அன்பிற்கினிய உறவுகளே,
மனித மனங்கள் ஒவ்வொன்றிற்கும் உணர்ச்சிகள் என்பது இறைவனால் கொடுக்கப்பட்ட இயல்பான ஒரு விடயமாகும். தனி மனிதன் ஒருவனது உடல் இச்சையோடு தொடர்புடைய விடயங்கள் பொதுச் சந்தைக்கு வருகின்ற போது, அம் மனிதனைச் சூழ்ந்துள்ள தனிப்பட்டவர்களின் கருத்துக்குக்களால், அவனது எதிர்கால வாழ்வும், மன விரக்தி எனும் நிலையினை நோக்கியே தள்ளப்படுகின்றது.
இன்று நமக்குக் கிடைத்துள்ள நவீன தொழில் நுட்ப தொடர்பாடல் சாதனங்களின் விருத்தியினால், நமக்கு எவ்வளது வீதம் நன்மைகள் உள்ளனவோ, அத்தனை வீதம் தீமைகள் - பாதிப்புக்கள் உள்ளன. பள்ளி செல்லும் மாணவர்களில் குறிப்பிட்ட ஒரு பருவ வயதினை எட்டியவர்களின் கைகளில் தொடர்பாடல் சாதனங்களின் பாவனையும் அதிகமாகவே காணப்படும். இதற்கான பிரதான காரணம், தனது நண்பர் ஒருவர் புதிதாக வந்த எலக்ட்ரானிக் பொருளை வைத்திருக்கிறாரே எனும் நோக்கில் தாமும் வாங்கி உபயோகிக்கத் தொடங்குதலாகும்.
டீன் ஏஜ் பருவம் என்பது உணர்ச்சிகளுக்கு விடுதலை கொடுக்க உடல் துடிக்கின்ற பருவமாகும். மனதளவில் ஏற்படும் விருப்பு வெறுப்புக்களில் அதிகமானவை உடல் சார்ந்த இச்சையினை அடிப்படையாகக் கொண்டே தோன்றுகின்ற ஒரு பருவமாகும். ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் கலவன் பாடசாலையாயினும் சரி, தனியார் பாடசாலையாயினும் சரி, அங்கே கல்வி கற்கும் இளைஞர்களும், யுவதிகளும் தம்மை அறியாமல் உணர்ச்சியால் தூண்டப்பட்டோ, அல்லது சினிமா- பலானா காட்சிகளின் விரக தாபத்தினால் பாதிக்கப்பட்டோ, தம் உடலியற் தேவையினை நிறைவேற்றும் நோக்கில் காதல் எனும் வலையில் வீழ்ந்து விடுகிறார்கள்.
இவ்வாறு காதலில் விழுந்தவர்களால் தான், இன்றைய காலகட்டத்தில் தமது அந்த நிமிடச் சுக போகங்களுக்காக கமரா போன் மூலம் எடுக்கப்படும் வீடியோக் கிளிப்ஸ்கள், (Scandal Video Clips) இணையத்தில் ஏறி, உலகெங்கும் பரவி, எம் சந்ததிகளின் எதிர்கால வாழ்வினைக் குட்டிச் சுவராக்கி, பல பள்ளி மாணவர்கள் தம் இளம் வயதில் வீட்டை விட்டுத் துரத்தப்பட்டு தெருவில்நிற்க வேண்டிய நிலைக்கு ஆளாகின்றார்கள். ‘காதலெனும் கடலில் மூழ்கிப் பார்க்க நினைத்து, தனியே சந்த்தித்துக் கொள்ளும் இளம் உள்ளங்கள் ‘ தம் அந்தரங்க நிகழ்வுகளைப் பிற் காலத்திலும் பார்க்கலாம் எனும் நோக்கில் வீடியோக்களைத் தம் வசம் உள்ள கமரா போன்களின் உதவியுடன் பதிவு செய்து கொள்கிறார்கள்.
இவ்வாறு பதிவு செய்யப்படும் வீடியோக்களானது, ''அலைபேசியானது நண்பர்களிடமிருந்து கைம்மாறும் பொழுதுகளில், வக்கிர குணம் கொண்ட நண்பர்களின் கைகளில் அகப்படும் பொழுது அது முழு நீலப் படமா இணையங்களுக்கு விலை பேசப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றது. இதனை விட இளம் ஜோடிகளின் காதல் முறிவடைகின்ற போது, வீடியோவினை எடுத்த இளம் பெண்ணின் காதலனே, அப் பெண்ணினைப் பழிவாங்கும் நோக்கில் இணையத் தளங்களில் வீடியோக்களை உலாவர விடுகின்ற சந்தர்ப்பங்களையும் நாம் அறிந்திருக்கின்றோம்.
நிரூபனின் நாற்று வலையிலிருந்து காப்பி செய்துள்ளேன்.
"ஏண்டி செல்லம், இப்படி ஒரு சந்தர்ப்பம் நமக்கு மீண்டும் வாய்க்குமா?
இதனை ரெக்கார்ட் பண்ணி வைச்சால், நாம லைப் பூராப் பார்த்து மகிழலாமே" எனும் சாயம் பூசப்பட்ட மொழிகளுக்கு அடிமையாகித் தான் இளம் மாணவிகள் பலர் தம் பள்ளி வாழ்வினைப் பறி கொடுத்திருக்கிறார்கள். இன்னொரு விடயம் தற்போதைய 2G தொழில்நுட்பத்தின் காரணமாக, காதலனோ காதலியோ பேசும் போது, எம். எம்.எஸ் மூலம் படங்களைப் பரிமாறிக் கொள்ளுவது. இதன் மூலமும் பல அப்பாவிப் பெண்களை ஏமாற்றும் காமுகர்களான இளைஞர்கள் பெண்களினை மார்பகங்கள் தெரியும் வண்ணம் போட்டோ எடுத்துத் தருமாறு கோரிக்கை விடுத்து அவற்றினைப் பின்னர் தம் கபட நோக்கத்திற்காகப் பயன்படுத்துகிறார்கள்.
இப் பதிவினை நான் வழமை போல நாற்றிலிருந்து காப்பி செய்துள்ளேன்.
இவை எல்லா ஊர்களிலும் தொடர்ச்சியாக நடக்கும் செயல் என்று கூறமுடியாது. அதே போல இப் பதிவினூடாக, ஒட்டு மொத்தப் பள்ளி மாணவர்களும் இவ்வாறான பலானப் படங்களை விற்றுப் பிழைக்கும் ஈனத் தொழிலில் ஈடுபடுகின்றார்கள் என்றும் கூற முடியாது. எம் சமூகங்களில் எங்காவது ஒரு பிரதேசத்தில் நாளொன்றுக்கு எனும் விகிதத்தில் இச் சம்பவங்களானது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.
இப் பதிவினை நான் வழமை போல நாற்றிலிருந்து காப்பி செய்துள்ளேன்.
மேற் கூறப்பட்ட தகவல்களை என் கட்டுரையினூடாக உங்களுக்கு முன்னுதாரணமாக்கி, வாசக உள்ளங்களாகிய உங்களிடம் ஒரு சில வினாக்களை முன் வைக்கின்றேன். வருங்காலத்தில் தந்தையாகப் போகின்றவர்களிடம், பெற்றோர்களிடம்;
இன்றைய பொறுப்புள்ள இளைஞர்களாகவும்- நாளைய எம் நாட்டின் தூண்களாகவும் விளங்கும் உள்ளங்களிடம் என்னுடைய ஐயங்களையும், மன உணர்வுகளையும் விவாத மேடை எனும் பகுதியினூடாக விட்டுச் செல்லுகின்றேன்.
இப் பதிவினை நான் வழமை போல நாற்றிலிருந்து காப்பி செய்துள்ளேன்.
*உங்களது பிள்ளைகள் குறிப்பிட்ட ஒரு வயதினை அடையும் போது, தொழில்நுட்ப விடயங்களில் அப் பிள்ளை மீதான உங்களது கவனம் எவ்வாறு அமைந்து கொள்ளும்?
*சந்தர்ப்ப சூழ் நிலைகளால், இவ்வாறான பாலியல் படங்கள் வெளிவருகின்ற போது, இச் சம்பவம் மூலம் பாதிக்கப்படும் குறிப்பிட்ட மாணவியையோ அல்லது மாணவனையோ நல் வழிப்படுத்த நாம் எவ்வாறான திட்டங்களை முன் வைக்கலாம்?
இப் பதிவினை நான் வழமை போல நாற்றிலிருந்து காப்பி செய்துள்ளேன்.
*தவறுதலாக உங்கள் சமூகத்தில், உங்கள் உறவினர் வீடுகளில் ஏன் உங்கள் குடும்பங்களில் இப்படியான ஓர் சூழ் நிலை இடம் பெற்றால், அதிலிருந்து உங்களின் பிள்ளைகளை மீட்டெடுத்து அறிவுரை கூறி நல்வழிப்படுத்த நீங்கள் முயலுவீர்களா? இல்லை வீட்டை விட்டு விரட்டி வைப்பது தான் சிறந்தது என்று ’’ஊரின் கௌரவம் எனும் சொல்லுக்குக்’ கட்டுப் பட்டு உங்களின் பிள்ளைகளைப் புறக்கணிப்பீர்களா?
இப் பதிவினை நான் வழமை போல நாற்றிலிருந்து காப்பி செய்துள்ளேன்.
*பொறுப்புள்ள சகோதர- சகோதரியாகவோ, அல்லது பெற்றோராகவோ அல்லது ஒரு நெருங்கிய உறவினர்- நண்பராகவோ;
உங்கள் வீட்டில் உள்ள சிறுவாண்டுகள் பெரியவர்களாகிக் குறிப்பிட்ட ஒரு வயதினை அடையும் போது உங்களால் இவ்வாறான விடயங்களில் எவ்வாறு புத்திமதி கூற முடியும்?
இப் பதிவினை நான் வழமை போல நாற்றிலிருந்து காப்பி செய்துள்ளேன்.
*இனிவருங் காலங்களில் எம் சமூகத்தில் எங்காவது ஒரு இடத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம் பெறா வண்ணம் எம் இளைய சமூகத்தினைப் பாதுக்காத்துக் கொள்ளப் பள்ளிகள் தோறும் விழிப்புணர்வுக் கருத்தரங்குகளையோ அல்லது, விழிப்புணர்வுத் திட்டங்களையோ ஏற்படுத்த வேண்டுமா?
இப் பதிவினை நான் வழமை போல நாற்றிலிருந்து காப்பி செய்துள்ளேன்.
மேற்படி வினாக்களை உங்களின் சிந்தனைக்காக இங்கே பகிர்ந்து கொள்கின்றேன். பள்ளி மாணவர்களின் விளையாட்டுப் புத்தி அல்லது சிறு பிள்ளைப் புத்தி மூலம் அந்தரங்க உறவுகள் படம் பிடிக்கப்பட்டு இணையங்களிற்கு விற்பனைக்காகவும், பழி வாங்கும் நோக்கிலும் அனுப்பப்படும் செயற்பாடுகள் எம் தமிழ்ச் சமூகத்தில் நாளுக்கு ஒன்று என்ற விகிதத்தில் எங்காவது ஓரிடத்தில் இடம் பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது. அது நாளை எம் வாசற் படிகளையும் எட்ட முன்னர் தடுப்பதும், அதனை எதிர் கொள்வதற்கேற்றவாறு எம் குழந்தைகளைத் தயார் செய்வதும் எம் கடமையல்லவா.
உங்களது மன உணர்வுகளையும், விவாத மேடையினூடாகப் பகிர்ந்து கொள்ளலாமல்லவா.
|
81 Comments:
முதல் கவலை
//ம் இளைஞர்களும், யுவதிகளும் தம்மை அறியாமல் உணர்ச்சியால் தூண்டப்பட்டோ, அல்லது சினிமா- பலானா காட்சிகளின் விரக தாபத்தினால் பாதிக்கப்பட்டோ, தம் உடலியற் தேவையினை நிறைவேற்றும் நோக்கில் காதல் எனும் வலையில் வீழ்ந்து விடுகிறார்கள்.
//
அப்பட்டமான உண்மை சகோ,இது தான் ஆறாம்பம.சில காதல் முடிவிடம் சேர மற்றையவை தொடாத இடம் தொடுகின்றன!
//’’ஊரின் கௌரவம் எனும் சொல்லுக்குக்’ கட்டுப் பட்டு உங்களின் பிள்ளைகளைப் புறக்கணிப்பீர்களா?/
வறட்டு ஊர் கௌரவத்தால் எத்தனையோ நடக்க கூடாத சம்பவங்கள் நடந்து இருக்கின்றன நடக்கின்றன.
ஊருக்காய் பார்க்காமல் உங்களுக்காய் பாருங்கள்!
@மைந்தன் சிவா
முதல் கவலை//
ஏன் முதல் கவலை?
ம்....ம்...பீலிங்ஸ் வந்திட்டுதோ((((:
@மைந்தன் சிவா
அப்பட்டமான உண்மை சகோ,இது தான் ஆறாம்பம.சில காதல் முடிவிடம் சேர மற்றையவை தொடாத இடம் தொடுகின்றன!//
நன்றாகத் தான் கூர்ந்து கவனிக்கிறீங்க.
@மைந்தன் சிவா
ஊருக்காய் பார்க்காமல் உங்களுக்காய் பாருங்கள்!//
அடடா...வாழ்க நம்ம மைந்தன் தத்துவ ஞானியே,
ஒரு வசந்த்தை வைத்து தத்துவம் சொல்லுறீங்களே.
///பாலியல் பட நடிகர்களாக பள்ளி மாணவர்கள்- எம் சந்ததியின் எதிர்காலம் எங்கே?
// எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவாரோ......
///மனித மனங்கள் ஒவ்வொன்றிற்கும் உணர்ச்சிகள் என்பது இறைவனால் கொடுக்கப்பட்ட இயல்பான ஒரு விடயமாகும். தனி மனிதன் ஒருவனது உடல் இச்சையோடு தொடர்புடைய விடயங்கள் பொதுச் சந்தைக்கு வருகின்ற போது, அம் மனிதனைச் சூழ்ந்துள்ள தனிப்பட்டவர்களின் கருத்துக்குக்களால், அவனது எதிர்கால வாழ்வும், மன விரக்தி எனும் நிலையினை நோக்கியே தள்ளப்படுகின்றது.
//// என்னே ஒரு முதிர்ச்சியான விளக்கம் ...
///ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் கலவன் பாடசாலையாயினும் சரி, தனியார் பாடசாலையாயினும் சரி, அங்கே கல்வி கற்கும் இளைஞர்களும், யுவதிகளும் தம்மை அறியாமல் உணர்ச்சியால் தூண்டப்பட்டோ, அல்லது சினிமா- பலானா காட்சிகளின் விரக தாபத்தினால் பாதிக்கப்பட்டோ, தம் உடலியற் தேவையினை நிறைவேற்றும் நோக்கில் காதல் எனும் வலையில் வீழ்ந்து விடுகிறார்கள். /// இப்பிடி ஏற்ப்பட்ட காதல் தற்கொலையில் முடிந்ததை நான் நேரில் கண்டுள்ளேன்,,(2007 இல்)
///‘ஏண்டி செல்லம், இப்படி ஒரு சந்தர்ப்பம் நமக்கு மீண்டும் வாய்க்குமா?
இதனை ரெக்கார்ட் பண்ணி வைச்சால், நாம லைப் பூராப் பார்த்து மகிழலாமே, // இப்பிடி எல்லாமா நடக்குது ....)
///இன்னொரு விடயம் தற்போதைய 2G தொழில்நுட்பத்தின் காரணமாக, காதலனோ காதலியோ பேசும் போது, எம். எம்.எஸ் மூலம் படங்களைப் பரிமாறிக் கொள்ளுவது. இதன் மூலமும் பல அப்பாவிப் பெண்களை ஏமாற்றும் காமுகர்களான இளைஞர்கள் பெண்களினை மார்பகங்கள் தெரியும் வண்ணம் போட்டோ எடுத்துத் தருமாறு கோரிக்கை விடுத்து அவற்றினைப் பின்னர் தம் கபட நோக்கத்திற்காகப் பயன்படுத்துகிறார்கள்./// இதை தானே சினிமாவில் காட்டுறாங்கள் (சொல்லி கொடுக்கிறாங்கள்)
////*உங்களது பிள்ளைகள் குறிப்பிட்ட ஒரு வயதினை அடையும் போது, தொழில்நுட்ப விடயங்களில் அப் பிள்ளை மீதான உங்களது கவனம் எவ்வாறு அமைந்து கொள்ளும்?/// ஐயாம் சாரி எனக்கு பிள்ளை இல்லை, நானே ஒரு கொழந்தை...
////*பள்ளி செல்லும் இள வயதினரைத் அலைபேசிப் பாவனையிலிருந்து எவ்வாறு நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்? பள்ளி செல்லும் மாணவர்களுக்கு அலைபேசி அவசியம் தானா?/// இதில் முக்கியமா பள்ளி நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்.. நான் படிக்கும் போதெல்லாம்(2007 ) எங்கள் பள்ளியில் ஒரு எலக்ரோனிக் பொருள் கொண்டு செல்லவே அனுமதி இல்லை.
///வீட்டை விட்டு விரட்டி வைப்பது தான் சிறந்தது என்று ’’ஊரின் கௌரவம் எனும் சொல்லுக்குக்’ கட்டுப் பட்டு உங்களின் பிள்ளைகளைப் புறக்கணிப்பீர்களா?/// ஹும் இது நடந்திருக்கிறது ...
நல்ல விழிப்புணர்வு பதிவு . விவாதம் தொடரட்டும்....
தொடரும் விழிப்புணர்வூட்டும் பதிவுகள் பெற்றொரை மட்டுமல்ல எங்கள் எதிர் கால சந்ததியினரையும் விழிப்புறச் செய்தல் முக்கியமானது.காட்டானின் பதிவும் அவ்வாறானதே!வெளி நாடுகளில் வாழும் இளைய சமுதாயத்தை காக்க வேண்டிய பாரிய பொறுப்பு புலம்பெயர் பெற்றோருக்கு உண்டு.சம காலத்தில் ஈழத்திலும் குறிப்பாக குடாவில் இளைய சமுதாயம் செல்லும் பாதை சீரழிக்கப்படுகிறது,புல்லுருவிகளால்!பேரினவாதம் கலாசாரச் சீரழிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்படுவதை நிறுத்தாது.நாமே உணர்ந்து கொள்ள வேண்டும்.சமூகப் பொறுப்புள்ள பெரியோர்கள்,ஆசிரியர்களின் பங்கு அங்கு முக்கியத்துவம் பெறுதல் வேண்டும்!
@கந்தசாமி.
///பாலியல் பட நடிகர்களாக பள்ளி மாணவர்கள்- எம் சந்ததியின் எதிர்காலம் எங்கே?
// எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவாரோ......//
வாங்கோ, பாஸ், என்ன இன்று பாட்டோடு வந்திருக்கிறீங்க.
@கந்தசாமி.
//// என்னே ஒரு முதிர்ச்சியான விளக்கம் ...//
என்னை ஒரு வயசுபோன ஆளா காண்பிக்கிறதிலை உங்களுக்கு அவ்ளோ சந்தோசமா.
நான் எப்பவுமே யூத் பாஸ்.
@கந்தசாமி.
/// இப்பிடி ஏற்ப்பட்ட காதல் தற்கொலையில் முடிந்ததை நான் நேரில் கண்டுள்ளேன்,,(2007 இல்//
அடடா....அப்ப நிறைய நொந்து போனவர்களைச் சந்தித்து வந்திருக்கிறீங்க.
@கந்தசாமி.
//‘ஏண்டி செல்லம், இப்படி ஒரு சந்தர்ப்பம் நமக்கு மீண்டும் வாய்க்குமா?
இதனை ரெக்கார்ட் பண்ணி வைச்சால், நாம லைப் பூராப் பார்த்து மகிழலாமே, // இப்பிடி எல்லாமா நடக்குது ....//
இப்போ, இதனை விடக் கேவலமாகவும் நடக்கிறது.
///வெளி நாடுகளில் வாழும் இளைய சமுதாயத்தை காக்க வேண்டிய பாரிய பொறுப்பு புலம்பெயர் பெற்றோருக்கு உண்டு./// ரொம்ப கஸ்ரம் பாஸ், பூவோட சேர்ந்த நாரும் மணக்கும் என்பார்களே, அதே போல பிறிதொரு சமூகத்தோடு சேர்ந்து வாழப்போபவர்களுக்கு கடிவாளம் போட்டு நம்பக்கம் எத்தனை காலம் தான் வைத்திருக்க முடியும். தலைமுறைகள் கடக்க அவர்களும் அந்தந்த நாட்டு சமூகங்களுடனே ஒன்றித்துவிடுவார்கள்.
@கந்தசாமி.
/// ஐயாம் சாரி எனக்கு பிள்ளை இல்லை, நானே ஒரு கொழந்தை...//
இதை நாம நம்பனுமாக்கும்,
வலையுலகில் கந்தசாமி ஒரு 60 வயசு ஆள் என்று சொல்லுறாங்க;-)))
@கந்தசாமி.
// இதில் முக்கியமா பள்ளி நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்.. நான் படிக்கும் போதெல்லாம்(2007 ) எங்கள் பள்ளியில் ஒரு எலக்ரோனிக் பொருள் கொண்டு செல்லவே அனுமதி இல்லை.//
அது அப்ப, உங்களின் காலத்தில்,
இப்பவெல்லாம் பள்ளிக்குப் போகும் போன், கமெரா...
ஏன் ஒரு சில பள்ளிகளுக்கு பீடி, சிகரட்டே கொண்டு போகிறார்கள்.
இதனை விடப் பெரிய சமாச்சாரம், ஆணுறை கூடக் கொண்டு போகிறார்களே.
////இதை நாம நம்பனுமாக்கும்,
வலையுலகில் கந்தசாமி ஒரு 60 வயசு ஆள் என்று சொல்லுறாங்க;-)))/// ங்கொய்யால....
@கந்தசாமி.
/ இதை தானே சினிமாவில் காட்டுறாங்கள் (சொல்லி கொடுக்கிறாங்கள்)//
ஆமா பாஸ், இதனால் தான்...சினிமாவும் இவ்வாறான செயற்பாடுகளின் தூண்டுகோளாக இருக்கின்றது.
///அது அப்ப, உங்களின் காலத்தில்,
இப்பவெல்லாம் பள்ளிக்குப் போகும் போன், கமெரா...
ஏன் ஒரு சில பள்ளிகளுக்கு பீடி, சிகரட்டே கொண்டு போகிறார்கள்.
இதனை விடப் பெரிய சமாச்சாரம், ஆணுறை கூடக் கொண்டு போகிறார்களே./// அண்டைக்கு உப்புடி தான் நான் இருக்கிற நாட்டில ஒரு பள்ளிக்கூட பக்கமாய் போய்க்கொண்டிருந்தான்.. திடீரெண்டு ஜன்னலோரம் புகுபுகு எண்டு புகை வந்திச்சு ....என்னடா தீ பிடிச்சுட்டுதாக்கும் எண்டு நானும் போலீசுக்கு அடிக்க போனை எடுக்கவும், அந்த ஜன்னல்ல இருந்து இரண்டு தலை எட்டி பார்த்திச்சு ... இரண்டு பெண்கள் ..வாயில சிகரெட்...
@கந்தசாமி.
///வீட்டை விட்டு விரட்டி வைப்பது தான் சிறந்தது என்று ’’ஊரின் கௌரவம் எனும் சொல்லுக்குக்’ கட்டுப் பட்டு உங்களின் பிள்ளைகளைப் புறக்கணிப்பீர்களா?/// ஹும் இது நடந்திருக்கிறது ...//
இது நடந்தது ஓக்கே பாஸ்.
உங்களுக்கு இப்படி ஒரு நிலமை வந்தால்,
நீங்கள் என்ன பண்ணுவீங்க?
@கந்தசாமி.
நல்ல விழிப்புணர்வு பதிவு . விவாதம் தொடரட்டும்....//
என்னது...இப்படிச் சொல்லிட்டு எஸ் ஆகிற ப்ளானா.
ம்...
இது நடக்காது மவனே.
@Yoga.s.FR
வாங்கோ ஐயா, எப்படி ஹொலிடே எல்லாம்?
ஓட்டவடை ஒருமாசமாக் ஹொலிடே போய், வாறன், வாறன் என்று சொல்லி ஏமாத்துறான்.
@Yoga.s.FR
சீரழிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்படுவதை நிறுத்தாது.நாமே உணர்ந்து கொள்ள வேண்டும்.சமூகப் பொறுப்புள்ள பெரியோர்கள்,ஆசிரியர்களின் பங்கு அங்கு முக்கியத்துவம் பெறுதல் வேண்டும்!//
அருமையான ஒரு அறிவுரைக் கருத்தினை ஐயா தந்திருக்கிறார்.
நன்றி ஐயா.
காதல் என்னும் பெயரில் உலா வரும் சில காமுகர்களின் வேலை இதில் அவர் அவர் தான் விழிப்புணர்வுடன்
இருக்கனும். சமுதாய மற்றமும் வேண்டும்
இன்று நமக்குக் கிடைத்துள்ள நவீன தொழில் நுட்ப தொடர்பாடல் சாதனங்களின் விருத்தியினால், நமக்கு எவ்வளது வீதம் நன்மைகள் உள்ளனவோ, அத்தனை வீதம் தீமைகள் - பாதிப்புக்கள் உள்ளன.//
உண்மை சகோ-இந்த விசயத்தில் தொழில் நுட்ப சாதனங்களை பயன்படுத்தும் பிள்ளைகளின் பெற்றோர்களும் ஆசிரியர்களும் போதுமான விழிப்புணர்வையும் நல்லதை பகுத்துணர்ந்து தீயவைகளை ஒதுக்க கற்றுக்கொடுக்க வேண்டும்,
நிரூபன் said... Best Blogger Tips [Reply To This Comment]
@Yoga.s.FR
வாங்கோ ஐயா, எப்படி ஹொலிடே எல்லாம்?
ஓட்டவடை ஒருமாசமாக் ஹொலிடே போய், வாறன், வாறன் என்று சொல்லி ஏமாத்துறான்.
August 4, 2011 11:17 PM /////எமக்கு விடுமுறை பிள்ளைகளைப் படிப்பித்து ஆளாக்கி,ஒரு நல்லவன் கையில் பிடித்துக் கொடுத்த பின்னர் தானே?பிள்ளைகளுக்கு ஒரு சிறிய மாற்றமாவது தேவையில்லையா?அதனால் சும்மா ஒரு எட்டு நாட்கள் லண்டன் நகர் அழைத்துப் போனோம்!நன்றாகக் கழிந்தது.(அவர்களுக்கு)அங்கு தானே எம்மவர்கள் அதிகம்?சுலபமாகவும் செல்லலாம்.நேற்று மாலை திரும்பினோம்.கொஞ்சம் பயணக் களை,இருந்தாலும் எல்லோருடனும் பேச வேண்டுமல்லவா?எல்லோருக்கும் நன்றி!
சகோ... தொழில்நுட்பம் வளர வளர தீய செயல்களும் வளர்கின்றன...
நீங்கள் உள்ளே சொன்ன விடயங்கள் அற்புதமானது. பலர் அலேட்டா இருக்க பிரயோசமானது. ஆனால் இப்பிடியான தரமான பதிவுகளுக்கு ஆபாசமாக பெயர்களை சூட்டுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. உங்கள் பதிவில் எனக்கு எவ்வளவு விருப்பம் இருக்கிறதோ அதே போல் கருத்து சொல்வதற்கும் உரிமை இருக்கென்று நினைத்து கூறுகிறேன். உங்கள் தலைப்புக்களை ஆபாச தலைப்புகளாக வைப்பதை மீளபரிசீலனை செய்யவும். இப்பிடி வைத்தால்தான் பலர் வாசிக்கவருவார்கள் ஆனாலும்.....
சார் இப்ப கொஞ்சம் வேற வேலயில பிசியா இருக்கிறதால ஓழுங்கா உடனுக்குடன் பதிவுகளுக்கு வரமுடியல. மீண்டும் எல்லாம் ஒழுங்காகும் எண்டு நம்புறன்
விழிப்புணர்வு பதிவு நண்பரே
பகிர்வுக்கு நன்றி .
ஆனால் தொழில் நுட்ப சாதனங்கள் சிறு வயதினர் கையில் தவறாக உபயோகிப்பதை தடுப்பது இனி சிரமம் தான் நண்பரே
கவலைக்குரிய விஷயம் தான்
இந்த மாதிரி வீடியோ எடுத்துப் பார்த்து மகிழ்வோர் பின்னர் அதனை அழித்துவிடலாம் என்றே நினைத்துச் செய்கின்றனர். இந்த எலக்ட்ரானிக் யுகத்தில் அப்படி முழுமையாக அழிப்பது சாத்தியம் அல்ல.
அழித்த பின்னரும் திரும்ப எடுக்கும் சாஃப்ட்வேர்கள் வந்துவிட்டன..அந்த வீடியோ இருந்த மெமரி கார்டு/பென் ட்ரைவ் வெளியாளிடம் மாட்டும்போது அந்த வீடியோக்கள் ரெகவர் செய்யப்பட்டு வெளியே இணையத்தில் உலவ விடப்படுகின்றன.
எனவே இத்தகைய செயல்களை முழுக்கத் தவிர்ப்பதே நல்லது.
நல்ல விழிப்புணர்வு பதிவு பாஸ்
எல்லோரையும் சென்றடைய
எல்லா வற்றிலும் ஓட்டு போட்டாச்சு பாஸ்
நல்லதொரு அவசியமான பதிவு நியாமான கேள்விகள் , இன்றைய நாளேடுகளில் இவ்வாறான சேதிகள் அடிக்கடி வருகின்றன கவலை தரும் விடயமும் கூட .
நல்ல ஒரு விழிப்புணர்வான பதிவு. ஆனா எப்படிச் சொன்னாலும் ஆரும் கேட்கப்போவதில்லை, அடிபட்டுத்தான் திருந்துவோம் என்றுதான் பலரும் இருக்கிறார்கள்.
எதுவும் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சுதான். காதலிக்கும்போதுகூட பப்ளிக்கில் சந்தித்துப் பிரிவதுதான் இருவருக்கும் நல்லதே.
தற்போது அவசியம் தேவையான பதிவு... இதற்கு விழிப்புணர்வு நீங்கள் சொன்னதுபோல் பள்ளியிலேயிருந்து ஆரம்பிக்கலாம்... பாதிக்கப்பட்டவர்களை வேடிக்கைப்பொருளாய் பார்க்காமல் அவர்களுக்கு நல்வழி ஏற்படுத்தி அரவணைக்கலாம்... விழிப்புணர்வு பதிவு ஆணித்தரம் வாய்ந்த தரம் நண்பா... நன்றி
சிலபல நாட்களுக்குமுன் டெல்லி பள்ளி மாணவ மாணவியர் இப்படியான செயலில் ஈடுபட்டு விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.
படிக்கும் மாணவர்கள் கையில் அலைபேசி கொடுப்பது அல்லது கொடுத்தாலும் அவர்களை கண்காணிப்பில் வைக்காதது பெற்றவர்கள் குற்றம். டீனேஜ் பருவம் எதையும் சந்திக்கத் துடிக்கும் பருவம். எதையும் எதிர்க்கும் பருவம். எதையும் நியாயப்படுத்தும் பருவம். அவர்களைக் காத்து நெறிப படுத்துவது பெரியவர்கள் கடமை. அதுவுமே கூட நாசூக்காகக் கையாளப் பட வேண்டிய விஷயம். டெக்னாலஜி முன்னேற்றத்துக்கு மனித குலம் கொடுக்கும் விலைகளில் இதுவும் ஒன்று. அறிவுள்ளவர்கள் பிழைப்பார்கள்.
நல்ல விழிப்புணர்வு பதிவு நிரூபன்...
தொழில் நுட்ப சாதனங்கள் சிறு வயதினர் தவறாக உபயோகிப்பதை தடுப்பது இனி சிரமம் தான்..
நான் நல்ல பிள்ளை.......(அது எனக்கு தெரியும்).........
நல்ல விழிப்புணர்வு பதிவு அண்ணா...
வணக்கம் நிரூபன்
இன்றைய காலத்திற்கு தேவையான ஒரு விழிப்புணர்வு பதிவு.
பாலியல் குறித்த தகுந்த அறிவு மாணவர்களுக்கு கிடைத்தால் இது போன்ற பிரச்சினைகள் குறையும் என நினைக்கிறேன் .....
ஃஃஇன்று நமக்குக் கிடைத்துள்ள நவீன தொழில் நுட்ப தொடர்பாடல் சாதனங்களின் விருத்தியினால், நமக்கு எவ்வளது வீதம் நன்மைகள் உள்ளனவோ, அத்தனை வீதம் தீமைகள் - பாதிப்புக்கள் உள்ளன. பள்ளி செல்லும் மாணவர்களில் குறிப்பிட்ட ஒரு பருவ வயதினை எட்டியவர்களின் கைகளில் தொடர்பாடல் சாதனங்களின் பாவனையும் அதிகமாகவே காணப்படும்.....ஃஃஃஃ
இதற்கெல்லாம் எம் சமூகமும் ஒரு காரணம். காற்று நிறைந்த ஒரு பலூனை எல்லா பக்கத்தாலும் அமுக்கினால் அது ஏதோ ஒரு பக்கத்தால் வெடிக்கத்தான் செய்யும். அதுபோலத்தான் கலாச்சாரம், பண்பாடு, நம்பிக்கைகள் என்று சொல்லி இளம் சமூகத்தின் மீது பாரிய அழுத்தத்தை பிரயோகித்ததன் விளைவுகளே இவையெல்லாம்.
ஃஃபள்ளி செல்லும் இள வயதினரைத் அலைபேசிப் பாவனையிலிருந்து எவ்வாறு நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்? பள்ளி செல்லும் மாணவர்களுக்கு அலைபேசி அவசியம் தானா?ஃஃஃஃ
பள்ளி செல்லும் மாணவருக்கு தொலைபேசி அவசியம் இல்லைத்தான். அதற்காக தேவையில்லை என்று முற்றுமுழுதாக ஒதுக்கிவிடவும் முடியாது.
பள்ளி செல்லும் மாணவருக்கு ஐபோன் தேவையில்லை என்பதே என் கருத்து
ஃஃசந்தர்ப்ப சூழ் நிலைகளால், இவ்வாறான பாலியல் படங்கள் வெளிவருகின்ற போது, இச் சம்பவம் மூலம் பாதிக்கப்படும் குறிப்பிட்ட மாணவியையோ அல்லது மாணவனையோ நல் வழிப்படுத்த நாம் எவ்வாறான திட்டங்களை முன் வைக்கலாம்ஃஃஃ
முதலில் இப்படி பாதிக்கப்படுவோர் மீது சமூகம் கொண்டுள்ள தவறலான கண்ணோட்டத்தை நீக்கவேண்டும்.
அவர்களை சமூகத்தை விட்டு ஒதுக்கும் செயற்பாடுகளை தவிர்த்து, சமூகத்தோடு ஒன்றிணைத்தது, தவறை மெதுமெதுவாக புரிய வைக்க வேண்டும்
பாடசாலைகளில் பாலியல் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் (தனியார் கல்வி நிலையங்களில் ஆசியர்கள் பேசும் ஆபாசப் பேச்சுக்களைவிட அவை ஒன்றும் அதிகம் இல்லை)
மாப்ள ........உங்களைப் போல் நடித்த ஒருவனிடம் ஏமாந்துவிட்டேன்(அதில் கமென்ட் போட்டபிறகு மைல்டா ஒரு டவுட் வந்தது ) ........நல்ல நிகழ்வாக இப்போது அந்த பிளாக் இல்லை .
//இன்றைய காலகட்டத்தில் தமது அந்த நிமிடச் சுக போகங்களுக்காக கமரா போன் மூலம் எடுக்கப்படும் வீடியோக் கிளிப்ஸ்கள், (Scandal Video Clips) இணையத்தில் ஏறி, உலகெங்கும் பரவி, எம் சந்ததிகளின் எதிர்கால வாழ்வினைக் குட்டிச் சுவராக்கி, பல பள்ளி மாணவர்கள் தம் இளம் வயதில் வீட்டை விட்டுத் துரத்தப்பட்டு தெருவில்நிற்க வேண்டிய நிலைக்கு ஆளாகின்றார்கள்//
இது குறித்து நான் ஒரு இடுகை எழுத முன்பு நினைத்திருந்தேன். ஏனோ, துணிவு வரவில்லை. உங்கள் துணிவுக்குப் பாராட்டுகள் முதலில்!
//கைம்மாறும் பொழுதுகளில், வக்கிர குணம் கொண்ட நண்பர்களின் கைகளில் அகப்படும் பொழுது அது முழு நீலப் படமா இணையங்களுக்கு விலை பேசப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றது.//
அதே! இப்படி ஆயிரக்கணக்கான படங்கள் இணையத்தில் வலம்வந்து கொண்டிருக்கிறதாம்.
இந்த இடுகையில் கூறப்பட்டுள்ள பல விசயங்கள் ஜீரணிப்பதற்கு கடினமாய் இருக்கலாம் எனினும் உண்மை அதுவே! துணிச்சலான இடுகைக்குப் பாராட்டுக்கள் சகோ!
varuththamaana vizhayam thaan
மிகவும் கழ்டமான செய்தி
பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் வழிநடத்த வேண்டும்
உண்மைதான்.... வயசு கோளறு செய்யும் வேலைகள் கண்ணை மறைக்கின்றன
http://tamilpadaipugal.blogspot.com
நாங்கள் எல்லாம் பாடசாலைகளில் படிக்கும் காலத்தில் (இப்படி சொல்வதால் என்னை வயது போன ஆள் என்று நினைக்கவேண்டாம்.நான் சொல்லும் காலம் 2004,2005)
எங்கள் ஊரில் பிரியா பேப்பர் படிக்கவே எவ்வளவு கஸ்டம்.பிரியா பேப்பர் இலங்கையில் வெளிவரும் இளையோர்களுக்கான ஓர் பத்திரிகை இதில் பல நல்ல பாலியல் விழிப்புணர்வு சார்ந்த கட்டுரைகளும்,நல்ல ஆக்கங்கள்,சிறுகதை,போன்றவை அத்தோடு கில்மா மேட்டர்களும் இருக்கும்.அப்போது எல்லாம் பிரியா பேப்பர் எங்கள் ஊர்ப்பக்கம் தடை ஆனாலும்.கொழுப்பு வரும் சிலர் எப்படியோ வாங்கிக்கொண்டுவந்து விடுவார்கள் தப்பிதவரி பிரியாபேப்பர் வாசித்து மாட்டுப்பட்டால் எங்க ஊரில் பச்சை மட்டை அடிதான் வழங்குவார்கள்.யார் வழங்குவார்கள் என்று எல்லாம் கேட்காதீர்கள் அது உங்களுக்கே தெரியும்.அவர்கள் செய்த ஒன்று இரண்டு நல்ல விடயங்களுக்குள்,இதுவும் அடங்கும்.
இப்போது சகோ நிருபன் சொன்ன விடயங்கள் எங்க ஊர்ப்பக்கமும் நடப்பது தவிர்கமுடியாததாகிவிட்டது.
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.எனவே இளையேர்களே பாலியல் என்பது அந்தரங்கம் உங்கள் அந்தரங்கத்தை ஆதாரமாக வீடியோ எடுத்து பலர்பார்க்கும் வண்ணம் அசிங்கப்படுத்தாதீர்கள்.
நல்ல பதிவு பாஸ்!
இதெல்லாம் அறிவுரை வழங்கி திருத்தக்கூடிய விடயங்கள் இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து! அவரவராகவே சிந்தித்து செயல்படவேண்டும்!
எனக்கும் இவை பற்றி எழுதும் ஐடியா இருந்தது - ஆனா எனக்கு உங்க அளவுக்கு சீரியஸா எழுத வராதே!
உங்கள் துணிச்சலுக்கு பாராட்டுக்கள்!
நல்ல விழிப்புணர்வு பதிவு பாஸ்...
thanks 4 sharing..
இளைய சமூதாயத்தின் மேல் உள்ள கரிசனத்துடன் எழுதப்பட்ட ஒரு அருமையான பதிவு.
*பொறுப்புள்ள சகோதர- சகோதரியாகவோ, அல்லது பெற்றோராகவோ அல்லது ஒரு நெருங்கிய உறவினர்- நண்பராகவோ;
உங்கள் வீட்டில் உள்ள சிறுவாண்டுகள் பெரியவர்களாகிக் குறிப்பிட்ட ஒரு வயதினை அடையும் போது உங்களால் இவ்வாறான விடயங்களில் எவ்வாறு புத்திமதி கூற முடியும்?
...... முதலில், பெரியவர்களே ஒரு முன் உதாரணமாக இருக்க வேண்டும். அவர்களில் சிலரே சினிமா - டிவி - MMS - பதிவுகள் - என்று ஜொள்ளி கொண்டு அலைந்தால், எந்த முகத்தை வைத்து கொண்டு குழந்தைகளுக்கு அறிவுரை சொல்வார்கள்? எனக்கா சொன்னேன் - ஊருக்கல்லவா சொன்னேன் என்ற மன நிலை நமது சமூகத்தில் அதிகமாகி விட்டதால், குழந்தைகளும் எல்லாம் சரியே என்று நினைத்து விடுகிறார்கள். :-(
கலக்கல் மற்றும் எச்சரிக்கை பதிவு நிரூ
சுதந்திரம் என்ற பெயரில் மெத்தனமாய் இருக்கும் பெற்றோர் சிந்திக்க வேண்டியது.
விழிப்புணர்வு பதிவு நன்றி மாப்ள!
இந்த விஷயங்கள் இங்கே நிறைய நடக்கிறது.
தொழில் நுட்ப வளர்ச்சியால் இத்தகைய செயல்களை தடுப்பது மிகக்கடினமே. முன்பெல்லாம் ப்ளு பில்ம் பார்க்க பயந்து பயந்து சென்று வீடியோ கடையில் கேசட் வாங்கினர் இளசுகள். பிறகு சி. டி, பென் டிரைவ் என உருமாறி இன்று கையடக்க செல் போனில் வந்து நிற்கிறது. யதார்த்தமாக சொல்ல வேண்டுமெனில்...இச்செயல்களை கட்டுப்படுத்த முடியாது. அந்த வயதில் தடை போட்டால் மேலும் அச்செயலை செய்யவே தோன்றும். பக்குவமான அணுகுமுறை மற்றும் பெற்றோரின் தீவிர கண்காணிப்பு இவற்றின் மூலம் ஓரளவு தடுக்கலாம்.
விழிப்புணர்வு பதிவு
சிந்திக்கத் தூண்டும் விஷயம் சகோ!
மதி நிறை சகோ
வணக்கம்
அருமையான விழிப்புணர்வை தூண்டும் பதிவு, இன்றைய கால கட்டத்தில் தொழிநுட்ப வளர்ச்சிக்கு நாம் கொடுக்க வேண்டிய விலையாகவே இதை கருதுகிறேன், என்னதான் ஒரு தகப்பன் மகளோடு பாசம் பொழிந்தாலும், தோழனாக பழகினாலும் நம் கலாச்சாரம் இது போன்ற செயல்களை ஒரு தந்தையின் வழியே விளக்கப் பட அனுமதிப்பதில்லை, அனுமதிக்கவும் வேண்டாம் , இதுமாதிரியான விஷயங்களை ஒரு தாயே ஒரு தோழியாக இருந்து பண்பை பண்பாய் விளக்கவேண்டும் என்பதே என் கருத்து
கவலையூட்டும் ஒரு நிஜம்.இது எங்கே போய் முடியுமோ?
நல்ல ஒரு விழிப்புணர்வான பதிவு சகோ
சென்னை பித்தன் said...
கவலையூட்டும் ஒரு நிஜம்.இது எங்கே போய் முடியுமோ?///உங்கள் கவலை புரிகிறது,ஐயா!இன்றைய செய்தி மனதில் கொஞ்சம் தென்பை ஊட்டியிருக்கிறது.எங்கள் இளைஞர்கள் நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் கொஞ்சம் சிந்திக்கத் தலைப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்திருக்கிறது!வெல்வோம்,எல்லாவற்றையுமே!கூடவே,எங்கள் தலைவர்கள் முதுகெலும்பு உள்ளவர்கள் தான் என்பதையும் நேற்றைய ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது நிரூபித்திருக்கிறார்கள்.
அடடா இவ்வளவு லேட்டா வருகிறேனே..
உண்மைதான் ஒரு டெலிபோனை வைத்துக்கொண்டு இப்ப எவ்வளவோ சமுதாய கேடான வேலைகள் செய்கிறார்கள் இவர்கள்.. நமது வருங்கால சந்ததிகள் எவ்வளவோ பேர் இதனால் பாதிக்கபோகிறார்கள்... இதற்கு என்ன செய்யப்போகிறோம் நாங்கள் என்பது கேள்விக்குறியே...!!??
நிரூபனின் பதிவிலும் காட்டானுக்கு பப்பிளிக்குட்டி செய்யும் அண்ணணுக்கு
ஜே..
காட்டான் குழ போட்டான்...
சகா, இதில் பெற்றோர்கள் தான் அதிக கவணம் செலுத்த வேண்டும், மாலை வேலையில் குழந்தைகளுடன் இருக்கவேண்டும், அவர்களுக்கு உலகின் நிகழ்வுகளை தகுந்த பருவங்களில் சொல்லி விளங்கச்செய்ய வேண்டும். அடுத்தது ஆசிரியர்கள் அவர்கள் தான் அனைவருக்கும் ஒரு முன் மாதிரி, இந்த இரு தரப்பும், சுற்றமும் நட்பும் ஒழுக்கமாய் இருந்தால், குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. . .
காட்டான் said... Best Blogger Tips [Reply To This Comment]
அடடா இவ்வளவு லேட்டா வருகிறேனே?////காட்டிலயிருந்து வாறதெண்டால் கஷ்டம் தான?மன்னிப்போம்,மறப்போம்!
புணர்வைப் பற்றி ஒரு விழிப்புணர்வு சமூகத்திற்கு அவசியமான விடயம் தான் மச்சி..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவிட்ட பின் அழித்த பதிவுகளையும் தேடிப் படிக்கலாம்.
நிரூ...உங்களோட எனக்கென்ன கோவம்.அடுத்த கிழமையில இருந்து ஒரு மாசம் லீவு.கனடா போறேன்.
நிறைய வேலைகள்.அதோட இடக்குமுடக்கான நேரத்திலதான் நீங்கள் பதிவு போடுவீங்கள்.அடுத்த நாள் நான் பாக்கேக்க எல்லாரும் சொல்லி முடிச்சிருப்பினம்.
உங்களாலதானே இப்ப எங்கட பெடிப்பிள்ளைகளின்ர பக்கம் நான் கொஞ்சம் தலை காட்டுறன்.முந்தி போறதேயில்ல.ஒரு பயம்தான் !
உங்கட பதிவு அருமை.சமூகத்தை எப்பவும் பிச்சுப் பிடுங்கி அலசி வைக்கிறீங்கள்.என்னைபொறுத்தவரை ஐரோப்பியரிடம் நிறையவே நல்ல அணுகுமுறைகளைக் காண்கிறேன்.
குழந்தைகளிடம் எத்தனை சுதந்திரமாகப் பழ்குகிறார்கள்.அதே நேரம் நல்லதையும் கெட்டதையும் அறிவுறுத்துகிறார்கள்.சிகரெட் பத்தும் தன் மகளுக்கு பத்தினால் வரும் ஆபத்து அசிங்கங்கள் அடங்கிய புத்தகத்தை அடுத்தநாள் அவள் படுக்கை அறையில் வைக்கிறார்கள்.ஆனால் கட்டாயப்படுத்துவதில்லை.
இதிலிருந்து எனக்குப் புரிவது.
எதையும் மறைத்து வைக்கிற வரைதான் அதன் ஆர்வம் அதிகம்.எதையும் தெரிந்துகொள்வது நல்லது.சொல்லிப் புரிய வைப்பது பெற்றவர்கள் கடமை.செயற்பாடு நம் கையில்.அதாவது எது சரி எது பிழை என்பதை சுய உணர்வோடு விளங்கி வாழப்பழகுவோம் !
அட ஐரோப்பாவில லீவு விட்டாலும் விட்டாங்க பதிவர்கள பிடிக்க முடியல சாமி.....
ஓட்டை வட, தனிமரம்,அடுத்து ஹேமா ,போங்கம்மா போங்க எனக்கு அடுத்தா கிழமதான் தொடங்குது..ஹி..ஹி..
உலகம் எங்கே போய் முடியுமோ தெரியல ...!! அதுவும் டெக்னாலஜி வளர வளர மனித மனம் மோசமாதான் போய்கிட்டு இருக்கு :-(
"-----" பிடித்து அலையிறாளவை/அலையிறாங்கள் என்று எழுதாமல் பொறூப்பாக, மன முதிர்ச்சியுடன் (maturity) எழுதப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்.
Post a Comment