாம் தான், ஆனால் பின்னூட்டம் போடும் அன்பர்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் தான் நீக்கி விட்டேன்.
நான் பார்த்தவரை அண்ணாத்ததான் பதிவையும் பின்னூட்டங்களையும் முழுதாக படிச்சு பின்னூட்டமிடுகிறார்போல் தெரிகிறது...மாப்பு இன்னும் நித்திரை விட்டு எழுப்பவில்லை போல!!!!!!!??????)))))
@காட்டான்
இனி நீங்க அந்த மாதிரியான தலையங்கம் வைக்கமாட்டீர்களா...!!!??
என்னப்பா நடக்குது நாட்டில...???//
அவ்....ஏன் உங்களுக்கு அந்த மாதிரியான தலையங்கம் தான் வேண்டுமோ?
ஒருவனைத் திருந்தக் கூட விடுகிறார்கள் இல்லையே.
இருங்க யோகா ஐயாவிடம் சொல்லி, உங்களுக்கு பரிசில் ஊர் சுற்றிக் காட்டச் சொல்கிறேன்.
நிரு...
இது உங்க பிளாக். உங்க விருப்பம் , நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதை செய்ங்க ...
@koodal bala
///அதாவது இராணுவ அதிகாரியினைக் குறி வைத்து நடாத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலைத் தனக்குச் சாதகமாக்கிச் சந்தர்ப்ப வாத அரசியல் நடத்தித் தன் பாதுகாப்பைப் பந்தா மூலம் அதிகரித்தவரினைப் பற்றிய அதிர்சியூட்டும் விடயங்கள் உங்களை நாடி வரவிருக்கிறது./// ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்//
அவ்....இப்பவே கண்ணில் எண்ணெய் ஊற்றி யாரோ அலையுறாங்க என்று மதிசுதா ஒரு மெயில் அனுப்பியிருக்கான். பதிவில் குறிப்பிட்டதை நீக்கச் சொல்லி. நீங்கள் வேறை உசுப்பேத்துறீங்களே;-)))
@koodal bala
நான்கூட வலைப்பூ ஆரம்பித்தது சுற்று சூழல் பாது காப்பை வலியுறுத்தத்தான் .....இன்று அதற்காகவே பல்சுவைப் பதிவுகளையும் தரவேண்டியுள்ளது ..//
சேம்...சேம் பப்பி சேம்.
@FOOD
அன்பின் நிரூ,
தங்கள் ஆதங்கங்கள் எனக்கு புரிகிறது. நானும் உங்கள் வாசகன் என்ற முறையில் ஒன்றை மட்டும் சொல்ல ஆசைப்படுகிறேன். தொடர்ந்து எழுதுங்கள். அப்படி எழுதும் பதிவுகள், நாளைய சரித்திரத்தில் இடம் பெறும் வண்ணம்,சிறந்ததாய் இருக்கட்டும். ஆபாசங்கள் என்றும் நிலைப்பதில்லை.//
தங்கள் அன்பிற்கு நன்றி ஆப்பிசர், உங்களின் கருத்துக்களைக் கவனமெடுக்கிறேன்.
@காட்டான்
மாப்பிள தமிழ்10இல் 11வது ஒட்டும் தமிழ் மணத்திலும் இண்ட்லியிலும் ஓட்டு போட்டாச்சு... பாருங்கையா காட்டானும் கைநாட்டு இல்லாமல் வோட்டு போட்டிருக்கான்யா...??//
அவ் ...அவ்..நாம இங்கே என்ன தேர்தலா வைக்கிறம்,.
ஓட்டுப் போட்டதற்கு கைம்மாறா போத்தல் கேட்க மாட்டீங்க தானே;-)))
நன்றி சகோ....
உங்க எழுத்து திறன் என்னை பல நாட்கள் வியப்படைய வச்சுருக்கு... எல்லாரும் வந்து பயன் பெறும் தளமாக இருக்கணும்னு தான் சொனேன். தப்பா எடுத்துக்காம புரிந்துக்கொண்டதற்கு ரொம்ம்ம்ம்ம்ம் நன்றி :)
வாழ்த்துக்கள்
Reverie said...
நிரூபன்...நீங்கள் இப்போது ஒரு முன்னணி பதிவர்...என்னைக்கேட்டால் இந்த தலைப்புகளையும்...வோட்டுகளையும் மறந்து உங்கள் எழுத்தில் கவனம் செலுத்தினால் கண்டிப்பாக உங்களுக்கான வட்டம் எங்கேயும் போகாது...காலப்போக்கில் உங்கள் எழுத்து கண்டிப்பாய் உங்களுக்கு எண்ணற்ற வாசகர்களை பெற்றுத்தரும்...
இதுவே என் கருத்தும்
ரேங்க் வோட் கருத்துக்கள் எங்களை எமது பாதையில் செல்ல ஊக்கம் தர்பவையே ஒழிய எமது எழுத்தை தீர்மானிப்பவை அல்ல
@ராஜி
இது உங்கள் தளம். இதில் உங்கள் கருத்துக்குளையும், பிடித்தவற்றை பதிவிட உங்களுக்கு உரிமையுண்டு. ஆனால், முகம் சுலிக்க வைக்கும் வார்த்தைகள் இருப்பதால், பெண்கள் வரத்தயயங்குகிறோம். வ்னதாலும் கருத்திட தயங்குகிறோம். இதனால், நல்ல பதிவிற்கும் எங்கள் கருத்துக்கள் தங்களை வந்து சேர இயலவில்லை. இனி, அதுப்போல வார்த்தைகளை குறைத்துக் கொள்ளுங்கள் சகோ. வசீகரமான வார்த்தைகள் தமிழில கொட்டிக் கிடக்கிறது. அவற்றையெல்லாம் பயன்படுத்தலாமே சகோ.//
தங்கள் புரிதலுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சகோ,
இனிமேல் பதிவுகளின் தலைப்பில் கூடிய கவனம் செலுத்துகிறேன்.
@"என் ராஜபாட்டை"- ராஜா
நல்ல பதிவு ...//
தங்கள் வருகைக்கு நன்றி சகோதரம்,
நண்பா நானும் அதே குழப்பத்தில் தான் இருக்கேன் ...
கிளு கிளு தலைப்பை விட வேற அதிரடியா தலைப்பு வைத்தும் பார்த்தேன் ..."இன்று எனக்கு மரணம் " என்று கூட வைத்தேன் ..மக்களை காணோம் ..என்ன பண்ணுறது ..நம்ம கண்ணியம் தொலையாத வண்ணம் நல்ல தலைப்புகள் வைக்க நான் விரும்புகிறேன்...சகோ ஆமினா சொன்னது போல் தாய்குலங்களின் ஆதரவும் வேண்டும் அன்பரே
@!* வேடந்தாங்கல் - கருன் *!
இவ்வாறு முடிவெடுத்ததில் கிடைத்த பலன்?
யார் யார் கில்மாத் தலைப்புக்களைப் பதிவுகளுக்கு வைக்காதே எனக் கூறினார்களோ,/// மச்சி யார்றா அது எனக்கு மட்டும் சொல்லேன்..//
அவ்...பொது இடத்தில் சொல்லி, எனக்கு அடி வாங்கித் தரும் எண்ணமா?
கோர்த்து விடுறியே மச்சி, இது நியாயமா,
@காட்டான்
மாப்பிள என்ர குறும்பாடு(அண்ணாத்த..) சொன்னதுதான் அத நான் அவரிட்ட கேட்காமலே மாற்றி (கொப்பி பேஸ் செய்யுறன்..??)சொல்கிறேன் நீ ஒரு பிறவிக்கவிஞ்ஞன்.. உங்களுக்கு தேவையில்லை இப்பிடியான தலைப்பு.. கொப்பி பேஸ் காரர்களோடு கவணமாய் இருந்தால் இன்னும் போகலாம் தூரம்..அட மறந்திட்டேனே...
காட்டான் குழ போட்டான்...//
காப்பி பேஸ்ட்டை நிறுத்தினாலும் பதிவின் தலைப்பை மாற்றி எழுதாமலா இருக்கிறார்கள்.
அவர்களைத் திருத்த முடியாது பாஸ்,
இப்ப ஒரு புது டெக்னிக்கை உருவாக்கியிருக்கேன். பார்ப்போம் எவ்வளவு நாளைக்கு ஒர்க் ஆகுது என்று.
@!* வேடந்தாங்கல் - கருன் *!
வலைக்கு கிளு கிளு மேட்டர்கள் படிக்க வந்து ஏமாந்து முகம் சுளித்து, ‘என் மூஞ்சியில் காறித் துப்பாத குறையாக ஓடியவர்கள் எத்தனை பேரோ தெரியவில்லை’’.// எப்படி மச்சி உனக்கு இப்படியெல்லாம் தோணுது.. ஹீ,ஹீ...//
அவ்...அவ்....இவங்களும் பாவம் இல்லையா மாப்பு. அதான்.
@Geetha6
வாழ்த்துக்கள்...//
வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி.
@LOSHAN
அட.. இப்படியெல்லாமா?
உங்கள் மனம் எதை சரியென்று சொல்கிறதோ, உங்கள் அனுபவம் எதை சரியென்று காட்டுகிறதோ அதன் படி நடவுங்கள் நிரூபன்..
பிடித்தவர்கள் படிப்பார்கள்..
பிடிக்காதோர் பிடிக்காதோரே..//
ஆமா பாஸ்,ஒவ்வோர் பதிவுகளிலும் வந்து, கில்மாத் தலைப்பு என்று, புரளி ஏசிட்டுப் போறாங்க. வாசகர் மனம் புண்படக் கூடாது தானே. அதான் கொஞ்சம் சேஞ் காட்டுவோம் என்று யோசித்திருக்கிறேன்.
@LOSHAN
x//
தங்களின் புரிந்துணர்விற்கும், கருத்துக்களுக்கும் நன்றி பாஸ்.
@காட்டான்
நான் பார்த்தவரை அண்ணாத்ததான் பதிவையும் பின்னூட்டங்களையும் முழுதாக படிச்சு பின்னூட்டமிடுகிறார்போல் தெரிகிறது...மாப்பு இன்னும் நித்திரை விட்டு எழுப்பவில்லை போல!!!!!!!??????)))))//
ஆமாம், அண்ணாச்சி, அவர் இனித் தான் எந்திருப்பார் என்று நினைக்கிறேன்.
@!* வேடந்தாங்கல் - கருன் *!
நிரு...
இது உங்க பிளாக். உங்க விருப்பம் , நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதை செய்ங்க ...//
நீங்க சொல்லிட்டீங்க. செய்திட்டாப் போச்சு,
சகோ, இப்போதைக்கு எனது வருகையை மட்டும் பதிவு செய்து விட்டுக் கிளம்புகிறேன். :-)
நான் நிறைய நாள் இதை யோசித்து உள்ளேன். தலைப்புக்கும் பதிவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லையே என. சரியான தலைப்பை வைக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். படிப்பவர்கள் கருத்து சொல்வது உங்கள் பதிவுக்கு தானே அன்றி தலைப்புக்கு அல்ல.
வேலை இல்லாட்டிலும்,பிள்ளையளுக்குப் பள்ளிக்கூடம் இல்லாட்டிலும் நான் ஏழு மணிக்கு எழும்பி,"எல்லாம்" முடிச்சு,கொம்பியூட்டரில உக்கார எட்டு மணி ஆயிடும்!அதுக்குள்ள..........................................!சரி,நடக்கிறது நடக்கட்டும்!"அவர்" வந்து போட்டார் போலயிருக்கு.எனக்கு கில்மா பதிவோ,கோல்மா பதிவோ எல்லாம் ஒண்டு தான்!நீங்கள் தூள்?! கிளப்புங்கோ,நிரூபன்!ஆடிக்கொருக்கா,ஆவணிக்கொருக்கா பதிவிடாம உங்களுக்கு விளங்கினதை?!எழுதுங்கோ!திருவிளையாடல் "தருமி" சொன்ன மாதிரி,அடக்கமா இருக்கிறியள்.காட்டான நினைக்கக்க சிப்பு,சிப்பா வருது!(சிரிப்பு)
ஹாய் ,
பிற் சேர்க்கை: நாற்று வலைப் பதிவில் வெளியாகும் புதிய பதிவுகளை உடனுக்குடன், மின்னஞ்சல் வழியாகப் பெற்றுக் கொள்ளும் வகையில் வாசகர்களுக்காக என் சைட் பாரில் வலது பக்கத்தில் ஒரு ஆப்சனை இணைத்துள்ளேன். பதிவுகளை மின்னஞ்சல் வழியாகப் பெற விரும்பும் உறவுகள் அங்கே கிளிக் செய்து உங்கள் மின்னஞ்சல் முகவரியினைக் கொடுத்தால் போதும். பதிவுகள் உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சல் மூலமாக அப்டேற் ஆகும்.////ஆமாம்.அப்படிப் பெற்ற பின்,உடனடியாகவே நடவடிக்கையில் இறங்கி?சிறு மாற்றங்களுடன் வேறு தலைப்பு வைத்து பதிவேற்றி விடுங்கள், நிரூபன் பதிவு பிரபலமாகு முன் பிரபலப்படுத்தி விடலாம்!ஓட்டும் விழுந்து விடும்!!!!!!!!
@Yoga.s.FR
ஆமாம்.அப்படிப் பெற்ற பின்,உடனடியாகவே நடவடிக்கையில் இறங்கி?சிறு மாற்றங்களுடன் வேறு தலைப்பு வைத்து பதிவேற்றி விடுங்கள், நிரூபன் பதிவு பிரபலமாகு முன் பிரபலப்படுத்தி விடலாம்!ஓட்டும் விழுந்து விடும்!!!!!!!!//
ஆகா..இங்கே தான் நான் ஆப்பு வைச்சிருக்கேனே.
பதிவினை முழுமையாக மின்னஞ்சல் மூலமாகப் பெற முடியாது.
பதிவின் முதல் பந்தியினை, வெறும் நான்கு வரிகளை உள்ளடக்கிய அறிமுகத்தினைத் தான் மின்னஞ்சல் மூலமாகப் பெற முடியும்.
இது எப்பூடி.
ஏற்கனவே நான்கு பாகங்கள் வரை தொடர்ச்சியாக வெளி வந்த ''ஈழ வயல்களிற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள்’ தொடர் பதிவினைத் தற்போது நிறுத்தியிருக்கிறேன்.////அந்த தொடர் பதிவு இப்போது வேண்டப்படுவது.அதனால் தொடர வேண்டுமென்பது எனது வினயமான வேண்டுகோள்!நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.இணையம் மற்றும் கைத் தொலைபேசி என்பன இன்றைய உலகை "ஆட்டிப்" படைக்கும் கருவிகளாக விசுவரூபம் எடுத்திருக்கின்றன.வினாடிக்கும் குறைவான நேரத்தில் உலகெங்கும் அதிர்வை ஏற்படுத்த வல்ல சாதனங்களை வைத்துக் கொண்டு பிரயோகிக்க வேண்டிய வேளையில் பிரயோகிக்காமல்?????????????????????????
///அனுமதியின்றி கிளறப்படும் ஆபாசப் பதிவரின் அந்தரங்க விடயங்கள்! /// யார் அவர் சொல்லவே இல்ல ))
///மனித மனங்கள் ஒவ்வொன்றிற்கும் வித்தியாசமான ரசனை உணர்வுகள் இருக்கும். அவை ஒவ்வோர் மனங்களினதும் தனிப்பட்ட விருப்பு- வெறுப்புக்களின் அடிப்படையில் வயதிற்கேற்ப வேறுபட்டிருக்கும். இதே போலத் தான் ஒரு படைப்பாளியின் உணர்வுகளும்- வாசகனின் உணர்வுகளும் சில இடங்களில் வேறுபட்டுக் கொள்கின்றன. அதே வேளை சில இடங்களில் முரண்பட்டும் கொள்கின்றது. /// ஒவ்வொரு பதிவுக்கும் அருமையா தொடக்கம் கொடுப்பதில் நீங்கள் கில்லாடி பாஸ்
இன்று நாள் எப்படி? என்று பஞ்சாங்கத்தைப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் போலிருக்கிறது.உங்கள் ஆதங்கம்,கவலை புரிகிறது நிரூபன்.என்ன செய்வது?கொஞ்சம் உணர்ச்சி வசப்படாமல் தொடர்ந்து பயணிக்க வேண்டியிருக்கிறது.சுத்தமாக "கடை" இருந்தால்(கடை "சுத்தமாக" இருந்தால் அல்ல!)உள்ளே நுழைய கொஞ்சம் யோசிப்பார்கள் தான்!ஏனென்றால்,அழுக்கான கடைக்குள் நுழைந்து பழக்கப்பட்டவர்கள்...............................!
///நாகரிகமான கவர்ச்சி மிகு தலைப்புக்களைப் பதிவுகளுக்கு வைத்தாலும், அசிங்கமான பதிவுகளை நிரூபன் ஆபாசமாய் எழுதுகிறான் எனும் குற்றச்சாட்டின்/// ஆபாசம் என்றால் என்ன ? அதற்க்கான சரியான வரைவிலக்கணம் தான் என்ன? நான் நினைக்கிறேன் பார்ப்பவரின் கண்கள் தான் அதை வரையறுத்துக்கொள்கிறது என்று... இந்த விடயத்தில் எனக்கு பெரிதாக முரண்பாடுகள் இல்லை...அத்தோடு வாசகர்கள் அதை தான் விரும்புகிறார்கள் என்பது கசப்பான உண்மை...நான் சாதாரணமாக ஒரு பதிவு எழுதினாலே அதை ஐநூறு பேர் பார்க்க இரு நாட்கள் ஆவது எடுக்கும், ஆனால் நேற்று எழுதிய அந்த சினிமா பதிவுக்கு ஒரே நாளில் 1200 ஹிட்ஸ். என்ன செய்ய இந்த இடத்தில் தான் நிக்கிறது நம்மவர்களின் ரசனை ஹிஹிஹி
நிரூபன் said...ஆகா..இங்கே தான் நான் ஆப்பு வைச்சிருக்கேனே.
பதிவினை முழுமையாக மின்னஞ்சல் மூலமாகப் பெற முடியாது.
பதிவின் முதல் பந்தியினை, வெறும் நான்கு வரிகளை உள்ளடக்கிய அறிமுகத்தினைத் தான் மின்னஞ்சல் மூலமாகப் பெற முடியும்.////அப்புடிப் போடு அருவாள!!!!!!!!!!நிரூபனா,கொக்கா?????
இது எப்பூடி.
இருந்தாலும், தலைப்பை பார்த்து வருபவர்கள் இரண்டு மூன்று தடவை வந்து தாம் எதிர்பார்த்த விடயம் இல்லாவிடின் பின்னர் வரமாட்டார்கள். ஆனால் உங்கள் பதிவுகளில் அப்படி இல்ல. மேலே சொன்னவர்கள் போல உங்களை சுற்றி ஒரு வாசகர் வட்டம் உள்ளது. அது உங்கள் எழுத்துக்களை ரசிக்கிறது. நிச்சயமாக இதில் தலைப்பின் கவர்ச்சி என்பது சிறு பங்கு தான். இதை உங்கள் பதிவுகளை தவறவிடாது வாசிக்கும் ஒரு வாசகனாக சொல்கிறேன்.
///இவ்வாறு முடிவெடுத்ததில் கிடைத்த பலன்?
யார் யார் கில்மாத் தலைப்புக்களைப் பதிவுகளுக்கு வைக்காதே எனக் கூறினார்களோ, அவர்கள் என் பதிவுகளுக்கு வருவதனைக் குறைத்து விட்டார்கள்// ஐயோ அது நான் இல்ல ..)
///அதாவது இராணுவ அதிகாரியினைக் குறி வைத்து நடாத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலைத் தனக்குச் சாதகமாக்கிச் சந்தர்ப்ப வாத அரசியல் நடத்தித் தன் பாதுகாப்பைப் பந்தா மூலம் அதிகரித்தவரினைப் பற்றிய அதிர்சியூட்டும் விடயங்கள் உங்களை நாடி வரவிருக்கிறது./// கவனம் உங்களுக்கு வெள்ளை வான் தயாராகுவதாக கேள்வி ஹிஹி (பார்றா)
கந்தசாமி. said...
இருந்தாலும், தலைப்பை பார்த்து வருபவர்கள் இரண்டு மூன்று தடவை வந்து தாம் எதிர்பார்த்த விடயம் இல்லாவிடின் பின்னர் வரமாட்டார்கள். ஆனால் உங்கள் பதிவுகளில் அப்படி இல்ல. மேலே சொன்னவர்கள் போல உங்களை சுற்றி ஒரு வாசகர் வட்டம் உள்ளது. அது உங்கள் எழுத்துக்களை ரசிக்கிறது. நிச்சயமாக இதில் தலைப்பின் கவர்ச்சி என்பது சிறு பங்கு தான். இதை உங்கள் பதிவுகளை தவறவிடாது வாசிக்கும் ஒரு வாசகனாக சொல்கிறேன்.////கந்தசாமி சார் கரெக்டாதான் பேசுராரு.
கந்தசாமி. said...
///அதாவது இராணுவ அதிகாரியினைக் குறி வைத்து நடாத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலைத் தனக்குச் சாதகமாக்கிச் சந்தர்ப்ப வாத அரசியல் நடத்தித் தன் பாதுகாப்பைப் பந்தா மூலம் அதிகரித்தவரினைப் பற்றிய அதிர்சியூட்டும் விடயங்கள் உங்களை நாடி வரவிருக்கிறது./// கவனம் உங்களுக்கு வெள்ளை வான் தயாராகுவதாக கேள்வி ஹி!ஹி!! (பார்றா)//// இது கரெக்ட் கெடையாது!
காட்டான் said...
மாப்பிள என்ர குறும்பாடு(அண்ணாத்த..) சொன்னதுதான் அத நான் அவரிட்ட கேட்காமலே மாற்றி (கொப்பி பேஸ் செய்யுறன்..??)சொல்கிறேன் நீ ஒரு பிறவிக்கவிஞன்.. உங்களுக்கு தேவையில்லை இப்பிடியான தலைப்பு.. கொப்பி பேஸ் காரர்களோடு கவனமாய் இருந்தால் இன்னும் போகலாம் தூரம்..அட மறந்திட்டேனே...
///காட்டான் குழ போட்டான்...////குறும்பாடு சாப்பிட்டிச்சு!!!!
காட்டான் said...
இனி நீங்க அந்த மாதிரியான தலையங்கம் வைக்கமாட்டீர்களா...!!!??
என்னப்பா நடக்குது நாட்டில...???////சீரியஸ் மேட்டர் பேசிக் கொண்டிருக்கிறோம்.
//என்னுடைய எழுத்துக்கள் மூலம், என்னால் இயன்ற வரை எல்லோரையும், எல்லாவிதமான வயதினரையும் திருப்திப்படுத்தியிருக்கிறேன் என்றே எண்ணுகிறேன். ஈழத்தின் இருண்டு போன, முள்ளி வாய்க்காலோடு முடங்கிப் போன, இறுதியில் எவராலும் பூரணப்படுத்தப்படாத அழிந்து போன வம்சத்தின், வரலாற்றினை பக்கச் சார்பின்றி- நடு நிலையோடு இலக்கியமாக தமிழர் வம்சத்தின் பேர் சொல்லும் நூலாகப் படைக்க வேண்டும் எனும் ஆவலோடு தான் இப் பதிவுலகத்தினுள் நுழைந்தேன். ஆனாலும் அதற்கான சந்தர்ப்பம் இன்னும் கிடைக்காத காரணத்தினால் தான் ஏற்கனவே நான்கு பாகங்கள் வரை தொடர்ச்சியாக வெளி வந்த ''ஈழ வயல்களிற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள்’ தொடர் பதிவினைத் தற்போது நிறுத்தியிருக்கிறேன்.//
மிகவும் நல்ல முயற்சி நண்பா விரைவில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அட இண்டைக்கு லீவில நித்திரை கொள்வோம்ன்னா..காட்டான்கள் விடவில்லை அண்ணாத்தையும் வந்திட்டார்..
பாருங்க அண்ண இதென்ன கொடுமையா இருக்குது நிரூபனோட ஈமெயில்ல வார பதிவுக்கு நாலு வரிதானாம் அனுப்புவார்.. அப்ப எங்கள மாதிரி ஆக்கள் என்னண்டு எழுதுறதாம்..??
இதுக்கொரு நாயம் சொல்லுங்க அண்ணாத்த..
அப்ப காப்பி பேஸ் செய்து எழுத முடியாதுன்னா... சொந்தமா எழுத சொல்லுறியள்.. இந்த கொடுமைய ஆரிட்ட சொல்லுறது.. எங்களையும் புரிஞ்சுகோயா.. நாங்க என்ன வைச்சுகிட்டா வஞ்சகம் பண்ணுறோம்...!!!!???
தலைப்பு வெச்சிட்டுதான் பதிவு எழுதுவீங்க போல
ஆபாச பதிவர்னு நீங்களே பட்ட பெயர் வெச்சுக்க முயற்சி பண்றிங்களா
உங்கள் பாணியில் நீங்கள் செல்கிறீர்கள்.
தீதும் நன்றும்...
கொஞ்சம் யோசிக்கலாம்.
உங்களால் கருத்தாழமிக்க, நீண்ட காலம் நிலைத்து நிற்ககூடிய பதிவுகள் தர முடியும் என்று நம்புகிறேன்.
ஆரம்ப காலங்களில் நீங்கள் பல்வேறு பதிவர்களுக்கு இட்ட பின்னூட்டங்களிலே உங்கள் தனித்தன்மையும்,ஆராயும் தன்மையும் நன்றாக தெரிந்தது. தற்போதைய பதிவுகளில் இருக்கும் வீரியம் தலைப்புக்களால் நீர்த்து போக வேண்டாமே.
நண்பர் நிருபன் அவர்களுக்கு
நம் மனதில் பட்டதை நாம் எழுதுவோம்
மற்றவர்களுக்காக நாம் நம் தளத்தை
தரம் தாழ்த்திக் கொள்ள வேண்டாம் .
நீங்கள் உங்கள் சிறந்த சிந்தனைகளையே
பதிவிடுங்கள் .
நூறு வேருக்கு சுடு நீர் வார்ப்பதை விட ,நாலு வேருக்கு நன்நீர் வார்க்கலாம் .
எப்பிடி சொல்வது என்று தெரிய வில்லை ,ஆனால் நான் சொல்ல வந்த விஷயம் உங்களுக்கு புரிந்திருக்கும் .
பிழையிருந்தால் பொறுக்கவும் .
உங்கள் திறமையை உங்கள் கவிதைகள் வாயிலாகத்தான் உணர்ந்தேன். அந்தத் திறைமையை உங்கள் எழுத்துக்களிலும் காட்டினால் வாசிக்க என் போன்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால் கட்டாயம் மொத்த எண்ணிக்கை ஆரம்பத்தில் குறையத்தான் இருக்கும். பிறகு இன்னொருவகையான வருகையாளர்கள் வருவார்கள்.
No Need to publish this :-)
---------------------------
Then if you live in Sri Lanka, your safety is also important.
எல்லாத்திலையும் வோட் போட்டாச்சு பாஸ்
உங்கள் பதிவுகள் அத்தனையும் தரமானதுதான் பாஸ்
ஆனால் அதற்க்கு ஏன் இந்த கிளு கிளு தலைப்புக்கள் என்று
நினைத்து இருக்கேன் ,
அதுக்கு பின்னால இவ்ளோ பெரிய கதை இருக்கா
ஹா ஹா ,
ஆனால் ஒண்ணு பாஸ்,
உங்க கிளு கிளு தலைப்பை பார்த்து வந்தவர்கள் போல
அந்த தலைப்பை பார்த்து வராதவர்களும் இருப்பார்கள் அல்லவா
உங்கள் பதிவுகளில் எப்போதும் ஆழம் இருக்கும்.தொடர்ந்து தரமான பதிவுகளை உங்களால் தர இயலும்.தலைப்பு என்பது ஒரு தூண்டிலாகச் சிலநேரம் பயன்படுத்துவது தவிர்க்க இயலாதது.அது இன்று பதிவுலக வாடிக்கையாகி விட்டது.
புதிய பதிவுகளுக்காகக் காத்திருக்கிறேன்!
ஏன் ”ஊழிக்கூத்து”க்கான உங்கள் கருத்து எனக்குத் தேவை!
கிளு கிளுப்பான தலைப்பு வைத்தால் அதிகமான கூட்டம் வருகிறதே என மகிழ்ச்சியடைந்தாலும், பதிவினைப் படிக்க ஆவலோடும், ஆர்வக் கோளாறோடும் வரும் எத்தனை பேர் என் பதிவுகளைப் படிக்கிறார்கள் எனும் எண்ணிக்கையில் சந்தேகமே நிலவுகின்றது. இதனை விட, வலைக்கு கிளு கிளு மேட்டர்கள் படிக்க வந்து ஏமாந்து முகம் சுளித்து, ‘என் மூஞ்சியில் காறித் துப்பாத குறையாக ஓடியவர்கள் எத்தனை பேரோ தெரியவில்லை’’.//
இவங்கள விடுங்க சகோ!
தலைப்பை பார்த்து வரும் கூட்டம் நிலைக்காது.
நீங்க உங்க பாணியில் தொடருங்கள்.
நாங்கள் தொடர்கிறோம்.
தலைப்பைப் பொறுத்தவரையில் உங்களுக்குச் சரியென்று தோன்றுவதைத் தொடருங்கள்..நம் மக்களில் சிலர் எதையோ எதிர்பார்த்து ஏமாந்து போனாலும், பலரும் நல்ல பதிவு படித்த திருப்தியை அடைந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்...
//நான்கு பாகங்கள் வரை தொடர்ச்சியாக வெளி வந்த ''ஈழ வயல்களிற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள்’ தொடர் பதிவினைத் தற்போது நிறுத்தியிருக்கிறேன். //
புரிகிறது நிரூ..காலம் வரும்வரை காத்திருப்போம்..
//1)இலங்கை அரசியலில் ஒரு சிறிய அளவிலான திருப்பத்தையாவது ஏற்படுத்தவல்ல..
2)தமிழக- புலம் பெயர் தமிழ் மக்கள்-
இலங்கை அரசியல் மட்டங்களிலும்..//
இணையத்தில் நடுநிலையோடு ஈழ விஷயம் பகிரும் சிலரில் நீங்கள் குறிப்பிடத்தகுந்தவர். எனவே அந்த இரு புதிய தொடர்களையும் எதிர்பார்க்கிறேன்.
வாசகர்களுக்கு உங்களைத் தெரியாமல் இருக்கமுடியாது.தொடருங்கள்.
உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்
கில்மா தலைப்பெல்லாம் வைக்காமல் பதிவிற்கு ஏற்ற தலைப்பையே வையுங்க நண்பரே
எனக்கு முன்பே அருமையான பின்னூட்டங்கள் இப்பதிவு ப்ற்றி எழுதிவிட்டார்கள்.நான் பின்னூட்டம் இதுவரை உங்கள் பதிவுக்கு இடாவிட்டாலும் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.அசாத்திய எழுத்தாற்றல் கொண்டுள்ள நீங்கள் உங்களை சுயபரிசோதனை செய்துள்ளீர்கள். அதற்கு வாழ்த்துக்கள்.இனி உங்கள் எழுத்து எல்லோரையும் சென்றடையும்.
உங்களது ஸ்டையில் தொடரட்டும் சகோதரரே...நாலு பேத்துக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை...அவ்வ்வ்வ் ...தொடருங்கள் சகோ
100!!!!!!!!Congratulations!
நிரூபன் said...
@காட்டான்
இனி நீங்க அந்த மாதிரியான தலையங்கம் வைக்கமாட்டீர்களா...!!!??
என்னப்பா நடக்குது நாட்டில...???//
அவ்....ஏன் உங்களுக்கு அந்த மாதிரியான தலையங்கம் தான் வேண்டுமோ?
ஒருவனைத் திருந்தக் கூட விடுகிறார்கள் இல்லையே.
இருங்க யோகா ஐயாவிடம் சொல்லி, உங்களுக்கு பரிசில் ஊர் சுற்றிக் காட்டச் சொல்கிறேன்.///அச்சச்சோ!என்னய மாட்டி வுட்டிட்டியேப்பா?அவருக்கு நான் பாரிஸ் சுத்திக் காட்டவா?அவரு ஊருக்கே சுத்திக் காட்டுவாரே?
கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப்பின் எனது வணக்கங்கள் அண்ணா.
பல தவிர்க்கமுடியாத காரணங்களாலும்,தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான உடல்நிலைக் கோளாறுகளாலும் ஒருமாதகாலமாக கணினியின் பக்கமே வரமுடியாமல் போய்விட்டது.
மின்னஞ்சலில் வந்துள்ள தகவல் வரிசையின்படி இப்பொழுதுதான் பதிவுகளைப் படிக்க ஆரம்பித்துள்ளேன்.
இந்த ஒரு மாதத்திற்குள் தவறவிட்ட அனைத்தையும் படித்துவிட்டு ஒட்டுமொத்தமாக ஒரு கருத்தை சொல்லிவிடுகிறேனே.!!
கிட்டத்தட்ட ஒருமாதத்தின் பின்னரான என் வணக்கங்கள் அண்ணா.
பல தவிர்க்கமுடியாத காரணங்களாலும், எதிர்பாராத நோய் நொடிகளின் தொடர்ச்சியாலும் இவ்வளவுநாட்களும் கணினிக்கு அருகிலேயே வர இயலாமற்போய்விட்டது.
இப்பொழுதுதான் தவறவிட்ட பதிவுகளையெல்லாம் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.
ஆபாசப்பதிவரென்று உங்களுக்கு நீங்களே ஏன் பெயர் சூட்டிக்கொள்கிறீர்கள்.தொடர்ந்தும் எழுதுங்கள்.
Post a Comment